Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பக்திவிருத்தி"


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
RE: "பக்திவிருத்தி"
Permalink  
 


I request brother Sundar to give his views about my posting under the title
"Who is responsible for the sufferings of Job?"

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

chillsam wrote:

"யோபுவின் பாடுகளுக்கு தேவனே காரணம்" என்றும் அல்லது "யோபுவே காரணம்" அல்லது "சாத்தானே காரணம்" என்று தீர்ப்பாக எது வந்தாலும் அவை வேதத்துக்கு முரணாகவே இருக்கும்;ஏனெனில் அதனை இறுதி செய்யும் அமைப்பு இங்கே இல்லை;


சகோ. சில்சாம்  நீங்கள் சொல்லியிருக்கும் எந்த முடிவும்  அங்கு வரவில்லை. விவாதம் முடியும்முன் இது இப்படித்தான் முடியும் என்று கற்பனையில் எழுதுவதை தவிர்ப்பது நல்லது. 

SUNDAR     



-- Edited by chillsam on Saturday 23rd of January 2010 04:16:25 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சில நண்பர்கள் நமது தளத்தில் விவாதத்துக்காக தரப்பட்டுள்ள தலைப்புகளைக் குறித்து விமர்சிக்கின்றனர்;

அவர்களிடம் உண்மையாகவே விஷயம் இருக்குமானால் இங்கே வந்து தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்;அது நமக்கும் கூட பயனுள்ளதாக இருக்க வாய்ப்புண்டு;

அதை விட்டுவிட்டு நம்முடைய தளத்தின் விவாதத் தலைப்புகளைக் குறித்து வேறொரு தளத்தில் விவாதிக்கும் அவர்களது அறியாமைக்காக வருந்துகிறேன்;

அவர்களுடைய தளத்தில் வேதத்தின் ஆதார சத்தியங்களில் சர்ச்சைக்குரிய காரியங்களை விவாதித்து அதன் மூலம் "பக்திவிருத்தி"யினைக் கொண்டு வரப் போகிறார்களாம்;

அதற்கொரு உதாரணம்,"யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம்","மனுஷகுமாரனான இயேசுகிறிஸ்து யார்?" போன்றவைகளாகும்;

இது கிறிஸ்துவுக்கான எனது வைராக்கியத்தின்படி தெய்வத்துவத்தின் புனிதமான காரியங்களை ஆராயும் மனுஷனுடைய குறுமதி என்கிறேன்;

அவர்களோ "நீ செய்வது மட்டும் பக்திவிருத்தியை உண்டாக்கிவிடுமா" என கொக்கரிக்கிறார்கள்;

நான் அங்கே பதிலளிக்க விரும்பாததால் என்னுடைய கருத்தை இங்கே எனது வாசகர்களுக்காகப் பதிவு செய்து வைக்கிறேன்;

"என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்" என்று ஆண்டவர் சொன்னது போல இவர்களுடைய விவாதம் புதிய விசுவாசிகளைத் தடுமாறவே செய்யும்; எப்படி என்று பிறகு விளக்குகிறேன்;

"யோபுவின் பாடுகளுக்கு தேவனே காரணம்" என்றும் அல்லது "யோபுவே காரணம்" அல்லது "சாத்தானே காரணம்" என்று தீர்ப்பாக எது வந்தாலும் அவை வேதத்துக்கு முரணாகவே இருக்கும்;ஏனெனில் அதனை இறுதி செய்யும் அமைப்பு இங்கே இல்லை;

யோபுவின் சரித்திரத்தில் நாம் கற்றுக்கொள்ள‌க்கூடிய பாடம் "யோபுவின் பொறுமை" மட்டுமே என்ற எனது கருத்தை விட்டு விட்டு ஒரு பெரியவர் தேவையில்லாத காரியங்களை கதைக்கிறார்;அதை நீக்கவோ மட்டுறுத்தவோ அந்த தள நிர்வாகிக்கு தைரியமில்லாததால் என்னை எச்சரிக்கிறார்;

இஸ்லாத்தில் முகமது அவர்களுக்கு தரப்படும் மரியாதையும் மார்க்க அச்சமும் கொஞ்சமாவது நம்முடைய ஆண்டவர் மீது இந்த ஆட்களுக்கு இருக்குமானால் இதுபோல எழுதவும் பேசவும் மாட்டார்கள்;

ஊழியர்களைப் பற்றியும் ஊழியங்களைக் குறித்தும் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்;சமூகத்தையும் கிறிஸ்தவ வாழ்க்கை முறை குறித்தும் விவாதியுங்கள்;

ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான சிக்கலானதும் வேதம் நேரடியாகச் சொல்லாதுமான சர்ச்சைக்குரிய காரியங்களை நீங்கள் ஆராய்ச்சி,விவாதம் என்ற போர்வையில் தொடர்ந்து எழுதினால், "கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிபவர்களின் நிலை"க்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறேன்;

நீங்கள் சுற்றி சுற்றி வந்து சொல்லப்போவது என்ன என்பது எங்களுக்குத் தெரியும்;ஆனால் ஒன்றுமறியாத ஆடுகள் வஞ்சிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்கமுடியாது;

(தொடரும்...)


-- Edited by chillsam on Thursday 21st of January 2010 03:30:23 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard