தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜெபித்து வருகிறோம்;இது மாணவர்களின் நெருக்கமான நேரத்தில் அவர்களுடைய மனஅழுத்தத்தினைக் குறைக்க நம்மால் இயன்ற ஒரு சிறு உதவிதான்; இதையும் கூட சில நண்பர்கள் விமர்சித்து, விவாதமாக்கினார்கள்;ஆனாலும் நம்முடைய நோக்கங்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்;அவர் நமக்குக் கற்றுக்கொடுத்த வழிமுறையின்படியே இதனைச் செய்துவருகிறோம்; ஜெபிக்கக் கற்றுக்கொடுத்ததுடன் ஜெப வாழ்க்கைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறித்துவே.
எனவே தளநண்பர்கள் இந்த பகுதியில் தங்களுக்கு அன்பான தங்கள் வட்டாரத்திலுள்ள மாணவக் கண்மணிகளின் விவரங்களைத் தருவீர்களானால் அதாவது பெயர் மற்றும் தேர்வு எண்ணைக் கொடுத்தால் அதை வைத்து நாம் தினமும் ஜெபிப்போம்; இதன்மூலம் உண்டாகும் அனைத்து துதிகனம் மகிமையும் இயேசு ராஜாவுக்கே உண்டாவதாக.
தேர்வு நேரத்தில் ஏன் ஜெபிக்கவேண்டும்?
"...பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."(சகரியா.4:6)
-மேற்கண்ட வேத வாக்கியத்தின்படி தேர்வுக்காக ஆயத்தமாக இருக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவி தன் சுயபெலத்தையல்ல, தேவ பெலத்தையும் தேவச் செயலையுமே சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கும்; இதனை நாம் அல்ல, சம்பந்தப்பட்ட மாணவமணிகளே உணர்ந்துள்ளனர்;எனவே தான் கடினமான இந்த நேரத்தில் அவர்களுடைய மனமானது தெய்வ ஸ்தானங்களை நோக்கிச் செல்லுகிறது; பல்வேறு பொருத்தனைகளைச் செய்கிறார்கள்;வெற்றி பெற்றபிறகு அவற்றை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ அது வேறு விஷயம்.
ஆனாலும் நாம் அவர்களுடைய மென்மையான இதயத்தில் தோன்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக ஜெபிக்கிறோம் என்பதை அவர்களுடைய உள்ளத்தில் ஒருவித நம்பிக்கையாகத் தோற்றுவிக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட மாணவனுடனான எனது அண்மைக் கால அனுபவம் என்னவென்றால், அவனுடைய பெற்றோர் மிகுந்த தேவ பக்தியுள்ளவர்கள்; மிஷினரி ஊழியங்களைத் தாங்குவதுடன் ஊழியர்களை அதிகமாக கனம் பண்ணுபவர்கள்;தாங்கள் குடியிருக்கும் வீட்டிலும் அவ்வப்போது ஜெபக் கூட்டங்களை நடத்துபவர்கள்;ஆனாலும் +2 படிக்கும் தங்கள் மகனை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை;அவன் வீட்டுக்கு வரும் ஊழியர்களும் அவனது சொந்தபந்தங்களும் செய்து வந்த அதிகப்படியான புத்திமதிகளைக் கேட்டு சலிப்புற்றவனாகக் காணப்பட்டான்;இதன் காரணமாக ஜெபக் கூட்டங்களையும் ஊழியர்களின் ஜெப நேரத்தையும் ஆலயத்துக்குச் செல்லுவதையும் கூட தவிர்த்து வந்தான்;நண்பர்களுடன் சினிமா கேளிக்கை என வருடம் முழுவதும் சுற்றினான்; அவனது பெற்றோர் இடைவிடாமல் அவனைக் குறித்து என்னிடம் புகார் செய்வார்கள்;நானோ அவர்களுடைய புகார் தொடர்பான எதையும் அவனிடம் விசாரித்ததே இல்லை;ஆனால் அவனுடைய நிலைக்கே நான் இறங்கிச் சென்று பொதுவான காரியங்களான சினிமா, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு அவனோடு தொடர்பு கொண்டேன்; கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிண்டல், கொஞ்சம் தத்துவம் என்று அவன் மனதில் இடம்பிடித்தேன்;எப்போதாவது ஒருமுறை போகிறபோக்கில் ஆண்டவரைக் குறித்த மேன்மையான ஒரு காரியத்தைப் பகிர்ந்து கொள்வேன்.
இப்படியாக இதமாக உருவான நட்பினால் அவன் மனதில் என்னைக் குறித்த நம்பிக்கை உண்டானது;அவனுடைய போக்குகள் மாறியது;அவனிடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் சற்று நிம்மதியடைந்து அவனிடம் புத்தி சொல்லுவதைக் குறைத்துக்கொண்டு என்னை அழைத்து என்னைப் பேசவிட்டு அவர்கள் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுவார்கள்; ஏனெனில் அவன் முன்பாக ,என்னிடம் அவனைக் குறித்து புகார் சொல்லுவது அவனுடைய சுயமரியாதையை பாதிக்கும் என்று சொல்லியிருந்தேன்.
தற்போது அந்த தம்பி என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் (Best friend) ஆகிவிட்டான்; தன்னுடைய பயங்களை அவன் என்னுடன் பகிர்ந்து கொள்ளுகிறான்;நான் சொன்னேன்,"நீ இந்த நேரத்தில் எதுவும் படிக்கவேண்டாம்;அதனால் ஒரு பயனும் இராது; நன்றாகத் தூங்கு, ரிலாக்ஸாக இரு,மற்றதை ஆண்டவர் பார்த்துக்கொள்ளுவார்' என்று நான் சொன்னது அவனுக்கு வித்தியாசமாக இருக்கவும்," இதை எங்க அம்மாகிட்ட சொல்லுங்க" என்றான்;அந்த அளவுக்கு அவனுடைய மனம் தேர்வு பயத்தால் அழுத்தப்பட்டிருக்கிறது.
இறுதியாக நான் அவனிடம் சொன்னேன்,"தம்பி,நீ தேர்வுக்காகப் படிப்பதைக் குறித்தும் நன்றாக எழுதுவதைக் குறித்தும் மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறாய்;ஆனால் அதோடு எல்லாம் முடிகிறதில்லை;நீ தேர்வுக்காக ஆயத்தமாவதும் தேர்வை எழுதுவதும் விதைப்பதைப் போலவும் நீர்ப்பாய்ச்சுவதைப் போலவும் இருக்கிறது;ஆனால் அதனை ஆசீர்வதித்து விளையச் செய்கிறவர் தேவனே;அவரே உனக்கு ஞாபக சக்தியையும் ஆரோக்கியமான மனநிலையையும் பராமரிக்கிறவர்;அவரே இதை முக்கியமாக கவனித்துக்கொள், இது அவசியமல்ல என்றும் சொல்லித் தருகிறவர்;எல்லாவற்றுக்கும் மேலாக உன் விடைத்தாளைத் திருத்துவோருக்கு நல்ல மனநிலையைக் கட்டளையிட்டு உன் பிரயாசத்துக்குரிய பலனை விளையச் செய்கிறவர் தேவனே;எனவே நீ சுமக்கவேண்டாம் அமர்ந்திரு;கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார்.."என்பதாக;அதன் விளைவாக அவன் முகத்தில் நம்பிக்கையும் பிரகாசமும் தோன்றியதைக் காணமுடிந்தது.
மேற்கண்ட எனது கருத்து அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாகும்;இந்த நேரத்தில் மாணவர்களைப் பெற்றோர் அணுக வேண்டிய முறைகளைக் குறித்தும் மாணவர்கள் செய்யவேண்டிய சில குட்டி ஜெபங்களையும் கடந்த வருடமே எழுதியிருக்கிறேன்;அதனை மாணவர்கள் கவனத்துக்குக்கொண்டுச் செல்லுமாறும் தளநண்பர்களைப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// குறுந்தகடுகளில் "பரீட்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஜெபம்" போன்றவற்றை போட்டு சம்பாதித்தார்களே,மாநில அளவில் இடம் பிடித்த மாணவர் பட்டியலை பார்த்தீர்களா? இனி இவர்களின் ஸ்தாபனங்களில் பணம் கொடுத்து சாட்சிகள் இறக்குமதி செய்வார்கள்;இதை பார்த்தும் இன்னும் இந்த வேஷதாரிகளை செய்யும் வியாபாரத்தை நம்ப சொல்லுகிறீர்களா? //
நண்பரே, மாணவர்களில் மார்க்க வித்தியாசம் பார்த்தல் வேண்டாமே, இன்றைக்கு அநேக மாணவர்களின் மனதில் இயேசுவானவர் நிறைந்திருக்கிறார்;
இன்னும் சொல்லப்போனால் கிறித்தவ மாணவனைவிட மாற்று மார்க்கத்தைச் சார்ந்த மாணவன் அதிகமாக ஆண்டவருக்கு பயப்படுகிறான்; இது எனது தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கருத்தாகும்;
எனவே 'உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்,அவர் உண்டென்ற விசுவாசத்துடன் வேண்டுதல் செய்யும் யாவருக்கும் பலனளிப்பேன்' என்று வாக்களித்த தேவன் அவர்களை வெற்றிபெறச் செய்திருப்பதில் வியப்பில்லை;
மேலும் பரீட்சைக்கான ஜெப சிடியின் நோக்கம் மற்றும் இலக்கு கிறித்தவர்களல்ல;எனவே தான் அவர்கள் இந்துக்களின் வழக்குப்படி 'ஆண்டவன்' என்று ஒருமையிலும் 'இறைவன் இயேசு' என்றும் தரம் தாழ்த்தி குறிப்பிடுகிறார்கள்;
பரீட்சைக்கான ஜெப சிடியின் ஜெபிக்க அறியாத மாற்று மார்க்கத்தவர் நம்முடைய ஜெப முறையினை அறியும் வாய்ப்பும் ஏற்படுகிறது;ஏன் கிறித்தவ குடும்பங்களிலும் கூட "தேனும் திணை மாவும் நானுனக்குத் தருவேன்,நீ எனக்கு..." என்ற 'டைப்'பில் தான் ஜெபம் நடக்கிறது;
நீங்கள் குறிப்பிட்டதுபோல வெற்றிபெற்ற மாணவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் சொந்தங்கொண்டாட முடியாது;இந்த கருத்து வெற்றிபெற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்;
உண்மையிலேயே வெற்றிபெற்ற குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி ஏதாவதொரு வகையில் இந்த ஊழியர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களுடைய பிரார்த்தனையினால் மனோதைரியமும் மனசாந்தியும் பெற்றிருந்து அதினால் வெற்றிபெற்றிருந்தால் மட்டுமே தாமாக முன்வந்து சாட்சி சொல்லுவார்கள்,அது தவறல்ல;
மற்றபடி 'செட்டப்' பண்ணுகிறார்கள்,என்று நாமே சொன்னால் பிறகு நமக்கும் இந்துவெறியனுக்கும் வித்தியாசமில்லாமற் போகும்..!
// மனசாட்சியை திறந்து சொல்லுங்கள்,இது சரிதானா என்று? //
1. குமாரி,காமராஜபுரம்- Kumari, Kamarajapuram பொருளாதாரம் (Economics)பாடத்தில் பெலவீனமாக இருப்பதால் சற்று அச்சத்துடன் இருக்கிறாள்;ஆனாலும் நம்பிக்கையூட்டி ஜெபித்துள்ளேன்.
தேர்வு எண்-Exam No: 713629
2. C.கௌதமன் -C.Gauthaman ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பினும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறான்;அதிக மார்க் எடுத்துவிட்டால் மேற்படிப்பிற்கு ஆகும் செலவை பெற்றோர் எப்படி சமாளிப்பார்களோ என கவலைக் கொள்பவன்;
தேர்வு எண்-Exam No: 740868
3. S. டேனியல் ஜெயக்குமார்-S.Daniel Jayakumar
தேர்வு எண்-Exam No: 712969
4. கிஃப்ட்ஸன் -Giftson (CBSE)
இன்னும் தேர்வு எண் தரப்படவில்லை (கீழ்க்கண்ட மாணவியர் அரசாங்க பள்ளியில் படிப்போர்;பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு ஆலயத்தில் வழக்கமாக ஜெபித்துச் செல்வோர்;இவர்களை நான் சந்திக்க நேர்ந்தபோது தமது விண்ணப்பத்தை என்னிடம் கொடுத்தனர்.)
5. P.ப்ரியா -P.Priya தேர்வு எண்-Exam No: 713950
6. M.மீனா -M.Meena தேர்வு எண்-Exam No: 713954 7. P.தமிழ்செல்வி -P.Thamizhselvi தேர்வு எண்-Exam No: 713949 8. திவ்யபாரதி -Divya bharathi தேர்வு எண்-Exam No: 713953 9. ஜாய்ஸ் -Joyce தேர்வு எண்-Exam No: 713957 10. மோனிகா -Monica தேர்வு எண்-Exam No: 713952 11. தாரணி -Dharani தேர்வு எண்-Exam No: 713944 12. தீபா -Deepa தேர்வு எண்-Exam No: 713956 13. சிஸிலியா -Ciciliya 14. இளவரசி -Elavarasi 15. ஆனந்தகுமார் -Ananthakumar
-- Edited by chillsam on Thursday 25th of February 2010 07:33:42 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த கல்வியாண்டில் +2 மற்றும் 10 வகுப்பு எழுதும் மாணவர்களுக்காக ஆங்காங்கு ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகிறது; ஜெப ஊழியத்தில் பங்கேற்றுள்ள என்னிடமும் சில மாணவ கண்மணிகள் தங்கள் விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர்;
அவர்களுடைய பெயர்களை இங்கே பதிக்கிறேன்; இன்னும் தங்கள் வட்டாரத்திலுள்ள மாணவ,மாணவியரின் பெயர்களையும் பதிக்கலாம்; தனி விவரங்கள் வேண்டாம்; பெயரும் தேர்வு எண்ணும் மட்டும் போதுமானது; தேர்வு எண்ணும் கூட விரும்பினால் மட்டும் தெரிவிக்கலாம்; பள்ளி மற்றும் பெற்றோர் விவரம் தேவையில்லை;
நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டு ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று முழுமனதுடன் நம்புகிறேன்; வேதம் சொல்லுகிறது, "...நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்."(1.கொரிந்தியர்.3:7)
அதைப் போலவே கர்த்தர் நம்முடைய பிள்ளைகளின் வாழ்விலே நிச்சயமாக அற்புதம் செய்வார்;
மாணவர்களுக்காக நான் விசேஷமாகக் கொடுத்த சில அறிவுரைகளை இங்கே பதிக்கிறேன்...
1. நீ இதுவரை படித்துள்ள பாடங்களை வகைப்படுத்திக் கொள்; அதில் நீ நன்றாக அறிந்தது,ஓரளவுக்கு அறிந்தது,ஒன்றுமே தெரியாதது என்பதாக.
2. நீ இதுவரை படிக்காத பாடங்கள் இருக்குமானால் அதைக் குறித்து கவலை கொள்ளவேண்டாம்; நீ இதுவரை படித்துள்ள பாடங்களே நீ வெற்றி பெற போதுமானது என்று முழுமனதாக நம்பு.
3. நீ படிக்காத பாடங்களைக் குறித்து கவலை கொள்வாயானால் உன் செயல்திறன் குறைந்துபோகும்; நீ ஆயத்தம் செய்துள்ளதையும் சரிவர செய்யமுடியாமற் போகும்.
4. நீ நன்கு தெரிந்ததாக நினைக்கும் பாடங்களைச் சாதாரணமாக நினைக்காமல் அதை நன்றாக ஆயத்தம் செய்துக்கொள். 5. ஒரு உண்மை தெரியுமா, உன்னிடம் கேள்வி கேட்கும் ஆசிரியர்களைவிட உனக்கு தான் ஞாபக சக்தி அதிகம்; எனவே கடவுள் உனக்குக் கொடுத்துள்ள ஞாபக சக்திக்காக அவருக்கு நன்றி சொல்.
6. இந்த நேரத்தில் நீ உட்கொள்ளும் உணவு வகைகள் மிகவும் முக்கியம்; மாவு (அரிசி,ரொட்டி,கேக்,பஃப்ஸ்) வகைகளையும் பொரித்த (மிக்ஸர்,ஸ்வீட் போன்றவை) வகைகளையும் முற்றிலும் தவிர்த்து பால் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்; பட்டினியாக இருக்கவே கூடாது; அது உன் ஞாபக சக்தியை மிகவும் பாதிக்கும்.
7. உன் உடல் நலம் இந்த நேரத்தில் பேணப்பட வேண்டுமாதலால் வெளியே விற்கும் எதையும் வாங்கி உட்கொள்ளவேண்டாம் (ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், தண்ணீர், துரித உணவு).
8. நல்ல குளியல், சுத்தமான ஆடை, நான்கு மணிநேரமாவது அவசியமான தூக்கம் மற்றும் இறைவணக்கம் ஆகியவை நீ படித்த பாடங்களை கவனம் சிதறாமல் ஒழுங்கு செய்து கொடுக்கும்.
9. இந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் உன்னை ஏதேனும் கோபப்படுத்தினால் படிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களோடு சமாதானம் செய்து, அவர்களை சாந்தப்படுத்தி விட்டு பிறகு தொடர்ந்து படி; அவர்களுடைய ஆசீர்வாதம் நீ வெற்றி பெற உதவும்;
உன் வெற்றிக்காக நான் இங்கே கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்; உனது தேர்வுகள் அனைத்தும் முடியும்வரை நான் சகஜமான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பமாட்டேன்;
நீ வெற்றி பெறத் தடையாக இருக்கும் பாரம்பரியக் கட்டுகள்,பரம்பரை சாபங்கள், முற்பிதாக்களின் அக்கிரமங்கள், நீ அறிந்தும் அறியாமலும் செய்துவிட்ட தவறுகள் யாவற்றுக்காகவும் நான் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுதல் செய்கிறேன்; அவர் உனக்காக சிந்திய பாவமில்லாத இரத்தத்தினால் அனைத்து தோஷங்களும் பரிகரிக்கப்படும்; எனவே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்பதை ஒரு மந்திரம் போலச் சொல்லி முன்னேறு;கடவுள் அற்புதம் செய்வார்..! பெற்றோருக்கு ஒரு வார்த்தை... இது உங்களுக்கும் உங்கள் கண்மணிக்கும் சோதனையான கட்டமாகும்; இந்த நேரத்தில் இருதரப்பும் பதட்டமாகவே இருக்கும்; ஆனால் நீங்கள் தான் சற்று பொறுமையாக இருந்து உங்கள் பிள்ளையை ஆதாயப்படுத்த வேண்டும்; உங்கள் கண்மணியைக் கோபப்படுத்த வேண்டாம்; விரட்ட வேண்டாம்; குற்றப்படுத்த வேண்டாம்; நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியப்படுத்துங்கள்; உயர்த்தி பேசுங்கள்; நீங்கள் கடவுளை நம்புவதால் அவர் நிச்சயமாக நன்மை செய்வார்; அற்புதம் என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே; அற்புதம் என்பதை 'மேஜிக்' போல யாரும் திட்டமிட்டு செய்யமுடியாது;எனவே மனந்தளராமல் சிறந்த வாய்ப்புக்காகப் போராடுங்கள்,உங்கள் கண்மணியுடன் இணைந்து..!
தேர்வு முதல் வெற்றி வரை பல கட்டங்கள் உண்டு; கேள்விதாள் அமைப்பு, விடைத்தாள் மதிப்பீட்டுக்காக பயணித்தல், அதனை திருத்துவோர் மனநிலை இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அற்புதத்துக்கான வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன; எனவே தேர்வுக்கு ஆயத்தமாகி அதனை மனோ தைரியத்துடன் எழுதி முடித்தபிறகும் ஆச்சரியமான பல கட்டங்கள் உண்டு என்பதை மாணவக் கண்மணிகள் மறந்துபோகவேண்டாம்;
வெற்றியுடன் மீண்டும் சந்திப்போம்.. வாழ்த்துக்கள்..!
With Love and Prayers, "chillsam"
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)