Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜோதிபாசு மரணம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஜோதிபாசு மரணம்..!
Permalink  
 


இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுமா,அடக்கம் செய்யப்படுமா என்று யோசித்துக் கொண்டிருந்தவேளையில் ஒரு அற்புதமான செய்தியினைக் கேள்விப்பட்டேன்;

அவரது இறுதி விருப்பப்படி அவரது சரீரம் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒரு மருத்துவமனைக்குக் கொடுக்கப்படுகிறது;அவரது கண்கள் ஏற்கனவே தானமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது;

எத்தனை அற்புதமான தலைவர்...இனி ஒரு தலைவர் இதுபோல எழும்பமுடியுமா என்பது சந்தேகமே...அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

உண்மைதான் அனைவரும் நேசிக்கத்தக்க தலைவராக அவர் விளங்கினார்.

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

கிறித்தவர்களின் உயர்நெறிமுறைகளை கிறிஸ்தவரல்லாத அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லாத கம்யூனிச தலைவரான ஜோதிபாசு அவர்கள் தன் வாழ்நாளில் கடைபிடித்து வந்ததில் மிகவும் உயர்ந்து நிற்கிறார்..!

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கோல்கட்டா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவருமான ஜோதிபாசு, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கோல்கட்டாவில் நாளை நடக்கின்றன. அவர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

tblfpnnews_65708124638.jpg

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஜோதிபாசு. அக்கட்சியின் ஆணிவேராக விளங்கியவர். மேற்கு வங்க மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற தலைவர். அம் மாநில முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். கடந்த 1977ம் ஆண்டில் இருந்து 2000ம் வரை (23 ஆண்டுகள், ஐந்து மாதம்) தொடர்ந்து முதல்வராக இருந்து, இந்தியாவில் தொடர்ந்து மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர். உடல்நிலை ஒத்துழைக்காததால், கடந்த 2000ல் தானாகவே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஜோதிபாசுவுக்கு வயது 95. கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்; பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை.இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி, இவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. கோல்கட்டாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மருத்துவமனைக்கு சென்று அவரை பார்வையிட்டனர். கடந்த மூன்று தினங்களாக அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. இருந்தாலும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டது. டாக்டர்கள் குழுவினர், தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் இருந்து ஜோதிபாசுவின் உடல்நிலை மோசமானது. இதயத் துடிப்பு போராட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்காலிகமாக பேஸ் மேக்கர் கருவி அவருக்கு பொருத்தப்பட்டது. அவருடைய மற்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டன. நுரையீரல்கள் மிகவும் குறைவான அளவே செயல்பட்டன. சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. தொடர்ந்து, "டயாலிசிஸ்' செய்யப்பட்டது. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், "டயாலிசிஸ்' செய்ய முடியவில்லை. அதைத் தாங்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இடம் தரவில்லை. இதனால், "டயாலிசிஸ்' செய்வதை டாக்டர்கள் நிறுத்தினர்.

இந்நிலையில், நேற்று பகல் 11.47 மணியளவில், ஜோதிபாசுவின் உயிர் பிரிந்தது. கடந்த 17 நாட்களாக உயிருக்கு போராடி வந்த ஜோதிபாசு நேற்று காலமானார். அவரது குடும்பத்தினர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அப்போது உடன் இருந்தனர்.ஜோதிபாசு இறந்த தகவலை, இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ், கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தற்போது நம்முடன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்' என்றார்.

நாளை இறுதிச் சடங்கு :
மறைந்த ஜோதிபாசுவின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக ஜோதிபாசு, தனது கண்களை தானம் செய்திருந்ததால், இறந்தவுடன் அவரது கண்கள் அகற்றப்பட்டன. ஜோதிபாசுவின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கின்றன. கோல்கட்டா, கியொரட்டலா சுடுகாட்டில் அவரது உடல் எரியூட்டப்படுகிறது. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேற்கு வங்க மாநில அரசு, நாளை விடுமுறை அறிவித்துள்ளது. ஜோதிபாசு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜோதிபாசுவின் இறுதிச் சடங்கில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.இறுதிச்சடங்குகளுக்கு பின் அவரது சடலம், மறைந்த பாசுவின் விருப்பப்படி "தேக தானமாக' கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு தரப்படும்.

கம்யூனிசத்தின் "உயிர்மூச்சு' ஜோதிபாசு :
மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு(95) நேற்று காலமானார். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். தொழிலாளர் நலனுக் காகவும் பாடுபட்டவர். பேச்சாற்றலால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர். இந்தியாவில் நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.கடந்த 1914, ஜூலை 8ம் தேதி, கோல்கட்டாவில் பிறந்தார் ஜோதி கிரண் பாசு. இவரது தந்தை நிஷிகாந்தா பாசு ஒரு டாக்டர். லொரேட்டோ பள்ளியில் சேரும் போது இவரது பெயர் ஜோதிபாசு என சுருக்கப்பட்டது.இந்து கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில், "ஹானர்ஸ்' பட்டம் பெற்றார். பின், இங்கிலாந்து சென்று சட்டம் பயின் றார். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். அங் கிருந்த இந்திய மாணவர்களைத் திரட்டி, சுதந்திர போராட்ட எழுச்சியை ஏற்படுத்தினார்.

1940ல் சட்டம் முடித்து, "பாரிஸ்டர்' தகுதி பெற்றார்.இந்தியா திரும்பிய இவர், ரயில்வே பணியாளர்களின் நலனுக்காக பாடுபட்டார். ரயில்வே சங்கத்தின் பொதுச் செயலரானார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் இடதுசாரி கட்சியில் தொடர்வதில் உறுதியாக இருந்தார். மேற்கு வங்க சட்டசபைக்கு, 1946ல் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1964ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்த போது, புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இதன் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஒருவரானார். அப்போதிருந்து 2008ம் ஆண்டு வரை, கட்சியினரின் ஆசைப்படி பொலிட்பீரோவில் இருந்தார்.

கட்சியின் சிறந்த தந்திரசாலியாகவும், மதிநுட்பமானவராகவும் கருதப்பட்டவர். 1965, ஜூன் 27லிருந்து வெளியான, "பீப்பிள் டெமாக்ரஸி' என்ற இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தார்.கடந்த 1957லிருந்து 1967 வரை, 10 ஆண்டுகள் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1967 மற்றும் 1969ல் துணை முதல்வராக பதவி வகித்தார். இடதுசாரி முன்னணி சார்பில், 1977ம் ஆண்டு ஜூன் 21 முதல் 2000, நவ., 6 வரை, இடைவெளியின்றி மேற்கு வங்கத்தின் முதல்வராக நீடித்தார். இதன் மூலம் இந்தியாவில் அதிக காலம் (23 ஆண்டு மற்றும் 5 மாதம்) தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற சாதனை படைத்தார்.

இவரது பதவிக்காலத்தின் போது எழுந்த கூர்க்காலாந்து பிரச்னை, இவருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. 1960களில் நக்சல்பாரி இயக்கத்தை ஒடுக்கிய பெருமையையும் பெற்றார். நக்சல்பாரி என்பது மே.வங்கத்திலுள்ள ஊரின் பெயர். இதன் பின், இதுபோன்ற வன்முறை இயக்கங்களுக்கு நக்சல்பாரி இயக்கங்கள் என்றே அழைக்கப்பட்டன. அதன் உறுப்பினர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஜோதிபாசுவின் உயிருக்கு நக்சலைட்டுகளால் ஆபத்து இருந்தது. பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய போது, இவரை குறிவைத்து சுடப்பட்ட தோட்டா, இவரை வரவேற்க வந்த ஒருவர் மீது பாய்ந்தது. அதன் பின், 1971 தேர்தல் பிரசாரத்தின் போது, இவரது கார் கடுமையாகத் தாக்கப்பட்டது. அதிலிருந்தும் இவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், இவரது துவக்க கால வெற்றிக்கு வழிவகுத்தன. அடிமட்ட அளவில் விவசாயக் கூலிகள் நசுக்கப் படுவதற்கு எதிராக குரல் கொடுத்தவர். இது, மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு ரூபாய் வாங்கிய கூலித் தொழிலாளிகள், இவரது முயற்சியால், 15-18 ரூபாய் வரை பெற்றனர். மேற்கு வங்கத்தில், 74 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அப்போது, 294 சட்டசபைத் தொகுதிகளில் 250 தொகுதிகள், கிராமங்களில் இருந்தன. இது வே, அவர் ஐந்து முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட உதவியது. காலத்துக்கு ஏற்றாற்போல், கம்யூனிச கோட்பாடுகளைக் கடைபிடித்த, சீனத் தலைவர் டெங் ஜியாவோபிங் போன்றே இவரும் திகழ்ந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் தொழில் துவங்க அனுமதியளித்தார். 300 தொழிலதிபர்கள், 1996ல் பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜருடன் விஜயம் செய்தது இவரது காலத்தில் தான்.கடந்த 1996ல், ஐக்கிய முன்னணி அரசில் பங்குபெறுவதில்லை என மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ முடிவு செய்ததால், பிரதமராகும் வாய்ப்பை ஜோதிபாசு இழந்தார். அத்துடன், மத்தியில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோனது. உடல்நலத்தை காரணம் காட்டி, 2000ம் ஆண்டு முதல்வர் பதவியை தானாகவே ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்ததிலிருந்து, மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கட்சிகளிடம் திணறி வருகின்றன.

"ஜன கனர் சங்கே' என்ற தலைப்பில், வங்க மொழியில் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். கமல் பாசுவை மணந்த இவருக்கு, சந்தன் பாசு என்ற மகன் உள்ளார். அவர் தொழிலதிபராக உள்ளார்.இம்மாத துவக்கத்தில், "நிமோனியா' காய்ச்சல் காரணமாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிபாசுவுக்கு, உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்ததை தொடர்ந்து, நாடு; மாபெரும் கம்யூனிச தலைவரை இழந்தது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard