வேத வசனத்தை ஆராய்வது தவறல்ல;நம்முடைய ஆண்டவரும் அதனை அனுமதித்து ஊக்குவிக்கிறார்.(யோவான்.5:39) ஆனால் அது எல்லைமீறிச் சென்றால் எத்தனை விகர்ப்பான கொள்கைகள், சடங்குகள், தர்க்கங்களை நோக்கி நம்மை நடத்தும் என்பதற்கு சிலர் உதாரணமாக நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்;
இதைக் கொண்டே நமக்கு பல காரியங்கள் தெரியவருகிறது;இவர்கள் நேரடியாக எதையும் உடனே சொல்லாமல் காலங்கடத்தி நாம் இவர்களுடனே ஊடாடிக் கொண்டிருக்கவும் இவர்களுடைய துருபதேசத்தினால் முழுவதும் மதியிழக்கும் வரை காத்திருந்து முடிவில் தமது அதிபயங்கர விஷவித்தினை உள்ளே நுழைக்கிறவர்கள் என்றும் சத்தியத்தைத் தேடி இந்த தளங்களில் மேய்கிற அப்பாவி ஆடுகள் அறியவேண்டும்;இவர்கள் மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் என்று பவுலடிகள் எழுதுகிறார்;
தொடர்ந்து தண்ணீர் ஞானஸ்நானத்தின் அவசியத்தை விளக்கும் ஆரோக்கிய உபதேசத்தை வழங்கும் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன்;அதனை விரைவில் மொழிபெயர்த்து தர முயற்சிக்கிறேன்.
Many church leaders teach water baptism to be nothing but a point of identification to the resurrected life of Christ. This is not correct. Water baptism is a powerful weapon against the carnal mind.