Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?
Ashok kumar Ganesan

Date:
RE: இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?
Permalink  
 


//
இன்றும், என்னை பொறுத்தவரை கற்பனைகளுக்கு கீழ்படிவதைவிட தேவனுக்கு முழுமையாக கீழ்படிவதுதான் மிக மிக சிறந்தது.  தேவனுக்கு கீழ்படிவதர்க்கும் கற்பனைகளுக்கு கீழ்படிவதர்க்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.//
தேவகட்டளைக்கு கீழ்ப்படிவதும், தேவனுக்கு கீழ்படிதலும் வெவ்வேறு விஷயங்களா? இரண்டும் ஒன்றுதானே.
இயேசுவும், பிதாவும் ஒன்றுதானே.

// கற்பனைகளும் நீதிநியாயங்களும் பொதுவாக எல்லோருக்கும் எழுதி கொடுக்கப்பட்டவைகள். ஆனால் தேவனுக்கு கீழ்படிதல் என்பது, தேவன் சில நேரங்களில் பலருடைய நன்மையை  கருத்தில்கொண்டு,  தான் தெரிந்துகொண்ட சிலரை,    சில தனிப்பட்ட விசேஷ வழிகளில் நடத்துவார்.//
தேவன் பாரபட்சமில்லாதவர்தானே.

// அப்பொழுது சில வார்த்தைகளை  பொருட்படுத்தாமல்  கடந்துபோகும்படி அவரே  நம்மை  வழிநடத்துவார் அதுபோல் ஒரு நிலையை நான் அனுபவித்திருக்கிறேன் அதற்க்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனங்களை எடுத்து கொள்ளமுடியும்!
 
எரேமியா 7:22. நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,
23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; //
"பலியையல்ல கீழ்ப்படிதலையே விரும்புகிறேன்" என்று ஆண்டவர் சொன்னதை திரிக்கலாமா?
//அதாவது இங்கு புரிதல் என்பது மிகசுலபம்!.  உலகமா? தேவனின் கட்டளையா? என்று வரும்போது தேவனின் கட்டளைதான்  உயர்ந்தது! ஆனால் தேவனா? அவர் எழுதிகொடுத்த கட்டளையா? என்று வரும்போது தேவன் சொல்வதுதை செய்வதுதான் சிறந்தது. இந்நிலையில் அவர் ஒரு கட்டளையை மீறசொல்லலாம் ஆனால் அதினால் நமக்கு நிச்சயம் ஒரு தீங்கு உண்டு ஆனால்  ஆயிரம் ஆயிரம்பேருக்கு அதில் நன்மை இருக்கும். இந்நிலையில் நாம் தேவனுக்கு கீழ்படிந்து அவர் சொல்வதை செய்வதுதான் சிறந்தது.  அவ்விதத்தில் பிதா என்ன சொல்லி அனுப்பினாரோ அதற்க்கு அப்படியே இயேசு  கீழ்படிந்து அனைத்தையும் செய்து முடித்தார். பலரது நன்மையை கருத்தில்கொண்டு சில காரியங்களை மீறிசெயல்பட்டார்.//
பிதா, தான் இட்ட கட்டளையை தானே மீற சொல்வாரா? அதற்க்கு பதிலாக எந்த ஒரு பலியும் இல்லாமல் மனுக்குலத்தை முழுவதுமாக ரட்சித்திருப்பாரே...
இயேசு ஒரு கட்டளை மீறி இருந்தாலும், மரணத்திற்கு பாத்திரமானவரே, அப்படியானால், அவருடைய சிலுவை மரணம் அவர் பாவத்தை கழுவவே போதுமானதாய் இருக்கும், உமது ரட்சிப்பிர்க்கு மீண்டும் ஒரு குற்றமில்லா ஆட்டுக்குட்டி தேவைப்படும்.

//
இனியும் இதில் குற்றம்கண்டுபிடிக்க நினைத்தால் அதற்க்கு என்னிடம் பதிலில்லை. தேவனின் நேரடி வழிநடத்துதலை அறிந்தவர்கள் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும்! //
ஏசுவையே குற்றப்படுத்தும் நீர், பிசாசின் மூலம் வழிநடத்த படுகிறீரோ என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவி, இயேசுவை குற்றப்படுத்தாது.

அன்புடன்,
அசோக்



__________________
Ashok kumar Ganesan

Date:
Permalink  
 

நண்பரே,
     இயேசு எந்த ஒரு கற்பனையையும் மீறவில்லை. "நான் கற்பனைகள் நிறைவேற்றவே வந்தேன்" என இயேசு கூறியுள்ளதை பாருங்கள். கற்பனைகள் நமக்கு என்ன கற்பிக்கிறது? பாவம் என்றால் என்ன என்று நாம் கற்பனைகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது. கற்பனையை மீறியவன் பாவியாகிறான். இயேசுவானவர் கற்பனையை மீறி இருந்தால், அவர் பாவியாவார். பிறகு அவருடைய மரணத்தில் நம் பாவம் எப்படி பரிகரிக்கப்படும்?
    ஓய்வு நாளில் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்று பார்த்தால், உங்களுக்கு உண்மை புரியும். அந்தகால சாஸ்திரிகள், நீங்கள் கூறியபடி இரண்டு விஷயங்களில் இயேசுவை குற்றப்படுத்தினார்.
1 ) ஒரு மனிதன் தன்னை தேவனுக்கு நிகராக உயர்த்தியது.
2 ) ஓய்வு நாளில் செய்ய கூடாத காரியத்தை செய்தது.
நான்றாக பாருங்கள், ஏசுவின்மேல் இந்த இரண்டு பழியும் விழாது. அவரே தேவனாய் இருப்பதால், அவர் தன்னை தேவனுக்கு நிகராக உயர்த்தியது தவறல்ல. ஓய்வு நாளில், "உலக பிரகாரமான காரியங்களைத்தான்" செய்யக்கூடாது. இயேசு, அவர் நாட்களில் எந்த உலகப்பிரமான காரியத்தை செய்தார்? ஓய்வு நாளில் போதனை செய்வது தவறா? தவறில்லையே!!! அதேபோல், அவர் தனது செயல்களினாலே போதனை செய்தார். மனுஷகுமாரனுக்கு மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவரை இருக்கிறார் என்றும் தன் "செயல்களின்" மூலம் போதனை செய்தார். தொழில் ரீதியில் தச்சனான இயேசு, ஓய்வு நாளில், தச்சுவேலை செய்து இருந்தால் அவர் கற்பனையை மீறியவர் என்று குற்றம் சாட்டலாம். மேலும், ஒரு செயலை விட, செயலுக்குண்டான நோக்கமே முக்கியமாய் இருக்கிறது. வேதத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் படியுங்கள். இல்லாவிட்டால் பைத்தியமாக நேரிடலாம்.
அன்புடன்,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


சுந்தர்:

// சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மாலைவரை  நாங்கள்  டிவி / கணினி/செல்போன் போன்ற  எதையும் பயன்படுத்துவது இல்லை //

நண்பரே, இந்த குறிப்பிட்ட சிந்தனையே தங்களது மற்றுமொரு கருத்துக்கு ஆதாரமாகிவிட்டதோ என எண்ணுகிறேன்;அதாவது தற்போது பரபரப்பாக நாம் வாதித்து வரும் "இயேசுவானவர் ஓய்வுநாள் கற்பனையை மீறினாரா?" எனும் பதிவு..!

அதில் தாங்கள் குறிப்பிட்டவாறு ஓய்வுநாள் கற்பனையை மீறுவதினால் துன்பத்தை ஏற்றுக்கொண்டு பரலோக பாக்கியத்தை இயேசுவானவரைப் பின்பற்றி அப்போஸ்தலர்களும் அடைந்ததுபோலவே தாங்களும் செய்யலாமே?

வேலை போனால் போகட்டும் என்று வேலை நேரத்தில் வேலை செய்யாமலும் ஓய்வுநாளின்போது வேலைசெய்தும் கலகம் பண்ணுங்களேன்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர் சுந்தர் அவர்களே,குறிப்பிட்டதொரு வேத வசனத்தை வியாக்கியானம் செய்வதைக் குறித்த வழிகாட்டு நெறியினையே நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்;

அதற்கு தாங்கள் இன்னும் இணக்கமான பதிலை முன்வைக்கமுடியும்; குறிப்பாக தங்களது குறிப்பிட்ட வியாக்கியானம் மற்றொருவருடைய நம்பிக்கைக்கும் பொதுவான விசுவாசத்துக்கும் எதிரானதாக - அதாவது தடுக்கலாக இருக்குமானால் - அந்த தடுக்கல் நீக்கப்பட - தவறை ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர 'ஏற்றால் ஏற்கலாம்,இல்லாவிட்டால் பரவாயில்லை,நான் சொன்னதே சரியானது ' என்று விலகிச் செல்வதைப் போல நடந்துக்கொள்ளக்கூடாது;நீங்களும் கூட சரியானதைப் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதே எமது நோக்கம்..!

தங்களுடைய கருத்து கிறித்தவ உலகத்தில் கேள்விப்பட்டிராத புதிய கருத்து;ஆனால் அதற்கு இணைவாக்கியம் எங்கே? யூகத்தினடிப்படையிலேயே நீங்கள் இதுபோன்ற கருத்தை- அதாவது "இயேசு கற்பனையை மீறியதாலேயே அவர் வந்த நோக்கம் நிறைவேறியது" எனும் கருத்தை முன்வைக்கிறீர்கள்;அதனை சரிசெய்ய மீண்டும் அந்த திரிக்கு உயிர்கொடுத்து ஆரோக்கியமான விவாதத்துக்கும் தீர்வுக்கும் வழிசெய்யுங்கள்..!

சந்தோஷ்:
//ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய‌ காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்//

சுந்தர்:
//சகோதரரே வேதம் சொல்வதை தான் எழுதியிருக்கிறேன்;ஆனால் அது தவறான கருத்து என்று நீங்கள் சொல்கிறீர்கள்;வேதமே தவறாக சொல்கிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு? //

நண்பர் சுந்தர் அவர்களே,ஏன் இப்படி முரண்டு பண்ணுகிறீர்கள்;
நீங்கள் அவசரப்படாமல் யோசியுங்கள், நீங்கள் வசனத்தை மட்டும் எழுதவில்லை, வசனம் ஒருபோதும் தவறாகாது; 'அந்த வசனத்தின் கருத்து இதுதான்' என்று நீங்கள் புதியதொரு கொள்கை விளக்கத்தைத் தருவது தான் தவறான கருத்து..!

தோண்டியெடுப்பதும் வாதிப்பதும் வாசகரின் நலனுக்காகவே; சுயநலத்துக்காக அல்லவென்று அறிய வேண்டுகிறேன்;

//"அவர் தேவனுக்கு சமமானவர்" என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார்" என்பதிலும் இருக்கிறது. //

நண்பர் சுந்தர் அவர்களே, மிக சாமர்த்தியமாக எனது வாதத்தினைப் பயன்படுத்தி நுணுக்கமானதொரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்; பாராட்டுக்கள்..!

நான் சொல்லுகிறேன், இயேசுவானவர் தேவனுக்கு சமமானவரல்ல என்று பரிசேயர் (அவரைக் குற்றஞ்சாட்டியது) எண்ணியது எத்தனை பொய்யானதோ அத்தனை பொய்யானது அவர் ஓய்வுநாள் கற்பனையை மீறினார்,என்பதும்..!

0603125.jpg


ஏனெனில் அதே யோவான் 8:46 - ல் சவால் விடுகிறார்; தாம் ஓய்வுநாள் கட்டளையை மீறவில்லை என்பதை பல்வேறு சூழ்நிலைகளில் அவர் நிரூபித்துள்ளார்;

இதனை சந்தோஷ் அவர்கள் மிக நேர்த்தியாக விளக்கியுள்ளார்;

இயேசுவானவர் தம்முடைய மலைப் பிரசங்கத்தில் மிகத் தெளிவாகச் சொன்னது, 'கற்பனையை அழிக்க அல்ல,நிறைவேற்றவே வந்தேன் ' என்பதாகும்..!


-- Edited by chillsam on Sunday 30th of May 2010 12:56:05 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

SANDHOSH wrote:
////வேத வசனங்களை எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம், எடுத்துக் கொள்ளலாம். அவை மூன்று கருத்துக்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
1. அதை படித்த பின்பு தேவ பக்தி அதிகரிக்க வேண்டும்
2. உண்மையானதாக இருக்க வேண்டும்
3. பிறருக்கு தடுக்கல் ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.////
 
தேவனது வாத்தைகளின் வல்லமையை விளக்குவதற்கும் அதன்மேல் மனிதர்களுக்கு பயபக்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே  வசனத்தின் அடிப்படையில் அந்த பதிவு இடப்பட்டது ஆனால் அதன் நோக்கம் அறியப்படாமல் அது வேறு கோணத்தில் திரும்பவே பிறருக்கு தடுக்கலாக இருக்க கூடாது என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அத்திரி நீக்கப்பட்டது இங்கு மீண்டும் அதை தோண்டி எடுக்கவேண்டும் என்று  விரும்புவது நீங்கள்தான். 
  
////ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய‌ காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்////.
 
சகோதரரே வேதம் சொல்வதை தான் எழுதியிருக்கிறேன். ஆனால் அது தவறான கருத்து என்று நீங்கள் சொல்கிறீர்கள். வேதமே தவறாக சொல்கிறது என்றால் அதற்க்கு யார் பொறுப்பு? 

நான் இயேசுவை பாவம்  செய்தார்  என்றோ அல்லது அவர் குற்றவாளி என்றோ நான் தீர்க்கவரவில்லை அவர் தேவ நடத்துதலின்
அடிப்படையில் அல்லது பிதாவின் சித்தத்தின் அடிப்படையில் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் (அதன் மூலம் புதிய ஏற்பாட்டின் மூலஉபதேசத்துக்கு அவர் முன்மாதிரியானார்) என்று குறிப்பிட்டிருந்தேன்  அதில் எதுவும் தவறு இருப்பது போல் எனக்கு தெரியவில்லை சகோதரரே.
 
இன்று ஒரு கிறிஸ்த்தவர்  ஒய்வுநாளில் வியாபாரம் செய்தால் அவரை  கொலை  குற்றவாளி  என்று சொல்ல முடியுமா ஆனால் இஸ்ரவேலருக்கோ அது கொலைக்குற்றம். இந்நிலையில் புறஜாதியார் நீதிமன்றத்தில் நின்ற இயேசுவை அதுஒரு குற்றம் என்று சொல்லமுடியாத காரணத்தால் பொய் சாட்சியை தேடினர்.
 
இப்பொழுது மீண்டும் நான் சுட்டிய வசனத்தைபற்றி  இங்கு பார்ப்போம்  :
 
யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
 
இங்கு யூதர்கள் இயேசுவின்  இரண்டு  செய்கை நிமித்தம் அவரை கொலை செய்யும்படி வகை தேடினர் என்று வசனம் சொல்கிறது.
 
1. அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் 
2. அவர் தன்னை தேவனுக்கு சமமாக்கினார்  
 
ஓன்று இதில் இரண்டும் உண்மையாக இருக்கவேண்டும் அல்லது இரண்டும் தவறாக இருக்கவேண்டும்.  
 
"அவர் தேவனுக்கு சமமானவர்" என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார்" என்பதிலும் இருக்கிறது. 
 
பரிசேயர் பார்வையில் அவர் தேவனுக்கு சமமானவர் அல்ல என்பது உண்மை என்றால் அவர் ஓய்வுநாள் கற்பனையை மீறியதும் உண்மை அல்ல
 
இதில் எது உண்மை என்று நீங்கள்  சொல்கிறீர்கள்?



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

ஒரு சிலர் தங்களுக்கு வேண்டும் போது வசனத்தை யாருக்கு சொல்லப்பட்டாலும், எப்படி சொல்லப்பட்டாலும் தங்களுக்கு வேண்டிய மாதிரி அர்த்தம் எடுத்து கொள்ளுகின்றனர். ஆனால் இவர்களே சில சமயங்களில் ஒரு வசனம் சொல்லப்பட்டால் அது சொல்லப்பட்டது போன்றேதான் அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும்.
வேறு மாதிரி புரிந்து கொள்வது தவறு என வாதிடுவது வியப்பை அளிக்கிறது.
ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய‌ காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்.

என்னை பொறுத்த வரை வேத வசனங்களை எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம், எடுத்துக் கொள்ளலாம். அவை மூன்று கருத்துக்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
1. அதை படித்த பின்பு தேவ பக்தி அதிகரிக்க வேண்டும்
2. உண்மையானதாக இருக்க வேண்டும்
3. பிறருக்கு தடுக்கல் ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.

வேத வசனங்களை விளக்கும் போது அனேகர் சூழ்னிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த சூழ்னிலையில், யாருக்கு எப்படி சொல்லப்பட்டது என்று பார்த்தால் அனேக காரியங்கள், சத்தியங்கள் தெரிய வரும்.
உதாரணமாக நான் எழுதிய ஒரு கட்டுரையில் லோத்தின் குடும்பம் ஓடிப் போக தாமதித்த காரணம் அவர்கள் பொன், பொருள், மது முதலியவை எடுத்து வைத்துக் கொண்டதில்னால்தான் என்று எழுதியுள்ளேன். ஆனால் இவை அப்படியே வேதத்தில் இல்லை. ஆனால் இதன் மூலமாக பல கருத்துக்களை அறிய வாய்ப்புள்ளது.
ஒருவர் தாமதிக்கிறார் என்றால் வேறு காரணம் என்னவாக இருக்க முடியும் நான் எழுதியதை தவிர‌?


-- Edited by SANDOSH on Friday 28th of May 2010 09:22:28 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை;ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும். //

நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் யாருடைய கருத்து..?

அவை மேற்கோள் காட்ட தரப்பட்டவை என்றே எண்ணுகிறேன்.

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;

இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷக‌னின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;

ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;

எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;

இதுபோலவே இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும் அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான‌ தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;

சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?

அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
மத்தேயு 26.59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

மத்தேயு 27.3. அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
4. குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

லூக்கா 23.1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்,
2. இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்

மேற் கண்ட வசனஙகளுக்கு யாராவது விளக்கம் அளிக்க கூடுமானால் விளக்கம் அளியுஙகள்.

ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும்.

சுந்தர் எழுதியது : இறைவன் தளத்தில்

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

// ஒருவேளை சகோதரர்கள் கருதுவதுபோல் பரிசேயர் பார்வைக்கு அப்படி தெரிந்திருந்தால் "என்று பரிசேயர் கருதியதால்" என்றோ அல்லது "பரிசேயரின் கண்களுக்கு அப்படி தவறாக  தெரிந்ததாலேயே" என்ற பதங்களை பயன்படுத்தியிருக்க முடியும்.

தேவனுடைய வார்த்தைகளின் வல்லமை தெரியாமல் உலக நிலைகளோடு அதை ஒப்பிட்டு விளக்கம் கொடுத்தால் நமக்கும் உலகத்தாருக்கும் இடையே வேறுபாடு இருக்காது. நான்  எவனோ உலகத்தான் சொன்ன கட்டளையையா உண்மை என்று நிரூபிக்க முயல்கிறேன்  தேவாதி தேவனின் வாத்தைகளைதானே?//


-- Edited by SANDOSH on Tuesday 25th of May 2010 07:21:09 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அப்படியானால் "இறைவன்" தளத்தின் கருத்து தவறானது தானே,சகோதரரே..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சிலர் சொல்லுகின்றனர். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஓய்வு நாள் :

லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.

லேவி 19.30 30. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

ஏசாயா 58.13. என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்

எசேக்கியேல் 20.12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.

கர்த்தர் தான் படைத்த மக்கள் தன்னில் அன்பு கூறவும், தன்னுடைய பிரசன்னத்தின் மூலம் தன் மக்களை சந்திக்கவும், தன்னுடைய அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் ஓய்வு நாளை தெரிந்து கொண்டார். இந்த நாள் கர்த்தரும் மக்களும் கூடி வரும் நாள். பிரிந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்திப்பதை போல கர்த்தரும் மக்களும் சந்திக்கும் நாள்.இது மனமகிழ்ச்சியின் நாள்.மனிதன் தன் வாழ்வுக்கு தேவையான செயல்களில் கவனம் செலுத்தி, அவன் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளால் தேவ பிரசன்னத்துக்கு தூரமாவதால் (ஆறு நாட்களாக) அவரை மறுபடியும் சந்தித்து அடுத்த ஆறு நாட்கள் உலகை சந்திப்பதற்க்கு தேவையான கடவுள் அளிக்கும் பலனை பெறுவதும் இந்த நாளில்தான்.

சுயனலம் விடுத்து தேவனுக்கு மனிதன் தன்னை ஒப்புக் கொடுக்கும் நாள் இது. இந்த ஏற்பாட்டை கர்த்தரே மனிதனுக்கு அளிந்தார். அவரது பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையாக இந்த நாளை அனுசரிக்க சொல்லி இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். கடவுளது பத்து கட்டளைகளில் இந்த கட்டளை மட்டுமே உடன்பாட்டு கட்டளை மீதி அனைத்தும் எதிர்மறையான கட்டளை இதன் மூலம் இந்த கட்டளையை பின்பற்றுவதின் மூலம் மற்ற கட்டளைகளை நிறைவேற்றத் தேவையான பலனை அடையலாம் என அறியலாம்.

இப்படிப்பட்ட ஒரு நாளில்தான்

எண்ணாகமம் 15.32. இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
36. அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

ஒரு ஓய்வு நாளில் விறகு பொறுக்கின ஒரு மனிதன் கண்டுபிடிக்கப்பட்டு தேவ உத்தரவுப்படி தண்டனை அடைந்தான். இந்த மனிதன் ஓய்வு நாளில் விறகு பொறுக்க காரணம் என்னவெனில் அந்த நாளில் மற்ற யாரும் விறகு பொறுக்க வர மாட்டார்கள் என்பதால் நிறைய விறகை எந்த போட்டியும் இன்றி சேகரிக்க முடியும் என்ற சுயனலமான எண்ணத்தினால்தான்.

நெகேமியாவின காலத்தில் மக்கள் சுயனலத்துடன் செய்த காரியம்

நெகேமியா 13.15. அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.

சொந்த வாழ்க்கையும், ஓய்வு நாளூம் :

பள்ளியில் டீச்சர் : எல்லா பள்ளி நாட்களிலும் நீங்கள் பள்ளிக்கு வர வேண்டும்ஆபிசில் மேனஜர் : எல்லா வேலை நாட்களிலும் நீங்கள் வேலைக்கு வர வேண்டும்

இவர்கள் இப்படி சொன்னாலும் உடல் நிலை சரியில்லாவிட்டால் அல்லது வேறு பிரச்சனைகள் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது இவர்களுக்கு தெரியும் என்பதும் அது நமக்கும் தெரியும் என்பதும் நமக்கு தெரியும்.

சொந்த வாழ்க்கையில் இப்படி சொல்லாமல் விடப்படும் மறைமுகமான அர்த்தங்களை புரிந்து கொள்ளும் நாம் வேத புத்தகத்தில் இது போன்ற கருத்துகள் வரும் போது புரிந்து கொள்ள முடியாதது ஏன் என்று புரியவில்லை. இப்போது

லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.

உடல் நிலை சரியில்லாவிடில் ஆறு நாளும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்பதை நாம் பின்பற்ற முடியாது என்பதை நாமும் அறிவோம், கர்த்தரும் அறிவார்.

ஓய்வு நாளில் உடல் நிலை சரியில்லாவிடினும் மருத்துவமனைக்கு போக கூடாது என்று நாமும் சொல்ல மாட்டோம் கர்த்தரும் சொல்ல மாட்டார்.

ஓய்வு நாளும், இயேசுவும் :

மத்தேயு 12.1. அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3. அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4. அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
5. அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?
6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

ஓய்வு நாளில் சுயனலமான காரிய்ங்கள் செய்யக்கூடாது என்றுதான் சொன்னாரே தவிர குளிக்ககூடாது,சாப்பிடகூடாது என்று சொல்லவில்லை ஏனெனில் இவைகள் அனைத்தும் வேலையில் சேராது. இவைகள் உடலின் இன்றியமையாத தேவைகள்.இதை ஒரு கேள்வியாக கேட்டு அவரிடம் குற்றம் காண முயற்சிக்கிறார்கள்.


9. அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.
13. பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.


இயேசு செய்தது தவறில்லை என்று பரிசேயர்களுக்கும் தெரியும். அவர்களுக்கு அது தெரியும் என்பதும் இயேசுவுக்கு தெரியும். ஏனெனில் தங்கள் உடல்னிலை சரியில்லாத ஓயவு நாளின் போது அந்த நாட்களில் இருந்த மருத்துவர்களிடம் எல்லாருமே சென்றிருப்பார்கள். இயேசுவின் மேல் இவர்கள் வேண்டுமென்றே அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் இந்த சம்பவம் நடைபெறும் முன்னரும் ஓயவு நாளில் பலரை அவர் குணமாக்கியிருக்கிறார். ஏனெனில் காலண்டரை பார்த்து குணமாக்குபவர் அல்ல இயேசு. அவர் எப்போதெல்லாம் பிரச்சனையுள்ளவர்களை கண்டு மனதுருகினாரோ அப்போதெல்லாம் அவர்களை குணமாக்கினார்.

நாம் இன்றும் காண்பது போலவே எந்த கால கட்டத்திலும் அவசர கால பணிக்கு என்று தனி விதிமுறைகள் உண்டு. ஆம்புலன்சுக்கு வழி விடுவதும், ஸ்டிரைக் நடக்கும் போது அவசர கால பணிக்கு விலக்கு அளிப்பதும் இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் சாதாரணமாக வேலை என்று சொல்லப்படும் பிரிவில் வராது.

மனிதனுக்கே தெரிந்த இந்த நியாயத்தை அறியாதவர் அல்ல கடவுள். சாதாரண மனிதனுக்கே புரியும் இது போன்ற சிறு விஷயங்கள் ஒவ்வொன்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். தன் தாயோ அல்லது தந்தையோ ஓய்வு நாளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது எப்படி ஒருவனால் ஓய்வு நாளை அனுசரிக்க முடியும்? அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்ப்பது அல்லவா அவனது முதல் பணியாக இருக்க முடியும். நல்லவரான கடவுள் இப்படிபட்ட செயலை செய்த மனிதன் மேல் குற்றம் சாட்டுவாரா? அல்லது பாராட்டுவாரா?

இப்படி வேண்டுமென்றே குற்றம் சாட்டுபவர்களை எப்போதுமே இயேசு அவருக்கே உரித்தான பாணியில் வாயை அடைப்பது வழக்கம். இங்கேயும் அவர்

11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.

பரிசேயர்கள் தேவனுடைய கட்டளையை காரணம் காட்டி அது நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு இயேசுவோ

யாத் 23.5. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

என தேவனுடைய இன்னொறு கட்டளையை காட்டி, உதவி செய்யாதிருந்தால் இந்த கட்டளை மீறப்படுமே என அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் வாயை அடைக்கிறார்.

மத்தேயு 22.17. ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் தெரியாமல் பரிசேயர்கள் இந்த கேள்வியை கேட்கவில்லை. ஒரு ஆன்மீகவாதி என்ற முறையில் அவரது கருத்து என்ன என்று அவரை கேட்டு அவர் சொல்லும் பதிலை வைத்து அவரை குற்றம் கண்டுபிடிக்கவே அவர்கள் இந்த கேள்வியை கேட்கின்றனர்.

ஆகவே இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறவில்லை. அவர் மீறவில்லை என்பதை பரிசேயர்களும் அறிவர்.

யோவான் 5.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

மேற்கண்ட வசனத்தில் இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சொல்லப்பட்டுள்ளதே. வேதம் பொய் சொல்லாதே அப்படியானால் அவர் மீறித்தானே இருக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

இதற்கு இந்த வசனம் யாருடைய பார்வையில் சொல்லப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது அவரை குற்றம் சாட்ட முயன்றவர்கள் பார்வையில் சொல்லப்பட்டது என்பது தெரிய வரும். இன்னும் சரியாக சொல்ல போனால் அவர்களது பார்வையில் என்பதை விட இயேசுவை அவர்கள் இப்படியே பார்க்க விரும்பினார்கள். 



-- Edited by SANDOSH on Saturday 22nd of May 2010 04:31:14 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard