வால்பாறை : வால்பாறை அருகே "மிஸ்டுகால்' பிரச்னையால் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்க வந்த போலீசாரை மக்கள் முற்றுகையிட்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை இடது கரையை சேர்ந்தவர் தெய்வானை. இவரது மகன் பரமசிவன்(16). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது மொபைல்போனிலிருந்து ஒரு பெண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தார் அவனிடம் கேட்டதற்கு முறையான முகவரி சொல்லாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனிடையே வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 26ம் தேதி சேடல்டேமில் உள்ள பரமசிவனின் வீடு புகுந்து தாக்கியதாகவும், தடுக்க வந்த அவரது தாயாரையும் தாக்கியுள்ளதாக கூறப் படுகிறது.கண் எதிரே தன்னால் தாய் தாக்கப்பட்டதால் மனம் உடைந்த போன பரமசிவன், நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரது உடலை மீட்க சென்ற முடீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசாரை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் தான் பிணத்தை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை வால்பாறை இன்ஸ்பெக்டர் சண்முகையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனை தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை 5.00 மணிக்கு மாணவரது உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.பரமசிவத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த, ராதாகிருஷ்ணன், சரவணபாண்டியன், ரவி, காளிமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8287
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு புத்தகத்தை விரும்பி வாங்குகிறோம்;அதைப் பெரும்பாலும் வாசிப்பதில்லை;வாசித்தாலும் அதைக் குறித்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளுவதுமில்லை;
ஒரு புத்தகத்தை வாங்கிய நோக்கமே அதனை வாசித்து முடிப்பதாக இருக்குமானால் அதைக் குறித்து கலந்துரையாடுவது அதன் நன்மையை முழுவதும் அடைய உதவும்;
அதுபோலவே இரட்சிப்பு எனும் இலவசமான நுழைவுசீட்டைப் பெற்றுள்ள நாம் அதனை நிறைவேற்றுவதில் மந்தமாக இருக்கக்கூடாது;
அதற்காக தினமும் ஏதாவதொரு வகையில் பிரயாசப்படவேண்டும்;அதைக் குறித்து பேசிக் கொண்டே இருக்கவேண்டும்;
அது நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் அவ்வப்போது கொண்டு வரும் மாற்றமாக இருக்கட்டும்;நம்முடைய நினைவுகளையும் செயல்பாடுகளையும் ஒழுங்கு செய்வதாக அமையட்டும்;
அந்த வகையில் உதாரணத்துக்கு,நாம் அதிகமாகப் பயன்படுத்தும் கைப் பேசியைக் குறித்து சில தீர்மானங்களை எடுக்கலாம்;
மிஸ்ட் கால் (missed call) கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதை ஒரு குணாதிசயமாகக் கொண்டு யாருக்கும் மிஸ்ட் கால் (missed call) கொடுக்காமலும் யாருடைய மிஸ்ட் காலையும் பொருட்படுத்தாமலுமிருக்கும் ஒரு பழக்கத்தை உண்டாக்கலாம்; இதன் மூலம் நண்பர்கள் நம்மைக் குறித்து அறிந்துக்கொள்ளட்டும்;
அதுபோலவே எந்த கீழ்த்தரமான உபயோகமில்லாத குறுஞ்செய்தி (SMS) யையும் அது நகைச்சுவையோ (joke) துணுக்கோ எதுவானாலும் அதனை படிப்பதுடன் அழித்துவிடவேண்டும்;
அதுபோலவே மின்னஞ்சல் (e-mail) அனுப்புவதிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும்;எந்த ஒரு பொதுவான அறிவுரை அல்லது தத்துவம் சார்ந்த செய்தியையும் கூட வேதத்துடன் சம்பந்தப்படுத்தி வசனக் குறிப்புடன் அதனைப் பயனுள்ள செய்தியாக மாற்றவும் முயற்சிக்கவேண்டும்;
பயனற்ற எந்த தகவலையும் நான் கடத்தமாட்டேன் என்ற உறுதி நமது இரட்சிப்பு நிறைவேற நமக்கு உதவும்;
அதுபோலவே நாம் கேட்கும் விஷயங்கள்,பார்க்கும் காரியங்கள்,உணவு, உடை,இரசனைகள் அனைத்திலும் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்;குறிப்பிட்ட உணவுக்கோ உடைக்கோ இரசனைக்கோ பழக்கவழக்கத்துக்கோ அடிமைப்படாதிருக்க வேண்டும்;
நீந்துபவன் விலக்கி முன்செல்லுதல் போலும் பறக்கும் பறவையானது எழும்பி உயரச் செல்லுதல் போலும் நாம் பிரயாசப்பட்டாலே இரட்சிப்பு நிறைவேறும்;
தாமதிக்கலாம்;மந்தமாகச் செல்லலாம்;விழுந்து விழுந்து செல்லலாம்; பரவாயில்லை;ஆனாலும் அதற்காக நாம் கொடுக்கும் விலை அதிகம்; நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபை வீணாகும்;மாம்சத்துக்கு ஊழியம் செய்வது அவமானத்தையே தரும்;மாம்சத்தைத் திருப்திப்படுத்த ஒருவராலும் முடியாது;
ஆனால் எச்சரிக்கையுடன் உறுதியுடன் திட்டமிட்டு முன்னேறினால் நம்மை அழைத்த தேவன் நமக்காக நியமித்துள்ள மேன்மையான நன்மையை விரைவாக அடையமுடியும்.
(குடும்ப ஆராதனையில்...மேற்கண்ட ஆலோசனைக்குப் பிறகு எனது மைத்துனரை இறுதி ஜெபம் ஏறெடுக்கச் சொன்னேன்;அவர் ஜெபத்தில், "ஆண்டவரே நாங்கள் உமக்கு மிஸ்ட் கால் (missed call)கொடுக்கக் கூடாது;எப்போதும் உம்மோடு பேச ஆயத்தமாக இருக்கவேண்டும்; அதுபோலவே நீரும் எங்களுக்கு மிஸ்ட் கால் (missed call) கொடுப்பதில்லை;உம்மை நோக்கிக் கூப்பிட்டால் எங்களுடன் பேச ஆயத்தமாக இருக்கிறீரே" என்று ஜெபித்தது வித்தியாசமான சிந்தனையாக இருந்தது..!)
தியானித்த வசனங்கள்: ஏசாயா.25:9 முதல் 12 வரை யூதா.3 எபிரெயர்.12:1 1.கொரிந்தியர்.9:16
தந்தனத்தானே தானே தந்தனத்தானே தானே தந்தானே தன்னைத் தானே தந்தானே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)