ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் காலத்தில் வாழ்ந்த இந்த வேத அறிவுமிக்க வேதபாரகர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வேதத்தை பற்றிய அறிவில் அதிகம் தேரியவர்களாகிய இவர்களுக்கு. தாங்கள் எதை கைகொள்கிறார்களோ இல்லையோ எப்பொழுதுமே யாருக்காவது போதனை செய்வதுதான் மிகவும் பிடிக்கும். யார் சொல்வதையும் கேட்கவே பிடிக்காது. தனக்கு ஏதாவது ஒரு பட்டம் வேண்டும், தான் பிறருக்கு போதிக்கவேண்டும் பிறர் அதை கேட்கவேண்டும் என்ற வாத்தியாரின் மனப்பான்மையிலேயே அவர்கள் இருந்தார்கள் .
மத்தேயு 23:7சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:
பொதுவாக ஒரு வாத்தியாருக்கு எது தெரியுமோ தெரியாதோ தான் போதிப்பதை மாணவர்கள் எல்லோரும் கேட்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும். அவரை மிஞ்சி யாராவது பெசிவிட்டாலோ அல்லது கேள்வி கேட்டுவிட்டாலோ அவர்களுக்கு பிடிக்காது. அதுபோல் பழையஏற்பாடு வேத புத்தகத்தை கரைத்து குடித்து, தாங்கள்தான் வேத அறிவு மிக்கவர்கள் என்ற இறுமாப்பில் வாழ்ந்து பிறருக்கு போதித்தே பழக்கப்பட்டிருந்த அவர்களுக்கு யோவான் ஸ்நானனும் ஆண்டவராகியே இயேசுவும் வந்து இரட்சிப்பின் புதிய காரியங்களை போதித்த போது பழய போதகர்களாகிய இவர்களால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
அவர்களை எதிர்த்தனர்.
மத்தேயு 21:32யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
அவர்களை விசுவாசிக்கததொடு ஆண்டவரின் மகத்துவத்தை அறியாது, அவரை கடுமையாக குற்றம்சாட்டி வாக்குவாதம் பண்ணி, குறையும் கண்டுபிடித்து கொலையும் செய்ய வகைதேடினர்.
லூக்கா 7:33யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34. மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்
இன்றும் கூட இவ்வாறு பிறருக்கு போதிப்பதே நோக்கமாக கொண்டுள்ள அனேக வேதபாரகர்களை கிறிஸ்த்தவ வட்டாரத்தில் பார்க்கமுடியும். இவர்கள் வேத புத்தகத்தை கரைத்து குடித்து வைத்திருப்பதோடு, இவர்களுக்கு தெரிந்தது மட்டும்தான் உண்மை அதைதவிர வேறுஎதுவும் உண்மை இல்லை என்ற கருத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே கேள்விகளை கேட்பதும், "இது அதுவல்ல" "அது இதுவல்ல" என்று சொல்லி தங்கள் கருத்தை நிலைநாட்ட நினைப்பதும் தங்களுக்கு ஏதாவது ஒரு பதவியை தாங்களே போட்டுகொள்வதும் இவர்களின் வாத்தியார் நிலையே பிறருக்கு எடுத்துகாட்டுகிறது.
நான் அனைவருக்கும் அறிவுறுத்த விரும்புவது.
மற்றவர்களுக்கு முதன்மையாக இருக்க வேண்டுமா?
மாற்கு 10:44உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
எங்கும் யாருக்கும் தலைமையாக இருக்க விரும்பாதீர்கள். இருப்பதிலேயே கீழ்மட்டம் எதுவோ அதையே எப்பொழுதும் தேர்ந்தெடுங்கள். யாரும் உங்களுக்கு பட்டம் தரவேண்டும் என்றோ அல்லது நாமே நமக்கு ஏதாவது ஒரு பட்டத்தை சூட்டிகொள்வதயோ விரும்பாதீர்கள். நாம் நினைப்பதும்,நமது அறிவுக்கு எட்டியது மட்டுமே சரி என்றும் மற்றவர் சொல்வது எல்லாமே தவறு என்று தீர்க்காதீர்கள். ஒரு சிறு பிள்ளை சொல்வதையும்கூட அசட்டை செய்யாமல் ஆராய்ந்து ஆண்டவரின் துணையுடன் உண்மையை அறியுங்கள். யாராலும் புகழப்பட வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். அடுத்தவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு சற்றும் தயங்காதீர்கள், எல்லோரையும் உங்களைவிட உயர்ந்தவர்களாகவே கருதுங்கள் அப்பொழுது தேவனால் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்!
லூக்கா 14:11தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.