Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்து யார்?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்து யார்?
Permalink  
 


  • Gnana Piragasam இயேசுவை தேவனுடைய குமாரன் எனப் பல வசனங்கள் சொல்கின்றன. மனிதனின் குமாரன் மனிதாக இருப்பதுபோல தேவனுடைய குமாரனும் தேவத்துமுள்ள தேவன்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் யெகோவாகிய தேவன், இயேசுவுக்கும் தேவானாகவும், தேவாதி தேவனாகவும் இருக்கிறார். Unique God எனச் சொல்வதானால், யெகோவாகிய தேவன் ஒருவரை மட்டுமே சொல்லமுடியும்.

    சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான்; மோசேயானவன் பார்வோனின் தேவனாக இருந்தான்; தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களுங்கூட தேவர்கள் என அழைக்கப்பட்டனர்; வானம் பூமி அவற்றிலுள்ள எல்லாமுக்கும் இயேசு தேவனாக இருக்கிறார்; ஆனால் இயேசு உட்பட வானம் பூமி அனைத்துக்கும் யெகோவா மட்டுமே தேவாதி தேவனாக இருக்கிறார்.

மேற்கண்ட கருத்து ஃபேஸ்புக் தளத்தில் தலைப்பிலுள்ள துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? by Arputharaj Samuel (on Wednesday, 23 November 2011 at 23:46 ) கட்டுரையின் பின்னூட்டமாக இடப்பட்டிருக்கிறது. அடியேனைப் புறக்கணிப்பதற்கு பாகுபாடின்றி ஒன்றுபடும் ஒரு கிறிஸ்துவின் சீடனாவது இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை; இந்த கருத்து உலக முழுவதும் கவனிக்கப்படும் ஒரு தளத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது; இதோ 6 மணிநேரத்துக்கு மேலாக இந்த கருத்து அப்படியே இருக்கிறது. ஏற்கனவே ஞானம்57 என்றும் அன்பு57 என்றும் அறியப்பட்டதொரு (மேசியாவின்) எதிரி இதனைப் பதித்திருக்கிறார்; இவர்களோடு கடந்த ரெண்டு வருடத்துக்கும் மேலாக போராடி வருகிறோம்.

ஆனாலும் தங்களுடைய மோசடியானதும் சூழ்ச்சியானதுமான உபதேசங்களைப் பரவச் செய்வதில் அவர்கள் சோர்ந்துபோகவில்லை; இதுகுறித்து கொஞ்சமும் சொரணையின்றி இயேசுவானவரின் சீடர்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூட அவர்களுக்கு தைரியமில்லை. ஏனெனில் அவரவருக்கு அவரவர் மீதான நல்லெண்ணமும் சமூக உறவுமே பிரதானம்; வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று யாருடன் வேண்டுமானாலும் நட்பு பாராட்டுவார்கள்; நமக்கோ அந்த அளவுக்கு பொறுமையில்லை;எதிர்க்கிறோம், வெளியேற்றப்படுகிறோம். இந்த தளத்தை தொடர்ந்து கவனித்து வருவோரை எச்சரிக்கவே இதனை வெளியிடுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

புரட்டப்படும் வசனங்கள்

நோக்கம் :

வசனத்தை நான் விரும்பும் செய்தி வெளிப்படும்படி சேர்த்து அல்லது குறைத்து அல்லது மாற்றி சொல்வது. இதன் மூலம் மனிதர்களை தேவனுக்கு தூரமாகும்படி செய்வது.

இன்று நான் எடுத்து கொண்ட வசனம் :

மத்தேயு 7.21 லிருந்து 23 வரை  :

  • 21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
  • 22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
  • 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

எனது நோக்கம் :

இயேசுவை வணங்குவது தவறு என நிரூபிப்பது

நான் செய்ய போவது :

1. வால் பிடித்தாற் போல மத்தேயு 7.15 இல் ஆரம்பித்து 23 வரை தொடர்ந்து வரும் வசனங்களில் 15 லிருந்து 20 வரை உள்ள வசனங்களை மறைத்தல்.

(ஏனெனில் அந்த ஊழியர்கள் தேவனுக்கேற்ற கனி கொடுக்காத ஊழியம் செய்தவர்கள் என்ற செய்தியை நான் மறைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் செய்த அக்கிரம் செய்கையாக இயேசுவை கர்த்தாவே, கர்த்தாவே என சொன்னதை சுட்டி காட்ட முடியும்.)

மத்தேயு 15:20 :

  • 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
  • 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
  • 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
  • 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
  • 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
  • 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

2. இயேசுவை கர்த்தர் என சொல்லும் 1.கொரி 8.6 ஐ சுட்டி காட்டி இயேசுவை கர்த்தாவே என அழைத்தது எப்படி அக்கிரம் செய்கையாகும் என்று கேட்கும் அளவுக்கு எந்த மடையனும் இருக்க மாட்டான். அதனால் அதை கண்டு கொள்ளாமல் விட வேண்டும்.

  • (1.கொரி.8.6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.)

3. இயேசுவை கர்த்தாவே என அழைத்ததை அவர்கள் தொழுது கொண்டதாக மாற்றி சொல்வது. மற்றவர்கள் கொஞ்சம் மாற்றினாலும் எப்படி மாற்றலாம் என கேட்கலாம். ஆனால் நாம் மாற்றுவதை யார் கேட்க முடியும்.

4. அக்கிரம் செய்கைகளின் பட்டியலாக நான் காண்பிக்க போவது :

(அ) இயேசுவை கர்த்தாவே, கர்த்தாவே என அழைத்தது

(ஆ) இயேசுவின் நாமத்தினால் அற்புதங்களை செய்தது, தீர்க்கதரிசனம் உரைத்தது, பிசாசை துரத்தினது

(இ) பிதாவின் சித்தம் செய்யாமல் இருந்தது

5. பிதாவின் சித்தமும் செய்து, மேற்கண்ட அ, ஆ வையும் செய்தவன் பரலோக ராஜ்ஜியத்துக்கு போவானா என்னும் கேள்வியை எந்த மடையனும் கேட்க மாட்டான். அப்படியே கேட்டால் பிதாவின் சித்தம் செய்திருந்தால் கூட இயேசுவே வெறுக்கும் அக்கிரம செய்கையான, பிதாவின் சித்தம் இல்லாத அ, ஆ வை செய்ததால் அவன் நித்திய ஜீவனை அடைய மாட்டான் என சொல்லி விட வேண்டும்.

இதன் முடிவு என்னவெனில் நித்திய ஜீவனை அடைய வேண்டும் எனில்

1. இயேசுவை கர்த்தாவே என அழைக்க கூடாது அல்லது அழைக்கவே கூடாது.

2. இயேசுவின் பெயரால் ஊழியம் (அற்புத, தீர்க்கதரிசன, பிசாசு துரத்தும்) செய்யும் அனைவரும் பொய்யர்

3. மேற்கண்ட ஊழியம் ஏதாவது செய்து கொண்டிருந்தால் அதை நிறுத்துவது நல்லது

4. பிதாவின் சித்தம் செய்ய வேண்டும். (இயேசுவை அழைப்பதும், இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்வதும் பிதாவின் சித்தம் அல்ல.)

மேற்கொண்டு பிதாவின் சித்தம் செய்வது என்ன என்பதை அறிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: --------- -------------

{இது இந்த தளத்தின் நண்பர் சந்தோஷ் அவர்கள் எழுதியது; இதை வாசித்தபோது முதலில் குழம்பிப்போனேன்;ஆனால் நிதானமாக வாசித்தபோது உண்மை புரிந்தது;வைராக்கியம் என்ற பெயரில் வீணாகப் பகை சம்பாதிப்பதைவிட இது மேலானது தானே;ஆம்,கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக நடத்துகிறார்... }


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் சுந்தர் அவர்களுடைய விளக்கம் மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இருக்கிறது; இதைவிட எளிதாகவும் வைராக்கியத்துடனும் யாரும் இயேசுவை தொழத்தக்க தேவனாக நிறுத்த முடியாது;

ஆம்,பிரச்சினை அது தானே? இயேசு பாவங்களை மன்னிக்கிறார், இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தருவதோடு சுகவாழ்வையும் தருகிறார் எனில் அவர் நிச்சயமாக ஒரு சாதாரண தூதனாகவோ மனிதனாகவோ இருந்து இவற்றைச் செய்யமுடியாது;

படைப்பிலோ மூன்றே பிரதான தன்மைகளே உண்டு;
தேவன்,தூதர்கள்,மனிதன்;
இதில் இயேசுவை யாரென்று சொல்வோம்?

இயேசுவே தேவன், அவரே யூதருக்கு யாவே தேவனாக வெளிப்பட்டார்;

இதுவே வேத சத்தியம்; ஏனெனில் வேதம் உரைக்கப்பட்டதிலிருந்து அதை வாசித்தவர்களே மாறுபடுகிறார்களே தவிர வேதம் மாறவே இல்லை; அதைக் குறித்து கடுமையாக விமர்சித்த யாராலும் ஆதிவேதத்தை மாற்றவும் முடியவில்லை;

கோழியிலிருந்து முட்டை வந்ததா,முட்டையிலிருந்து கோழி வந்ததா, என்பார்களே அதைப் போல இது எவராலும் வார்த்தையினால் எளிதில் விளக்கமுடியாத தேவ ரகசியம்; ஆனாலும் ஒரு அதிசயம் என்னவென்றால் இதனை ஆவியில் உணர்ந்துக்கொள்வது மிக எளிதாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு மொழியின் மூலம் தெய்வத்துவத்தை ரூபிக்க முயலுவது எத்தனை குழந்தைத்தனமானது என்பது அநேகருக்கு புரிகிறதில்லை; சிலருக்கு அதுவும் அதிகம் படிக்காத சிலருக்கு எளிதில் புரியும் தேவ இரகசியங்கள் மெத்தப் படித்தவருக்குக் கடைசி வரை பிடிபடுகிறதே இல்லை; அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களுடைய மேதாவித்தனமாக இருக்கலாம்;

முதல் நூற்றாண்டில் இயேசுவானவரின் தெய்வீகத்தன்மையை ரூபிப்பதே சீடர்களின் பெரும் போராட்டமாக இருந்தது எனில் இன்று அதனை மறுப்பது கடினமானதாகிவிட்டது;

அன்றைக்கு சீடர்களுக்கு ஆதரவாக எந்த அமைப்பும் இல்லை;
இன்றோ எல்லாம் இருந்தும் சிலருடைய தூஷணங்களைத் தட்டிக் கேட்கமுடியாத நிலைமை;

இந்த வகையறாக்கள் நாய்களின் கூட்டத்தார் என்றும் பன்றிகளின் வகையினர் ("நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது"
. 2.பேதுரு.2:22
) என்று அறிந்து இவர்களைத் தவிர்க்க அறிந்த நாம் நம்முடைய நம்பிக்கையைக் குறித்த தெளிவினை "அது அப்படித்தான்" என்பது போன்ற குருட்டு நம்பிக்கையாகக் கொண்டிருந்து விலகியிருக்கிறோமே தவிர எதிர்த்துப் போராடுவதில்லை; காரணம், நமக்குப் போதிக்கப்படவில்லை; கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை;

நீ தைரியமிருந்தால் இயேசுவைப் பார்த்து, "நீ தெய்வமல்ல,எல்லோரும் உன் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்" என்று தாராளமாகச் சொல்லிப்பார்;அது உனக்கும் அவருக்குமான போராட்டம்;

ஆனால் இயேசு என்ற இரட்சகரைக் குறித்து கேள்விபட்டு அவர்மூலமே இரட்சிப்பின் அனுபவமும் பாவ மன்னிப்பின் சந்தோஷமும் பெற்று சுகவாழ்வு வாழும் ஏழை எளிய மக்களைக் குழப்பும் வண்ணமாகத் தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கைகளை தூஷித்து கீழ்த்தரமாக நீ பேசுவது தேவனுக்கு மட்டுமல்ல,சட்டத்துக்கும் விரோதமானது; "உனக்கு விசுவாமிருந்தால் அது உன் மட்டிலிருக்கட்டும்;"

"இயேசுவின் 1000 வருட அரசாட்சிக்குப் பிறகே சுவிசேஷம் அறிவித்தால் போதும்" என்று சொல்லும் நாய் எங்காவது போய் சுருண்டு படுக்கவேண்டியதுதானே;இப்போது உனக்கு ஒரு வேலையுமில்லைதானே;

எவனோ எங்கேயோ எப்படியோ போனால் உனக்கு ஏன் சும்மாவே "எறைக்குது..?" நீ சரியான ஆளா இருந்தா நேர வரச்சொல்லியும் ஒனக்கு அதுக்கு தெம்பு இல்லாம சும்மாவே உதார் விட்டுகிட்டிருக்கே..?

சத்தியம்னு எதையோ சொல்றியா அத வரைக்கும் தாராளமா சொல்லு எங்க கருத்தை சொல்றோம்; இல்ல‌, 'ஐயய்யோ... யேகோவா தேவனை ஆராதிக்காம இயேசுவை ஆராதிக்கறாங்களே என ஒன் ரூமிலே அவர்கிட்ட‌ விழுந்து விழுந்து புலம்புடா...அதவிட்டுட்டு ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க உனக்கு யாரடா அதிகாரம் கொடுத்தது..?

"அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர்.2:8 முதல் 11)

மேற்கண்ட வசனங்கள் மூலம் ஒரு சுருக்கமான போதனையை கவனிப்போம்; வசனங்கள் பிரிக்கப்பட்ட (8,9,10,11) நோக்கத்தையும் கூட கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்;

இந்த வசனங்களிலுள்ள‌ இரண்டு முக்கிய வார்த்தைகளை ஆராய்வோமானால் அவை,
"எல்லாவற்றிற்கும் மேலாக"
"எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை"

இந்த இரண்டு வார்த்தையும் சொல்லவரும் சத்தியமென்ன?
அதிக மூலபாஷைகளின் உதவியில்லாமலே பொதுவான ஒரு கருத்தை முன்வைக்கிறேன்;
=>எல்லாவற்றிற்கும் மேலாக
=>எல்லா நாமத்திற்கும் மேலான

அசைவில்லாததும் அசைவுள்ளதுமான எல்லாவற்றுக்கும் மேலாக‌
அவற்றை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் மேலான நாமத்துக்கும் மேலாக‌
=>முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு
=>பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக

இறைவனை ஒருவன் முழங்காலிட்டு ஆராதிக்கும்போது இறைவனுக்கு மகிமையுண்டாகிறது; இதற்குமேல் அவருக்கு மனிதனிடம் ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லை; என்னுடைய மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் என்றவரே தன்னுடைய மகிமையை கிறிஸ்துவுக்குக் கொடுத்தால்..?

சில ஞான சூன்யங்களுக்காகவும் எப்போதும் கற்றாலும் ஒருபோதும் உணராத அடிமைகளுக்குமான ஒரு வார்த்தை,"என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?"(மத்தேயு.20:15)

ஆதிமுதல் மனிதன் தொழத்தக்கதாக கொடுக்கப்பட்ட‌ நாமத்துக்குரியவரே "இயேசு" நாமத்தில் மாம்சத்தில் வெளிப்பட்டார்;அவரை ஆராதிக்கும் படி பரிசுத்த நாமத்துக்குரியவரே கட்டளையும் கொடுக்கிறார்; அப்படியானால் அவரை ஆராதிப்பதும் அவரிடம் ஒரு மனிதன் தன் பாவத்தை அறிக்கை செய்வதும் அவர்மூலம் மன்னிப்பையும் புதுவாழ்வையும் பெறுவதும் எப்படி குற்றமாகும்;

இதைக் குறித்து பவுல் கூறும் போது,"தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை.."(அப்போஸ்தலர்.20:28) என்கிறார்; அப்படியானால் "யெகோவா" தேவனா இரத்தம் சிந்தினார், இயேசுதானே இரத்தம் சிந்தினார்?  கவனியுங்கள், இயேசு தேவனா? ஆம்,"இம்மானுவேல்" என்றும் மொழியப்பட்டார்; தேவன் என்றால் யார்? யாரை "ஏலோஹிம்" என வேதம் உரைக்கிற்து? அவரே படைத்தவர், அவரை மனிதனை மீட்கும்பொருளாக தம் ஜீவனைக் கொடுக்க இந்த பூமிக்கு வந்தவர்;

இயேசு,"நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்றார். (யோவான்.8:24)

இங்கே இயேசு "நானே அவர்" என்று சொல்லியும் சற்றும் உணர்வில்லாமல் தொடர்ந்து இயேசுவானவரின் தெய்வத்துவத்தை மறுத்தும் அவருடைய சிலுவைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தியும் ஒரு கூட்டம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறது; ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாமோ குறுகிய எண்ணங்களுடன் யாரோ யாரையோ சொல்லுவதுபோல உணர்வில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்;

கோலியாத் ஆண்டவருடைய நாமத்தை தூஷித்தபோது தாவீது வெகுண்டு எழுந்ததாலேயே இன்னும் அவரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்;

நம்முடைய இரட்சகருடைய நாமம் தொடர்பான நாமறிந்து நிச்சயித்துக் கொண்ட காரியங்களை சில புல்லுருவிகள் தொடர்ந்து தூஷித்துக் கொண்டிருக்கும் போது சும்மா இருந்தால் அது நியாயமா?

ஒரு பயங்கரமான காரியம் என்னவென்றால் பிசாசு ஒரே நேரத்தில் இரண்டு அனர்த்தங்களைச் செய்கிறான், எப்படி?

1. படைத்த பரிசுத்தரை தாழ்த்துகிறான்;

அதாவது யெகோவா தேவன் உலகை சிருஷ்டிக்கவில்லை;அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தூதனே உலகை சிருஷ்டித்தான் என்கிறான்.

2. மீட்பரையும் சிறுமைப்படுத்துகிறான்;

சிருஷ்டிகரே மனு உரு எடுத்து வந்து அனைத்தையும் செய்து முடித்தபிறகும் அது சிருஷ்டிகரல்ல, வெறும் சிருஷ்டிக்கப்பட்ட சாதாரண பணியாள்தான் என்கிறான்;

இதைத்தான் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தல் என்பார்களோ?

தேவனால் தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன் வீழ்ந்ததாலேயே அதற்கு பரிகாரம் செய்யவேண்டிய பொறுப்பை தேவனே ஏற்றுக்கொண்டார்;
அது அவருடைய சுத்த கிருபை..!

ஒரு தூதனால் இந்த உலகம் படைக்கப்பட்டிருந்தால் தூதனே பலியாகி தூதர்களை உயிர்ப்பித்திருப்பான்?

மீட்பின் திட்டமோ தூதர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை; தேவசாயலின்படி படைக்கப்பட்ட மனிதர்களுக்காகவே கொடுக்கப்பட்டது;

"ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்"(எபிரெயர்.2:16)

குடிகாரனும் அந்தரங்க பாவங்களில் சிக்கியவனுமான ஒரு மனுஷன் தன்னை வித்தியாசப்படுத்திக் காண்பிக்க எண்ணி உருவாக்கிய போலியானதொரு கொள்கையை நம்பி கடந்த சுமார் 100 வருடங்களாக எண்ணற்ற அப்பாவிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்;

இந்த தலைமுறையிலாவது விழித்துக்கொள்ளுவோமானால் கர்த்தர் நம்முடைய யுத்தத்தை நடத்துவார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// தமிழில் இயேசு என்னும் பெயருக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று தெரியவில்லை! //

நண்பரே, "இயேசு" என்ற வார்த்தையைக்கூட "ஏசு" என்று குறிப்பிடாமல் தவிர்த்த காரணத்தினை ஆராய்ந்தீர்களா?

தற்போதய மொழியறிவு பெறும் வாய்ப்பின் காரணமாக ஓரளவு சரியாக நமதாண்டவருடைய பெயரைக் குறிப்பிடமுடியுமானால் "இயாஷு
" எனலாம்; அது ஒரு அரமேய மொழிப் பெயராகும்;

அதனை மற்ற மொழிகளில் அதன் ஒலிநயம் மாறாமல் குறிப்பிடுவது உண்மையிலேயே சிரமமானது; தமிழில் இயேசு எனப்படுகிறது; ஏனெனில் "ஷ" என்பது வடமொழிச் சொல்லாகிறது ஒரு காரணமாக இருக்கலாம்; வடஇந்தியரில் பெரும்பாலோர்க்கோ "ஷ" உச்சரிக்க வராது;

இப்படி பல்வேறு காரணங்களால் அவரவர் உச்சரிப்புக்கு ஏற்றவண்ணமாக பெயர் நிலைத்துவிட்டது;ஆனாலும் கருத்து மாறவில்லை; நல்ல வேளையாக நம்முடைய ஆண்டவர் கூப்பிடும் மொழியைவிட ஏற்கும் இதயத்தையே அங்கீகரிக்கிறார்.

மேலும் "ஜீஸஸ்" என்ற குறிப்பிட்ட வார்த்தையானது,கத்தோலிக்க பாரம்பரியத்தின் முன்னோர்களான பண்டைய ரோம, கிரேக்க கலாச்சாரத்திலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது;

அவற்றைக் குறித்து விவரமாக ஆராய்ந்தால் நமது விசுவாசத்தையே அவை தடுமாறச் செய்யும்; ரோமர்களின் போலியான "ஒருமைப்படுத்தல்"(கத்தோலிக்கம்) எந்த அளவுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பாதித்தது என்பதையும் அதினால் சிலுவைப் போர்கள் முதலான அக்கிரமங்களுக்கு இன்றைய கிறிஸ்தவம் பதில் சொல்லவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதையும் தனிப் பதிவாகவே எழுத முடியும்;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்கள் தேவையில்லாமல் இரண்டு வெவ்வேறான சூழ்நிலைக்காக வெவ்வேறு தலைப்புகளில் பதிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஒரே இடத்தில் அதுவும் தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத தான் பங்கேற்காத ஒரு வாதத்துக்கு பதிலளித்திருக்கிறார்;

எனக்குத் தேவையான சத்தியமான விளக்கத்தை இவர்களிடம் எதிர்பார்த்து எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்தால் இவர்களிடமிருந்து விளக்கத்துக்குப் பதிலாக உஷ்ண காற்றே வருகிறது;

சுந்தர்:
//என்ன இருந்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்ட சகோதரர்களை  "குறுமதி குரங்குகள்" என்றெல்லாம்...//


உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சகோதரர்களாக இருக்கலாம்;
நான் அவர்களை "நாய்கள்" என்றோ "பன்றிகள்" என்றோ குறிப்பிடவில்லையே...வேதம் இந்த சாதியாரை அப்படியே குறிப்பிடுகிறது;

இவர்கள் "குரங்கிலிருந்து மனிதன் வந்தான்" என்ற பரிணாமக் கொள்கைக்கு ஏற்ப தேவனுடைய மகத்துவங்களை அறியாமல் (கோபர்ஹேகன் மாநாடு தீர்க்கத்தரிசன் நிறைவேறுதல் எனற பிதற்றல்..!) இங்குமங்கும் தாவிக் கொண்டிருப்பதாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்; அவர்களுக்கு ஒத்துப்போனால் நீங்களும் குரங்குதான்..!

ஏனெனில் பிசாசானவன் முதலில் கருத்து வேறுபாடுகளை விதைத்து சகோதர சிநேகத்தை கெடுத்து ஐக்கியத்திலிருந்து பிரித்து புதிய கொள்கைகளைப் புகுத்தி தனிமைப்படுத்தி கெடுத்துப் போடுவான்;

உலகமெங்கும் பரவி ஆக்கிரமித்து இஸ்லாமியரைவிட அதிகமாக தேவனை தூஷிக்கும் இனத்தைச் சேர்ந்தவரே நீங்கள் வக்காலத்து வாங்கும் நபர்கள்; அவர்கள் தங்களை வேதாகம மாணவர் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்கள் மாணவர்களாக இலட்சணமாக கற்றுக் கொள்ளாமல் அடங்காப் பிடாரிகளாக தங்களுக்குத் தாங்களே போதித்துக்கொண்டு தங்களையே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நீங்களும் அவர்கள் குழுவில் ஏறக்குறைய இடம் பிடித்துவிட்டீர்கள்; உங்கள் எதிர்காலம் பயங்கரமாகப் போகிறது; மீண்டும் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என்றே நம்புகிறேன்;

// நாராயணர் என்பதற்கு  நார் =  தண்ணீர்  அயனர் = அசைவாடுபவர் //


"நாராயணர்" என்பதற்கு அவ்வளவாக விஷய ஞானமில்லாத நான் அறிந்த வண்ணமாக "நரன்+ஆனவர்" அதாவது "மனிதனானார்" என்பதே பொருளாகும்; "ஜலபதி" என்பது "தண்ணீர் மீது அசைவாடுபடுவர்" என்பதற்கு சற்று நெருக்கமானப் பொருளைத தரலாம்;

// "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்றும் "சர்வவல்லமை மிக்க தேவன்" என்றும்  வேதம் அறிமுகப்படுத்தும் மண்ணை எடுத்து மனிதனையும் நம்மையும் உருவாக்கிய "யகோவா" எனப்படும் "கர்த்தர்" யார்? என்பதை அறியாமல்... நீங்கள்   உண்மையில் ஒன்றையுமே அறியவில்லை என்றே நான் கருதுகிறேன் //

நான் ஒன்றையுமே அறியாதவனாக இருப்பதால் இன்னும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பில் இருக்கிறேன்; ஆனால் உங்களைப் போன்றோரின் நிலைமையே பரிதாபம்..!

"யெகோவா சாட்சிகள்" என்பாருக்கு பதிலாக எழுதியதற்கு தாங்கள் விளக்கம் கொடுத்தது நல்லது; ஆனால் அது சம்பந்தமில்லாத இடத்திலிருக்கிறதே;

ஆண்டவருடைய பெயர்களாக வேதம் பற்பல பெயர்களை அறிமுகப்படுத்தினாலும் யூதர்களே பயன்படுத்தத் தயங்கும் ஒரு நாமத்தினை இந்த அளவுக்கு வீணிலே வழங்கி அவருக்கு தூஷணம் ஏற்படுத்திய உங்கள் நிலைமை என்னாகுமோ தெரியவில்லை;சர்வ வல்லவர் என்பது "எல்ஷடாய்" என்றும் தேவன் "ஏலோஹிம்" என்றும் ஆண்டவர் என்பது "அடனொய்" என்றும் எபிரேயு மொழியில் வழங்கப்படுகிறது;

ஆனால் மோசேயிடம் ஆண்டவர் இடைபட்ட போது சொன்னது என்ன,"(யாத்திராகமம்.6:2,3) நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் (எல்ஷ்டாய்) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."

வெவ்வேறு கால நேர சூழ்நிலைக் கலாச்சாரங்கள் வழியே தமது ஜனங்களை பயிற்றுவித்து வந்த தேவன் (எங்கும் நிறைந்தவரான "ஏலோஹிம்") மனுக்குல வரலாற்றின் மையத்தில் தம்மை இரட்சகரான இயேசுகிறிஸ்துவுக்குள் தம்மை வெளிப்படுத்தினார்;தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்;அவர் "இம்மானுவேல்" என்றும் வழங்கப்பட்டார்;சாத்தானனவன் தந்திரமாக இந்த குறிப்பிட்ட பெயரின் மகத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி அந்த பெயரைத் துணிகரமாக மனிதர்கள் வைத்துக் கொள்ளுமளவுக்குத் தாழ்த்திப் போட்டான்; இயேசுவின் பெயரையே யாரும் வைத்துக் கொள்ளுவதில்லை; ஆனால் "இம்மானுவேல்" என்று சாதாரணமாக வைத்துக் கொள்கின்றனர்;

ஆம்,இயேசு தேவனா என்று நீங்கள் கேட்டால் அவர் "இம்மானுவேல்" என்று தீர்க்கனால் முன்னுரைக்கப்பட்டு தூதர்களால் போற்றப்பட்டதே நேரடியான ஆதாரமாகும்;

தூதர்கள் இயேசுவானரை ஆராதிக்கவும் தொழுதுகொள்ளவும் கட்டளையிட்டதே பிதாவாகிய தேவன் தான்; இதைக் குறித்து எபிரெயர்.1:6 இல் "...தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார்."

மாத்திரமல்ல,"(பிலிப்பியர்.2:11) பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." என்றும் வேதம் கூறுகிறது;

எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் அனாதியான தேவனுடைய ("யாவே" எனும்) பரிசுத்த நாமமே; ஆனால் இயேசுவானவரின் கீழ்ப்படிதலின் காரணமாக அண்டசராசரங்களையும் சிருஷ்டித்தவரே தம்முடைய நாமத்தைக் காட்டிலும் மீட்பருடைய நாமத்தை மேன்மைப்படுத்துகிறார்;

ஏனெனில் சிருஷ்டிப்பைக் காட்டிலும் மீட்பே மேன்மையானது; இதைக் குறித்து பேதுரு சொல்லும்போது,"(அப்போஸ்தலர். 4:12)அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்."

எனவே தான் நாம் நம்முடைய அனைத்து துதிபாடல்களையும் ஜெபத்தினையும் இயேசுவானவரை மையப்படுத்தி செய்து வைத்திருக்கிறோம்; இதற்கு மாற்றாக வேறொன்றை யாராவது திணித்தால் அது வீணான குழப்பத்தையே விளைவித்து அநேகரைத் தடுமாறச் செய்யும்; அது பிதாவாகிய தேவனுக்கு விரோதமான கலகமாகவே அமைந்திருக்கும்;

படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்களிடம் ஆதிமுதலே "இயேசு" என்ற நாமமே அதிகாரப்பூர்வமான தொழத்தக்க நாமமாக பதிந்துவிட்டது; இதையா உங்கள் புதிய கொள்கைகளால் மாற்றியமைக்கப்போகிறீர்கள்..?

எபிரெயருக்கு "யாவே" என்ற நாமத்தினால் அறியப்பட்டவரைத் தொழுவது மிக எளிதாகும்; ஆனால் புறவினத்தாருக்கு "இயேசு" எனும் நாமத்தால் அறியப்பட்டவரைத் தொழாமலிருப்பது மிகுந்த துன்பமாகவும் குழப்பமாகவும் இருக்கும்; மேலும் இந்த நாமம் பரலோகப் பிதாவினால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட "மிகப்பெரிய" நாமமாகும்;

இஸ்லாமியரும் கூட இயேசுவானவரை முகமதுவுக்கும் மேலானவராகவும் அதிசயப்பிறப்பாகவும் சிருஷ்டிப்பில் பங்காற்றியவராகவும் ஏற்றுக்கொள்கின்றனர்; நாமும் சில சமரசங்களை இந்த நாமகரணக் கொள்கைகளின் அடிப்படையில் செய்துக்கொண்டோமானால் அவர்களுடன் எளிதில் ஒத்துப்போகமுடியும்; அடுத்த கட்டத்தில் "யெகோவா" என்னும் நாமத்தினையும் "அல்லாவுடன்" ஒப்புமைப்படுத்தி நம்மை வஞ்சிப்பது மிக எளிதான காரியமாகும்; அந்த வேலை ஏற்கனவே துவங்கிவிட்டது; "பரிசுத்தாவியாகிய தேற்றரவாளன்" என்பதற்கும் புது அர்த்தம் கொடுத்து அது முகமதுவையே குறிக்கிறது என்று பேசுகிறார்கள்;

இயேசுகிறிஸ்துவை தெய்வமாகத் தொழுவதே அநே
கருக்கு எரிச்சலாக இருக்கிறது; இந்நிலையில் அனைத்தையும் அறிந்து,"...பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,மறுதலித்துப்போனவர்களை"
(எபிரெயர்.6:4,5,6) என்ன செய்வதென்று தெரியவில்லை;

யூதாஸ் மனம் வருந்தியும் இரட்சிப்படையமுடியவில்லையே;
அதனை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது; இது (இயேசு தொழத் தக்கவரல்ல எனும் வேதாகம மாணவர் குழுவின் கூற்று) அப்பட்டமான விசுவாச துரோகமும்,தேவ தூஷணமுமாகும்; தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள்.


-- Edited by chillsam on Thursday 4th of February 2010 12:52:58 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாம் அவர்களே உங்களுடன் விவாதிப்பது  எவ்விதத்திலும் ஏற்றதல்ல  என்பது எனக்கு புரிந்துவிட்டது.   என்னவிருந்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்ட 
சகோதரர்களை  "குருமதி குரங்குகள்" என்றெல்லாம்  வர்ணிக்கும் உங்களிடம்  நியாயமான பதிலை எதிர்பார்ப்பது  எனது தவறுதான்.
ஆகினும் ஒன்றேஒன்றை மட்டும் நான் விளக்கிவிடுகிறேன்.

sundar wrote:-
// நாராயணர் என்பதற்கு  நார் =  தண்ணீர்  அயனர் = அசைவாடுபவர் //
chillsam wrote:
இதுவும் ஒரு சரியான தமாஷ்..!

நார் +அயனர்  என்பதற்கு நான் சொல்லியிருக்கும் பொருள் ஒன்றும்  எனது சொந்த கருத்தல்ல! இருபெரும்  கவிஞர்களால் எழுதப்பட்டு சுமார் பத்துக்கும் பெறப்பட்ட வல்லுனர்களால் சரி என்று சாற்று அளிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் இருந்தே அந்த கருத்தை எடுத்து எழுதியுள்ளேன்.
chillsam wrote:
///நீங்கள் சொல்லும் யெகோவாவுக்கு புதிய ஏற்பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;அந்த பெயர் புதிய ஏற்பாட்டில் ஒருமுறை கூட இல்லை;;"யெகோவா" தேவனுடைய குறிப்பிட்ட இந்த பெயரானது படைப்பிலும் சம்பந்தப்படவில்லை;//

"இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்றும் "சர்வவல்லமை மிக்க தேவன்" என்றும்  வேதம் அறிமுகப்படுத்தும் மண்ணை எடுத்து மனிதனையும் நம்மையும்   உருவாக்கிய   "யகோவா" எனப்படும்  "கர்த்தர்" யார்? என்பதை அறியாமல் அவரை பற்றிய  தங்களின் கருத்துக்கள் மிக அருமையாக இருக்கிறது. நீங்கள்   உண்மையில் ஒன்றையுமே அறியவில்லை என்றே நான் கருதுகிறேன்.
எனது தளத்தில் இருந்த உங்களின் மோசமான பதிவை பார்த்து ஆண்டவரிடம் ஆண்டவரே எந்த  தேவையற்ற பதிவும்  என் தளத்தில் வராதபடி தடுக்கவேண்டியது உங்கள் பொறுப்பு என்று வேண்டினேன்,  அதன் அடிப்படையில்   எனது தளத்தில் இருந்த உங்கள் பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி.

என்னை கோபமூட்டி உம்மைப்போல மரியாதை கெட்ட வார்த்தைகளை பதியவைக்க தூண்டுகிறீர் அது ஒருகாலும் நடக்காது!

என்னைப் பற்றியும்தளம் பற்றியும் அவதூறாக எதுவும் எழுதினால் ஆண்டவர் எனக்கும் உங்களுக்கும் நடுவில்நிற்று நியாயம்தீர்ப்பார்.

மன்னிக்கவும்,  இனி எனக்கு இங்கு வேலையில்லை.
நன்றி!



-- Edited by SUNDAR on Thursday 4th of February 2010 07:03:06 PM

-- Edited by chillsam on Friday 5th of February 2010 12:26:21 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// குழப்பவாதி என்று நான் எங்கும் கூறவில்லை //

உங்களைத் தொடர்ந்து "ரவி" என்ற நண்பர் சொன்னது.

// "வெளியே போ" என்ற கருத்திலும் எழுதவில்லை;"விலகி இருப்பது" என்று குறிப்பிட்டது //

விவாதம் என்று வந்தபிறகு "விலகியிரு" என்பது மட்டும் என்ன நியாயம்? எனது கேள்விக்கு கருத்துச் சொல்லமுடியாவிட்டால் எனது பதிவை நீக்கலாம், தணிக்கைச் செய்யலாம்; அதையெல்லாம் விட்டுவிட்டு என்னைக் குறித்தும் எனது குணாதிசயத்தைக் குறித்தும் ஆராய்வதிலேயே உங்கள் திறமையை பயன்படுத்துவது ஏனோ?

// தேவனின் ஆதிநிலை //

உங்கள் மற்ற தோழர்கள்,தேவனுக்கு ஆதிநிலை என்பது இல்லை என்று சொன்னதை கவனத்தில் கொள்ளவும்;அவர் அனாதியானவராம்,அவரால் உலகை சிருஷ்டிப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டவரே தூதனே இயேசுகிறிஸ்துவாம்;அவர்கள் உங்களைவிட்டு விலகிய பிறகும் உங்களுக்கு பாசம் போகவில்லை;"திருட்டுத் தண்ணீர்" தித்திக்கும் என்பது உண்மைதானே?

இயேசு அனாதியான தேவனில் ஒரு பகுதி என நேரடியாகச் சொல்லிவிட்டுப்போக தைரியமில்லாமல் நீங்கள் தான் "வழவழாகொழகொழா" என்று "ஜவ்வு" மாதிரி இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்;"இயேசு ஒருவரே மெய்யான கடவுள் என்று சொல்லப்படுகிறது;அது தவறான கூற்று" என்று அறிக்கை விடுகிறீர்கள்;

//அறிவாளிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இயேசு ஒரு அந்நிய தேவன் அல்ல என்பதை புரியவைக்க... //

அவர்களுக்கு மறைத்து படிப்பறிவில்லாதோர் மூலம் உலகமுழுவதையும் சந்தித்ததே நற்செய்தி என்பதை நினைவில் கொள்ளவும்;அவர் ஏற்கனவே ரூபிக்கப்பட்டவர்;இனி உங்களைப் போன்ற புல்லர்கள் எழும்பி அவரை நிரூபிக்க வேண்டிய அவ‌சியமில்லை;

// எனது கருத்துக்களையோ அல்லது வேதத்தின் அடிப்படையோ நான் யாருக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்;அதற்காக நான் பிடித்ததுதான் மூணுகால் முயல் என்றும் வாதிட மாட்டேன் //

இதுவே உங்கள் அனைத்து முரண்பாடுகளுக்கும் சரியான உச்சக்கட்ட உதாரணம்;அநேகமாக உங்கள் தலையில் பாதிக்கு மேல் முடி இருக்காது என்றெண்ணுகிறேன்..!

// நாராயணர் என்பதற்கு  நார் =  தண்ணீர்  அயனர் = அசைவாடுபவர் //

இதுவும் ஒரு சரியான தமாஷ்..!

நல்ல சமஸ்கிருத அறிஞரை அணுகி உண்மையான பொருளைத் தெரிவிக்கவும்;

கேட்பதற்கு முன்னர் உத்தரவு சொல்பவன் மதியீனன் என்று வேதம் சொல்லுகிறது என்று எண்ணுகிறேன்;

எனவே என்னிடம் யாரும் விசாரிக்காத எதையும் நானாகச் சொல்வது எனக்கு வழக்கமல்ல;

நான் கண்டுபிடித்தது ஆதாரப்பூர்வமான உண்மையாகவே இருந்தாலும் அதனை அவசரப்பட்டு சில ..... முன்பு போட ஆவியானவர் என்னை அனுமதிக்கிறதில்லை;

// எனக்கு தேவன் தெரிவித்த  உண்மைகளை //

தேவன் உங்களுக்குத் தெரிவித்ததாக நீங்கள் சொல்வதெல்லாம் புளுகுமூட்டைகள்;ஏனெனில் நீங்க
ள்,வேதத்தில் இல்லாததையும் பேச தேவன் வல்லவர் என்று புருடா விட்டுக்கொண்டிருக்கிறீர்களே..!

நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைகள் உங்களிடமிருந்து வந்தால் அது ஏற்கனவே சொல்லப்பட்டதாகவே இருக்கும்;அதில் உங்களுக்கென்னய்யா பெருமை...நெருக்கம்...பாடுகள்...பய‌ம..?
அதுதான் எல்லார்மீதும் விழுந்த கட‌மையாயிற்றே..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

சகோதரர் சிலசம் அவர்களே மீண்டும் அதே அணுகுமுறையில் பதிவிடுகிறீர்கள்!  உங்களை குழப்பவாதி என்று நான் எங்கும் கூறவில்லை வெளியே போ என்ற கருத்திலும் எழுதவில்லை அபாண்டமாக எழுதவேண்டாம்.  "விலகி இருப்பது" என்று குறிப்பிட்டது உங்களை நிதானம் இழக்கசெயும் பதிவுகளை இடதூண்டும்   
திரிகளைவிட்டுத்தான். 
   
உங்கள் பதிவில்  பதில் சொல்லகொடிய அளவுக்கு வேத வசனத்தின் அடிப்படையில்   ஒரு கருத்தும் இல்லை ஆனால் எதிர்ப்பு மட்டுமே காண முடிகிறது!  வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்னை குறித்து சாட்சி கொடுப்பவை அவைகளே என்று இயேசு கூறியுள்ளார்
 
காணக்கூடாத தேவனின் ஆதிநிலை மற்றும் தொடக்கம் என்னவன்பதை ஆராய்ந்தால்தான்    இயேசு என்பவர் எங்கிருந்து எதற்க்காக இம்மண்ணுலகுக்கு   வந்தார் என்பதை சரிவர புரிய வைக்க முடியும் என்ற நோக்கிலேயே அதை பதிவிட்டேன். மற்றபடி போதனைகள் என்பது எல்லா மதத்திலுமே அவரவர்களுக்கு ஏற்றாற்போல்  இருக்கிறது. படிக்காத பாமர மக்கள் எதோ  அற்ப்புதம்  அதிசயம்  ஆசீர்வாதம் என்ற அடிப்படையில் இயேசுவை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால்   அறிவாளிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இயேசு ஒரு அந்நிய தேவன் அல்ல என்பதை புரியவைக்க  அவற்றை ஆழமாக   விளக்கவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. 
 
ஆண்டவருக்கு இழுக்கு வருகிறதா இல்லையா என்பதை  நீங்கள் பொருத்திருந்துதான்  பார்க்கவேண்டும் ஏற்கெனவே இதுபோல் யோபுவின் பாடுகள் பற்றி எழுதி பின்னர் மவுனமாநீர்கள் இப்பொழுது  மீண்டும் அதே நிலையை கடைபிடிக்கிறீர்கள். என்னுடைய  எழுத்துக்களால் நிச்சயம் நன்மைதான் விளையுமே அன்றி  யாரும் இடரலடைய மாட்டார்கள். எனது கருத்துக்களையோ அல்லது வேதத்தின் அடிப்படையோ நான் யாருக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்.   அதற்காக நான் பிடித்ததுதான் மூணுகால் முயல் என்றும் வாதிட மாட்டேன்.  
 
நாராயணர் என்பதற்கு  நார் =  தண்ணீர்  அயனர் = அசைவாடுபவர்  அதாவது தண்ணீர் மேல் அசைவாடுபவர் என்று பொருள்.  அது ஒருவேளை நமது வேதாமம் குறிப்பிடும் ஆதியில்  தண்ணீர் மேல் அசைவாடிய  தேவ ஆவியானவராக  கூட  இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தேன்.  அவருக்கு உருவம் உண்டாக்கி வழிபடும் மார்க்க  நிலையின் செயல்பாடுகள்தான் தவேறேயன்றி,  தண்ணீரில் அசைவாடிய தேவனை வழிபடுவது தவறாகுமா?  பொருளில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என்றும்  எழுதிவிட்டேன் வேறு என்ன உங்களுக்கு விளக்கம் வேண்டும். 
 
///தெய்வத்துவத்தை துணிகரமாக ஆராய்வதைக் குறித்து நான் வைராக்கியத்துடன் ஒரு உதாரணத்தைச் சொல்வதுண்டு; "அது பெற்ற தாயின் கருவறையை ஆராய்வதற்கு சமானமானது"///
 
நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்று, பிறமத சகோதர்களும் தாங்கள் வழிபடும் தெய்வத்தின் உண்மை தன்மையை ஆழமாக  ஆராயாமல் போனால்  இறுதிவரை  தவறான வழியில் இருக்கவேண்டியதுதான்!    

இஸ்லாம் சகோதரர்களை பற்றி எழுதுகிறீர்கள்! அவர்கள் இவ்வாறு அராய்ந்து பார்க்காமல் போனதால்தான் இன்னும் உண்மை தேவனை அறியமுடியாமல் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்!


இதே கருத்தைதான் பல இந்துக்களும் சொல்கின்றனர் கும்பிடும் தெய்வத்தை மாற்றுவது பெற்ற தாயை மாற்றுவதுபோலாகும்   என்று  ட யலாக் பேசுகிறார்கள்!  அவர்களிடம் ஏன்
   இயேசுவைப்பற்றி சொல்லி பெற்ற தாயை மாற்ற சொல்கிறீர்கள் ?
 
உங்கள் வைராக்கியம் மட்டும்தான்  இருக்கவேண்டும் பிறர்  வைராக்கியம்  தொலையவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?   
 
"வெளிப்படுத்தபடாத மறைபொருளோ அறியக்கூடாத ரகசியமோ எதுவும் இல்லை" என்று இயேசுவே கூறிவிட்டார். எனவே எதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறு இல்லை என்றே நான் கருதுகிறேன்! 

நான் பல மார்க்ககாரர்களின்  தளங்களில் எழுதியிருக்கிறேன் அனால் உங்கள் எழுத்துக்கள் ஆண்டவரை அறியாதவர்களின்  எழுத்துக்களை விட கடினமாக இருப்பதை உணர்கிறேன்.  உங்களைபோன்றவர்களின் கருத்து எதையும் நான் அறிய விரும்பவில்லை!   தயவு செய்து பிடிக்காத காரியங்களை விட்டு விலகியிருங்கள்  ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்!
    
 
இது இறுதி காலம் எனவே எனக்கு தேவன் தெரிவித்த  உண்மைகளை இனியும் நான்  மறைத்து மறைத்து வைத்தால் நாளை தேவன் என்னிடம் கேள்வி கேட்பார் என்றே  நான் அஞ்சுகிறேன்!  நம்புகிறவர்கள் நம்பட்டும் நம்பாதவர்கள் நம்பாமல் போகட்டும். ஆனால் மனுகுலத்தின் இரட்சிப்பு இயேசுவின்  கரத்தில்தான் இருக்கிறது என்பதை நான் நிச்சயம் புரியவைத்தே  ஆகவேண்டும்! அதன் முடிவு என்னவென்பது எனக்கும் தேவனுக்கும் உள்ள விஷயம்  பொறுத்திருந்து பாருங்கள்! 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// விலகிவிடுவது நல்லது... நிதானம் இழப்பதைவிட...தேவனை பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள் என்பதே எனக்கு புரியவில்லை...குழப்பவாதியான நீங்கள் //

மீண்டும் ஒருமுறை இதுபோன்ற "வெளியே போ" அணுகுமுறை...உங்கள் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் முறையா இது? இது பொதுவான தளம் என்பதாலேயே உள்ளே வருகிறேன்; தேவைப்பட்டால் நீங்களும் இதனை நண்பர்கள் மட்டும் பதிக்க, தங்களால் தணிக்கை செய்யப்படும் தளமாக மாற்றிக்கொள்ளலாம்;

அதில் சிலர் மிகவும் "ஞானமாக" "அன்பாக" "சத்தியத் தேடலுடன்" செயல்படுகிறார்கள்; என்னை நீக்குவது அவர்களுக்கு "பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டுபோனதாக" எண்ணிய மதியீனத்தைப் போலவே ஆகப்போகிறது..!


பிரச்சினை யாரிடத்திலிருக்க்கிறது என்பதே உணராமல் என்னை "குழப்பவாதி" என்றும் "தெளிவில்லாதவன்" என்றும் "நிதானமில்லாதவன்" என்றும் விமர்சித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்;

ஒரு விமர்சகன் விளக்கவுரை தரவேண்டிய அவசியமில்லை என்பது நீங்களெல்லாம் முந்தியறிய வேண்டியது;
இயேசுவானவரும் கூட யாருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை யென்பதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; நான் உங்களைப் போல ஒரு பெரிய யானையின் ஒரு "மசுரைப் பிடித்துக்கொண்டு" தொங்காதது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமோ?

சர்வ வல்ல தேவனை கேவலம் ஒரு யானையுடன் ஒப்பிடும் நீர் மெய்யாகவே குருடன் தான்...நான் குருடனும் அல்ல,என் தேவன் யானையுமல்ல,போதுமா..?

நான் அவரைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை;

நான் பிரச்சினைகளின் அடிப்படையில் வாசகருடைய கண்ணோட்டத்திலிருந்து எனது கருத்துக்களை முன்வைக்கிறேன், அவ்வளவே; உங்களுக்கு எதையும் சொல்லித் தரப்போவதில்லை;

அப்படியானால் என்மீதும் ஒரு முத்திரை குத்தி ஒரு குறிப்பிட்ட குழுவில் சேர்த்துவிடுவீர்கள்;உங்களிடம் ஆரோக்கிய உபதேசம் இருக்குமானால் என்னுடன் இணைந்து அதாவது இந்த தளத்தில் போராட அழைத்தேன்; உங்களுக்கு அதில் விருப்பமில்லை, தவிர முரண்பாடான காரியங்களையே விவாதித்து ஆண்டவருக்கு இழுக்கான தலைப்புகளையும் கருத்துக்களையும் கிறிஸ்தவ தளத்தில் அள்ளி தெளித்துக்கொண்டிருக்கிறீர்கள்;

தயவுசெய்து இதே இணைய உலகில் இஸ்லாமியரது தளங்களுக்குச் சென்று அங்கே அல்லாவின் மீதோ முகமதுவின்
மீதோ ஐயத்தை ஏற்படுத்தி விளக்க முயற்சிக்கும் ஒரு தலைப்பாவது எந்த மொழியிலாவது இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்;
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..!

ஆனால் கிறிஸ்தவனுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லாததால் கண்டதையும் எழுதுவது பொழுதுபோக்காகிவிட்டது;உங்களுக்கு நல்ல முன்னோடியான தலைவர்கள் வாய்த்திருந்தால் இப்படி தன்னிச்சையாக கொள்கைகளை நிறுவிடத்துணியமாட்டீர்கள்; இதனால் இணையத்துக்கு நம்மைத் தேடிவரும் எத்தனை புதிய விசுவாசிகளைத் தடுமாறப்பண்ணுகிறீர்கள் என்பதை அறிவீர்களா? அறியாதவைகளில் துணிகரமாக நுழைந்து கருத்து சொல்லுவதைவிட அமைதியாக இருப்பது நல்லது என்று நான் எண்ணுகிறேன்;தெய்வத்துவத்தை துணிகரமாக ஆராய்வதைக் குறித்து நான் வைராக்கியத்துடன் ஒரு உதாரணத்தைச் சொல்வதுண்டு; "அது பெற்ற தாயின் கருவறையை ஆராய்வதற்கு சமானமானது"

ஆண்டவர் போதனைகளாக வழிகாட்டு நெறிகளாகப் போதித்தவைகளை தாராளமாக ஆராய்வதில் தவறில்லை;அதைவிட்டு விட்டு ஆண்டவரையே ஆராய்வது என்பது நகைச்சுவைக்காகச் சொல்கிறேன்,அது "போலீஸ்காரரின் தொப்பையை நோண்டுவதைப் போன்றதாகும்"

இறுதிக்குறிப்பு:
தாங்கள் நாராயணன் என்பதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு சரியான பதிலைக் கேட்கவோ சொல்லவோ இல்லை என்பதையறிய வேண்டுகிறேன்,



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே நீங்கள் யாருக்கும் நோகாமல் எழுத முயற்சிப்பது தெரிகிறது; ஆனாலும் உண்மைகளை நோகாமல் எழுதுவதும் முன்பின் யோசிக்காமல் எதோ ஒன்றை நோகாமல் எழுதுவதும் உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்; சற்று நிதானமாக எழுத முயற்சிக்க வேண்டுகிறேன்;

இரண்டு சர்ச்சைக்குரிய காரியங்களை வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்;

// தாங்கள் கூறும் நாராயணர் அவராக  கூட இருக்கலாம் ஏனெனில் "நாராயணர்" என்பதற்கு நார் + அயனர் என்று பொருள் அதாவது தண்ணீர் மீது சயனிப்பவர் என்று பொருள்படும்; அதையே பைபிளே "ஆதியில் தேவ ஆவியானவர் ஜலத்தின்மீது அசைவாடிக் கொண்டு இருந்தார்" என்று குறிப்பிடுகிறது! //

ஒன்று "நாராயணன்" என்பதற்கு நீங்கள் குறிப்பிடும் பொருளும் ஒப்பீடும் முற்றிலும் தவறானதாகவும் மேம்போக்காகவும் இருக்கிறது;

ஒரு அந்நிய தெய்வத்தின் பெயருடன் உயிருள்ள தேவனை ஒப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்; அப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் மாற்றார் பரிகசிக்கும் வண்ணமாக சுவிசேஷத்தைக் கூற உங்கள் தேவன் உங்களைப் பணித்திருக்கமாட்டாரென்று எண்ணுகிறேன்.

// "இயேசுதான் ஒரே கடவுள்" என்று  என்று பலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்;அது ஒரு தவறான கூற்று! //

கிறிஸ்தவத்தையே பிளவுபடுத்தும் இந்த கருத்தினால் நீங்கள் எனது மூன்றாவது எதிரியாக மாறப்போகிறீர்கள்; இயேசுதான் கடவுளா என்று கேளுங்கள், எங்கள் கருத்தை முன்வைக்கிறோம்; பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்; அதைவிட்டு விட்டு தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை இங்கே பதிப்பதால் யாருக்கும் பயனிராது;"அங்கே" அதிகம் புழங்கியதால் உங்கள் இருதயமும் வஞ்சிக்கப்பட்டதோ அல்லது நீங்களும் வேடதாரியோ என்று அஞ்சுகிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

glady wrote:

இயேசு தொழத்தக்கவரா என்று யாராவது விளக்கினால் நலம்;
ஏனெனில் எனக்கு சத்தியத்தைச் சொன்னவர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி அவர் பெயரில் விடுதலையுண்டாகும்,முக்தி கிடைக்கும் என்றே கூறினார்கள்;அதையே எங்கள் குடும்பத்தார் நம்பி இயேசுவை ஆண்டவராக ஏற்று தொழுதுகொண்டு வருகிறோம்;

ஆனால் சிலர் "யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்" என்று பாடி புதிய நாமத்தைக் குறித்துச் சொல்லி அநேகரை குழப்புகிறார்களே;எங்கள் பின்சந்ததியாருக்கு நாங்கள் எதைச் சொல்லுவது?

தயவுசெய்து யாராவது விளக்கினால் நல்லது.



இப்படி அனேக சகோதர சகோதரிகள்  குழப்பத்தில் இருப்பதால்தான் அதை ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணி  "இறைவன்" என்ற தளத்தில் இது சம்பந்தமான விவாதத்தை தொடங்கி வேத வார்த்தைகளின் அடிப்படையில் ஆராய்ந்து  விவாதத்தை   நடத்தி வருகிறோம்;

ஆனால்,  ஏனோ சகோதரர் சில்சாம் அவர்களுக்கு அது தவறாக தெரிகிறது;சகோ. சில்சாம் நீங்கள் தேரியவராக இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. உண்மை தெரியாமல் இன்கா அங்கா என்று இருப்பவர்கள் பலர்; அவர்களுக்காக நிச்சயம் அந்த விவாதம் தேவை. முடிவு எப்படி வருகிறது என்று பார்த்து அந்த திரியை வைப்பதா  அல்லது தூக்குவதா என்று முடிவெடுக்கலாம்.


SUNDAR




-- Edited by chillsam on Saturday 23rd of January 2010 04:13:12 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

இயேசு தொழத்தக்கவரா என்று யாராவது விளக்கினால் நலம்;
ஏனெனில் எனக்கு சத்தியத்தைச் சொன்னவர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி அவர் பெயரில் விடுதலையுண்டாகும்,முக்தி கிடைக்கும் என்றே கூறினார்கள்;அதையே எங்கள் குடும்பத்தார் நம்பி இயேசுவை ஆண்டவராக ஏற்று தொழுதுகொண்டு வருகிறோம்;

ஆனால் சிலர் "யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்" என்று பாடி புதிய நாமத்தைக் குறித்துச் சொல்லி அநேகரை குழப்புகிறார்களே;எங்கள் பின்சந்ததியாருக்கு நாங்கள் எதைச் சொல்லுவது?

தயவுசெய்து யாராவது விளக்கினால் நல்லது.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//அவரின் வார்த்தையை இயேசு கிறிஸ்துவாக அவர் படைக்கவில்லை, மாறாக படைக்கப்பட்ட இயேசு கிறிஸ்து அவரின் வார்த்தையாக (லோகோஸ்) இருந்தார் என்பது தான் சரியான வரியாக இருக்க முடியும். //

வேதப்புரட்டு என்பதற்கு இதைவிட சரியான உதாரணம் இருக்கமுடியாது;இயேசுவின் தெய்வத்துவத்தை மறுக்கும் கருத்துக்கள் இங்கே தேங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள தள நிர்வாகி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்;

அவர்களுக்கென்று இருக்கும் தளத்தில் எதையாவது எழுதிக் கொள்ளட்டும்;இங்கு வந்து யாருக்கும் போதிக்கவேண்டாம்; "வேதாகம மாணவன்" என்பவன் கற்றுக் கொடுக்கும் நிலைக்கு வரக்கூடாது..!

எல்லோரும் தங்கள் கருத்தை சொல்ல உரிமையுண்டு; ஆனாலும் மகா தேவனாகிய இயேசுகிறிஸ்துவை தரம் தாழ்த்தி ஆராயும் கருத்து எங்கு இடம் பெற்றாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்;

(உதாரணத்துக்கு முகமதுவைக் குறித்து கேலிச் சித்திரம் வரைந்தவர் பட்டபாடுகளை நினைத்துக் கொள்ளுங்கள்..!)


// மற்ற எந்த ஒரு படைப்புக்கும் முன்னதாக அவர் இயேசுகிறிஸ்துவை படைத்தார் //

இறைவனைக் குறித்து ஆராய்கிறோம் என்று துவங்கிய இந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாக "யேகோவா சாட்சிகள்" எனும் துருபதேசக் கூட்டத்தாரின் தளமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சியாகும்;

யெகோவாவின் சாட்சிகளே, உங்களுக்கென்று புது வேதாகமத்தையே எழுதி அதையும் தப்பும் தவறுமாக அர்த்தம் கற்பித்து போதித்து முழு விசுவாசக் குடும்பத்தையும் கவிழ்த்து வருகிறீர்களே,அது போதாதா;

இஸ்லாமியருக்கும் மற்றவருக்கும் திருத்தப்பட்டதாகவும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாகவும் முத்திரையிடப்பட்டதாக்வும் தோன்றும் இந்த வேதத்தை விட்டுவிடுங்கள்; எங்கள் வேத நாயகனான இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பேசுவதையும் நிறுத்திவிட்டு உங்கள் நம்பிக்கையை வெளிப்படையாகப் பேசி உங்கள் நேர்மையை காட்டுங்கள்; சுற்றிவளைத்து சோப்புப் போடவேண்டாம்;

பழைய ஏற்பாட்டில் இயேசு யாராக இருந்தார் என்றோ இல்லாமலே இருந்து பிதாவாகிய  தேவனால் விசேஷித்த நோக்கத்துடன் சிருஷ்டிக்கப்பட்டார் என்றோ நீங்கள் விவாதிக்கும் அதே நேரத்தில் இயேசுவானவர் இந்த உலகத்துக்கு வந்த நோக்கத்தைக் குறித்து வலியுறுத்தி ஆதாயம் செய்ய வேண்டிய கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் பாதாளத்துக்கு விரைந்துக் கொண்டிருக்கிறது என்று நான் சொன்னால் பாதாளமே சாதாரண கல்லறைக் குழிதான்; ஆத்துமா என்ற ஒன்று இல்லை என்பீர்கள்;

ஆக இந்த தளத்தின் மீதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது; ஏனெனில் அவரும் (
இறைநேசன் ) இந்த துஷடர்களுடன் சேர்ந்துகொண்டு "இயேசு தம்மை பிதா என்று சொல்லவில்லையே" என்கிறார்;

வாசகர்கள் கவனிக்கவும்;இயேசுகிறிஸ்துவின் நாமமே நாம் இரட்சிக்கப்படும்படி தேவனால் கட்டளையிடப்பட்டது;அவர் மூலம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம்;எனவே இயேசுகிறிஸ்துவே ஆராதனைக்குரியவர்;அவரே பாத்திரர் என்று தூதர்களும் புகழ்ந்தனர்;இதுவே பிதாவுக்குப் பிரியமானது;

"இயேசு தம்மை பிதா என்று சொல்லவில்லையே" என்று சொல்லுவோர் கவனிக்க:

இயேசு தம்மை பிதா இல்லையென்றும் சொல்லவில்லையே:
தம்மை விழுந்து தொழுத யாரையும் தடுக்கவுமில்லையே;

இயேசுவை சாதாரண ஏவல் சக்திபோலவும் குட்டிச்சாத்தான் போலவும் சித்தரிக்க முயற்சித்தால் வீணாக உதைபடுவீர்கள்,ஜாக்கிரதை..!


-- Edited by chillsam on Friday 22nd of January 2010 12:16:31 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard