இன்று எழுத நினைத்த இரண்டு குறிப்புகள்... ஒன்று நேற்றிரவு (18.11.2011@11Pm) சிந்தன் மற்றும் அரவிந்தன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிப்பட்டது.
அதன் ஆதார வாக்கியம்...
“ ...அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். ” (மத்தேயு.5:45)
மேற்காணும் வசனத்தில் நம்முடைய ஆண்டவர் இரண்டு விசேஷித்ததும் அருமையானதுமான காரியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று சூரிய ஒளி மற்றது மழை நீர் இரண்டும் வாழ்வியலின் ஆதார அம்சங்கள் அல்லவா, இதைக் குறித்து தியானிக்கவேண்டும்.
அடுத்த கருத்து சகோதரி ஹேமா அவர்களுடன் (சுமார் 5 மணிநேரம்..!!) தொலைபேசியில் உரையாடியபோது வெளிப்பட்டது... தேசத்தின் நிலைமை சுத்தம்பண்ணப்படாத நிலையில் இருக்கிறது; இதுகுறித்து சொன்னபோது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது...
மேற்காணும் பாடல் வரிகளின் பின்னணியிலுள்ள் வேத வசனம்...
” மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து; நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழைபெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.” (எசேக்கியேல்.22:24)
தேசம் சுத்தம் பண்ணப்படாத நிலைமையில் மட்டுமல்ல,அதன் ஸ்திரத்தன்மையும் குலைந்திருக்கிறது; இவ்விரண்டும் ஒரு தேசத்தை முற்றிலும் அழித்துப்போட்டுவிடுமே, இதுபோன்ற பேராபத்திலிருந்து தேசத்தை யார் காப்பாற்றமுடியும், நிச்சயமாக ஜெபிக்கிறவர்கள் மட்டுமே..!
(இது அமெரிக்க தேசத்தை மனதில் கொண்டு சொல்லப்பட்டாலும் நம்முடைய தேசத்துக்கும் இது பொருந்தும்..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் இரண்டு முக்கிய கருத்துக்களை தியானித்துக் கொண்டிருந்தேன்.
ஆண்டவரிடம் சேரும் ஒரு விசுவாசியின் மனநிலை எப்படியிருக்கவேண்டும்? அது பொதுவாக ஒரு புதுமணப் (கன்னிப்) பெண்ணின் மனநிலையைப் போலிருக்கவேண்டும். இதுவரை புருஷனையறியாத ஒருத்தி எப்படிப்பட்ட மனநிலையுடன் மணவறைக்குள் நுழைகிறாளோ அவ்வாறே ஒரு விசுவாசி ஜெப அறைக்குள் நுழையவேண்டும்.(அனுதினமும்?!) இதனை ஆயத்த நிலை,ஆர்வ நிலை, அர்ப்பண நிலை என்று மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்.
(இந்த கருத்து பிரசாத் உடன் பேசும்போது 16.11.2011@9am வெளிப்பட்டது.)
நாம் நம்மிடம் ஆலோசனை உதவிக்காக அணுகுவோரைக் குறித்து நன்கு அறிந்திருக்கவேண்டும்;எப்படியெனில் தீர்வு அல்லது விடுதலை எனும் ஒரே இலக்கை நோக்கி நாம் சென்றாலும் நாம் சந்திப்பவரின் பிரச்சினையும் பிரச்சினைக்கான காரணமும் பிரச்சினையை சந்திப்பவரின் பின்னணியும் வெவ்வேறாக இருக்கலாம்;எனவே எல்லோரையும் ஒரேவிதமாக அணுகமுடியாது;அதற்கென விசேஷ பயிற்சியும் அர்ப்பணமும் நியூட்ரலான அல்லது வெற்று மனநிலை தேவைப்படும்.(Problem/Reason/Status= Result)
(இந்த கருத்து கிறிஸ்டியுடன் உரையாடும்போது 17.11.2001@9pm வெளிப்பட்டது.)
இது குறித்து சமயம் வாய்க்குமானால் விவரமாக எழுதுவேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பழைய ஏற்பாடு என்பது தனிக்குடித்தன வாழ்க்கையைப் போன்றது;புதிய ஏற்பாடு கூட்டுக்குடித்தன வாழ்க்கையைப் போன்றது.
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்து இறைவனை திருப்திபடுத்த முயற்சிப்பது நம்மீதான சுமையெனில் கிருபையைச் சார்ந்து வாழுவது இறைவன் மீதான சுமையாகும்;அந்த அழுத்தம் நம்மைச் சார்ந்தது அல்ல;இதனால் நம்முடைய சுயம் வெறுமையாக்கப்பட்டு தேவகிருபை பெருக வாய்ப்புண்டாகிறது.
நியாயப்பிரமாணம் என்பது நன்மை அல்லது தீமை ஆகிய இரண்டில் ஒன்றை செய்து அதன் விளைவை சந்திப்பதாகும்;இது ஆதாமில் துவங்குகிறது;அவனே முதன்முதலில் நன்மை தீமை அறியத்தக்க விருக்ஷத்தின் கனியைப் புசித்து நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட காரணமாக இருந்தவன்;கிருபையோ இயேசுகிறித்துவினால் உண்டானது.
இதைக்குறித்த ஒரு போதனையை விரைவில் எதிர்பாருங்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)