கர்த்தரால் வரும் வெற்றியை ஈட்டுவதற்கு சொந்த தகுதி ஒன்றும் பெரிதாக உதவுகிறதில்லை என்பதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்;
ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டின் துவக்கமுதலே தேவ பயத்துடன் தன் காரியங்களை ஒழுங்காக நடப்பித்த ஒரு மாணவனைக் குறித்து ஆண்டவர் மிகவும் மகிழுவார்;இதனாலேயே வேற்று இன மாணவர்களும் பெரிய வெற்றிகளை ஈட்டமுடிகிறது;
இந்த இடத்தில் பூரண சற்குணரான பரமபிதாவின் குணாதிசயத்தை கவனிக்கிறோம்;அவரை அறிந்தாலும் அறியாவிட்டாலும் தொழுதாலும் தொழாவிட்டாலும் வான்மழையைப் போலும் சூரிய ஒளியைப் போலும் ஆண்டவர் அருள்மாரி பொழிகிறார்;
ஆனால் கிருபை என்பது என்ன? அது தகுதியில்லாதவன் மீது செலுத்தப்ப்டும் ஆண்டவருடைய அளவற்ற அன்பு;
உதாரணமாக நான் கடந்த மாதத்தில் எனது குடும்ப ஆராதனையில் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காகப் பகிர்ந்துக் கொண்ட சத்தியமாவது:வயல்வெளியில் பொறுக்கச் சென்ற ரூத்..!
அந்த தியானம் எனக்கே மிகுந்த ஆச்சரியமாக இருந்தது;(என் பிள்ளைகளை...)மாணவர்களை அது மிகவும் கவர்ந்தது;இதற்கு சாட்சியாக இரண்டு வாரம் சென்றபிறகும் +1 படிக்கும் எனது தங்கை மகன் நான் குறிப்பிட்ட கருத்தைக் கூறி ஜெபித்தான்;
தேர்வு பயத்தில் தேவ கிருபையும் ஞானமும் தைரியமும் நாடி வரும் ஒரு எளிமையான மாணவனுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக சாதாரண மனிதனான நானே உதவி செய்ய முடியுமானால் அவனைப் படைத்த ஆண்டவர் இன்னும் அதிகமாகவே அவனுக்கு உதவி செய்வார்;உன் காலத்தையெல்லாம் வீணாக்கிவிட்டு வருகிறாயே பாவி என்று தேவன் அவனை பழித்துரைப்பதில்லை;
இது கடன்காரன்,சண்டைக்காரன்,தொழிலாளி,வியாபாரி என அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும்; தாழ்மையுள்ளவ்ர்களுக்கு கிருபையளிக்கிறார்; பெருமையுள்ளவனையோ..?
10வதில் அரையாண்டு வரையிலும் மந்தமாக இருந்துவிட்டு திடீரென விழித்துக் கொண்டு பெரியதாக சாதித்த மாணவர்கள் உண்டு;உண்மையில் தற்கால (Guide உதவிப் பாடப் புத்தகங்களின்) அமைப்பின் படி மனமூன்றி முயன்றால் தேர்வுக்கு ஆயத்தப்பட 60 நாட்கள் போதுமானது;
எனவே சரியாக கல்வியாண்டின் இறுதிக்கட்டத்தில் அவனை சற்று உற்சாகப்படுத்தினால் தூண்டிவிட்டால் தோற்றுவிடுவோம் என்று முடிவு செய்துவிட்ட மாணவனையும் வெற்றிபெற வைக்கமுடியும்;
இந்த சந்தோஷத்தினால் தொடர்ந்து சீர்பெறும் பிள்ளைகளும் உண்டு;நமது இலக்கு வெற்றி நிச்சயமான பிள்ளைகளல்ல;பெலவீனமான பிள்ளைகளே;
அவர்களை துஷ்டர்கள் என்று சமூகமும் ஆசிரியரும் ஏன் பெற்றோரும் கூட தூஷித்து வெறுத்து ஒதுக்கும் நிலையில் அவர்களை சாத்தான் கையில் முழுவதும் ஒப்புக்கொடுப்பதா என்ன?
அல்லது அவர்களுக்கு மேலும் ஒரு நீதிபோதனை வகுப்பு எடுப்பதா? அதைவிட சுகர் கோட்டட் (Sugar Coated Tablet)மருந்தாக இந்த நேரத்தில் வெற்றியை வாக்களித்தால் அதுவே மேன்மை;
தன் திறமையையும் உழைப்பையும் நம்பி செயல்படும் ஒருவனை தேவனுக்கு மகிமை செலுத்தத் தூண்டுவதைவிட இது எளிதானதும் சிறந்ததுமான பணியாகும்.
-- Edited by chillsam on Sunday 28th of March 2010 12:35:38 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரரே எனக்கு சொந்தமாக சபையும் கிடையாது;வீடும் கிடையாது; நினைவு தெரிந்த நாளிலிருந்து வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறோம்;தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்;
ஆனாலும் நாங்கள் க்டந்த பல வருடங்களாக ஒழுங்காக செய்துவரும் ஒரே ஊழியம் ஜெப ஊழியம் மட்டுமே..!
//அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு //
இந்த வார்த்தையில் அப்படி என்ன பாதிப்போ தெரியவில்லை; ஏற்றிவிட்ட ஏணியை அநேகர் நினைப்பதில்லை என்ற எண்ண ஓட்டத்திலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்;
("சரக்கை ஏத்தி விடுதல்" என கொச்சையாகக் குறிப்பிடுவது வேறு மொழி..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//நான் சாதாரண வழிப்போக்கன்; கூலிக்காரன்; அஞ்சற்காரன்;எனக்கென்று வீடுமில்லை;நாடுமில்லை;சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை;
எனவே என்னை "போதகன்" என்றோ "நல்ல போதகன்" என்றோ நான் கூறிக் கொள்வதில்லை;அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு பிறகு சிரமப்படவேண்டாம்,அன்பரே..!//
தாங்கள் ஒரு சபைப் போதகர் என்பதை பழைய பதிவுகளிலிருந்து அறிந்திருக்கிறேன்.
தங்களை சகோதரர் என்றே அழைக்கலாம் என்றாலும், தங்கள் வார்த்தைகள் நீங்கள் ஒரு போதகர் என்பதை ஞாபகப்படுத்துகிறது. நான் உங்களைப் பற்றியோ, ஊழியத்தைப் பற்றியோ குறைகூறவில்லை என்று கூறினாலும் நீங்கள் உங்களைப் பற்றியும் ஊழியத்தைப் பற்றியும் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
//அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு // தங்களை உயர்த்திப் பேசவோ (அல்லது உங்கள் மொழி நடையில் ஏற்றிவிடவோ) அப்படி குறிப்பிடவில்லை. தங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்கையில் எனக்கு ஒரு எச்சரிக்கைத் தேவை என்பதற்காகவே அப்படி குறிப்பிட்டேன்.
என்னைப் பொறுத்தவரை தேவ ஊழியர்களை விமர்சிப்பது என்னைப் போன்றவர்களுக்கு தகுதியில்லை என்றுதான் கூறுவேன். ஏனெனில் உங்கள் எஜமானன் மனிதன் அல்ல எங்களைப் படைத்த இறைவன்.
கருத்துக் (விவாத) களம் என்பதலாயே <<தவறில்லை>> என கூறியிருந்தேன்; இல்லையென்றால் உங்கள் ஊழியத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க நான் யார்?
//திரும்ப வருவேன்.............!// திரும்பி வாருங்கள்; காத்திருக்கிறேன்.
நான் சாதாரண வழிப்போக்கன்; கூலிக்காரன்; அஞ்சற்காரன்;எனக்கென்று வீடுமில்லை;நாடுமில்லை;சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை;
எனவே என்னை "போதகன்" என்றோ "நல்ல போதகன்" என்றோ நான் கூறிக் கொள்வதில்லை;அவசரப்பட்டு என்னை ஏற்றிவிட்டு பிறகு சிரமப்படவேண்டாம்,அன்பரே..! திரும்ப வருவேன்.............! Mar 27, 2010 நல்லவர் எட்வின் அவர்களே உங்கள் புத்திமதிக்கு நன்றி; நான் பக்திவிருத்திக்கு- அதாவது மற்றவர் பக்திவிருத்திக்கு உதவாத எந்த காரியத்திலும் ஈடுபடுகிறதில்லை;ஆனால் நீங்கள் ஒரு குழு அமைத்து எனது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளவும்;
முதலில் உங்களிடம் கேட்காத காரியத்துக்கு நீங்களாக முன்வந்து சொன்ன அறிவுரை அடிப்படையற்றதும் பக்திவிருத்திக்குப் பயனற்றதுமானது என்பதைப் புரிந்துக்கொண்டால் நலம்;
// என்னை பொறுத்தவரை எதிர்கால நல வாழ்வுக்காக, உலக காரியங்களுக்காக உபவாசித்து அதற்காக ஜெபிப்பது என்பது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்.............. //
நான் உபவாசித்து ஜெபித்தால் உங்களுக்கு என்ன வந்தது? அதனால் சிலர் பக்திவிருத்தி அடையக்கூடுமே;உங்கள் வார்த்தையும் முரண்பாடான கருத்துக்களுமே இடறலாக இருக்கும்;
'நான் ஜெபிக்கிறேன்' என்றால் ஏதோ நல்லது நடந்தால் சரி என்று கடந்துப்போகாமல் யார்யாருக்கெல்லாம் ஜெபிக்கலாம்,யார்யாருக்கெல்லாம் ஜெபிக்கக்கூடாது என்று தனி ரூட் போட்டு போதிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது;
எல்லாம் போக என்னையும் போதகரே என்று கிண்டலடித்துவிட்டு எனது கருத்துக்கு எதிராக இன்னொரு விளக்கம் கொடுப்பதா?
நண்பரே,சகோதரரே என்றுதான் உங்களையெல்லாம் நான் அழைத்து வருகிறேன்;உங்கள் வயதின்படி உங்களை நான் தம்பி என்றும் அழைக்கமுடியும்;
நான் போதகருக்குரிய இலட்சணத்துடன் எதையாவது சொல்லியிருந்தால் மறுபேச்சு பேச வேண்டியிருக்காது;நட்பு ரீதியில் எனில் தொடர்ந்து பேசலாம் என்பதே எனது கருத்து;
//என்னை ஏற்றி விட்டு பிறகு சிரம படவேண்டாம்//
// இப்படி பட்ட வார்த்தைகளை தவிர்க்கவும் என்று உங்களை கேட்டு கொள்கின்றேன்..................//
நான் என்ன ஆபாச வார்த்தையா கூறிவிட்டேன்? "போதகர்" என்ற பட்டத்தை மறுத்து தன்னடக்கத்துடன் என்னைத் தாழ்த்தி கூறியவை உங்கள் பக்திவிருத்தியைத் தடுத்துவிட்டதா? யோசிக்கிறேன்...தீவிரமாக...!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
போதகரே என்னைத் தயவு செய்து தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.
'ஒரு மாணவனாக என் கருத்தை இங்கு பதிக்கிறேன்' என்று சொல்லி என்னைப் போன்றவர்க்ளைக் குறித்து சொன்ன காரியத்தை உங்கள் மாணவ நண்பர்களுடன் ஒப்பிட வேண்டாம்.
ஆண்டவரைக் குறித்து அறிந்து சபைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் தன்னுடைய வெற்றிக்குத் தேவனையே முழுமையாக நம்புவதோடு தாங்களும் தங்கள் கடமையான படிப்பதில் சரியாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நான் அந்த கருத்துக்களைக் கூறியிருந்தேன்.
இது பொதுவாக பரீட்சைக்கு செல்பவர்களுக்கான ஜெபத்தில் இடம்பெறும் வசனம்.
These Means are to be used, but, after all, our safety and salvation are only of the Lord. In our spiritual warfare we must arm ourselves with the whole armour of God; but our strength must be in the Lord, and in the power of his might.
குதிரை-யின் ஞான அர்த்தமெல்லாம் எனக்கு தெரியாது. இந்த வசனத்தைப் பொறுத்தவரை," நீங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்திருந்தாலும் ஜெயத்தைத் தருகிறவர் தேவனே" எனும் பொருளில்தான் நான் எடுத்துக் கொண்டேன். ஒருவேளை நீங்கள் இந்த வசனத்தைக் கூறுகிறீர்களா என எனக்குத் தெரியவில்லை. (சங்கீ 20-7)
தேவனிடமும், தேவமனிதர்களிடமுமிருந்து கற்றுக் கொள்ளத்தான் இருக்கிறேன்.
1 கொரி 5 57.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 58.ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
ஜெயங்கொடுப்பவர் தேவன் மாத்திரமே. நூற்றுக்கு நூறு உண்மை. எனவே நாம் பிரயாசப் படத் தேவையில்லை என வேதம் போதிக்கிறதா? கடைசி வரை தாவீது கூழாங்கல்லை மட்டுமே பயன்படுத்தினாரா? ...... ......
//நான் கோழைகளையும் பேழைக்குள்ளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்; 'என் போதனையைக் கேட்டிருந்தால் நீ குழியில் விழுந்திருக்கமாட்டாய்' என்று கடந்துபோகும் தத்துவ ஞானியாக அல்லாமல் குழியில் இறங்கி தோளின் மீது சுமந்து வரும் சமாரியனாக செயல்பட விரும்புகிறேன்..!//
போதகரே, தங்கள் காரியத்தைப் பற்றி 'தவறில்லை' என்று குறிப்பிட்டு விட்டு மற்றக் கருத்துக்களுக்குத்தான் நீங்கள் பதிலளித்த லிங்கை இணைத்திருந்தேன்.
குழியிலுள்ளவர்களைப் பார்த்து நான் அவற்றைக் கூறவில்லை; நடக்க பெலன் இருந்தும் நல்ல பாதை இருந்தும் சோம்பேறித்தனத்தால் என்னைத் தூக்கிக் கொண்டுசெல்லுங்கள் என்பவர்களைப் பற்றிய கருத்துக்கள் அவை.
-- Edited by timothy_tni on Friday 26th of March 2010 02:03:49 PM
-- Edited by chillsam on Friday 26th of March 2010 05:22:09 PM
குதிரை என்பது... மாம்சத்தைச் சார்ந்துக் கொண்டோரின் நிலைமையையும் கர்த்தரால் மட்டுமே ஜெயம் என்பது நிராயுதபாணிகளையும் வெற்றி வீரனாக்கும் தேவ அன்பையும் காட்டுகிறது;
நான் கோழைகளையும் பேழைக்குள்ளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்; 'என் போதனையைக் கேட்டிருந்தால் நீ குழியில் விழுந்திருக்கமாட்டாய்' என்று கடந்துபோகும் தத்துவ ஞானியாக அல்லாமல் குழியில் இறங்கி தோளின் மீது சுமந்து வரும் சமாரியனாக செயல்பட விரும்புகிறேன்..!
-- Edited by chillsam on Friday 26th of March 2010 05:21:42 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)