// வெறும் ஜெபத்தால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்றால் ஆண்டவர் இத்தனை பெரிய வேதபுத்தகத்தை எழுதி கொடுக்காமல் "நீ அமர்ந்து ஜெபி மற்ற எல்லாவறையும் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லி முடித்திருப்பார்! //
நண்பரே, எழுதிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கும் மேலே புதினமான காரியங்களையும் ம(இ)றைபொருளையும் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்திலிருக்கும் உங்களுக்கு உதவுவதே ஜெபநேரத்தில் திறக்கும் வானத்தின் வாசலே;
வெறும் ஜெபத்தால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்றால் ஆண்டவர் இத்தனை பெரிய வேதபுத்தகத்தை எழுதி கொடுக்காமல் "நீ அமர்ந்து ஜெபி மற்ற எல்லாவறையும் நான்
பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லி முடித்திருப்பார்!
ஜெபிப்பவர் என்ன தகுதியில் இருக்கிறார் என்பதின் அடிப்படையிலேயே ஜெபம் கேட்கப்படும் என்றே நான் கருதுகிறேன்.
தானியேல் ஜெபிக்க ஆரம்பித்ததும் கட்டளை வெளிப்பட துவங்கியது ஏனென்னில் அவன் தேவனுக்கு பிரியமான புருஷனாக இருந்தான். அனால் சிலரை பார்த்து "நீங்கள் மிகுதியாக ஜெபம் பண்ணினாலும் கேளேன்" என்று கர்த்தர் சொல்கிறார்.
எனவே வெறும் ஜெபம் மட்டும் போதாது, ஒருவரின் ஜெபம் கேட்கப்பட, நீதியான நடத்தை மற்றும் கீழ்படிதலுள்ள வாழ்க்கை நிச்சயம் தேவை
யாக்கோபு 5:16நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. நீதிமொழிகள் 15:8 ; செம்மையானவர்களின்ஜெபமோ அவருக்குப் பிரியம்.
சில சமயங்களில் நாம் என்னதான் ஜெபித்தாலும் நம் ஜெபம் கேட்கபடுவதில்லை அதற்க்கு நமது கரங்கள் சுத்தமாக இல்லாததே காரணம், இதுசம்பந்தமாக நடந்த உண்மை சம்பவத்தை அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்
"முன் ஏர் போவது போலவே பின் ஏரும் போகும்"என்பது முதுமொழி; இதன்படி ஜெபிக்கிற சுபாவமுடைய ஒருவன் மற்றொருவனையும் ஜெபிக்கத் தூண்டுவான்; இதற்கான முதலாவது முயற்சி அந்த மற்றொருவனுக்காக ஜெபிப்பதே;
ஜெபம் என்பது பிரசங்கம் அல்லது ஆராதிப்பதைப் போல அனைத்தையும் தன்னை நோக்கி குவித்துக் கொள்வதல்ல;அது இறைவனை நோக்கித் திரும்பச் செய்வது; இப்படிப்பட்ட ஜெப முறையினைக் கற்று செயல்படுத்துவோர் இயல்பாகவே மற்றவரும் ஜெபிக்கத் தூண்டும் வண்ணம் செயல்படுவார்;
பிரார்த்தனை என்பது வளையம் போன்றது;அல்லது சங்கிலி போன்றது; நிச்சயமாகவே இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும்;அப்படியில்லாதிருந்தால் அது அப்படியானது அல்ல என்பது அர்த்தமாகும்;
மேலும் அதனை ஒரு முக்கோணம் என்றும் சொல்லலாம்; நான் என் சக நண்பனுக்காக அல்லது உறவுக்காக இறைவனிடம் மன்றாடுகிறேன் என்றால் அதன் விளைவு நான் யாருக்காக மன்றாடினேனோ அவரை இறைவன் ஏதாவதொரு வழியில் சந்திப்பதில் அது நிறைவேறும்;
அனைத்து ஜெப இயக்கங்களுமே இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே வளர்ந்து வருகிறது; மற்ற எந்த அமைப்பு ஒழிந்துபோனாலும் இந்த ஜெப இயக்கம் மட்டும் தோற்றுப் போகாது என்பது சத்தியமாகும்;
ஜெபத்தைக் குறித்த எந்த போதனையும் தேவையில்லை;ஒரு மனுஷன் ஜெபிக்க உட்கார்ந்தாலே மற்ற அனைத்தையும் தேவ ஆவியானவர் பார்த்துக்கொள்வார்,,!
(தொடரும்...)
-- Edited by chillsam on Thursday 25th of March 2010 11:34:47 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)