Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்மில் ஒற்றுமை நீங்கில்..?


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
RE: நம்மில் ஒற்றுமை நீங்கில்..?
Permalink  
 


// எனவே இங்கு மாற்று மார்க்கம் (Hinduism or Islam) சம்பந்தமான கருத்துக்களையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டும் சுதந்தரமாகப் பதிவிடலாம் என்று நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்;அவற்றை வகைப்படுத்தும் (Categorize) வேலையைக் கூட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்; //

சகோதரர் சில்சாம் அவர்களின் இந்த விசால மனதைப் பாராட்டுகிறேன்;
என் வீட்டிலிருப்பது போன்ற அல்லது எனக்குப் பிடித்தமான இடத்திலிருப்பது போன்ற சுதந்தர உணர்வை இதனால் பெற்றுள்ளேன்;மிக்க நன்றி..!


__________________
sathyameva jeyathe..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" எனும் கவிமொழிக்கேற்ப பலர் கூடி இழுக்கவேண்டிய தேர் போன்ற கிறித்தவ அறிவு புகட்டுத் தளமாக்கும் நம்முடைய முயற்சிகள் நீர்த்துப் போகிறது;

ஏனெனில் ஒரு தளம் (forum) என்பதற்கும் "ப்ளாக்கருக்கும்"(blogger or group) வித்தியாசமுள்ளது; இதன்படி அவரவர் தனித்தனியாக எதையோ செய்யும் போது ப்ரயாசம் அதிகமாகவும் பலன் குறைவாகவும் வாய்ப்புண்டு;

மற்ற தளங்களில் "அன்பாக" அழைத்து கருத்து சுதந்தரத்துக்கு வாய்ப்பூட்டுப் போடும் போக்கினை கவனிக்கவேண்டும்;அந்த அளவுக்கு அவர்கள் ஒழுங்கானவர்களாம்;

நான் சற்றுப் பொதுவானதொரு கருத்தினை முன்வைக்க விரும்புகிறேன்; இத்தனை கட்டுப்பாட்டுடன் ஒரு தளத்தை நடத்துவதைவிட அல்லது அதில் பங்கேற்பதைவிட‌ பைபிளை மட்டும் படிப்பது சிறந்தது;

சுதந்தரமான கலந்துரையாடல் மூலமே புதியவர்கள் தெளிவடையமுடியும்; இவர்கள் தணிக்கை செய்து நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்துடன் யார் நேரமெடுத்து தங்கள் கருத்தினைப் பதிப்பார்கள்..?

// உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி சகோ.சில்சாம்; உங்களை தேவ ஊழியர் என்ற முறையில்  மதிக்கிறேன்; ஆனால் உங்கள் எழுத்துக்கள் என் மனதுக்கு உடன்பாடாக இல்லை; நீங்கள் ஆண்டவருக்காக  வைராக்கியவாதியாக இருக்கலாம்; ஆனால் நான் மிகவும்  "சாப்ட் டைப்" (soft type) சிறிது கடினமாக பேசினாலும்   என்னால் அதை ஜீரணிக்க முடியாது; அதுபோல் யாரையும் கடினமாக பேசவும் நான் விரும்பமாட்டேன்; எனவே தங்கள் போன்றோருடன் எனக்கு  ஒத்துபோவது கடினம்; நான் தேவனோடு   மட்டும்தான் கூட்டு; உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி //

இது நண்பர் சுந்தர் அவர்களுடைய நிலைப்பாடு; இதற்கு என்ன சொல்ல?
நண்பர் வெளியிட்ட இந்த கருத்தினால் நான் அவருடைய தளத்தில் பதிக்க முடியாமல் அவரும் தனிமைப்பட்டு நானும் தனிமைப்பட்டு வீணான பழிகளைச் சுமந்துக் கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது;
அவர் ஏதோ சில நண்பர்களுடைய அழுத்தத்தில் தான் பதிவுகளைத் தணிக்கை செய்தது போன்ற பழி சுமத்தப்படுகிறது;

இன்னும் உள்ளே வந்து பணியாற்ற வேண்டிய சில நண்பர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்; அதுவரை சற்று கடும் உழைப்பு தேவைப்படுகிறது;

யௌவன தளத்துக்கும் கூட ஒரு குறிப்பிட்ட கொள்கையை வகுத்து அதை ஏற்பவர்கள் மட்டுமே இங்கே பதியவும் அல்லது தங்கள் கிறித்தவ விசுவாசத்தினை அறிக்கையாகப் பெற்ற பின்னர் அனுமதிக்கவும் யோசித்தோம்;ஆனால் தற்போதய சூழலில் அத்தனைக் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றே இதனைச் சுதந்தரமான தளமாக விட்டிருக்கிறோம்;

எனவே இங்கு மாற்று மார்க்கம் (Hinduism or Islam) சம்பந்தமான கருத்துக்களையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டும் சுதந்தரமாகப் பதிவிடலாம் என்று நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்;அவற்றை வகைப்படுத்தும் (Categorize) வேலையைக் கூட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்;

மற்றவரை தரக் குறைவாகத் தனிப்பட்ட முறையில் தாக்குவதை மட்டும் தவிர்த்தால் போதும்;"சத்தியத் தேடல் "(Truth Seekers..?) என்ற பெயரில் பெரும்பான்மையினரான தனது சொந்த சகோதரர்கள் இழித்தும் பழித்தும் சிலர் பேசியபோது அதற்குரிய பதிலை அவர்கள் பாணியிலேயே கொடுக்கவேண்டியதானது;மற்றபடி நானும் சுந்தர் போன்று மென்மையானவந்தான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard