Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் கட்டுவதில் தகராறு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோவில் கட்டுவதில் தகராறு..!
Permalink  
 


தர்மபுரி அருகே போலீஸார் மீது தாக்குதல் எஸ்.ஐ., உள்ளிட்ட 6 பேர் காயம்: தடியடி

பாலக்கோடு: தர்மபுரி அருகே போலீஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில், எஸ்.ஐ., உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தர்மபுரிக்கும், பாலக்கோடுக்கும் இடையில் உள்ளது கம்மாளப்பட்டி. இந்த கிராமத்தின் சாலையோரம் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை வேறு இடம் மாற்ற கிராம மக்கள் முடிவு செய்து, புதிய கோவில் கட்ட நடவடிக்கை எடுத்தனர்.


அதற்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், கம்மாளப்பட்டியில் சில நாட்களாக பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. நேற்று மாலை இரு கோஷ்டிக்கு இடையில் மோதல் அபாயம் ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக அதிவிரைவுப்படை போலீஸார் குவிக்கப் பட்டனர்.சாலையோரங்களிலும், கோவில் அருகிலும் குவிந்திருந்த அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீஸார் வற்புறுத்தினர். ஆனால், யாரும் கலைந்து செல்லாமல் போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் மீது, பொதுமக்கள் பகுதியில் இருந்து கற்கள் வீசப்பட்டன. அதிவிரைவுப்படை வேன் உள்ளிட்ட போலீஸ் வாகனங்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.


போலீஸாரின் தாக்குதலை சமாளிக்க பொதுமக்களும் பதிலுக்கு கல் வீசி தாக்குதல் நடத்தியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. கல் வீச்சில் பாப்பாரப்பட்டி எஸ்.ஐ., சாம்ராஜ், அதிவிரைவுப்படை போலீஸார் மாது, கோபி, முருகன், செல்வி, மலர்கொடி ஆகியோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸார் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால், எஸ்.பி., சுதாகர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Courtesy: தினமலர்
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Dharmapuri#296417

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard