நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ள பிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவ மாணவனிடம் ...
பேராசிரியர்: தம்பி, நீ கிறிததவ மார்க்கத்தைச் சார்ந்தவன் தானே?
மாணவன்: ஆம்,ஐயா.
பேராசிரியர்: எனவே நீ கடவுளை நம்புகிறாய் அல்லவா?
மாணவன்: நிச்சயமாக, ஐயா.
பேராசிரியர்: கடவுள் நல்லவரல்லவா?
மாணவன்: நிச்சயமாக.
பேராசிரியர்: அவர் எதையும் செய்ய வல்லவரல்லவா?
மாணவன்: அதிலென்ன சந்தேகம்?
பேராசிரியர்: எனது சகோதரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்;அதிலிருந்து அவர் சுகமடைய அவரும் அவர் மீது அன்புள்ள நாங்களனைவரும் மனதுருகி பிரார்த்தனை செய்தோம்;ஆனால் கடவுள் கேட்கவே இல்லை;இதுபோல அவதிப்படும் அநேகருக்காக நாம் பிரார்த்தனை செய்கிறோம்;அவர்கள் யாருமே சுகமடைகிறதில்லை;
பிறகு கடவுள் நல்லவர் என்று எப்படி சொல்லமுடியும்..?
(மாணவன் மௌனமாகிறான்...)
பேராசிரியர்: உன்னால் பதில் சொல்லமுடியாது,சிறுபிள்ளாய்;நாம் மீண்டும் துவங்குவோம்;கடவுள் நல்லவரா?
மாணவன்:ஆம்.
பேராசிரியர்: சாத்தான் நல்லவனா?
மாணவன்: இல்லை.
பேராசிரியர்: சாத்தான் எங்கிருந்து வருகிறான்?
மாணவன்: கடவுளிடமிருந்து.
பேராசிரியர்: நல்லது,இந்த உலகில் தீமை இருக்கிறதா தம்பி?
மாணவன்: ஆம்.
பேராசிரியர்: தீமை எங்கும் நிறைந்திருப்பதையும் இந்த உலகை கடவுள் படைத்தார் என்பதையும் ஒப்புக்கொள்கிறாயல்லவா?
மாணவன்:ஆம்.
பேராசிரியர்:அப்படியானால் தீமையைப் படைத்தது யார்?
(மாணவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை)
பேராசிரியர்: இந்த உலகில் வியாதி,ஒழுங்கீனம்,கொடுமை,அருவருப்பு,அசுத்தம் எல்லாம் நிறைந்திருக்கிறதல்லவா?
மாணவன்:ஆம்,ஐயா.
பேராசிரியர்: அவற்றையெல்லாம் உண்டாக்கியது யார்?
(மாணவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை)
பேராசிரியர்: நீ அறிந்துக்கொள்ளவும் உணர்ந்துக்கொள்ளவும் ஐந்து வகையான புலன்கள் உதவுவதாக அறிவியல் சொல்லுகிறது;தம்பி,இதன் நீ எப்போதாவது கடவுளை பார்த்திருக்கிறாயா?
மாணவன்: இல்லை,ஐயா.
பேராசிரியர்: (உணர்ச்சிகரமாக) எப்போதாவது உன் கடவுள் சத்தத்தை கேட்டிருக்கிறாயா என்று எங்களுக்குச் சொல்.
மாணவன்: இல்லை,ஐயா.
பேராசிரியர்: உன் கடவுளை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா, ருசித்திருக்கிறாயா, நுகர்ந்திருக்கிறாயா அல்லது எந்த வகையிலாவது அவரை அறிந்திருக்கிறாயா
மாணவன்: (பயத்துடன்) இல்லை, ஐயா, ஒருபோதும் அது போன்ற எந்த அனுபவத்தையும் நான் பெற்றதில்லை;அது போன்று ஆராய எனக்கு தைரியமுமில்லை.
பேராசிரியர்: ஆனாலும் அவரை இன்னும் நம்புகிறாயோ?
மாணவன்:ஆம்.
பேராசிரியர்: எந்த ஒரு சோதித்துப் பார்க்கக்கூடிய பரிசோதனையின் மூலமாகவோ, நிரூபணத்தின் மூலமாகவோ, ஒரு ஆய்வு அறிக்கையின் மூலமாகவோ, அறிவியல் ரீதியாகவோ கடவுள் என்ற ஒன்று இல்லை; இதற்கு என்ன சொல்கிறாய்,தம்பி?
மாணவன்: நான் சொல்ல ஒன்றுமில்லை; நான் கடவுளை நம்புகிறேன், அவ்வளவு தான்.
பேராசிரியர்: ஆம்,நம்பிக்கை என்பதே அறிவியலின் பெரிய பிரச்சினை.
மாணவன்: ஐயா,உஷ்ணம் என்பது இருக்கிறதல்லவா?
பேராசிரியர்:ஆம்.
மாணவன்: குளுமை என்பது?
பேராசிரியர்:ஆம்.
மாணவன்: இல்லை, ஐயா;அப்படி எதுவுமில்லை
(அந்த வகுப்பறையானது மாறுபட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக அமைதியாகிறது...)
மாணவன்: ஐயா, உஷ்ணத்தையோ, அதிக உஷ்ணத்தையோ, இன்னும் அதிக உஷ்ணத்தையோ, மிக அதிக உஷ்ணத்தையோ, பஸ்மமாக்கும் வெப்பத்தையோ, குறைந்த வெப்பத்தையோ அல்லது இது எதுவுமில்லாத நிலையையும் உருவாக்கமுடியும்;
ஆனால் குளுமை என்ற எதுவும் நம்மிடமில்லை; 0*டிகிரிக்கும் கீழே 458*டிகிரி வரை மட்டுமே நாம் போகமுடியும்; அதற்கும் கீழே போகமுடியாது; எனவே குளுமை என்று எதுவுமில்லை;குளுமை,ஐஸ் என்பதெல்லாம் வெப்பமில்லாத தன்மையைக் குறிக்கும் சொல் அவ்வளவே; வெப்பம் என்பது சக்தி; குளுமை என்பது அதற்கு எதிரானது அல்ல;அது வெப்பத்தின் புலப்படாத நிலை அவ்வளவே.
(அந்த வகுப்பறையே நிசப்தமாகிறது...)
மாணவன்: இருளைப் பற்றி என்ன,ஐயா;இருள் என்ற எதாவது இருக்கிறதா என்ன?
பேராசிரியர்: இல்லையா,பின்னே இரவு என்பதே இருள் தானே?
மாணவன்: மீண்டும் நீங்கள் தவறுகிறீர்கள், ஐயா; இருள் என்பதும் ஏதோ ஒன்றின் காணப்படாத நிலையே; உங்களால் குறைந்த வெளிச்சத்தையோ,சாதாரண வெளிச்சத்தையோ, பிரகாசமான ஒளியையோ, மின்னல் போன்ற வெளிச்சத்தையோ பார்க்கமுடியும் அல்லது தொடர் வெளிச்சமில்லாத நிலையில் எதையும் பார்க்கமுடியாத நிலையையும் அடையலாம்; அதுவே இருள் எனப்படுகிறது,அல்லவா? ஆனால் அது இருள் அல்ல; அப்படியிருக்குமானால் அதன் அடுத்தடுத்த நிலையை எப்படி உருவாக்கமுடியும்?
பேராசிரியர்: சரி, இதன்மூலம் என்ன சொல்லவருகிறாய்,தம்பி?
மாணவன்: உங்கள் தத்துவ மேடையானது தகர்ந்தது என்று சொல்கிறேன்!
பேராசிரியர்: என்ன..தகர்ந்ததா..எப்படி?
மாணவன்: ஐயா நீங்கள் இரண்டு எதிரெதிர் தன்மைகளுக்குள்ளிருந்து வாதிடுகிறீர்கள்;பிறப்பும் மரணமும் கடவுள் நல்லவரா,கெட்டவரா என்ற அள்விலேயே சிந்திக்கிறீர்கள்;உங்களைப் பொருத்தவரையில் கடவுள் ஒரு எல்லைக்குட்பட்டவராகவும் கணிக்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும்; இதன்படி அறிவியலும்கூட சிலவற்றை விவரிக்க இயலாது;அறிவியல் பயன்படுத்தும் மின்சாரமும் காந்த சக்தியும் விவரிக்கவோ பார்க்கவோ புரிந்துக்கொள்ளவோ முடியாதவை;
இதேபோன்று மரணத்தை ஜீவித்தலின் எதிர்ப்பொருளாகக் கொள்வதும் அறியாமையாகும்;ஏனெனில் மரணம் ஜீவனின் எதிர் அல்ல;அது ஜீவன் இல்லாமை அவ்வளவே.
ஐயா, நீங்கள் மாணவர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்று கற்றுக்கொடுக்கிறீர்களல்லவா?
பேராசிரியர்: ஆம், இயற்கையின் பரிணாமக் கொள்கையின்படி அது சரியே.
மாணவன்: நன்றி ஐயா,நீங்கள் எப்போதாவது பரிணாம வளர்ச்சி என்பதை கண்களால் பார்த்ததுண்டா?
(பேராசிரியர் மென்மையான புன்னகையுடன் வாதம் செல்லும் போக்கை உணர்ந்தவராக மெதுவாக "இல்லை" என்பதாக தலையாட்டுகிறார்..)
மாணவன்: இன்னும் நிகழ்ந்துக் கொண்டேயிருந்தும் இதுவரை எந்த ஒரு அமைப்பினாலும் அவதானிக்கப்படாததும் நிரூபிக்கப்படாததுமான பரிணாமக் கொள்கையை உங்கள் கருத்தாகப் போதிக்கிறீர்களே நீங்கள் விஞ்ஞானியா, மதபோதகரா?
(வகுப்பு ஆர்ப்பரிக்கிறது...)
மாணவன்: மாணவர்களே, உங்களில் யாராவது நமது பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?
(வகுப்பு சிரிப்பலையில் மூழ்கியது...)
மாணவன்: மாணவர்களே, உங்களில் யாராவது நமது பேராசிரியரின் மூளையின் சத்தத்தைக் கேட்டிருக்கிறீர்களா, தொட்டு உணர்ந்ததுண்டா, நுகர்ந்ததுண்டா? உங்களில் யாரும் இதற்கு முன்வரப்போவதில்லை; இதனால் என்ன தெரிகிறது, அறிவியல் விதியானது கூறும் வழிகாட்டுதல்களின்படி ஆய்வின் மூலமோ ஒரு அறிக்கையின் மூலமோ நிகழ்த்திக் காட்டப்பட வேண்டிய சோதனை முறைமைகளின் மூலமோ உங்களுக்கு மூளை இருப்பதை நீருபிக்கமுடியவில்லை; இந்த நிலையில் உங்கள் நான் பணிவுடன் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் நடத்தும் பாடத்தை நாங்கள் எப்படி நம்ப முடியும்?
(வகுப்பில் அமைதி...பேராசிரியரோ வாயடைத்தவராக அந்த மாணவனை பிரமிப்புடன் பார்த்தவராக...)
பேராசிரியர்: தம்பி நீ அதையெல்லாம் ஒரு நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மாணவன்: அதைத்தான் ஐயா நானும் சொல்லுகிறேன்;கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவுக்கு அடிப்படையானது, மாறாததும் உறுதியானதுமான நம்பிக்கையாகும்; அதுவே அனைத்தையும் நகரவும் இயங்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது;
(அந்த மாணவன் யார் தெரியுமா? விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)