Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
RE: கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?
Permalink  
 


சகோதரரே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு நிச்சயம்  புரியவில்லை.
 
எனது கருத்துப்படி கிறிஸ்த்துவின் இரட்சிப்பு மிக  சுலபம்  ஆனால் இரட்சிப்பில் நிலை நிற்பதும் பெற்ற இரட்சிப்பை  இழந்துபோகாது காத்து கொள்ளுதலுமே   கடினம். 
 
கிரிஸ்த்துவுக்கும் வந்தவர்கள் செய்யும் எல்லா  பாவங்களுக்கும் இம்மையிலேயே தேவனால் சரிக்கு சரி
கட்டப்படும் எனவே நித்யம் அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
 
ஆனால் கிருபையை விட்டு விழுந்தவர்களுக்கு மட்டுமே,   அதாவது பரம  ஈவை  ருசிபார்த்து  இயேசுவை மறுதலித்து போனவர்களுக்கும் விசுவாசத்தை விட்டு விலகி போனவர்களுக்கு மட்டுமே  பின்னிலைமை முன்னிலமையை பார்க்கிலும் அதிக  கேடாக அமையும். அவர்களை மீட்க இன்னொரு பலி  இல்லை என்பதுதான்.
 
இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின்மகன் அவனை ஒடுக்குவதில்லை.

அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.

அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;

என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;

அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.

ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

(சங்கீதம்.89:19-37)


குறிப்பிட்ட இந்த வேதப்பகுதி எனக்குப் பிடித்தமானதும் நான் அதிகம் தியானித்ததுமான வேதப் பகுதியாகும்;

இங்கே இன்னும் வெளிப்படாத கிறிஸ்துவானவரின் உலகளாவிய திட்டங்கள் நிழலாட்டமாகக் கூறப்பட்டுள்ளது;

// தண்டிப்பேன்...ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும்  //

இந்த பொருளில் மற்றொரு வசன பகுதியையும் குறிப்பிடமுடியும்;

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

(எபிரெயர்.10:26-31)

இதன்படி "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்"(எபேசியர்.2:8) என்று வேதம் கூறினாலும் கீழ்ப்படியாமல் துணிகரமாகப் பாவம் செய்வோருக்கு அதைவிட பயங்கரமான தண்டனைகள் இம்மையில் மாத்திரமல்ல,மறுமையிலும் அது பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் என வேதம் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகப் போதிக்கிறது.

"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்."
(யோனா.2:8)

2:8 க்கும் மற்றொரு 2:8 க்கும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா..?

ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
(எபிரெயர்.6:4 6)

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.(எபிரெயர்.12:15 17)

ஆகிய வேதப்பகுதிகள் தேவன் எந்த காலத்திலும் பாவத்தைப் பொறுத்துக் கொள்ளுபவரல்ல என்பதை விளக்கும்;

எனவே இரட்சிப்பை நிறைவேற்றாமற் போனாலும் அதற்குரிய தண்டனையை மாத்திரம் இம்மையில் அடைந்து பிறகு மறுமையில் நித்தியத்துக்குள் பிரவேசித்துவிட கிருபை உதவும் என்றெண்ணுவது அறியாமையாகும்;

உதாரணத்துக்கு ஒரு பிரபலமான திரைப்படத்தில் பிழையான பாடலுக்கு பரிசைக் கேட்டு கெஞ்சும் ஏழைப் புலவன் பிழைக்கேற்ற பரிசைக் குறைத்துக் கொண்டு மீதத்தையாவது கொடுக்க மன்னனை வேண்டுவானே அதுபோன்றதல்ல இரட்சிப்பும் அதனைத் தொடரும் நித்திய ஆசீர்வாதங்களும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

ஒரு மனிதனிடத்தில் கிறிஸ்த்துவின்  இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது!  

எப்படியெனில் 
  இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்ன?

 14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,
15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்
 
வனாந்திரத்தில் கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள், எதுவுமே கடினமான  காரியங்களை  செய்யாமல்   மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட   வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு  பார்த்த ஒரே காரணத்துக்காக  எவ்வாறு  
தப்பிததார்களோ, அதுபோலவே  சாத்தான்  என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு  பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள்  சிலுவையில் தூக்கப்பட்ட    இயேசுவை   நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து  தப்பித்து விடலாம் அவர்களுக்கு   ஆக்கினை தீர்ப்பு இல்லை! 
 
இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; 
 
என்றும்
 
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே  அவன்   பிசாசின்பிள்ளை என்ற  ஸ்தானத்திலிருந்து  
"தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்)  வந்துவிடுவாதால்  "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!
.  

இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு,    யாரையும் வேண்டாம் என்று  ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே  முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்!    
 
இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்!  மற்றும் தேவனின் ஈவு!
 
ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
 
எனவேதான்  எல்லா  பணிகளைவிட  சவிசேஷ  பணி  மிக  முக்கியமானது  என்று நான் கருதுகிறேன். எனவேதான்   நமதாண்டவரும்
 
15.  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

என்று கட்டளை 
கொடுத்தார்!  

ஆனால்  அது கிறிஸ்த்தவத்தின் ஒரு பகுதியே! 
 
அத்தோடு கிறிஸ்த்தவம் முடிந்துவிடவில்லை!

இன்னொரு பகுதி உண்டு:
 
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
 
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
 
என்பது போன்ற அவர்  வார்த்தையை கைகொள்ள வலியுறுத்தும் அனேக  வசனங்களை இயேசு போதித்தார். அவரது வார்த்தையை கைகொள்வது  என்பது  அவ்வளவு சாதாரண காரியம் அல்ல!  ஆகினும் நாம்  கைகொண்டு நடக்க வேண்டும் என்பது இயேசு நமக்கு  இட்டகட்டளை. 

இரட்சிப்பு  என்பது  மிக  சுலபமாக  
இருக்கும்போது   இயேசுவின் கடினமான    கட்டளைகளை  ஏன் கைகொள்ள வேண்டும்? அதற்க்கான அடிப்படை காரணம் என்ன?  
 
லூக்கா 11:28 , தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

ஆம்! அதற்க்கு விசேஷ காரணம் இருக்கிறது தொடர்ந்து ஆராய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்!
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard