Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "யெகோவா சாட்சிகளின்" திருவிளையாடல்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: "யெகோவா சாட்சிகளின்" திருவிளையாடல்கள்..!
Permalink  
 


// உம்மை போல் துஷ்ட மிருகங்கள் சபைக்குள் குழப்பத்தை கொண்டு வந்ததை தான் நான் சாடுகிறேன்! அவர் ஏற்படுத்திய அமைப்பில் நீர் இருக்கிறீர் என்று சிறிது அளவிலும் நினைத்துக்கொள்ள வேண்டாம்!! அவர் பிதாவை ஆராதிக்க சொல்லி தந்தார், ஆனால் நீர் அதை மறுதலிக்கிறீர், ஏனென்றால் நீர் இயேசுவையே பிதா என்று தந்திரமாக மாற்றியவர்!! //

இங்கே துஷ்ட மிருகங்கள் எனப்படுவது யார் என்று வேத வெளிச்சத்திலேயே பார்த்துவிடுவோமா?

"நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?  " (1.கொரிந்தியர்.15:32) - இந்த வசனத்தில் பவுலடிகள், "எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று " சொல்லுவதை வைத்து அதனுடன் உமது விகாரமான கொள்கைகளை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரையை எழுதினேன்; ஆனால் நீர் வழக்கம் போல சுயமாக சிந்திக்கத் திராணியில்லாமல் அதையும் எனக்கெதிராகவே திருப்புகிறீர்; நீர் குறிப்பிடுவது வேத வசனமே ஆனாலும் அதனை மீண்டும் உமக்கெதிராகப் போடுவதற்கு யோசிக்கிறேன்; அந்த அளவுக்கு எங்கள் எழுத்துப் பணியில் நாகரீகத்தைக் கடைபிடிக்கிறோம்; ஆனால் இதெல்லாம் உமக்குத் தெரியவாய்ப்பில்லை; உம்மைப் பொறுத்தவரையிலும் எப்படியாவது இரஸ்ஸலுடைய சரக்குகளை இங்கே பரப்பிவிட வேண்டுமென்ற வேகம்; ஏதோ ஒரு மிருகம் ஒரு இடமாக நிற்காமல் எல்லா இடத்திலும் வாய் வைக்குமே அதுபோல கொஞ்ச நாள் 'Jesus Calls' பவர் மினிஸ்டிரி கொஞ்ச நாள் Sister ஏஞ்சலினா என்று அலைந்தவர் தானே நீர்..? அதனால் தான் இன்னும் நிலைபெறாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்..! இயேசுவை பிதா என்று நான் எப்போ
து சொன்னேன், அவர் இல்லாமல் பிதாவே இல்லை என்று வேண்டுமானால் சொல்லுவேன், ஏனெனில் நித்தியப் பிதா அவரே;
நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதற்கு சிந்தையை மாத்திரமே கருத்தில் கொள்ளவேண்டும் என்கிறீர்கள்;ஆனால் என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டானென்று ஆண்டவர் சொன்னதற்கு என்ன சொல்லுகிறீர்? இதில் எந்த தந்திரமும் இல்லை, கல்லெறிந்து கொல்லப்பட்ட ஸ்தேவான் முதலானோர் ஏதேனும் தந்திரமாக எதையாவது மாற்றியிருந்தால் நானும் மாற்றவேண்டியதாக இருக்கும்; அப்படியே சாப்பிடவேண்டிய மன்னாவை இடித்தும் பொடித்தும் பாரம்பரியத்தினால் வைத்து சமைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலரைப் போல நாங்கள் செய்கிறதில்லை; எழுதப்பட்டவைகளுக்கு மிஞ்சி எண்ணுகிறதுமில்லை;

பிதாவாகிய தேவனை ஆராதியுங்கள் என்று வேதம் சொல்லுமிடத்து அதனை அப்படியே செய்கிறோம்; அது இயேசுவானவரின் வழியே செய்யப்படவேண்டும் என்று வேதம் சொன்னால் அதையும் கீழ்ப்படிதலுடன் செய்கிறோம்; "இயேசுவே" என்று அழைத்து கல்லெறியப்பட்ட ஸ்தேவானும் அவன் கல்லெறியப்பட உதவியாக நின்ற பவுலும் அடுத்தடுத்து கூப்பிடுகையில் நாங்களும் "இயேசுவே" என்று கூப்பிடும் தைரியம் கொள்ளுகிறோம்; ஏனெனில் அவர் பாத்திரர் (he is worthy to Praise) என பரலோகம் விளம்பியது; தேவ ஆவி எனுமிடத்து "ஆவி" யென்றும் "ஆவியானவர்" எனுமிடத்து
"ஆவியானவர்" என்றும் அழைத்து மகிழ்கிறோம்; உமக்கு என்ன பிரச்சினை..?

பவுல் அடைந்த அனைத்து உபத்திரவங்களுக்கும் அவர் கிறித்துவை மரித்தோரிலிருந்தெழும்பிய இரட்சகராகவும் தேவ குமாரனாகவும் தேவாதி தேவனாகவும் நிரூபிக்க முயற்சித்ததே என்று உங்களுக்குத் தெரியாதா?

யெகோவா தேவனை ஆராதிக்கத் தெரியாதோரிடமா அவர் போராடிக் கொண்டிருந்தார்? அதுமாத்திரமே இயேசுவுக்கும் பவுலுக்கும் பணியாகக் கொடுக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே அவர்களுக்கு முன்னர் வந்து சென்ற சீர்திருத்தவாதிகளின் வரிசையிலேயே அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்குமே? கிறித்தவர்கள் என்ற தனி அடையாளச் சொல்லுக்கு அவசியமே இருந்திராதே?


இயேசு தாம் மாம்சத்தில் இருந்த வரைக்கும் தன்னை மனுஷகுமாரன் என்றே சொல்லிக்கொண்டார்; காரணம், அவர் மனுஷகுமாரனாகவே பலியாக வேண்டுமென்பது தேவனுடைய தீர்மானமாகும்; ஆனாலும் சர்வ வல்ல தேவனால் அனுப்பப்பட்ட படியினால் இந்த உலகில் பாவங்களை மன்னிக்கவும் அதரிசனமான தேவனுடைய காணுந் தன்மையிலும் தேவனாகவே வாழ முடிந்தது; எனவே அவரை இம்மானுவேல் என்றும் தூதன் முன்னுரைத்தான்; இம்மானுவேல் என்பதற்கு தேவன் (இங்கே) நம்முடன் இருக்கிறார் என்று அர்த்தமாம்;  சீனாய் மலையின் அடிவாரத்தில் தேவ மகிமையைக் கண்டு நடுங்கிய மக்களுக்கு தேவனைக் காணவேண்டுமென்ற ஆவல் இருந்தது; மனுக்குலத்தின் இந்த ஆவலைப் பூர்த்தி செய்யவும் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசஞ் செய்யும் பிதாவின் சந்திதானத்தில் சேர்க்கவுமே இயேசுவானவர் தமது தேவத் தன்மையைத் துறந்து மாம்சத்தில் வெளிப்பட்டார்; அவருடைய கீழ்ப்படிதல் காரணமாக அவருக்கு பிதாவுக்குரிய மகிமையும் உன்னதமுமான நாமம் பிதாவினால் வழங்கப்பட்டது;

" தெண்டனிட்டுப் பணியுங்கள் " என்ற பார்வோன் அரசனின் கட்டளைக்கு எவனாவது கீழ்ப்படியாதிருந்தால் என்ன நடந்திருக்குமோ அதுவே உம்முடைய கூட்டத்தாருக்கும் சம்பவிக்கும்.

"பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.,"
(ஆதியாகமம்.41:42,43)



இதுவே இயேசுவானவர் பிதாவின் ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டதன் சரியான ஒப்பீடாகும்; யூதர்
ஒருபோதும் தேவனைத் தவிர மற்றொருவரையும் பணிந்ததில்லையே; இதற்கு எஸ்தரின் சரித்திரத்தில் வரும் மொர்தெகாய் நல்ல உதாரணமாகும்; ஆனால் அந்த பாரம்பரியத்தில் வந்த பவுல் அப்போஸ்தலன் இயேசுவையே இரட்சகராகவும் மேய்ப்பராகவும் தேவ குமாரனாகவும் தொழுகைக்குரியவராகவும் மெய்ப்பித்துக் காட்டுகிறார்; இதுவே தேவ தீர்மானம்; இதனை எதிர்த்து கலகம் செய்வோர் நிலைமை மிகமிகப் பரிதாபம்.


ஊரே கூடி ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ராஜாவின் பட்டாபிஷேக விழாவில் அபஸ்வரம் போல கலகம் செய்பவன் கொலை செய்யப்படுவான்; இந்த காட்சியை சாலமோனின் பட்டாபிஷேகத்தில் காண்கிறோம்; இன்னும் என்ன சொல்ல‌?

"ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன் என்றார்.

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். (2 ம் சங்கீதம் முழுவதும்)

நீர் நல்ல - தைரியமான ஆண்மகனாக இருந்தால் நள்ளிரவில் எழுந்து சத்தமாக இந்த சங்கீதத்தை வாசித்துப் பாரும்; விடிவதற்குள் உம்ம நிலைமை தலைகீழாகும்; இது நான் உமக்கு விடும் சவாலாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//விஷச் செடிகள்...// //உங்களை சகோதரர் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் நாம் இருவரும் வேறு வேறு விசுவாசம் கொண்டிருப்பவர்கள்!!//

நம்முடைய வார்த்தைகளையே எடுத்து அதனை நமக்கெதிராகவே பயன்படுத்தும் வித்தையை எதிரிகள் நன்கு கற்று வைத்திருக்கின்றனர்; தங்களுக்கு சொந்தமாக யோசிக்கத் தெரியாது என்பதை இதன் மூலம் அறியத் தருகிறார்கள்;கொஞ்சமும் வெட்கமோ கூச்சநாச்சமோ இல்லாமல் நான் குறிப்பிட்ட வார்த்தைகளைக் கூறியே என்னையும் நண்பர்களையும் விசேஷமாகத் தமிழ்க் கிறித்தவ தளத்தையும் தூஷிக்கும் கோவை பெரியன்ஸ் நிர்வாகிக்கு எனது கடுங்கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;பரிசுத்த வேதாகமத்தின் எழுத்துக்களையே திரிக்கும் இவர்களுக்கு நம்முடைய வார்த்தைகளை எடுத்தாளுவது என்ன கடினமான காரியமா என்ன‌..?

'வேலையை முடித்துவிட்டோம் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கலாம் ' என்று ஏழைத் தொழிலாளி யோசிக்கும் நேரத்தில் - அவன் கைகால் அலம்பி புறப்படும் நேரத்தில் சற்றும் மனிதத் தன்மையில்லாது ஒரு புதிய வேலையைப் பணிக்கும் கடினமான எஜமானனைப் போலவே இவர்களெல்லாம் இருக்கிறார்கள்; எப்படியெனில் இதுபோன்ற சர்ச்சைகள் கிறித்துவைக் குறித்த நம்முடைய நம்பிக்கைகளைக் கேள்விக்குரியதாக்குவதோடு தேவைப்படுவோருக்கு உதவிசெய்ய இயலாத வண்ணம் நம்மை இவர்களுடனான போராட்டத்திலேயே இருத்திப்போடுகிறது;இவர்களைப் பொருட்படுத்தாமல் தன்வழியே போனாலும் இடைவிடாத தூஷணங்கள் காரணமாக நாம் மனதளவில் பாதிக்கப்படுகிறோம்;பதில் சொன்னால் பாவிகளாகிறோம்; நாம் செய்யவேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் எவ்வளவோ உண்டு; ஆனால் கிறித்தவ உலகின் நம்பிக்கைக்குரிய தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் நம்முடைய விருந்துகளில் கறைகளாக வந்தமர்ந்திருக்கிறார்கள்.

இங்கே விஷச் செடிகள் என்பதாக இருக்கட்டும்,சகோதரர்கள் என்ற வார்த்தையைக் குறித்த கருத்தாக இருக்கட்டும்,அது ஆவியானவர் எனக்கு கொடுத்த வெளிப்பாடாகும்;அதையெடுத்து சத்துரு பயன்படுத்துவதற்கு வெட்கப்படவே மாட்டான்;அவன் ஆதிமுதல் மனுஷ கொலைபாதகனாகவே இருக்கிறான்;தேவத்துவத்தின் மகத்துவங்களையெல்லாம் தூஷிக்க அஞ்சாதவன் தற்காலத்தில் அவருடைய அடியவர்களையும் உபத்திரவப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

சிறிய அளவில் இருப்பது சிறந்ததாம்,பெரிய அளவில் இருப்பது துருபதேசமாம்; எத்தனை நகைப்புக்குரிய கருத்தல்லவா..? நோவாவின் பேழையில் சுத்தமான மிருகங்கள் ஏழு ஜோடும் அசுத்தமானவை ஒரே ஒரு ஜோடும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டது;அங்கே உங்கள் விகிதாச்சாரம் செல்லுபடியாகாதோ..?

நீங்கள் மந்தையிலிருந்து சிதறிய ஆடுகள்,மேய்ப்பனில்லாத ஆடுகள்;குணங்கெட்டு ஓநாய்களாக மாறி இரத்தம் குடிக்கப் பழகும் முன்பதாக மீட்க எண்ணுகிறோம்;சுந்தர் போன்ற நல்லவர்களை ஏற்கனவே கெடுத்துப்போட்டீர்கள்;அவர் இங்கே சின்ன சின்ன கோளாறுகளுடனே ஆரம்பித்தார்;ஆனால் அவருடைய இயல்பான மென்மையான சுபாவங் காரணமாக விரைவில் தன்வயப்பட்டு விடுவார்;அவருக்கு சௌகரியமாகத் தோன்றும் கருத்தை யார் எழுதினாலும் உடனே அதனைத் தன் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு கொஞ்ச நாள் கழித்து ஆவியானவர் பெயரில் ரிலீஸ் செய்வார்;உங்களுடன் கடந்த ரெண்டு வருடமாக வாதித்ததன் பலனாக அவரையும் வாதித்து வாதையில் தள்ளிவிட்டீர்கள்;ஆக அவரை எப்படியோ கெடுத்துப்போட்டீர்கள்; என்னையும் கெடுக்கப்பார்த்தீர்கள்;நான் எஸ்கேப் ஆகிவிட்டேன்;அன்பு போன்ற பழம்பெருச்சாளிகளிடம் உங்களுடையது ஒன்றும் வேகாது;ச்சும்மா பேச்சுத் துணைக்கு இருக்கட்டுமே என்று ஒத்தூதிக்கொண்டிருக்கிறார்; இதெல்லாம் உங்களது கடந்த 2010 வருடத்தின் சாதனைகளாகும்;வெறும் ஏழு ,எட்டு என்ற பார்வையாளர்களைக் கொண்டிருந்த உங்கள் தளமானது ஏதோ என் கைங்கர்யத்தினால் இதோ சராசரியாக நூறைக் கடந்து வெற்றிநடைபோடுகிறது;இதெல்லாம் தீமைக்கல்ல,நன்மைக்கே;உங்கள் ஆட்கள் எங்கள் தெருப்பக்கம் வந்தால் நல்ல மரியாதை கிடைக்குமல்லவா..?

லீடர்ஷிப் (leadership)கிடையாதாம்,எல்டர்ஷிப் (eldership) உண்டாம்;ஸீட் ஃபிரீ நோ கலெக்ஷனாம் (seats free,no collectin);ஆனால் தியாகமான நன்கொடைகளால் இயக்கம் நடக்கிறதாம்;தலைவர்களே கிடையாதாம்;ஆனால் இயக்கம் உலகம் முழுவதும் உண்டாம்; இதைவிட பெரிய மோசடி ஏதாவது உண்டா.? இதுதான் உங்கள் வரலாறு;போதுமா விவரங்கள்..? சாத்தானுக்குக் கூட தலையில்லை,வால் பலத்தில் தான் ஆட்டம் போடுகிறான்;நீங்கள் கிறித்துவைத் தலைவர் என்று கூறிக்கொள்ள உங்களுக்கு எந்த  தகுதியுமில்லை;ஏனெனில் நீங்கள் அவர் ஏற்படுத்திய அமைப்பை தூஷிக்கிறீர்கள்.

நீங்கள், சுந்தர், அன்பு ஆகிய மூவரும் புதிய மாறுபாடான இறையியல் கொள்கைகளை வகுத்து மக்களைக் கலங்கப்பண்ணுகிறபடியினாலும் யெகோவா சாட்சிக்காரரின் பாதிப்பில் செயல்படுகிறபடியினாலும்  நாங்கள் உங்களைப் புறக்கணிக்கிறோம்; நீங்கள் அரசியல் அனாதைகள் என்பது போல கிறித்து சபையின் அனாதைகள், தறுதலைகள், தாந்தோன்றிகள்; மேய்ப்பனில்லாத ஆடுகள்; காணாமற் போன ஒற்றை ஆடு மந்தைக்கு வந்துசேர்ந்தாலும் நீங்கள் சேர வாய்ப்பே இல்லை;ஆங்கிலப் படங்களில் வருவதுபோல ஓநாய் மனிதனால் கடிக்கப்பட்டு ஓநாய்களாய் மாறிவிட்டவர்கள்;உங்களிடமிருந்து தப்பி ஓடலாமே தவிர உங்களைக் காப்பாற்ற முடியாது.

இயேசுவானவர் பிதாவின் தற்சொரூபமானவர் ;எனவே அவர் தொழத் தக்க ஒரே தெய்வம் ;அவருக்கு செலுத்தும் அல்லது அவருடைய நாமத்தினால் செலுத்தும் துதி ஸ்தோத்திர பலிகள் சிருஷ்டிகளின் பிதாவுக்கே சென்று சேரும் ; காரணம் அந்த அமைப்பை அவரே தோற்றுவித்தார் என்று ஒப்புக்கொள்ளும் வரையிலும் நீங்கள் எனக்கு எதிரிகள் தான்;உங்களிடம் எந்தவித தயவுதாக்ஷண்யமும் காட்டமாட்டேன்;உங்களுடைய நல்லெண்ணமோ பாராட்டோ எனக்குத் தேவையில்லை;உங்கள் தாவீதின் வார்த்தையில் சொல்வதானால் முழுப் பகையாகப் பகைப்பேன்; உங்களுக்காக ஜெபிப்பேன்,ஆனாலும் உங்கள் மீட்புக்காக அல்ல, உங்களிடம் அப்பாவிகள் சிக்கிவிடாதிருக்க;காரணம் உங்கள் வீழ்ச்சியானது நீங்களே தேர்ந்தெடுத்தது;உங்களைப் புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்று வேதமே சொல்லிவிட்டது;யூதாஸைப் போல உங்களுக்காக நியமிக்கப்பட்ட இடத்துக்கு நீங்களே சென்றால் என்னைப் போன்ற பேதுருக்கள் என் செய்யமுடியும்..? ஆனாலும் சுந்தரிடம் மட்டும் இன்னும் சிறிது பரிவும் நம்பிக்கையும்
எனக்கு உண்டு;உங்கள் அளவுக்கு அவர் முற்றிப்போன கேஸ் அல்ல,அவரை உங்களிடமிருந்து மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் பக்ஷமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்,தயவுசெய்து உங்களையும் கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே வஞ்சித்து மற்றவரையும் வஞ்சிக்கவேண்டாம்.

உங்களுக்கெதிரான எனது பணி தொடரும்...


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புரிதலுக்கு நன்றி...தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் உங்கள் பணியை நான் குறைகூறவில்லை. உங்களுக்கு சில விடயங்களை சுட்டிக்காட்டினால் புரிய மாட்டேன் என்கிறீர்கள. சரி இதை விடுவோம்.

நான் இன்னும் சில நாட்களில் ஒரு சில பதிவுகளை இது தொடர்பாக இடலாம் என்றிருக்கிறேன்
பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்
அந்த நாளை மனுஷகுமாரனும் அறியான்
நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?
இன்னும் சில பதிவுகள்.

மாதம் ஒன்று வீதம் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்
Reference மற்றும் Citation, Footnote கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளை இவ்வண்ணம் பதிக்கப்படும் அனைத்தும் ஆய்வுசார்ந்த கட்டுரைகளே.
இக்கட்டுரைகளை நம்பகத்தன்மையினை தாராளமாக யாரும் சோதனையிட முடியும். இன்னும் அவற்றிலிருந்தும் வேறு பல கருத்துக்களுக்கும் செல்ல முடியும்.

அதில் துர்உபதேசங்கள் குறித்தும் ஆராயப்படும். அவற்றுக்கு ஆதாரமாயிருக்கும் மூலங்கள் குறித்தும் பதிக்கிறேன்.





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// பிச்சைக்காரர்கள் வீடு வீடாக போவது போல் தளம் தளமாக போய் நம் பெயரை தூஷித்துக்கொண்டு இருக்கிறது சில்சாம் என்கிற ஒரு ஜந்து!! என்ன சந்தோஷம் என்றால் அதுவே தன் வாயால் தன்னை விஷச்செடி என்று எழ்சுதியிருப்பது தான்!! //

கோவை பெரியன்ஸ் எனும் தளத்தில் மட்டுமே கடந்த சுமார் ரெண்டு வருடமாக எழுதியும் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்தும் வருகிறேன்; எந்தவொரு போதனையையுமே சில நிமிட உரையாடல்களிலோ அல்லது சில வரிகள் அல்லது பக்கங்களை வாசித்தவுடனோ அது இந்த குறிப்பிட்ட கூட்டத்தாருடைய போதனை என்பதைக் கண்டுபிடிப்பது மிக எளிது;அது நீண்ட காலப் பயிற்சியினாலும் எச்சரிக்கையுணர்வினாலும் எளிதில் விட்டுக்கொடுக்க்காத தன்மையினாலும் வருவது.

உதாரணமாக எனது இரட்சகர் என்னுடன் இடைபட்டு என்னைத் தம்மைத் தேர்ந்தெடுக்க நான் எளிதில் விட்டுக் கொடுத்தேனா? எத்தனை தான் அவர் என்னைத் தொடர்ந்து வந்து தமது அன்பான கரத்தினால் தொட்டபோதும் அவரை விட்டு தூரம் தூரம் சென்றேனே, அந்த பிடிவாதமே தவறுகளை எதிர்க்கவும் காரணமாக இருக்கிறது.

பவுல் அப்போஸ்தலனைப் போல மார்க்க வைராக்கியங் கொண்டோர் வேதத்தில் யாருமில்லை;அவர் யூத மத வைராக்கியங் கொண்டவராக வெறிபிடித்து கொலை செய்யவும் துணிந்தவராக ஓடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு எதிரிகள் மிகக் குறைவு;ஆனால் கிறித்துக்காக வைராக்கியங் கொண்டபோது "எப்பக்கமும் நெருக்கப்படுகிறேன்" என்று கூறுகிறார்.

ஆம், எனக்கு அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே,இந்த யெகோவா சாட்சிகள் கூட்டத்தாருடன் மோதும் போதும் அதேபோன்ற உபத்திரவமே உண்டாகிறது;இங்கே குறிப்பிட்ட பகுதியில் அதாவது " வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் " எனும் இந்த பகுதியில் நேரடியாக சிலரை அடையாளங் காட்டி எழுதுவதாலேயே நான் தூஷிக்கப்படுகிறேன்;ஆனால் மறைமுகமாகக் கவிதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் போதனையாகவும் எழுதுவோர் கண்டுகொள்ளப்படுவதில்லை; காரணம் அதனால் அவர்களுக்கு நேரடியான பாதிப்பு இல்லை.

ஒரு ஊரில் ஒருத்தன் சாராயம் காய்ச்சி விற்கிறான்,என்றால் ஊர்க் கோடியிலிருக்கும் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கும் சிலர்,"ஊர் ரொம்ப கெட்டுப் போயிடுச்சுப்பா,அவனவன் சாராயங் காய்ச்சி குடும்பங்களைக் கெடுக்கிறான்..." என்று பொதுவாகப் புலம்பினால் பிரச்சினையில்லை;ஆனால் "அதோ போறான் பாரு அவன் சாராயங் காய்ச்சி ஊரைக் கெடுப்பவன் " என்று வெளிப்படையாகச் சொன்னால் அவன் சில நாட்களிலேயே கொலை செய்யப்படுவான் அல்லது அவன் குடும்பத்தார் அதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதுபோலவே நானும் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறேன்;ஆனால் ஒருவரும் உதவிக்கு வரமாட்டார்கள்;இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,அன்றைக்கு பவுலுக்கு உதவியாக யாராவது வந்து நின்றிருந்தால் இன்றைக்கும் வருவார்கள்;நான் வேறு வேலையில்லாமல் பொழுதுபோகாமல் முழுநேர ஊழியம் என்ற பெயரில் பிச்சையெடுத்து குடும்பத்துடன் ஊர்ப் பணத்தில் பிழைப்பதாகவும்.., இன்னும் என்னென்னவோ எழுதட்டும்;இப்படி அவமானப்படுத்தி எழுதுவதால் நாம் பயப்படப்போவதில்லை;ஆனாலும் அவர்கள் தங்கள் தாறுமாறான வழிகளைக் குறித்து தெளிவில்லாமல் சத்தியத்துடன் மோதுகிறார்களே அதுதானே ஆபத்தானது.

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே" எனும் வாக்குப் படி நான் கர்த்தரைக் கற்றுக்கொண்டு அவரைக் குறித்து பேசுவதற்காக வந்துவிட்டபடியால் பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறது; ஆனால் நீங்கள் நல்ல பாதுகாப்பான பணியிலும் ஓய்வு ஊதியத்திலும் சொந்தமான வீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தும் இவைகளையெல்லாம் உங்களுக்கு வாய்க்கச் செய்த ஆண்டவரை தூஷிக்கிறீர்களே..!

இங்கே மேற்கோள் பகுதியில் குறிப்பிட்டுள்ள வரிகள் என்னைக் குறித்து தூஷணமாக எழுதப்பட்டுள்ளது;இவர்களில் யாரையும் யெகோவா சாட்சிக்காரர் என்று நான் நேரடியாகக் குறிப்பிடவே இல்லை;ஆனால் யெகோவா சாட்சிக்காரர் மற்றும் வேதமாணவர் கூட்டத்தார் என்ற ஒரே பகுதியில் இவர்களைக் குறித்த செய்திகளைத் தொகுத்து வருகிறேன் என்பது மட்டுமே உண்மை.

நீங்கள் யெகோவா சாட்சிக்காரராக இல்லாவிட்டால் ஏன் அவர்களுடைய தவறான போதகங்களைக் குறித்து எழுதக் கூடாது; காரணம் அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தான்;சிலபல காரியங்களில் அவர்களுடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்கள் என்பதே அந்த பாசத்துக்குக் காரணம்;இரஸ்ஸல் மற்றும் ரதர்ஃபோர்டு ஆகிய இருபெரும் தலைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதல் காரணமாகவே யெகோவா சாட்சிக் கூட்டம் என்பது பிரிந்தது ஏற்கனவே எங்களுக்குத் தெரியும்;நீங்கள் வெளிநாட்டில், அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் என்பதும் இங்கே உங்களுடைய சரக்கு செல்லுபடியாகவில்லை என்பது மட்டுமே உண்மை;அறிவுஜீவிகளான மேநாட்டினர் நூதனமான காரியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே இதுபோன்ற துருபதேசங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்;இன்னும் உலக பெந்தெகொஸ்தே இயக்கங்களைவிட நீங்களே வலிமையானவர்கள் என்பதும் எமக்குத் தெரியும்;உம் கூட்டத்தாரைக் குறைத்து மதிப்பிட்டு கடந்துபோகும் பொறுப்பின்மை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு இல்லை.

வேதாகம மாணவர் என்பதோ யெகோவா சாட்சிக்காரர் என்பதோ கெட்ட வார்த்தை போல பாவிக்கப்படக் காரணம் என்ன?

இந்த ரெண்டு கூட்டத்தாருக்கும் என்ன வித்தியாசம் ?

இரஸ்ஸல் என்பவரைக் குறித்து எழுதினால் உங்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது?

வாட்ச் டவர் (Watch Tower) மூலம் வெளிவந்த புத்த‌கங்கள் எதுவும் உங்கள் வீடுகளில் இல்லையா?

அதில் வேதாகம உண்மைகள் என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ள பல தவறான வியாக்கியானங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறதில்லையா?

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விவரங்களை எடுத்து முன்வைத்தால் எங்களுக்கும் தெளிவு பிறக்குமே?

அதையெல்லாம் விட்டுவிட்டு ஊழியர்களையும் எங்களது மூல உபதேசங்களையும் தூஷிப்பதும் எங்கள் நம்பிக்கைகளைத் திரித்து விமர்சிப்பதும் சரிதானா?


நாங்கள் இயேசுவைக் கண்கண்ட தெய்வமாகத் தொழவும் அவரையும் அவருடைய இரட்சிப்பையும்  குறித்துப் பேசுவதைக் கட்டளையாகப் பெற்றுள்ளோம்.

அதை எதிர்த்து இராஜ்யத்தின் பணியை செய்யவிடாமல் தடுப்போரை கர்த்தருடைய நாமத்தில் எச்சரித்து புறந்தள்ள வேண்டியது எங்களது ஆதாரமான கடமைகளில் ஒன்றாகும்;வெறுமனே பிரசங்கிப்பது மட்டுமல்ல,அதனால் ஆதாயமாக்க
ப்பட்டுள்ள மக்கள் வஞ்சிக்கப்படாமல் எச்சரிப்பதும் எங்களது விசேஷித்த கடமையாகும்;

இங்கே திரியில் வேதாகம மாணவர் தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ள
வை காரசாரமாகவும் தனிப்பட்ட முறையில் நாகரீகமில்லாமல் ஒருவரையொருவர் தூஷிப்பது போலவும் இருக்க யார் காரணம்? உங்கள் அழைப்பின் பேரில் நம்பிக்கையுடன் உங்கள் தளத்தில் நுழைந்து எழுதிய என்னை வேறொரு புனைப் பெயரில் கீழ்த் தரமாக தூஷிக்கிறீர்கள்;அது பிறகே எனக்குத் தெரியவந்தது;நீங்கள் நியாயஸ்தராகவோ நேர்மையாளராகவோ இருந்திருந்தால் சோல்சொலிஷன் என்ற பெயரில் எழுதப்பட்ட வரம்புமீறிய வரிகளைச் சுட்டிக்காட்டியபிறகாவது கண்டித்திருப்பீர்கள்;ஏனெனில் உங்கள் மனசாட்சிக்கே தெரியும்,நான் தூஷணமான எந்த வார்த்தையையும் முதன்முதலில் எழுதவில்லை;அதனை குறிப்பிட்ட தேதியின் விவரத்திலிருந்து வாசகர் அறியமுடியும்.

இறுதியாக மேற்கோளில் குறிப்பிட்டுள்ள வரிகளுக்கு வருகிறேன்;நான் பிச்சைக்காரனைப் போலப் போவது தளம் தளமாக மட்டுமல்ல,வீடு வீடாகவும் போகிறேன் என்பது உண்மைதான்;ஆனால் எனக்கு முன்பாக வந்து அந்த குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேறினவர் யார் தெரியுமா? அவர் சொன்னது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருக்கும்;ஆனால் வானத்தில் வட்டமிடும் பருந்து போன்ற ஆபத்தான துஷ்டப் பறவைகளைப் பார்த்துவிட்டால் வெட்டவெளியில் நின்று ஒரு விசேஷித்த சத்தத்தை எழுப்பும்;உடனே அத்தனை கோழிக் குஞ்சுகளும் அதன் செட்டைகளின் கீழே வந்துவிடவேண்டும்;இல்லாவிட்டால் அவை துஷ்டப் பறவைகளால் இரையாகக் கவ்விச் செல்லப்படும்;அந்த கோழி தன் குஞ்சுகளின் மீது கொண்டிருக்கும் கரிசனையின் காரணமாக தன் உயிரையே துச்சமாக எண்ணி துணிந்து நிற்கும்;அதைப் போன்றதே நான் ஏற்றிருக்கும் பணியும்.

அண்மையில் அதிகப் படிப்பறிவில்லாத ஒரு சகோதரி என்னிடம் சொன்னது,ஐயா,கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு பேர் சரியாக சர்ச்சுக்கு போகும் நேரத்த்தில் வீட்டுக்கு வந்தார்கள்; இருந்தாலும் ஜெபம் பண்ணணும் என்று வந்திருக்கிறார்களே என்று நாகரீகத்துக்காக உள்ளே அனுமதித்தேன்;ஆனால் நேரமாகிறது என்று சொன்னாலும் கேட்காமல் ,"ஸிஸ்டர் இந்த பெந்தெகோஸ்தே காரங்களை நம்பாதீங்க,அவங்க பிதாவாகிய தேவனை மதிக்கிறதே இல்லை யெகோவா தேவன் தானே இயேசுவை இந்த உலகுக்கு அனுப்பினார்? " என்று அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள்;எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது ஐயா, மனசே சரியில்லை; 'நீங்க எங்களை விட்டுடுங்களேன், ஆண்டவரை அறியாத இந்து மக்களிடம் போங்கள் ' என்று சொன்னாலும் கேட்காமல், 'இல்லை சிஸ்டர் அவர்களைவிட நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம் ' என்று சொல்லுகிறார்கள்" என்றார்கள்;நான் சொன்னேன்,அவர்கள் இனிவந்தால் உடனே என்னைக் கூப்பிடுங்கள்,நான் எங்கே இருந்தாலும் உடனே வருகிறேன் அல்லது உடனே போன் போட்டு என்னிடம் கொடுங்கள் என்று சவாலாகக் கூறினேன்; இதுபோன்று ஒவ்வொரு நாளும் எத்தனை விதம்விதமான துருபதேசப் பருந்துகளை சந்திக்கிறேன்,தெரியுமா? அதனால் எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறேன் தெரியுமா? சாதாரண பெந்தெகொஸ்தே தலைவர்கள் கூட என்னைக் கண்டால் மிரண்டு ஓடுகிறார்கள்;காரணம் நான் வேதத்திலிருந்து வேதத்தை எடுத்துப் பேசுகிறேன்;எந்தவொரு ஸ்தாபனத்தின் பாரம்பரியத்தையும் பின்பற்றவில்லை;எனக்கு இந்த உலகத்தில் எந்த ஸ்தாபனத் தலைவருடனும் தொடர்பு இல்லை;இன்னும் விரைவில் போலியான பெந்தெகொஸ்தே சபைகளை அடையாளங் காட்டும் ஒரு பதிவையும் தருவேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Reply Quote

soulsolution wrote:

மரணம் பற்றி தெளிவாக விளக்கமுடியாத ஜென்மங்கள் நித்திய ஜீவன் பற்றி வாதாட தகுதியில்லாத தறுதலைகளே.

இந்தத் தளத்தில் உங்களுக்கு வேலையில்லை; உங்களை நம்பும் முட்டாள்களுக்குத்தான் தனியே தளம் நடத்தி உங்கள் "பரிசுத்தத்துவத்தை" காண்பிக்கிறீர்களே.


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.....

 




 

சகோதரரே உம்முடைய வார்த்தைகள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க தோன்றினாலும், உங்களில் எக்காள பேச்சும் அன்பற்ற நிலையும் அடுத்தவரை கேலியாகவும் அசிக்கமாகவும் விமர்சிக்கும் நிலையே, நீங்கள் தேவனின் அன்பையும், தேவனையும் அறியவேண்டிய
விதத்தில்  அறியவில்லை என்பதை பறை சாற்றுகிறது.
I யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
இயேசு ஒரு தேவகுமாரன் அவர் பரிசேயரை சாடினார்! அனால் மனிதர்களாகிய நாம் எந்த சூழ்நிலையிலும் பிறரோடு அன்பாகவே இருக்க வாஞ்சிக்க வேண்டும்.
யோவான் 5:42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.

நிச்சயம் எனக்கு இங்கே வேலை  இல்லை,  மேலும் நான் சகோ. இளங்கோவுக்காகத்தான் இங்கு பதிவுகளை தந்தேநேயன்றி உம்போன்ற ஆட்கள் இங்கு இருப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு பதிவைகூட தந்திருக்க மாட்டேன்.
இதுவே  இந்த தளத்தில் எனது கடைசி பதிவு! நன்றி!

நண்பர் சுந்தர் அவர்களே, இளங்கோவுக்கும் ஆத்தும பசை(soulsolution)க்கும் வித்தியாசமிருப்பது போலத் தெரியவில்லை;

தாங்கள் மட்டுமே இந்த தளத்தில் 165 பதிவுகளைத் தந்திருக்கிறீர்கள்;ஒரு மூத்த உறுப்பினர் என்ற மரியாதை கூட இல்லாமல் தன்னை யாரும் பார்க்கவில்லை எதுவும் செய்யமுடியாது என்ற மமதையில் கண்டபடி சேற்றை அள்ளிவீசும் இவர்களுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது;

பிச்சைக்காரன்கூட இப்படித்தான் தாழ்மையாகக் கேட்பான், இல்லையென்றதும் தூஷிப்பான்;அவனுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை;

'யாகாவாராயினும் நாகாக்க'
என்பதை பள்ளியில்தானே கற்றுத்தருவார்கள்; இவன் அங்கேயும் ஒழுங்காக இருந்திருக்கமாட்டான்;

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஓரவஞ்சனையுடன் செயல்படும் இளங்கோவுக்காக நான் பரிதாபப்படுகிறேன்;தன்னுடைய கருத்தை ஏற்காதவனை இப்படித்தான் தூஷிப்பேன் என்பவன் மஞ்சள் பத்திரிகையும் நீலப்படங்களையும் வெளியிட்டு சுய (இன்பம்..?) திருப்தியடைபவனைக்
காட்டிலும் கொடூரமானவன்..!

விடுங்க நண்பரே... மலையப் பாத்து நாய் குரைக்குது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சுந்தர்:
//என்ன இருந்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்ட சகோதரர்களை  "குறுமதி குரங்குகள்" என்றெல்லாம்...//

உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சகோதரர்களாக இருக்கலாம்;
நான் அவர்களை "நாய்கள்" என்றோ "பன்றிகள்" என்றோ குறிப்பிடவில்லையே...வேதம் இந்த சாதியாரை அப்படியே குறிப்பிடுகிறது;

இவர்கள் "குரங்கிலிருந்து மனிதன் வந்தான்" என்ற பரிணாமக் கொள்கைக்கு ஏற்ப தேவனுடைய மகத்துவங்களை அறியாமல் (கோபர்ஹேகன் மாநாடு தீர்க்கத்தரிசன் நிறைவேறுதல் எனற பிதற்றல்..!) இங்குமங்கும் தாவிக் கொண்டிருப்பதாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்; அவர்களுக்கு ஒத்துப்போனால் நீங்களும் குரங்குதான்..!

ஏனெனில் பிசாசானவன் முதலில் கருத்து வேறுபாடுகளை விதைத்து சகோதர சிநேகத்தை கெடுத்து ஐக்கியத்திலிருந்து பிரித்து புதிய கொள்கைகளைப் புகுத்தி தனிமைப்படுத்தி கெடுத்துப் போடுவான்;

உலகமெங்கும் பரவி ஆக்கிரமித்து இஸ்லாமியரைவிட அதிகமாக தேவனை தூஷிக்கும் இனத்தைச் சேர்ந்தவரே நீங்கள் வக்காலத்து வாங்கும் நபர்கள்; அவர்கள் தங்களை வேதாகம மாணவர் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்கள் மாணவர்களாக இலட்சணமாக கற்றுக் கொள்ளாமல் அடங்காப் பிடாரிகளாக தங்களுக்குத் தாங்களே போதித்துக்கொண்டு தங்களையே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நீங்களும் அவர்கள் குழுவில் ஏறக்குறைய இடம் பிடித்துவிட்டீர்கள்; உங்கள் எதிர்காலம் பயங்கரமாகப் போகிறது; மீண்டும் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என்றே நம்புகிறேன்;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// பிசாசின் தளத்திற்கு எல்லாம் எங்களுக்கு வழி சொல்ல அவசியம் இல்லை;அவனை பெரிய ஆள் ஆக்கும் அளவிற்கு உங்களை போல் எங்களுக்கு எண்ண‌ம் இல்லை;நாகரீகத்தை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் அந்த வார்த்தையே பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்; உங்களின் சாபங்களை சுமக்க எங்களுக்கு நேரம் இல்லை,ஆகவே அதை உங்கள் வீட்டிலோ,உங்களின் ரசிகர்கள் யாராவது இருப்பார்கள் அவர்களே சுமக்கட்டும்,அப்படி யாரும் கிடைக்க வில்லை என்றால் உங்கள் சாபங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கிறது //

குறுமதி படைத்த குரங்குகளே, மரத்துக்கு மரம் தாவி உணர்வுகள் மரத்துப்போன ஈனமான ஜந்துக்களே...குருவைக் காட்டிக்கொடுத்து விசுவாச துரோகம் செய்த யூதாஸுக்குச் சொன்ன சாபம் சபையைக் கட்டியமைத்த அப்போஸ்தலரின் வழிவந்தோருக்கு எப்படி பொருந்தும்..?

தனிப்பட்ட ஒருவரை சத்தியத்தின்படி கண்டித்ததற்கு பதிலாக குடும்பத்தையே கூண்டிலேற்றும் அநாகரீகத்தை உங்களிடமே பார்க்கிறேன்;

சாபத்தை விடாமல் வைத்துக்கொள்ள அதுபொருள் அல்லவே; த
ன்ன் கிரியைக்கேற்ற பலனை அவனவன் நிச்ச‌யம் அடைந்தே தீருவான்;

எனவே யூதாஸ் அடைந்த சாபத்துக்கும் இழந்த ஆசீர்வாதங்களுக்கும் நீங்களே பங்காளிகள் என்பதை வேதத்தின் வெளிச்சத்தில் பிரத்தியட்சமாக அறிவிக்கிறேன்;

அனாதி தேவனின் வாக்குத்தத்தமான மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுகிறிஸ்துவையும் அவரால் வாக்கருளப்பட்டு பொழிந்தருளப்பட்ட பரிசுத்தாவியாகிய தேவனையும் மறுதலித்துப்போனவர்கள்;

நீங்கள் சொல்லும் யெகோவாவுக்கு புதிய ஏற்பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;அந்த பெயர் புதிய ஏற்பாட்டில் ஒருமுறை கூட இல்லை;அதனை மொழிபெயர்ப்பு மற்றும் மூலபாஷையின் உதவியுடன் நிறுவ முடியுமானால் இயேசுவையும் கூட அதே போல தேவனுக்கு சமமானவராக தேவனால் நியமிக்கப்பட்ட‌ தேவனாக வேத வல்லுனர்கள் நிறுவியிருக்கிறார்கள்;"யெகோவா" தேவனுடைய குறிப்பிட்ட இந்த பெயரானது படைப்பிலும் சம்பந்தப்படவில்லை; சிருஷ்டிப்பில் "ஏலோகிம்" என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது; அப்படியானால் "ஏலோகிம்" எனும் புது தெய்வத்தை அறிமுகப்படுத்தமுடியுமா?

இனியும் உங்களோடு போராடாமல் ஆக்கப்பூர்வமான ஆதாரப்பூர்வமான கட்டுரைகளை வடிக்க கர்த்தர் தாமே அருள்புரிவாராக..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் தர எனக்கு அவசியம் இல்லை; இவரின் குணத்தை வெளிப்படுத்தும்படியாக தான் இந்த விமர்சனம் அமைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் //

"நாய் வாயில கோலை விட்டது போல" என்பார்களே அதுபோலாகிவிட்டது என் கதை,சரி ரெண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்'யா..!

யாருடைய பதிலையும் விளக்கத்தையும் எதிர்பார்த்தோ பொழுதுபோக்கவோ நான் எதையும் எழுதவில்லை;

அப்படி ஒரு அவசியம் எனக்கிருந்திருந்தால் அங்கேயே உட்கார்ந்திருந்து இதமா,பதமா சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்களே அதைப் போல எதையோ செய்துக் கொண்டிருந்திருப்பேன்;

கிறிஸ்துவுக்கான என்னுடைய வைராக்கியத்தினை வெளிப்படுத்தவே இந்த யுத்தத்தைத் துவங்கியிருக்கிறேன்;

என்னுடைய குணத்தைக் குறித்து யாரும் கவலைப்படுவதைவிட துருபதேசக்காரர்களின் அடையாளங்களை புட்டுபுட்டு வைக்க ஒருவன் புறப்பட்டு விட்டானே என்ற பதட்டமே எதிர்முகாமிலிருந்து இங்கே எதிரொலிக்கிறது;

இது அந்த படுபாவிகளுக்கு மட்டுமல்ல,இப்படியெல்லாம் கூட வித்தியாசமான போதனைகள் இருக்கிறதா என்று தெரியாமலே கைகுலுக்கிக் கொண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டும் சிலர் இருக்கிறார்களே அந்த அப்பாவிகளை எச்சரிப்பதே எனது பிரதான கடமையாக எண்ணுகிறேன்;

ஒரு இந்துவுக்கோ இஸ்லாமியனுக்கோ இரக்கம் பாராட்டி அவன் மனந்திரும்ப பொறுமையாகக் காத்திருக்கலாம்;ஆனால் இதைப் போன்ற ஆட்களிடம் எந்த உறவும் தேவையில்லை;நண்பர் என்றோ சகோதரர் என்றோ விளிக்கக்கூடத் தகுதியில்லாதவர்கள்; இதுவே புதிய ஏற்பாட்டின் கடைசி மூச்சான அன்பின் அப்போஸ்தலன் யோவானின் கூற்று;

// இதற்கு முன்னால் உள்ள பதிவின் மூலமாக ஒரு ஸ்த்ரியின் வேஷம் இட்டு நம் தளத்தில் வந்து சென்ற இவரை கண்டுபிடித்ததும் இந்த ஆவேசம். ஞாயிறு ஆராத‌னை முடித்து வ‌ந்த‌ கையுடன் அதே ஆவியில் எழுதி த‌ள்ளிய‌ விம‌ர்ச‌ன‌ம் தான் இது //

அடப்பாவிகளே,எனது இணையதள நேரத்தை சிக்கனமாக்க வேண்டி உங்கள் பதிவையும் எனது பக்கத்தையும் திறந்துவைத்துக் கொண்டு சனிக்கிழமையன்று இரவு 11:30 மணி முதல் எழுதி ஞாயிறன்று அதிகாலை 01:46க்கு பதிவிட்டிருக்கிறேனே கவனிக்கவில்லையா?

அதன்பிறகு அதிகாலை 4மணிக்கு உறங்கச் சென்று 2மணி நேரம் மட்டும் ஓய்வுடன் எழுந்திருந்து சுமார் 110 கிமீ தூரம் பயணித்து ஒரு கிராமத்துக்குச் சென்று "என் தேவனை" ஆராதித்து வந்ததை என்னை நடத்தும் "ஆவியானவர்" அறிவார்;அத்துடன் கணிணியை மூடிவிட்டு ஞாயிறன்று நள்ளிரவுதான் மீண்டும் இணையத்துக்கு வந்தேன்.

உங்களைப் போன்ற மோசடிப் பேர்வழிகளிடம் போராடும் துணிச்சலும் திராணியும் எனக்கு நிரம்ப உண்டு;யாரோ ஒரு சகோதரியின் பெயரில் ஒளிந்துக்கொண்டு எழுதுமளவுக்கு நான் உங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமில்லையென்று எண்ணுகிறேன்;

சகோதரி கிளாடி அவர்களின் எழுத்துக்களுக்கு அவர்கள் தான் பொறுப்பு;சிலருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பதால் அதன் பாதிப்பு அவர்களுடைய எழுத்திலும் தெரிவதற்கு இருக்கும் வாய்ப்பை சாதகமாக்கிவிட முயலுவது தான் அப்பட்டமான பேடித்தனமாகும்;

இந்த ஆட்கள் அவர்களுடைய தளத்தில் நடத்தும் ஓரங்க நாடகம் யாருக்கும் தெரியாததுபோல எண்ணிக் கொண்டு அடுத்தவரையெல்லாம் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது;

கிறுக்கனைப் போல நீயே ஒரு கட்டுரை எழுதி உன்னை நீயே பாராட்டிக்கொண்டதும் நீயே கேள்விகேட்டு நீயே பதில் சொல்லிக்கொள்வதும் எங்களுக்குத் தெரியாதா?

//இத்துட‌ன் விட்டு விடுவ‌து அவ‌ருக்கு ந‌ல்ல‌து என்று நான் நினைக்கிறேன் //

என்ன மிரட்டலா? இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டால் எப்டீங்கோ? இன்னும் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் வரிக்கு வரி எழுதி உங்களைத் தோலுரிப்பதாக புது வருட சபதம் எடுத்திருக்கேனே..!

// அவ‌ரை போல் என‌க்கு சாப‌ம் இட‌வோ, அல்லது சாவு மணி அடிக்கும் அள‌விற்கு துணிச்ச‌ல் இல்லை;அவ‌ர்க‌ள் வ‌ழிப‌டும் தேவ‌னுக்கு வேண்டுமென்றால் அப்ப‌டி ஒரு எண்ணம் இருக்க‌லாம்; என‌க்கு தெரிந்த‌தெல்லாம், என் எஜ‌மான‌னான‌ கிறிஸ்து ப‌ரிக‌சிக்க‌ப்ப‌ட்டார் என்றால், அவ‌ரை விசுவாசிக்கும் என‌க்கும் அதே நிலை தானே //

உன‌க்கு அந்த நிலை வர வாய்ப்பில்லை,தம்பி..!
நீ தூக்குல தான் தொங்குவே, இல்லை குடல் வெடிச்சி செத்துப் போவே, யூதாசுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும்; ஆமாம் , அவனுக்கும் அவருதானே கொஞ்சநாள் எஜமானரா இருந்தாரு..!

{இறுதியாக இந்த ஆசாமிகள் நேர்மையாளர்களாக இருந்தால் எனது தளத்தின் தொடுப்பை இணைத்திருக்கவேண்டும்;நான் அவர்களுடைய தொடுப்பை நாகரீகத்துடன் இணைத்துள்ளேன்;அவ்ளோ தைரியம்..ம்..ம்..!}



-- Edited by chillsam on Tuesday 2nd of February 2010 01:54:40 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"சத்தியத்தைத் தேடுவோர்" (truthseekers) என்ற பொதுவான பெயரில் சிலர் கிறிஸ்தவர்களைப் போன்ற வேடத்தில் நம்மிடையே உலா வருகிறார்கள்; அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல;

கைப்பிரதியின் மூலமும் புத்தகங்கள் மூலமும் பத்திரிகையின் மூலமும் தொலைக்காட்சி மூலமும்  நம்மை சந்தித்த காலம் போய் தற்போது நவீன வசதிகள் காரணமாக இணைய தளத்திலும்- அதாவது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வேகமாகக் கிளை பரப்பி வருகிறார்கள்;

வீடுகள்தோறும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் ஆராதனைக்குப் புறப்படும் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்து விடுவார்கள்; ஒரு நாகரிகத்துக்காக நாம் அமர வைத்து பேசினால் போதும், தொடர்ந்து வந்து தொல்லை செய்வார்கள்;

ஏன் நீங்கள் கிறித்தவர்கள் வீட்டுக்கே வருகிறீர்கள், ஆண்டவரையறியாத வேறே மார்க்கத்தவர் வீடுகளுக்குச் செல்லலாமே என்றால் தங்களது முக்கிய ஆதாயப்பணியே (?!) கிறித்தவர்களிடத்தில் தான் என்பார்கள்;

தங்கள் முழு விசுவாசத்தையும் முதலிலேயே சொல்லிவிட்டால்- அதாவது பெரும்பான்மை கிறித்தவ சபையாரிடமிருந்து இவர்கள் எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டால் ஏற்கவோ, மறுத்துப் பேசவோ நமக்கு வாய்ப்பாக இருக்கும்;

ஆனால் அதிகமாக வேதத்தை வாசித்தறியாத- சபைப் போதகரையும், ஐக்கியத்தையும், ஜெப வாழ்க்கையையும் மட்டுமே சார்ந்திருக்கும் எண்ணற்ற அப்பாவிகளை தங்கள் மாயமான‌ போதகத்தினால் எளிதில் கவிழ்த்துப் போடுவார்கள்;

அதிலும் சபைப் போதகரிடம் மனத்தாங்கலாக இருக்கும் குடும்பங்கள் இவர்களுக்கு வெல்லக்கட்டியாக்கும்; போதகர் ஏதோ சில அசௌகரியங்கள் காரணமாக வீடு சந்திப்புக்கு வாராது போனாலோ தங்களைவிட மற்றொரு குடும்பத்தாரிடம் அதிக கரிசனை காட்டினாலோ சிலருடைய மனம் சபைப் போதகருக்கு விரோதமாகத் தாங்கலடையும்; அந்த இடைவெளியில் தான் இதுபோன்ற சாத்தானின் போதகங்கள் உள்ளே நுழையும்;

நான் அடிக்கடி மீனவனுடைய பார்வையிலிருந்து ஒரு காரியத்தை யோசிப்பதுண்டு; அதாவது ஒரு மீனவன் பாடுபட்டு வலைவீசி மீன்களைப் பிடித்து அவற்றைக் கரையில் கொண்டு சேர்ப்பதற்குள் மறுபுறம் அவை துள்ளிக் குதித்து மீண்டும் தண்ணீரில் விழுந்தால் எப்படியிருக்கும்?

அதைப் போலவே அந்தகாரத்தினின்று ஒரு ஆத்துமாவை படாதபட்டு மீட்டுக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது அவை தடுமாறி மீண்டும் விழுந்துவிடாமல் பாதுகாப்பது பெரும்பணியாக இருக்கிறது;

எனவே ஒரு ஊழியனுக்கு இருவித சுமையுண்டு; ஒன்று ஆத்தும ஆதாயம் செய்வது; இரண்டு அவை நிலைத்திருக்கப் போராடுவது; இரண்டுமே அதிகக் கடினமானப் பணியாகும்;

"சத்தியத்தைத் தேடுவோர்" எனும் தளத்திலிருந்து ஒரு தன்னிலை விளக்கக் கட்டுரையினை வெளியிட்டிருக்கிறார்கள்;

அதனைப் படித்ததும் உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்போதாவது வெளிப்படையாக தங்கள் வரலாற்றைச் சொல்ல முன்வந்தார்களே, என;

எனது விசுவாச வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் இதுபோன்ற வித்தியாசமான போதனைகளைக் கொண்ட பல்வேறு குழுக்களை சந்திக்கும்போது நான் அவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே, நீங்கள் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறீர்கள் என்பதே;

இதுபோன்ற துருபதேசக்காரர்களை அதாவது வித்தியாசமானவற்றையே போதித்து வாக்குவாதங்களைப் பற்றிய நோய் கொண்டவர்களை விட்டு வேகமாக விலகிச் செல்வதே பெரும்பாலான கிறித்தவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது; காரணம் இருப்பதைத் தக்கவைத்துக் கொள்ளும் சுயநலமாக இருக்கலாம்; ஆனால் எந்த ஒரு தீமையான காரியத்தையும் விட்டு விலகி ஓடுவது வேதத்தின் அடிப்படை சத்தியமாக இருந்தாலும் ஆவியானவருடைய உதவியுடன் எல்லா ஆவிகளையும் சோதித்தறிந்து அவற்றைக் குறித்து மற்றவரை எச்சரிப்பதும் நம்முடைய பணியாக இருக்கிறது;

உலகத்தார் மதநல்லிணக்கம் என்று பேசுகிறார்களே அதுபோன்ற வழிமுறை நமக்கு உதவாது; விரோதியை மன்னிப்பேன், துரோகியை மன்னிக்கமாட்டேன்; நெஞ்சிலே குத்துபவனை ஏற்றுக்கொள்ளுவேன், முதுகில் குத்துபவனை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்பார்களே அதுபோலவே இவர்களை அணுகவேண்டும்;

விசுவாசத்தில்- வேதவாசிப்பில்- பரிசுத்தத்தில் மந்தமாக இருப்பவ்ர்களிடம் பொறுமையாகவே இருக்கவேண்டும்; தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத் தக்கதாக காத்திருந்து ஜெபிக்கவேண்டும் என்பது சரியே; ஆனால் விசுவாச துரோகத்தினைப் போதிப்பவர்களைக் குறித்து ஆய்ந்தறிந்து ஏனையோரை எச்சரிப்பது நம்முடைய கடமையாகும்;

ஏனெனில் இந்து, முஸ்லிம் போன்ற வேற்று மார்க்கத்தவரை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடியும்; ஆனால் இதுபோன்ற ஓநாய்களை அடையாளம் காண்பது கடினம்; ஏனெனில் அவை தம்மை "ஆடுகள்" என்றும் மற்ற ஊழியர்களையும் சபை அமைப்புகளையும் "ஓநாய் கூட்டம்" என்றும் "பாபிலோன் வேசிமார்க்கத்தார்" என்றும் வசைபாடிக் கொண்டிருப்பதே வேடிக்கை;

அவர்கள் சத்தியத்தை (எந்த சத்தியமோ..?) வாஞ்சித்து நாடி கண்டுபிடித்துவிட்ட சிறுமந்தையாம்; சத்தானதைப் பிடித்து உண்ணும் கழுகுக் கூட்டமாம்; பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும் என்ற் ஆண்டவரது செய்திக்கு இவர்கள் தரும் புது விளக்கம் இது;

கட‌ந்த இரண்டு நூற்றாண்டுகளிலேயே ஆயிரக்கணக்கான சிறுசிறு குழுக்கள் புற்றீசலைப் போலப் புறப்பட்டன; கடந்த நூற்றாண்டில் கூட இத்தனை குழப்பங்கள் இருந்திருக்காது; ஆனால் தற்போதோ சரியானதைத் தேர்ந்தெடுக்க அதிகப் பிரயாசம் தேவைப்படுகிறது;

நான் பெற்றுக்கொண்ட விசேஷித்த தேவகிருபையினால் மார்க்க பேதங்களைக் குறித்த தெளிவான பார்வையையும் விசாலமான மனதுடன் கூடிய கண்ணோட்டத்தில் நிதானமாக ஆராயும் பக்குவத்தினையும் அடைந்தேன் அல்லது அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்;

அதன்படி நான் சுட்டிக்காட்டி எச்சரிக்கக்கூடிய துருபதேசங்கள் பல இருந்தாலும் நான் கடந்த சுமார் பத்து வருடங்களாக அதிகமாகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குழுவைக் குறித்து அறிமுகப்படுத்தி விரிவாக எச்சரிக்க விரும்புகிறேன்;

அடுத்து நான் எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ள முக்கியக் குழுவானது, கள்ளத்தீர்க்கதரிசியான ப்ரன்ஹாம் மற்றும் அவர்களுடைய தற்போதய சூழ்ச்சிகள்; நான் இவர்களுடன் அதிகம் வாதித்து சோர்ந்துபோனேன்; மேற்கொள்ள முடியாததாலோ தோற்றுப்போனதாலோ அல்ல,இவர்களை எந்த வகையிலும் மீட்க முடியாதவண்ணம் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்;

முதலாவது அவர்களுடைய தோற்ற வரலாற்றை விவரிக்கும்
அவர்களது தொடுப்பைக் கொடுத்துள்ளேன்; அதில் அவர்கள் ஏதேனும் திருத்தம் செய்தால் எனது சேமிப்பிலிருந்து சரியானதை எடுத்து பதிப்பேன்;

இது வாதமுமல்ல, விவாதமுமல்ல; எச்சரிப்பு அவ்வளவுதான்;வாசகர்கள் தங்கள‌து அனுபவத்தையும் சந்தேகங்களையும் தாராளமாக பகிர்ந்துக் கொள்ளலாம்; அவர்கள் தங்கள் தளத்தில் எழுதியுள்ள துருபதேசங்களுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாது ஆங்கில தளத்திலிருந்தும் ஆதாரங்களை மொழிபெயர்த்து பதிப்போம்; இங்கு அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் உள்ளே நுழையவிடமாட்டோம்; அவர்கள் தளத்திலும் நமக்கு எந்த வேலையுமில்லை; சாத்தானிடம் வேதம் கற்கவேண்டிய அவசியம் நமக்கில்லைதானே..?

மேற்கண்ட தொடுப்பில் காணும் அவர்களது தோற்ற வரலாற்றையும் பிரிவுகளையும் தொடர்ந்து நமது தளத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு செய்துள்ள விமர்சனங்களுக்கும் இதுவரை பொதுவானதொரு பதிலை வெளியிட்டிருக்கிறேன்;

தொடர்ந்து...

// என‌க்கும் வேதாக‌ம‌ மாண‌வ‌ர்க‌ளுக்கும் நிச்ச‌ய‌மாக‌ க‌ருத்து வேறு பாடுக‌ள் இருக்கிற‌து, ஒரு சிறிய‌ அள‌வில் //

அப்படியானால் இவர் மூன்றாவது குழுவா?
மொத்தத்தில் சபை அமைப்புக்கு அடங்காதவர்கள்,சரிதானே?

இவர்கள் குழுவைச் சேர்ந்த ஒரு சகோதரன் வீட்டுக்கு அவரது குழந்தைக்கு பிறந்த நாளுக்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன்; உண்மையிலேயே பாவமாக இருந்தது; கடந்த 40 வருடத்துக்கும் மேலாக அவர்களுக்கு யாருடனும் தொடர்பில்லையாம்; இதனால் சொந்தங்களோ ஊழியர்களோ மற்ற சபையார் யாருமே வரவில்லை; மனைவியும் பிள்ளைகளும் வீட்டின் வறுமையான சூழ்நிலை காரணமாக சோர்ந்திருந்தார்கள்;

ஆனால் இந்த சகோதரன் உற்சாகமாகவே இருந்தார்; பழக்கதோஷத்தில் எனக்குக் காணிக்கைக் கொடுக்கவந்தார்; நான் வைராக்கியத்துடன் வாங்க மறுத்துவிட்டேன்; அவருடைய பெயர் தேவக்கண்; தேவைப்பட்டால் அவருடைய புகைப்படத்தையும் இங்கே பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்; அவர் மூலமே இவர்களுக்கிடையே பிரிவுகள் போட்டிகள் பொறாமைகள் எல்லாம தெரியவந்தது; இவர்களுடைய பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருப்பது வழக்கம்போல பணமும் சொத்துக்களும் பாகப்பிரிவினையுமே, சத்தியமல்ல..!

// வேத‌ மாண‌வ‌ர்க‌ள் இருக்கிற‌ இட‌ம் கூட‌ தெரியாம‌ல் எல்லாரிட‌மும் அன்பு உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்கள் //

ஏன்,ஜைனர்கள்,சீக்கியர்கள்,இஸ்லாமியர் என்று எல்லா மார்க்கத்திலும் சன்மார்க்கர் இருக்கிறார்கள்; இவர்கள் குழுவில் ஒரு முக்கியத் தலைவர் தான் பெறும் வெளிநாட்டு பணத்தினை தன் குழுவிலுள்ள வஞ்சிக்கப்பட்ட ஆடுகளுக்கு வட்டிக்கு விட்டு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்; அந்த குழுவும் ஒரு பெண் விவகாரத்தில் தற்போது ரெண்டாக‌ உடைந்துவிட்டது;

தரிசனங்களையும் சொப்பனங்களையும் குறித்து வேதம் அதிகமாகவே பேசுகிறது;அவற்றை அதிகம் தியானிப்போரின் ஆழ்மனதில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவோ அல்லது தேவ தீர்மானத்தின் படியோ தங்களிடம் வரும் மக்களை சத்திய வசனத்தின்படி போதித்து எச்சரிப்பது தவறே இல்லை;அவர்கள் துணிகரமாகப் பொய் சொன்னாலும் விளைவை கவனிக்கவும்) நியாயந்தீர்க்கப்போவது தேவனே;உனக்கு அதைக் குறித்து கருத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த எந்த அருகதையுமில்லை;

காண்கிற வசனத்தையே தந்திரமாக புரட்டி மொழிபெயர்ப்பு அது இது என பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு ஜனங்களை வஞ்சிக்கும் உனக்கு மற்றவரை தூஷிக்க யார் அதிகாரம் கொடுத்தது?

நான் பணம் கொடுத்து அமர்த்திக் கொண்ட ஒரு சேவையாளர் எனக்கு தரக்குறைவான சேவை செய்வாரானால் நான் நிச்சயமாகவே போராடுவேன்; நான் ஒருக்காலும் ஏறியிராத விமானத்திலுள்ள தரக்குறைவான சேவையைக் கண்டிக்க எனக்கு எந்த தார்மீக உரிமையுமில்லையென்று எண்ணுகிறேன்;

ஊழிய நிறுவனங்களும் கூட அதுபோல சுயசார்பும் சுதந்தரமும் கொண்ட‌ தன்னார்வ அமைப்புகளாக விளங்குகிறது; அவற்றை நம்புபவர்கள் அவர்களது சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்; போலியானது சீக்கிரமே அழிந்துவிடும் என்பது வேதத்தின் நடைமுறையாகும்;

// த‌ங்க‌ளுக்கு நேர‌ம் போகாம‌ல் என்னையும், என் த‌ள‌த்தையும் விம‌ர்ச‌ன‌ம் செய்துக்கொண்டிருக்கிறார்கள் //

ஐயோ பாவம், இவர்களுக்கு சாவுமணி அடிக்க நான் கூட வராவிட்டால் யார் வருவார் என்றே எனது பொன்னான நேரத்தை இங்கே செல‌விடுகிறேன்; இதுவே ரொம்ப லேட்,ஆமா..!

// உங்க‌ளை ந‌ட‌த்தும் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் பேசும் "தேவ‌ன்" உங்க‌ளிட‌த்தில் பேசுவ‌தில்லையா? //

மேய்ப்பனும் மந்தையும் என்பது வேதத்தின் நடைமுறையாகும் (பேதுரு,பவுல்,தீமோத்தேயு...நிருபங்கள்..!) ஒங்க புள்ளிங்களுக்கு இஸ்கோல் புஸ்தகத்த எல்லாம் வாங்கி குடுத்துட்டு வூட்லயே வெச்சுக்கலாமே,எதுக்கு இஸ்கோலுக்கு அனுப்புறீங்கோண்ணா..?

// இனியும் இந்த‌ த‌ள‌த்திற்கு வ‌ருகை த‌ந்து பின்பு சொந்த‌மாக‌ த‌ள‌ம் தொட‌ங்கிய‌வ‌ர்க‌ள், உங்க‌ளிட‌ம் உங்க‌ள் தேவ‌ன் என்ன‌ பேசுகிறாரோ அதில் மாத்திர‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ள், என்னையோ என் த‌ள‌மான‌ truthseekersஐ ப‌ற்றி அநாக‌ரீக‌மாக‌ எழுதாதீர்க‌ள், அபாண்ட‌மாக‌ எழுதாதீர்கள் //

அடடா...விட்டா ஒங்க தயவுலதான் எங்க வீட்டுல அடுப்பு எரியுதுன்னு சொல்வீங்க போலிருக்கே...ஒங்க க்ரூப் மொகத்திரையை கிழிக்கச் சொல்லியே ஆவியானவர் அனுப்பியிருக்காருங்ணா...அதான் மொத வேலயே...மத்ததுக்கெல்லாம் நெறய பெரியவங்க இருக்காங்க...

அப்புறம் அநாகரீகமா எழுதிறவங்களுக்கு தான் அதன் வேதனையும் வலியும் அதிகம் தெரியும் என்ற கொள்கையின்படி நீங்கள் ஊழியர்கள் செய்ததாகவும் செய்வதாக்வும் கூறும் அவதூறுகளை உங்கள் தளத்திலிருந்து நீக்கிவிட்டு பைபிள் மாத்திரம் படித்து சத்தியத்தினை மட்டும் உட்கார்ந்து தேடுங்க..தேடுங்க...தேடிக்கிட்டே இருங்க...எங்களுக்கு எந்த ஆட்சேபணையுமில்லை;அப்போதுதான் ஆரோக்கியமான விவாதம் துவங்கும்;மற்றபடி இதுவே தொடரும்..!


-- Edited by chillsam on Sunday 31st of January 2010 02:57:42 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனதருமை வாசக நண்பர்களின் கவனத்துக்கு நான் கொண்டு வரவிரும்பிய எச்சரிக்கை செய்தி ஒன்றுக்கு எதிர் தரப்பிலிருந்து காரமாக மறுப்பு வந்துள்ளது..!

'வம்பை விலைகொடுத்து வாங்குவது '
போன்று அவசரப்பட்டு விட்டோமோ என  ஒரு கணம் தடுமாறினேன்;ஏனெனில் ஆரோக்கிய உபதேசத்தைக் கைக் கொள்ளும் பெரும்பான்மையினர் அமைதியாக இருக்கும்போது தனியொருவனாக நான் என்ன செய்துவிடமுடியும்? ஒருவேளை இவர்களுக்கு பதிலளிக்காமலிருப்பதே சரியானதாக இருக்குமோ?

'இவர்கள் தவறானவர்கள்' என்று எனது ஆவியில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது; நான் எப்போதும் அந்த சத்தத்துக்கு செவி கொடுத்துப் பழகிவிட்டேன்; மற்றபடி எந்தவித தாட்சண்யமுமில்லாமல் எத்தனை நஷ்டம் வந்தாலும் எதிர்த்து வருகிறேன்; அல்லது விலகிவிடுகிறேன்;

ஆரோக்கிய உபதேசத்தை ஆராய்ந்து சத்தியத்தில் செழிப்படைய உதவும் வாய்ப்புகள் இருந்தும் அநேகர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுகிறதில்லை;ஆனால் துருபதேசக்காரர்களைப் புரிந்துக் கொள்ளாமல் அவர்கள் ஏதோ மாற்றம் விரும்பி- புரட்சிகரமாக எழுதுவதைப் போல எண்ணிக்கொண்டு அநேக அப்பாவிகள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்;

அவர்களது துன்மார்க்கமான போதனைகளைத் தடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அவற்றைக் குறித்து எச்சரிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்;

இந்த பாவிகள் ஒரு கட்டத்தில் "யெகோவா சாட்சிகள்" என்பது என்ன அத்தனை மோசமான கெட்ட வார்த்தையா என என்னையே யோசிக்க வைத்துத்  தடுமாற வைத்துவிட்டார்கள்;

யெகோவா தேவனுக்கும் அவரது மாட்சிமைக்கும் சாட்சிகளாக இருப்பது தவறே இல்லை; ஆனால் அவரால் இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்த சாட்சியாக நான் எதைச் சொல்லுகிறேன் என்பதிலேயே எனது முழு விசுவாசமும் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது; அதைக் குறித்த தெளிவையடைவதே சத்தியமாகும்;

மற்றபடி சாத்தானின் உபதேசங்களுடன் வந்துள்ள இவர்கள் பரிசுத்த அப்போஸ்தலர்களிடம் வழங்கிய (சத்தியம்,மணவாட்டி,சிறுமந்தை,பரமபிதா...போன்ற‌) சொற்களைப் பிரயோகம் செய்வதற்கு எந்த உரிமையுமில்லை;

இயேசுகிறிஸ்துவைக் குறித்தே சரியானதை அறியாத 'பொறம்போக்கு' (மன்னிக்க:புறசாதியினர்) பரமபிதாவை எப்படி அறியமுடியும்?

பரிசுத்தாவியானவரின் ஆள்தத்துவத்துடன் கூடிய செயல்பாட்டை அறிந்திராதவன் எவ்வாறு சத்தியத்தைக் குறித்து அறிந்திருக்கமுடியும்?

ஆக திரித்துவ தேவனின் தெய்வ‌த்துவத்தை ஏற்காதவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பிரமாணங்களையும் கிருபையையும் குறித்தும் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை;

"நித்தியஜீவன்" என்ற தளத்தின் பெயரும் "நித்திய ஜீவனைப் பெறுவதில் மனிதனின் பங்கு " என்ற கட்டுரையும் நித்திய ஜீவனைக் குறித்த கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறதல்லவா?

"நித்தியஜீவன்" என்ற இந்த தளத்தில் வரும் கருத்துக்களைப் படித்து  நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளமுடியுமா,என்பதே எனது கேள்வியாகும்;

இவர்கள் நித்திய ஜீவனை யாருக்கும் தரமுடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்;ஆனாலும் இவர்களுடைய போதனையை வாசிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதைக் கண்டிக்கவே அதுபோன்று எழுதினேன்;

எனவே நான் அவ்வாறு குறிப்பிட்டதில் எந்த தவறுமில்லை;நான் எழுதியதை இதுவரை மறுத்தது இல்லை; எனவே வீணாக பயப்படவேண்டாம்;நான் மறுத்தாலும் வாசகர் மறக்கமாட்டார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக கண்காணிக்கும் ஆவியானவர் இருக்கிறார்;

"விஷஜந்து" தன்னை "விஷஜந்து" என நிரூபிக்க வேண்டுவதை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்;பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவனுடைய வஞ்சகத்தினால் பிரமாணங்களை மாற்றிப் போதிக்கிற உங்களுக்கு நான் எதைச் செய்து அல்லது எதைச் சொல்லி பொய்யனானேனோ தெரிய‌வில்லை;சத்தியத்தைச் சொல்லி சத்துருவானேனோ?

உங்களைத் திருத்துவதோ அல்லது ஒத்துப்போவதோ என்னால் இயலாத காரியம்;ஆனால் சிலராவது உங்கள் மாயப் போதகத்தில் விழாமல் தடுக்கமுடியும் என்று நம்புகிறேன்;

உங்கள் பின்குறிப்பும் உங்கள் அச்சத்தையே காட்டுகிறது; விவரமாக விவாதித்தால் உங்கள் வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்ற அச்சத்தாலேயே நீக்கிவிடுவோம் என்று மிரட்டுகிறீர்கள்;

நீங்களெல்லோரும் ஒரே நோக்கத்துடன் வெவ்வேறு தளத்திலிருந்து பிரிந்திருந்து செயல்படுவது எனக்குத் தெரியும்;கிறிஸ்துவின் சபை ஏனோ தூங்கிக் கொண்டிருக்கிறது;அது எழுந்ததும் உங்கள் வேஷமெல்லாம் வெளியரங்கமாகும் என்பது உறுதி..!


அதுவரை அடையாளம் காட்டும் எனது பணியும் தொடரும்;உங்கள் தளத்தில் எழுதினால் தானே நீக்குவீர்கள்,உங்களது துன்மார்க்கமான ஒவ்வொரு வரிக்கும் இங்கே எனக்குத் தெரிந்த பதிலைப் பதித்து வைப்பேன்;அதனை வரும் சந்ததியினர் மேலும் ஒழுங்குபடுத்துவார்கள்; நீங்கள் "சத்திய மோசடியாளர்கள்" என்பதை உலகறியும் நாளும் நெருங்குகிறது..!


NB: உங்களை இன்னும் விளம்பரப்படுத்துவதை எனது கடமையாகவே எண்ணுகிறேன்; எனவே நன்றி சொல்லி என்னைத் தனிமைப்படுத்திவிடவேண்டாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எச்சரிக்கை: யெகோவா சாட்சிகளின் மாறுவேடத்தில் செயல்படும் "வேதாகம மாணவர்" குழுவுடன் இன்னொரு விஷ ஜந்து "நித்திய ஜீவனை"த் தருவதாகக் கூறிப் புறப்பட்டிருக்கிறது..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சூடான செய்தி:"இறைவன்" தளத்தின் விவாத மேடையில் "யெகோவா சாட்சிகளின்" திருவிளையாடல்கள் நிறைவுபெற்றது;

கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக..!


-- Edited by chillsam on Monday 25th of January 2010 09:14:56 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard