மனிதர்கள் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறார்கள் என்பதை வேதாகமத்தின் பல வசனங்கள் குறிப்பிடுகிறது. அனால் உண்மையில் அப்படி பாதாளம் என்ற இடம் எதுவும் கிடையாது, அவ்வார்த்தை வெறும் பிரேதகுழியைதான் குறிக்கிறது என்று பலர் போதிக்கின்றனர் அவர்களுக்காக இந்த விளக்கம்
ஆதியாகமம் 44:29நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்
ஆதியாகமம் 37:35ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான்.
இவ்வசனங்களில் பாதளம் என்பது மரித்தபின் வைக்கப்படும் வெறும் பிரேதகுழிதான் என்று பொருள் கொண்டால், மரித்தபின் ஒன்றும் அறியாத அவன் எப்படி துக்கத்தோடு வியாகுலத்தொடே பிரேதகுழிக்குள் இறங்க முடியும் என்பதை சற்று யோசிக்க வேண்டும்!
எசேக்கியேல் 31:17அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்
பிரேதகுழி என்றால் அதில் மரித்த ஒருவனை பிறர் தான் இரக்கமுடியமே தவிர அவனாக இறங்க முடியாது அனால் இங்கு (தானாக) இறங்கினார்கள் என்ற வார்த்தை வருகிறது.
சங்கீதம் 89:48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்?
இங்கு "பாதாள வல்லடி" என்று சங்கீதக்காரன் குறிப்பிடுவது என்ன? வெறும் பிரேதகுழிக்கு வல்லமை என்று எதுவும் இல்லை அதனுள் ஒருவனை இறக்கினால்தான் அதனுள் போகமுடியும், அப்படி மரித்த ஒருவனை பிரேத குழிக்குள் இரக்காமல் எரித்து சாம்பலாக்கவும் முடியும்! அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவன் பிரேத குழிக்குள் இறங்காமல் தப்பித்துவிடலாம்.
ஆனால் சங்கீதம் குறிப்பபிடும் இந்த பாதாளம் என்ற வார்த்தைக்கு வல்லடி உள்ளது. மரித்த எல்லோருமே அதனுள்தான் இரங்க வேண்டும் யாரும் அதன் வல்லமைக்கு தப்பவே முடியாது என்று கூறுகிறது எனவே அது வெறும் பிரேத குழியை குறிக்கவில்லை என்பதை அறிய முடியும்.
மேலும் இவ்வசனத்தை பாருங்கள்
நீதிமொழிகள் 23:14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
இங்கு பாதாளம் என்பது பிரேத குழி என்று பொருள்கொண்டால், ஒருவனை பிரம்பால் அடித்தால் அவனை பிரேதகுழிக்கு தப்புவித்துவிட முடியுமா?
பிரேதகுழிக்கு வேதம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறதா?
அதாவது சுமார் எண்பது முறைக்குமேல் வேதம் அதைப்பற்றி திரும்ப திரும்ப குறிப்பிடுகிறதா?
வேதாகமத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பில் பாதாளத்துக்கு "HADES' என்றும் பிரேத குழிக்கு "GRAVES" என்றும் தனிப்பட்ட வார்த்தைகளை குறிப்பிட காரணம் என்ன?
எல்லாவற்றிக்கும் மேலாக கீழ் கண்ட வசனங்கள் ஒருவன் பாதாளத்தின் நடுவிலிருந்து பேசமுடியும் என்று சொல்கிறது
லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
இரண்டாவது வசனத்தை வேண்டுமானால் உவமை என்று நிராகரித்தாலும் முதல் வசனம் பாதாளத்தில் இருந்து பேசினார்கள் என்று சொல்கிறதே!
தேவனின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அல்லவா?
எனவே பாதாளத்துக்குள் ஒரு மனிதன் நிந்தையை சுமப்பதும், துன்பம் அனுபவிப்பதும், பேசுவதும் முடியும் என்பதை வசனம் தெளிவாக கூறுகிறது என்று தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்!