சகோதரரே ஒருசில வார்த்தைகள் மிக கடினமாக எழுதி விட்டேன் தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
நான் நிச்சயம் சொல்கிறேன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன் ஆனால் என்னுள் இருக்கும் ஆவி என்னை நெருக்கி ஏவுவதால் சில கருத்துக்களை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.
என்னைப்பற்றி தயவுசெய்து ஆண்டவரிடம் விசாரித்து பாருங்கள். ஒருவேளை நான் தங்களுக்கு நான் தவறான வழியில் இருப்பதாக ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் அதை எனக்கு நிச்சயம் தெரிவியுங்கள் என் தவறை நான் திருத்திகொள்ள முயல்கிறேன்.
chilsam wrote: /////ஏற்கனவே "இயேசு சிலுவையிலறையப்படவேண்டுமே" என்று
திட்டமிட்டே ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு பின்வாங்கினார்; சகோதரரே உங்களோடு பேசுவது ஆவியானவரானால் வெளிப்படையான விவாதத்தினைத் தவிர்த்துவிட்டு ஏன் பின்வாங்க வேண்டும்..?////
நான் எங்கும் பின்வாங்கவில்லை சகோதரரே! உங்கள் போன்ற ஆண்டவராகிய இயேசுவுக்கும் பிதாவாகிய தேவனுக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்களுக்கு அதற்க்கான விளக்கங்களை எடுத்து சொன்னாலும் புரியாது என்று கருதி தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பதற்காகவே அவ்விவாதத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. திரும்ப திரும்ப பின்வாங்கினேன் என்று எழுதி எனது எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை மடுபடுத்த நினைக்க வேண்டாம். அவ்வாறு பின்வாங்கினால் நான் அதை நிச்சயம் ஒத்துகொள்ள தயங்கமாட்டேன். அந்த கருத்தை பொறுத்தவரை நான் எழுதியதில் தவறு எதுவும் இல்லை. வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையையே அது அவர் பார்வையில் சொன்னது இது இவர் பார்வையில் சொன்னது என்று மாற்றினால் அங்கு விவாதிப்பது வீண் அல்லவா ?
chilsam wrote ////எழுதப்படும் - பேசப்படும் எல்லா வார்த்தைகளுமே ஆவியானவர் மூலமே வருவதாக எண்ணுவது மிகவும் ஆபத்தானதாகும்;தாவீது போன்ற பரிசுத்தவான்களே சாத்தானால் தூண்டப்பட்டு தேவனை கோபப்படுத்தியதுண்டல்லவா..?////
அது பழைய ஏற்பாட்டு காலம் சகோதரரே அங்கு ஆண்டவரின் நடத்துதல் வாக்கு பண்ணப்படவில்லை. அப்படியிருந்தும் கூட சில நாட்களில் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தேவன் அவரின்பாவத்தை தாவீதுக்கு சுட்டிக்காட்டினார். இன்று அப்படியல்ல! இன்று நம்முள் இருக்கும் ஆவியானவர் சில மணி நேரங்களிலேயே தவறை சுட்டிகாட்டிவிடுவார். தவறான கருத்தை எழுதிவிட்டு அல்லது யாரையும் புண்படுத்தும் பதிவிட்டு விட்டு (உங்களைபோல) நிம்மதியாக தூங்க முடியாது. ஆனால் பிறருக்கு பிடிக்காத கருத்து என்பதற்காக நான் எதையும் மாற்ற அவசியம் இல்லை.
chilsam wrote: ////நீர் கிறித்தவ விசுவாசத்துக்கு முற்றிலும் விரோதமானதொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துவிட்டு ///
இந்த கிறிஸ்த்தவ விசுவாசம் என்பது எங்கிருந்து வந்தது என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியவே இல்லை சகோதரரே! வேதத்தில் பத்து வசனத்தை ஆதாரம் காட்டி சொனாலும் ஒரு கருத்தை நம்பாமல், நான் வைத்திருக்கும் கிறிஸ்த்தவ விசுவாசம் தான் பெரியது என்றும் சொல்லும் ஒருவரின் கிரியையற்ற வீண் விசுவாசத்தால் என்னபயன்? இப்படிப்பட்ட மனிதனால்போதிக்கப்படும் உபதேசங்களை நான் ஏற்க்க தயாராக இல்லை. வேதத்தை அறிந்தும் அதை கைகொள்ளாமல் புரட்டுகிரவர்களே வேத புரட்டர்கள்
இயேசுவைப்போல பவுலைப்போல அல்லது அட்லீச்ட் நான் அமைத்திருக்கும் ஒரு பரதேசி வாழ்க்கை நிலைபோல வாழ்ந்துவிட்டு பிறகு உங்கள் உபதேசத்தை கூறுங்கள் நான் நிச்சயம் அதற்க்கு மாற்று கருத்து சொல்லாமல் ஏற்றுக் கொள்வேன். மற்றபடி வார்த்தைகளுக்கு கீழ்படிதலற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மறுப்பு என்ற பெயரில் உங்கள் கிறிஸ்த்தவ தீவிரவாதத்தை காட்டி பிறரை எச்சரிக்காதீர்கள்.
chilsam wrote: ////நாங்களெல்லாம் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் என்று வசைபாடுவது நியாயமா..? ////
நான் நிச்சயமாக மிகுந்த வருத்ததோடே அந்த பதிவை பதிவிட்டேன். அதற்க்கு காரணம் உங்கள் பதிவு மட்டுமல்ல வேறு சில காரணங்களும் உண்டு. நீங்கள் தகுந்த கருத்தோடு குற்றம் சொல்லியிருந்தால் நிச்சயம் இந்த பதிவை தவிர்த்திருப்பேன்மேலும் இயேசுவை கடிந்துகொண்ட பெதுருவைபோல மனிதர்கள் எல்லோருமே சில நேரங்களில் சாத்தனுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது!
chilsam wrote: ///"இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்."(யோவான் 21:25 ) -எனும் ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு வேதத்திற்குப் புறம்பான அனைத்தையும் வேதத்துக்குள் கொண்டு வரலாமா?///
நாள் எழுதியதில் வேதத்துக்கு புறம்பான எந்த கருத்தும் இல்லை சகோதரே! அது ஒரு பொதுவான கருத்து. பரிசுத்த வாழ்க்கையை முக்கியப்படுத்தி எழுதினேன். அதற்க்கு ஒரு வசன ஆதாரமும் தந்திருக்கிறேன்.
என் இருக்க கூடாது? அவர்களின் போதனை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவர்களைப்பற்றி தேவனுக்குதான் தெரியும் ஆண்டவராகிய இயேசுவின் மரணத்துக்கு முன்பு அவர்கள் மனசாட்சிப்படி பரிசுத்தவானாக இருந்திருந்தால பரிசுத்தவான் என்றுதான் தீர்க்கவேண்டும்
உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் எனது பணியை நான் செய்கிறேன். அதை ஆவிக்குரியவர்கள் மட்டும்தான் அறியமுடியும். ஆனால் நான் அனைத்து தரப்பினரையும் கருத்தில்கொண்டு சிலவற்றை எழுதுகிறேன். "இங்கு எல்லா மத கருத்துக்களும் விவாதிக்கப்படும் என்றுதான் அறிவிப்புள்ளது" எனவே எனது கருத்தில் சில வளைவு சுளிவுகள் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு தேவயிலாததில் தலையிடவேண்டாம் இனிவரும்நாட்களில் ஆவிக்குரியவர்களுக்கு மட்டுமே எழுதினால் போதாது என்றுஎண்ணி பொதுவான தளங்களில் பதிவிடும் கருத்துக்களையும் எழுதலாம் என்ற நோக்கில் பொதுவாக எழுதினேன். எதிரியின் கூடேவே நடந்துபோய் எனது கருத்தை சொல்வதுதான் எனக்கு பிடித்த வழிமுறை. உங்கள் வழிமுறைக்கு நான் வரவேண்டிய அவசியம் இல்லை.
chilsam wrote: ///புத்தரின் போதனைகளை உற்று நோக்கினால் அது இறுதியில் சுயநீதி மார்க்க போதனையாகவே முடிகிறது; தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதையோ நியாயத்தீர்ப்பையோ மறுபிறப்பின் அல்லது மறுமையின் நம்பிக்கையையோ வலியுறுத்துவது போலத்
தெரியவில்லை;;///
புத்தர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கொள்கைக்கே வரவில்லை. மன சாட்சி அடிப்படையில் வாழ்ந்த அவர்கள் உண்மையாய் நேர்மையாய் மிக பரிசுத்தமாய் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் எந்த தீங்கும் செய்யாமல் வாழ்பவர்கள் அதைப்பற்றி கவலைப்டவேண்டியது தேவையும் இல்லை.
"இறுதி நியாயதீர்ப்பு" என்று சொல்கிறீர்கள், அது எதன் அடிப்படையில் நடக்கும் என்று வேதம் சொல்கிறது?
வெளி 20:13யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். வெளி 20:12மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
அவனவன் கிரியையின் அடிப்படையிலேயே நியாயதீர்ப்பு என்று வேதம் சொல்கையில், இயேசு பாவங்களுக்காக மரித்திராத அந்த காலகட்டங்களில் புத்தர் காட்டிய பரிசுத்தமான இரக்கமுள்ள உயிர்களிடத்தில் அன்புகாட்டும் வாழ்க்கை நிச்சயம் இரக்கமுள்ள தீர்ப்பையே தரும். பிறருக்கு துன்பம் கொடுக்காமல் பரிசுத்தமாக வாழ்பவனுக்கு நிச்சயம் அதற்கேற்ற நியாயதீர்ப்பு உண்டு. எனவே அவன் நியாயதீர்ப்பை நினைத்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை எனவே அவர் அதைபற்றி போதிக்கவில்லை அவ்வளவு தான்.
உங்கள் நேர்கோட்டை வரைந்துகொண்டு அதற்க்கு கிறிஸ்த்தவ விசுவாசம் என்று பெயரிட்டு அதற்க்கு மேலேபோனால் "எச்சரிப்பு" கீழே போனால் "உதைவிழும்" என்று எழுதுவதும் "வேதப்புரட்டு" "பயித்தியம் பிடிக்கும்" "அரைவேக்காடு" போன்ற தெருவில் உள்ள கயவர்கள் பேசுவதுபோல் எழுதிவிட்டு பிறகு பின்வாங்கி அதற்க்கு சமாதனம் கூறுபவர் நீங்கள்தான். நான் அல்ல! நீங்கள் என்ன பெரிய சத்தியத்தை அறிவித்துவிடபோகிறீர்கள்.
ஆமாம் ஓன்று கேட்கிறேன் புத்தர் பரிசுத்தமாக வாழ்ந்தார் எனவே தேவன் அவரை மேலுலகத்தில் அனுமதித்திருக்கலாம் என்று பரிசுத்த வாழக்கைக்கு முன்னுரிமை கொடுத்து நான் எழுதியதில் என்ன தப்பு என்று கருதுகிறீர்கள்? அதற்க்கு ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?
லேவியராகமம் 19:2 நீ : உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
என்றுதானே கர்த்தர் பல இடங்களில் திரும்ப திரும்ப சொல்கிறார்! உங்கள் போன்றவர்களின் எண்ணம் எல்லாமே நான் அறிவேன் சகோதரரே! உண்மைக்கும் நேர்மைக்கும் இரக்கத்துக்கும் என்றுமே எதிர்த்து நிற்கும் ஒரு கூட்டமுண்டு, "பரிசுத்தம், உண்மை, உத்தமம் என்று தேவன் திரும்ப திரும்ப கூறும் வார்த்தைகள்படி நடந்து யாரும் சாத்தானை ஜெயித்துவிட கூடாது என்ற நோக்கில் சிறுபிள்ளைக்கு மிட்டாயை காட்டி தன்பக்கம் இழுப்பதுபோல பரிசுத்தராகிய இயேசுவை முன்னால் காட்டி எல்லோரையும் தன் பக்கம் இழுத்து (அனால் அவர் சொன்ன வாழ்க்கை முறையை பின்பற்றாமல்) யாரும் சாத்தானை மேற்க்கொண்டு விடாமல் தடுத்து இன்றுவரை சாத்தானின் ராஜ்யம் தொடர்ந்து நடைபெற வழி செய்து வருகிறீர்கள். வெகு விரைவில் எல்லாவற்றிக்கும் முடிவுவரும் அப்பொழுது உங்கள் போன்றவர்போன்றவர்களுக்கு உண்மை என்பது தெரியவரும். அதுவரை நீங்கள் என்னை எப்படி வேண்டுமானலும் வசைபாடுங்கள் எனக்கு கவலையில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
BRO. CHILLSAM WROTE: /////நண்பர், விவாதம் திசை திரும்பியதாக எதை வைத்துச் சொல்லுகிறாரோ தெரியவைல்லை; புத்தரைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குட்பட்ட நிலையிலேயே வாதம் செல்கிறது; இன்னும் சொல்லப்போனால் விவாதம் துவங்கவேயில்லை;////
சகோதரரே புத்தரை பற்றி சொல்லப்பட்ட்ட கருத்துக்கு தகுந்த எந்த ஒரு விளக்கமும் தராமல். போகிற போக்கில் குப்பையை தூக்கி போடுவது போல் தேவையற்ற எதிர்ப்புகளை பதிவிட்டு இறுதியில் அந்த விவாதத்தை வேதாகமத்தைபற்றிய வேறு விவாதத்துக்கு திசை திரும்பியதாலேயே திரியை மூடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது .
சம்பந்தப்பட்ட பதிவிற்கு உங்கள் எதிர்ப்புக்கான காரணத்தை ஓரிரு வார்த்தையேனும் விளக்குங்கள். விளக்குமளவு நேரம் கிடைக்கவில்லை என்றால் நேரம் கிடைக்கும்போது பதிவிடலாம். திரி அங்கேயே தான் இருக்கும் மற்றபடி இதுபோல் அரைகுறை கருத்துக்களை பதிவிடுவதால் தலைப்புக்கு சம்பந்தமில்லாத நிலைக்கு போகிறது எனவே திரியை மூடவேண்டிய நிலை உருவாகிறது.
திரி மீண்டும் திறக்கபடுகிறது.... //
நண்பரே, புத்தரைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துக்கு நான் என்ன விளக்கம் கொடுக்கமுடியும்;எனக்கு அதைக் குறித்து எதுவும் தெரியாது;
யோவான்.9-ம் அதிகாரத்தின் குருடனைப் போலவே நானிருக்கிறேன்; எனக்கு எது சத்தியம் என்பதிலேயே கவனமிருக்கிறதே தவிர சத்தியமில்லாததையெல்லாம் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை;
வேதத்துக்கு வெளியே இருக்கும் புத்தரை செயற்கையாக உள்ளே திணித்து அவரைப் பரிசுத்தவானாகவும் நோவாவுக்கு இணையான நீதிமானாகவும் நிறுத்த முயல்பவர் செய்யவேண்டிய வேலையை எனக்கு பணிக்கலாமா?
ஏற்கனவே புத்தருடைய போதனைகளையே இயேசுவானவர் பின்பற்றியதாகவும் இங்கே இமயத்தில் வந்து நமது ரிஷிகளிடம் ஞானதீட்சை பெற்றுச் சென்றதாகவும் கதைகள் உலகமெங்கும் உலவிக்கொண்டிருக்கிறது;
அதன் பாதிப்பிலோ அதைப் போலவோ ஒரு சத்தியப் புரட்டை நீங்கள் நிகழ்த்த விரும்பினால் அதற்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டியது மட்டுமே எனது வேலையே தவிர விவாதிப்பதல்ல;
பாறாங்கல்லாகவும் இடறலாகவும் நான் வர்ணிக்கப்பட்டாலும் யார் இடறலாக இருக்கிறார்கள் என்பதை தேவ ஆவியானவர் அறிவார்; எழுதப்பட்டவற்றுக்கு மிஞ்சி எண்ணவும் தீர்ப்பு செய்யவும் எனக்கு தைரியமில்லை;
இதுகுறித்து விவாதித்து முடிவுக்கு வர ஒன்றுமில்லை என்பது எனது கருத்து;என் ஒருவனுக்காக திரியை மூடவேண்டாம்;இது எழுதினது எழுதினதாக இப்படியே இருக்கட்டும்;
மனதில் தோன்றியதையெல்லாம் எழுதிவிட்டு பிறகு பின்வாங்குவது நல்ல சிந்தனையாளனுக்கு அழகல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
புத்தர் பெற்ற ஞானம் ஆண்டவரிடமே வந்தது என்பது அவருடைய யூகம்; இதற்கு ஆதரவாக பல்வேறு வேத வார்த்தைகளை அவர் இஷ்டத்துக்கு வளைப்பதுடன் நம்மையும் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்;ஆனால் அவர் இதுபோல இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்;
வேதத்தில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்படாதவற்றைக் கொண்டு புதிய கொள்கைகளை நிறுவி போலியானதொரு இணக்கத்தை உருவாக்கி அதன்மூலம் கிறித்துவுக்கு மகிமையைத் தேடுவதாகச் சொல்வது சுயமகிமையைத் தேடுவதாகவே எண்ணப்படும்;காரணம் இவை சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசும் பொய்கள்; "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." (யோவான்.7:16,17,18)
// இந்த திரியின் விவாதம் திசைதிரும்பி போவதாலும், என்றோ நடந்து முடிந்துபோன புத்தரின் காரியங்களை விவாதிப்பதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதாலும் இந்ததிரி இத்துடன் மூடப்படுகிறது. //
நண்பர், விவாதம் திசை திரும்பியதாக எதை வைத்துச் சொல்லுகிறாரோ தெரியவைல்லை; புத்தரைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குட்பட்ட நிலையிலேயே வாதம் செல்கிறது; இன்னும் சொல்லப்போனால் விவாதம் துவங்கவேயில்லை;
ஏற்கனவே "இயேசு சிலுவையிலறையப்படவேண்டுமே"என்று திட்டமிட்டே ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு பின்வாங்கினார்; சகோதரரே உங்களோடு பேசுவது ஆவியானவரானால் வெளிப்படையான விவாதத்தினைத் தவிர்த்துவிட்டு ஏன் பின்வாங்க வேண்டும்..?
எழுதப்படும் - பேசப்படும் எல்லா வார்த்தைகளுமே ஆவியானவர் மூலமே வருவதாக எண்ணுவது மிகவும் ஆபத்தானதாகும்;தாவீது போன்ற பரிசுத்தவான்களே சாத்தானால் தூண்டப்பட்டு தேவனை கோபப்படுத்தியதுண்டல்லவா..?
நீர் கிறித்தவ விசுவாசத்துக்கு முற்றிலும் விரோதமானதொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துவிட்டு நாங்களெல்லாம் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் என்று வசைபாடுவது நியாயமா..?
சர்ச்சைக்குரியதானதொரு கருத்தினை முன்வைத்த நண்பர் தனது எதிர்தரப்பை ஆதாயப்படுத்திக் கொள்ளும் வண்ணமாக எதையும் செய்யாமல் வெறுமனே சீறுவதால் யாருக்கு என்ன லாபம்?
"இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்."(யோவான் 21:25 ) -எனும் ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு வேதத்திற்குப் புறம்பான அனைத்தையும் வேதத்துக்குள் கொண்டு வரலாமா?
இப்படியே போனால் அரிச்சந்திரனும் தருமனும் கர்ணனும் இராமனும் கூட பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் தீர்க்கப்படமுடியுமே..!
புத்தரின் போதனைகளை உற்று நோக்கினால் அது இறுதியில் சுயநீதி மார்க்க போதனையாகவே முடிகிறது; தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதையோ நியாயத்தீர்ப்பையோ மறுபிறப்பின் அல்லது மறுமையின் நம்பிக்கையையோ வலியுறுத்துவது போலத் தெரியவில்லை;
ஆனால் யோபு முதலாக தாவீது வரையிலான பழைய ஏற்பாட்டு (ஒரிஜினல்..!) பரிசுத்தவான்களோ ஆண்டவருடைய மகத்துவத்தையும் மீட்பின் திட்டத்தையும் நியாயத்தீர்ப்பையும் முன்னறிவித்தனர்;
மற்றபடி வேதத்துக்கு புறம்பான காரியங்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் அது தானியேல் சொப்பனத்தில் கண்ட இரும்பும் களிமண்ணுமான சிலையின் ஒவ்வாத தன்மையைப் போலவே அமைந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து;
(இன்னும் வரும்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)