நான் விட்டு வந்ததைத் தாங்கள் தொடருவதைக் குறித்து அதிக சந்தோஷம்;ஆனாலும் எந்த முடிவுக்கும் வர இயலாததொரு விவாதத்தில் ஒரு அளவுக்கு மேல் போராடுவதால் என்ன பயனோ தெரியவில்லை;
தங்கள் வாதத்தை இங்கே பதிப்பதாக இருந்தால் பின்னூட்ட பாணியில் எழுதாமல் ஒரு முடிவுக்கு வரும் வண்ணமாகக் கட்டுரையாக தெளிவாக எழுத அன்புடன் வேண்டுகிறேன்;
அதேபோல மற்ற தளத்தில் பதிக்கும் அதே செய்தியை இங்கேயும் மறுபதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டுகிறேன்; இதனால் புதிய வாசகர்களை நாம் இழக்கும் ஆபத்து உண்டு;
தயக்கமில்லாமல் தங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மணியன்: // விவேகம்..? நிதானம்..? மன்னிக்கவேண்டும் சகோதரி,அது எங்கே போயிற்றென்று தெரியவில்லை // ஆம்,உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்;எனது கருத்துக்களையும் மதித்து அதன் மறுபக்கத்தை விளக்கியதற்கு நன்றி சகோதரரே..!
நான் எழுதுவது பேசுவது போலிருப்பதால் அதில் நாகரீகம் சற்று குறைவாக இருக்கலாம்; எனக்கென்று எந்த போலியான மத அடையாளமுமில்லாததால் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே போகிறேன்; தயவுசெய்து என்னைப் பிரித்துப் பேசாதீர்கள்,நான் இன்னும் மதம் மாறவில்லை;
ஆனால் மறைமுகமாகக் குறிப்பிட விரும்பியது இந்துக்களை எதிர்த்து கலகம் செய்வோரை விட்டு விட்டு தவறான திசையில் கல்லெறிந்துக் கொண்டிருக்கிறீர்களே அதை தங்கள் மேலான கவனத்துக் கொண்டு வர விரும்புகிறேன்;
நாம் மனிதராக ஒருவரையொருவர் கட்டாயத்தின் பேரில் ஒத்துப்போவது பெரிய விஷயமல்ல; அதை வலியுறுத்தும் "ரோஜா" மற்றும் "பம்பாய்" போன்ற படங்கள் வெளிவந்ததால் யார் யாரோ கோடீஸ்வரனாகிப் புகழ் பெற்றாரே தவிர மதத் தீவிரவாதம் சற்றும் குறையவில்லையே;
சீக்கியருடைய கலவரத்தை அடக்க முடிந்த நமக்கு காஷ்மீரில் ஒன்றும் செய்யமுடியாத காரணமென்ன? இரண்டுமே பாகிஸ்தான் எல்லையில் தான் இருக்கிறது;அப்படியானால் இங்கே மதத் தீவிரவாதம் பெரும்பங்காகிறது;
சீக்கியரிடத்தில் மதவெறியைவிட தேசபக்தி அதிகமிருந்ததாலேயே அங்கே அமைதி திரும்பியது; ஆனால் பால் தாக்கரே,ராஜ் தாக்கரே போன்றவர்களின் வெறி எந்தவகையான வெறியோ ? அதனால் இரத்த ஆறு ஓடவில்லையா? அவர்கள் வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பவில்லையா?
கடவுள் யாராக வந்தார் என்பதை விடுங்கள்;அப்படி கடவுள் அவதாரமெடுத்து வந்தவர்கள் செய்தது என்ன என்பதிலேயே அவரவருடைய தரம் விளங்கும்;
ராமன் காட்டுக்குச் சென்றதால் நான் அடைந்த பலன் என்ன? அது நான் சுடுகாட்டுக்குச் செல்லாமல் தடுக்க வகைசெய்யுமா என்ன?
கண்ணன் வெண்ணையைத் திருடியும் இளம்பெண்களின் உள்ளாடைகளை ஒளித்து வைத்தும் லீலைகள் செய்ததால் என் பிள்ளைகள் அடைந்த பலன் என்ன?
ஒரு பக்கம் இறைவாக்கு உரைத்துக் கொண்டே மறுபக்கம் மருமகள் முதல் பேத்தி வயது வரையுள்ள எண்ணற்ற பெண்களைத் திருமணம் செய்து துன்மார்க்கமாய் வாழ்ந்த இறை தூதரால் என் ஆன்மா எப்படி ஈடேறும்?
// நாங்கள் ஒன்றும் தனி தீவாக இருந்து விடவில்லை; நானும் கிறித்தவர்களுடன் சேர்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கிறேன் //
இதற்கு நம்முடைய தேசத்தின் கட்டமைப்பே காரணம்,அன்பரே; நீங்களோ நானோ சேர்ந்து எடுத்த முடிவல்ல இது; இந்தியா தன்னை ஒரு இந்து நாடாக அறிவித்திருந்தால் இந்த வார்த்தைக்கு அவசியமிருந்திராது;
ஆனால் இந்தியா அறிவிக்கப்படாத இந்து நாடாகவே விளங்குகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்;இதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்;
இஸ்லாமியரும் கிறித்தவரும் நமக்கு உதவி செய்து தங்கள் ந்ல்லெண்ணத்தைக் காட்டியது அவர்கள் மனிதத்தன்மையையே காட்டுகிறது, மார்க்கத்தையல்ல;
// “இழிவு செய்கிறார்களோ இல்லையோ ..” என்று ஆரம்பித்து விட்டு அடுத்த வரியிலேயே அடைப்புக்குறிக்குள் “நாற்ற வாயால் ஊதிக் கொள்வதற்கு…” என்று மந்திரிக்கும் சடங்கை செய்யும் இஸ்லாமிய சகோதரர்களை இழிவு செய்திருக்கிறீர்களே…? //
மன்னிக்கவும்;எனது தேசத்தின் நிர்ப்பந்தமான நிலையைத் தெரிவிக்க வந்த வேகத்தில் எழும்பிய வைராக்கிய உணர்வினால் வந்து விழுந்த வரிகள் அவை; என் சகோதரனும் சகோதரியும் தனக்கென்று ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொள்ளாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;அப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தால் போதுமென்றே எண்ணுகிறார்கள்;அதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்; இதுபோன்ற நிலையற்ற மனப்பான்மையுள்ளவர்களால் தான் மதமாற்றக் குற்றச்சாட்டு எழுகிறது;
மனிதன் வெளிவிடும் காற்று விஷக்காற்று என்பது மருத்துவ உண்மையாகும்;அதை ஒரு குழந்தை இரவில் அலறி அலறி அழுகிறது என்பதற்காக ஓதுமிடத்தில் சென்று ஊதச் செய்தால் சரியாகிவிடும் என்பது மூடநம்பிக்கையல்லவா? இதற்கும் வேப்பிலை அடிப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
அப்படியானால் நான் இதுவரை வழிபட்டு வந்த தெய்வத்தால் அடையும் பலன் என்ன?என்னிடம் பால் குடிக்க மறுக்கும் எனது குழந்தை அடுத்தவளிடம் குடித்து வளர்ந்துவிடுமா என்ன? இப்படி மூடநம்பிக்கைகளைச் சுற்றி சுற்றி வளர்ந்த மார்க்கமே இந்து மார்க்கம்; அது ரொம்ப பெரிதாக இருப்பதால் ரொம்ப சிறந்தது என்று சொல்லமுடியாது;
தவறான பாதையில் செல்பவனை, இவனுக்குச் சொன்னாலும் புரியாது ஒரு முதியவர்கள் கடந்துச்சென்றால் அதற்குப் பெயர் சகிப்புத்தன்மை எனலாம்; உதாரணமாக இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன்; அவர்கள் தொழும்போது ஒரு விரலை மட்டும் ஆட்டிக்கொண்டே இருப்பார்களாம்; ஏன்,அப்படி விரலை ஆட்டாவிட்டால் இறைவன் அந்த தொழுகையை ஏற்றுக்கொள்ளமாட்டாரா என்று கேட்பவன் வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி காழ்ப்புணர்ச்சியை விதைப்பவன் என்று எனது அன்பு சகோதரர் திருச்சிக்காரன் சொல்வாரானால் பகுத்தறிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?
வருடம் முழுவதும் துஷ்டத்தனமாக வாழ்ந்து விட்டு ஒரு முரடன் ஐயப்பனுக்கு விரதமிருந்து சென்று வந்து ஒரு மனமாற்றமுமில்லாமல் மீண்டும் அதே வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன அர்த்தம்?இப்படி ஒவ்வொரு மார்க்கத்தைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;
// இந்த நாட்டில் உள்ள சாதரணமான வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய,சீக்கிய சமூகத்தவர் எங்களை மதித்து தான் வருகிறார்கள் //
மீண்டும் சொல்லுகிறேன்,இதற்கு எந்த மார்க்க அமைப்பும் காரணமில்லை; நம்முடைய தேசத்தின் கலாச்சாரமே காரணம்;நம்முடைய தேசத்துக்கு வாய்த்த முற்பிதாக்களே காரணம்;"பாரதவிலாஸ்" போன்ற படங்களே காரணம்;"திருவிளையாடல்" போன்ற படங்களோ "இராமாயணம்" "மகாபாரதம்" ஆகிய டிவி சீரியல்களோ காரணமல்ல்;
பெரியவர்கள் செந்நீரையும் கண்ணீரையும் சிந்தி வளர்த்த ஒற்றுமையுணர்வை குலைத்து "மசூதி"யை இடித்தாவது (கோவிலைக் கட்டினாலும் சந்தோஷ்ப்பட்டிருக்கலாம்..!) ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த சீரியல்களே காரணம்; இது ஒரு கூட்டு சதியல்லவா? அதன் விளைவையே இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது;
// உங்களைப் போன்ற மதப் பிரச்சாரகர்கள் தான் அவர்கள் மனங்களில் வெறுப்பு என்னும் விஷ வித்தை விதைக்கிறீர்கள்;(அதன் பலன்.. ஒரிசாவிலும், பீகாரிலும் கிட்டும்போது… அலறுகிறீர்கள்..)//
என்னண்ணே என்னை மத போதகராக்கி விட்டீர்களே;நான் சாதாரண வாசகி;சில ஆயிரங்களுக்காக மாதமுழுவதும் ஓடி ஓடி உழைப்பவள்;
தயவுசெய்து ஒரிஸ்ஸாவைக் குறித்தும் பீகாரைக் குறித்தும் எதுவும் சொல்லாதீர்கள்;அது மிகவும் கொடுமையானது;சொந்த மாநிலத்திலேயே ஏழை கிராம் மக்கள் அகதிகளாகி காடுகளில் உயிர் தப்ப ஓடியது உங்களுக்கு அத்தனை சாதாரண காரியமா?
உங்களுக்கு ஆட்சேபணையில்லையானால் மிஷினரி பயிற்சி களத்துக்குச் சென்று சர்வே பண்ணிப்பாருங்கள்;அவர்களது நோக்கம் என்னைப் பொருத்தவரையில் மத மாற்றமல்ல;
அவர்களுக்கு எந்த கெடுபிடி டார்கெட்டும் கிடையாது;அவர்களுக்குக் கொடுக்கப்படும் முதலாவது பணியே மக்களுடன் ஒன்றித்துப் பழகுவதுதான்;அடுத்து மருத்துவ சுகாதார அடிப்படை வசதிகளைத் தரும் தன்னார்வ நிறுவனங்களை அழைத்து அவர்களுடையத் தேவைகளைச் சொல்லுவது; இதை எந்த ஒரு அரசாங்கமோ அல்லது எந்த ஒரு தன்னார்வ மத சார்பற்ற அமைப்போ கூட செய்யமுடியும்;
ஆனாலும் தங்கள் தேவைகளைக் கூடச் சொல்லத் தெரியாத மலை வாழ் மக்களை சந்தித்து விசாரிக்க யாருமில்லை என்பதே உண்மை; தங்கள் தேவைகள் சந்திக்கப்பட்டு அந்த ஏழை மக்கள் சற்று நிமிர்ந்து நடக்கத் துவங்கினால் அதுவரை அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்க சாதியினருக்கு கோபம் வருகிறது; இதற்கெல்லாம் காரணமான சமூக சேவையாளர் மீது அவர்கள் கோபம் திரும்பி அவர்களைக் கொலை செய்கிறார்கள்;
அண்மையில் கூட ஒரிஸ்ஸாவில் பல போதகர்களைக் கொலை செய்துவிட்டதாகச் செய்தி வந்து அவர்களுடைய குடும்பத்தார் இங்கே துடித்துக் கொண்டிருக்கிறார்கள்;வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது,உங்கள் கருத்து; பாதிரியாரையும் குழந்தைகளையும் கொளுத்தினார்களே, அவர் செய்தது மதப்பிரச்சாரமல்ல,தொழுநோயாளிகளின் புண்களைக் கழுவியதே அவர் செய்த பாவம்..!
குடிப்பழக்கம் எத்தனை தீமையானது என்பதை நான் அறிந்திருந்தாலும் அதனை சாராயம் காய்ச்சுமிடத்துக்கே சென்று வெளிப்படையாகக் கண்டிப்பது என் உயிருக்கு ஆபத்தானதல்லவா? அதுபோல யாரும் செய்வதில்லை;
// மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கான வன்கொடுமைகள் இதை விட அதிகம்;அதை சுட்டிக்காட்டி அவர்களை எங்கள் மதங்களுக்கு நாங்கள் மாற்றம் செய்யலாமா? //
// “உங்க வீட்டுப் பையன் என் வீட்டு கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டான்.” என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் நான் என் மகனைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். அவனது தவறுக்கு தண்டித்துத் தான் தீரவேண்டும். அதை விடுத்து “போனவாரம் உங்க பையன் கூடத் தான் அடுத்த வீட்டு சுவர்லே அசிங்கப் படுத்தினான்?” என்றா நான் சொல்வது //
மேற்கண்ட இரண்டும் உங்கள் கருத்து தான்; எனக்கு எதிரான வாதத்தில் ஒப்பிடக்கூடாது என்று சொல்லும் நீஙகளே அதன் இறுதிப்பகுதியில் ஒப்பிடலாமா?
பெண்களை தெய்வமாகத் தொழும் இந்த நாட்டில்தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகம் என்கிறேன்,நான்; மேலைநாட்டில் கல்வியறிவு காரணமாக அவை குற்றங்களாகப் பதிவாகிறது;
இங்கோ கலாச்சாரக் கட்டுப்பாடு காரணமாகவும் சட்ட அமைப்புகளின் மோசடிகளின் காரணமாக்வும் 90% பதிவாகிறதே இல்லை; கழுவிக் குளித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்; தைரியசாலிகள் தற்கொலை செய்துக் கொள்ளுகிறார்கள்; கோழைகளோ வாழ்ந்து தொலைக்கிறார்கள்;
// ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு கிறிஸ்தவம் இந்த நாட்டிலேயே இல்லையே;அதனால் தான் கேட்கிறேன் // இது அடிப்படையில்லாத உண்மைக்கு மாறான கூற்றாகும்..!
நான் ஆங்கிலேயரிடத்திலிருந்து கிறித்தவ மார்க்கத்தினை ஏற்கவில்லை;காந்திஜியிடமிருந்தும் விவேகானந்தரிடமிருந்தும் வள்ளலாரிடமிருந்துமே இதனைப் பெற்றேன்; நான் மதம் மாறவில்லை; உணர்வையடைந்தேன்,சிந்தித்தேன்,சித்தி பெற்றேன்;
// மோசடி மட்டும் பாவம் இல்லையா.. அதை செய்யும் செய்பவர்கள் பாவிகளாக உங்கள் மதத்தில் கருதப் படுவதில்லையா? //
தயவுசெய்து என்மீது எந்த முத்திரையும் குத்தவேண்டாம்;நானும் கூட மிக எச்சரிக்கையாக மதம் என்று குறிப்பிடாமல் மார்க்கம் என்றே குறிப்பிட்டு வருகிறேன்;அப்படியே நான் குறிப்பிட்டாலும் திருத்தி வாசிக்கவும்;
தவறு செய்யும் வாய்ப்பு எங்கே அதிகம் என்று பாருங்கள்;அடுத்தவன் நான் வீட்டில் திருடுவதற்கும் என் வீட்டில் அடுத்தவன் வந்து திருடுவதற்கும் வித்தியாசமுண்டல்லவா? இதற்காகவே "வேலியே பயிரை மேய்வதா" என்ற பழமொழி சொல்லப்பட்டது;
// “உங்க வீட்டுப் பையன் என் வீட்டு கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டான்.” என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் நான் என் மகனைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும் //
உங்களது இந்த உதாரணத்தைப் படித்தபோது நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி நினைவுக்கு வந்தது;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்;
இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி; சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேரம் அங்கு வந்த அந்த சிறுமியின் தகப்பனோ சைக்கிளில் வந்தவனை கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்க- அமைதியாகப் போய்விட்டான்;
அடுத்த நாளும் அதே போல அந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்க முந்தின நாளின் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள்காரன் நேரே வீட்டுக்குச் சென்று கரும்பு வெட்டும் அரிவாளால் அந்த குழந்தையின் கழுத்தை வெறியுடன் அறுத்துப்போட்டான்;
குழந்தையின் தந்தை ஆட்டுக்கறிக்கடை வைத்துள்ள ஒரு இஸ்லாமியர்;கொலைக்காரன் ஒரு இந்து; இதற்கு மதமா காரணம்? சொல்லுங்கள். கொலைக்காரன் சொல்லும் காரணம்,அந்த தந்தை குழந்தையைக் கண்டிக்காமல் அவனைக் கண்டித்ததாலேயே குழந்தையைக் கொலை செய்தானாம்;
நீங்களும் அப்படியே உங்கள் கிறிஸ்தவ மார்க்கம் ரொம்ப யோக்கியமா என்கிறீர்கள்;எனது தாய் மதம் சரியாக இருந்திருந்தால் நான் ஏன் வெளியேறிச் சென்று அத்வானத்தில் நிற்கவேண்டும்?
பொறுமையாக இதுவரை படித்ததற்கு நன்றி...அன்புடன்: அன்புச் சகோதரன் மணியன் அவர்களே..!
கிளாடி: // சீக்கியரும் கூட இந்துக்களுடன் ஒத்துப்போகாமல் வேறு ஏதோ ஒன்றுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் இந்துக்களின் மனம் புண்படுகிறது..! //
திருச்சிக்காரன்: // திரு.கிளாடி அவர்களே, இந்துக்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. பல இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை போற்றி ஒத்துப் போக தயாராக இருக்கிறார்கள் //
பெரும்பான்மை இந்துக்களை சிறுபான்மையினரான இஸ்லாமியரும் கிறித்தவரும் சீக்கியரும் விட்டு ஒதுங்க என்ன காரணம் என்பதே எனது கேள்வி;
கிளாடி: // இப்படித்தான் அனைவரையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்;ஒருவருடைய பெயரை வைத்தே கணித்து அதற்கேற்ற மறுமொழி இடுவதை நிறுத்துங்கள்; //
திருச்சிக்காரன்: // யாருடைய பெயரையும் வைத்து நான் கணிக்கவில்லையே, அதற்க்கு ஏற்றார் போல மறுமொழியும் இடவில்லையே. இங்கே சகோதரர் மணியன் அவர்கள் இயேசு கிற்ஸ்துவை போற்றி எழுதி இருக்கிறார், அதை ஒரு உதாரணமாக் காட்டவே மேற்கோள் காட்டினேன். //
அன்பு சகோதரர் அவர்களே,மேற்கண்ட நமது உரையாடலைச் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்;பெலவீனமான ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியவரும்;
இந்து சீக்கிய பார்வையையும் இந்து முஸ்லீம் பார்வையையும் முன்வைத்ததற்கு நீங்கள் தேவையில்லாமல் கிறித்தவத்தையே சம்பந்தப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறேன்;எனக்காகச் சொன்னதொரு பதிலையே மறுக்குமளவுக்கு உங்கள் தராசு தடுமாறுகிறது;
எத்தனை முரண்பாடானதொரு வாதம், உங்களுக்கு சுற்றி சுற்றி வந்து கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்,அப்படித்தானே?
திருச்சிக்காரன்: // இசுலாமிய சமூக நண்பர்கள் பிற மார்க்கத்தின் தெய்வங்களைக் குறிப்பிட்டு அவைகளை இழிவு செய்வதை தவிர்க்கின்றனர் //
இழிவு செய்கிறார்களோ, இல்லையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையானதுதானே?
ஒரு இஸ்லாமிய தொழுகை ஸ்தலத்தில் மந்திரிக்கவென ஒரு இந்து செல்வதுண்டு (ஓதுமிடத்து நாற்ற வாயால் ஊதிக் கொள்வதற்கு..!) ஆனால் அதே இஸ்லாமியர் எந்த ஆலய கோபுரத்தையும் பார்த்து "முத்தி" போட்டு நான் பார்க்கவில்லை;
அதுபோலவே சீக்கியரும் கங்கையைப் புனிதமாகக் கருதி அதில் மூழ்குவதில்லை;
இவர்களைப் போலவே கிறித்தவரும்..!
இந்த மறுப்புக் குழுக்களிடத்தில் நீங்கள் விசாரித்துப் பாருங்கள், உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும்;அது நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் "வெறுப்புக் கருத்தாகவே" இருக்கும்;அதை ஆழமாகப் பதிய வைக்கச் சொல்லும் ஆதாரமோ "காழ்ப்புணர்ச்சியினால்" சொல்லுவது போலிருக்கும்;
இந்த "காழ்ப்புணர்ச்சி" என்ற வார்த்தையை எங்கே பிடித்தீர்களோ,அதன் பொருள் உணர்ந்தே குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை;ஆனாலும் அந்த வார்த்தை அத்தனைப் பொருத்தமானதாகத் தெரியவில்லை;
காழ்ப்புணர்ச்சியுடன் இணைந்த ஒரு சொல்லானது "பொறாமை" என்பதாக இருக்கலாம்;அப்படியானால் யார் மீது யாருக்குப் பொறாமை;ஏன்,எதற்கு?
என்னைப் பொருத்தவரை ஒரு இந்து தெய்வத்துக்குத் தொண்டாற்றி பெயர் புகழடைவதே எளிதானது;இங்கே போட்டி பொறாமை எதுவுமில்லை;எங்கு வேண்டுமானாலும் கோவில் கட்டலாம்;கொஞ்சம் சாமர்த்தியமிருந்தால் உடுக்கை அடித்து குறி சொல்லி பிழைப்பு நடத்தலாம்;
பரந்து விரிந்த இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தில் இருப்பதால் தாழ்த்தப்பட்டவர் என்ற அங்கீகாரத்தை எளிதில் பெற்று கல்வி வேலைவாய்ப்பு சலுகைகளையும் இனிதே பெற்று அனுபவிக்கலாம்;
இதையெல்லாம் விட்டு விட்டு குடும்பத்தாரையும் சொந்தங்களையும் ஊராரையும் விரோதித்துக் கொண்டு ஏன் என்னைப் போன்ற சகோதரிகள் வெளியேறி வந்தனர் என்று கேளுங்கள்;
ஆம்,நான் ஒரு பெண்ணாக சந்தித்த அனுபவங்களை இங்கே எழுத எனக்கு விருப்பமில்லை; நீங்களெல்லாம் "அப்பாவி"களாக இருக்கலாம்; ஆனால் நான் "அடப்பாவி"களையும் "படுபாவி"களையும் சந்தித்திருக்கிறேன்;
அதுபோன்ற துஷ்டர்களுக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவதை நினைத்து பரிதாபப்படுகிறேன்; இன்னும் சிலருடைய சுயரூபம் தெரியாததால் மறைப்பு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்;(நான் ராமனையும் கிருஷ்ணனையும் சேர்த்தே சொல்லுகிறேன்..!)
மணியன்: // ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு அர்த்த ஜாம பூஜைக்கான கட்டளை இஸ்லாமிய சகோதரர்களால்...
மன்றோ துரை அவர்கள் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு...
பத்ராசலம் ராமர் ஆலயத்துக்கு நவாப் அளித்த காணிக்கைகளும்...
மகான் ராகவேந்திரர் “பிருந்தாவனம்” எழுப்ப காணிக்கையாக அளித்த இஸ்லாமிய நவாபின் எழுத்துப்பூர்வமான ஆதாரம்... //
ஒரு குறிப்பிட்ட இனத்தை ஆக்கிரமித்து ஆளுவதே பாவமென்றால் "அண்டை வீட்டு நெய்யாம்,என் பொண்டாட்டி கையாம்" என்பது போல நம்மிடமே பறித்து நமக்கே கொடுத்தால் அதை வாங்கியது எத்தனை கேவலம்..?
இதைப் போய் வெட்கமில்லாமல் பெருமையாகக் குறிப்பிடுகிறீர்களே..!
இன்றைக்கும் சரி அன்றைக்கும் சரி வாழ்வியல் தேவைகளுக்காக சமரசம் செய்துக் கொண்டு போவது ஒத்துப்போவதாகாது;
திருப்பதியில் முறைப்படி ஏலத்தில் லட்டு காண்டிராக்ட் எடுத்தவர் மீது மோசடி புகார் எழுந்ததே;அப்போது எங்கே போனது உங்கள் மத நல்லிணக்கம்?
அவர் கிறித்தவர் மோசடியாக லட்டு காண்டிராக்ட் பெற்றுவிட்டார்;இந்து மாத்திரம் நேர்மையாக அனைத்தையும் செய்கிறாரா?
ஏன்,பூஜாரிகளே திருட்டுப் புகாரில் சிக்கவில்லையா?
//“BROTHERS AND SISTERS ” // என்ற சொல்லாட்சி புனித பைபிளிலிருந்தே பெறப்பட்டு உலகமெங்கும் பரவியது;மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து கிறித்தவம் வரவில்லை;கீழ்த்திசை மார்க்கமான அது மேற்கில் புகழ்பெற்று அங்கிருந்து இங்கு வந்தது;
இங்கே எல்லாமே "ஸ்வாமி" என்பது தானே;ஆனால் விவேகானந்தரோ கிறித்தவக் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டு ஆனாலும் மதம் மாறி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தனித்தன்மையுடன் செயல்பட்டு புகழ்பெற்றார்;
// “இந்தியாவில் உள்ள கௌரவமான சமுதாயங்களுள் ஒன்றான சீக்கிய சமுதாயம்” //
ஓஹோ,சீக்கியருக்கு இணையான கௌரவமான ஒரு சமுதாயத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்;
மார்வாடிகளைச் சொல்லலாமா?
போங்க சார், வீரத்துக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் தேசபக்திக்கும் அவனுக்கு (சீக்கியருக்கு) இணை யாருமில்லை என்று நான் சொல்லுகிறேன்;கண்டிப்பாக மற்றொரு சமுதாயத்தைச் சொல்லமுடியுமானால் அது தமிழன் தான்..!
// சிந்து சமவெளியில் நாகரீகம் கண்டவர்கள் நாங்கள் //
அது ஒரு பெரிய சப்ஜெக்ட்,அதை இப்போது தொடவேண்டாம்;அங்கே நீங்கள் நிகழ்த்திய கொடூரத்தை இன்றைக்கு வரலாறு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது;
ஒரு இனத்தையே பூண்டோடு அழித்து தனதாக்கிக் கொண்டதில் என்ன பெருமை?
அவனுடைய எழுத்து இருந்தும் அதைப் படித்துச் சொல்ல ஒருவனையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையே;
அந்த பதட்டத்தால்தான் எல்லோரையும் பார்த்து மிரளுகிறீர்கள்; ஆக்கிரமித்தவனுக்கு தானே அதன் முழு கொடூரமும் தெரியும்?
"ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்" அதுபோல சிந்துசமவெளி மக்களை அழித்து அவர்கள் கலாச்சாரத்தைத் திருடிய உங்களுக்கு அவர்கள் எழுத்தை மட்டும் படிக்கத் தெரியாமல் அது பொம்மை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே;
நீங்கள் கேட்டவண்ணமாக நான் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்,நண்பரே; நீங்க்ள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை; இதனால் அந்த கருத்துக்களைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நானே விட்டுவிட்டேன்;
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்; நீங்கள் என்னுடைய தளத்திலும் உங்கள் பதிலை (ஒரே சமயத்தில்) பதிவிட்டால் எனது தளத்துக்கு வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்; நானும் அப்படியே செய்கிறேன்; உங்கள் தளத்துக்கும் தொடுப்பு கொடுத்துள்ளேன்;
// அவ்வளவு மத வெறி இருந்தால் – கடவுளை நிரூபித்துக் காட்டுங்கள். முன்பு 6 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா என்று கேட்டேன். நட்பு அடிப்படையிலே இப்போது டிஸ்கவுன்ட் தருகிறோம். 4 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா? // இந்த நிலவை ஒளிவிடும் சமாச்சாரம்...மிக மிக எளிது; மிக மிகச் சாதாரணம்;ஆனால் விண் ஞான ரீதியில் நீங்கள் அதனை சிந்திப்பீர்களானால் அது மிகவும் ஆபத்தானது;
ஏனென்றால் அது போல் நிலவு நான்கு மாதமும் ஒளிவிட வேண்டுமானால் இந்த பூமியின் சுழற்சி விதியில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழும்;"ரிஸ்க்" வேண்டாமே என்று பார்க்கிறேன்;
ஆனால் நீங்கள் கேட்காமலே இந்த யுகத்தில் நிகழ்ந்தொரு மாபெரும் அதிசயம்,"தெய்வம் மனிதனாகிப் பாவப் பரிகாரியானது..!" வர்ட்டா..?
அரசன் ஒருவன் ஒரு முனிவரிடம் வரம் கேட்டுச் சென்றானாம்;அந்த முனிவரோ முனிவர்களுக்கே உரிய கர்வத்துடன் எதுவும் சொல்லாமல் "நான் செத்ததும் வா" என்று சொல்லிவிட அரசன் குழப்பத்துடன் திரும்பினானாம்;
ஆனாலும் ஆர்வ மிகுதியால் மீண்டும் சென்றான்;அதே பதில்;இப்படி மூன்று முறை சென்ற பிறகு நான்காவது முறை முனிவர் விளக்கினார்;"நான், 'நான்' எனச் சொன்னது என்னையல்ல,உனக்குள்ளிருக்கும் 'நான்'என்பதையே"என்றானாம்;பிறகு அதற்கான சூத்திரங்களைப் பெற்றுக் கொண்டு அரசன் மகிழ்ச்சியுடன் திரும்பினான்,என்பது ஒரு நீதிக் கதை;
இங்கே சிநேக பாவத்துடன் எழுதி வந்த நண்பர் திருச்சிக்காரன் அவர்களை நான் ஏதோ கோபப்படுத்திவிட்டேன்,போலும்;அவருடைய எழுத்துக்களில் சற்று கடுமை தெரிகிறது;அவரை சமாதானப்படுத்தவே கதை சொன்னேன்;ஆனால் அதுவும் "நான்" சரியாகச் சொன்னேனோ தெரியவில்லை;அது வேறு புதிய பிரச்சினை;
ஆனாலும் அவர் இந்த வாதத்தைத் தொடருவதையும் பின்னூட்டமிடுவதையும் விட்டுவிட்டு அடுத்த கட்டுரையை ஆயத்தம் செய்வது நல்லது;
இது முடிவில்லாமலே போகும்;
// கிறிஸ்தவ பள்ளியில் பல வருடங்கள் படித்ததாலே, பள்ளிப் பருவத்திலேயே யூத, கிறிஸ்தவ மதங்களைப் பற்றி கணிசமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது; இந்த மார்க்கங்களைப் பற்றி என்னுடைய புரிதல் சரியாகவே இருப்பதாக எண்ணுகிறேன் // அதுதான் பிரச்சினையே;மிக எளிமையாக ஒரு காரியத்தைச் சொல்லுவார்கள்;ஒரு ஜீவனின் பிரச்சினை உணரவேண்டுமானால் நான் அதுவாகவே மாறவேண்டும்;(எனவே தெயவமான இயேசு மனிதனானார்..!)
நீங்கள் பள்ளியில் கற்பிக்கப்பட்ட மார்க்கத்தையே இறுதியான தத்துவமாக எடுத்துக் கொள்ளமுடியாது; புரிதல் வேறு; உணர்தல் வேறு; அறிதல் வேறு; தொடருதல் வேறு;
நான் முன்னாள் இந்துவாகவும் பிறகு கம்யூனிஸ கருத்துக்களால் கவரப்பட்டு தேவனற்றவனாகவும் தற்போது கிறித்துவின் சீடனாகவும் இருக்கிறேன் என்றால் மற்ற அனுபவங்களினுள்ளே ஊறிக் கிடந்த பாதிப்பு எனக்குள் இருப்பது இயல்பு (இதைக் குறித்து இன்னும் சொல்லவேண்டும்);
இதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு அதிக வாய்ப்புண்டு;வெளியிலிருந்து (உள்ளே) ஒரு மார்க்கத்தை ஆராய்வதற்கும் உள்ளேயிருந்து (வெளியே) பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுண்டு;
// அவைகளின் அடிப்படை தத்துவங்கள் பற்றிய எனது கருத்து மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றால், நான் எழுதியதை மேற்கோள் காட்டி நீங்கள் கருத்து தெரிவிக்கலாம் // நீங்கள் தவறான ஒன்றை எழுதிய பிறகு அதைச் சரி செய்வதைவிட முன்னரே சரியானதை அறிந்து எழுதலாமே; நீங்கள் நிச்சயமாகவே தவறு செய்கிறீர்கள்; நீங்கள் எங்களைப் புரிந்துக்கொள்ளாததுடன் தவறாகப் புரிந்துக்கொண்டு எங்களுக்குப் போதிக்க முயற்சிக்கிறீர்கள்;அதாவது ஏதோ பொதுவான நீதிக் கதைகளையல்ல;கிறித்துவையே..!
ஆனால் இந்து மர்க்கத்தின் ஆதாரத் தத்துவங்களையும் ப்ரஜாபதியான இயேசுகிறித்துவுடன் தொடர்புள்ள தத்துவங்களையும் கூறி மார்க்கத்தை ஒன்றுபடுத்த நல்லெண்ணத்துடன் முயற்சித்தாலோ தற்போதய நவீன கால மூடநம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களையும் கண்டித்தாலோ காழ்ப்புணர்ச்சி,துவேஷம்,காட்டுமிராண்டிக் கருத்துக்கள் என்கிறீர்கள்;
மாற்றுவழியைச் சொல்லாமல் கண்டித்தால் நாத்திகன்,அறிவுஜீவி; மாற்றுவழியுடன் கூடிய எச்சரிப்பைச் சொன்னால் மதவெறியாளன் என்பதுதானே உங்கள் தீர்ப்பு?
போகட்டும்; யூதர்களின் காட்டுமிராண்டிக் கருத்துக்களைக் கண்டிக்கவே இயேசு வந்தார்,அவரைச் சிலுவையிலறைந்து கொன்றனர்'என்கிறீர்கள்; பிரச்சினை அத்துடன் முடிந்ததா?
அவர் மீண்டும் உயிருடன் எழுந்து (தற்போதும் விண்ணகத்திலிருப்பதும்) தமது அடியவர்களுக்கு தாம் செய்த அதே பணியினைப் பணித்ததும் என்ன?
யூதர்களுக்காக மட்டுமே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தார்; ஆனால் அவர்களால் புறக்கணிக்கப்பட்டபோது- யூதர்களின் கீழ்ப்படியாமை சர்வ லோக இரட்சிப்பாக மாறியது என்பது நற்செய்தி;
பழைய ஏற்பாட்டில் ஜாதிகளை (அசுரர்களை) அழிக்கச் சொன்ன அதே "யாவே" தெய்வமே "யாஷ்வா" என வந்தார்;அதன் மருவிய சொல்லே "இயேசு" என்பது;
யுத்தம் இன்னும் முடியவில்லை;ஆனால் அதன் தன்மை மாறியிருக்கிறது; முன்பு வேல்,அம்பு,ஈட்டியுடன் -மாம்சத்துடன் நடந்த யுத்தமானது தற்போது ஆவியுலக யுத்தமாக அதாவது தீயச் செயல்களைச் செய்யத் தூண்டும் சிந்தையை சாகடித்து இறைவனுக்கு தத்தம் செய்யும்- தன்னோடு தான் செய்யும் யுத்தமாக மாறியிருக்கிறது; புத்தனும் கூட உள்சென்று தேடியே ஞானம் பெற்றான்,என்பார்கள்; "யாஷ்வா" தேவனும் சொல்கிறார்,"உன்னை நீ ஆராய்ந்து பார்த்தால் ஆக்கினைக்கு, தண்டனைக்கு தப்புவாய்;உனக்காக நான் சிந்திய இரத்தம் உன் கர்ம,கன்ம,பாவ,சாப,தோஷங்களை நீக்கி பரிகரிக்கும்" என்று..!
நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் "யாஷ்வா " தேவனின் புனிதக் கருத்துக்களே;இதில் எதை மறுப்பீர்கள் ? இதையா நீங்கள் எழுதினீர்கள் ?
இயேசு தம்முடைய பிதா என்று குறிப்பிட்ட சிருஷ்டிக் கர்த்தாவை காட்டுமிராண்டிக் கடவுள் என்றும் யூதர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் இயேசுவை ஐயோ பாவம் என்றும் கிறித்துவர்களை ரெண்டுஙகெட்டான் போலவும் கூறு போட உங்களுக்கு யார் உரிமை தந்தது?
இயேசு வெறும் அன்பை மட்டும் போதிக்கவில்லை; பாவத்தையும் அதன் விளைவையும் அதற்கான தீர்வையும் போதித்தார்;அதை மற்றவருக்குப் போதிக்கும் பணியையும் எனக்குக் கொடுத்துள்ளார்; இதையே நீங்களும் செய்தால் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அசோக்ஜி என்று அவரை மரியாதையாக முன்பே சில தளங்களிலும் அழைத்து இருக்கின்றனர்; அதையே தொடருகிறோம்; அவ்வாறு அழைப்பது மரியாதையை வெளிப்படுத்தவே //
தமிழர்களாகிய நமக்கென்று நல்ல அழகான விளித்தல் முறைகள் இருக்க மற்றவற்றைப் பயன்படுத்துவது பரியாசம் செய்வது போலிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து;
// ராமனோ, கண்ணனோ, கர்த்தரோ – எந்தப் பெயரில் அழைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த இறைவன் என்பவன் இருக்கிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே துவங்கப்பட்ட இந்த தளத்தில் அந்த கேள்விக்கு முதலில் விடை கண்டுபிடித்து அவரது – ஏன் – இறைவனையே நம்பாத பெரும்பாலானவர்களின் சந்தேகங்களை முதலில் தீர்த்து வைப்போம் //
ஆம், இந்த கருத்துக்கும் எண்ணற்ற மார்க்கபேதங்களுக்கும் எதிராகவும் தமிழ்ஹிந்து தளத்தில் அற்புதமானதொரு விஞ்ஞான-மார்க்க ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறது;
சிருஷ்டி சம்பந்தமான சூத்திரங்களை எத்தனை எளிமையாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்..!
ஆனால் ஞானத் தெளிவில்லாத நாமோ பொருள் விளக்கக் கூறப்பட்ட ஒவ்வொரு குறியீட்டையும் விக்கிரகமாக்கித் தொழுது கொண்டிருக்கிறோம்;
இந்த சூத்திரங்கள் அனைத்தும் யூத பாரம்பரியத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது;
யூதர்களோ உருவ வழிபாட்டை வெறுப்பவர்கள்;பிரச்சினை எங்கே என்பது தெரியவரும் என்று நினைக்கிறேன்;
ஆனால் விண்வெளி ஓடத்துக்கே தேங்காய் உடைத்து பொட்டு வைக்கிறோமே..?
// ஆகவே இனி வரும் பதிவுகளில் நாம் அனைவரும் நான் ஒரு இந்து – ஒரு இஸ்லாமியன் – ஒரு கிறிஸ்தவன் என்பதை மறந்துவிட்டு “இறை பற்றாளன்” என்ற ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக நமது கருத்துக்களை இங்கு பதிவு செய்வோம்;என்ன சகோதரர்களே.. நான் சொல்வது சரிதானே? - அன்புடன் மணியன் //
சகோதரர் மணியன் அவர்களுடைய கருத்துக்களை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்; நண்பர் திருச்சிக்காரன் அவர்களும் கிறித்துவையும் கிறித்தவத்தையும் யூதத்தையும் பற்றிய அடிப்படைத் தத்துவங்களுக்குப் பொருந்தாத தனது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன்;
போற்றவேண்டாம்,தூற்றாமலிருக்கவே வேண்டுகிறேன்;நான் இந்தியன்,தமிழன் என்ற அடையாளத்தை எந்த நிலையிலும் இழக்க விருமபவில்லை;நான் மதம் மாறியவன் என்ற இழிச் சொல்லை என்னை விட்டு விலக்குங்கள்;
மேலும் கிறித்துவையும் கிறித்தவத்தையும் யூதத்தையும் பற்றிய அடிப்படைத் தத்துவங்களைக் குறித்து அறிய வேண்டுமானால் அவற்றைக் குறித்து கருத்துச் சொல்லும் முன்பதாக முதலில் அவைகளைக் கேள்விகளாக எனது தளத்தில் பதிவு செய்யுங்கள்;
உங்களுக்குத் தகுந்த பதிலைத் தர ஆயத்தமாக இருக்கிறோம்; இது நம்முடைய நல்லுறவைப் பேணவும் உதவியாக இருக்குமென்று எண்ணுகிறேன்..!
-- Edited by chillsam on Tuesday 26th of January 2010 08:23:21 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இந்து மதத்தினர் சகிப்பு தன்மை இல்லாத வகையிலே நடந்து கொண்டாலோ, இப்படி குடிசைகளை பிரிப்பது போல நடந்து கொண்டாலோ, அதை திட்டவட்டமாக கண்டிக்கிறோம் //
ரொம்ப சந்தோஷமுங்க...பெரிய மனசு பண்ணி கண்டிச்சிட்டீங்க... பெரும்பான்மை சமூகத்தின் நடுவில் வாழும் ஒரு குடும்பம் ஊரையும் உலகத்தையும் எதிர்த்து தனக்கு சரியெனப் பட்ட ஒரு மார்க்கத்தைப் பின்பற்றினால் அவர்களைக் கொளுத்தவே எத்தனிக்கும் இந்து சமுதாயத்தின் மாண்பினைக் கண்டிக்க நீங்கள் முன் வருவது உண்மையிலேயே புரட்சிகரமானதுதான்;
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் பச்சிளங்குழந்தைகளுடன் பாதிரியார் கொளுத்தப்பட்ட போதும் கூடஅத்வானி முதலான பெரிய தலைவர்கள் இதேபோலக் கண்டித்தது ஞாபகமிருக்கிறது;
// இந்து மதத்திலே வன்முறை புகுத்தப் படுவதை நாம் எதிர்க்கிறோம் //
இது இந்த உலகின் மிகப் பெரிய நகைச்சுவையாகக் கூடாது என விரும்புகிறேன்;ஏனெனில் இந்து மதத்திலே வன்முறை இருக்கக்கூடாது எனில் இராமனும் கிருஷ்ணனும் காணாமற் போய் விடுவார்கள்;இருவருமே யுத்த புருஷர்களாகப் புனையப்பட்டு பல்வேறு யுத்த முறைகளையே போதித்தனர்;இன்றைக்கும் ஒவ்வொரு இந்து தெய்வத்தின் கையிலும் ஆயுதம் இருப்பதே அதற்கு சாட்சி...ஏன்,சங்கு கூட யுத்த ஆயுதமே...
யுத்தம் என்பது சிந்தை சார்ந்ததாக இருந்து அல்லது என்னுடைய எதிரி ஆவி மண்டலத்திலிருப்பவனானால் மாம்சத்தைக் குத்திக் கிழிக்கும் இருப்பு ஆயுதங்களுக்கு என்ன அவசியம்..?
ஒவ்வொரு சமூகமும் தன்னையும் தன் எல்லையும் பாதுகாப்பதில் கவனமாக இருந்தது;அந்த யுத்தத்தில் உயிர் தியாகம் செய்தோரையெல்லாம் தெய்வமாக்கியது;கருப்பன்,முனி போன்ற லோக்கல் தெயவங்களின் வரலாறு அதுவே;
பல்வேறு சமூகங்கள் ஒரே பகுதியில் இணைந்து வாழும் கூட்டமைப்பு உருவானபோதும் அவர்கள் எளிதில் ஒருவரை ஒருவர் நம்பிவிடவில்லை;
அப்போதுதான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நம்பிக்கையையும் உறவையும் ஏற்படுத்த முயற்சித்தன;ஆனாலும் உள்ளே இருக்கும் மிருகம் அவ்வப்போது விழித்துக் கொள்ளும்;அப்போதெல்லாம் யுத்தம் வெடிக்கும்;இது இந்து சமுதாயத்தின் வரலாறு;
இதில் ச்ற்றும் சம்பந்தமில்லாத புதிய கலாச்சாரமாக கிறித்தவம் தோன்றி பரவுவதை பாரம்பரிய கலாச்சாரங்கள் எதிர்க்கின்றன;
கிறித்தவம் பிரச்சாரத்தின் மூலம் பரவுவதைவிட மாற்றத்துக்காக ஏங்கும் மக்கள் ஈர்க்கப்பட்டு வருவதே அதிகம்;அவர்களுக்கு சரியான கிறித்தவம் சொல்லித் தரப்படுவதோடு அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் சத்தியமான் உண்மையாகும்;
ஏற்கனவே இதைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன்; சகிப்புத்தன்மை என்பது நிறைகுடத்தின் பொறுமையினைப் போன்றதாகும்;
இறைவன் தம்மையறிந்து தொழ ஈவாகக் கொடுத்துள்ள பகுத்தறிவின் மூலம் சிந்தித்து சரியானதைக் கண்டுபிடிக்கத் தடைசெய்து தொடர்ந்து மூடநம்பிக்கைகளையே ஊக்கப்படுத்திவரும் ஒரு அமைப்பு எப்படி சகிப்புத்தன்மையுள்ளதாக இருக்கக்கூடும்?
அறிந்த ஞானிகளும் தங்கள் அளவில் உயர்த்திக் கொண்டு நீயும் இதே போல முயன்று மேலே ஏறிவா என்று (கீழே)போய்விட்டார்கள்;இன்றைக்கு தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகிவிட்டான்; ஏகஇறைவன் ஜோதி வடிவானவன் என்று கண்டுணர்ந்து சொன்ன வள்ளலாரையே இந்து மதம் ஆக்கிரமித்து அவரையும் ஒரு தெய்வமாக்கிவிட்டது;
மூடநம்பிக்கைகளையும் மோசடிகளையும் தோலுரித்து சீர்படுத்தவந்த விவேகானந்தரும் ஒரு தெய்வப்பிறவி; இறைக் கொள்கையை மறுத்து கட்டுப்பாடான வாழ்க்கை முறையினை மட்டுமே போதித்த புத்தரையும் நீங்கள் விட்டுவைக்காமல் அவருக்கும் "பொட்டு" வைத்துவிடுகிறீர்கள்;
இவர்களெல்லாம் வருங்கால யுகத்துக்கான தெய்வங்களாக வரிசையில் நிற்கிறார்கள்;அதற்குள் இந்த உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பது ஒரு ஆறுதலான செய்தி;
// இந்தியாவிலே சாதி முறையால் தாழ்த்தப் பட்டவருக்கு அநீதி இழைக்கப் பட்டது; அந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை //
நண்பரே நான் ஒரு புதிய சட்டையை வாங்கிய பிறகும் அதனுடன் பழைய சட்டையையும் சேர்த்து அணிவேன் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் எனக்கு நன்றாகத் தெரியும்;
ஆம்,இந்து மதம் மனு சாஸ்திரத்தின் வேர்களில் நிற்கிறது; அது மக்களின் சிந்தனையில் வேர்விட்டு வளர்ந்துவிட்டது;அதனை யாராலும் ஒழிக்கவே முடியாது;
தற்போது சலுகைகள் பெற்ற தலித்துகள் வேகமாக முன்னேறி பிராமணர்களை ஒடுக்குவதையும் தாழ்த்துவதையும் சமுதாயத்தில் பார்க்கிறோம்;
இதிலிருந்து மார்க்க விடுதலை பெறவே அநேகர் எல்லா "ஷனியன்"களுக்கும் "எழவெடுத்தது" போதும் என மாற்றம் வேண்டி வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்;
அடுதத தலைமுறையில் கோவில்களில் பூஜை செய்ய வேதத்தை முறைப்படி கற்ற பிராமணன் இருப்பானா என்று சற்று யோசித்துச் சொல்லுங்கள்;
எப்போது தோன்றியது என்றே தெரியாத புண்ணிய மார்க்கத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை கடந்த நூறு வருடங்களில் பார்த்துவிட்டோம்;
அதை சரிசெய்ய நாகரீக சமுதாயம் கல்வியறிவைப் பெறவேண்டியதாக இருந்தது;அதைச் செய்யவே கிறித்தவ மிஷினரிகள் இந்தியாவுக்கு வந்தனர்;
இந்தியனான நானே அருகிலுள்ள ம்லைக் கிராமங்களுக்குச் சென்று அங்கே நிரந்தரமாகத் தங்கி அந்த மக்களுக்குச் சேவை செய்ய முன்வராமல் ச்சும்மா பெருமூச்சு விட்டு வந்துவிடுகிறேன்;
ஆனால் தனது சொந்தங்களையும் கலாச்சாரத்தையும் பழக்கவழ்க்கங்களையும் விட்டுவிட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து வேறொரு புதிய கலாச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட புண்ணிய ஆத்துமாக்களுக்கு நீங்கள் செய்த மரியாதை என்ன?
யுகங்கடந்த கலாச்சாரங்கொண்டதும் பாரம்பரியமும் கொண்டதுமாகச் சொல்லப்படும் இந்து மார்க்கமும் எந்த அரசாங்கமும் செய்திராத மாற்றங்களை கிறித்தவம் மட்டுமே செய்துள்ளது;
ஜாதியுணர்வைப் போற்றி வளர்த்த மார்க்கம் எப்படி அதனை ஒழிக்க முடியும்? இன்னும் சொல்லப்போனால் அதன் வேர்களிலிருந்து வந்ததாலேயே ஜாதியை வெறுக்கும் கிறித்தவத்துக்குள்ளும் ஜாதியுணர்வு வாழ்கிறது;
காழ்ப்புணர்ச்சியும் துவேஷமும் பெரும்பான்மையினருக்கு இருப்பதே இயல்பு; இந்திய சமுதாயத்தின் பெரும்பான்மை சமூகக் குழுக்கள் இணைந்து வளர்ந்து வரும் ஒரு சிறுகுழுவின்மீது காழ்ப்புணர்ச்சியுடன் சேற்றை வாரி வீசுகிறீர்கள்;
இயேசுகிறிஸ்துவின் பின்னால் பெருங்கூட்ட மக்கள் சென்றபோதும் பெரும்பான்மை யூத இனம் இதேபோல வெகுண்டெழுந்தது;தங்களை மாற்றிக்கொள்வதே இயேசுவை அகற்றுவதே அவர்களுக்கு எளிதாகத் தோன்றியது;அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருந்தால் இயேசு பலியாகியிருக்கவேண்டிய அவசியமே இருந்திராது;யூதர்களை இயேசு காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்தார் என்று சொல்லுவீர்களா?
// இந்த பெண்கள் மார்பில் துணி அணியாமல் இருந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் என்றுமே இருந்தது கிடையாது //
இது மிகவும் அநியாயமான கருத்து,அன்பரே;தன் இனத்துக்கு அங்கீகாரமும் மரியாதையையும் பெறவேண்டி தன் முலையை அறுத்து வேள்வித் தீயில் எரிந்த புதுமைப்பெண்கள் உங்களுக்கு ஊர்முழுக்க இருந்திடவேண்டுமா? கேரளா என்ன அமெரிக்காவிலா இருக்கிறது?சரி ஆந்திராவில் என்ன?
பொட்டு கட்டிவிடுவதில் துவங்கி தேவதாசியாக்கியதுவரை நடந்தவற்றை நீங்கள் மன்னித்தாலும் வரலாறு மன்னிக்காது; இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் டேஸ்டுக்கு ஏற்ப (இந்து மார்க்கம்) பெண்களுக்கு இழைத்த அநீதிகளைக் குறித்து தனியாக ஒரு கட்டுரையினை நீங்கள் எழுதப்போவது எனக்குத் தெரியும்..!
(அருமையான கருத்துக்களால் இதயத்தைக் கொள்ளைக் கொண்ட அசோக்கை (அது என்ன "ஜி" இதெல்லாம் நமக்குப் பிடிக்காது;ஊசிப் போன "வட"வாசனையே வருகிறது,ஒற்றுமை வேண்டுமானால் "தென் திசைத் தென்றல்" அங்கு செல்லட்டும்..!) பாராட்டுகிறேன்;
இதுவரை நான் திருந்தாமலிருந்தால் உங்கள் கருத்தைப் படித்து திருந்தியிருப்பேன்..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//நோபல் வென்ற ஓபாமா அவர்களே வெள்ளை மாளிகையில் தீபாவளி தினத்தன்று தீபங்கள் ஏற்று வழிபாடு செய்து மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் மதிக்கும் காலத்தில் நீங்கள் இன்னும் சிலுவை போர் காலத்திலேயே இருக்காதீர்கள் //
அதுமாத்திரமல்ல,அமெரிக்கா கிறிஸ்தவ நாடு...ஆக்கிரமிப்பு செய்கிறது எனும் மதவாதிகளின் காட்டுக் கூச்சலுக்கு சம்மட்டி அடியானது இந்த செய்தி சம்பந்தமான பின்னூட்டம்;
ஒரு கிறிஸ்தவ நாடு தீபாவளியைக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? சிந்தியுங்கள்;
அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல;அங்கு நடைபெறும் சம்பங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;
அடுத்த வருடம் வாடிகனில் போப்பாண்டவரும் கூட ஆடித் திருவிழா நடத்தி கூழ் ஊற்றி மாரியையும் மேரியையும் ஒன்றாக்கலாம்;
மனிதனையா...மனிதன்...எப்ப வேணாலும் எப்படியும் போவான்,எதையும் பேசுவான்,ஆனால் உலக இரட்சகரான இயேசுகிறிஸ்து இதுவரை மா(ற்)றி விடவில்லை..!
அமெரிக்கா ஒரு ஆயுத வியாபாரி...பாசிஸ்ட்... முதலாளித்துவ பிசாசு..!
அதன் ஃப்ளக் கடந்த வருடத்தில் பிடுங்கப்பட, "தெய்வம் நின்று கொல்லும்" என்பது நிரூபிக்கப்பட்டது;
தெய்வ நம்பிகையை தனது கரன்ஸியிலேயே பதித்து மத நல்லிணக்கத்தையும் கட்டற்ற சுதந்தரத்தையும் பேணி வளர்த்த அமெரிக்க தேசத்தையே சர்வ வல்லக் கடவுளும் நியாயாதிபதியான இயேசுகிறிஸ்து ச்சும்மா விடவில்லையே...நம்முடைய கதி என்னாகுமோ..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பர்கள் எனது கட்டுரை தொடர்பாகவும், வேறு ஏதாவது விவரங்கள் தேவை என்றாலும் நம்முடைய தளத்திலேயே தங்கள் கேள்விகளை எழுப்பலாம்.
சகோதரர் சில்சாமின் தளத்திலே எழுப்பப் படும் விவாதங்களில் நான் பங்கேற்கும் போது, என் கருத்தை நான் சில்சாமின் தளத்திலே பதிவு இடுவேன்.
அதே நேரம் கட்டுரை திருச்சிக்காரன் தளத்திலே வெளியான நிலையிலே அதைப் பற்றிய கருத்துக்களை அங்கே வெளியிடுவதுதான் நமக்கு பதில் சொல்ல எளிதாக இருக்கும்.
நம்முடைய தளத்திலே யாருடைய கருத்தும் மட்டுறுத்தப் படவில்லை. பலரும் அங்கே வந்து கருத்து பதிவு இடுகின்றனர். நம்முடைய தளத்திற்கு வர தயங்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விடயத்தில் சகோதரர்களின் ஒத்துழைப்பை மீண்டும் கோருகிறேன்.
அண்மையில் சென்னைக்கு அருகில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்தை தழுவிய மக்களின் வீடுகள் இந்துத்துவா பற்றாளர்களால் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டது. சகிப்புத்தன்மையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இதுவன்றோ. நண்பர் திருச்சிக்காரர் அடிக்கடி பாலைவன வெறுப்பியல் கருத்து அது இது என கூறுவார். அப்படியே இந்த வெறுப்பியல் கருத்தயும் என்ன என விளக்கினால் சரி. தென் தமிழகத்தின் குக்கிராமங்களில் பனை இறக்கிய மக்கள் எவ்வாறு மேல் சாதியினரால் துன்புறுத்தப்பட்டனர், வாழ்வின் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்களை தமது சமுதாய பணிகளால் முன்னேற்றம் அடையச்செய்தவர்கள் ஆங்கிலேய மிஷனரிகள் தாம். அவர்களை மிகக்கேவலமாக விமர்சிப்பது தமிழ் ஹிந்து தளத்தின் முக்கிய பணியாகவே இருந்து வந்துள்ளது. ஐயா எங்களை வாழ விடவே தயங்கிய சமயத்தை எங்களது முன்னோர் விட்டு வெளியே வந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு சீரமைத்து கொண்டது தவறா? ஒரு வேளை ஆங்கிலேய மிஷனரிகள் அப்பகுதிகளுக்கு வராமலே போயிருந்தால் எங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும், இன்னும் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு செருப்பை கையில் தூக்கிக்கொண்டு, மாரில் சேலை அணியாமலே தான் இருந்திருப்போம். இந்த சமுதாய மாற்றம் தவறா. சரி நாங்கள் கொண்ட இந்த பக்தியை கிட்டத்தட்ட 3 அல்லது 4 தலைமுறைகளாக விட்டுவிடவில்லையே.மதம் மாறியதால் எங்களது வாழ்வு முன்னேறிதான் இருக்கிறது. தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இன்றைக்கு தேசமெங்கும் பரவி தங்களது திறமையால் முன்னேறியுள்ளனர். மதம் மாறியதால் எங்களுக்கு தேசபக்தி காத தூரம் ஓடிவிடவில்லை, எங்களது இதயத்திலொஉம் செயலிலும் தேசபக்தி நிறைந்தே உள்ளது.
// எந்த அளவுக்கு இந்து மதக் கடவுள்களை பிற மார்க்கத்தவர் இகழ்கிறார்களோ அந்த அளவுக்கு இந்துத்துவா, சக்திகள் அதிக வலுப்பெரும்… //
இது என்ன மிரட்டலா…தத்துவமா..? இந்த தேசத்தில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இருக்கும்வரை யாரும் எதையும் செய்யலாம்…இது பொதுவானது…ஆனால் எங்கள் வரலாறு நான் அன்றைக்கும் யாருக்கும் அடங்கிப்போனதில்லை…இன்றைக்கும் அடங்கவில்லை….எந்நாளும் எதிர்த்து நிற்போம்…செத்த மீனு தண்ணி போற போக்குல போகுமாம்…உயிருள்ள மீனு எதிர்த்து போகுமாம்..!
// தன்னை தானே ஆக்கினைக்கு உட்படுத்திக் கொள்வது..?//
அப்படியானால் ஆக்கினைக்குக் காரணமானது என்ன? யாரோ செய்த ஆக்கினைக்கு வேறொருவர் தண்டிக்கப்படுதல் நியாயமா? தற்கொலையும் கூட இதே போன்ற வகையில் வரக்கூடுமே? எனவே தான் சாமி கும்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்களா? இதற்கு மீண்டும் அடுத்த பிறவியிலாவது நான் நல்ல பிறவியாகப் பிறக்கவேண்டும் என்ற குருட்டு மூட நம்பிக்கைதான் காரணமா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// தென் இந்தியப் பகுதியில் வசித்த இந்தியர்கள்,குறிப்பாக தமிழர்கள் தான் இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் குடுக்காமல், உருவ வழிபாட்டை முழுமையாகக் கடைப் பிடித்து வந்தனர்; முருகனை சிறப்பாக வழிபட்டது தமிழர்கள் தான் //
நண்பர் போகப் போக ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் எழுதப் போய் யாரிடமோ குட்டு வாங்கப் போகிறீர்கள்;அதை நான் தான் தடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்;
தமிழர் வரலாற்றைப் பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் நுனிப்புல் மேய்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள எனக்கு கொஞ்சமும் தைரியமில்லை;(விட்டால் முகமது நபியும் முருகனும் கிபி 1515ல் சைதாப்பேட்டையில கில்லி விளையாடினாங்க என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்...இஸ்லாமிய நண்பர்கள் ஜாக்கிரதை..!)
முருகனின் சொந்த அண்ணனுக்கு வடக்கில் இருக்கும் மௌசு முருகனுக்கு ஏன் இல்லை? ஏரியா பிரித்துக் கொண்டார்களா என்ன? முருகன் என்ற இறைவன் இருக்கின்றானா? விநாயகர் என்ற இறைவன் இருக்கின்றானா? சிவனுக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும் தானா? ஃபேமிலி ப்ராப்ளம் ஏன் தெருவுக்கு தெரு வந்து சந்தி சிரிக்கிறது?
இப்படி முப்பது கோடி தெய்வங்களுக்கும் அதன் கோடானுகோடி விமானத்துக்குமுரிய வரலாற்றை ஆராய்ந்தால் ஓய்ந்து போவீர்கள்;
தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கொடுத்த தலைப்பில் இவ்வளவு விவகாரம் இருக்கிறது; இதையெல்லாம் தீர்த்துவைத்தாலே உங்கள் கட்டுரை முழுமையடையும்;
அதைவிட என்னைப் போன்ற ஆட்களைத் தீர்த்துகட்டுவது எளிது;அதையே ஒரிசாவிலும் பீகாரிலும் சிலர் கடைபிடிக்கிறார்கள்;தப்பித் தவறி (காசி) கங்கைக் கரையோரம் பக்கம் நீங்கள் போய்விட்டால் எரிந்தும் எரியாத பிணங்களைத் தின்னும் சிவனடியார்கள் கையில் வசமாக சிக்கிக் கொள்ளுவீர்கள்;இந்த விஷப் பரீட்சை வேண்டாம்;
அதைவிட பேசாம குஜராத்தின் குடிசைப்பகுதிகளின் திறந்தவெளிகளை சுத்தம் செய்யப்போன காந்திஜியைப் போல போகலாம்ணேன்..!
-- Edited by chillsam on Sunday 24th of January 2010 11:27:09 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// “நம் இனத்தின் வேர்கள்” என்று சொல்லுங்கள்;பிளவு ஏற்பட்டால் வலிமை குறையும் //
பிளவு ஏற்படுத்திய கருங்காலிகளுக்கு சிலர் வால் பிடிப்பதாலேயே நான் தனிமைப்பட்டேன்;
அறிவுபூர்வமான தியான மார்க்கத்தைச் சேர்ந்த இயற்கையை மட்டுமே வழிபட்ட மறத் தமிழர்களை மரத் தமிழர்களாக்கி வடக்கை வாழச் செய்து தானும் வாழச் செய்த சூழ்ச்சிக்கு வால் பிடித்த துரோகிகள் என் அடுத்த வீட்டிலிருந்தாலும் நான் தனிமைப்பட்டே நிற்பேன்;
// இறைவன் இருக்கிறானோ இல்லையோ, இறைவனை யாருக்கும் காட்டாமலே, அவர்களும் பார்க்காமலே, நிரூபிக்காமலே பல கற்கால கட்டளைகளைப் போட்டு...//
நீங்கள் தீமிதித்தல்,அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையா சொல்லுகிறீர்கள்..?
வடக்கில் அரதப்பழசாகி விலைபோகாத சரக்குகளை இங்கே கடைவிரித்து (தாயத்துகளையும் உத்திராட்சங்களையும் சுண்டைக்காய்களையும்) பல்லாயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் மத வியாபாரிகளைக் கண்டித்தால் உங்களுக்கு கோடி புண்ணியமாகப் போகும்;இதையெல்லாம் வெறுமனே நம்பிக்கை என நீங்கள் புறந்தள்ளிவிடமுடியாது;
அவர்கள் தான் புனிதமான தமிழ் மண்ணை மதவாதத்தால் அடிப்படை வாதத்தால் "இந்துத்வா" வெறியால் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கின்றனர்..!
தயவுசெய்து சிந்தியுங்கள்..!
(எனது தளத்தில் நான் பதிவதைக் குறித்து...உங்கள் தளத்தில் என்னைப் போன்ற தடைக் கற்களும் ஞான சூன்யங்களும் அபஸ்வரமாக ஒலிப்பதை சிலர் விரும்பாததாலேயே எனது எழுத்துக்களை சுருக்கிக் கொண்டு எனது தளத்தில் விவரமாக எழுதுகிறேன்;தங்கள் அன்புக்கு நான் என்றைக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இறைவன் இருக்கிறானா? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சிக்கு தடைகற்களாக இருக்கும் கருத்துக்களுக்கு பதில் அழித்துக் கொண்டிருப்பதிலேயே கவனத்தை செலுத்தாமல் மேற்கொண்டு தொடருங்கள் //
இதுபோன்ற ஆணவப் போக்கினாலேயே "தமிழ்ஹிந்து" தளத்தைவிட்டு வெளியேறினோம்; நாங்கள் தடைக்கற்களா..? நீங்கள் நெடுஞ்சாலைகளில் "கோவில்" என்ற பெயரில் ஆக்கிரமித்து விபத்துகளுக்குக் காரணமாகிறீர்களே, போக்குவரத்துக்குத் தடையாக இருக்கிறீர்களே..!
உங்களுக்கு மெய்யாகவே தெய்வ பக்தி இருக்குமானால் அவரவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டவேண்டும்; திருவிழா நடத்தவேண்டும்; அரசாங்க சொத்துகளான மின்சாரத்தையும் பொதுசொத்துக்களையும் அபகரித்து அந்த தெய்வங்கள் விழா கொண்டாடச் சொன்னதா?
"சிவன் சொத்து,குல நாசம்" என்பார்கள்;ஆனால் இன்று தங்களை ஆன்மீகவாதியாக(போலியாக)க் காட்டி அதன்மூலம் சம்பாதிக்கவும் அதிகாரம் பண்ணவும் சில உள்ளூர் தாதாக்கள்,அரசியல்வாதிகள் கூட்டுச் சேர்ந்து வேலைசெய்து கொண்டிருக்கின்றனர்;இங்கே சுரண்டி அங்கே கந்துவட்டிக்கு விடும் கொடுமையும் நடக்கிறது;
இன்றைக்கு இறைவனின் ஸ்தானங்களாகச் சொல்லப்படும் எந்த பீடமும் மெய்யான பக்தர்களின் அதிகாரத்தில் இல்லையென்பது சத்தியமான உண்மையாகும்;
இந்நிலையில் "இறைவன் இருக்கிறானா?" என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சிக்கு நாங்கள் எப்படி தடைக் கற்களாக இருக்கிறோம் என்பது தெரியவில்லை;
நண்பர் திருச்சிக்காரன் தோரணம் கட்டியதோடு சரி;இன்னும் எதையும் துவங்கவில்லை;அதனை நயமாகச் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை;
"இறைவன் இருக்கிறானா?" என்ற ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் எதையும் அவர் கட்டுரையிலேயே முன்வைத்திருக்க வேண்டும்;அவர் அந்த வழியினைக் காட்டாமல் "இறைவன் இருக்கிறானோ இல்லையோ,அவரவர் எப்படியோ கெட்டுப்போகட்டும்,எல்லோரும் அமைதியா இருங்க,சத்தம் போடாதீங்க,அடிச்சிக்காதிங்க என ஊமைகள் பள்ளிக்கூடத்தில் சென்று சத்தம் போட்டது போல எதையோ நடத்துவதாலே குழப்பம் வருகிறது;
ஏற்கனவே சத்தியத்தைக் கேட்க வாய்ப்பில்லாமலும் சத்தியத்தைப் பார்க்கமுடியாமலும் சத்தியத்தைக் குறித்துப் பேசமுடியாமலும் இந்திய சமுதாயம் முடங்கிக் கிடக்கிறது;
அடுத்த வீட்டில் கொலையான அப்பாவிகளை துக்கம் விசாரிக்கக்கூட திராணியற்ற கேவலமான ஈனப்பிறவிகளாகி நிற்கிறோம்;ஆம்,என் இனத்தின் வேர்கள் பிடுங்கப்பட்ட ஈழத்தையே சொல்கிறேன்..!
இங்கே எனக்கு அருமையான நண்பர்கள் ஜகத்குருவும் பரஹம்சருமான இயேசுகிறிஸ்துவின் மீது வைத்திருக்கும் நன்மதிப்புக்காக பெருமைப்படுகிறேன்;
ஆனால் அதுமாத்திரம் போதுமா? ஒன்றைக் குறித்து சரியாக ஆராயாமலே அல்லது ருசி பார்க்காமலே அதைப் பாராட்டுவது வெறும் அலங்கார வார்த்தைகளாகவே தோன்றுகிறது;
அதுபோல எங்களால் சொல்லமுடியவில்லை; அதுவே எமது பெலவீனம்; இயேசுகிறிஸ்துவுக்கு முன்னரே யுகாயுகங்களாகப் பிரபலமாக இருந்ததாக உங்களால் போற்றப்படும் இராமர்,கிருஷ்ணர் மற்றும் புத்தரைக் குறித்து (நடுவே பிள்ளையார் வேறு..!) இயேசுவானவர் ஒரு வார்த்தையாவது சொல்லியிருந்தால் எங்களுக்கும் தெரிந்திருக்கும்;அங்கேயிருந்து இங்கே வந்த செய்தி இங்கேயிருந்து அங்கே போகாத காரணம் என்னவோ?
நீங்கள் இயேசுவை வணங்குவது பெரிய அதிசயமே இல்லை; சாதாரண வேப்பமரமே தொழத்தக்கதானால் வரலாற்றையே இரண்டாக(கர்மவினை சார்ந்த யுகமும் தேவ அநுக்கிரஹம் சார்ந்த யுகமுமாக...) வகுத்துத் தந்த ப்ரஜாபதியை எப்படி உங்களால் புறக்கணிக்கமுடியும்?
அதிலும் வருந்தத்தக்க காரியமொன்றுண்டு;மாதாவையும் இயேசுவையும் பற்றிய விவரமே அறியாமல் இரண்டையும் பொதுவில் வைத்து வணங்குவது உங்கள் அறியாமையே; இது அறிவுசார்ந்த உணர்வுபூர்வமான தொழுகையாகத் தெரியவில்லை;
இந்திய சமுதாயத்தின் இந்த கலகத்தை தெய்வங்களுக்கும் மனிதனுக்குமானதாக நாங்கள் கருதாமல் சிருஷ்டிக் கர்த்தாவுடனான மனிதனின் கலகமாகவே நாங்கள் பார்க்கிறோம்;
அதாவது மெய்ஜோதியும் பரம்பொருளுமான ஏக தெய்வத்தின் தொடர்பையும் உறவையும் இழந்துவிட்ட மனிதன் தன் மனதுக்குத் தோன்றியதையெல்லாம் செய்வதற்கேற்ற எண்ணற்ற தெய்வங்களைப் போலியாக உருவாக்கிவிட்டான்;
அவன் இறைவனால் படைக்கப்பட்டதால் இறைவனுக்குரிய நீதி நியாயங்கள் அவனுக்குத் தெரிந்தும் அதற்கு கீழ்ப்படிய இயலாத அடிமைத்தனத்தினால் தான் அடைந்த பாதிப்பை தன் சந்ததியார் அடையாமலிருக்க மிக உயர்ந்ததும் ஆழ்ந்ததும் அழகுமான தத்துவங்களையும் நீதி நியாயங்களையும் புராணமாகவும் கதைகளாகவும் வேதங்களாகவும் வகுத்து வைத்தான்;
நீதிநெறிகளைப் போதித்த யாரும் முக்தியடைந்துவிடவில்லை; அவர்கள் துக்கத்துடனே மரித்தார்கள்; ஆனால் அவர்களால் போதிக்கப்பட்ட நீதிநெறி உரைக்கும் புராணக் கதாநாயகர்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்;(அரிச்சந்திரன்,சிபி சக்ரவர்த்தி கதைகள் ஒரு உதாரணம்...)இதுவும் மெய்த் தேவனுக்கு இழைக்கும் அநீதியே;
எனவே இங்கே யாரும் எந்த தெய்வங்களையும் இகழ்ந்து யாரையும் இழிவுபடுத்தி விடவில்லை; மனிதர்களின் சுய விருப்பத்தின் பேரில் போலியாக சிருஷ்டிக்கப்பட்ட கற்பனையான மார்க்கங்களை விட்டு உண்மையை நோக்கி வரவே அழைக்கிறோம்..!
இங்கே மட்டும் என்ன வாழ்கிறது என்பீர்கள்;அதற்கும் மனிதனின் சுய இச்சையே காரணம்;என்ன செய்தாலும் ஆண்டவர் மன்னித்துவிடுவார் என்ற மற்றொரு போலியான மார்க்கம் சில அதிகார பீடங்களால் திணிக்கப்பட்டு "பாவ மன்னிப்பு" சீட்டு விற்கும் வரை சென்றது;
வசதியானவர்கள் பணம் கொடுத்தும் வசதியில்லாதோர் தன்னைத் தான் வருத்தியும் பாவத்தினைப் போக்க புண்ணியத்தை ஈட்ட தவறாகப் போதிக்கப்பட்டனர்; இதனை எதிர்த்து கிறித்தவத்தினைத் தூய்மைப்படுத்த எண்ணற்ற அடியவர்களைக் கடவுள் எழுப்பினார்;அவர்களில் முதன்மையானவர் "மார்ட்டின் லூதர்" என்பார்; அவரும் கொலை செய்யப்பட்டது வரலாறு; இப்படியாக இன்றுவரை இந்த தேவ மார்க்கம் தன்னைத் தான் தூய்மைப்படுத்திக் கொண்டு மற்றவரையும் தூய்மைப்படுத்தும் "ஜீவநதி"யினைப் போல உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது;
இதில் டார்கெட்டெல்லாம் ஒன்றுமில்லை;"எரியுற கொள்ளில எது சுடாது" என்பார்களே அதுபோலவும், மதம் என்பதே "அபின்" போதை என்பார்களே அதுபோலவும் நாங்கள் யாரையும் சார்ந்திருக்கவில்லை; யாருக்காகவும் வேலை பார்க்கவில்லை;
இந்த உலகமே முழுகிக் கொண்டிருக்கும் "டைட்டானிக்" போலிருக்க நாங்கள் யாருக்காக எந்த ஆட்களைச் சேர்த்து எங்கே கொண்டுபோய் குடிவைக்கப் போகிறோம்?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான வரிகள்..!
காரணம் நண்பர் திருச்சிக்காரன் சொன்னதாலல்ல;இது இறைமகனார் இயேசுவானவர் சொன்னது; இதுபோலவே எண்ணற்ற நன்மொழிகள் பலராலும் எடுத்துச் சொ(செ)ல்லப்பட்டு யார்யாரோ சமதர்ம சன்மார்க்கம் பேசத் துவங்கிவிட்டார்கள்;
ஏனெனில் இயேசுவானவரின் திருவாய்மொழிகள் இந்த அண்டமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; காரணம்,அவர் பெரும்பாலும் வெட்டவெளியிலே பேசினார்; அரசர்களின் அரண்மனைகளையும் அதிகார பீடங்களையும் விட்டுவிலகியே இருந்தார்; இன்றைக்கும் கூட அவருடைய உண்மையான அடியவர்களையும் இதைக் கொண்டே அடையாளம் காணமுடியும்..!
பிற மார்க்கத்தவரின் தெய்வங்களை இகழ்ந்ததாகவும் வெறியைத் தூண்டிவிட்டதாகவும் காழ்ப்புணர்ச்சியை பரவச் செய்வதாகவும் நீங்களே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே தவிர இங்கே என்ன செய்தோம் என்று விவரமாக எதையும் சொல்லவில்லையே;
உதாரணமாக நீங்கள் இயேசுவை தூஷித்தால் நான் என்ன செய்யவேண்டும்? அதனை மறுத்து அவருடைய அருமை பெருமைகளையும் தியாகத்தையும் உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்;
அதுபோலவே நீங்களும் செய்யலாமே;அப்படியானால் உங்கள் தெய்வங்களைப் பற்றி பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
உங்கள் தெய்வம், எங்கள் தெய்வம் என்று கூட நான் பிரித்துப் பார்க்கவில்லை; ஒரு காலத்தில் நாங்களும் கண்மூடித்தனமாக மனிதரால் போலியாக ஏற்படுத்தப்பட்ட பக்தி உணர்வுடன் வணங்கி ஏமாற்றப்பட்ட எங்கள் குலதெய்வங்கள் அவை..!
ஒரு மாற்றுப்பாதையில் நான் செல்லும்போது அதனைக் குறித்த மேன்மையைச் சொல்லுவதே பழைய பாதையைப் பழிப்பதாகிவிடுமா?
குறிப்பாக இந்த தொகுப்பில் மற்ற தெய்வங்களைப் பேய்,பிசாசு என்று நாங்கள் பழித்ததை தயவுசெய்து வரிசைப்படுத்திப்பாருங்கள்; எங்களைவிட நீங்களே அதிகம் உங்கள் தெய்வங்களை இதுபோன்ற வார்த்தைகளால் தூஷிக்கிறீர்கள்;
எங்களுக்கு அதன் பயங்கரங்கள் தெரிந்ததால் அவ்வளவு தைரியமாக எதையும் சொல்லமாட்டோம்; அதிலும் மதுரை மாநகரின் "அஞ்சாநெஞ்சனே" மகா உக்கிரமானவரான நரசிம்மரை வாராவாரம் சாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறாராம்;
எங்க ஆளு ரொம்ப சாதாரணமானவரு, கையில ஒரு ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு உன்னையும் இதுபோல பாதுகாப்பேன் என்று சொல்லவும் நாங்க மயங்கிப்போய் அவர் பின்னால போயிட்டோம்,அவ்வளவுதான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// வெறுப்பு பிரச்சாரம் முலாம் அடாவடி மதப் பிரச்சாரம் அறிவை மறைக்கும் மதப் பற்று சைக்கோ மதவெறி மதக் காழ்ப்புணர்ச்சி பூசலை உண்டாக்குதல்//
அன்பான சகோதரரே,மாற்றுக் கருத்துக்கு இத்தனை கடினமான வார்த்தைகள்தான் பதிலாக இருக்கமுடியுமா?
மாற்றுக் கருத்து என்பது மாற்றக்கூடாததாக இருக்குமானால் நாங்கள் என்ன செய்யமுடியும்?
மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாதா?
ஒப்பிட்டுப் பாராமல் ஒன்றைத் தள்ளுவதும் இன்னொன்றை ஏற்பதும் மனிதனின் வழக்கமல்ல;ஏன் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும்;
புதிதான ஒன்றை ஏற்கும் தள்ளப்பட்டதற்கான காரணம் ஆராய்வது மனித இயல்பே;
நற்செய்தி எங்களிடம் வந்த வடிவிலேயே பகிர்வது மாத்திரமே அந்த செய்திக்கும் உங்களுக்கும் முன்பாக நேர்மையான செயலாக இருக்கமுடியும்;
மேற்கண்ட வார்த்தைகளை கண்ணாடி முன்னின்று உங்களுக்கு நீங்களே சொல்லிப் பாருங்கள்;முகத்தின் அழகைப் பாருங்கள்;உங்களுக்கே தெரியும்,யார் குற்றவாளி என்று..!
நாங்கள் வேற்று கிரக வாசிகளோ வெளிநாட்டவரோ அல்ல;உங்களோடு உண்டு,உறங்கி,ஓடிவிளையாடியவர்கள் தான்; ஆனால் எம்மை சந்தித்த இறை ஒளியின் மேன்மையை மாத்திரம் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறோம்;அதுவும் நீங்களே முன்வந்து "இறைவன் இருக்கின்றானா" என்று கேட்டதால்..!
நாங்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்தவற்றைவிட்டு வரும்போது அவை பேய் பிசாசுகள் என்று யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை;ஆனால் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு காலத்தில் அவற்றை உருகி உருகி பிரார்த்தித்தவர்களே தைரியமாகச் சொல்லுகிறோம்;
இன்னும் எங்கள் வழிமுறையினை ஏற்றுக் கொள்ளாத எமது சொந்தங்கள் இருளில் இருக்கிறார்கள்;அவர்களைக் கேட்டால் தெரியும்,நாங்கள் பணத்துக்காக வந்தோமா,மன நிம்மதிக்காக வந்தோமா என்று..!
இன்னும் கேட்டால் ஒன்றான மெய்த் தேவனைத் தொழத் துவங்கியபிறகே செல்வமும் ஞானமும் சுகமும் பெருகியது;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// பிரச்சினை என்ன என்று விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து எழுதுவது நடு நிலையாக தெரிவது கடினம் //
தாங்கள் உலகளாவிய பார்வையை விட்டு இந்திய சமுதாயத்தின் தேவை சார்ந்த கருத்தினை ஆராய்ந்து பாருங்களேன்..!
நம்பிக்கை என்ற போர்வையில் இந்து மார்க்கத்தின் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் நீங்கள் கிறித்தவத்தை மட்டும் ஆராய்ச்சி கோணத்தில் பார்ப்பது ஏன்?
நான் சொல்லுகிறேன், இந்தியாவுக்கு நாகரீகமும் செழிப்பும் வரக் காரணமே கிறித்தவ துறவிகளின் தியாகம் தான்..!
கல்வியையும் சுகாதாரத்தையும் கலாச்சாரத்தையும் குக்கிராமங்கள் வரையிலும் கொண்டு சென்றதில் கிறித்தவம் மாபெரும் பங்காற்றியிருப்பதை தாங்கள் மறுக்கமுடியுமா?
கிறித்தவர்களை உள்ளே விடாமல் எதிரியாக பாவித்து துரத்துவது யார் தெரியுமா, சாராய வியாபாரிகளும் மந்திரவாதிகளும் தான்..!
ஏனெனில் கிறித்தவம் நுழைந்த கிராமங்களிலெல்லாம் மக்கள் தெளிவடைகிறார்கள்;கெட்ட நடத்தையுடைய முரடர்கள் திருந்துகிறாகள்;
இந்த மார்க்கம் தேவையற்ற சடங்குகளிலிருந்தும் தோஷம்,பரிகாரம் சம்பந்தமான அச்சங்களிலிருந்தும் முழுமையான விடுதலையினைத் தருகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// திருச்சிக்காரரே, நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான்;எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்...//
ஆம்,நண்பர் அசோக் அவர்களே...இது என்னுடைய அனுபவம் சார்ந்த உண்மையாகும்; கருப்பண்ண சாமி என்று புகழப்படும் தீயசக்தியை கோபப்படுத்தினால் அது செய்யும் துஷ்டத் தனங்களை பலர் அனுபவித்ததை நேரில் கண்டிருக்கிறேன்;
//பலர், இயேசுவை சாதாரண மனிதன், அல்லது ஒரு ஞானி, அல்லது அப்படி ஒருவர் இல்லவே எல்லை என்று அவர்கள் ஆராய்ச்சி முடிவை கூறும்போது ஒத்துக்கொள்ளும் நீங்கள், எந்த அடிப்படையில் கிறிஸ்துவர்கள் கூற்றை வெறுக்கிறீர்கள்? //
இயேசுகிறிஸ்துவைக் குறித்த திருச்சிக்காரனுடைய அனைத்து கூற்றுகளுடனும் அவர் அறிந்துக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால் இயேசு இன்னும் உயிருடனிருந்து விண்ணுலகில் நமக்காகப் பணிசெய்துக் கொண்டிருக்கிறார்; இது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல,அநேகருடைய அனுபவமாகும்;
சிலையாக நாட்டப்பட்டும், சித்திரமாகவும் காலங்காலமாக வணங்கப்பட்டும் வந்ததொரு உருவத்தின் வடிவில் அல்லாமல் மகாஜோதியாக அநேகரை சந்தித்து மரணத்தினின்றும் தற்கொலையினின்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் இயேசுகிறிஸ்து எனும் மெய்யான தெய்வம்;அவர் சொல்லிச்சென்ற தம் வாக்குகளையும் உயிருடனிருப்பதாலேயே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய அன்புக்குரிய நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் தமது தளத்தில் "இறைவன் இருக்கின்றானா" என்ற பெயரில் ஒரு கட்டுரையினை எழுதியிருக்கிறார்;அதில் அவர் சுற்றி வளைத்து மீண்டும் கிறித்தவ மார்க்கத்தையே குறிவைத்துக் குறைபாடுகிறார்;
இதைக் குறித்த பின்னூட்டத்தை அவருடைய விருப்பப்படியே அங்கேயே பதிக்கலாம்; ஆனாலும் அது அடுத்தடுத்து வரக்கூடிய மாற்றுக் கருத்துக்களால் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளதால் இங்கே தனியாக ஒரு விளக்கப் பதிவினைப் பதிக்கிறேன்;
கிறித்தவத்தையும் கிறித்துவையும் பிரித்துவிட்டால், அதாவது கிறித்துவை புகழ்ந்து- நல்லவர், வல்லவர் என்று ஒதுக்கிவிட்டு கிறித்தவர்களை எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற தவறான எண்ணம் எங்கும் பரவியுள்ளதைப் பார்க்கிறோம்;
கிறித்தவர்களை- அதாவது உண்மையான கிறித்தவர்களைக் குறை சொன்னால் கிறித்துவானவருக்கு ரோஷமே வராதா?
எனது பிள்ளையை நான் அடித்து உதைத்து துன்பப்படுத்தினாலும் அடுத்தவர் எதையாவது செய்ய விடுவேனா?
கிறித்துவர்கள் கிறித்துவுக்காகச் செய்யும் எந்த ஒரு காரியமும் அவருடைய பரிபூரண அனுமதியுடனும் கட்டளையின்படியுமே செய்யப்படுகிறது; எனவே குறைகூறுபவர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அவர்கள் கட்டளை பெற்று வந்த தலைவனையே குறை கூறுகிறார்கள்;
இங்கே நண்பர் செய்யும் தவறு என்னவென்றால் கிறித்தவத்தை ஏதோ ஒரு அரசியல் இயக்கம் போல எண்ணிக் கொண்டிருக்கிறார்;
ஆக்கிரமிப்பாளர்கள் மனுக்குல வரலாற்றில் எல்லா காலத்திலும் இருந்து வந்தார்கள்; ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளரும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் வந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்கள்; யாருமே நிரந்தரமானதொரு சாம்ராஜ்யத்தை நிறுவிடவில்லை; ஒவ்வொரு சாம்ராஜ்யமும் ஓரிரு தலைமுறையுடனே முடிந்துப் போகிறதை வரலாற்றில் பார்க்கிறோம்;
ஆனால் சித்தாந்த- தத்துவ- சிந்தனையாளர்களால் சமுதாயத்தில் ஏற்படுத்தப்படும் பாதிப்பு யுகங்களைக் கடந்தும் நிற்கிறது; ஏனெனில் அது மனிதனின் ஆன்மா சம்பந்தமான விஷயமாகும்;
அதுபோன்று மனுக்குல வரலாற்றில் மாபெரும் ஆன்ம புரட்சியை விதைத்ததில் ஜகத்குருவும் பரஹம்சருமான இயேசு பெருமானார் முக்கிய பங்காற்றுகிறார்;
இதன் விளைவாக சாம்ராஜ்யங்களில் மாபெரும் அதிர்வு உண்டானதும் அதன் பாதிப்பு பலரையும் பாதித்ததும் உண்மையே; ஆனாலும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டது இயேசுவானவரின் அடியவர்களே;
எனது தாழ்மையான வேண்டுகோளாக நான் நண்பர் திருச்சிக்காரனுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் "ஒரு கண்ணில வெளக்கெண்ணெயும் மறு கண்ணில சுண்ணாம்பும்" என்பார்களே, அதுபோல நீங்கள் செயல்படாமல் நடுநிலையுடன் ஆராய வேண்டுகிறேன்;
உங்களுக்குப் பிடித்தமான துறவியான விவேகானந்தரையே எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் இந்தியாவின் மக்கள் தொகை வெறும் 30கோடி இருந்தபோதே இந்தியாவிலிருந்த மூடநம்பிக்கைகளையும் பல்வேறு சடங்காச்சாரங்களையும் எந்த அளவுக்கு கண்டித்தார்;
சமூக மேம்பாட்டுக்கு அவர் கொடுத்த தீர்வு என்ன? அதையொட்டியே கிறித்துவ துறவிகளும் செயல்பட்டனர் என்பதைத் தாங்கள் மறுக்க முடியுமா?
(தொடர்ந்து... இயன்றவரை திருச்சிக்காரனின் ஒவ்வொரு பத்திக்கும் எனது விளக்கத்தைத் தரமுயற்சிக்கிறேன்; சற்று பொறுத்துக் கொள்ளவும்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)