அற்புதமானதொரு பொருளில் சமதளத்திலிருந்து சரியான கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர் சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்;இதில் இடைபட்டு திசைதிருப்பாமல் இரசித்து செல்கிறேன்;வாழ்த்துக்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நமக்குள் தங்கியிருந்து, தேவனுடன் நமக்கு நேரடி தொடர்பை ஏற்ப்படுத்தி தரும் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெறமுடியும் என்பதை ஆராய்வது அனைவருக்கும் மிகவும் அவசியமாகிறது.
ஏனெனில் மனம்திரும்பி இரட்சிக்கபட்டவுடன் ஆவியானவர் தானாகவே வந்து விடுவார் என்ற கருத்தில் பல சகோதரர்கள் ஆவியானவரை பெறாமலும் அவரை பெற்றுகொள்வதற்கு எந்த முயர்ச்சியும் எடுக்காமலும் இருந்துகொண்டு, ஆவியானவரை பெறுவதற்கு தனியாக முயற்சி எதுவும் தேவையில்லை என்ற கருத்தில், இன்னும் ஆவியானவரின் நடத்துதல் இல்லாமல் தங்கள் சுயநீதியில் வாழ்ந்துகொண்டு இருப்பதை ஆவியில் உணரமுடிகிறது!
ஆவியானவரின் அபிஷேகம் இல்லாமல் ஒருவர் எவ்வளவு பரிசுத்தமாக வாழ்ந்தாலும் அது சுயநீதியே! என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆவியானவர் ஒருவராலேயே ஒருவரை தேவனுக்கேற்ற பரிசுத்த நிலைக்கு நம்மை ஆயத்தபடுத்தி கொண்டுசெல்ல முடியும்.
எனவே ஆவியானவரை பெறுவதென்பது மிக மிக அவசியமாகிறது. அவரே மீட்பின் நாளுக்கென்று அருளப்பட்ட முத்திரை
எபேசியர் 4:30அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி
எபேசியர் 1:14அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
அவரே நம்மை தேவனுக்கு சொந்தமாக்கும் சுதந்திரத்தின் அச்சாரமாக இருப்பதால் அவரை நிச்சயம் நாம் வாஞ்சித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை பெற்றுகொள்வது பற்றி வேதம் காட்டும் வழிமுறைகளை ஆராயலாம்.
அப்போஸ்தலர் 2:38பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
இவ்வசனப்படி பாவமன்னிப்புகென்று ஞானஸ்தானம் பெற்றவர்கள் பரிசுத்த ஆவியின் வரம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ஆகினும் ஞானஸ்தானம் பெற்றவர்கள் எல்லோரும் அப்பொழுதே ஆவியானவரின் வரத்தை பெற வாய்ப்பில்லை என்றும் ஆவியானவரின் வரத்தை பெறாமலே வெறும் ஞானஸ்தானம் மட்டும் பெற்றிருக்க முடியும் என்றும் கீழ்க்கண்ட வசனம் விளக்குகிறது.
இந்த நிலையில்தான் இன்றைய புரதான கிறிஸ்த்தவ சபைகளின் அனேக விசுவாசிகள் இருக்கின்றனர். இவர்கள் ஆவியானவரை அறியவில்லை என்றாலும் தங்களிடம் உள்ள அந்த குறைபற்றிய அறிய மனமின்றி, அதைப்பற்றி எடுத்து சொல்பவர்களிடமும் கோபப்படும் நிலையில் இருக்கின்றனர்.
ஞானஸ்தானமும் மனம்திரும்புதலும் ஆவியானவரை பெற்றுக்கொள்வதர்க்கான தகுதிகள் என்றாலும், ஞானஸ்தானம் பெரும் முன்னும்கூட ஆவியானவரால் அபிஷேகிக்க முடியும் என்றும் வசனம் சொல்கிறது
அப்போஸ்தலர் 10:44இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்போஸ்தலர் 10:47அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி
மேல்கண்ட வசனங்களில், பேதுரு பிரசங்கம் பண்ணும்போது அதை கேட்ட அனைவர் மேலும் ஆவியானவர் இறங்குகிறார், பிறகு அவர்கள் ஞானஸ்தானம் பெறுகின்றனர். "ஞானஸ்தானம் வேறு, ஆவியானவரின் அபிஷேகம் என்பது வேறு" என்பதை இவ்வசனம் தெளிவாக போதிக்கிறது.
லூக்கா 11:13பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
ஆம்! ஆவியான்வருக்காக ஒருவர் தனியாக வேண்டுதல் செய்யவேண்டும் என்றே வேதம் சொல்கிறது. தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், வாஞ்சையோடு ஒருமனதோடு நொறுங்குண்ட இதயத்தோடு வேண்டுபவர்களுக்கு பிதாவானவர் ஆவியானவரை அருளுவார். அறிவைகொண்டு ஆவியானவர் அனுபவங்களை ஆராயநினைக்காமல் ஆண்டவரை நான் அனுபவ பூர்வமாக அறிய வேண்டும் என்ற ஒரே வாஞ்சையில் தேடவேண்டும், இவ்வாறு தன்னை உடைத்து வேண்டி கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்படுவது அதிக நிச்சயம்!
2. கூட்டு பிரார்த்தனை மூலம் ஆவியானவரை பெறமுடியும்
அப்போஸ்தலர் 1:14அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
ஆவியானவர் அபிஷேகத்துக்கு என்றே சில சபைகளில் கூடு பிரார்த்தனை நடைபெறுகின்றது. அதில் கலந்து கொண்டு ஜெபிக்கும்போது நமக்கு ஒருமனப்பாடு ஏற்ப்படுகிறது போதகர்கள் ஆவியானவரின் வரத்துக்காக ஜெபிக்க, நாமும் ஒருமனப்பட்டு தேவனிடம் நம்மைதாழ்த்தி மன்றாடும்போது கூட்டத்திலுளள அநேகருக்கு ஒரே நேரத்தில் ஆவியானவரின் அபிஷேகம் இறங்குகிறது.
3. பரிசுத்தவான்கள் நமக்காக ஜெபித்து கையை வைப்பதன் மூலம் ஆவியானவரை பெற முடியும்.
அப்போஸ்தலர் 8:16அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அப்போஸ்தலர் 8:17அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
இவ்வகையில் ஏற்கெனவே ஆவியை பெற்ற தேவ மனிதர்கள் ஜெபித்து இன்னொருவர் தலையில் கைவைப்பதன் மூலம் ஆவியானவை பெறமுடியும்.
இன்னும் சில வழி முறைகளும் கூட இருக்கலாம் ஆனால் வேத ஆதாரத்துடன் கூடியது இம்மூன்றுதான் என்று நான் கருதுகிறேன்.
என்னை பொறுத்தவரை நான் ஞானஸ்தானம் பெறவோ இயேசுவை ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஆகினும் உண்மை கடவுள் எதுவென்று தெரியவேண்டும் என்று மணிக்கணக்கில் அழுது மன்றாடி பாரத்தோடு ஜெபித்தேன் அப்பொழுதே ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு பிறகு இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவநீதியை நிறைவேற்ற எண்ணி ஞானஸ்தானம் பெற்றுகொண்டேன். இவ்வாறு யார் யாருக்கு எப்பொழுது ஆவியானவரின் வரத்தை அருளுவது என்பது ஆண்டவரின் கரத்தில் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
எனவே எப்படியாகினும் ஆவியானவரை வாஞ்சித்து பெற்றுக் கொள்வது ஆவிக்குரிய வாழ்வுக்கு மிக மிக அவசியம்!
அவருடைய ஆவியினாலேதான் எல்லாம் ஆகும்!
மேலும் ஆண்டவரைப்ற்றிய செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்
ஆவியானவர் யார் என்றும் அவரின் தன்மைகள் என்ன வென்பதையும் பற்றி தியானித்து வருகிறோம்!
தொடர்ந்து ஆவியானவர் செயல்பாடுகள் பற்றி வேதாகமம் சொல்லும் வசனங்களை நமது தியானத்துக்கு எடுத்துகொண்டு ஆராயலாம்!
ஆவியானவரால் ஒருவருடன் பேசமுடியும்!
அப்போஸ்தலர் 8:29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
இங்கு ஆவியானவர் பிலிப்புவுடனே பேசி அவனை எத்தியோப்பிய மந்திரி செல்லும் ரததுடனே சேர்ந்துகொள் என்று கூறுகிறார். இவ்வசனம் ஆவியானவர் ஒரு மனிதனுடன் பேசி அவனை நடத்தமுடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆவியானவர் பேசமுடியாது, வெறும் வல்லமை மற்றும் வேதவசனத்தின் அடிப்படையில் தேவனை அறிவதுதான் ஆவியின் அபிஷேகம் என்பதெல்லாம் தவறான கருத்து என்பதை இவ்வசனம் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கறது.
ஆவியானவரால் ஒருவரை கொண்டு போகமுடியும்
அப்போஸ்தலர் 8:39அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்
இருவர் சேர்ந்து தண்ணீரில் இறங்குகின்றனர் ஆனால் கரை ஏறியவுடன் ஆவியானவர் பிலிப்புவை மட்டும் எங்கேயோ கொண்டுபோயவிட்டர். இவ்வாறு மனிதனின் செயலையும் தாண்டி ஆவியானவரால் ஒருவரை கொண்டுபோக முடியும் நடத்த முடியும் என்பதையும் இவ்வாசனம் நமக்கு விளக்குகிறது
இவ்வசனங்களில் ஆவியானவர் எனக்கு கட்டளயிட்டார் என்று பேதுரு மிக தெளிவாக கூறுகிறார். ஆவியில் அபிஷேகம் பெற்றிருந்தால் அவரது கட்டளையை நமது இருதயத்தில் கேட்க முடியும் அதற்க்கு ஒருவர் கீழ்படிகிறாரா இல்லையா என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஒருவர் கீழ்படியாமல் நடக்கிறார் என்பதற்காக ஆவியானவர் அவருக்கு கட்டளையிடவில்லை என்று கருதமுடியாது!
ஆவியானவரால் வரும் காரியத்தை முன்னறிவிக்க முடியும்!
அப்போஸ்தலர் 20:23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
ஆவியானவரால் எதிர் வரும் காரியங்களை முன்னறிவிக்க முடியும் என்ற பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. தேவ மனிதர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் எல்லாம் பொய் என்றும் ஆண்டவர் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதெல்லாம ஆவியானவரை அறியாதவர்கள் சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகள்.
ஆவியானவர் எதிர் வரும் காரியங்களை பலருக்கு முன்னறிவிக்கிறார் ஆனால் இதில் சில கள்ளதீர்க்கதரிசன ஆவியும் சேர்ந்து செயல்படுவதால், சில காரியங்கள் நிறைவேறாமல் போகின்றன பலவேறுபாடான காரியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உலகில் எல்லாவற்றிக்குமே ஒரு டூப்ளிகேட் உண்டு! அதற்காக ஒரிஜினல் என்று ஒன்றும் இல்லைஎன்று ஆகிவிடாது. ஆவிகளை பகுத்தறிய தெரிந்தவரால் எது உண்மை எது போலி என்று சுலபமாக கண்டுகொள்ள முடியும்!. மற்றபடி எல்லாம் போலி என்று கருதுவது வசனத்துக்கு புறம்பானது.
ஆவியானவர் நமக்காக தேவனிடம் மான்றாடுகிறார்!
ரோமர் 8:26அந்தப்படியேஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
ஆவியானவர் ஒருவரே தேவனின் ஆழங்களை அறிந்தவர் எனவே தேவனின் மனநிலைக்கு ஏற்ப நாம் எப்படி வேண்டுதல்கள் செய்ய வேண்டும் எந்தெந்த தேவையற்ற காரியங்களை செய்ய கூடாது என்பதை குறித்து நமக்கு உணர்த்துவதோடு நாம் தவறும் நேரங்களிலும் நாம் தேவனிடம் மற்றாட முடியாமல் சோர்ந்து போகும் நேரங்களிலும் நமக்காக அவர் வேண்டுதல் செய்வதை நம் இருதயத்தில் நம்மால் அறியமுடியும்.
தெரிவுக்கு (CHOICE) உதவி செய்பவர்!
அப்போஸ்தலர் 13:2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
நாம் அனேக நேரங்களில் இதை செய்யவா அதை செய்யவா என்று குழம்புகிறோம். இப்படிப்பட்ட நிலைகளை ஒரு தெளிவான முடிவுக்குவர ஆவியானவர் நமக்கு உதவி செய்யமுடியும் என்பதை மேல்கண்ட வசனம் உணர்த்துகிறது!
மனிதர்களாகிய நமக்கு எந்தெந்த இடங்களில் எந்தெந்த கட்டுகள் இருக்கிறது என்பது தெரியாது. சிலர் சுவிசேஷம் சொன்ன உடன் ஏற்றுக்கொள்வர் சிலர் என்னதான் போதித்தாலும் தங்கள் நிலைகளில் இருந்து வெளியே வரமாட்டார்கள். மனிதர்களின் இந்நிலைமை ஆவியானவருக்கு தெரிவதால், சில நேரங்களில் சில மனிதர்களிடம் பேசுவதையோ அல்லது சில இடங்களுக்கு போவதையோ ஆவியானவர் தடை செய்து நமது தேவையற்ற பிரயாசத்தை தடுக்க கூடியவர் அவர் பேசுவதை ஒருவரால் கேட்க முடியும் என்பதை மேல்கண்ட வசனம் சொல்கிறது.
ஆவியானவரை ஒரு மனிதனால் துக்கப்படுத்த முடியும்
எபேசியர் 4:30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
ஆவியானவர் மிகவும் மென்மையானவர் நாம் தவறு செய்யும் போது அவர் மிகுந்த துக்கப்படுகிறார். ஒரு மனிதனைதான் இன்னொரு மனிதனால் துக்கப்படுத்த முடியும். அனால் இங்கு ஆவியானவரை மனிதனால் துக்கப்படுத்த முடியும் என்று வேதம் சொல்வதால், இவர் ஓர் ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை எவ்விதத்திலும் அறிய முடிகிறது.
தேவனின் ஆழங்களை அறிந்தவர்!
I கொரிந்தியர் 2:10நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
வேதாகமத்தில் வசனங்கள் இரண்டு புறமும் பேசுவதால் தேவனின் உண்மை தன்மை அவரின் இருதய நிலை இவைகளை வேதாகமத்தை படித்து மட்டும் மட்டும் ஒரு மனிதனால் அறியமுடியாது. இந்நிலையில் தேவனின் ஆழங்களை அறிந்த ஆவியானவர் துணையுடம் அதை ஆராய்வதன் மூலமே, உண்மையில் இங்கு நடப்பது என்ன? தேவன் மனிதனிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்பதை சரியாக அறியமுடியும்!
இப்படி தேவனுக்கு இணையாக அனைத்து காரியங்களையும் நம்முள்ளேயே இருந்த நடப்பிக்கும் இவர் யார்?
திருத்துவ கொள்கையில் வரும் இவர் ஒரு தனிப்பட்ட தேவனா?
தொடரும்.....
இதற்க்கு முந்தய தியானத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்!