நண்பரே உங்கள் அனுபவம் எப்படியோ,என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்;
இங்கே நாம் என்னத்தான் ஆண்டவருக்காகப் பணிபுரிகிறோம் எண்ணி மணிக்கணக்காக இரவும் பகலுமாக சிந்தித்து, தட்டி(எழுதி), வாதித்துப் போராடினாலும் உள்ளே வெறுமையை உணர்கிறேன்;
ஆண்டவருக்காக பணியாற்றுவதற்கும் ஆண்டவரோடு இருந்து பணியாற்றுவதற்குமான வித்தியாசத்தை நான் அதிகமாக உணர்கிறேன்;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நேற்று ஆண்டவரின் வேதத்தில் அனேக கருத்துக்களை ஆராய்ந்துவிட்டு, பல்வேறு உபதேசங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளையும் அதை என் ஆண்டவர் ஏன் எல்லோருக்கும் புரியவைப்பது இல்லை என்பதுபோன்ற பல முக்கியமான கருத்துக்களின் வசனத்தின் அடிப்படையை தியானித்துக்கொண்டே ஓரிடத்துக்கு சென்றேன்.
அங்கிருந்த எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் என்னை பார்த்து "நீ என்ன பெரிய மயிரோ" என்றொரு கேள்வியை சற்றும் எதிர்பாராதவிதமாக எழுப்பினார். அந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவரிடம், எப்படி இருக்கிறீர்கள்? என்று நலம்தான் விசாரித்தேன் ஆனால் அவர் இவ்வாறு வெறுப்பாக பேசிவிட்டு முகத்தை திருப்பிகொண்டார்.
பிறகுதான் எனக்கு தெரிந்தது நான் ஆண்டவரின் வசனங்கள் பற்றிய சிந்தனையில் அலைவதையும் அவர் வசனங்களில் உள்ள ஆழமான செய்திகளை அறியவும் சிலருக்கு விளக்கவும் முற்ப்படுவத்தையும் அறிந்த சாத்தான் என்னை பார்த்து "நீ என்ன பெரிய மயிரா" என்றொரு கேள்வியை எழுப்பினான் என்று! எனக்கு சிரிப்புத்தான் வந்ததேயன்றி அவர்மீது எந்த கோபமும் வரவில்லை.
அதன் அடிப்படையில் நான் சிந்தித்தபோது ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கும்போது "பிதாவே இவர்களுக்கு மன்னியும் இவர்கள் செய்வது என்னவேற்று அறியாதிருக்கிறார்களே" என்றொரு வார்த்தையை ஏன் சொல்லியிருப்பார் என்று அறியமுடிந்தது.
இயேசுவின் கண்களுக்கு அங்கிருந்த மனிதர்கள் மற்றும் அவர்களின் செயல் தெரியவில்லை மாறாக அவரை எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களுள் இருந்து போராடிகொண்டிருந்த பிசாசின் ஆவிகள்தான் இயேசுவின் கண்ணுக்கு தெரிந்தன. எனவேதான் இயேசு இவர்கள் ஒன்றுமரியாதவர்கள் இவர்களுக்கு மன்னியும் என்று பிதாவிடம் வேண்டினார்.
இன்றும் நாம் நம்மிடம் எதிர்பேசும் ஒருவரிடம் என்ன விதமான ஆவி கிரியை செய்கிறது என்பதை அறியமுடிந்தால் நிச்சயமாக அவர்கள்மேல் கோபம் கொள்ளாமல் அவர்களுக்காக ஆண்டவரிடம் மன்றாடும் மனப்பக்குவம் தானாக வரும்.
ஆண்டவரின் அன்பில் முழுமையாக நிறைந்திருந்தால் ஆவிகளை அடையாளம் காணுவது அரிதான காரியம் அல்ல!
"மாமிசத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு போராட்டம் இல்லை" என்கிறது வேத வசனம்!
எதிரியாகிய சாத்தானை தவிர, எந்த மனிதனும் நமக்கு எதிரியல்ல! எனவே எல்லோரையும் மன்னியுங்கள்!