Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியானவர் 'டமால்'னு இறங்குகிறவரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஆவியானவர் 'டமால்'னு இறங்குகிறவரா..?
Permalink  
 


paul222:
சகோதரர் அற்புதத்தை குறிவைத்து தாக்கிஇருப்பது கண்டனத்துக்குரியது.

arputham:
chillsam Wrote on 24-06-2010 00:53:59:
இன்னும் நம்ம அற்புதம் அண்ணாச்சியைப் போன்றோர் அப்போஸ்தலர்.2 ஐ வைத்தே கதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்; அப்போஸ்தலர் நடபடிகளில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் மிக இயல்பானவை; அதனை ஆவியானவரே முன்னின்று நடத்தினார்;

சகோ.சில்சாம் அவர்கள் சொன்ன இவ்வாக்கியங்களை தனிப்பட்ட தாக்குதலாக நான் எடுக்கவில்லை. மாறாக ஆவியானவரை வைத்து ஜனங்களிடம் சரியான வார்த்தை சொல்லாத ஊழியர்கள் மேல் உள்ள கோபத்தின் வெளிப்பாடு என்றே எண்ணுகிறேன். நான் அப்போஸ்தலர் 2ன் அனுபவத்தையாவது ஜனங்கள் பெறவேண்டுமே என்றுதான் விரும்புகிறேன், விழைகிறேன். முன்மாரியே இல்லாமல் பின்மாரி ஏது? இன்று அனேக ஆவிக்குரிய கிறிஸ்தவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இல்லையே! பெரும்பாலானோர் சமாரியக் கிறிஸ்தவர்களாகவும் (அப்போஸ்தலர் 8 ) எபேசுவில இருந்த கிறிஸ்தவர்களைப் போலவும் (அப்போஸ்தலர் 19) அல்லவா இருக்கிறார்கள். அவர்கள் ஆவியின் அனுக்கிரகத்தைப் பெற விரும்புவதில் தவறே இல்லை.

நான் குறிப்பிட்ட ஆவியானவரின் செயல்பாட்டைக் குறித்து விளக்கமளிக்கும் வசனங்களை சற்றும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்காமல் அதற்கு நேரெதிரிடையாக அப்போஸ்தலர்.2 ஐக் குறிப்பிட்டதனால் மட்டுமே அற்புதம் அவர்களை வம்புக்கு இழுத்தேன்;

நான் அவர்களைப் பற்றி வைத்திருந்த கணிப்புகளுக்கு மாறாக அவருடைய வாதம் இருந்தது; தற்காலத்தில் "வாங்கப்பா ஆவியானவரே" போன்ற பாடல்களும் இ..ற்..ற்..றங்கும் ஆண்டவரே...என்று மிரட்டுவதும் வேத வசனத்துக்கு விரோதமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து;

அவர் தவறான 'கரிஷ்மாடிக்' குழுக்களுக்கு வக்காலத்து வாங்க அப்போஸ்தலர்.2 ஐப் பயன்படுத்தவேண்டாம்;
அப்போஸ்தலர் பெற்ற அனுபவத்துக்குப் பிறகு அதே போன்றதொரு சம்பவம் (கவனிக்கவும்:அதே போன்றதொரு சம்பவம்..!‌) எங்குமே நடைபெறவில்லை;ஆனால் அப்போஸ்தலர் கைகளை வைத்தபோது பரிசுத்தாவியைப் பெற்றனர்;

நாம் விவாதிக்கும் பொருளின் மையமான பிரச்சினையாவது,பரிசுத்தாவியானவர் வல்லமையாக இறங்கி சுகப்படுத்துகிறாரா அல்லது பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றவரின் விசுவாசமுள்ள ஜெபத்தினால் சுகம் கிடைக்கிறதா என்பதே.

மற்றபடி பரிசுத்தாவியானவர் இறங்கிவிட்டார் என்று கூறிக்கொண்டு அங்கு குதித்து ஆடிவிட்டு, மற்ற வாழ்வியல் காரியங்களில்- ஆவிக்குரிய காரியங்களில்- ஊழியத்தில்- குடும்ப வாழ்க்கையில்- பொருளாதாரக் காரியங்களில்- பணியாற்றுமிடத்து சாட்சியின் ஜீவியத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் அநேகருண்டு;

பரவச அனுபவமா,இணைந்து நடக்கும் ஏனோக்கின் அனுபவமா எது சிறந்தது என்று யோசித்துப் பாருங்கள்;

இறுதியாக நண்பர் பால்222 அவர்களின் கண்டனத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அற்புதம் அவர்களின் நட்புணர்வுடன் கூடிய தாழ்மைக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்; தனிமடல் என்ற ஒன்றை மறந்து அதனை கவனிக்காமல் வீணாக டென்ஷன் ஆனதற்காக வருந்துகிறேன்..!

பின்குறிப்பு: அப்போஸ்தலர்.2 ஐயே பின்மாரியின் காலத்தின் ஆரம்பம் என்று கருதிக்கொண்டிருந்தேன்;அதாவது விதையை நனைப்பது முன்மாரி,வளர்ந்தோங்கச் செய்வது பின்மாரி என்பது சரிதானே;யோசிக்கிறேன்..!‌


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

paul222:
// "பரிசுத்தாஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்" என்ற வசனத்தை வைத்துதான் பரிசுத்த ஆவியானவர் பலவீனமான ஊழியக்காரருக்கு சுகத்தை கொடுக்கும்படி எழுதியிருந்தேனே அன்றி வேறு எந்த எண்ணத்திலும் எழுதவில்லை;அது தவறாக இருப்பின் அப்படி எழுதியதற்காக வருந்துகிறேன். //

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=1832&Itemid=287

நண்பர் பால் அவர்கள் என்னை தயவாகப் பொறுத்துக்கொள்ளவும்;
எந்த நிலையிலும் தங்களுக்கு எதிராகவோ தங்களை வருத்தப்படுத்தவோ நான் இதனை எழுதவில்லை;

இது ஆவியானவரின் பின்மாரிக்காலம் என்பதையும் அபிஷேகத்தின் மூலமே சபையானது மறுரூப அனுபவத்துக்கு நேராகக் கடந்துபோகிறது என்பதையும் நான் மனதார ஏற்றுக்கொள்ளுகிறேன்;

ஆனால் ஒரு வசனத்தின் சூழமைவையும் (Context) நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளாமல் அந்த வசனத்தைப் பயன்படுத்தும் போது
அந்த வசனமானது வெளிப்பட்ட நோக்கம் சிதைந்துபோவதுடன் புதிய கொள்கைகள் முளைக்கிறது;இதுவும் ஆவியானவருக்கு விரோதமான தூஷணமாகவே கருதப்படும் ஆபத்து இருக்கிறது;

நாம் யாராக இருந்தாலும் சரியான கிறித்தவத்தைப் புரிந்துக்கொள்ளாவிட்டால் எதிரி நம்மை எள்ளி நகையாடுவான்;

"பரிசுத்தாவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்"
-இந்த வசனத்தில் பெலனடைவீர்கள் என்ற வார்த்தையின் அர்த்தம்
வியாதியிலிருந்து பெறும் சுகத்தைக் குறிக்கிறதா,அதற்காகச் சொல்லப்பட்டதா எனபதை கவனிக்கவேண்டும்;

மேலும் பரிசுத்தாவி என்று ஒருமையில் சொல்லப்பட்டுள்ளதே தவிர பரிசுத்தாவியானவர் என்ற ஆள்தத்துவமுடையவரைப் பற்றிச் சொல்லப்படவில்லை;

இந்த புரிதலும் தெளிவும் இல்லாததாலேயே விசுவாசிகள் இங்குமங்கும் சிதறுண்ட ஆடுகளைப் போல ஓடிக்கொண்டிருக்கின்றனர்;

நம்ம ஆட்களும் இதை வைத்து நன்றாக "கல்லா" கட்டிக்கொண்டிருக்கிறார்கள்;உலகப்பிரகாரமான மேஜிக் ஷோவுக்கு தரம்பிரித்து டிக்கெட் வசூல் பண்ணுவது போல மோசடியான பேர்வழிகள் காசுபண்ணிக் கொண்டிருக்கிறார்கள்;சொந்தமான விமானம் முதலாக தீவுகளும் பண்ணைவீடுகளும் அவர்கள் சுதந்தரமாம்;

இன்னும் நம்ம அற்புதம் அண்ணாச்சியைப் போன்றோர் அப்போஸ்தலர்.2-ஐ வைத்தே கதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்;

அப்போஸ்தலர் நடபடிகளில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் மிக இயல்பானவை;அதனை ஆவியானவரே முன்னின்று நடத்தினார்;

அந்த மேன்மையான அனுபவங்களை இன்றைக்கு நிகழ்த்திக்காட்ட‌ப்படும் "ஷோ"க்களுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தமுடியாது;

அது வேறு,இது வேறு;
அது அசல்,இது போலி;
அது அந்நியரையும் ஈர்த்தது;
இது இருப்போரையும் துரத்துகிறது;
அது சேர்த்தது,இது பிரிக்கிறது;

நம்முடைய ஆவேச பரவசக் கூச்சல்களின் போது தாய்மார்களின் கண்கள் தங்கள் குழந்தைகளின் மீதே இருக்கிறது;எங்கே தனது குழந்தை மிதிபட்டுவிடுமோ என்று;

புதிதாக பைபிளை மதிப்பிற்குரிய புத்தகம் என்று படிக்கத்துவங்கிய இளைஞன் அதனை எடுத்து தன் நெஞ்சுடன் அணைத்துக்கொள்கிறான், யாரும் அதை மிதித்துவிடாமலிருக்க.

இன்றைக்கு எந்த மேடையிலும் ஆவியானவர் இல்லை;
ஆனால் உணர்ச்சி பரவசம் உண்டு;அதற்குக் காரணம் மெய்சிலிர்க்கச் செய்யும் மெல்லிய இசையும் தேர்ந்த நடிப்புமே;

இல்லாவிட்டால் அந்த மேடையிலிருப்போர் ஒருவரை ஒருவர் பார்த்து கண்சாடை காட்டுவதும் சைகை பாஷை பேசுவதும் தேவையற்றது; ஆவியானவர் செயல்படும் மேடையில் செட்டப்புக்கு வேலையில்லை;

இவையெல்லாம் போகட்டும்; அபிஷேகிக்கப்பட்டவர் சுகவீனப்படமாட்டார்; சுகவீனப்பட்டாலும் அவருக்குளிருக்கும் அபிஷேகமே சுகத்தைத் தரும்;அவர் ஏதேனும் இச்சையிலகப்பட்டு அதினால் சுகவீனம் ஏற்பட்டிருந்தால் மூப்பர்கள் செபித்தாலே போதும்;சுகம் நிச்சயம்;

இதற்கு தேவையான உப பொருட்கள்:
வசனம்,விசுவாசம்,வைராக்கியம்,பொருத்தனை,மன்னித்தல் ஆகியவையே.

இதற்காகத் தனியாக ஒருமுறை ஆவியானவர் வல்லமையாக இறஙகியதாக தெய்வீக சுகம் பற்றிய இறைக்கொள்கையில் ஆதாரமில்லை;


// பிதாவானவர் குணமாக்குகிறவர்,அதுபோல் குமாரனும் குணமாக்குகிறவர்.பரிசுத்த ஆவியானவரால் குணமாக்க முடியாதா?.தயவு செய்து விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். //

தெய்வத்துவத்தைக் கூறுபோட்ட நாட்கள் முடிந்துபோகட்டும்;
குமாரன் சுயமாக எதையும் செய்யவில்லை;
ஆவியானவரும் சுயமாக எதையும் செய்கிறதில்லை;
பிதாவின் பரிபூரண கிருபையுடனே அனைத்தும் நடந்தேறுகிறது;

ஆவியானவர் நமக்குள்ளிருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறார்; குமாரனும் வேண்டுதல் செய்கிறார்;
பிதாவாகிய தேவனோ குணமாக்குகிறார்;


"அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

...கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே." (ரோமர்.8:26,34)


இன்னும் வரும்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பான நண்பர் சரவ் (sarav)அவர்களுக்கு வாழ்த்துக்கள்; நான் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துக்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட விரும்புகிறேன்;

எனவே என்னுடைய தளத்தில் இதே பதிலைப் பதிலைப் பதிப்பீர்களானால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்;மற்றபடி, எனக்கு இருவேலையாகும் அவ்வளவே; இரு இடத்திலும் காப்பி பேஸ்ட் செய்யணும்

இனி தங்களுடைய கருத்து தொடர்பாக...
// ஆவியானவர் வல்லமையாக இறங்கி சிம்சோனின் கயிறுகள் அறுபடும் போது ஏன் சுகப்பட முடியாது.its my understanding.if iam wrong please correct my understanding. //

// "ஏனெனில் ஆவியானவர் வந்துபோகிறவரல்ல என்பது புதிய ஏற்பாடு போதிக்கும் சத்தியம்;வந்து தங்குகிறவர், நடத்துகிறவர், தப்புவிக்கிறவர் என்றே போதிக்கப்பட்டிருக்கிறோம்..!"
i belive the above statement also //

தங்களது வேறுபட்ட இருநிலைகளையும் அறிந்து மிகவும் சந்தோஷம்;
இது பொதுவாக 'நமக்கு ஏன் வீண் பிரச்சினை ' என்று ஒத்துப்போகும் ஒதுங்கிப்போகும் தன்மையுள்ளவர்களின் நிலைப்பாடாக இருக்கலாம்;

இதுவே தங்கள் வேலைத் தளத்திலும் தனிப்பட்ட (குடும்பப் பிரச்சனைகளின் போதும் ) வாழ்க்கையிலும் வெளிப்படும்;

ஒத்த கருத்துடன் ஒத்துப்போவது தவறல்ல; ஒத்த கருத்து என்பது பெரும்பான்மையோரின் கருத்து என்றும் சொல்லலாம்;

நாம் ஏற்கனவே இ(உ)றுதிசெய்துக் கொண்ட ஆயத்தநிலை மனதுடன் சேரக்கூடிய கருத்து என்றும் சொல்லலாம்;

இது எதுவுமே சத்தியத்தைச் சரியாக உணர்ந்து புரிந்துக்கொள்ள உதவாது; அதாவது உணர்வது வேறு,புரிவது வேறு;

இதற்கு உதாரணமாக ஆவியானவ்ரின் தன்மையைக் குறித்து விளக்கும், ஏசாயா.11:2 -ஐ எடுத்துக்கொள்ளுவோம்;அங்கே,
"ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்." (ஏசாயா.11:2)என்று வாசிக்கிறோம்;

சிம்சோனைக் குறித்து இங்கே ஆராய்வது இப்போதைக்கு வேண்டாம்; ஏனெனில் சிம்சோனின் தவறான யூகம் சார்ந்த எண்ணங்களே அவரது தோல்விக்குக் காரணமாக இருந்தது;

ஒரு தோல்வியாளரை வைத்து நாம் மேலானவற்றை அறிந்துக் கொள்ளமுடியாது; அவர் தன்னுடைய வல்லமை தன்னுடைய முடியில் (சிரசில் கூட இல்லை..!) இருப்பதாக நினைத்து அதையே தன் காதலியிடம் வாயின் அறிக்கையாக வெளியிட்டார்;இதனைச் சரி என்கிறீர்களா?

ஆனால் புதிய ஏற்பாட்டில் பகிரப்பட்ட வாக்களிக்கப்பட்ட ஆவியானவரோ தங்கியிருக்கிறார்;
"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை."(யோவான்.7:38,39)

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,

நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்."(யோவான்.16:7 11)

நம்முடைய ஆண்டவர் மிக எளிமையாகக் கற்றுத்தந்த இந்த பாடங்களை ஆராய்ந்துப் பாருங்கள்;

இதன்படி அவர் அவ்வப்போது வந்து ஒரு மனுஷன் மீது ஊதப்படுவதும் அதினால் அந்த மனுஷன் சாய்ந்துவிழுவதும் மீண்டும் எழும்புவதும் மீண்டும் விழுவதுமான கூத்துக்களெல்லாம் "பென்னிஹின்"(Benny Hinn) போன்றவர்களால் பரப்பப்பட்ட சத்தியத்துக்கு விரோதமான போதனைகளாம்; இது மனோவசியம் சார்ந்தது;

ஆவியானவரின் செயல்பாட்டை எந்த ஒரு நிகழ்ச்சியின் வழியாகவோ இசையின் வழியாகவோ தந்திரத்தின் வழியாகவோ "டெமான்ஸ்ட்ரேட்"(demonstrate) பண்ணிக் காட்டுதல் என்பது இயலாது;மற்றபடி அது மோசடியான "ப்ராக்டீஸ்"(Practice)

இங்கேயும் அக்கினியின் மூலம் தேவ வல்லமையை நிரூபித்த எலியாவையும் இசைக்கருவியை வாசிக்கச் செய்து தீர்க்கதரிசனம் உரைத்த எலிசாவையும் உதாரணமாகக் கொள்ளவேண்டாம்;

புதிய ஏற்பாட்டு சபைக்கு வாக்களிக்கப்பட்ட ஆவியானவரின் தன்மையானது உள்ளான மனுஷனில் தங்கியிருந்து அவனை விண்ணக வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவதே; எனவே பவுலடிகள்,
"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."(
எபேசியர்.4:30)
என்று ஆலோசனை கூறுகிறார்.




(இன்னும் வரும்...)
















__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


// பரிசுத்தாவியானவர் ஊழியக்காரரின் மேல் வல்லமையாய் இறங்கி சுகத்தை கட்டளையிட நானும் ஜெபிக்கிறேன் //

தமிழ்கிறிஸ்தவ தளத்தில் ஜெபவிண்ணப்பப் பகுதியில் இருந்த இந்த வரிகளைக் குறித்த ஒரு கருத்தை நான் முன்வைத்தேன்;அது தவறான பகுதியில் இருந்ததால் அது நீக்கப்பட்டுள்ளது;

அந்த‌ தளத்தின் நிர்வாகிகளுக்கு எந்த ஒரு குறிப்பையும் - ஏன் உறுப்பினரையே கூட நீக்கும் உரிமை இருக்கிறது; ஏனென்றால் அது ஒரு பொதுவான தளம்;
ங்கு எல்லோரும் தங்கள் கருத்தை சுதந்தரமாக முன்வைக்கலாம்; என்ன நிர்வாகிக்குப் பிடிக்காவிட்டால் நீக்கிவிடுவார்,அவ்வளவுதான்;

இதில் ஒற்றுமையாவது மண்ணாங்கட்டியாவது,
சுதந்தரம் கிடக்கட்டும் சுண்டக்காய்..!

பரிசுத்தாவி ஊழியக்காரர் மேல் இறங்குவதும்,
மனிபர்ஸின் மீது இறங்குவதும்,
போய்க் கொண்டிருக்கும் வாகனத்தின்மீது இறங்குவதும் பெந்தெகொஸ்தே வட்டாரத்தில் மிகச் சாதாரணம்;

ஆனால் வேதம் என்ன போதிக்கிறதோ அதற்கு மாறாக ஒரு கருத்தை வளரவிடுவது ஆவியானவருக்கு விரோதமானதல்லவா..?

எனவே இதுபோன்ற தளங்களின் வாயிலாக அதனை முளையிலேயே கிள்ளியெறிய முயல வேண்டும்;

நண்பர் பால்222 அவர்களுக்கு எதிராக நான் எழும்புவதாக தயவுசெய்து எண்ணாமல் இந்த வாய்ப்பை சரியான சத்தியத்தை அறிய விரும்பும் முயற்சியாக்க நான் விரும்புவதாக எடுத்துக்கொண்டு தள நண்பர்கள் தங்கள் கருத்தினைப் பதிக்கலாம்..!

எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வதைப் போலவே எப்படி ஜெபிக்கக்கூடாது என்றும் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா..?

நம்ம ஆண்டவர் நீடிய பொறுமையும் மிகுந்த சாந்தமும் கிருபையும் உள்ளவர் என்ப்து உண்மைதான்; அறியாமை வேறு, அறிய விரும்பாமை வேறல்லவா..?

எனவே பரிசுத்தாவியானவர் ஒரு உடலின் மீது வல்லமையாக இறங்கி சுகப்படுத்துகிறாரா, வசனத்தை அனுப்பி, விசுவாசமுள்ள ஜெபத்தினால் சுகமாக்குகிறாரா என்பதைக் குறித்த தெளிவு வர விரும்புகிறேன்;

ஏனெனில் ஆவியானவர் வந்துபோகிறவரல்ல என்பது புதிய ஏற்பாடு போதிக்கும் சத்தியம்; வந்து தங்குகிறவர், நடத்துகிறவர், தப்புவிக்கிறவர் என்றே போதிக்கப்பட்டிருக்கிறோம்..!‌


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard