மனப்பாரமே அனைத்து வியாதிகளுக்கும் காரணமாவது மருத்துவ உண்மையாகும்;இதனைக் குறித்து இயேசு பெருமான் கூறும்போது, "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு..." எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்;
பெருந்திண்டி என்பது எதிலும் திருப்தியடையாத தன்மையையும் வெறி என்பது புலன்களின் இச்சையை நிறைவேற்றத் தூண்டும் ஆழ்மனதின் அலைபாயும் தன்மையையும் லௌகீகக் கவலை என்பது இந்த உலகம் மற்றும் நம்முடைய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கைக்கான ஏக்கப் பெருமூச்சு;