ஒவ்வொரு வருடமும் கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை திருச்சபையார் நினைவுகூறும் காலத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பாக இதுபோன்ற சுவ்ரொட்டிகள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு தன்னார்வ பணியாளர்களால் ஒட்டப்படுகிறது.இதில் எந்த தனிநபருடைய விவரமும் முகவரியும் இல்லாமல் ஒட்டப்படுவது தனிச் சிறப்பாகும்.இதுபோன்ற ஊழியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்த சுவரொட்டிகளில் என்னை கவர்ந்த வாக்கியம் இதுதான்... எத்தனை எளிமை... எத்தனை நேர்மை... நச்... நச்... நச்... என்பார்களே அதுபோல..!!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்று (07.03.2010) காலையில் "விஜய்" டிவியில் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் நிகழ்ச்சியினை கவனிக்க நேர்ந்தது; அதில் அவர் குறிப்பிட்ட ஒரு வசனத்தைச் சொன்னவிதம் என்னை மிகவும் கவர்ந்தது;
கிறித்தவர்களனைவருக்கும் தெரிந்ததான அந்த வசனமானது அவர் மூலம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது; வசனம் இதுதான்: "...பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே."(எபிரெயர்.12:14)
இதனை அவர் சொன்னவிதமாவது.., "ஒரு கல்லை தெய்வமாக பாவித்து அலங்கரித்து யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம்; நீ கொலைக்காரனோ கொள்ளைக்காரனோ லஞ்சம் வாங்குபவனோ வேசிக்கள்ளனோ யார் வேண்டுமானாலும் ஒரு சிலையையோ தெய்வம் எனப்படும் ஒரு ஓவியத்தையோ அல்லது அதன் சிற்பத்தையோ எளிதாக தரிசிக்கலாம்;
ஆனால் இந்த உலகத்தைப் படைத்த தெய்வத்தை ஒரு மனுஷன் தரிசிக்கவேண்டுமானால் பரிசுத்தம் வேண்டும்; பாவத்துடனோ பாவத் தன்மையுடனோ பரிசுத்தரான அவரை தரிசிக்கவே முடியாது"
ஆம்,இந்த விளக்கம் மிகவும் எளிமையானது; "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனும் பழைய பாடலின் வரிகளைப் போல "சாமி தரிசனம்" என்று வசதிக்கேற்ப சாதா,ஸ்பெஷல்,தர்ம தரிசனம் வரிசையில் நின்று அடிபட்டு மிதிபட்டு எதைப் பார்த்து (கன்னத்தில் போட்டுக் கொண்டு..)வருகிறான்,மனிதன்..? வெறும் கல்லைத் தானே..!
அண்மையில் கூட உத்திரபிரதேசத்தில் பிரசாததுக்காக வெறும் பத்து ரூபாய் உணவு பொட்டலத்துக்காக நெரிசலில் சிக்கி 65 பேர் மாண்டனரே..!
பரிசுத்தரான- காணக்கூடாத- இதுவரை மாந்தரில் ஒருவரும் கண்டிராத இறைவன் பரிசுத்த வேதாகமத்தில் அல்லவா வாழ்கிறார்..!
அந்த பரிசுத்த வேத எழுத்துக்களின் வழியே இறை ஒளியை அடைந்தால் கண்கள் திறக்குமல்லவா..?
சகோதரன் மோகன் சி லாசரஸ் அவர்கள் சிங்கத்தைப் போல சேலம் நகரின் பிரதான இடத்திலிருந்து கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் மத்தியிலிருந்து கர்ச்சித்தபோது எனது உள்ளம் ஆனந்தம் அடைந்தது;
எந்த ஒரு அரசியல்வாதியோ மதத் தலைவரோ இது போல சர்வவல்ல தேவனுக்காக சத்தியத்தை சத்தியமாக துணிவுடன் சொல்லமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை;
இந்த தேசம் அறியாமை இருளிலிருந்து சீக்கிரமே மீட்கப்படும் என்ற நம்பிக்கை ஒளி மனதில் தோன்றியது;
கர்த்தர்தாமே சகோதரனுக்கு தீர்க்காயுசைக் கொடுத்து அவர்தம் தரிசனங்களை நிறைவேற்றிட உளமார பிரார்த்திக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)