இதுபோலவே பிலிப்பியர்.4:19- ஐயும் தவறாகப் பயன்படுத்தி சில ஊழியர்கள் காணிக்கை கேட்பதுண்டு;"மகிமையிலே நிறைவாக்குவார்" என்பது இம்மைக்குரியதல்ல என்று நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்;
நானும் இதை சில வேத வல்லுநர்களின் புத்தகங்களில் வாசித்திருக்கிறேன்... எனக்குத் தெரிந்த, வேதத்தை நன்றாக அறிந்த ஒரு போதகர் :
"மகிமையிலே நிறைவாக்குவார்" என்பது மொழிபெயர்ப்பு பிழை...."மகிமையாய் நிறைவாக்குவார்" என்பதே சரி என்று கூறுகிறார்..
அதாவது, பூமிக்குரிய தேவைகளை தேவன், இயேசு கிறிஸ்துவுக்குள் மகிமையாக நிறைவாக்குவார் என்று கூறுகிறார்????
// ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.
என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதியிருப்பதால் சாத்தானை காலில் கீழ்போட்டு மிதிக்கிறேன் என்று சொல்வதிலும் தவறில்லை என்றே கருதுகிறேன்.//
இந்த விவாதத்தில் நான் அதிகமாக பங்கேற்க ஆவியானவர் என்னை அனுமதிக்கவில்லை;ஆனாலும் "சீக்கிரமாய்" எனும் வார்த்தையானது இனி நடக்கப்போகும் ஒரு காரியத்தையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்; இதற்கு இணையாக தாங்கள் ரோமர்.9:28- ஐக் கொள்ளலாம்;
இதுபோலவே பிலிப்பியர்.4:19- ஐயும் தவறாகப் பயன்படுத்தி சில ஊழியர்கள் காணிக்கை கேட்பதுண்டு;"மகிமையிலே நிறைவாக்குவார்" என்பது இம்மைக்குரியதல்ல என்று நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்;
யூதர்கள் பொதுவாகவே எதையும் கவித்துவமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்;அதனை அப்படியே மொழிபெயர்க்கும் போது வேறு புதிய அர்த்தங்களும் வட்டார வழக்கில் வந்து சேரும்;இதையெல்லாம் கவனத்தில் கொண்டே நாம் சத்தியத்தை அறியவேண்டும்;
"கட்டுதல்' என்பதை வார்த்தையின் பொருளாகக் கொள்ளாமல் நிறுத்துவது அதாவது நமக்கு எதிரான சக்திகளின் செயல்பாட்டை முடக்குவது என்ற பொருளில் கொள்ளவேண்டும்;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பிசாசின் கட்டிலிருந்து விடுதலை செய்வது புரிகிறது. ஆனால், பிசாசை கட்டுவதில் தான் குழப்பம்....
ஒரு குறிப்பிட்ட பிசாசை இயேசுவின் நாமத்தில் கட்டி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அவனை கட்ட வேண்டிய நிலை ஏன் வருகிறது? (யார் அவனை விடுதலையாக்கியது?...)
வெளி 20ம் அதிகாரத்தில் 1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். 2.பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். 3.அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
................
7.அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
என்று உள்ளது.
இப்போதே நாம் அவனைக்கட்டிவிட்டால் தூதன் எப்படி கட்டுவது?.....
ஆவிகளை ஆண்டவரின் வல்லமையால் கட்டி அப்புறப்படுத்திய வேத உதாரணங்கள் உண்டா?
//வேறு என்ன செய்யமுடியும்?//
வேத வசனத்தின்படி வாழ்வதன் மூலம் அவன் தாக்குதல்களை மேற்கொண்டு வாழலாம்; யோபை போல(யோபு 1-10) நம்மையும் அவர் இரத்தக்கோட்டைக்குள் வேலியடைத்து பாதுகாக்க வேண்டலாம்; பிசாசின் பிடியிலுள்ள மக்களை ஆண்டராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த அதிகாரத்தின் படி(மாற்கு 16-17) இயேசுவின் நாமத்தில் விடுவிக்கலாம் ... என கருதுகிறேன்.
பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். யூதா 1-9
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16-17 இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார்.
இப்படியிருக்க, பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்று ஜெபிப்பதெல்லாம் சரிதானா?
மத்தேயு 12:29அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில்,
அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்
என்ற ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள்படி உலகில் ஏறக்குறைய எல்லா மனிதற்கும் சாத்தானின் கட்டுக்குள் அவனது பிடிக்குள் இருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது
I யோவான் 5:19உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
இந்நிலையில் ஒரு மனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ அல்லாத ஒரு ஊரயோகூட ஒவ்வொரு அசுத்த ஆவிகள் ஒட்டுமொத்தமாக கட்டி வைத்திருப்பதை ஆவிக்குரியாய் கண்களால் அறியமுடியும். இந்த வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகளை நாம் வார்த்தை என்னும் படடையத்தின் வல்லமையால் இயேசுவின் நாமத்தில் கட்டி ஜெபிக்கும்போது அவைகளின் கட்டு தளர்கிறது, அதன் மூலம் ஒருவர் இருதயத்தில் ஊடுருவும்படி நம்மால் பேசமுடியும்! நாம் ஆண்டவரைப்பற்றி பேசும் வார்த்தைகள் அங்கு நிச்சயம் கிரியை செய்யும். ஆனால் கட்டப்பட்டிருக்கும் ஒரு மனிதனிடம் ஆண்ட்வரை பற்றி பேசினால் அவனுக்கு தூக்கம் வரும் நாம் பேசுவதை அவன் புரிய முடியாத அளவுக்கு அவனின் இருதயம் கட்டபட்டிருக்கும்
எனவே இப் பிரபஞ்சத்தின் பலவானாகிய சாத்தானை முந்தி காட்டிவிட்டு பிறகு ஜெபிபபதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.
என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதியிருப்பதால் சாத்தானை காலில் கீழ்போட்டு மிதிக்கிறேன் என்று சொல்வதிலும் தவறில்லை என்றே கருதுகிறேன். ஆனால இங்கு வேடிக்கை என்வென்றால், எனக்கு பல நேரங்களில் சாத்தான் யார் மனிதன் யார் என்று சரியாக தெரிவதில்லை! சாத்தானின் பிடியிலிருக்கும் பல மனிதர்கள், சாத்தானை காலில் போட்டு மிதிக்கிறோம் என்று பாடுவதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. அதாவது சாத்தான் எங்கிருக்கிறான் (தங்களுக்குள்தான் இருக்கிறான்) என்று தெரியாமலே அவனை மிதிக்கிறார்கள்
ஆனால் இங்கு அனேக இடங்களில் அதுதான் நடக்கிறது! அத்தோடு நமது யுத்தம் என்பது கண்ணில் தெரியும் இந்த மாமிசாத்தொடும் இரத்தத்தோடும் அல்ல என்பதை முதலில் அறியவேண்டும்.
எபேசியர் 6:12ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
ஆம் நமது யுத்தம் ஆவிக்குரிய யுத்தம்! ஆவிகளை பகுத்தறிந்து அவைகளோடு எதிர்த்து நிற்று போராடும் பக்குமவம் வேண்டும்.போராட்டம் என்றால் அடி உதை மிதி எல்லாமே வாங்க வேண்டியதும் கொடுக்க வேண்டியதும் இருக்கும். இவ்வேளைகளில் இயேசுவின் நாமத்தில் பொல்லாத ஆவிகளை கட்டி ஜெபிபதில் எந்த தவறும் இல்லை. ஆவிகளை ஆண்டவரின் வல்லமையால் கட்டிதான் அப்புறப்படுத்த முடியும்! வேறு என்ன செய்யமுடியும்?
ஆகினும் சாத்தானை (எவரையுமே) சபித்தல் / தூஷித்தல் / நரகத்துக்கு அனுப்புதல் / அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரியான செயல்கள்போல் எனக்கு தோன்றவில்லை
பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். யூதா 1-9
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16-17 இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார்.
இப்படியிருக்க, பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்று ஜெபிப்பதெல்லாம் சரிதானா?