// இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை – கணவன் மனைவி பிரியக் கூடாது, விபச்சாரம் வேண்டாம் – யார் வூக்குவிக்கிரார்கள்,
யார் இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களுக்கு எதிரான வகையில் சமூகத்தை இட்டு செல்கிறார்கள் என்று.
எனவே நான் மீண்டும் உறுதி இட்டு சொல்கிறேன், இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார், நாங்கள் இயேசு கிறிஸ்துவுடன் இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகள் இந்திய சமுதாயம் பல்லாண்டுகளாக பின் பற்றி வந்த கொள்கைகளே. எனவே நம்முடையவர் இயேசு கிறிஸ்து, நாம் அவருக்கு எப்போதும் மரியாதை செய்து வணக்கம் செலுத்துவோம்.
அவரை தங்களுடைய தேவனாக சொல்லிக் கொண்டு, அவருடைய கற்பிதங்களுக்கு எதிராக டேட்டிங் விபச்சார, குடும்ப வாழ்க்கை மறுப்பு, விவாகரத்து கலாச்சாரத்தில் திளைப்பவர்க்ளையும் (மேலை நாட்டவர்) – நாம் வெறுக்கவில்லை. அவர்களையும் நம் மந்தையிலே சேர்க்க வேண்டியுள்ளது. தொடர்ந்து நல வாழ்க்கையை நடத்தி நம் கலாச்சாரத்தை பரப்புவோம். //
விவாகரத்து மற்றும் அமெரிக்க கலாச்சாரம் தொடர்பாக கவனத்துக்குரிய மற்றுமொரு குறிப்பு அமெரிக்காவின் சுதந்தரத்துக்கும் இந்தியாவின் சுதந்தரத்துக்குமுள்ள மிகப் பெரிய வித்தியாசமாவது அமெரிக்கா குடியேற்ற நாடு;இந்தியாவோ இயல்பாக அமைந்த சமூக அமைப்புள்ள நாடு;
உதாரணத்துக்கு கோயம்பேடு போன்ற ஒரு வெளி இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே நேர்த்தியாக ஒரு பேருந்து நிலையத்தை அமைப்பது எளிது;
ஆனால் கொத்தவால்சாவடி போன்ற இடத்தைப் பார்த்தால் அது நெருக்கடியாக ஆனால் அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைந்திருக்கும்;அது இயல்பாக அமைந்தது.
இதில் எதை பாராட்டுவோம்; பெருக்கத்தினால் நெருக்கமாகிப் போன கொத்தவால்சாவடியையா, விசாலமே விகாரமாகிப் போன கோயம்பேடா..?
அமெரிக்கா ஒரு குடியேற்ற நாடு;அங்கே எந்த கட்டுப்பாடும் குறிப்பிட்ட கலாச்சாரமோ இருக்க வாய்ப்பில்லை;
ஒரு வேலைக்காக அல்லது கல்விக்காக அங்கே நான் சென்றால் அங்கே கிடைத்ததையே எனது உணவாகவும் சந்திப்பவரையே உறவாகவும் பெரும்பான்மையினர் விருப்பத்துக்கே என்னை மாற்றிக் கொண்டு கலந்துவிடுகிறேன்;
இந்த மனப்பான்மையே விவாகரத்துக்கும் காரணமாகிறது; இன்னும் அங்கே விவாகரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்களே மற்றும் அதிகம்;
இந்த தாறுமாறுகளுக்கும் வாழ்வியல் சூழ்நிலைகளும் வாழ்க்கை முறையுமே காரணமே தவிர எந்த வகையிலும் கிறித்தவமல்ல;
கிறித்தவமானது இஸ்லாத்தைப் போல ஒரு கட்டுப்பாடான அமைப்பல்ல; அதன் கட்டுக்கடங்காத சுதந்தரமே அதன் பெலவீனமும் பெலமும்;
எனவே வேதம் சொல்லுகிறது: "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." (எபிரெயர்.2:4)
அப்படியானால் "வருங்கோபம்" எனும் நியாயத்தீர்ப்புக்காகவே நீதி செய்தோரும் அநீதிக்காரர் நடுவில் காத்திருக்கிறோம்;
எப்படியெனில் இன்னொரு இடத்தில் ஆண்டவர் குறிப்பிட்டது போல, அதிகம் மன்னிக்கப்பட்டவன் அதிக அன்பாயிருக்கிறான்;குறைவாக மன்னிக்கப்பட்டவன் குறைவாக அன்பு கூறுகிறான்; 'நீ யார் என்னை மன்னிக்க ' என்று கேட்பவன் தாந்தோன்றியாக இருப்பான்;பாழ்க்கடிப்பும் அந்தகாரமும் அவியாத அக்கினியுமே அவன் பங்காகும்;
இறுதியாக, இந்தியாவுடன் ஒப்பிடவேண்டுமானால் இந்தியாவைப் போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டுடனே அதனை ஒப்பிடவேண்டும்;
உதாரணத்துக்கு இந்தியாவைவிட கட்டுப்பாடான கலாச்சார அமைப்பும் ஒழுக்கமும் நிறைந்த சீனா அல்லது கொரியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நம்மை முன்னேற்றிக் கொள்ள உதவும்;
அதாவது நம்மைவிட தாழ்ந்த நிலையிலிருப்போருடன் திருப்திப்பட்டுக் கொள்ளுவதைவிட நம்மைவிட உயர்நிலையிலிருப்போருடன் ஒப்பிட்டு நம்மை சரிசெய்துக் கொள்வதே உய்ர்வுக்கு வழிவகுக்கும்;
எனது தனிப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் மறுமையின் நம்பிக்கையாகவும் நான் ஜகத்குருவான இயேசுவானவரை ஏற்றிருக்கிறேன்;
ஆனால் குடிமகன் என்ற முறையில் கலாச்சாரத்துக்கும் ஒழுங்குக்கும் பாரம்பரியத்துக்கும் செழிப்புக்கும் குறியீடாக ஒவ்வொரு நாட்டை வைத்துக்கொண்டாலும் எனது இந்தியாவை எனது தமிழகத்தை எனது தமிழை நான் நேசிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கணவன் மனைவி குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். கணவன் இல்லாத போது வேறு ஆடவன் வீட்டிற்கு வருவதில்லை, பால் பேப்பர் போட வருபவர் போட்டு விட்டு செல்கின்றார். குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்ல ரிக்ஷா காரர் வீட்டு வாசலில் நிற்கிறார்.
யாரவது ஒரு ஆடவன் அடிக்கடி வீட்டுக்கு வந்தாலும் பக்கத்திலே இருப்பவர்கள் கண்ணில் படாமல் இருப்பதில்லை. இதிலே எப்படி விபச்சாரம் நடக்கும். வானத்தில் இருந்து குதித்து விபச்சாரம் செய்வார்களா?
இயேசுவின் அடியவரே, மாய்மாலக் காமாலைக் கண்ணழகரே… உங்கள் குருநாதர் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்,தெரியுமா?
ஒரு ஸ்திரீயை இச்சையுடன் பார்க்கிற எவனும் அவளுடன் “மேட்டரை” முடித்தது போலவாம்..!
இச்சையைத் தூண்டும் சினிமாவையும் அருவருப்பான பாடல் காட்சிகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரிலும் கலை என்ற பெயரிலும் பரவவிட்டு இன்றைக்கு அதனை ஐந்து வயதுகூட நிரம்பாத பிஞ்சுகளை விட்டு ஆடவிட்டு வெட்கமில்லாமல் பெரியவர்கள் இரசிப்பது எதில் சேர்த்தி?
இத்தனையும் சாக்ஷாத் அந்த யானைமுகத்தோனின் அருளாசியுடனே நடந்தேறுகிறது;
அங்கே தேங்காய் உடைத்து (தன் மண்டை உடையாமலிருக்க..?) பூஜை போட்டே (அன்று மாலையே “தண்ணி பார்ட்டி”) இந்த அருவருப்புகள் ‘க்ளாப்’அடிக்கிறது..!
த்தூத்தேறி…மானங்கெட்ட மார்க்கமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//துள்ள துடிக்க ஆட்டை வெட்டி, அதன் இரத்தத்தைக் குடிச்சா எதிரே இருப்போர் பாவ தோஷமனைத்தும் போகும் என நீர் நம்பினால் //
ஆட்டு ரத்தத்தால் பாவ தோஷம் போகும் என்று எந்த இந்துவும் நம்பமாட்டான். மாறாக ஆட்டு ரத்தத்தை குடிப்பது ஒரு பரவச நிலையே! அதுவும் பூசாரி மட்டும் தான் செய்கிறார். மற்றவர்கள் ஆட்டு ரத்தத்தை லாவகமாக பிடித்து பொறியல் செய்து சப்பிடுவார்கள். அது இறைவனுக்கு படைக்கப்பட்டு பின்னர் உண்ணும் உணவு அவ்வளவே. ஆனால் நீங்கள் வானத்தில் இருந்து ஏசுவின் ரத்தம் வருவதாக வெற்று வானத்தைப் பார்த்து கூறி மக்களை முட்டாளாக்குகிறீர்கள். திருந்துங்கப்பா!
பரிசுத்த வேதாகமம் அமைத்துக் கொடுத்த ஆச்சாரமான பலிமுறைகளை விரும்பினால் வேதத்தை எடுத்து படித்துப் பாருங்கள்; ஆச்சரியப்படுவீர்கள்;
ஆதியிலேயே மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் பிரதானமானது இரத்தத்தை புசித்தல் கூடாது என்பதே;
அதுவே உயிரின் ஆதாரம் என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது;
எனவே பலியிடுவோர் அதனைத் தனியாக ஒரு கிண்ணியில் சேகரித்து பிறகு தண்ணீரைப் போல ஊற்றிவிடுவர்;
அதுபோலவே அநேகருக்காக ஒருவர் பலியாவது நல்லது எனும் பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படையில் இயேசுவானவரின் இரத்தம் வானத்திலிருந்து சொட்டவில்லை;அது நினைவுகூறப்படுகிறது;
' தேசப்பிதா' என்று காந்திஜியை ஏன் புகழுகிறோம், நினைவுகூறுகிறோம்;
அவர் சுதந்தரத்துக்காகப் பாடுபட்டது மாத்திரமல்ல, இரத்தம் சிந்தி ஜீவனை விட்டார்; இதுவும் நினைவுகூறுவதுதான்;
சரி, நினைவுகூர்ந்து என்ன இலாபம்? ஆம்,அவர் மரிக்கக் காரணமான பாவத்தை நான் செய்யமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவருடைய நீதிபோதனைகளை என் வாழ்வில் கைக்கொள்ளுவேன் அதினால் சுகமடைவேன்; அவ்வளவுதான் சுவிசேஷம்;
மற்றபடி பூஜாரி இரத்தம் குடிக்கும்போதும் கும்பாபிஷேகத்தின் போது அங்கிருந்து தெளிக்கப்படும் புனித ஜலம் ஒரு துளி மேலே பட்டதும் சிலிர்த்து பரவச நிலையினை யடைவதும் போலவே என்றைக்கோ எங்கேயோ எனக்காக ஒருவர் இரத்தம் சிந்தினார் என்பதை நினைவுகூறும்போது நானும் இன்றைக்கு எனக்காக அது நடந்ததுபோலவும் என்மீது அந்த இரத்தத்துளி விழுந்ததுபோலவும் உணர்ந்து பரவசநிலை அடைகிறேன்; நாங்க திருந்தமாட்டோம்பா,உங்களைத் திருப்புவோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த தளத்தை ஒரு நண்பர் கொடுத்து படிக்கச்சொன்னார். அதனால் இங்கே கருத்து எழுதுகிறேன். என்னுடைய குடும்பம் மூன்று தலைமுறையாக கிறிஸ்துவ குடும்பம். எங்கள் குடும்பத்தில் நடக்காத துயர சம்பவம் இல்லை என்று சொல்லலாம். நாங்கள் சர்ச்சுக்கு போய் புலம்பாத புலம்பல் இல்லை. இருந்தாலும் மாறி மாறி துன்பங்கள் வந்துகொண்டே இருந்தன. மிகச்சிறிய வயதில் இழக்கக்கூடாத பலரை இழந்தோம். இறுதியில் ஒரு ஜோஸ்யரை கேட்டோம். அந்த அளவுக்கு நொந்து போயிருந்தோம். அவர் எங்களை மாரியம்மன் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். செய்தோம். அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இழந்ததையும் அடைந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறோம். அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது.
என் கிறிஸ்துவ நண்பர்களுக்கும் இதையே சொல்லிக்கொள்கிறேன். நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள். நான் முன்னரே கிறிஸ்துவனாக இருந்தேன் என்பதால் அதில் எப்படி மூளைச்சலவையாகியிருக்கும் என்று புரிந்தே எழுதுகிறேன். -திருநாவுக்கரசு
திரு.ராபர்ட் ஸ்டான்லி (திருநாவுக்கரசு)அவர்களே, தங்கள் குள்ளநரித்தனம் தங்கள் பெயரைக் குறிப்பிட்டதிலேயே தெரிகிறது; தாங்கள் பெயரை மாற்றிய பிறகும் ஏன் பழைய உதவாத கிறித்தவ பெயர் உங்களுக்கு..?
நானும் இயேசுவை வணங்குகிறேன், பிணமாக அல்ல, உயிர்த்தெழுந்த இரட்சகராக;
அதன் ஆதாரத் தத்துவம் எந்த உயிர்க்குமே மரணம் என்பதில்லை, அது ஒரு மறுஜனனம் மட்டுமே (ஜன்மம் அல்ல...)- அவனவனுக்குரிய பலனையடைய நித்திரையிலிருந்து எழும்புவதுபோல எழும்பவேண்டும் என்பதே;
இந்த மேலான நம்பிக்கை எனக்குள் இருப்பதால் என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் என்னை பாதிப்பதுமில்லை;அதற்கு நான் இறைவனைக் குற்றவாளியாக்குவதுமில்லை;
அவனவன் தத்தமது சுய இச்சையினால் இழுப்புண்டு சோதனையில் சிக்கிக் கொள்ளுவதாலேயே துன்பம் ஏற்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது;ஒருவருடைய தவறு மற்றும் துன்பம் அவரைச் சார்ந்தவரையும் பாதிப்பது மனித இயல்பு;இதற்கும் தெய்வ நம்பிக்கை மற்றும் தொழுதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;
தங்கள் புத்தி ஆரோக்கியப்படாமல் மாரியம்மாளும் சரி மேரியம்மாளும் சரி எதுவும் செய்திட இயலாது என்பதையறிய வேண்டுகிறேன்;
தாங்கள் மெய்யாகவே பாதிக்கப்பட்டிருந்தால் எனது கருத்து தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்;
மற்றபடி உங்களைப் போல ஓராயிரம் பேர் எழும்பினாலும் கிறித்துவின் நற்செய்தியின் பாக்கியங்களைத் தடுத்துவிடமுடியாது;
சாம்ராஜ்யங்களும் சக்ரவர்த்திகளும் சர்வாதிகாரிகளும் நாத்திகமும் செய்திட முடியாததையா நீங்கள் செய்துவிடமுடியும்..?
// கோடானுகோடி மக்களை ரத்தத்தைக் காட்டி பயமுறுத்தி மூளைச்சலவை செய்யும் கிறிஸ்தவக் கூட்டத்தில் ...// யாரோ ஒரு டுபாக்கூர் இங்கே வந்து எதையோ சொன்னார் என்பதற்காக யாரும் மகிழ்ந்துவிடவேண்டாம்;இந்த வரிகளை வாசிக்கும்போதே அவரவர் மனசாட்சியிலிருந்து தொனிக்கும் சத்தம் சத்தியத்தை உரைக்கும்;
யார் மூளைச் சலவை செய்பவர்,யார் இரத்தத்தைக் காட்டி பயமுறுத்திப் பணிய வைப்பவர், யார் இரத்தஞ்சிந்தவும் காவு வாங்கவும் உயிர்களை எடுக்கவும் அலைபவர் என்பது தற்கால நாகரீக சமுதாயத்துக்கு நன்றாகவே தெரியும்;
ஊர் எல்லைகளில் சாமியாடி குறிசொல்லும் ஐயனாரின் பக்தனைக் கேளும், கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி குடித்து கூடியிருக்கும் ஜனத்தை மிரட்டும் பூஜாரியைப் பாரும்;
முனியாண்டி என்றும் மாயாண்டி என்றும் அங்கே தூணில் என்றும் இங்கே துரும்பிலும் என்றும் படிப்பறிவில்லாத ஏழை எளியோரைக் கொள்ளையிடும் பிசாசின் தூதுவர்களைக் கேளும்;
உயிரை எடுப்பவரா, உயிரைக் கொடுப்பவரா?
இரத்தம் கேட்பவரா, இரத்தம் சிந்தி மீட்டவரா? யார் உனக்கு சொந்தம் என்று சிந்தித்துப் பாரும்;
எனக்கு பதில் சொல்வதென்றால் திருச்சிக்காரனுக்கு அல்வா சாப்பிடுவது போலவாம்;ஆனாலும் அவர் 'அபிஷ்டு ' மாதிரி எதையாவது உளறுவதையே சகித்துக்கொள்ள முடியவில்லை;
நான் தீர்க்கமாகவும் தொகுப்பாகவும் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் முழுவதும் புறக்கணித்துவிட்டு நுனிப்புல் மேய்வது போலவும் முழுக்க நனைந்தும் சிலிர்க்காதது போலவும் ஓரிரு வரிகளைக் கொண்டு மேலோட்டமாக சிலதை சிந்திவிட்டுச் செல்லும் போது மிகவும் சோர்வாகவே இருக்கிறது;
மொத்தத்தில் நம்மைக் கிண்டி கிழங்கெடுப்பதில் சிறப்பான பணியாற்றி வருகிறார், அது எதிர்விளைவாகப்போகும் ஆபத்தையறியாமலே..!
இவர் அடிக்கடி சொல்லும் 'அத்வேஷ்டா' எனும் வார்த்தையைக் குறித்த மேலதிகத் தகவலை தளத்தில் தேடியபோது அருமையான விடயங்கள் கிடைத்தன;அவற்றைப் படித்தபோது நாம் நம்முடைய பொன்னான நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வே ஏற்பட்டது; அதற்கொரு உதாரணமே கீழ்க்காணும் தொடுப்பு.
'அத்வேஷ்டா'எனும் வார்த்தையைத் தானே வேறு மொழியில் வேறு நோக்கத்தில் ஒண்ணாங்கிளாஸ் புத்தகத்திலிருந்து முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கக் காண்கிறோம்?
// அஹிம்சை என்பது இந்திய தத்துவத்திலே முக்கிய அம்சமாகும்;இந்து,புத்த,சமண மதங்கள் அஹிம்சையை போதிக்கின்றன. //
தங்கள் விதண்டாவாதத்தின் தாறுமாறுகளைக் கொஞ்சம் அடக்கினால் நல்லது; இந்தியாவில் பௌத்தமும் சமணமும் தோன்றிய பிறகே மிருகபலி நிறுத்தப்பட்டது என்பது வரலாறு;
இந்த விவரம் சென்றடையாத குக்கிராமங்களில் அது இன்னும் தொடருகிறது; அப்படியானால் காலங்காலமாக இறைவனுக்கு பலிசெலுத்தவும் வேட்டைக்காகவும் விருந்துக்காகவும் மிருகங்கள் கொல்லப்பட்டதும் இன்னும் யுத்த களத்தில் குதிரைகளும் யானைகளும் பலியானதும் எளிதில் தெரியவரும் தனி கணக்கு;
ஆரியத்துக்கு எதிராக அணிவகுத்த சமண மார்க்கப் பெரியோர்களை கழுவேற்றிய அக்கிரமமும் அரங்கேறியது;இந்து மார்க்கத்துக்கோ அதன் தத்துவங்களுக்கோ சற்றும் பொருந்தாத பௌத்தம் மற்றும் சமணத்துடன் தம்மையும் வெட்கமில்லாமல் சிலர் இணைத்துக்கொள்கின்றனர்;
இன்றைக்கு சுமார் 2000 வருடத்துக்கு முன்பே பேரரசர் அசோகரை யுத்த இரத்த வெறியிலிருந்து திருப்பிய புகழ் வாய்ந்தது பௌத்தம்;
ஆனால் இன்று வரை கிருஷ்ணனையும் இராமனையும் (யுத்தகளத்தில் பிதற்றியதாகச் சொல்லப்படும் ) கீதையையும் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்து மார்க்கத்தார் அச்சுறுத்தும் சின்னங்களை உடலில் அணிந்தும் யுத்த ஆயுதங்களை தங்கள் ஆலயத்தில் நிறுத்தியும் மார்க்க பிரிவினைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்;
வில்லையும் அம்பையும் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? வேலையும் சூலத்தையும் பார்க்கும்போது எப்படியிருக்கும்? யாருக்கு எதிராக யார் செய்யும் யுத்தம் இது? அதை வணங்குபவருக்கே அது வெளிச்சம்..!
// கொல்லாமை என்பது பற்றி வள்ளுவர்,திருக்குறளில் தனி அதிகாரம் அமைத்து அறிவுரை வழங்கி இருக்கிறார் //
அந்தணனல்லாத வள்ளுவன் என்ன சொன்னால் உமக்கென்ன? திருப்புகழை தெருப்புகழாக எண்ணி வைணவ வழிபாட்டில் தடுக்கும் தீட்சிதர்கள் இருக்கும் வரை வள்ளுவரை எந்த மார்க்கமும் சொந்தங் கொண்டாட முடியாது;கற்பூரமான வள்ளுவத்தின் வாசனையறியாதோர்க்கு அதன் மேன்மையானது புரிய வந்தது எப்போது?
வைக்கோல் போர் அருகே படுத்திருக்கும் நாயானது அதன் அருகே வரும் மாட்டைப் பார்த்து குலைக்குமாம்,அது தனக்கு உரிமையானது என..!
தானும் பயன்படுத்தாமல் அடுத்தவனையும் பயன்படுத்தவிடாமல் தடுத்து தப்பித் தவறி அதனை யாராவது தொட்டுவிட்டால் ஊரைக் கூட்டும் அந்த நாயை வெக்கப்போர் நாய் என ஊர்பக்கம் சொல்வதுண்டு;
திராவிட இனத்தின் மேன்மையையும் அதன் மொழி வளத்தையும் கண்டறிந்து அதற்கு இலக்கணம் அமைத்துத் தந்து உலகப் பொதுமறை என்று நாத்திகரும் கொண்டாடும் குறளை அடையாளம் காட்டியது இந்துக்களல்ல;தியாகச் செம்மல்களான மிஷினரிகளே;
அவர்களையும் உங்கள் மார்க்கத்தினர் கொஞ்சமும் நன்றியுணர்வில்லாமல் காழ்ப்புணர்ச்சியுடன் "மிஷி நரிகள்" என்று வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்களைப் போலக் குறிப்பிடுகின்றனர்;
// வயதான பலர் புலால் உணவை உடல் நலம் கருதி விட்டு விடுகின்றனர் //
ஜீரண உறுப்புகளும் அரைவை இயந்தரமும் பழுதுபட்டபின் வேறு வழி?
// அதே நேரத்திலே புலால் உணவு உண்ணவே கூடாது என்று இந்துமதம் தடை போடவில்லை //
அப்ப ஏனய்யா, வாடகைக்கு வீடு தேடிச் சென்றால் சில இடங்களில் "ஒன்லி வெஜிடேரியன் (only vegetarian)" போர்டுகள் தொங்குகிறது? இங்கே "அத்வேஷ்டா" செல்லுபடியாகாதா?
// உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் புலால் உணவு உண்பது போல இந்தியாவிலும் புலால் உண்கின்றனர் //
புலால் என்று நாகரீகமாகச் சொன்னாலும் நீங்கள் பசுவதை குறித்தே சொல்ல வருவதாகத் தோன்றுகிறது;
பசு மட்டுமல்ல,யாகத் தீயில் எரியும் குதிரையின் மாம்சத்தை அந்தணன் புசித்து சாராயம் போன்ற சோமபானத்தைக் குடித்தாலே யாகம் நிறைவேறும் என்பது ஐதீகம்;
இப்போது சொல்லுங்கள், சைவப் பிரியர்களான தமிழ் மன்னர்களை மாம்ச பக்ஷிணியாக்கியது யாரென்று..!
// அப்படி புலால் உணவுக்காக ஆட்டை வெட்டும்போது,அதை கடவுளுக்கு படைத்து விட்டு உண்ண விரும்புகின்றனர் //
பலியிடும் கட்டளையினை யூதர் பெற்ற நோக்கமே இறைவனைக் குஷிப்படுத்துவதல்ல;இறைவன் மாம்சம் புசித்து இரத்தம் குடிக்கும் அரக்கனல்ல;அல்லது சிவனுமல்ல;
பலியாடு அல்லது எந்த உயிரும் துடிக்கும் போது அது மனிதனின் பிரதியாக நிற்கிறது;அப்போது தவறு செய்த மனிதன் அங்கே அதன் உயிர்த் துடிப்பைப் பார்த்து மனம் வருந்தி இனியும் அந்த தவறைச் செய்யக்கூடாது என்பதே பலியின் நோக்கம்;
அதற்கு நீண்டகாலத்துக்குப் பிறகு வந்ததே இறைச்சிக்காக ஆடு,மாடுகளை வெட்டுவதாகும்;
// அவரவர் தனக்குப் பிடித்த உணவை தனக்குப் பிரியமானவருடன் பகிர்ந்து கொள்வது போன்றதே இது //
இறைவன் கட்டளையிடாத ஒரு உணவை தானும் புசித்து அவருக்கும் ப்டைக்க வேண்டிய அவசியமென்ன?
இதுவே இந்து மார்க்கத்தின் சிறப்பு..! தனியாகச் செய்தால் குற்றம்,சேர்ந்து செய்தால் ஐதீகம்..!
// இந்தியாவின் பல கோவிலகளில் பல வழிபாட்டு முறைகள் உள்ளன; பழனி,திருத்தணி உள்ளிட்ட எந்த முருகர் கோவிலிலும் ஆடு,மாடுகளைப் பலியிடுவது இல்லை; //
பழனி முருகன் கோவில் என்பது அறுபடைத் தளங்களில் ஒன்றல்ல என்று விஜ்ய் டிவி யின் "யாமிருக்க பயமேன்" தொடரில் வருகிறது;
இதன்படி இந்த தலமே இடைப்பட்ட காலத்தில் வேறு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது;
அதற்கு ஆதாரமாக சமணத் துறவியைப் போன்ற தோற்றத்தில் முருகன் நிறுத்தப்பட்டதையும் சொல்லுகிறார்கள்;
எப்படியிருப்பினும் இவையெல்லாமே கடந்த சுமார் 2000 வருடத்துக்குள் நிகழ்ந்தவையே;இதைக் கொண்டு இந்த தெய்வங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தொன்மை வாய்ந்ததாகக் கொள்ளமுடியாது;
ஆரியர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்ட காரணத்தாலேயே -அதாவது இங்கே சைவம் வேரூன்றியிருந்த காரணத்தாலேயே -அதற்கு எதிராக எதையும் செய்து பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் ஒத்துப்போய்விட்டனர்;
// கிராமக் கோவிலகளில் ஆடு மாடுகளைப் பலியிடுகின்றனர்; இதில் பெரிய தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை; //
எனக்கும் அப்படித் தெரியவில்லை;ஆனால் அப்படி நேர்ந்து விட்டாலே சாபம் தீரும்,ஆத்தா மனங்குளிரும்,மழை பொழியும் என்று மக்கள் மனதை வக்கிரமாக்கியது யாருடைய சூழ்ச்சி..?
// இதில் ஆட்டைப் பலியிடும் பூசாரி,மக்களை மிரட்டுவதற்காக அப்படி செய்யவில்லை; //
மஞ்சத் தண்ணிய தெளித்து ஆடு தலையை சிலுப்பும் கணத்தில் அதையே அது பலியாக சம்மதிப்பதாக எண்ணி ஒரே போடு போடும் சாதாரண பலியை நான் சொல்லவில்லை;
அதைவிடக் கொடூரமாக ஒரு ஆட்டை வெட்டி அந்த உயிர் துடித்து அடங்குவதற்குள் - கொப்பளித்துப் பொங்கும் இரத்தத்தைக் குடிக்கும் மந்திரவாதியைக் குறித்தே கேட்கிறேன்;
அது இரத்தவெறியைத் தூண்டுகிறதா, இல்லை சிலுவையில் பரிதாபக் கோலத்தில் தொங்கும் இயேசுவானரின் தோற்றம் இரத்தவெறியைத் தூண்டுகிறதா என்பதே கேள்வி.
// எந்த ஒரு உயிரும் கொல்லப்படுவது,பரிதாபமான,உள்ளத்தை உருக்கும் செயலே; ஆனால் ஆடோ,கோழியோ அதைக் கொன்றுதான் சாப்பிடுகிறார்கள்; அதை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கோவிலிலே வெட்டுகிறார்கள்; பலி கொடுக்கும் பூசாரியும் சரி, அந்த நிகழ்ச்சயில் பங்க்கேடுப்பவரும் சரி, பிற மார்க்கத்தின் மீது,வெறுப்புக் கருத்துக்களைத் தூண்டவோ, பரப்பவோ இல்லை; எந்த ஒரு மனிதன் மீதும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டவும் இல்லை. //
'காமாசோமா'வென்று எதையோ சொலவதென்பது இதுதான்; ஒரு ஆடு பலியிடப்படுவதன் நோக்கம் என்ன? அதில் 'அத்வேஷ்டா' இல்லையா? இறைவன் மீதான 'அத்வேஷ்டா'ஆட்டின் மீதும் ஆட்டின் மீதான 'அத்வேஷ்டா'அதனை உண்பதிலும் தனக்கு சூனியம் வைத்தவனை பழிவாங்கும் 'அத்வேஷ்டா'ஆட்டின் மீதும் இறங்க பூஜாரியின் பாக்கெட்டை நிரப்புகிறது;
ஒரு தனி மனிதனின் சிந்தையிலோ வாழ்க்கையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்க அதன்மீதும் அந்த போலியான அமைப்பு மற்றும் பூஜா முறைகள் மீதும் 'அத்வேஷ்டா' வந்தே ஆகவேண்டுமா..?
// சகோதரர் சில்சாம் கொல்லாமை தத்துவத்தை,அஹிம்சை தத்துவத்தை ஆதரிப்பதை நான் வரவேற்கிறேன்; சகோதரர் சில்சாம்,அவருடைய சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் கொல்லாமை தத்துவத்தை,அஹிம்சை வாழ்க்கை முறையை பரப்புவார் என்று நம்புவோம். //
இதுபோன்ற புதிய பொறுப்புகளைச் சுமக்கும் தோள்பலம் எனக்கில்லையே; நான் சாதாரண வழிப்போக்கன் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்;
இப்போதும் சொல்கிறேன்,கொல்லாமை என்பது உயிர்களை மட்டுமல்ல,என்னுடைய வேதம் சொல்லுகிறது,காண்கிற சகோதரனை வெறுப்பதும் கொலைக்கு சமானமே;அவனுக்கு தேவ அன்பைச் சொல்லி நல்வழிப்படுத்த முயன்றால் அது 'அத்வேஷ்டா' என்கிறீர்கள்;
சர்வ வல்ல இறைவனின் 'அத்வேஷ்டா' மானுடவதாரமெடுத்து வந்து பாவம் போக்க பலியானதானால் எனது 'அத்வேஷ்டா'அந்த நற்செய்தியை பரப்புவதே;
// அதோடு அத்வேஷ்டா சிந்தனைகளுக்கு,வெறுப்பை நீக்கிய சமரச அமைதி சிந்தனைகளுக்கு வருவார் எனவும் நம்புவோம், அது இயேசு கிறிஸ்து எந்த ஒரு விட்டுக் கொடுக்கும் பாதையை சொன்னாரோ அந்தப் பாதைக்கு அவர் வருவதாக அமையும். //
முழுப்பூசணிக்காயை புளியோதரைப் பொட்டலத்தில் மறைப்பது போல இயேசுகிறிஸ்துவுக்கே புதுவிளக்கம் கொடுக்கிறார்,நண்பர்;
யாரிடம் எங்கே எதை இயேசுவானவர் விட்டுக் கொடுத்தார் என்பதை எங்களிடம் கேளுங்கள்; இயேசுவானவரின் மொத்தப் பணிக்காலமே 3.5 வருடம் மட்டுமே; அதாவது ஆயிரத்து சொச்சம் நாட்களே..!
அவர் வந்த பிரதான நோக்கம் மனுக்குல முக்திக்காக பலியாவதே; இதில் எங்கே யாரிடம் அவர் சமரசம் செய்தார்?
நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல (இலங்கையின் "கருணா" போல..!) அவர் சமரசம் செய்திருந்தால் யூதர்களின் சுயாட்சி பிரதேசத்தின் தலைவராகவும் ரோம அரசாங்கத்தின் சர்வ மேன்மையையும் பெற்றவராகவும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கமுடியும்;
ஆனால் அவர் தம்மை தாம் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து பலியாக தேவ ஆட்டுக்குட்டியாகத் தம்மைத் தாழ்த்தினார் என்று வேதம் கூறுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)