ஆவியானவருடைய அபிஷேகத்தால் ஒருவரும் விழ மாட்டார்கள் என்று சொல்லமுடியாது . அதே சமயம் விழுகிறவர்கள் எல்லாம் ஆவியில் விழுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. விழுகிரோமா அல்லது விழவில்லையா என்பது முக்கியமில்லை, விழுந்து எழுந்தவுடன் நம்முடைய வாழ்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். விழுந்து எழுந்த பின் இயேசுவை அதிகமாய் நேசிகிறீர்களா? அவர் மிகவும் ருசிக்கதக்கவராய் மாறினாரா? உங்கள் பாவத்தை குறித்து ஒரு வெறுப்பு வந்தாதா? அல்லது மறுபடியும் இன்னொரு உழியர் எப்ப வருவார் மீண்டும் விழ வேண்டும் என்று மாத்திரம் தோன்றுகிறதா என்பதை பொருத்து முடிவு செய்யவேண்டும். இயேசுவுக்கு மகிமையை கொண்டு வராத எந்த ஒரு "அனுபவமும்" உதவாதது அல்லது பிசாசு கொடுக்கிறது
//நான் சொல்ல வருவது ஊழியர்கள் மூலம் ஆண்டவர் பேசுவதைக் கேட்கவேண்டுமானாலும் இருதரப்பிலும் உத்தமம் அவசியம்...இரு தரப்பிலும் மேதாவித்தனம் கூடாது..!// உண்மைதான் பிரதர் சாம். ஆனால் என்னுடைய அனுபவத்தில் மேலை நாடுகளுக்கு வரும் பெரும்பாலான (எல்லாரும் அல்ல) பெந்தெகொஸ்தே உழியர்கள் (Note : I do believe in spiritual gifts including tongues operating today) செழிப்பு உபதேசத்தையும், ஆவியில் அடிக்கும் உபதேசத்தையும் மட்டுமே போதிப்பதால் அவர்களிடத்தில் சென்று ஜெபிப்பது இல்லை என்று முடிவு செய்தேன். வேதத்தின் படியேயும், நம்முடைய சபையின் முப்பரையும் , சபையின் விசுவாசிகளும் Intercessary ஜெபத்துக்கு அழைக்கும் படி அறிவுறுத்துகிறது.
John says@Vijay' blog@11:26 மாலை இல் பெப்ரவரி 15, 2011 // இந்தியாவில் லட்சகணக்கான மக்களிடத்தில் பேசுகிறவர்களிடம் நேருக்குநேர் அடிக்கடி பேசியும், ஜெபித்தும் இருக்கிறேன் (இப்போது அவர்களில் பெரும்பாலனவர்களிடம் கிட்டே கூட போவது கிடையாது)...தேவன் பேசுகிறவர்! அவர் உண்மையிலே பேசுகிறவர் என்பதை அப்போது உணர்ந்தேன். //
தனிமையில் அமைதியான தருணங்களில் தேவன் இனிமையான பேசுகிறார் என்பது உண்மை தான்;அதே நேரத்தில் தேவைப்பட்டால் தேவ ஊழியர்கள் மூலமும் தேவன் பேசுகிறார்;ஆனாலும் போலிகள் அதிகமாகி விட்டதால் கேள்விக்குறியுடன் அணுகும் தேவ பிள்ளைக்கு ஊழியம் செய்யும் ஊழியர் தன்னிடம் ஜெபிக்க வந்திருப்பவர் தன்னை சந்தேகத்துடன் பார்க்கிறாரோ அல்லது அதிகம் எதிர்பார்க்கிறாரோ என்ற எண்ணம் மேலிடுவதால் இருதரப்பிலும் ஏமாற்றம் காணப்படுகிறது;சில ஜாம்பவான்கள் அனுபவத்திலிருந்து அடித்து நொறுக்குறார்கள்;நான் சொல்ல வருவது ஊழியர்கள் மூலம் ஆண்டவர் பேசுவதைக் கேட்கவேண்டுமானாலும் இருதரப்பிலும் உத்தமம் அவசியம்...இரு தரப்பிலும் மேதாவித்தனம் கூடாது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் இல்லை என்ற தங்கள் கூற்றுக்கு நான் முரண்படுகிறேன்.//
நான் சொல்ல வந்ததை ஒழுங்காக சொல்லவில்லை என்று நினைக்கிறன். புதிய ஏற்பாட்டில், குறிப்பாக வேதம் எழுதி முடிக்கப்பட்ட நிலையில் தீர்க்கதரிசிகள் (தீர்க்கதரிசன உழியம் செய்பவர்கள்) எல்லாம் வேதத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் குறைவுள்ளது, சோதித்துபார்கப்படவேண்டியது. சாமுவேல் வாயைதிறந்து “தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்…” என்று சொல்லுகிறது எல்லாம் தேவன் சொன்னதே, அது அப்படியே நடக்கும், நடக்காத பட்சத்தில் அந்த திர்க்கதரிஷி கொல்லப்படவேண்டும்.
உபாகமம் 18:20 “சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.”
நவீன தீர்க்கத்ரிஷிக்கு இந்த வசனத்தை உபயோகித்தால் எல்லோரையும் “Mass murder” பன்ன வேண்டி வரும்.
அதுமாத்திரமல்ல “Marmanism” , “Original SDA (Elain G White’s Version)” , “Jehovas Witness” போன்ற “Cult” கும்பல் தோன்றினதற்கு இதுபோல நவீன திர்க்கதரிஷிகளே காரணம். இவர்கள் தங்களுடைய “superiority” ஐ காண்பிக்கும் பொருட்டு, தேவனுடைய பிரச்சனையை (அப்படி தேவனுக்கு ஒன்றும் இல்லை என்றாலும்) தாங்கள் திர்ப்பதாக நினைத்து “ஒளியின் தூதனை’ தேவன் என்று நம்பி “இயேசு பிதாவை விட கிழானவர்” , “இயேசுதான் மிகாவேல்” , “நரகம் என்பது தற்காலிகமானது” , “இயேசு லுசிபரினுடைய சகோதரர்” , “பிதாவுக்கு மனைவி உண்டு “, “இயேசு வேறு ஒரு கிரகத்தில் மனிதனாய் பிறந்து, தேவனாக பூமியில் பயிற்சி எடுப்பவர், நாமும் இரட்சிக்கப்பட்ட பின்பு வேறு ஒரு கிரகத்துக்கு தேவனாய் பயிற்சிக்கு அனுப்பபடுவோம்” என்று தவறான வழியில் ஜனங்களை மோசம் போக்குகிறார்கள். இவர்களை திர்க்கதரிஷி என்று நம்பும் அப்பாவி ஜனங்களும் “தேவன் வேதத்துக்கு வெளியேயும் பேசுவார்”ஆகையால் இது உண்மை என்று நம்பி மோசம் போவார்கள். இதைப்பற்றிய ஒரு வேத ஆராய்சியாலரின் கட்டுரை
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆவியானவர் இல்லாவிட்டால் தீர்க்கதரிசிகளின் பணியானது பூஜ்யமாகும்; அதாவது ஆவியானவரால் அகத்தூண்டல் மூலம் வெளிப்படுத்தப்படாவிட்டால் யாரும் எதுவும் பேசவே முடியாது;அதற்கு மாறானவை விளைவுகளில் விளங்கும்;இது பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் செயல்பட்ட விதமாகும். பழைய ஏற்பாட்டில் பலரும் போதிக்கும் வண்ணமாக இயற்கைக்கு மாறுபட்ட ஒரு வல்லமையாக மாத்திரமே ஆவியானவர் அறியப்பட்டிருந்தார், செயல்பட்டார்;ஆனால் புதிய ஏற்பாட்டிலோ அவரே ஒரு நபராக உடன் இருந்து போதிப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகிற படியினால் இடைத்தரகு அதாவது மத்தியஸ்தர் பணியானது முடிவுக்கு வருகிறது. இதனை எளிமையாக விளங்கிக்கொள்ளவேண்டுமானால் ஒரு கதைப் புத்தகம் போல, அல்லது அச்சடித்துக் கரங்களில் தவழும் புத்தகத்தைப் போல,முன்பு யாரோ படித்து சொல்லக்கேட்டதை நாம் நேரடியாகவே பெற்று அனுபவிக்கும் சுதந்தரமே பரிசுத்தாவியானவரின் பணியாகும்;இதோ இதனை எழுதுவதற்குத் தூண்டி உதவிசெய்பவரும் அவரே;ஆவி என்றால் அது என்று சொன்னால் போதும்;இவரோ ஒரு நபரைப் போல உடனிருந்து நடத்துவதனால் இவரை ஆவியானவர் என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறோம். இந்த வித்தியாசங்களை உணராத காரணத்தினாலேயே இன்னும் தூதர்களை தரிசிப்பதாகவும் ஏதோ ஒரு ஆவி தன்மேல் எதையோ சொல்லிச்சென்றதாகவும் சிலர் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்;இனி ஆவியானவர் வந்துபோகிறவர் அல்ல,அவர் தங்கியிருக்கிறவராக்கும்; அப்படியானால் ஆராதனைகளில் ஆவியானவரை வருந்தி அழைக்கிறோமோ அது எப்படி,அதற்கும் நம்முடைய தவறான புரிதலும் பெலவீனமுமே காரணம்;ஆவியானவர் வந்த பிறகு தூதர்களுடன் நமக்கு எந்த பிஸினெஸும் (Business) இல்லை; தூதர்கள் எப்போதும் போல பணிவிடை ஆவிகள் ஸ்தானத்தில் தொடர்கின்றனர். இதுவே ஆரோக்கிய உபதேசமாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அந்த வல்லமையை தாங்க முடியாமல் சகோதரி தரையில் சாய்ந்து விட்டர்கள். முதல் முதலில் இப்படி வல்லமயாக் அபிஷேகம் இறங்குவதும் பிறகு நாளாக ஆக ஆக நமக்கு ஆவியானவரின் அபிஷேகத்தை தாங்கும் பலம் வருவதும் உண்டு...நமது கையில் எதுவுமே இல்லை //
தனிப்பட்ட சிலரது அனுபவத்தையும் கருத்துக்களையும் போதனையாகக் கொள்ளக்கூடாது என்பதற்கு சுந்தர் அவர்களின் மேற்கண்ட கருத்து ஒரு உதாரணமாகும்;
தரையில் விழுவதே ஆவி அபிஷேகம் வல்லமை என்பது தவறான க்ருத்து;ஆவியானவர் விழப்பண்ணுகிறவரல்ல; விழுந்தோரைத் தூக்கி நிறுத்துகிறவர்;
மேலும் "அப்போஸ்தலர் கையினால்" என்பது வேதத்தில் பிரபலமான சொற்றொடராகும்;அதன்படி கைகளை வைக்குதல் என்பது தனிப்பட்டதொரு அடையாளமும் அதிகாரமும் மிகுந்த இறைப்பணியாகும்;
கையில் ஒன்றுமில்லையெனில் நம் தலையில் கை வைத்து நம்மை ஊழியத்துக்கு ஏற்படுத்தினவர் கையிலும் ஒன்றுமில்லை என்பது அர்த்தமாகும்;கையில் இல்லையெனில் தலையிலும் ஒன்றுமில்லையென்பது அர்த்தமாகும்;அதாவது தலை என்பது அபிஷேகம் தங்கிருக்கும் ஸ்தானம்;அதன் பெலத்திலேயே கைகளுக்கு வல்லமை கடந்து வருகிறது;அது ஆவியில் தள்ளிவிட அல்ல;எழுப்பி நிறுத்தவே கொடுக்கப்பட்டது;
மற்றபடி வேதத்தில் பரிசுத்தவான்கள் விழுந்த சம்பவங்கள் அநேகம் உண்டு;அதற்கும் ஆவியின் அபிஷேகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Mar 9, 2010 பழைய ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு;இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாமென்றெண்ணுகிறேன்;
ஞானஸ்நானம் பெறாத ஒருவர் தீர்க்கதரிசனமாக எதைச் சொன்னார் என்பதைக் கொண்டு அவர் சொன்னது தீர்க்கதரிசனமா என்பதையும் வரையறுத்துவிடமுடியும்;
முக்கியமானதொரு அடையாளமாவது ஒருவர் தீர்க்கதரிசனம் என்று சொல்வது வாழ்வியல் சம்பந்தமான பொருளில் என்றால் அது தீர்க்கதரிசனமல்ல;
அது அந்த நபருடன் நேரடியாக ஆலோசனையாகவே பகிர்ந்துக் கொள்ளக்கூடிய விஷயம்தான்;நேருக்கு நேராக சொன்னால் எடுபடாது என்றுணர்ந்தே தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கூறுகிறார்கள்;
இது ஆவியைப் பெற்று சொல்பவர்க்கும் பெறாமலே சொந்த உணர்ச்சியிலிருந்து சொல்பவர்க்கும் சேர்ந்தே பொருந்தும்.
Mar 11, 2010 // சில்சாம் அவர்களே பழைய ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு என்று சொல்கிறீர்கள் என்ன வித்தியாசம் என்று நான் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.........//
நண்பரே நீங்கள் இந்த வித்தியாசத்தை அறியாதவர் என்று என்னால் எண்ணமுடியவில்லை; ஆனாலும் பரிசுத்தாவியானவரைக் குறித்து நண்பர் சுந்தர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை நிதானமாகப் படிக்க வேண்டுகிறேன்;இப்போதைக்கு அதுவே போதும்;
குறிப்பான ஏதேனும் கேள்விகள் இருக்குமானால் நீங்கள் தாராளமாகக் கேட்கவும்; நான் எனக்குத் தெரிந்த பதிலைக் கூற ஆயத்தமாக இருக்கிறேன்.
மேலும் இது விவாதிக்கும் பகுதியோ அல்லது இந்த பொருள் விவாதக்குரிய பொருளோ அல்ல என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன்;நன்றி
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)