பல்வேறு விசித்திரமான தனது கட்டுரைகள் மூலமாக இந்துமக்களிடையே அரும்பணியாற்றிவரும் தமிழ் ஹிந்து தளத்தின் அண்மைய கட்டுரை,"ஹலால் கறியா ஜட்கா கறியா?" http://www.tamilhindu.com/2010/03/should-hindus-eat-halal-or-jhatka-meat/#comment-12449 இதன்படி இறைச்சிக்காகக் கொல்லப்படும் ஒரு மிருகத்தை "ஜட்கா" முறையில் ஒரே வீச்சாக வீசி வலி உணராமல் சாகடித்து சமைத்து உண்பதா,அல்லது "ஹலால்" முறையில் லேசாகக் கீறிவிட்டு இரத்தம் முழுவதும் வெளியேறிய பின்னர் சமைத்து உண்பதா எது சிறந்தது,எது ஜீவ காருண்யம் என்று அலசுகிறாகள்;
தள நண்பர்களும் தங்கள் கருத்தைப் பதிக்கவும்.
புனித பைபிளின் கூற்றின்படி ஆதியில் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு சைவ உணவையே கட்டளையிட்டார்; அதாவது பயிரிட்டு சமைத்து உண்ணும் காலம் வரைக்கும்;
ஆனால் அவன் இறைவனின் கட்டளையை மீறிய நாளின் தன் நிர்வாணத்தை உணர்ந்து மறைவிடம் நோக்கி ஓட இறைவன் அவன் வெட்கத்தை மூட மிருகத்தின் தோலினால் ஆடையை அமைத்துக் கொடுத்தார்;அதுதான் மனுக்குல வரலாற்றில் முதல் இரத்தம் சிந்துதலாக அமைந்திருக்கவேண்டும்;
அவன் தன் பாவத்தின் நிமித்தம் மனவருத்தம் கொள்ளவேண்டி மிருகபலியை இறைவன் நியமித்தார்; அதுவே பிற்காலத்தில் மாமிசம் உண்பதாக மாறியது; அதையும் இரத்தத்துடன் புசிக்கக்கூடாது என்ற கட்டளை இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது;
ஏனெனில் மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்ற மாபெரும் மருத்துவ உண்மையை இறைவனே மனிதனுக்கு அன்றே சொல்லிக்கொடுத்தார்; இரத்தத்தின் அவசியம் முதன்முதலில் பைபிளில்தான் விளக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உலகறிந்த உண்மையாகும்;
அதன்படி பார்த்தால் "ஹலால்" எனப்படும் முறையினையே அரபியர்கள் யூதர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்; ஏனெனில் யூதர்களுக்குத் தான் இறைவனால் எழுதப்பட்ட வேதம் கொடுக்கப்பட்டது;
இரத்தம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற வேண்டுமானால் "ஹலால்" முறையே சிறந்தது;
மிருக வதையைக் குறித்து கரிசனை கொள்பவர் இறைச்சி புசிக்காதிருக்கலாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)