Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்...
Permalink  
 


Jan 12, 2010 அறிமுகம் இறைநேசன்

biggrinஒரே நாளில்
சுமார் ஆறு மணி நேரத்துக்குள் இத்தனை அழகான தளத்தை அமைத்து கொடுத்த நண்பர் சுந்தர் அவர்களை மனதார பாராட்டுகிறேன்..!biggrin


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Jan 13, 2010 திரித்துவம் பற்றிய எனது கருத்து!

இப்படி திரித்துவத்தைப் பிரித்துப்போட்டு மேய்வதில் ஐயாமாருக்கு அப்படி என்னத்தான் சந்தோஷமோ..?

வேதம் திரித்துவம் என்ற எதையும் போதிக்கவில்லை உண்மையே;ஆனாலும் திருத்துவத்தைக் குறித்து அதிகமாகவே வாசிக்கமுடியும்;

//புதிய ஏற்பாட்டு நிருப ஆக்கியோன்களான பவுலோ, பேதுருவோ, யோவானோ, யாக்கோபுவோ அந்தத் திரித்துவக் கொள்கைகளுக்கு இசைவாக எழுதியுள்ளார்களா என நிதானமாக ஆராய்ந்து பார்த்தால், நிச்சயமாக இல்லை என அறியலாம் //

இதுவே சரியான வேதப் புரட்டுதான்; நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு பேருமே யூதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்; யூதர்களின் வைராக்கியமான விசுவாசத்தின்படி "யாவே" தேவனுக்கு இணை வைத்தல் என்பது மரணத்துக்கேதுவான குற்றமாகும்;

அதையே இன்று இஸ்லாமியர்கள் வலுவாகப் பிடித்துக் கொண்டார்கள்; நீங்களும் கூட தங்களை இஸ்லாமியராக மாற்றிக்கொள்ளமுடியும்; இது போன்ற எண்ணங்கொண்டவர்களே எளிதாக முஸ்லிமாக முடியும்; மற்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்;

ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவரது சீடர்களோ புதிய தேவனையோ அல்லது அவருக்கு இணையானதொன்றையோ போதிக்கவில்லை;ஒன்றான மெய்த் தேவனுடனான தங்கள் தொடர்பையே போதித்தனர்;அதற்கே அவர்கள் அனைவரையும் கொன்று போட்டனர்;

இந்த நிலையில் "இயேசுவே தேவன்" என்று கூற எப்படி அவர்களுக்கு தைரியம் வந்தது?

அதற்குக் காரணமாக இருந்தது என்ன?

"யாவே" தேவனைக் குறித்து யூதர்கள் அறிந்திராத எதைப் புதிதாக அவர்க
ளுக்குப் போதித்துவிடமுடியும்?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


Jan 13, 2010
இறந்தவர்களின் ஆவி மீண்டும் வருவது பற்றி!
பிரபலமான வேதப் பண்டிதர்களே தடுமாறும் கடினமானதொரு பொருளில் கருத்து கேட்கிறீர்கள்;

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்களே "சாமுவேலின் ஆவி" எழும்பி வந்தது பற்றிய வேத காரியத்தில் அது உண்மை என்றும் கடவுளின் விசேஷ அனுமதியின் பேரில் எழுந்து வந்தார் என்றும் குறிப்பிடுகிறார்;

ஆனாலும் என்னுடைய ஜெப ஊழிய அனுபவத்தில் இந்த காரியத்தைக் குறித்த எனது கருத்து என்னவென்றால், பேய் பிடிக்கும் யாருக்கும் சீனாவில் தற்கொலை செய்துகொண்டவரோ அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டவரோ வந்து பேசுவதில்லை;

பொதுவாக இது மனநலக் கோளாறு அல்லது தீயசக்திகளின் மாயம் அவ்வளவே;மற்றபடி மரித்தவரின் ஆவி மீண்டும் வந்து பேசுவது என்பது வேதத்தின்படி சாத்தியமற்ற கூற்றாகும்;

மரித்தவரைக் குறித்து பாதிக்கப்பட்ட நோயாளியின் ஆழ்மனதில் பதிந்துள்ள காரியங்களே இப்படி வாக்குமூலமாக வெளிவருகிறது;

என்னைப் பொருத்தவரை கேள்வி பதில் நிகழ்ச்சியினை நடத்தாமல் "ஒரு அறை" விட்டால் எல்லாம் சரியாகிவிடும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Jan 12, 2010 பிழையில்லாத தமிழ்..!

தமிழ் மொழியானது நமது தாய்மொழி என்பதால் அதில் இயன்றமட்டும் எழுத்துப்பிழையில்லாது வரைய நாம் முயற்சிக்கவேண்டும்.


//
அன்பு சகோதரரே!
தங்கள் ஆலோசனைக்கு நன்றி! நிச்சயமாக சரியான கருத்து!
ஆனால எனது கருத்துப்படி சொல்ல வேண்டிய கருத்துக்களை புரியும்படி சொல்லவேண்டும் என்பதை தவிர பிழையில்லாமல் எழுத முயற்ச்சிப்பது  நல்லது என்பதே!
தமிழை வளர்க்கவேண்டும் என்பது நமது தளத்தின்  நோக்கமல்ல அதற்க்கு எத்தனையோ உலக மன்றங்கள் இருக்கின்றன.  மாறாக எம்மொழியில்  எழுதினாலும்  ஆண்டவரை பற்றி அவர் வெளிப்பாடுகள் பற்றி  அறியவேண்டும் என்பதே நமது நோக்கம்.

மேலும் இது தங்க்லீஷ் முறையில் தமிழில் எழுதப்படுவிறது. நாம் ஓன்று நினைத்து எழுத அது ஓன்று வருகிறது, பின்பு திருத்தம் செய்யவேண்டியுள்ளது.
குழந்தைகள் மழலையில் தவறாக பேசினாலும் அது நமக்கு இனிப்பதில்லையா அதுபோல் இங்கு யார்  எப்படி எழுதினாலும் நிச்சயம் வரவேற்ப்பது  நல்லது என்றே நான் கருதுகிறேன்.//

நண்பரே தங்கள் கருத்து முழுவதும் ஏற்புடையதல்ல; மழலையின் பேச்சைக் கேட்பதற்கும் எழுதியதை வாசிப்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு; இங்கே அத்தனை பொறுமைசாலிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; அது ஒரு துன்பம் அல்லது அவஸ்தையாகவே இருக்கும்;

அயல்நாட்டிலிருந்து வந்த தேவபிள்ளைகள் இதுபோல நினைத்திருந்தால் நமக்கு நல்லதொரு தமிழ் வேதாகமம் கிடைத்திருக்குமா?

தங்களைப் பிழை திருத்துவதாக எண்ணவேண்டாம்; இதுவும் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும்;உதாரணமாக,

//முயற்ச்சிப்பது  நல்லது // மற்றும்
// வரவேற்ப்பது  நல்லது //
ஆகிய வரிகளில் முறையே
"ச்",மற்றும் "ப்" அவசியமில்லை;

நானும் கூட தமிழ் இலக்கணத்தை முறைப்படி அறிந்திருக்கவில்லை; தட்டச்சும் தெரியாது; ஆனாலும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் இருந்ததாலேயே இது சாத்தியமாயிற்று;

http://yesudas.rs.googlepages.com/WOG_UniPad.zip

http://www.christiansmobile.com/Default.aspx?tabid=161

தாங்கள் மேற்கண்ட தொடுப்புகளிலிருந்து வசதியான எழுத்துப் பலகைகளைப் பெறமுடியும்.


இதனை அறிவுறுத்தலாக அல்ல,ஆலோசனையாக அல்லது வேண்டுகோளாகக் கொள்ளவும்..!


த‌ங்கள் தாழ்மையுடன் கூடிய அன்புக்கு நான் என்றும் கட்டுப்பட்டிருப்பேன்;
தளத்தை அமைப்பதில் நான் சந்தித்த அனுபவங்களில் சில...

"Recent post"
எனப்படும் வாய்ப்பை நீங்கள்
http://www.activeboard.com/admin/index.spark?autoPage=forumControlBar&sparkKey=ae599550e2af5868de1a433fa9c26089b0&aBID=134567

இங்கிருந்து பெறலாம்;

இது அண்மைப் பதிவுகளை விரைவாக அடைய உதவுகிறது.

வண்ணங்களுடன் கூடிய எழுத்துப்பலகை mozilla firefox-இல் மட்டுமே கிடைக்கிறது.

இன்னும் ஏதேனும் தெரிந்தால் எனக்குக் கூறவும் அல்லது கேட்க‌வும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Jan 13, 2010 என்னைப் பத்தி...(chillsam)

என்னைப் பத்தி எனக்குத் தெரியாது
எந்தன் வாழ்வை என்னால் சொல்லமுடியாது
என் பாதை தெரிந்தவர் என் வாழ்வை அறிந்தவர்
என் நேசர் ஒருவரே என் இயேசு நடுவரே..!

அநாதையாய் நான் அலைந்தபோது
அன்போடு அரவணைத்ததேது
அவர் அன்பின் கரங்களே அவர் பாசக் கரங்களே
பாதம் தொட்டு பணிவேன் இப்போது
(இது எனக்குப் பிரியமானதொரு சாட்சிப் பாடல்..!)


இறைநேசன் :

நண்பரே, இதையே உங்கள் அறிமுகமாக தனி தொடுப்பில் பதிந்துவிடலாமே..!

தவறேதும் இல்லை. 

=======================================================

எனது இனிய நண்பரது வேண்டுகோளை ஏற்று இதனைப் பதிக்கிறேன்;
இதற்கு மேல் என்னைப் பற்றி யாரும் எதுவும் கேட்கவோ என்னைப் பற்றி அறிந்தவற்றை இங்கே பதிக்கவோ கூடாது என்று நான் சொல்ல நினைத்தாலும் நட்பு என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் தானே என்று மனம் சொன்னாலும் இன்னொரு புறம் அச்சமாகவும் இருப்பது போல் தோன்றினாலும் என்ன ஆனாலும் சரி எனது நண்பர்கள் தானே என்ன செய்துவிடப்போகிறார்கள் என்றதொரு அசட்டு துணிச்சலில் இதோ மனதில் தோன்றியதையே எழுதியிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்;மிக்க நன்றி..!

//
அன்பு சகோதரர் சில்சாமுக்கு எனது வேண்டுகோளுக்கு இணங்கி தனியாக உங்களை அறிமுகம் செய்துகொண்டதற்கு மிக்க நன்றி!  தங்களைப்பற்றிய மேற்ப்படி தகவல் எதுவும் வேண்டாம் அனைத்தும் ஆண்டவருக்கு தெரிந்தால் போதும்!
தங்களின் செய்திகளில் பல ஆழமான கருத்துக்கள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன் மற்றும் மற்ற மார்க்கங்களைபற்றிய  அடிப்படை  அறியும் உங்களிடம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.  அனால் என்னை பொறுத்தவரை உங்கள் பதிவுகளில் தேவைப்படும்  சில மாற்றங்களை சுட்டிகாட்ட விரும்புகிறேன் அதன் அறிவுரையாக எடுத்துகொள்ளாமல் எனது ஆலோசனையாக எடுதுகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
சில கருத்துக்களை தவிர "எல்லா கருத்துக்கும் எதிர்வாதம்" என்ற கொள்கையில் நீங்கள் வாதிடுவதுபோல் எனக்கு அறியமுடிகிறது. எதிர் வாதம் செய்யவேண்டும் என்றால் எல்லா கருத்துக்களுக்கும் நிச்சயம் செய்யமுடியும் ஆனால் நாம் நமது கருத்து என்னவென்பதை சொல்வதிலேயே ஆர்வம் காட்டுவது  நல்லது என்று கருதுகிறேன்.
"வார்த்தைகளை சரியாக கையாள்வதில் சற்று யோசனை தேவை" என்று கருதுகிறேன். தங்களில் பல பதிவுகள் கிண்டல் நிறைந்ததாக இருக்கிறது. அப்படி பதிவது தங்களின் விசேஷ குணமாக இருக்கலாம் ஆனால் அது பிரசங்கம் செய்யும்போது பலருக்கு பயனளிக்கும் ஆனால்  நாம் இங்கு விளையாட்டாக   விவாதிக்கவில்லை. உன்னதமான தேவனைப்பற்றி விவாதிக்கிறோம் இதில் சொல்லவேண்டிய கருத்துக்களை தெளிவாக சொல்லிவிட்டால் எங்களுக்கு உங்கள் கருத்தில் உள்ள உண்மையை அறியமுடியும்.
புரிந்துகொண்டமைக்கு நன்றி. நிச்சயம் விவாதத்தில் பங்குகொள்ளுங்கள்!   //

தங்களது இந்த கருத்தின் காரணமாகத் தொடர்ந்து பதிவிட சங்கடமாக இருந்தது;ஆனாலும் எனது தரப்பை சற்று விளக்க விரும்புகிறேன்;

சும்மா
"வாயைக் கிளறிய" தளத்திலிருந்து என்னை நான் விலக்கிக் கொண்டேன்; காரணம் அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளதொரு வார்த்தைதான்; "இங்கே யாரும் உங்களை அழைக்கவில்லை" என்ற வார்த்தையின் கடுமை அவர்களுக்குத் தெரிந்ததோ தெரியவில்லையோ அதுபோகட்டும்;

நான் அதுபோல "வாயைக் கிளற" நீங்கள் சொல்வது போல வேண்டுமென்றே ("எல்லா கருத்துக்கும் எதிர்வாதம்" )எதையாவது எதிர்த்து எழுதவில்லை;

என்னுடைய கருத்து சுதந்தரத்துக்கும் வேதப் பிரமாணத்துக்கும் உட்பட்டே எழுதி வருகிறேன்;

நீதிமொழிகள் 20:5 இல் நாம் வாசிப்பது என்ன,"மனுஷனுடைய இருதய‌த்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது;புத்திமானோ அதை மொண்டெடுப்பான்"

இதன் அடிப்படையில் நான் ஏதாவது வம்பு வளர்த்தேனோ தெரியவில்லை;

நான் எப்போதுமே எதிர்தரப்பைவிட வாசகரையே மனதில் வைத்து எழுதுகிறேன்; எனவே என்னுடைய எழுத்துக்கள் வாசிக்க சுவார‌சியமாக இருப்பினும் என்னுடைய எதிர்தரப்பிலுள்ள நண்பருக்கு வருத்தத்தைக் கொடுக்கலாம்; அதற்காக நான் கவலைப்படுவதில்லை; நட்பைப் பேண வேறு வழிமுறைகளுண்டு;

இன்னும் உங்களது சர்ச்சைக்குரிய விவாதங்களில் நான் பங்கேற்கவில்லை; காரணம்,நான் என்னுடைய கருத்தை முழுவதும் எடுத்து வைத்த பிறகு உங்களுக்கெல்லாம் பேச ஒன்றுமிராது எனும் நம்பிக்கையே..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Feb 4, 2010 சகோதரர் ரவி அவர்களை வரவேற்கிறோம்!

அன்பு சகோதரர் ரவி அவர்களே, கருத்தில் தெளிவடையவே இங்கே கலந்துரையாடுகிறோம்; யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்கப்போவதில்லை; அப்படியே கற்றுக் கொண்டாலும் தவறில்லை;

ஆனால் தாங்கள் தங்கள் முதல் பதிவிலேயே என்னை குழப்பவாதி என்று தாக்கியதே வருத்தமாக இருந்தது;எனவே குழப்பம் ஏற்படுத்தும் எனது பதிவினை நீக்கிவிட்டேன்;

பதிவு நாராயணனைப் பற்றியதாக இருந்ததால் என்னைத் தாங்கள் கலகம் செய்யும் நாரதன் என்று எண்ணிவிட்டீர்களோ என்னவோ..!

பொதுவாக நான் நகைச்சுவை உணர்வுடையவன்;இயற்கையையும் கலைகளையும் இரசிப்பவன்;ஆனால் இங்கே சத்தியத்தினிமித்தம் நான் சத்துருவைப் போலிருக்கிறேன்;

தங்கள் பதிவுக்கான தொடர்ச்சியை நீங்கள் நமது "யௌவன ஜனம்"
தளத்தில் காணலாம்;தாங்கள் விரும்பினால் அங்கே பதிவிடலாமே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Feb 9, 2010 பாதரட்சையை போட்டுகொண்டு ஆலயத்தில்...

மோசேயிடம் சொல்லப்பட்ட சூழ்நிலை முற்றிலும் வேறானது;
ஆனால் இன்றைய போதனையின்படி ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுடைய ஆல‌யம் என்பதாலும் வானத்தின் கீழே ஆலயம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் இல்லாததாலும் திருட்டு பயம் காரணமாகவும் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனை ஸ்தலத்துக்குள் செல்லலாம்;அல்லது அவை 30 பேருக்கு அதிகமில்லாத ஒரு சிறு குழுவாக இருக்கட்டும்;

செருப்பு போட்டுக்கொண்டு சென்றாலும் ஆராதனை நேரத்தில் கழட்டிவிட்டு ஆராதிப்பதே பாரம்பரியமாகும்;இதைக் குறித்த நேரடியான போதனையில்லாவிட்டாலும் அது ஒழுங்கு சம்பந்தமானது;


மற்றொரு பார்வையில் பாதரக்ஷையே ஆரோக்கியமானதுமாகும்; சில குளிர் பிரதேசங்களிலும் இது தவிர்க்கமுடியாதது; சுத்தம் சம்பந்தமான காரணங்களில் உள்ளாடையைக் குறித்தும்கூட வேதத்தில் கட்டளை உண்டு;

நாமே தேவனுடைய ஆலயம் என்ற போதனையின்படி கிறிஸ்தவர்கள் ஒருபோதும் செருப்பு போடவே கூடாது; அது ஆவிக்குரிய அர்த்தம் எனில் செருப்புடன் ஆராதனையில் பங்கேற்பது ஆவி மனிதனை பாதிக்கப்போவதில்லை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Feb 13, 2010 பெண்கள் பேன்ட் அணியலாமா
ஆண்கள் பேன்ட் அணியலாமென்று வேதம் சொல்லுகிறதா?

ஆண்மை குறைவுக்கு முதல் காரணமே இறுக்கமான ஆடைகள் தான் என்று சொல்லப்படுகிறது;எனவே வேதம் சொல்லாத உள்ளாடைகளை அணியும் ஆண்களும் பாவிகளே;

கருத்தடை சாதனங்களும் வேதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை;
எனவே அதுவும் பாவமே;

அன்றைக்கு மின்சாரம் இல்லாத காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாலை மயங்கும் வேளையில் தடுமாற்றம் உண்டாகாத‌படியிருக்கவே இந்த கட்டளைகள் யூதருக்குக் கொடுக்கப்பட்டது;

இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற மாற்று உடைகளையணிந்துக் கொண்டு சென்று ஒருவரையொருவர் வஞ்சித்துவிடாதிருக்கவும் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது;

கடைசியாக பெண்கள் சுடிதார் அணியலாமா என்றும் சொல்லிவிடுங்கள்; ஏனெனில் அதே போன்ற உடையை பஞ்சாபியர் இருபாலரும் அணிகின்றனர்;

யூதத்தின்படியும் இஸ்லாத்தின்படியும் ஆண்கள் முடியை மழிக்கக்கூடாது; அப்படியானால் மீசையை மழிக்கும்
ஆண்களும் குற்றவாளிகளா?

கிறிஸ்தவர்களின் கண்கண்ட தெய்வமான இயேசுகிறிஸ்துவை இஸ்லாமின் அல்லா போல அடிப்படைவாதியாகவும் பழமைவாதியாகவும் மாற்றிவிடாதீர்கள்;

வேறு ஏதாவது ஆகிற வேலையப் பாருங்கைய்யா..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Feb 14, 2010 கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின்மகன் அவனை ஒடுக்குவதில்லை.

அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.

அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;

என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;

அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.

ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

(சங்கீதம்.89:19-37)


குறிப்பிட்ட இந்த வேதப்பகுதி எனக்குப் பிடித்தமானதும் நான் அதிகம் தியானித்ததுமான வேதப் பகுதியாகும்;

இங்கே இன்னும் வெளிப்படாத கிறிஸ்துவானவரின் உலகளாவிய திட்டங்கள் நிழலாட்டமாகக் கூறப்பட்டுள்ளது;

// தண்டிப்பேன்...ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும்  //

எனும் குறிப்பிட்ட வரிகளுக்காகவே நண்பர் சந்தோஷ் அவர்கள் இந்த வசனங்களை பதித்திருப்பார் என்றெண்ணுகிறேன்;

இந்த பொருளில் மற்றொரு வசன பகுதியையும் குறிப்பிடமுடியும்;

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

(எபிரெயர்.10:26-31)

இதன்படி "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்"(எபேசியர்.2:8) என்று வேதம் கூறினாலும் கீழ்ப்படியாமல் துணிகரமாகப் பாவம் செய்வோருக்கு அதைவிட பயங்கரமான தண்டனைகள் இம்மையில் மாத்திரமல்ல,மறுமையிலும் அது பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் என வேதம் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகப் போதிக்கிறது.

"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்."
(யோனா.2:8)

2:8 க்கும் மற்றொரு 2:8 க்கும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா..?

ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
(எபிரெயர்.6:4 6)

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.(எபிரெயர்.12:15 17)

ஆகிய வேதப்பகுதிகள் தேவன் எந்த காலத்திலும் பாவத்தைப் பொறுத்துக் கொள்ளுபவரல்ல என்பதை விளக்கும்;

எனவே இரட்சிப்பை நிறைவேற்றாமற் போனாலும் அதற்குரிய தண்டனையை மாத்திரம் இம்மையில் அடைந்து பிறகு மறுமையில் நித்தியத்துக்குள் பிரவேசித்துவிட கிருபை உதவும் என்றெண்ணுவது அறியாமையாகும்;

உதாரணத்துக்கு ஒரு பிரபலமான திரைப்படத்தில் பிழையான பாடலுக்கு பரிசைக் கேட்டு கெஞ்சும் ஏழைப் புலவன் பிழைக்கேற்ற பரிசைக் குறைத்துக் கொண்டு மீதத்தையாவது கொடுக்க மன்னனை வேண்டுவானே அதுபோன்றதல்ல இரட்சிப்பும் அதனைத் தொடரும் நித்திய ஆசீர்வாதங்களும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Mar 13, 2010

பொறாமை
என்பது த்ன்னைவிட உயர்நிலையை அடைந்தவர் மீதான இயலாமை கலந்த தாழ்வு மனப்பான்மையாக இருக்குமானால் அதிலிருந்து விடுபட்டு மேம்பட்ட நிலையை- அதாவது யார் பாதித்தாரோ அவரைவிட மேலான நிலைக்கு உயர என்ன செய்யவேண்டும் என்பதையும் சிந்திக்கவேண்டும்;

ஏனெனில் போட்டி மனப்பான்மையே சிறப்படைய உதவுகிறது; போட்டி மனப்பான்மையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது பொறாமையுணர்வு கலந்தே இருக்கும்;

எனவே வேதத்தின் அடிப்படையிலும் வாழ்வியல் ஆதாரத்தின்படியும் மாற்று உத்வேக உணர்வையூட்டும் ஆலோசனைகள் சொல்லப்படுமானால் இந்த பகுதியானது நிறைவடையும்.



சேலத்திலிருந்து சத்தியராஜ் எழுதுகிறார்...

நாம் பொறாமையை வெல்வதற்கு அம்பானி பில்கேட்ஸ் போன்ற விஐபி க்கள் மீது அதை வைக்கலாம் என்கிறீர்கள்;

அது ரொம்ப பெரிய பொறாமை அல்லவா?

ஆனால் அதுபோன்ற பெரிய ஆட்கள் மேல் பொறாமை வைப்பதற்கு பதிலாக (அவர்களைப் போல உயர்வதற்குப்) போட்டியிடலாம் என்பது என் கருத்து.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Mar 22, 2010

Public Access Link:

http://chillsam.activeboard.com/
Users Online:1 and 0 guest(s)
Total Posts:257
Total Topics:85
Newest User:devapriyaji
Total Users:20
Total Page Views:19646
Views This Month:4732 / n/a
Average Views:265.5 / day


இது எனது தளத்தின் இன்றைய‌ புள்ளிவிவரமாகும்;
இந்த சாதனை வாசக நண்பர்களின் அமோக ஆதரவினாலேயே சாத்தியமானது;அநேகர் இதில் பங்கேற்காவிட்டாலும் தொடர்ந்து பார்வையிட்டுச் செல்லும் தளமாக வேகமாக வளர்ந்துவ்ருகிறது;

எனவே நண்பர்கள் தங்களை படைப்புகளை "யௌவன ஜனம்" தளத்தில் பதித்து தங்கள் சிந்தனைகள் சரியான வேகத்தில் பயணிக்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்;நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Mar 29, 2010

// பாதாளத்தில் கள்ளன் :
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் பாலமாய் உள்ளவன். இயேசுவின் வாக்குப்படி பரதீசு சென்ற இவன் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் இங்கே இருந்து விட்டு பிறகு பாதாளத்திற்க்கு அனுப்பப்பட்டான். //

இந்த கூற்றை வேதத்தின் ஆதாரத்துடன் சொல்லுகிறீர்களா?

// பல அடுக்குகளை கொண்ட இந்த பாதாளத்தின் வழியே கடந்து சென்றுதான் பரலோகத்தை அடைய முடியும். //

பாதாளம் கீழான இடத்தையும் பரலோகம் மேலான இடத்தையும் குறிக்கிறது என்பது எனது புரிதல்;ஆனால் நீங்கள் கூறுவதோ விட்டலாச்சார்யா படம் போல இருக்கிறதே..!

இதுபோன்ற சுய முயற்சியினாலான போதனைகளே மார்க்கபேதங்களுக்குக் காரணமாக இருப்பதால் அஞ்சுகிறேன்;

மேலும் தங்களது விசுவாசத்தையும் சபைப் பின்னணியினையும் அதாவது தங்களை ஆவிக்குரிய வாழ்வில் வழிநடத்திய ஊழியரையும் குறிப்பிட்டால் இன்னும் அதிக பிரயோஜனமாக இருக்கும்;நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 14, 2010

இந்த பிரச்சினையில் வட்டார தன்மையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது; அதாவது ஒரு குறிப்பிட்ட போதனையானது வேதத்தின் அடிப்படையிலானதாக இருக்குமானால் அது உலகமுழுவதிலுமுள்ள கர்த்தருடைய சபைகளுக்குள் பொதுவாக பின்பற்றப்படுவதாக இருக்கவேண்டும்;மற்றபடி அது அவரவருடைய பக்திவிருத்திக்கேற்ப அவரவரே ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கும்;அது வேத சட்டத்தை பாதிக்காது;

"புது சிருஷ்டியே காரியம்"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 17, 2010

அன்பு நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு "யௌவன ஜனம்" எனும் தளத்தைக் குறித்தும் சற்று ஞாபகம் இருக்கும் என்றெண்ணுகிறேன்;அதன் நிர்வாகியான நான் மேற்கொள்ளும் சில நடைமுறைகள் காரணமாக அனுதினமும் எனது தளத்தை அதிகமானோர் கவனித்து செல்லுகின்றனர்;

எனவே தங்களது மேலான கருத்துக்களை அதிகமானோரைச் சென்றடைய
"யௌவன ஜனம்" தளத்திலும் எழுத அன்புடன் அழைக்கிறேன்;தங்கள் நண்பர்களுக்கும் நமது தளத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டுகிறேன்;

எனது இன்றைய சிந்தனையானது ,கிறித்தவ மார்க்க நம்பிக்கையாளர்களான நாம் தமிழர்களாக ஒன்றிணைக்கப்பட்டு நம்மை நோக்கி அதாவது நமது நம்பிக்கையைக் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சமரசமில்லாத விதத்தில் பதிலளிக்க ஆயத்தப்படவேண்டும்;

இன்னும் தளம் தொடர்பான தங்களது ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் வரவேற்கிறேன்;நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 15, 2010

"புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்."(கொலோசெயர்.1:27)


மேற்கண்ட வேதவாக்கியத்தின்படி மிக எளிமையாகவே நான் அறிந்திருக்கிறேன்,மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் அல்ல,ஒரு அங்குலத்துக்கு அப்பால் இருந்தாலும் சாத்தான் என்னை நெருங்கமுடியாது;ஏனெனில் தேவ மகிமையானது இன்று எனக்குள் இருக்கிறது;

எனவே இதுபோன்ற வேண்டாத அபரிமிதமான அதீத‌ வர்ணனைகளை தேவ ஊழியர்கள் தவிர்க்கவேண்டும்;சாத்தானைக் குறித்து அதிக பயமும் எச்சரிக்கையுணர்வும் இருப்பதாலேயே ஆண்டவர் பெரிய மனது பண்ணி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மிருகங்களை அடைத்து வைத்துப் பார்ப்பதைப் போல சாத்தானையும் எங்கோ தூரத்தில் தடுத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுகிறோம்;

வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுடன் நமக்கு இடைவிடாத போராட்டம் உண்டு என்று வேதம் சொல்லுமிடத்து தேவ மகிமை எங்கே செல்லும்..?

May 25, 2010
// கன‌வுகள்,பரலோகக் காட்சிகள் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவைகளாக இருப்பினும் வேதத்துக்கு எதிரானதல்ல;அப்படியானால் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் என்பதே பொய்யாகிவிடுமே..?

மனிதர்களோடு சர்வ வல்லவர் இடைபடும் போது மனிதனுடைய புரிதலுக்காகவும் தமது வல்லமையை விளங்கப்பண்ணவும் அவர் தமக்கேற்ற விதத்திலும் தனித்தன்மையிலும் செயல்படுவார்;அது மனிதனுக்கு பிரமிக்கத்தக்கதாகவும் இருக்கும்;

மென்மையான இருதயமுள்ளவர்களுக்கு இயற்கைக்கு மாறுபட்ட காட்சிகள் தோன்றுவதுண்டு;அது தெய்வீகமானதாக இருந்ததானால் வெளிப்படுத்தப்படும் செய்தியில் தெரிந்துவிடும்;எனவே இந்த அனுபவங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது. //

-இது நான் மற்றொரு தளத்துக்காக அளித்த பதிலாகும்;

நண்பரே,"வர்ணனை" எனும் சொல்லானது எந்த வகையிலும் "கற்பனை" எனும் பொருளைத் தராது;

இதனால் நமது ஊழியர்கள் பொய்சொல்லுகிறார்கள் என்றோ ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை;

பொதுவாகவே மென்மையான உணர்வுள்ளோர்க்கே இதுபோன்ற அனுபவங்கள் சாத்தியம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்;

ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தைப் பொருத்த காரியத்தையே சார்ந்து அதைக் குறித்து பேசுவதால் வேதத்தின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தரிசனமும் சொப்பனமும் பெருத்துப்போகும்;

மனிதனின் எண்ணங்களே செயல்வடிவம் பெறுகிறது;அந்த எண்ணங்களும் எண்ணற்றவை மற்றும் அதன் ஆழம் ஒருவரும் அறியமுடியாதது;

இதனால் விசித்திர விநோத கற்பனைகளான "ஹாரிபாட்டர்" போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறுகிறது;மறுபுறம் அதற்கு சற்றும் குறையாமல் ஊழியர்களும் எதையாவது சொல்லி தங்களை பெரிய "சக்திமான்"களாகக் காட்டியாக வேண்டிய அவசியமாகிவிட்டது; இல்லாவிட்டால் நமக்கு கவர்ச்சி இருக்காதல்லவா?

இறுதியாக வேதம் மட்டுமே அனைத்துக்கும் இறுதியானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 28th
மறுபிறவிக் கொள்கைக்கு மிக அருகிலிருந்து இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது;

எபிரெயர்.9:27-ன் படி மறுபிறவி என்பதோ வேறொருவரின் அவதாரம் என்பதோ அடிப்படையில்லாத கூற்றாகும்;அப்படியானால் அனைத்து உயிர்களும் ஆதாமில் முடிவடையும்;

ஆனால் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் தனித்தனி அடையாளத்தையும் நோக்கத்தையும் அழைப்பையும் வேதம் வலியுறுத்துகிறது;

அப்படியானால் தொடர்ந்து உயிர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கக் காரணம்..?

அதற்கு வேதம் சொல்லும் காரணம் "அக்கிரமத்தின் தொகை இன்னும் நிறைவடையவில்லை"

மேலும் குறிப்பிட்ட சகோதரி கிறித்தவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துக் கொள்வதைக் குறித்து கவலைப்பட்டதைக் குறித்து...

மாம்சத்தினால் மாம்சமாயிருக்கும் ;ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும் என்பதே பதிலாகும்;பிள்ளைபெற்று பரலோகத்தை நிரப்பமுடியாது;ஆனால் சுவிசேஷத்தை அறிவித்து பரலோகத்தை நிரப்புவதுடன் நரகத்தையும் காலியாக்கலாம்;

பிரபல‌ ஊழியர் மோகன் சி லாசரஸுக்கு பிள்ளை பாக்கியமில்லை;அதனால் அவரது ஊழியம் தோல்வியடைந்துவிட்டதா என்ன..?

(வேத வார்த்தைகளின் சாரத்திலிருந்து பேச்சு வழக்கில் எழுதுவதே எனது பாணி;எனவே வேத வார்த்தைகளைக் குறிப்பிடாததைக் குறித்து வருந்தவேண்டாம்;அதனைத் தேடி எடுத்து சம்பந்தப்படுத்திக்கொள்வது வாசகரின் பொறுப்பு மற்றும் பங்கு;வேண்டுகோளின் அடிப்படையில் சரியான மிகச் சரியான வேத வார்த்தைகளைக் குறிப்பிடவும் ஆயத்தமாக இருக்கிறேன்..!)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 25, 2010
நண்பரே, சூழ்நிலைக்கு பொருந்தாத ஒரு குறள் ஞாபகத்துக்கு வருகிறது; 'ச்சும்மா' சொல்லிவைக்கிறேன்;"எண்ணித் துணிக கருமம் பின் எண்ணுவம் என்பது இழுக்கு"

ஒரு பொருளை விவாதிக்கும் போது என்னைப் போன்றவர்கள் மதியீனமான கேள்விகளைக் கேட்டு சர்ச்சைகளை எழுப்பினாலும் அதற்கு தாங்கள் அளிக்கும் பதிலில் தெளிவு வர வாய்ப்புண்டு;

நான் எழுதிவிட்ட ஒரு எழுத்தையோ அல்லது ஒரு வரியையோ எந்த காரணத்தைக் கொண்டும் திருத்தவோ நீக்கவோ விரும்புவதில்லை;மாறாக நீக்கப்பட்டாலோ தொலைந்துபோனாலோ வருந்துவேன்;

ஆனால் நீங்கள் மிக நுட்பமான ஒரு பொருளில் விவாதித்து அதை நீக்கும்போது அதன் பயனைவிட நட்டமே அதிகம்;மாற்று கருத்தினாலும் சத்தியம் வெளிப்பட வாய்ப்புண்டு;

இந்த வார்த்தைகள் நிலத்தில் விதைக்கப்படும் விதையைப் போன்றது; களைகளைக் களைய அவசரப்படவேண்டாமென்று ஆண்டவரே சொல்லவில்லையா?

இதுபோலவே ஒருவன் பிழையில்லாததொரு வேதத்தை ஸ்தாபிக்க முயற்சித்து உலகத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டான்..!

நான் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களை உறுத்தினால் அதனை மட்டுறுத்தும் உரிமை தங்களுக்கு உண்டு;மற்றபடி என்மீது பழியைப் போட வேண்டாம்;எனது கோபத்தின் காரண‍- நியாயத்தை சற்று கவனிக்க வேண்டுகிறேன்;

சிலுவை மரணத்தை நிறைவேற்றவே ஆண்டவர் திட்டமிட்டு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்பது தங்களது அதீதமான வேதத்துக்குப் புறம்பான கற்பனையான செய்தி என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 28th

// ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை;ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும். //

நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் யாருடைய கருத்து..?

அவை மேற்கோள் காட்ட தரப்பட்டவை என்றே எண்ணுகிறேன்.

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;

இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷக‌னின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;

ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;

எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;

இதுபோலவே ( இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும்) - அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான‌ தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;

சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?

அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.


ஒரு திரியை நீக்கியபிறகு தொடர்ந்து அதைக் குறித்து பேசிக் கொண்டிருப்பது மடத்தனமாகும்;ஆரோக்கியமான விவாதத்தைத் தொடரவேண்டுமானால் நீக்கப்பட்ட விலைமதிப்பில்லாத கருத்துக்களை மீண்டும் பதிக்க வேண்டுகிறேன்..!

// "அரை வேக்காடு" என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஒரு கிறிஸ்த்தவருக்கு அழகா? //

இது இங்கே தளத்திலிருந்து கற்றுக் கொண்ட பாணிதான்;
மற்றொரு தளத்தில் டாக்டரான ஒரு கிறித்தவரே இந்த வார்த்தையினால் என்னை தாக்கியதுண்டு;அது ஒன்றும் கெட்டவார்த்தையுமல்ல;சரியா
வேகாதது,அதாவது தெளிவுபெறும் முன்பதாகவே வெளியான கருத்து என்றும் கொள்ளலாம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 30th

// நாம் நினைக்கிறோம்,'இந்த ஊரில் இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள்,யாராது பார்த்துவிடுவார்கள்,நம்மால் தவறுகளை செய்யமுடியாது யாராவது பிடித்து விடுவார்கள்' என்று!

ஆனால் அது கொஞ்சமும் உண்மை அல்ல;உங்கள் உள்ளத்தில் மனதார தவறு செய்யும் எண்ணம் வந்துவிடாலே அதற்க்கான சூழ்நிலையும் சந்தர்ப்பங்களையும் சாத்தான் சுலபமாக ஏற்படுத்திகொடுத்து உங்களை தவறு செய்யவைத்துவிடுவான்;

ஆனால் அதை நீண்டநாள் செய்து ஆனந்தமாக இருப்பதற்கும் அவன் அனுமதிப்பது இல்லை,சிலநாட்களிலேயே மிகப்பெரிய பிரச்சனையை கொண்டுவந்து அனுபவித்த அத்தனைக்கும் வட்டியும் முதலுமாக சேர்த்து வாங்கிவிடுவதோடு ஆண்டவரிடமும் அவப்பெயரையும்
ஏற்படுத்திவிடுவான்
//



இந்த வரிகளை நீங்கள் எழுதவில்லை,ஆவியானவரே எழுத வைத்திருக்கிறார்;ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் மனதில் இருத்தவும் நிறுத்தவும் வேண்டிய பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான எழுத்துக்கள்..!

இன்று முழுவதும் இந்த கருத்து என்னோடு பேசிக்கொண்டே இருந்தது;இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமானதல்ல,ஒவ்வொரு பாவசோதனைக்கும் பொருத்தமானது;ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசேஷித்த வழிகாட்டு நெறிகளில் சேர்க்கப்படவேண்டியது;

தங்களை என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்;வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

May 14, 2010

அன்பு நண்பருக்கு ஒரு ஆலோசனை:
"நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் " என்றும் வேதம் கூறுகிறதே;எனவே தாங்கள் தங்களது அதிகப்படியான எச்சரிக்கையுணர்வினைத் தவிர்த்துவிட்டு இயல்பாக இருங்கள்;

பொருளாதார சிக்கல்களால் கொடுக்கல் வாங்கலில் பல்வேறு தடைகள் இருக்கிறது;அதற்கும் தங்கள் ஊழியப் பணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை;தங்கள் நிறுவனம் ஒரு புறவின முதலாளியால் நடத்தப்படுமானால் அவர் செய்யும் பூஜை புனஸ்காரங்களின் பாதிப்பும் இதில் இருக்கக்கூடும்;

இறுதியாக நான் சொல்லத் துணியும் ஒரு காரியமுமுண்டு;நமக்குள் பேசப்படும் அனைத்து அகத்தூண்டுதல்களு
க்கும் ஆவியானவர் மட்டுமே காரணமல்ல;

தாங்கள் முன்னெடுத்துச் செல்லும் தேவப்பணியினால் பாதிப்படையும் சாத்தானின் கூட்டமும் கூட இதுபோன்ற குற்ற உணர்ச்சி (வெளிப்படுத்தல்.12:10)யினைத் தோற்றுவிக்கக் கூடும்;

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை அறிவிப்பதில் கவனமாக இருக்கவும் வேதம் போதிக்கிறது;

மேலும் சனி,ஞாயிறு பணியாற்றாமல் தவிர்ப்பது தங்கள் சௌகரியத்துக்காக எனில் தவறல்ல;ஆனால் அதற்கும் வேதம் காரணமெனில் அது தனி விவாதம்..!

தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள்..!

May 30th
// சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மாலைவரை  நாங்கள்  டிவி / கணினி/செல்போன் போன்ற  எதையும் பயன்படுத்துவது இல்லை //

நண்பரே, இந்த குறிப்பிட்ட சிந்தனையே தங்களது மற்றுமொரு கருத்துக்கு ஆதாரமாகிவிட்டதோ என எண்ணுகிறேன்;அதாவது தற்போது பரபரப்பாக நாம் வாதித்து வரும் "இயேசுவானவர் ஓய்வுநாள் கற்பனையை மீறினாரா?" எனும் பதிவு..!

அதில் தாங்கள் குறிப்பிட்டவாறு ஓய்வுநாள் கற்பனையை மீறுவதினால் துன்பத்தை ஏற்றுக்கொண்டு பரலோக பாக்கியத்தை இயேசுவானவரைப் பின்பற்றி அப்போஸ்தலர்களும் அடைந்ததுபோலவே தாங்களும் செய்யலாமே?

வேலை போனால் போகட்டும் என்று வேலை நேரத்தில் வேலை செய்யாமலும் ஓய்வுநாளின்போது வேலைசெய்தும் கலகம் பண்ணுங்களேன்..!


http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=35875279


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard