Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன்னதபாட்டு
Timothy_tni

Date:
RE: உன்னதபாட்டு
Permalink  
 


சகோ. சில்சாமையும் காணவில்லை... லாகின் லிங்க்-யும் காணவில்லை..

//வேதத்தின் படி யாரும் எந்த எரிநரகத்திற்கும் போக மாட்டார்கள்//

பெயரைக்கூட சொல்லவிரும்பாத உங்கள் வாக்கை யார் நம்புவார்கள்
..

யாருக்கும் நரகம் இல்லையெனில் ஏன் தேவன் உயிரைத் தரவேண்டும்?? நேரடியாக உயிர்த்தெழுதலே செய்யலாமே..

பாவிகள் மரணத்திற்கு பின்பு எங்கே போவார்கள்? என்று நினைக்கிறீர்கள்..


__________________
Anonymous

Date:
Permalink  
 

வேதத்தின் படி யாரும் எந்த எரிநரகத்திற்கும் போக மாட்டார்கள். மரணமும் கல்லறையை மாத்திரமே நிரந்தரமாக (இந்த நிரந்திர அழிவை தான் வேதம் எரி நரகத்திற்கு ஒப்பீட்டாக சொல்லியிருக்கிறது) அழிக்கப்படும். கும்பகோனத்தில் மரித்த அப்பாவி குழந்தைகள் எரி நரகத்திற்கு செல்லும் வாய்ப்பே இல்லை. ஏனென்றால்,

முதலாவது, அப்படி ஒரு இடமே இல்லை.

இரண்டவது, எந்த ஒரு விஷயத்தின் நிரந்திர அழிவை குறிக்கும் சொல் தான் எரி நரகம். ஏடுத்துக்காட்டாக, கிறிஸ்துவினால் உயிர்ப்பிக்கப்பட்ட அனைவரையும் இனி மரணம் அண்டாதபடி, அந்த மரணத்தை நிரந்திரமாக அழிப்பார். மரணம் இல்லை என்றால் "கல்லறை" என்கிற பாதாளமும் தேவை இல்லையே!! ஆக இந்த இரண்டும் தான் எரி நரகத்தில் (நிரந்திரமான் அழிவு) போடப்படும்.

மேலும் அறிந்துக்கொள்ள,
http://kovaibereans.activeboard.com



__________________
Anonymous

Date:
Permalink  
 

திரு CHILLSAM அவர்களே,

"அத்வேஷ்டா என்றால் என்ன ?"  என்ற உங்கள் பதிவிற்கு நான் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருந்தேன்.அதற்க்கு உங்கள் பதில் என்ன?

திரு CHILLSAM அவர்களே,

கும்பகோணம் கொடூர தீ விபத்தில் 96 குழந்தைகள் இறந்தன.இதில் இந்து குழந்தைகளும் இறந்தன.இந்து தெய்வங்களையே வணங்கி இறந்த குழந்தைகளை,அதாவது இயேசுவை வணங்காதக் குழந்தைகளை கர்த்தர் ஏற்றுக்கொள்வாரா?இல்லை அவர்கள் நிரந்தர எரிநரகத்திற்கு செல்வார்களா? இதற்க்கு உங்கள் மூளை சொல்லும் பதிலைக் கூறாமல்,பைபிள் என்ன கூறுகிறது என்று மேற்கோள் காட்டிக் கூறமுடியுமா?



__________________
Sindhu

Date:
Permalink  
 

Sindu wrote:

உன்னதபாட்டு
Printer Friendly

மனதிற்க்கு இதமானதாகயிருக்கிறது இயேசு கிருஸ்துவே என்னிடம் பேசியது போல் உணருகிறேன்



 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

உன்னதபாட்டு (1. 9-11)

என் மணவாளியே! உன்னை குறித்து நீயே தாழ்வாய் சிந்திப்பதென்ன? ஏன் நான் பிறந்தேன் என எண்ணுவதென்ன? நான் நானே உன்னை உருவாக்கினேன். என் கைகளே உன்னை உருவாக்கிற்று. நீ இல்லாமல் இந்த உலகம் நிறைவு பெற்றதாய் நான் காணவில்லை ஆகவே உன்னை படைத்தேன். நீ வந்த பிறகு இந்த உலகம் உன்னால் மேலும் அழகு பெற்றது. உன்னை பெயர் சொல்லி அழைக்கும் உன் தேவனாகிய கர்த்தர் நானே. உலகத்தாரை போலவே உன் இயலாமையை நினைத்து நீ வருந்துவதென்ன. நீ என்னை நம்பாமற் போனதென்ன? நீ செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதை என்னிடம் கேட்டு அறிந்து கொள். என் சித்தப்படி செய்யாத காரியங்களினால் அல்லவோ பிரச்சனையும் துன்பமும் உனக்கு வருகிறது?

என் பிரியமே! நீ பூரண ரூபவதி உன்னில் பழுதொன்றுமில்லை உலகம் உன் குறைகளை பார்க்கலாம் ஆனால் உலகை உண்டாக்கின நானோ உன்னில் ஒரு குறையும் காணவில்லை. உன்னை பற்றி சரியாகநீ அறிந்திருக்கவில்லை. என் பிரியமே நான் உன்னை பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற குதிரைகளின் தொகுப்புக்குஒப்பிடுகிறேன். நீ பல குதிரைகளின் சக்திக்கு ஒப்பானவள் (HORSE POWER). நீ கர்த்தருக்கு உன்னை ஒப்புக் கொடுக்கும் போது ராஜாவான அவர் பயணம் செய்யும் குதிரைகளின் தொகுப்புக்கு ஒப்பாவாய். அவர் பயணம் செய்யும் குதிரையானது

21. -- தரையிலே தாளடித்து, தன்பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.
22. அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
23. அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
24. கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
25. எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்.

கர்த்தராகிய நானே குதிரைக்கு வீரியத்தைக் கொடுத்தேன் அதின் தொண்டையில் குமுறலை வைத்தேன்.அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.

உன் வாழ்க்கையில் வரும் போரை சந்திக்கவும் அதில் வெற்றி பெற வைப்பதும் நானே. என்னாலே நீ பிரச்சனை என்னும் சேனைக்குள் பாய்ந்து போவாய். துன்பத்தின் மதிலை தாண்டுவாய். சுயம் என்னும் வெண்கல வில்லும் உன் புயங்களால் வளையும்படி உன் கைகளை யுத்தத்திற்க்கு பழக்குவிக்கிறவர் நானே. உன்னை பலத்தால் இடைகட்டி உன் வழியை செம்மைபடுத்துகிற உன் கன்மலையும் கேடகமும் நானே.

என் பிரியமே! உன் இயல்பான நற்குணங்கள் என்னும் முடி கற்றைகள் புரளும் உன் கன்னங்களும் (NATURAL BEAUTY), கர்த்தருக்கேற்ற வைராக்கியம் என்னும் தாலி அணிந்த உன் கழுத்தும் அழகாயிருக்கிறது. இவைகளால் என்னை நீ கவர்ந்து கொண்டாய். இவைகளினாலே நான் உன்னை தெர்ந்து கொண்டேன்.

நீ என் நேசத்தை அறிந்தபடியினாலும், எனக்கு உன் வாழ்க்கையில் முதலிடம் தந்தபடியினாலும். நீ தேவ காரியங்களில் முன்னேறி ரூபவதியாய் விளஙகுகிறாய். உன்னுடைய கண்கள் புறா கண்கள். அவை கள்ளம் கபடம் இல்லாதது. தீமை செய்பவரையும் கருணையுடன் நோக்கும் கண்கள். மற்றவரது தீய குணங்களை நோக்காமல், அவரிடம் உள்ள நற்குணங்களை பார்க்கும் கண்கள். பிறர் துன்பம் கண்டு பரிதவிக்கும் கண்கள். காணும் காட்சியில் எல்லாம் கர்த்தருடைய மகிமையை பார்க்கும் கண்கள்.

உன் இயல்பான நற்குணங்கள் என்னும் முடி கற்றைகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக திரியேக தேவனாகிய நாம் வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்

இயேசுவின் இரட்சிப்பினால் (வெள்ளி பொட்டு) உண்டான தேவ மகிமை நிறைந்த (பொன் ஆபரணங்கள்) வாழ்க்கையை பரிசுத்த ஆவியானவராகிய நாம் உனக்கு சூட்டுவோம்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

உன்னதபாட்டு
Printer Friendly


உன்னதபாட்டு :

1. இன்பம், இன்பம் எல்லாம் இன்பம். பேரின்பம் என்று பாடல்களில் உன்னதமான பாடல் சொல்கிறது.

என் ஆத்தும மணவாளரான இயேசு ராஜாவே, பகைவரையெல்லாம் வென்று மகிமை பொருந்தியவராய், முடி சூட்டப்பட்டவராய் விளங்குபவரே,

உம்மை பற்றி நினைப்பதும் இன்பம்

உம்மை பற்றி பேசுவதும் இன்பம்

உம்மை பற்றி கேட்பதும் இன்பம்

உம்முடைய தொடுதல் இன்பம்

உம்முடைய அணைப்பும் இன்பம்

இன்பம், இன்பம் எல்லாம் இன்பம். பேரின்பம் என்று பாடல்களில் உன்னதமான பாடல் சொல்கிறது.

2. என் ஆத்துமா இரவும் பகலும் உன் மேலேயே தாகமாக இருக்கிறது

குரு என்றும் சீடன் என்றும் உயர்வு தாழ்வு பார்க்காமல் உம்முடைய மார்பில் சாயவும், உம்மை முத்தமிடவும்உம்மை பகிர்ந்து கொள்ள அனுமதித்தவரே

என் ஜீவனானவரே, ஜீவனின் பெலனானவரே உம்முடைய ஜீவ ஸ்பரிசத்தை எனக்கு தந்தருளுவீராக.

நான் இன்றே, இப்போதே, இங்கேயே சொர்க்கத்தை அடையும்படிக்கு உம் வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக.

உமது நேசம் திராட்சை ரசத்தை பார்க்கிலும் இன்பமானது. இந்த நேசத்தால் நான் என் உலக கவலைகளையும் என் துன்பங்களையும் மறந்து உயர உயர பறக்கிறேன். திராட்சை ரசம் தருவது போன்று இது கற்பனையான இன்பம் அன்று. என் சுய நினைவோடு என் முழுமையும் உம்மில் களி கூறுகிறது.

3. தேவரீர் நீர் எனக்கு தந்தருளின பரிசுத்த ஆவியானவர் உம்மை எப்போதும் எனக்கு நினைப்பூட்டும் பரிமள தைலமாயிருக்கிறார். அவரின் இன்பமான வாசனை உம்முடைய அருகாமையை எப்போதும் எனக்கு தெரிவித்துக் கொண்டு இருக்கிறது.

நீர் எங்களுக்காய் உடைக்கப்பட்டீர். நீர் சிந்தின ரத்தத்தின் பலனாக எங்களுக்கென ஆசிர்வாதம் மற்றும் இன்பமெனும் ஊற்று திறக்கப்பட்டது. உமது நாமம் ஒரு போதும் குறையாத மேலும் மேலும் பெருகி வரும் ஊற்றுண்ட பரிமள தைலமாயிருக்கிறது. உம் நாமத்தின் வாசனையானது எனக்குள் சென்று என் உயிர் முழுதும் வியாபித்திருக்கிறது. நீர் உம்முடைய தியாகத்தால் எங்களை சொந்தமாக்கிக் கொண்டீர். ஆகவே கன்னியர்கள் உம்மை, உம்மை மட்டுமே நேசிக்கிறார்கள்.

4. அன்பின் கயிறுகளால் என்னை கட்டி இழுப்பவரே. என்னை இழுத்துக் கொள்ளும். உமக்கு பின்னே ஓடி வருவோம். என் ஆசை உம்மை பற்றியிருக்கும். நீர் என்னை ஆண்டு கொள்வீராக.

என் ராஜாவே நீர் என் மீது கொண்ட நேசத்தால் நான் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாத உமது அரண்மனைக்கு என்னை அழைத்து சென்றீர். உமது அறைகளில் என்னை தங்க வைத்தீர். இது எவருக்கும் கிடைக்கவியலாத பாக்கியமாகும். அனேகர் இந்த பாக்கியத்தை விரும்பியும் கிடைக்க கூடாமற் போயிற்று. ஆனால் நீரோ என் மீது கொண்ட நேசத்தால் தகுதியில்லாத என்னை உமது அறைக்கு அழைத்து வந்தீர். நாங்கள் உமக்குள் களி கூர்ந்து மகிழ்வோம். கற்பனையான, தற்காலிகமான, குறைவுள்ள இன்பத்தை தரும் காரியங்களை விட்டு விட்டு உமது நேசத்தை மட்டுமே நினைப்போம். உலக பொருட்கள் என்னை கவருவதில்லை. உலக நேசம் என் ஆத்துமாவின் தாகத்தை தணிக்க கூடாததாய் இருக்கிறது. உலகமும் உலக பொருட்களும் கானல் நீர். நீரோ என் தாகத்தை தணிக்க வல்ல

ஜீவ ஊற்று. மானானது நீரோடை வாஞ்சித்து கதறுவது போல என் ஆத்துமா உம் மேலேயே தாகமாயிருக்கிறது. உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போம். நீரோ என்றென்றும் மாறாதவர். நிறைவான உம் நேசத்தால் குறைவானது ஒழிந்து போம். உத்தமர்கள் எவரோ அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

5,6 . ராஜாவுக்கு சொந்தமானவர்களே, அவர் என்னை நேசிக்கும்படி என்னிடத்தில் என்ன உண்டு என நீங்கள் பார்ப்பதென்ன? நான் கறுப்பானவள் என நீங்கள் நினைப்பதென்ன? கேதாரின் கூடாரங்களை போலவும், சாலமோனின் திரைகளை போலவும் நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன். உலகமும் அதிலுள்ள மக்களும் என் சொந்த ஆத்துமாவை நான் காக்கும் வழியை சொல்லாமல், அதன் கள்ளமில்லா தன்மை மறையும்படி என்னை உலக அறிவுக்கும், உலக பொருட்களுக்கும் ஊழியம் செய்யும்படி வைத்தார்கள். நானும் மனிதர்களுக்கு ஏற்றாற் போல் முகமூடி அணிய கற்று கொண்டேன். பாவம் என்னும் வெய்யில் என் மேல் பட்டதால் நான் கறுப்பானேன். ஆனால் என்னுள்ளே அழகான கள்ளமில்லா ராஜா விரும்பும் ஆத்துமா இருப்பதை அறிந்திருக்கிறேன். நானாக நானில்லை என் மன்னவன் வரும்வரை. என் மன்னவன் வந்த போதோ என் பரிசுத்த ஆத்துமாவை நான் மீண்டும் பெற்றுக் கொண்டேன். அதன் பேரின்பத்தை மீண்டும் அனுபவித்தேன்.

7. என் ஆத்தும நேசரே, உம்மை பின்பற்றும் உண்மையான உம் பரிசுத்தவான்களை நீர் எப்படி வழி நடத்தி, சோதனை காலத்தில் அவர்களை நீர் எப்படி காக்கிறீர். எனக்கு சொல்லும். நான் அடிக்கடி உம்மை காணாமல் போய் என் இஷ்டப்பட்ட வழிகளில் நடந்து உணவும் தண்ணீரும் கிடைக்காமலும், சோதனை காலத்தில் பாவத்தில் விழுந்து தண்டனை அடைகின்றவளாகவும் இருக்கிறேன். உம்மால் பராமரிக்கப்படும் ஆடுகளின் மந்தையில் இல்லாமல் மற்ற உலகத்தின் வழிகளில் செல்லும் ஆடுகளின் மந்தையின் அருகே அலைந்து திரியும் வழி தப்பின ஆட்டை போல நான் எப்போதும் இருப்பதென்ன?

என் பிரியமானவளே! மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; நீயோ அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கிறது என்ன? என் ஆடுகள் என் சத்தத்திற்குச் எப்போதும் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை என்பதை நீ அறியாயோ?

8. ஸ்தீரிகளில் ரூபவதியே, இரட்சிக்கபட்டு தேவ ஆவியை பெற்று ஆன்மீக வழியில் முன்னேறியிருப்பவளே நீ தேவனுடைய வார்த்தையை அறியாயாகில், அவரை பின்பற்றும், பின்பற்றின பரிசுத்தவான்கள் சென்ற வழியில், அவர்கள் காட்டிய அடிசுவட்டின் வழியில் செல்வதனால் ஆத்தும நேசரை அடைவாயாக. அவர் சத்தத்துக்கு செவி கொடுக்கும் ஆடுகள் சென்ற வழி சென்று மேய்ப்பரை தெரிந்து கொள்வாயாக. மேய்ப்பரை அடையும் பாதை உனக்கு தெரிந்த பிறகு வழி தப்பி அலையும், உணவும் தண்ணீரும் கிடைக்காமல் அல்லல்படும் ஆட்டுக்குட்டிகளை காண்பாயாகில் அவைகளையும் நீ தெரிந்து கொண்ட நல்ல மேய்பபனிடம் கொண்டு வந்து சேர்ப்பாயாக. இரட்சிக்கபடாத ஆத்தும சோகமுள்ள மனிதர்களுக்கு இயேசுவை பற்றி சொல்லி அவர்களை அவரிடம் சேர்ப்பாயாக.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard