Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றிய கள்ள உபதேசம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றிய கள்ள உபதேசம்..!
Permalink  
 


சரியாக ஒரு வருட முன்பு எழுதப்பட்டுள்ள இந்த கருத்துக்களே இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமான (மேசியாவின்) எதிரிகளின் தவறான கொள்கைகளுக்குக் காரணமாக இருக்கிறது;இதன்படி ஆத்துமா என்பது ஒன்றுமில்லை;ஆவி என்பது வெறும் காற்று தானே;சரீரம் எங்கோ ஒளித்து வைக்கப்பட்டுள்ளது;இதுவே இயேசுவுக்கும் பொருந்துமா என்பதை வேதாகமத்தின் விரோதிகள் தான் சொல்லவேண்டும்.

அதாவது (மேசியாவின்) எதிரிகளின் இந்த கட்டுரையின் அடிப்படையிலேயே இயேசுகிறித்துவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமான கொள்கைகளையும் வகுத்துள்ளார்கள் என்கிறேன்.எனவே அவர்கள் விளக்கமாகவும் வெளிப்படையாகவும் சொல்லாதவற்றை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து அவர்களுடைய கொள்கைகளின் விபரீதங்களைக் குறித்து புரிந்துகொண்டு அவர்களைக் குறித்து அனைத்து கிறித்தவர்களையும் எச்சரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்;நம்முடைய நோக்கம் அது மாத்திரமே.

பின்குறிப்பு:

இந்த திரியில் நான் எழுதியுள்ளவற்றை வாசிக்கையில் அப்போதெல்லாம் எவ்வளவு பொறுமையாக எழுதியிருக்கிறேன் என்று பெருமூச்சு விடவேண்டியதானது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"யெகோவா சாட்சிகள்" என்றும் "வேதாகம மாணவர்" என்றும் சொல்லிக்கொண்டு வேதத்தைப் புரட்டி மந்தைகளைச் சிதறடித்துவிட்டுத் தங்களைச் "சிறுமந்தை" எனக் கூறிக் கொள்ளும் ஓநாய் கூட்டத்தாரின் சூழ்ச்சிக்கு மற்றொரு உதாரணத்தை இங்கே தருகிறேன்;இதைக் குறித்து வாசக நண்பர்களின் கருத்தை அன்புடன் வரவேற்கிறேன்.

யெகோவா சாட்சிகள் என்பதோ வேதாகம மாணவர் என்பதோ சிறுமந்தை என்பதோ கழுகுக் கூட்டம் என்பதோ தவறல்ல;ஆனால் அப்படியாகத் தங்களைச் சொல்லிக்கொண்டு கள்ள உபதேசத்தைப் பரப்புவதையும் மற்ற ஊழியர்களை தூஷிப்பதையும் முழுநேர வேலையாகச் செய்வதையே நாம் கண்டிக்கிறோம்;அவரவர் நம்பிக்கையைச் சொல்ல எல்லோருக்கும் உரிமையுண்டு;ஆனால் நம்முடைய வேதத்திலிருந்தே மாறுபாடானவற்றை எடுத்து தவறான விளக்கங்களை மொழிபெயர்ப்புக் கோளாறு என்ற போர்வையில் திணிப்பதையே நாம் கண்டிக்கிறோம்;நம்மைப் பொருத்தவரையில் இன்னும் அறியாதவற்றை அறியும் வாய்ப்புக்காகச் சரியானதைப் பெறும் ஆவலுடன் காத்திருக்கிறோம்;ஆனாலும் நாம் சிறுவயது போதிக்கப்பட்டு அறிந்து நிச்சயித்துக் கொண்டவைகளில் எந்த ஐயமும் கொள்ளாமல் பின்பற்றுகிறோம்;அவை ஒருபோதும் மாற்றப்படமுடியாதது;அதைக் குறித்து நமது விசுவாசம் என்ற பகுதியில் எழுதுவோம்;

தொடர்ந்து ஒரு வேதப் பகுதியையும் அதை அவர்கள் கள்ள உபதேசமாக மாற்றிய தந்திரத்தையும் முன்வைக்கிறேன்;

"அப்பொழுது அவர் என்னைநோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்.

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்."

(எசேக்கியேல்.37:11‍‍ 14)

இது ஓரளவுக்கு பொருள் அடங்கும் நம்மனைவருக்கும் தெரிந்த குறிப்பிட்ட வேதப் பகுதி;இதன் மையக் கருத்து இஸ்ரவேலர் மீண்டும் தங்கள் தேசத்தைக் கட்டிக்கொள்வார்கள் என்பதாகும்;அது இன்று நடந்துவிட்ட ஒரு வரலாற்று அதிசயமாகும்;

ஆனால் "மனிதன், ஆத்துமாவா? மனிதனுக்குள் ஆத்துமாவா?" என்ற கேள்வியுடன் துவங்கிய ஒரு கட்டுரையில் மனிதனுக்கு ஆத்துமா என்ற ஒன்று இருப்பதையே மறுக்கும் உள்நோக்கத்துடனும் ஆவி என்பது வெறும் காற்றுதான் அதற்கும் மிருகத்தின் ஆவிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றும் நிறுவுவதற்கு இந்த வேதப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர்;

"உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?  பிரச 3:19 - 21
-எனும் வசனத்துக்கும் நேரடியான விளக்கம் கூறாமலோ அல்லது அது
தனிப்பட்ட சிலருடைய  வேதம் ஏற்றுக் கொள்ளாத கொள்கை என்று கடந்துபோகிறார்கள்.

ஆனாலும் ஒரு விசேஷ ஆவியும் இருக்கிறதாம்; அது கண்களுக்குப் புலப்படாத ஆவி ஜீவிகளைப் போல வாழ உதவும் என்றும் கூறவருகிறார்கள்; அது தான் சிறுமந்தை போலும்..!


மேலும் சர்ச்சைக்குரியதும் விவாதத்துக்குரியதுமான அவர்களது சில கருத்துக்கள் அவர்கள் தளத்திலிருந்து...

// புதிய ஏற்பாட்டில் திருச்சபையாருக்கு மட்டுமே சொல்லப்பட்ட விஷயங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனைத்து மனுக்குலத்துக்கும் உரியது என்று எடுத்துக்கொள்கிறார்கள்.//

அதாவது சுவிசேஷமோ வேதமோ அனைவருக்குமல்லவாம்..!

// இந்த சுவிசேஷ யுகத்தில் திருச்சபையாருக்கு மாத்திரமே விசேஷ அழைப்பு கொடுக்கப்படுகிறது; இந்த அழைப்பு சகல மனுக்குலத்திற்கும் என்று தவறாக சிலர் வாதிடுகின்றனர். //

அந்த திருச்சபையாரும் உலகத்திலிருந்து வந்தவர்கள்தானே..?

//"மரணமும்", "ஜீவனும்" சொல்லர்த்தமாக கூறப்படாமல் ஜீவிக்கும் நிலைமையையும், மரித்த நிலைமையையும் தொடர்புபடுத்திக் காண்பிக்க கூறப்பட்டதாகும்.//

//"மரணம்", "ஜீவன்" என்ற வார்த்தைகளின் பயன்பாடு உலக்த்தாருக்கு உரியதல்ல, ஏனெனில் உலகத்திற்கு மனித சுபாவத்தைத் தவிர வேறு எந்த சுபாவமும் கிடையாது. எந்தப் பொருளிலும் உலகம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படப் போவதில்லை.//

இது எப்படி..?

// தெய்வீக சுபாவத்தின் சிறு பகுதி அல்லது பொறி  ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ எந்த ஒரு சிறு குறிப்பும் கிடையாது.

இப்படிப்பட்ட தெய்வீக சுபாவம் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற தவறான தத்துவத்தின் காரணமாகவே, அப்படிப்பட்ட நித்திய எரிநரகக் கொள்கையும் தேவைப்பட்டது..//

// மனிதன் தெய்வ சுபாவத்தில் ஒரு பகுதியைப் பெற்றிருக்கிறான், ஆதலால் அவன் விலங்குகளைவிட வேறுபட்டவன் என்பதெல்லாம் தப்பறையான கொள்கையும் மனிதனுடைய சொந்த கண்டுபிடிப்புமாகும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதக் குழந்தையையும், தேவன் நேரடியாகப் படைத்தார் என்பது தவறான கொள்கையாகும். //

// இவர்கள் பூரணமான ஆதாமின் விழுகைக்குப் பின்னால் பல காலமும், பல பாவங்களின் தொகுப்பினாலும் விபத்துகள் போல வந்து நேர்ந்த விபரீதப்பிறப்புகள். பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமை மட்டுமே தேவன் தனது பொறுப்பில் படைத்தார். தேவனே ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் பொறுப்பாளி என்பவர்கள், ஒவ்வொரு பிறவிக்கோளாருக்கும், அங்ககீனத்திற்கும், பைத்தியத்திற்கும் தேவனையே பொறுப்பாளியாக்குகிறார்கள். //

வேதத்தின் அடிப்படையான சிருஷ்டிப்பையும் மீட்பையும் குறித்த
ஆதாரங்களையே அசைத்துப் பார்க்கும் இவர்களோடு எப்படி சமரசம் செய்துகொள்ளமுடியும்?

"சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக."(1,தெசலோனிக்கேயர்.5:23)

இங்கே பவுல் மிகத் தெளிவாக மனிதனின் முக்கூறுகளை விளக்குகிறார்;இதற்கென்ன விளக்கம் தருவார்களோ?

தெய்வத் திருத்துவத்தையும் அத்துடன் இணைந்த மனிதனின் மூன்று தன்மைகளையும் புரியாதவர்கள் வேதத்தையே புரிந்துக்கொள்ளமுடியாது;அல்லது இதனை எதிர்ப்பவர்களுடன் நாம் எந்த வகையிலும் ஒத்துப்போகமுடியாது;

எப்படி நம்முடைய வேதத்தையல்ல,எபிரெயர்களின் ஆதிவேதமே திருத்தப்பட்டுவிட்டதாகக் கூறி இறுதி(போலி)வேதம் இறங்கியதோ அதைப் போலவே இவர்களும் எப்போதோ திருத்தப்பட்ட வேதத்தை அமைத்துவிட்டார்கள்;

எனவே நம்முடைய பிழையான வேதத்தைக் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களுடைய சரியான(?)வேதத்தைக் குறித்து மாத்திரம் பேசுதல் நல்லது;

ஆண்டவரை அறியாதவர்களிடம் போகச் சொன்னால் அதற்கும் விதண்டாவாதம் பேசி ஏற்கனவே சுவிசேஷம் அறிவிக்கப்பட்டவர்களே தங்கள் குறி என்றும் அதையே பவுலும் மற்றவரும் பணியாகப் பணித்தனர் என அப்பட்டமாகப் பொய் சொல்லுகிறார்கள்;

இவர்கள் சொல்லுவது பொய் என்று மறுக்க அந்த அப்போஸ்தலர்கள் நம்மிடையே இல்லாதது இவர்களுக்கு ரொம்ப வ்சதியாகிவிட்டது..!


(இன்னும் வரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard