ஒரு செடியானது நல்ல பலனைக் கொடுக்கவேண்டுமானால் அது நன்கு பராமரிக்கப்படவேண்டும்;ஒரு குழந்தை ஆரோக்கியத்துடனும் ஞானத்துடனும் வளரவேண்டுமானால் தனி கவனம் செலுத்தப்படவேண்டும்; ஒரு வாகனம் பிரச்சினையில்லாமல் ஓடவேண்டுமானால் அவ்வப்போது பரிசோதிக்கப்படவேண்டும்.
இப்படியே நம்முடைய கிறித்தவ விசுவாசத்திலும் சுயபரிசோதனையும் உபதேசத்தில் தெளிவும் அது சம்பந்தமான வைராக்கியமும் அவசியமானதாகும்;அதற்கு ஊறுவிளைவிக்கும் துருபதேசங்களும் கள்ளப் போதகர்களும் ஆங்காங்கு பெருகியிருக்கும் தற்காலத்தில் கிறித்துவர்களாகிய நாம் நம்மைச் சுற்றிலும் ஒரு குறுகிய வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளாகவே சுற்றிவந்து திருப்தியடையலாமா?
இதோ ஊழியத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு ஒரு வாய்ப்பு...
உங்கள் வட்டாரத்தில் உங்களைச் சுற்றிலும் நடக்கும் காரியங்களைக் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்; புகைப்படமாகவோ (image), காணொளிப் படமாகவோ (Video) செய்தி துணுக்காகவோ (Paper) மார்க்கம் சம்பந்தமான கேள்விகளாகவோ (Q's) நீங்கள் எங்களுக்கு அனுப்பினால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருக்கிறோம்; உங்கள் கோரிக்கையின் பேரில் இரகசியம் முற்றிலும் காக்கப்படும்; இந்த அரிய வாய்ப்பை வாசக நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
இதற்காக செய்யவேண்டியதெல்லாம் ஒரு மின்னஞ்சல் மாத்திரமே; அதில் நீங்கள் விரும்பும் தகவலையோ கேள்வியையோ கேட்கலாம் அல்லது தங்கள் தொடர்பு எண்ணைக் கொடுத்து அழைக்கக் கோரலாம் அல்லது எங்கள் தொடர்பு எண்ணைக் கேட்டாலும் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோம். எமது மின்னஞ்சல் முகவரி:chillsam@rocketmail.com
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இப்படி என்னை இந்துக்களுக்கு பதில் சொல்லும் பகுதிக்கு தள்ளி விட்டீரே? மற்ற நண்பர்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு தனி பகுதி வேண்டாமென சொல்லிவிட்டனர். எனக்கு நீங்கள் இப்படி ஒரு துணை தளம் அமைத்து தருவது, எவ்வாறு திரும்பும் என்று தெரியவில்லை. இப்படி போவதால் என் எழுத்துக்கள் மற்றவர் கண்களில் படாமல் போய் விடுமோ என்றும் அஞ்சுகிறேன். உண்மையை சொன்னால் எனக்கு இப்போது சரியான முடிவு எடுக்க தெரியவில்லை.
இப்போதைக்கு நீங்கள் எனக்காக துணை தளம் அமைப்பதில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம்.மேலும், நான் தனி தளம் துவங்குவது பற்றி முடிவு செய்திருந்தாலும் அதை எப்போது செய்வேன் என்று தெரியவில்லை. இப்போது நான் சேர்ந்திருக்கும் புதிய பணியில் இருந்துகொண்டு எழுத்துப்பணி எவ்வளவு சாத்தியம் என்றும் தெரியவில்லை. தளம் துவங்கினால், அதற்காக தினமும் கணிசமான நேரம் செலவிட வேண்டும், பலப்பல எதிர்ப்புகளை சந்திக்கவேண்டும், இன்னும் நிறைய கற்கவேண்டும். உங்கள் தல நிர்வாகம் பார்த்து சில விஷயங்களை கற்றுள்ளேன், மேலும் கொஞ்சம் கற்ற பிறகு தளம் துவங்க உங்கள் உதவியும் எதிர்பார்கிறேன்.
என்னடா நம்முடன் பணியாற்றாமல், தனியே போகிறேன் என்று சொல்கிறானே என்று பார்க்கவேண்டாம். உங்களுடன் இணைந்தே செயல்படுவேன், ஆனால், அது இங்குள்ள (அமெரிக்காவில்) சில (என்னோடு தொடர்பில் உள்ள இந்திய ) சபைகளை சார்ந்து இருக்கும். அதனால், அதை இங்கு யௌவன ஜனதொடு தொடர்பு படுத்துவதில் சில சிக்கல்கள் உண்டு.
நானும் என்னுடைய பெயரில் என்று எதையும் செய்ய விரும்பவில்லை ஆனால் நிறைய காரியங்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.நல்ல கருத்துக்கள் ,மற்றும் கட்டுரைகள் விவாதம் என்ற காரணத்தால் எல்லாரும் படித்து பயன்பெற இயலாத நிலைமையில் இருக்கிறது. தனி பெயரில் என்று இல்லாதபடி Subject-ஐ மையமாக வைத்து Blog மற்றும் Faq போன்ற மாதிரிகளில் (Read Only) நம்முடைய கருத்துக்களை எழுதலாம். விவாதங்களை தொடர்ந்து யௌவன ஜனம் விவாதப்பகுதிகளில் தொடரலாம்.
உதாரணமாக கர்மத்தில் இருந்து கிருபைக்கு என்ற தளத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த தளம் நான் சில இந்து நண்பர்களோடு உரையாடும் போது மிகவும் உபயோகமாக இருந்தது. மற்ற படி இவை என் கருத்துக்களே, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லமாட்டேன். எல்லா சகோதரர்களும்,நீங்களும் சேர்ந்து தீர்மானிப்பதை ஏற்றுகொள்கிறேன்
அருமை நண்பர் ஜாண் அவர்களின் விலைமதியா ஆலோசனைகளை இயன்றமட்டும் செயல்படுத்த முயற்சிக்கிறேன்;ஜாண்,உங்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்ல விரும்புகிறேன்,ஆம் நம்முடைய வாதங்களில் ஒளிந்திருக்கும் கருத்துக்களைக் கூட இயன்றமட்டும் பிரித்தெடுத்து புதிய தலைப்பில் தனி கட்டுரையாக்கும் யோசனையில் இருக்கிறேன்;அது ஒரு புது அனுபவமாக இருக்கும்;உங்கள் பிரயாசம் ஒன்றும் வீணாகாத வண்ணம் அனைத்தையும் சேகரித்து வாசகர்களுக்கு விருந்தாக்குவோம்.
நண்பர் அசோக் அவர்களுக்கு,தங்கள் விருப்பபடி சோதனை முயற்சியாக ஒரு உபதளத்தை அமைத்திருக்கிறேன்;பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் ஆலோசனைகளையும் சொல்லவும்;நண்பர் கோல்வின் மற்றும் ஜாண் ஆகியோர் தற்போதைக்கு தங்கள் பெயரில் தனி பொறுப்புடன் எதையும் செய்யும் எண்ணம் இல்லாத காரணத்தால் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தங்கள் மேலான பங்களிப்பை வழங்கிடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்.
நானும் என்னுடைய பெயரில் என்று எதையும் செய்ய விரும்பவில்லை ஆனால் நிறைய காரியங்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.நல்ல கருத்துக்கள் ,மற்றும் கட்டுரைகள் விவாதம் என்ற காரணத்தால் எல்லாரும் படித்து பயன்பெற இயலாத நிலைமையில் இருக்கிறது. தனி பெயரில் என்று இல்லாதபடி Subject-ஐ மையமாக வைத்து Blog மற்றும் Faq போன்ற மாதிரிகளில் (Read Only) நம்முடைய கருத்துக்களை எழுதலாம். விவாதங்களை தொடர்ந்து யௌவன ஜனம் விவாதப்பகுதிகளில் தொடரலாம்.
உதாரணமாக கர்மத்தில் இருந்து கிருபைக்கு என்ற தளத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த தளம் நான் சில இந்து நண்பர்களோடு உரையாடும் போது மிகவும் உபயோகமாக இருந்தது. மற்ற படி இவை என் கருத்துக்களே, இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லமாட்டேன். எல்லா சகோதரர்களும், நீங்களும் சேர்ந்து தீர்மானிப்பதை ஏற்றுகொள்கிறேன்
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இங்கே என் கிறிஸ்துவ நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நானே ஒரு தளம் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அது கர்த்தருக்கு சித்தமா என்று ப்ராதித்துகொண்டிருக்கும் வேளையில் நீங்களே இப்படி ஒரு பதிவிட்டு அதை உறுதி செய்து விட்டீர்கள். ஆண்டவருக்கு நன்றி. ஆவியின் நடத்துதளுக்கு நான் கீழ்படிகிறேன்.
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்
கர்த்தருக்குள் பிரியமான நண்பரே,
தங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறேன்;நீங்கள் தனியாக தளம் அமைப்பதும் சிறந்தது தான்;ஆனாலும் என்னைப் போன்றவர்கள் உலகப் பிரகாரமான எந்த வேலையிலும் இல்லாததால் அதிக நேரம் இங்கே செலவிடமுடிகிறது;அந்த நேரத்தில் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கலாமே என்ற ஒரு யோசனை உதித்தது.
மேலும் ஒரே கருத்துடையவர்கள் (like minded) இணைந்திருப்பது ஒருவித தார்மீக பெலத்தையே தரும் அல்லவா? இதனால் நம்முடைய பார்வையாளர்களையும் நாம் ஒருங்கிணைக்கிறோம்.
இங்கே பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையுடையோர் வந்து சென்றாலும் இதுவரையிலும் அரவணைத்து செல்லவே முயற்சிக்கிறோம்;கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் தமிழ் மொழியில் இதுவரை பைபிள் சம்பந்தமாக அணுகப்படாத அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்போகிறோம்.
உதாரணமாக இந்து வேதங்களில் பாண்டித்தியம் பெற்று பிரசித்திபெற்ற சாது செல்லப்பா அவர்களின் எழுத்துக்கள் இணையத்தில் அதிகம் இல்லை; அவற்றையும் கூட அவருடைய அனுமதியுடன் இங்கே எழுதி பதிக்கலாம்; இப்படியாக பைபிளைக் குறித்து மாற்று மார்க்கத்தவர் குறிப்பாக இந்து மக்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை உடைத்தெறிந்து அவர்களுடன் உறவை ஏற்படுத்தவேண்டும்.
என்னுடைய யோசனையின்படி நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் முதல் பக்கத்தில் உங்களுக்கென்று- உங்கள் பெயரில் ஒரு உபதளத்தை (Sub-forum) அமைக்கிறேன்;அதில் முதலாவதாக நீங்கள் ஏற்கனவே இங்கே எழுதி பதித்திருக்கும் கட்டுரைகளை பதிக்கிறேன்;நீங்கள் தொடராக எழுத விரும்புகிறவற்றில் நண்பர்கள் யாரும் இடைபட்டு பின்னூட்டமிடுவதை நீங்கள் தவிர்க்கவிரும்பினால் அதிலேயே வாசிக்க மட்டும் (Read only) என்றும் உறுப்பினர் மட்டும் (Members only) பார்வையிட என்றும் உறுப்பினர் மட்டுமே பின்னூட்டமிட என்றும் பல்வேறு வாய்ப்புகள் உண்டு; இதில் நீங்கள் வழக்கம் போல நீங்களே எந்தவொரு திரியையும் துவங்கி பதிக்கலாம்;பக்கங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் பிழைதிருத்தும் வேலைகளை நான் கவனித்துக்கொள்ளுவேன்.தங்களுடைய அனுமதி மற்றும் விருப்பங்களை அறிந்ததுமே எனது வேலையைத் துவங்குகிறேன்.
பின்குறிப்பு:
இதே விவரங்களை எனதருமை நண்பர்கள் கோல்வின்,ஜோசப் ஸ்னேகா மற்றும் ஜாண் ஆகியோரின் கவனத்துக்கும் தருகிறேன்;ஆர்வமுள்ள மற்ற சகோதரர்களையும் வரவேற்கிறேன்.
விதிமுறைகள்:
ஏதுமில்லை,இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான்,நீங்கள், இயேசுவானவரைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்பவராக இருக்கவேண்டும்;மற்ற காரியங்களைப் பிறகு பேசிக்கொள்ளலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இங்கே என் கிறிஸ்துவ நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நானே ஒரு தளம் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அது கர்த்தருக்கு சித்தமா என்று ப்ராதித்துகொண்டிருக்கும் வேளையில் நீங்களே இப்படி ஒரு பதிவிட்டு அதை உறுதி செய்து விட்டீர்கள். ஆண்டவருக்கு நன்றி. ஆவியின் நடத்துதளுக்கு நான் கீழ்படிகிறேன்.
சகோ. தற்போது இருக்கும் நிலையே சிறந்தாக படுகிறது. எனக்கென தனியான பகுதியை உருவாக்க வேண்டாமே. வேண்டுமானால் கட்டுரைபகுதியை பாகுபாடு செய்யலாம் வேதஆராய்ச்சி கட்டுரை, சிறுகட்டுரைகள்.... இப்படி உங்களுக்கு பொருத்தமான வகையில் செய்து கொள்ளுங்கள். பெயர் அடிப்படையில் எதையும் செய்ய வேண்டாம்
தங்களுடைய மேலான கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன்;இது ஏற்கனவே நான் தமிழ் கிறித்தவ தளத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக யோசித்து ஒருவராலும் கவனிக்கப்படாத யோசனையே; அடியேன் அதனை நாடு கடந்த தமிழீழ அரசின் முயற்சிகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட தளத்துக்கும் ஒரு பொறுப்பாளரையோ அல்லது ஒரு குழுவையோ நியமித்து அவர் வசம் வந்து சேரும் தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவரவருக்கு ஆர்வமுள்ள பணியில் ஈடுபடுத்துவது.
இதுபோன்ற அமைப்பு திருச்சபைக்குள்ளும் வரவேண்டும்;உதாரணமாக சர்ச்சைக்குரிய உபதேசங்களில் திருச்சபையின் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசர அவசியமான பணியாகும்; இதனால் சத்தியத்தை நிதானமாக ஆய்ந்தறிய வாய்ப்பில்லா மற்ற இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவர்; திருச்சபையின் தலைவர்களே எல்லாவற்றையும் செய்யவேண்டிய அவசியமே இல்லை;இதன் காரணமாகவே தவறும் சர்ச்சைகளும் இடறல்களும் உண்டாகிறது;மேலும் இளைய சமுதாயத்தினர் சத்தியத்தைப் பீடத்திலிருந்து கேட்கும் பொறுமையை இழந்து நெடுநாளாகிவிட்டது; பெற்றோருடைய புத்திமதிகளும் எடுபடுகிறதில்லை; அவரவர் விழுந்து எழுந்து கெட்டு நொந்தேசிலுவையண்டையில் வருகின்றனர்;இராஜா மாதிரி வந்து விருந்துண்டு செல்லவேண்டிய வீட்டுப்பிள்ளை அடிமையைப் போல உள்ளே வருகிறதே..!
இணையத்திலோ பெரும்பாலும் இளைஞர்களே ஆக்கிரமித்துள்ளனர்; அதனைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கவரும் வண்ணமாக இதுபோன்ற பொறுப்புகளைக் கொடுத்து செயல்பட்டால் நம்மைப் பின்பற்றி அநேகர் இதுபோன்ற இணையதள சபைகளை உருவாக்குவார்கள் என்று எண்ணுகிறேன்;கோல்வின் போன்றவர்களுடைய உழைப்பும் வீணாகாமல் மற்றதுடன் கலந்துவிடாமல் சிறப்புபெறும்.
colvin wrote:
// எனக்கென தனியான பகுதியை உருவாக்க வேண்டாமே..பெயர் அடிப்படையில் எதையும் செய்ய வேண்டாம் //
இதில் உங்கள் தாழ்மையையே காண்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ. தற்போது இருக்கும் நிலையே சிறந்தாக படுகிறது. எனக்கென தனியான பகுதியை உருவாக்க வேண்டாமே. வேண்டுமானால் கட்டுரைபகுதியை பாகுபாடு செய்யலாம் வேதஆராய்ச்சி கட்டுரை, சிறுகட்டுரைகள்.... இப்படி உங்களுக்கு பொருத்தமான வகையில் செய்து கொள்ளுங்கள். பெயர் அடிப்படையில் எதையும் செய்ய வேண்டாம்
நம்முடைய யௌவன ஜனம் தளம் சம்பந்தமாக அடியேன் முன்வைத்துள்ள சில முக்கியமான யோசனைகளுக்கு நண்பர்கள் இதுவரை நலம்பொலம் ஒன்றும் சொல்லவில்லையே...யாராவது ஏதாவது சொல்லி துவங்கி வைத்தால் நன்றாக இருக்கும்,செய்வீர்களா?
"இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது." (ஆதியாகமம்.24:50)
என்கிறீர்களோ..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எனக்கன்பான யௌவன ஜனம் தளத்தின் மதிப்புமிகு தோழர்களே,
கடந்த சில வாரங்களாக எதற்காக இந்த தளத்தினை வடிவமைத்தேனோ அந்த தரிசனங்கள் மெய்ப்பட துவங்கியிருப்பதாக உணருகிறேன்; இந்த நல்ல சூழ்நிலையில் அண்மைய விவாதங்களையும் நண்பர்களுடைய பங்களிப்பையும் ஆதரவையும் பார்த்து புளங்காகிதமடைந்த மகிழ்ச்சியிலிருந்தபோது ஒரு ஆலோசனை மனதில் உதித்தது;அது என்னவென்றால் தற்போது யௌவன ஜனம் தளத்தில் மிகுந்த நேர்த்தியாக எழுதிவரும் நண்பர்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாக ஒவ்வொருக்கும் தனித்தனியான தளத்தை உருவாக்கி ஒவ்வொருக்கும் தனித்தனி பொறுப்பை தரவேண்டும்;உதாரணத்துக்கு கோல்வின் அவர்களுடைய படைப்புகளை தனியாகத் தொகுக்க விரும்புகிறேன்; ஏனெனில் அவருடைய கவனம் முழுவதும் வேத ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்களில் இருக்கிறது; அடுத்து நண்பர் அசோக் அவர்களை எடுத்துக்கொண்டால் இந்து கிறித்தவ விவாதங்களில் பழகியவர்;அவரிடமிருந்து சத்தியத்தை வெளிப்படுத்தும் நேர்த்தியான கட்டுரைகள் புறப்பட்டு வருகிறது; மேலும் ஜாண் அவர்களுடைய கட்டுரைகளும் மார்க்கபேத சக்திகளுக்கு சரியான சம்மட்டியாக விளங்குகிறது; இதைக் குறித்து நண்பர்களுடைய கருத்து மற்றும் ஊக்கத்தைப் பொறுத்து அதற்கான அமைப்பு வேலைகளை துவக்குவேன்;முதற்கட்டமாக இம்மூன்று நண்பர்களால் ஏற்கனவே துவக்கப்பட்ட கட்டுரைகள் தகுந்த தலைப்புகளுடன் புதிய பகுதிக்கு மாற்றப்படும்; உதாரணமாக,அதன் தலைப்பு இவ்வாறு இருக்கலாம், "கோல்வின் அவர்களின் தளம்"- அதில் ஆர்வமுள்ள மற்ற தோழர்கள் இணைந்து ஒரு குழுவாகப் பணியாற்ற வேண்டும்; எந்தவொரு காரியத்துக்கும் அவர்களே பதிலளிப்பார்கள்; பொதுவான காரியங்களில் தத்தமது கருத்துக்களை மற்ற நண்பர்கள் பகிர்ந்துக்கொண்டாலும் விவாதத்தை தவிர்க்க அதன் பொறுப்பாளர் விரும்பினால் அதற்கு இங்கே விசேஷித்த வாய்ப்புண்டு;எப்படியெனில் தள அமைப்பிலேயே பின்னூட்டத்தை அனுமதிக்கலாமா வேண்டாமா என்றும் பொதுவில் (Public) வைப்பதாஎன்றும்உறுப்பினர்களுக்கும் (Members only) மட்டுமே என்றும் நிர்ணயிக்கமுடியும். இதன்படி கட்டுரையாளர் ஒரு வேண்டுகோளை வைத்தால் அதனை பரிசீலித்து பின்னூட்டத்தைத் தவிர்க்கும் பகுதிக்கும் உறுப்பினர் மட்டுமே பார்வையிடும் பகுதிக்கும் மாற்றிவிடுவேன்.
நாம் இணைந்து கட்டுவோம்,
கர்த்தர் வருகிறார்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
chillsam wrote: ////நண்பர் சுந்தர் அவர்கள் மிக நேர்மையாக -நேரடியாகவே சொல்லி விட்டார்,உங்களுடன் நமக்கு ஒத்துவராது,என..!////
சகோதரர் அவர்களே! நான் எழுதும் எழுத்துக்களும் எனது கருத்துக்களும் அனேக கிறிஸ்த்தவர்களுக்கு ஒத்துவராது எனவேதான் பொதுவான இந்த தளத்தில் பதிவிடுகிறேன். எனது தம்பி ஒரு பாஸ்டர்
தனியாக சபை வைத்துள்ளார். அவனுடன் சேர்ந்து ஊழியம் செய்யலாம் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு போய் சில மாதங்கள் ஊழியம் செய்தேன். ஆனால் நான் பிரசிங்கித்த பல கருத்துக்களை அவன் எதிர்க்கவே, என்னால் அவனுடன் சேர்ந்து ஊழியம் செய்ய முடியவில்லை. அவன் சொல்வதை எதையும் நான் மறுக்கவில்லை ஆனால் அதே வேதத்தின் அடிப்படையில் நான் சற்று அதிகமான கருத்துக்களை சொன்னால் எங்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வந்துவிடும். எனவே மீண்டும் வேலைக்கே வந்துவிட்டேன். நானும் பல பாஸ்டர்களிடம் பேசி பார்த்துவிட்டேன் எனது கேள்விகளுக்கு அவர்களால் பதில் தர முடியாது ஆனால் நான் கூறும் கருத்துக்களையும் அவர்கள் ஏற்ப்பது இல்லை எனவே உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் எனது பணியை நான் செய்கிறேன் என்று விலகிவிடுவேன்.
இதேபோல் தங்களுடனும் பல முறை எனக்கு கருத்து வேறுபாடு வந்திருக்கிறது நான் தங்களின் கருத்து எதையும் குறைசொல்லியோ அல்லது தங்களை தனிப்பட்ட குறை சொல்லியோ எங்கும் எழுதவில்லை ஆனால் நீங்கள் என்னைப்பற்றி எழுதி கடினவார்த்தைகளுக்கு பதில் மட்டுமே கொடுத்திருப்பேன்.
chillsam wrote:
////இந்த "யௌவன ஜனம்" தளத்தில் இதுவரை யாரையும் கடிந்து எழுதியதோ -தணிக்கை செய்ததோ -நீக்கியதோ இல்லை; ;////
அப்படி சொல்ல கூடாது சகோதரரே! உங்களின் கடின எழுத்துக்கள் பல இன்னும் தளத்திலேயே இருக்கிறது .
chillsam wrote: ////ஆனால் சுந்தர் போன்றவர்கள் ரொம்ப ஞானிகள் போல இன்னின்னதை ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார்,ஏற்பவர் ஏற்கட்டும் ஏற்காதவர் போகட்டும் என்ற பாணியில் எதையோ எழுதிவிட்டு போகின்றனர்;எனக்கு அதில் நம்பிக்கையில்லை,நான் என்ன செய்ய,மோதல் வருகிறது..!////
என்னை ஞானியாகவும் தேவனால் கூடும் ஒரே நொடியில் என்னை பயித்தியம் ஆக்கிவிடவும் அவரால் முடியும். எனவே நான் ஞானியா அல்லது பயித்தியமா என்பது எனக்கே தெரியவில்லை. ஆகினும் என் மனதில் ஏவப்படும் கருத்துக்களை நடந்த சம்பவங்களோடு தொடர்புபடுத்தி எழுதுகிறேன். ஒருவேளை அதில் தவறுகள் இருக்குமாயின் ஆண்டவர் எனக்கு அதை தெரியபடுத்துவார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு எழுதுகிறேன்.
ஆகினும் எனது எந்த கருத்துக்களிலும் நான் தங்கள் போதிக்கும் மீட்பின் திட்டத்தையோ வேதத்தின் மகத்துவத்தையோ, பரிசுத்த வாழ்க்கையின் மேன்மையயோ விட்டு கொடுத்து எழுதியது இல்லை.
சகோதரரே, தங்களது கருத்தினைப் படித்ததும் சற்று சந்தோஷப்பட்டு பின்னர் அதிர்ச்சியுடனும் வலியுடனும் சிரித்துக்கொண்டேன்; எனது உணர்வுகளுக்கு ஏற்றதொரு கருத்து என மகிழ்ந்த அடுத்த கணம் நானும்கூட கிறித்தவ தளத்தில் எழுதுவதை விரும்புவதில்லை என்ற தங்கள் கருத்து என்னை சற்று தடுமாற வைத்தது;
நான் கிறித்தவ தளத்தில் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துள்ளேன்;அவை சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை;விரைவில் அவற்றை இங்கே புதுப் பொலிவுடன் பதிப்பேன்,அப்போது நீங்கள் கவனிக்கலாம்,மிகக் குறுகிய காலத்தில் பலமணி நேரங்கள் இரவுபகலாக எழுதியவை எத்தனை அதிகம் என்பதை எனது நண்பர்கள் அறிவர்;
நான் கடந்த இரு வருடமாகவே கணிணியை பயன்படுத்துகிறேன்; இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது;ஆனாலும் தேவ கிருபையினால் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி ஒரு நிலைக்கு வரவே ஒரு வருடமானது;
இதனிடையே நான் மிகவும் ஈடுபாட்டுடன் எழுதி வந்த கிறித்தவ தளம் முடங்கிப் போனதும் மிகவும் சோர்ந்துபோனேன்;வேறு எங்கு எழுதியதும் திருப்திகரமாக இல்லை;
இதனிடையே சற்றும் எதிர்பாராத ஒரு வாய்ப்பாகவே "யௌவன ஜனம்" எனும் தளத்துக்கான வாசல் திறந்தது;அதில் பங்கேற்க எனது தள நண்பர்களுக்கு பகிரங்க அழைப்பும் தனி மடலும் அனுப்பினேன்;அதுவே மற்றும் இரு கிறித்தவ தளம் தோன்ற வாய்ப்பானது;
அந்த தளம் முடங்கியிருந்த காலத்திலும் அங்கே பழகி இங்கேயும் வந்து பார்வையிட்டுச் சென்ற நண்பர்கள் எதையும் பதிக்காமல் சென்றது சற்று ஏமாற்றமாக இருந்தது;
அவர்கள் சொல்லுகிறார்கள்,அது பொதுவான தளம் என்றும் இது தனியாள் தளம் என்றும்;ஆனால் ஒரு தளமானது பொதுவான தளம் என்ற தோற்றத்துக்கு எப்போது வருகிறது,ஒரு சில நண்பர்களின் கூட்டு முயற்சியினால் தானே..?
அப்படியானால் பிரபலமான அந்த கிறித்தவ தளம் செயல்படாமல் முடங்கியிருந்த காலத்தில் எனது அன்புக்குரிய தள நண்பர்கள் தங்களுக்குள் பொங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடிய மேலான கருத்துக்களுக்கு இந்த தளத்தை வடிகாலாக பயன்படுத்தியிருக்கலாமே என்பதே எனது ஆதங்கம்;
மற்றபடி அவர்கள் கூறுவது போல யாரையும் என்னுடைய எழுத்தைப் படிக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை;
நான் தளம் அமைத்த பிறகு அது என்னுடைய தளமாக அதாவது மற்றொரு கிறித்தவ தளத்தின் நிர்வாகி குறிப்பிட்டது போல "ஒருதலைபட்சமான" தோற்றம் வராதிருக்க நான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டேன்;இதுவே உண்மை.
நான் வேறு தளங்களில் எழுதினாலும் அங்கு எழுதும் கருத்துக்களை இங்கே சேமித்து வருவதை கவனித்திருப்பீர்கள்; ஆனாலும் எனக்கு இன்னும் ஆசையுண்டு,நான் அங்கும் இங்கும் அலையாமல் எனக்கு ஆண்டவர் கொடுத்த தளத்திலிருந்து அவருக்காக மட்டுமே பணிசெய்ய வேண்டுமென்று.
என்னுடன் ஒத்த கருத்துடைய அதாவது ஆரோக்கியமான கிறித்தவ உபதேசத்தினைக் கைக்கொள்ளும் இருவர் இருந்தாலும் போதும்;எனது பணி சற்று இலகுவாகும்;
"இறைவன்" தளத்தின் வெற்றிக்காக நான் சொன்ன வாழ்த்தையும்கூட சிலர் கேலி பேசியதை கவனித்திருப்பீர்கள்;"இறைவன்" தளம் தினமும் 500 பேர் வந்து செல்லும் தளமாக உயரவேண்டும் என்று உள்ளன்போடு சொல்ல அவர்களோ 5 பேர் வந்தாலே போதும் என்று மட்டந்தட்டினர்;
நண்பர் சுந்தர் அவர்கள் மிக நேர்மையாக -நேரடியாகவே சொல்லிவிட்டார்,உங்களுடன் நமக்கு ஒத்துவராது,என..!
இந்த "யௌவன ஜனம்" தளத்தில் இதுவரை யாரையும் கடிந்து எழுதியதோ -தணிக்கை செய்ததோ -நீக்கியதோ இல்லை;இந்த தளத்தினை அனைவருக்கும் பொதுவான தளமாக விளங்கச்செய்வதே என்னுடைய நோக்கமாகும்; எனவே தான் நானே எல்லா கட்டுரையையும் எழுதாமல் தவிர்த்து வருகிறேன்;
எனக்கு கட்டுரைகளை எழுதி பதிப்பதைவிட அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளையும் கிறித்தவ உலகில் நிலவும் குழப்பங்களையும் கிறித்தவத்தைக் குறித்து மாற்று மார்க்கத்தார் கொண்டுள்ள கருத்தையும் கவனித்து அதற்கேற்ற கலந்துரையாடல் பாணியில் ஒருவருக்கொருவர் அமர்ந்து பேசுவது போல விவாதிப்பதே விருப்பமானதாகும்;
ஆனால் சுந்தர் போன்றவர்கள் ரொம்ப ஞானிகள் போல இன்னின்னதை ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார்,ஏற்பவர் ஏற்கட்டும் ஏற்காதவர் போகட்டும் என்ற பாணியில் எதையோ எழுதிவிட்டு போகின்றனர்;எனக்கு அதில் நம்பிக்கையில்லை,நான் என்ன செய்ய,மோதல் வருகிறது..!
உடனே என்னுடைய தளம் வெறுமையாக இருப்பதை உணர்ந்து அதையே இங்கும் கொண்டு வந்து பதிக்கிறேன்;ஆனாலும் எனக்கு பதிலளிப்போர் அங்கேயே பதிலளிக்கின்றனர். மீண்டும் சந்திப்போம்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அனேக தமிழ் கிருத்துவர்களுக்கு கிருத்துவ கருத்துகளை கிருத்துவ தளங்களில் பகிர்ந்து கொள்ளவோ அல்லது எழுதவோ விருப்பம் இல்லை. ஆனால் கிருத்துவ எதிர்பாளர்கள், மற்ற மத இணைய தளங்கள் போன்றவற்றில் எழுத அவர்களுக்கு பதில் சொல்ல இவர்கள் மிகவும் விருப்பமாக உள்ளனர் (இந்த தள நிர்வாகி உட்பட)
கிருத்துவர்கள் அனேகர் ஒரு தளத்தில் எழுத வேண்டும் என விரும்பினால் முகமதுவை பற்றி புகழ்ந்து எழுதினால் போதும். அதன் பிறகு அந்த தளத்துக்கு எத்தனை கிருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.
இங்கே எல்லாரும் ஒற்றுமை பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு புதிய ஊழிய முறைக்கு அறிமுகமான நான் இந்த தளத்தின் செயல்பாடு தடைபட்டிருந்த காலக் கட்டத்தில் அதாவது கடந்த சுமார் ஆறு மாதமாக மற்றொரு இலவச விவாதக் களத்தை அமைத்து நண்பர்களை அழைத்தேன்;
ஆனால் ஒரு மரியாதைக்குக் கூட யாரும் எந்த கருத்தையும் பகிர்ந்துக்கொள்ள அங்கு வரவில்லை; இதன் இரகசியம் என்ன என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை; என்னுடைய செயல்பாட்டில் குறை இருந்தால்கூட நட்பின் அடிப்படையில் சுட்டி காட்டியிருக்கலாம்;
ஆனால்..................?
-இது நாம் மிகத் தாழ்மையுடன் நட்புணர்வுடனும் ஆதங்கத்துடனும் பிரபலமான ஒரு கிறித்தவ தளத்துக்கு வைத்த வேண்டுகோள்;ஆனால் அதற்குக் கிடைத்த பதிலோ ஆச்சரியமாக இருந்தது;
சே.... சகோ.சில்சாம் அவர்கள் இந்தளவுக்கு வருந்தும்படி ஆகிவிட்டதை நினைத்து வருந்துகிறேன்.
நான் பலமுறை அவருடைய விவாதகளத்திற்கு சென்று பார்வையிட்டாலும் ஏனோ பதிவிட வில்லை என்பது ஆச்சரியம்தான்.
என்னுடைய மனதில் உள்ளபடி, இவரைப் போலவே நம் தள முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் விவாதகளம் அமைத்து, பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே விவாதம் (ஒருதலைப் பட்சமாக) நடைபெற்று வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இன்னொன்றையும் கூட சகோ.சில்சாம் அவர்களுக்கு கூற விரும்புகிறேன். பொதுவாக இணையதளத்தில் பொதுவான இடத்தில் விவாதம் செய்வதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என்பதைக் கண்டிருக்கிறேன்.
தனிப்பட்ட ஒருவரது பக்கத்தில் விவாதங்கள் சண்டையில் முடிவது அவ்வப்போது பதிவுலகத்தில் நடைபெறும் வழக்கமான ஒன்று. இது சகோ.சில்சாம் அறியாத ஒரு காரியமல்ல.
என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வெனில் சகோ.சில்சாம் உங்களுடைய விவாத தளத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் வலைப்பூக்களுக்கு கொடுத்து அதிக பதிவுகளை எழுதித்தள்ளுங்கள்.
அதில் நீங்கள் விரும்புவதையோ அல்லது அனைத்தையுமோ நம் தளத்திலும் பதிவிடுங்கள். நமது தளத்தில் முன் பக்கத்தில் உங்கள் கட்டுரை வர விரும்பினால் எனக்கோ அல்லது தள நிர்வாகத்துக்கோ மெயில் அல்லது தனிமடல் அனுப்புங்கள். தள நிர்வாகம் அதை ஆராய்ந்து பதிவிடும்.
இன்னுமொரு தாழ்மையான வேண்டுகோள்.... உங்கள் பதிவுகளை நம் தளத்திலோ அல்லது வேறு எங்கேயாகிலும் பதிவிட்டால் முழுமையாக தாருங்கள். அத்துடன் கீழே உங்கள் இணைப்பையும் (link) கொடுங்கள். பாதியை மட்டும் கொடுத்து மீதியை அங்கு வந்து படியுங்கள் என்றால் பெரும்பாலும் என்னைப் போன்ற இணையதள் சோம்பேறிகள் வரமாட்டார்கள்.
மேலும் கட்டாயப்படுத்தி எவரையும் நாம் வாசிக்க வைக்க இயலாது.
நான் எழுதியவற்றிற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு தனிமடலில் எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனாலும் இதை வாசிக்கும் எவருக்கும் இது தேவையானது என்பதற்காகவே இங்கு. ஏதேனும் உங்களை பாதித்திருந்தால் மன்னிக்கவும்.
-இதற்குரிய பதிலை நாம் விரைவில் சமர்ப்பிப்போம்;வாசக நண்பர்களும் தங்கள் கருத்தினை தாராளமாக முன்வைக்கலாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)