இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. Iகொரி 10:11
Every Verses in Bible is profitable. And Bible is enough for me..
In our forums many times I found that brother chillsam and others knows and understand the same thing but they are not agreeing with each other so arguing continues. Like the topic one in this forum between chillsam and sundar.
This is because the views between believer and pastor differs
A Believer’s view = Believer view
A Pastor’s view = Pastor’s view + responsibility
Everybody not know the meaning of all verses in bible. A believer can write the below sentence and he can sign it.
“I understood the bible to some extent” for him no problem
But the pastor cannot write the same thing and sign it because he has the responsibility to meet the mass if he says,
“I understood the bible to some extent”
One can tell the same thing as “I didn’t know the bible fully” again same thing can be said as
“I don’t know the full bible” then he cannot handle the masses
Because of this brother chillsam refusing the topic itself in many cases. By realizing this I request brother chillsam to understand believer’s words and brother sundar not to press chillsam more and more so that yours time not get wasted. Otherwise your arguments will stop only if brother sundar become a pastor.
-- Edited by SANDOSH on Sunday 24th of January 2010 02:47:36 PM
As per my view, bible is the bok having words said by human, satan and God and compiled by man as per God's arranged plan to meet all persons needs
Not only Bible but all religious books in this world are all written as subjective book. But if you read it as objective book one can find many errors.
For eg. a science book is objective book i.e everyone can read with their mind
But Bible is a subjective book it individually speaks to the subject. In this world many people are there. So this should be the subjective book for all persons in the world. It should treats the individual persons separately. It is not easy to speak with the persons with various spiritual heights and levels. The meaning which is meant for one type of person will not be applicable for another person. The other person may think that there is some error in the bible. A Christian can find many errors in bible than other religious person. For eg. one pastor Mr.Watchman Nee found in some of the bible verses it is given as Jesus Christ and in some verses it is Christ Jesus. I dont know how many of us noticed this difference. Finally he found that before going to heaven Jesus is known as Jesus Christ i.e He is the one who is going to be Christ. After Jesus went to heaven his name is Christ Jesus.
Some of the things are hidden from the bible for God HIMself. People normally classify any word as which is given in bible and not given in bible. But another type also there that is the words hidden from bible.
I dont know why the following question is not asked by any other religious persons and I dont know anybody asked this question themselves the question is
Why Judges.19 given in bible? Whether it has any spiritual value? Although I have one view, I want others who have their views to post.
-- Edited by SANDOSH on Saturday 23rd of January 2010 06:42:51 PM
பரிசுத்த வேதாகமம் தற்போதுள்ள வடிவில் தொகுக்கப்படக் காரணமாக இருந்தது தேவ ஆவியானவர்தானா?
அதை மொழி பெயர்த்து மிக மலிவான விலையில் அல்லது இலவசமாக என்னிடம் கொடுத்தது தேவ ஆவியானவர்தானா?
அதன் ஒவ்வொரு வரியினையும் எழுத்து உறுப்பையும் ஆராய ஞானமாகி நிற்பவர் தேவ ஆவியானவர்தானா?
அப்படியானால் அவர் இன்னும் சொல்லாமல் தள்ளிவிட்டவைகளுக்காக வருந்துவேனே தவிர கொடுக்கப்பட்டதை வகை பிரித்து நான் தள்ளத் துவங்கினால் என் வேதத்தின் வெளி அட்டைகள் மாத்திரமே என் கையிலிருக்கும்;அதுபோன்றதொரு துணிகரம் எனக்கில்லை;
"இந்த தீர்க்கதரிசன புத்தகத்தில்" என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரும் வார்த்தையின் அர்த்தமே முழு வேதாகமத்துக்கும் பொருந்தும்;
வேதத்துக்காக நாம் பேசவும் வாதாடவும் போராடவும் சுயஞானத்துடன் தலைபடும் போதே இதுபோன்ற சமரசங்களுக்குள்ளாக நேரிடுகிறது;
ஆனால் நாம் வேதத்துக்குள் மறைந்துக் கொள்வோம்;அது தன்னையும் காப்பாற்றிக் கொண்டு நம்மையும் காப்பாற்றும் வல்லமை படைத்தது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவை ஆண்டவருடைய அனுமதியுடன் வேதத்தில் இடம் பெற்றுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளே..!
எனவே வேதம் "ஆதியிலே" என்று துவங்கி "ஆமென்" முடியும் வரை அனைத்தும் ஆண்டவருடைய வார்த்தையே என்ற மனத் தெளிவுடன் வாசித்துப்பாருங்கள்; பிறகு ருசித்துப்பாருங்கள் அதன் இன்பத்தை..!
வேத புத்தகம் முழுவதும் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.
ஆனால் "பிறரை கொலை செய், "அடுத்தவன் மனைவியோடு சயனி" "தகப்பனோடு சயநிப்போம்" "கன்று குட்டியை உருவாக்கி வணங்குவோம்" போன்ற மனிதர்களை கெடவைக்க சாத்தானால் ஏவப்பட்டு மனிதர்களால் சொல்லப்பட்ட வார்த்தகளும் , ஏன் பல சாத்தனின் வார்த்தைகளும் கூட வேதத்தில் இருக்கிறது.
அவை எல்லாம் பார்த்து நாம் எச்சரிக்கப்பட்டு அதுபோல் செய்து பாவத்தில் விழுந்துவிடாதபடி இருப்பதற்கு திருஷ்டாந்திரமாக எழுதப்பட்டதேயன்றி அவைகளும் தேவனின் வார்த்தைகள்தான் என்று நீங்கள் கூறினால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை.
உதாரணமாக உங்கள் நண்பர் கூறினார் என்று நீங்கள் சில கருத்துக்களை பதிகிறீர்கள், அது உங்கள் தளத்தில் இருப்பதால் உங்கள் கருத்து ஆகிவிடாது! உங்களுக்கு அந்த வார்த்தைகளை இங்கு பதிவது நல்லதுபோல் தோன்றியதால் பதிந்துவிட்டீர்கள். நாளை அந்த கருத்தில் ஏதாவது தவறு சுட்டிக்காட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அது என்னுடைய கருத்து அல்ல. என் நண்பனுடையது என்று சொல்வீர்கள்.
அதுபோல வேத புத்தகத்தில் தேவனின் நேரடி வார்த்தைகள், தேவ தாசர்கள் மூலம் தேவன் சொன்ன வார்த்தைகள், தேவகுமாரன் இயேசுவின் வார்த்தைகள் சாத்தானின் வார்த்தைகள் செய்ய கூடியவைகள் செய்யகூடாத்வைகள் எல்லாம் தொகுத்து கூறப்பட்டிருக்கிறது.
இது நடந்தது தேவசித்தத்தலும் தேவ ஆவியானவராலும் தான், ஆனால் அதற்காக சாத்தான் சொன்னதாக வேதம் சொல்லும் வார்த்தை எல்லாம் தேவ வார்த்தை ஆகாது!
-- Edited by SUNDAR on Friday 22nd of January 2010 08:09:56 PM
நண்பர் சுந்தர் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய பாதிப்பு தோன்றத் துவங்கிவிட்டது; அதன்விளைவாகவே இதுபோன்ற கருத்தை இங்கே பதித்திருக்கிறார்;
"வேதத்தில் ஆண்டவருடைய வார்த்தை" அல்லது "வேதமே ஆண்டவருடைய வார்த்தை" என்பதில் எது வேதத்துக்குப் பெருமை தரும் கருத்து?
குரான் இறைவனால் இறக்கப்பட்ட இறுதிவேதம்; அதை எப்படி நம்புவது? முகமது சொல்லிவிட்டார்..! அவர் எப்படி சொன்னார்? அவருக்கு ஜிப்ரில் என்ற ம(ல)க்கு சொன்னான்..!
ஆனால் வேதம் (பைபிள்) பல புத்தகங்களின் தொகுப்பு;அதில் வாழ்க்கை வரலாறு, கவிதைகள், போதனைகள் என எல்லாமாகச் சேர்ந்து ஒரு நூலகம் போலக் காணப்படுகிறது;
அதிலேயே இறைவன் நேரடியாக உரைத்ததாகவும் அகத் தூண்டுதல் மூலம் வெளிப்படுத்தியதாகவும் தரிசனங்களாகவும் அநேகக் காரியங்கள் கூறப்பட்டுள்ளது;
இதை ஒட்டு மொத்தமாக எப்படி இறைவேதம் என்று சொல்லமுடியும், என்பது ஐயமானால் வேதத்தின் ஒவ்வொரு வரியும் மனுக்குலத்தின் பல்வேறு நிலைகளைப் பதிவு செய்ய இறைவனின் திருவுளச் சித்தத்தின்படி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்பது பதிலாகும்;
ஏனெனில் நாம் தற்போது பயன்படுத்தும் நிலையில் வேதத்தைத் தொகுக்க பல பரிசுத்தவான்கள் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு பாடுபட்டு சேர்த்துக் (மொழிபெயர்த்துக்)கொடுத்தார்கள்; மேலும் அடிப்படை விசுவாசத்துக்கு முரணாக இருக்கக்கூடிய புத்தகங்கள் தள்ளப்பட்டுவிட்டது;
* சாராய் ஆபிரகாமை நோக்கி என் அடிமை பெண்னோடே சேரும். (ஆதி:16:2)
* யோசேப்பின் சகோதரர் சொன்ன "நாம் அவனை கொன்று இந்த குழிகள் ஒன்றிலே அவனை போட்டு" (ஆதி 37:20)
* தாவீது சொன்ன "மும்முரமாக நடக்கும் போர் முகத்திலே உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு பின் வாங்க வேண்டும்" (IIசாமு:11:15)
இவை ஆண்டவருடைய வார்த்தை இல்லையென்பதை யார் நிரூபிக்கமுடியும்? இவை ஆண்டவருடைய அனுமதியுடன் வேதத்தில் இடம் பெற்றுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளே..!
தேவசித்தம் நிறைவேற சாராளைப் பேசவைத்தது யார் என்பது தெரிந்தால் சாராள் மூலம் பேசியது யார் என்பதும் தெரியவரும்.
ஆபிரகாம் ஆகாருடன் சேராதிருந்து சாராள் ஆண்டவருடைய வார்த்தையின்படியே கர்ப்பவதியாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும் சற்று யோசித்துப்பாருங்களேன்..!
ஆகார் கர்ப்பதிவதியான பிறகே சாராள் தனிமைப்படுத்தப்பட்டு இன்னும் தீவிரமாக வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கும் நிலை வந்தது;
ஆபிரகாமும் சாராளும் இணைந்து யாரிடம் குறை என்றே தெரியாமல் பிள்ளைப்பேறுக்காக ஏங்கியதற்கும் தற்போது சாராள் மட்டும் ஏங்குவதற்குமுள்ள வித்தியாசத்தை தியானித்துப்பாருங்கள்..!
எனவே வேதம் "ஆதியிலே" என்று துவங்கி "ஆமென்" முடியும் வரை அனைத்தும் ஆண்டவருடைய வார்த்தையே என்ற மனத் தெளிவுடன் வாசித்துப்பாருங்கள்; பிறகு ருசித்துப்பாருங்கள் அதன் இன்பத்தை..!
இன்று நான் சந்தித்த ஒரு நண்பர் சொன்னதொரு சிறப்பான கருத்து:
"அநேகர் பைபிளில் கடவுளின் வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; ஆனால் வேதம் முழுவதுமே கடவுளின் வார்த்தைதான் என்ற அணுகுமுறையுடனே அதனைப் புரிந்துக் கொள்ளமுடியும்"
வேத புத்தகம் முழுவதும் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட போதிலும் அதில் உள்ள எல்லா வார்த்தைகளும் இறைவனின் வார்த்தைகள் என எடுத்துக்கொள்ள முடியாது உதரணமாக,
சாராய் ஆபிரகாமை நோக்கி என் அடிமை பெண்னோடே சேரும் (ஆதி:16:2)
யோசேப்பின் சகோதரர் சொன்ன "நாம் அவனை கொன்று இந்த குழிகள் ஒன்றிலே அவனை போட்டு" (ஆதி 37:20)
இன்று நான் சந்தித்த ஒரு நண்பர் சொன்னதொரு சிறப்பான கருத்து:
"அநேகர் பைபிளில் கடவுளின் வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; ஆனால் வேதம் முழுவதுமே கடவுளின் வார்த்தைதான் என்ற அணுகுமுறையுடனே அதனைப் புரிந்துக் கொள்ளமுடியும்"
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)