சகோதரரே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு நிச்சயம் புரியவில்லை.
எனது கருத்துப்படி கிறிஸ்த்துவின் இரட்சிப்பு மிக சுலபம் ஆனால் இரட்சிப்பில் நிலை நிற்பதும் பெற்ற இரட்சிப்பை இழந்துபோகாது காத்து கொள்ளுதலுமே கடினம்.
கிரிஸ்த்துவுக்கும் வந்தவர்கள் செய்யும் எல்லா பாவங்களுக்கும் இம்மையிலேயே தேவனால் சரிக்கு சரி
கட்டப்படும் எனவே நித்யம் அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
ஆனால் கிருபையை விட்டு விழுந்தவர்களுக்கு மட்டுமே, அதாவது பரம ஈவை ருசிபார்த்து இயேசுவை மறுதலித்து போனவர்களுக்கும் விசுவாசத்தை விட்டு விலகி போனவர்களுக்கு மட்டுமே பின்னிலைமை முன்னிலமையை பார்க்கிலும் அதிக கேடாக அமையும். அவர்களை மீட்க இன்னொரு பலி இல்லை என்பதுதான்.
இதன்படி "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்"(எபேசியர்.2:8) என்று வேதம் கூறினாலும் கீழ்ப்படியாமல் துணிகரமாகப் பாவம் செய்வோருக்கு அதைவிட பயங்கரமான தண்டனைகள் இம்மையில் மாத்திரமல்ல,மறுமையிலும் அது பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் என வேதம் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகப் போதிக்கிறது.
"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." (யோனா.2:8)
2:8 க்கும் மற்றொரு 2:8 க்கும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா..?
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். (எபிரெயர்.6:4 6)
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.(எபிரெயர்.12:15 17)
ஆகிய வேதப்பகுதிகள் தேவன் எந்த காலத்திலும் பாவத்தைப் பொறுத்துக் கொள்ளுபவரல்ல என்பதை விளக்கும்;
எனவே இரட்சிப்பை நிறைவேற்றாமற் போனாலும் அதற்குரிய தண்டனையை மாத்திரம் இம்மையில் அடைந்து பிறகு மறுமையில் நித்தியத்துக்குள் பிரவேசித்துவிட கிருபை உதவும் என்றெண்ணுவது அறியாமையாகும்;
உதாரணத்துக்கு ஒரு பிரபலமான திரைப்படத்தில் பிழையான பாடலுக்கு பரிசைக் கேட்டு கெஞ்சும் ஏழைப் புலவன் பிழைக்கேற்ற பரிசைக் குறைத்துக் கொண்டு மீதத்தையாவது கொடுக்க மன்னனை வேண்டுவானே அதுபோன்றதல்ல இரட்சிப்பும் அதனைத் தொடரும் நித்திய ஆசீர்வாதங்களும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு மனிதனிடத்தில் கிறிஸ்த்துவின் இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது!
எப்படியெனில் இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்ன?
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்
வனாந்திரத்தில் கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள், எதுவுமே கடினமான காரியங்களை செய்யாமல் மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு பார்த்த ஒரே காரணத்துக்காக எவ்வாறு தப்பிததார்களோ, அதுபோலவே சாத்தான் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள் சிலுவையில் தூக்கப்பட்ட இயேசுவை நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து தப்பித்து விடலாம் அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை!
இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்;
என்றும்
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன் பிசாசின்பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்) வந்துவிடுவாதால் "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!. இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, யாரையும் வேண்டாம் என்று ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்!
இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்! மற்றும் தேவனின் ஈவு!
ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
எனவேதான் எல்லா பணிகளைவிட சவிசேஷ பணி மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எனவேதான் நமதாண்டவரும்
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
என்று கட்டளை கொடுத்தார்!
ஆனால் அது கிறிஸ்த்தவத்தின் ஒரு பகுதியே!
அத்தோடு கிறிஸ்த்தவம் முடிந்துவிடவில்லை!
இன்னொரு பகுதி உண்டு:
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
என்பது போன்ற அவர் வார்த்தையை கைகொள்ள வலியுறுத்தும் அனேக வசனங்களை இயேசு போதித்தார். அவரது வார்த்தையை கைகொள்வது என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல! ஆகினும் நாம் கைகொண்டு நடக்க வேண்டும் என்பது இயேசு நமக்கு இட்டகட்டளை.
இரட்சிப்பு என்பது மிக சுலபமாக இருக்கும்போது இயேசுவின் கடினமான கட்டளைகளை ஏன் கைகொள்ள வேண்டும்? அதற்க்கான அடிப்படை காரணம் என்ன?
லூக்கா 11:28 , தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்என்றார்.
ஆம்! அதற்க்கு விசேஷ காரணம் இருக்கிறது தொடர்ந்து ஆராய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்!