Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?
Permalink  
 


யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
மத்தேயு 26.59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

மத்தேயு 27.3. அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
4. குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

லூக்கா 23.1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்,
2. இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்

மேற் கண்ட வசனஙகளுக்கு யாராவது விளக்கம் அளிக்க கூடுமானால் விளக்கம் அளியுஙகள்.

ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும்.

சுந்தர் எழுதியது : இறைவன் தளத்தில்

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

// ஒருவேளை சகோதரர்கள் கருதுவதுபோல் பரிசேயர் பார்வைக்கு அப்படி தெரிந்திருந்தால் "என்று பரிசேயர் கருதியதால்" என்றோ அல்லது "பரிசேயரின் கண்களுக்கு அப்படி தவறாக  தெரிந்ததாலேயே" என்ற பதங்களை பயன்படுத்தியிருக்க முடியும்.

தேவனுடைய வார்த்தைகளின் வல்லமை தெரியாமல் உலக நிலைகளோடு அதை ஒப்பிட்டு விளக்கம் கொடுத்தால் நமக்கும் உலகத்தாருக்கும் இடையே வேறுபாடு இருக்காது. நான்  எவனோ உலகத்தான் சொன்ன கட்டளையையா உண்மை என்று நிரூபிக்க முயல்கிறேன்  தேவாதி தேவனின் வாத்தைகளைதானே?//


-- Edited by SANDOSH on Tuesday 25th of May 2010 07:21:09 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அப்படியானால் "இறைவன்" தளத்தின் கருத்து தவறானது தானே,சகோதரரே..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சிலர் சொல்லுகின்றனர். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஓய்வு நாள் :

லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.

லேவி 19.30 30. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

ஏசாயா 58.13. என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்

எசேக்கியேல் 20.12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.

கர்த்தர் தான் படைத்த மக்கள் தன்னில் அன்பு கூறவும், தன்னுடைய பிரசன்னத்தின் மூலம் தன் மக்களை சந்திக்கவும், தன்னுடைய அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் ஓய்வு நாளை தெரிந்து கொண்டார். இந்த நாள் கர்த்தரும் மக்களும் கூடி வரும் நாள். பிரிந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்திப்பதை போல கர்த்தரும் மக்களும் சந்திக்கும் நாள்.இது மனமகிழ்ச்சியின் நாள்.மனிதன் தன் வாழ்வுக்கு தேவையான செயல்களில் கவனம் செலுத்தி, அவன் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளால் தேவ பிரசன்னத்துக்கு தூரமாவதால் (ஆறு நாட்களாக) அவரை மறுபடியும் சந்தித்து அடுத்த ஆறு நாட்கள் உலகை சந்திப்பதற்க்கு தேவையான கடவுள் அளிக்கும் பலனை பெறுவதும் இந்த நாளில்தான்.

சுயனலம் விடுத்து தேவனுக்கு மனிதன் தன்னை ஒப்புக் கொடுக்கும் நாள் இது. இந்த ஏற்பாட்டை கர்த்தரே மனிதனுக்கு அளிந்தார். அவரது பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையாக இந்த நாளை அனுசரிக்க சொல்லி இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். கடவுளது பத்து கட்டளைகளில் இந்த கட்டளை மட்டுமே உடன்பாட்டு கட்டளை மீதி அனைத்தும் எதிர்மறையான கட்டளை இதன் மூலம் இந்த கட்டளையை பின்பற்றுவதின் மூலம் மற்ற கட்டளைகளை நிறைவேற்றத் தேவையான பலனை அடையலாம் என அறியலாம்.

இப்படிப்பட்ட ஒரு நாளில்தான்

எண்ணாகமம் 15.32. இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
36. அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

ஒரு ஓய்வு நாளில் விறகு பொறுக்கின ஒரு மனிதன் கண்டுபிடிக்கப்பட்டு தேவ உத்தரவுப்படி தண்டனை அடைந்தான். இந்த மனிதன் ஓய்வு நாளில் விறகு பொறுக்க காரணம் என்னவெனில் அந்த நாளில் மற்ற யாரும் விறகு பொறுக்க வர மாட்டார்கள் என்பதால் நிறைய விறகை எந்த போட்டியும் இன்றி சேகரிக்க முடியும் என்ற சுயனலமான எண்ணத்தினால்தான்.

நெகேமியாவின காலத்தில் மக்கள் சுயனலத்துடன் செய்த காரியம்

நெகேமியா 13.15. அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.

சொந்த வாழ்க்கையும், ஓய்வு நாளூம் :

பள்ளியில் டீச்சர் : எல்லா பள்ளி நாட்களிலும் நீங்கள் பள்ளிக்கு வர வேண்டும்ஆபிசில் மேனஜர் : எல்லா வேலை நாட்களிலும் நீங்கள் வேலைக்கு வர வேண்டும்

இவர்கள் இப்படி சொன்னாலும் உடல் நிலை சரியில்லாவிட்டால் அல்லது வேறு பிரச்சனைகள் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது இவர்களுக்கு தெரியும் என்பதும் அது நமக்கும் தெரியும் என்பதும் நமக்கு தெரியும்.

சொந்த வாழ்க்கையில் இப்படி சொல்லாமல் விடப்படும் மறைமுகமான அர்த்தங்களை புரிந்து கொள்ளும் நாம் வேத புத்தகத்தில் இது போன்ற கருத்துகள் வரும் போது புரிந்து கொள்ள முடியாதது ஏன் என்று புரியவில்லை. இப்போது

லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.

உடல் நிலை சரியில்லாவிடில் ஆறு நாளும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்பதை நாம் பின்பற்ற முடியாது என்பதை நாமும் அறிவோம், கர்த்தரும் அறிவார்.

ஓய்வு நாளில் உடல் நிலை சரியில்லாவிடினும் மருத்துவமனைக்கு போக கூடாது என்று நாமும் சொல்ல மாட்டோம் கர்த்தரும் சொல்ல மாட்டார்.

ஓய்வு நாளும், இயேசுவும் :

மத்தேயு 12.1. அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3. அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4. அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
5. அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?
6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

ஓய்வு நாளில் சுயனலமான காரிய்ங்கள் செய்யக்கூடாது என்றுதான் சொன்னாரே தவிர குளிக்ககூடாது,சாப்பிடகூடாது என்று சொல்லவில்லை ஏனெனில் இவைகள் அனைத்தும் வேலையில் சேராது. இவைகள் உடலின் இன்றியமையாத தேவைகள்.இதை ஒரு கேள்வியாக கேட்டு அவரிடம் குற்றம் காண முயற்சிக்கிறார்கள்.


9. அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.
13. பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.


இயேசு செய்தது தவறில்லை என்று பரிசேயர்களுக்கும் தெரியும். அவர்களுக்கு அது தெரியும் என்பதும் இயேசுவுக்கு தெரியும். ஏனெனில் தங்கள் உடல்னிலை சரியில்லாத ஓயவு நாளின் போது அந்த நாட்களில் இருந்த மருத்துவர்களிடம் எல்லாருமே சென்றிருப்பார்கள். இயேசுவின் மேல் இவர்கள் வேண்டுமென்றே அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் இந்த சம்பவம் நடைபெறும் முன்னரும் ஓயவு நாளில் பலரை அவர் குணமாக்கியிருக்கிறார். ஏனெனில் காலண்டரை பார்த்து குணமாக்குபவர் அல்ல இயேசு. அவர் எப்போதெல்லாம் பிரச்சனையுள்ளவர்களை கண்டு மனதுருகினாரோ அப்போதெல்லாம் அவர்களை குணமாக்கினார்.

நாம் இன்றும் காண்பது போலவே எந்த கால கட்டத்திலும் அவசர கால பணிக்கு என்று தனி விதிமுறைகள் உண்டு. ஆம்புலன்சுக்கு வழி விடுவதும், ஸ்டிரைக் நடக்கும் போது அவசர கால பணிக்கு விலக்கு அளிப்பதும் இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் சாதாரணமாக வேலை என்று சொல்லப்படும் பிரிவில் வராது.

மனிதனுக்கே தெரிந்த இந்த நியாயத்தை அறியாதவர் அல்ல கடவுள். சாதாரண மனிதனுக்கே புரியும் இது போன்ற சிறு விஷயங்கள் ஒவ்வொன்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். தன் தாயோ அல்லது தந்தையோ ஓய்வு நாளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது எப்படி ஒருவனால் ஓய்வு நாளை அனுசரிக்க முடியும்? அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்ப்பது அல்லவா அவனது முதல் பணியாக இருக்க முடியும். நல்லவரான கடவுள் இப்படிபட்ட செயலை செய்த மனிதன் மேல் குற்றம் சாட்டுவாரா? அல்லது பாராட்டுவாரா?

இப்படி வேண்டுமென்றே குற்றம் சாட்டுபவர்களை எப்போதுமே இயேசு அவருக்கே உரித்தான பாணியில் வாயை அடைப்பது வழக்கம். இங்கேயும் அவர்

11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.

பரிசேயர்கள் தேவனுடைய கட்டளையை காரணம் காட்டி அது நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு இயேசுவோ

யாத் 23.5. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

என தேவனுடைய இன்னொறு கட்டளையை காட்டி, உதவி செய்யாதிருந்தால் இந்த கட்டளை மீறப்படுமே என அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் வாயை அடைக்கிறார்.

மத்தேயு 22.17. ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் தெரியாமல் பரிசேயர்கள் இந்த கேள்வியை கேட்கவில்லை. ஒரு ஆன்மீகவாதி என்ற முறையில் அவரது கருத்து என்ன என்று அவரை கேட்டு அவர் சொல்லும் பதிலை வைத்து அவரை குற்றம் கண்டுபிடிக்கவே அவர்கள் இந்த கேள்வியை கேட்கின்றனர்.

ஆகவே இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறவில்லை. அவர் மீறவில்லை என்பதை பரிசேயர்களும் அறிவர்.

யோவான் 5.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

மேற்கண்ட வசனத்தில் இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சொல்லப்பட்டுள்ளதே. வேதம் பொய் சொல்லாதே அப்படியானால் அவர் மீறித்தானே இருக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

இதற்கு இந்த வசனம் யாருடைய பார்வையில் சொல்லப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது அவரை குற்றம் சாட்ட முயன்றவர்கள் பார்வையில் சொல்லப்பட்டது என்பது தெரிய வரும். இன்னும் சரியாக சொல்ல போனால் அவர்களது பார்வையில் என்பதை விட இயேசுவை அவர்கள் இப்படியே பார்க்க விரும்பினார்கள். 



-- Edited by SANDOSH on Saturday 22nd of May 2010 04:31:14 PM

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard