Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் கருவறைக்குள்..?!


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
RE: கோவில் கருவறைக்குள்..?!
Permalink  
 


//அவ்வளவு ஏன் பால் மணம் மாறாத குழந்தையானது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் ஆடிப்பாடிய ஆபாச நடனங்களையும் பாடல் காட்சிகளையும் செய்து காட்டுவதில்லையா?

பிரச்சினை என்னவென்றால் அதன் பின் விளைவு என்ன,என்பதே//;



நான் குறிப்பிடுவ‌து ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளைக் கைக்கொண்டு வாழ்ந்த‌ அரிச்ச‌ந்திர‌ன், சிர‌வ‌ண‌ன்,இராம‌ன், காந்தி, இயேசு கிறிஸ்து, புத்த‌ர், அனும‌ன், மாஹாவீர‌ர் உள்ளிட்ட‌ தியாக‌ செம்ம‌ல்க‌ளை.மானாட‌ , ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சியாளர்க‌ளைப் ப‌ற்றி நான் கூற‌வில்லை.

இங்கே மானாட‌ , ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சி ப‌ற்றி நீங்க‌ள் ஏன் குறிப்பிடுகிறீர்க‌ள்?பொருத்த‌மே இல்லாம்ல் உள்ள‌து, நான் க‌லைஞ்க‌ர் டி,வி.யில் ப‌ணியாற்ற‌வில்லையே.

//ஏனெனில் காந்திஜியுடன் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்கள் இருந்தும் நாம் காந்தியடிகளையே ஒரு குறியீடாகக் கொண்டு இத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறோம்; அவரை வணங்கத் தெரிந்த நமக்கு அவரைப் போல வாழத் தெரியவில்லையே; இது யாருடைய தோல்வி?//

காந்தியைப் போல‌ இப்போது யாரும் வாழ‌வில்லை என்று சொல்ல‌ முடியாது, அவ‌ர்க‌ள் சாதார‌ண‌ வாழ‌க்கை வாழ்ப‌வ‌ராக‌ பெரிய‌ த‌லைவ‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். காந்தி கூறிய ப‌டி வாழ ம‌க்க‌ளுக்கு உத‌வும் வ‌கையில் தான் அவ‌ருடைய‌ கொள்கைகளை நினைவு ப‌டுத்துகிறோம், ஓர‌ளவுக்காவ‌து அவ‌ருடைய‌ கொள்கைக‌ளைப் பின்ப‌ற்றி வாழ்ந்து காட்ட‌லாம். ஆனால் காந்தி தான் வாழ‌ந்த‌ கால‌த்திலே ப‌ல‌ரை த‌ன் கொள்கையின் ப‌டி வாழும் வ‌ண்ண‌ம் ந‌ட‌த்தி சென்று இருக்கிறார். அஹிம்சை, உண்மை போன்ற‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அவ‌ர் ப‌ல‌ருக்கும் உண்டாக்கி, க‌டைசி வ‌ரை தானும் அதைக் க‌டைப் பிடித்து இருக்கிரார். என‌வே காந்திக்கும் தோல்வி இல்லை, அவ‌ர‌து கொள்கைக‌ளுக்கும் தோல்வி இல்லை.இதை ஒரு உதார‌ண‌ம் காட்டிக் கூர‌லாம். இயேசு கிறிஸ்துவின் மார‌க்க‌த்தைப் பின்ப‌ற்றும் மேலை நாடுக‌ள், வர‌ம்ப‌ற்ற‌ விப‌ச்சார‌க் க‌லாச்சார‌த்தை பின்ப‌ற்றுகின்ர‌ன‌. திரும‌ண‌ வாழ‌க்கை முறை மிக‌வும் அரிதாகி விட்ட‌து. அப்ப‌டியே திரும‌ண‌ம் செய்து கொள்ப‌வ‌ரும் சில‌ மாத‌ங்க‌ளுக்குள் மண‌ முறிவு செய்கின்ற‌ன‌ர். இதை வைத்து நான்  இயேசு கிரிஸ்துவுக்கோ, அவ‌ர‌து கொள்கைக‌ளுக்கோ தோல்வி யாக‌க் க‌ருத‌வில்லை.//மேலும் காந்திஜியை யாரோ ஒரு கிறிஸ்தவனோ இஸ்லாமியனோ கொல்லவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்; இதிலிருந்து என்ன தெரிகிறது,ஒரு தரப்புக்கு காந்திஜி வேண்டியவராகவும் மற்றொரு தரப்புக்கு அவரே வேண்டாதவராகவும் இருந்திருக்கிறார்;//இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் சொல்ல‌ விரும்பும் க‌ருத்து என்ன‌ என்ப‌தைத் தெளிவாக‌ சொல்ல‌ முடியுமா?

ஒரு த‌ர‌ப்புக்கு வேண்டாத‌வ‌ர் என்று நீங்க‌ள் கூறினால், அந்த‌ த‌ர‌ப்பு கிரிஸ்த‌வ‌ த‌ர‌ப்போ, இசுலாமிய‌ த‌ர‌ப்போ இல்லை என்றால், இந்தியாவில் உள்ள‌ இந்துக்க‌ள் காந்தியை நேசிக்க‌வில்லையா? எல்லா இந்துக்க‌ளும் சேர் ந்து ச‌தி செய்து, காந்தியை கொலை செய்து விட்டார்க‌ளா? இந்த‌க் க‌ருத்தை கேட்டால் வெளி நாட்டின‌ர் கூட‌ ந‌கைப்பார்க‌ள்.

//ஆனால் இறைவன் மனிதனின் அறிவுக்கும் தேர்ந்தெடுப்புக்கும் அப்பாற்பட்டவர்; நீங்கள் நிராகரித்தாலும் அவரே இறைவன்; இந்த அண்டம் அவருக்குத் தான் சொந்தமானது; //

இது எந்த‌ வித‌மான‌ ஆதார‌மும் இல்லாம‌ல், யாரோ சில‌ர் கூறிய‌  க‌ற்பித‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் சொல்ல‌ப் ப‌டுவ‌து. இதை யாரும் ச‌ரி பார்க்க‌வும் இல்லை, நிரூபிக்க‌வும் இல்லை. Neither provided with proof nor verified by any one, but a mere  belife.//இயேசுவானவர் தம்மை சிருஷ்டிக் கர்த்தாவாக வெளிப்படுத்தியும்கூட எங்குமே தன்னை வணங்கச் சொல்லவில்லை;ஆனால் ஒன்றைச் சொன்னார்,"என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் அறிவுரைகளைக் கைக் கொள்"

"என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் அறிவுரைகளைக் கைக் கொள்"

 

எனவே மனிதன் முன்பு இருக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய சவால் யாரை வணங்குவது என்பதல்ல,யாரைப் பின்பற்றுவது என்பதே;//


இயேசுவி கிரிஸ்துவின் கொள்கைக‌ள் சிற‌ந்த‌வை, பின்ப‌ற்ற‌த் த‌குந்த‌வை என்றுதான் நானும் சொல்கிறேன்.

அதே நேர‌ம் இன்னும் ப‌ல‌ர் கூறிய‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளையும் ம‌க்க‌ள் பின்ப‌ற்ற‌லாம். ஒரு க‌ருத்தைப் ப‌டிக்கும் போதே அது ந‌ல்ல‌ க‌ருத்தா இல்லையா என்ப‌து தெரிந்து விடும்.

யாரோ ஒருவ‌ர் க‌ட‌வுள் என்று இருப்ப‌தாக‌ க‌ருதிக் கொள்வதோ, அவ‌ர் தான் ப‌டைத்தார் என்று நினைத்துக் கொள்வ‌தோ உங்க‌ள் விருப்ப‌ம். நாங்க‌ள் அதில் குறுக்கிட‌வில்லை, உங்க‌ள் வழி பாட்டை த‌டை செய்ய‌வுமில்லை.

அதே நேர‌ம் உங்க‌ளைப் போல‌வே ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் க‌ருதிக் கொண்டு, அவ‌ர்க‌ள் வ‌ழிப‌டும் போது, அவ‌ர்க‌ள் வழி ப‌டும் தெய்வ‌ங்க‌ளை பேய்க‌ள் என்று இக‌ழ்ந்து, பொல்ல‌ப்பு செய்து, ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலே மோத‌லை உண்டாக்கி உல‌க அமைதியைக் கெடுப்ப‌து ச‌ரியா?.

வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பி, நாகரீக‌ ச‌முதாய‌ம் உருவாவ‌தை பின்னொக்கி த‌ள்ளி கற்கால‌த்துக்கு அழைத்து செல்வ‌து ச‌ரியா?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே,நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆச்சரியமான செய்தி ஒன்றுமல்லவே;
இது மிக இயல்பானது;

அவ்வளவு ஏன் பால் மணம் மாறாத குழந்தையானது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் ஆடிப்பாடிய ஆபாச நடனங்களையும் பாடல் காட்சிகளையும் செய்து காட்டுவதில்லையா?

பிரச்சினை என்னவென்றால் அதன் பின் விளைவு என்ன,என்பதே;

ஏனெனில் காந்திஜியுடன் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்கள் இருந்தும் நாம் காந்தியடிகளையே ஒரு குறியீடாகக் கொண்டு இத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறோம்; அவரை வணங்கத் தெரிந்த நமக்கு அவரைப் போல வாழத் தெரியவில்லையே; இது யாருடைய தோல்வி?

மேலும் காந்திஜியை யாரோ ஒரு கிறிஸ்தவனோ இஸ்லாமியனோ கொல்லவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்; இதிலிருந்து என்ன தெரிகிறது,ஒரு தரப்புக்கு காந்திஜி வேண்டியவராகவும் மற்றொரு தரப்புக்கு அவரே வேண்டாதவராகவும் இருந்திருக்கிறார்;

ஆனால் இறைவன் மனிதனின் அறிவுக்கும் தேர்ந்தெடுப்புக்கும் அப்பாற்பட்டவர்; நீங்கள் நிராகரித்தாலும் அவரே இறைவன்; இந்த அண்டம் அவருக்குத் தான் சொந்தமானது;

இயேசுவானவர் தம்மை சிருஷ்டிக் கர்த்தாவாக வெளிப்படுத்தியும்கூட எங்குமே தன்னை வணங்கச் சொல்லவில்லை;ஆனால் ஒன்றைச் சொன்னார்,"என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் அறிவுரைகளைக் கைக் கொள்"

எனவே மனிதன் முன்பு இருக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய சவால் யாரை வணங்குவது என்பதல்ல,யாரைப் பின்பற்றுவது என்பதே;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

//ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்கும் மனிதனுக்குள் வந்து குடியிருக்கும்//

//"ஆவி" என்று நான் குறிப்பிட்டது மிகத் தெளிவாக சொல்லப்போனால் விக்கிரகம்,அதன் பெயர்,அது சம்பந்தமான தலபுராணம்,வீர தீர பராக்கிரமங்களாகப் புனையப்பட்ட கதைகள் இவற்றை சிறு வயது முதல் கேள்விப்பட்டு அதில் ஊறிப்போன ஒரு மனிதன் அதில் தன் வயப்பட்டு தன்னை அந்த சாமியாகவே நினைத்து செயல்படுவது; இங்கே ஆவி எனப்படுவது சிந்தையில் ஏற்படும் ஆழ்ந்த பாதிப்பையே குறிக்கிறது.//

நீங்க‌ள் கூறுவ‌தை முக்கிய‌மான‌ ஒரு விட‌ய‌மாக‌ ப‌திவு செய்கிறேன். அதாவ‌து ஒரு விக்கிர‌க‌த்தை பூஜித்தால் அத‌ன் குண‌ங்க‌ள் அந்த‌ ம‌னித‌னுக்கு வ‌ரும்.

காந்தியின் அருகியில் அம‌ர்ந்து மஹான், காந்தி ம‌ஹான்...கை ராட்டையே ஆயுத‌ம், க‌த‌ராடையே சோபித‌ம்.... என்ப‌து போன்ற கருத்துக்க‌ளை உடைய‌ பாட‌ல்க‌ளைப் பாடினால், காந்தியின் குண‌ங்க‌ளான‌ உண்மை பேசுவ‌து, அஹிம்சை.... போன்ற குண‌ங்க‌ள் அ ந்த‌ ம‌னித‌னுக்கு வ‌ர‌க் கூடும் என‌ப‌து உள‌விய‌ல் ரீதியாக‌ சாத்திய‌மாக‌ இருக்க‌க் கூடும் என்றே க‌ருத‌லாம்.

எனவே காந்தி, புத்த‌ர், இயெசு கிறிஸ்து, விவேகான‌ந்த‌ர், ராம‌ர், அனும‌ன், ஆகிய‌வ‌ரின் கொள்கைக‌ளை சிந்தித்த‌வாரே அவ‌ர்க‌ளின் சிலைக‌ளுக்கு ம‌ரியாதை செய்தால், அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ குண‌ங்க‌ளை ஒரு ம‌னித‌ன் பெறுவ‌து உல‌விய‌ல் ரீதியாக‌ சாத்திய‌ம் என்றால், நான் அதைக் குறை கூற‌வில்லை. அது ஒரு வ‌கையில் ந‌ல்ல‌தே.

ம‌க்க‌ள் அறிவை வ‌ள‌ர்த்து, நாக‌ரீக‌ம‌டைந்து, வெறுப்பை விள‌க்கி, அன்பு வாழ்க்கை வாழ‌ வேண்டும் என்ப‌தே ந‌ம‌து குறிக்கோள். என‌வே உங்க‌ள் கருத்தை வ‌ர‌வேற்ககிரேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"தமிழ்ஹிந்து" எனும் தளத்தில் கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்த தூஷணமான,வெறுப்புக் கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது;

அதற்கு விளக்கமளிக்கும் பின்னூட்டங்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது; இந்நிலையில் அந்த தளத்தில் அதிகமாக கவனிக்கப்பட்ட நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் தனி "ப்ளாக்" துவங்க அதில் மட்டுறுத்தல் மற்
றும் தணிக்கை இல்லாத காரணத்தால் சுதந்தரமாகவும் பொறுப்புணர்வுடனும் பின்னூட்டங்களைப் பதித்துவருகிறேன்;

அதிலும் கூட என்னை ஒரு கிறிஸ்தவனாக வலியுறுத்தும் கருத்துக்களைக் கூறாமல் சமூகப் பொறுப்புள்ள சாதாரண பொது நலவாதிக்குரிய இலட்சணங்களுடனே எழுதுகிறேன்;

ஆனாலும் இங்கேயும் அவர்கள் கட்டுரைக்கு நான் எழுதும் பின்னூட்டத்துக்கான காரியத்தை விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக மீண்டும் கிறிஸ்தவர் செய்யும் தவறுகள், மதமாற்றம், மோசடி என்று வழக்கமான பல்லவிகளையே பாடுகிறார்கள்;

அதாவது இந்து மார்க்கத்தின் அவலட்சணங்களைக் குறித்து அவர்கள் விவாதிக்க இருக்கும் உரிமை நமக்குக் கிடையாதாம்; அப்படி ஏதேனும் நம்முடைய கருத்தாக, நமக்குத் தெரிந்ததை, நட்புரீதியில் சொன்னால்கூட உடனே,"நீ யோக்கியமா" என இல்லாததும் பொல்லாததுமான காரியங்களைப் பிணைத்து விவாதத்தை திசைதிருப்புகிறார்கள்;

தர்ம நியாயப்படி கூட இது எப்படி சரியானது என்று புரியவில்லை;

அண்மையில்
நண்பர் பாஸ்கர் என்பவர் எழுதியுள்ள காரியத்துக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்க எண்ணி இந்த தனி கட்டுரையை வரைகிறேன்;

தளம:திருச்சிக்காரன்

கட்டுரை:காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் நிலைக்கு காரணம்?


திசைதிருப்பப்பட்ட என்னுடைய பின்னூட்டம் எண்:18

// கோவில் கருவறைக்குள் //

கோவில் என்பது (கோ+இல்) அரசனின் இல்லம் என்று பொருள்படும்;

எந்த தெய்வமும் ஜோடி இல்லாமல் இல்லை;அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடியுடனே நமது தெய்வங்கள் தோன்றுகின்றன;

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்கும் மனிதனுக்குள் வந்து குடியிருக்கும்;(கிராமங்களில் சாமி இறங்கின ஆட்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா?)

அதன்பிறகு அந்த ஆவியான விக்கிரகத்தின் தன்மை முழுவதும் (அதாவது அதன் பராக்கிரமங்களைக் குறித்து அந்த பக்தன் கேள்விப்பட்டுள்ள குணாதிசயங்கள் முழுவதும்) மனுஷனுக்குள்ளிருந்து செயலாக மாறுகிறது;

அதன் விளைவுகளை போதித்து மனிதனை நல்வழிப்படுத்தவே வேதங்கள் தோன்றின;ஆனால் யாரும் அதை மதிக்கிறதில்லை..!

Comment by chillsam — January 13, 2010 @ 22:31

நண்பர் பாஸ்கர் அவர்களின் பதில்:

வணக்கம்,நண்பர் சில்சம் அவர்களே,

ஒரு சின்ன விஷயம், நீங்கள் குறிப்பிடும் ‘ஆவி’ சமாசாரங்களை இங்கே கோவில்களில் மட்டுமல்ல யாரும் எங்கும் வணங்குவது கூட இல்லை. பிறகு அதை யார் பூசிப்பது?

கிறிஸ்துவம் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டை மறுக்கிறது, அதாவது விக்கிரகம் வெறும் கல் என்று கூறும்போது நீங்கள் மட்டும் விக்கிரகத்தின் தன்மை அதனை வழிபடுபவனிடம் சேர்கிறது என்கிறீர்கள்,அப்படியெனில் விக்கிரகத்திற்கு சக்தி உள்ளது என்பதை நம்புகிறீர்களா?

சரி அப்படியானால் ஒரே தெய்வத்தின் (இயேசுவின்) ஆவியை வணங்கும் கிருஸ்துவர்களுக்கும் பாதிரிகளுக்கும் இயேசுவை பற்றி கேள்விப்பட்ட அன்பும் நேசமும் அல்லவா வந்திருக்கவேண்டும்?

ஓரின சேர்க்கை விவகாரம், பாலியல் விவகாரம் என்று சிக்கிக் கொண்டிருக்கும் நிலை எதனால் வந்தது?

நமது பாரதத்தை நரித்தனத்தால் அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே,அவர்களில் ஆரம்பத்தில் வந்தவர்கள் டாக்டர் கம் பாதிரிகள்தான்.

அவர்களிடம் இயேசுவின் குணம் என்று ஒன்றும் இல்லாமல் நாடு பிடிக்கும் எண்ணம் மட்டுமே இருந்ததே? அது எதனால்?

இன்றும் மதமாற்றத்தின் மூலம் அதைத்தான் நடத்த துடிக்கிறார்கள்;

கிறிஸ்துவையே வணங்கும் அமெரிக்காதான் பெரும்பான்மையாக ஆயுத விற்பனை நடத்துகிறது, இயேசுவின் குணத்தில் ஆயுதம் எப்போது சேர்ந்தது?

கோவிலுக்குள் நடந்த நிகழ்ச்சி விரும்பத்தகாத ஒன்று மட்டுமல்ல, செய்யக் கூடாத ஒன்றும் கூட. அதை நாங்கள்
வன்மையாக கண்டிக்கிறோம், கோவிலில் மட்டுமல்ல ஒரு சர்ச்சில் இது நடப்பினும் குற்றமே. அன்றியும் தன மனைவியை விட்டு இது போல பிரமாதர்களின் உறவு நாடுவது எங்கு நடப்பினும் அது குற்றமே.

புராணங்களில் தவறுகள் நடப்பதை மட்டும் படித்து விட்டு பேசுதல் விடுத்து தவறிழைத்தவருக்கு கிடைத்த சாபம், தண்டனைகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள், குற்றம் என்ன என்று சுட்டிக்காட்டாமல் எப்படி தண்டனை பற்றி பேசுதல் முறையாகும்? ஆகவே புராணங்களில் குற்றங்கள் காட்டப்பட்டன.

Comment by B. பாஸ்கர். — January 13, 2010 @ 22:31

நண்பர் பாஸ்கர் அவர்களின் மேற்கண்ட கருத்துக்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்க விரும்பியதால் இதோ எழுதுகிறேன்;இவற்றை ஏற்பது ஏற்றுக்கொள்ளாததும் அவருடைய விருப்பம்;ஆனாலும் எனது வாசக நண்பர்களுக்கு இந்த விளக்கமானது மனத் தெளிவைத் தருமானால் நான் அதிக மகிழ்ச்சியடைவேன்;அது குறித்து நானறிய வாசக நண்பர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே பதிக்க வேண்டுகிறேன்;

இனி...
"ஆவி" என்று நான் குறிப்பிட்டது மிகத் தெளிவாக சொல்லப்போனால் விக்கிரகம்,அதன் பெயர்,அது சம்பந்தமான தலபுராணம்,வீர தீர பராக்கிரமங்களாகப் புனையப்பட்ட கதைகள் இவற்றை சிறு வயது முதல் கேள்விப்பட்டு அதில் ஊறிப்போன ஒரு மனிதன் அதில் தன் வயப்பட்டு தன்னை அந்த சாமியாகவே நினைத்து செயல்படுவது; இங்கே ஆவி எனப்படுவது சிந்தையில் ஏற்படும் ஆழ்ந்த பாதிப்பையே குறிக்கிறது.

கிறிஸ்தவம் மட்டுமல்ல,இந்து மார்க்கத்திலும் விக்கிரக வழிபாடு கிடையாது;அதன் ஆதார வேர்களில் ஆராய்ந்தால் மாயா,கர்மா,கன்மாவைக் குறித்தும் ஞானத்தைக் குறித்தும் பேசப்படுகிறதேயன்றி இன்றைக்குப் பிரபலமான எந்த தெய்வங்களின் பெயர்களும் வேதங்களில்,விக்கிரக வழிபாடும் இல்லை;அல்லது புராணங்களின் கற்பனை கதாநாயகன்,நாயகிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறது;தெய்வங்களுக்குள் மாமன் மச்சான் உறவெல்லாம் நாமே ஏற்படுத்திக்கொண்டதுதான்;

விக்கிரத்துக்கு சக்தியில்லை என்பதைவிட குறிப்பிட்ட விக்கிரகத்தின் பால் ஒரு மனிதனை ஈர்த்து வைக்கும் சக்தி எது என்பதில் தான் இரகசியம் உள்ளது;

பரிசுத்தரான ஏக இறைவன் தன் சாயலில் மனிதனைப் படைத்து தூய்மையான வாழ்க்கை முறையில் ஸ்தாபிக்க எதிர் சக்தியானது அந்த மனுஷனைத் தீட்டுப்படுத்தி ஒரே சமயத்தில் மனிதனை இறைவனுக்குப் பகையாளியாகவும் தனக்கு அடிமையாகவும் மாற்றிப்போட்டது;

மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கெல்லாம் ஏதாவதொரு நியாயம் கற்பித்து அதனைத் தொடரும் அவலம் அங்கிருந்தே வந்தது;

தவறான ஒன்றை முழுவதும் அழித்துவிட்டுப் புதியதாக செய்துக் கொள்வதே எளிமையானது;ஆனாலும் அளவற்ற கருணையாளனான கடவுள் தாமே மனித அவதாரம் எடுத்து வந்து பகைக்குக் காரணமான மரண பயத்தை சிலுவை பலியினால் அழித்து மனிதனை மீண்டும் ஆதி நிலையில் ஸ்தாபிக்கும் வழியினைத் திறந்தார்;

தற்போது இந்த நற்செய்தியைக் கேள்விப்பட்டு மனு அவதாரமெடுத்து வந்த இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தாவியினால் நம்மையெல்லாம் அவரது சீடர்களாக,பக்தர்களாக,பிள்ளைகளாக மாறி நற்செயல்கள் செய்ய நமக்கு உதவுகிறார்;ஆனாலும் நமது சுயாதீனத்தை மீறி அவர் செயல்படவில்லை;

எனவே நாம் இயேசுகிறிஸ்துவின் கருத்துக்களால் கவரப்பட்டு அவருடைய ஆவியினால் நடத்தப்பட நம்மை ஒப்புக்கொடுத்த பிறகும் நாம் நமக்கு இறைவனால் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள‌ சுயாதீனத்தினால் தவறு செய்யமுடியும்; ஏற்கனவே செய்த தவறுக்காக பிராயசித்தம் செய்ய இறைவன் மனு அவதாரமெடுத்து வந்து அதனை செய்து முடித்தார்;

மீண்டும் நாமே சுயாதீனத்துடன் வீழ்ந்துபோனால் அதன் முடிவு மகா கொடூரமாக இருக்கும்;அந்த நிலையில் மீட்கப்பட்ட கிறிஸ்தவனைவிட இன்னும் ஆண்டவரிடம் வராத சாதாரண மனிதனின் நற்கிரியைகள் அதிகமாகப் புகழப்படும்; அது பாதிரியானாலும் சரி,தேசத்தின் தலைவரானாலும் சரி தீர்ப்பு ஒன்றே;மேற்கண்ட எதுவுமே என்னுடைய சொந்த கருத்து அல்ல;இதுவே முழு வேதத்தின் சாராம்சமாகும்.

ஓரின சேர்க்கை பற்றி பெரிதாகப் பேசும் நண்பர் குறிப்பிட்ட இரு ஆண் தெய்வங்கள் இணைந்து ஒரு பிள்ளையைப் பெற்றதாகவும் அதனால் அந்த குறிப்பிட்ட தெயவத்துக்கு பெண்கள் ஆகாது என்று கூறிக்கொண்டு சாரி சாரியாக ஓடுவதில்லையா?

நமது கோவில் சிற்பங்களில் பிரதானமாக காணப்படுவது ஆண்,பெண் சம்பந்தமான உறவு சமாச்சாரங்கள் தானே?

இது இப்படியிருக்க இந்தியாவில் பாலியல் தொழில் கொடிகட்டி பறக்க வெளிநாட்டு மதமாற்ற கோஷ்டிகளே காரணம் என்பது இந்தியாவின் புனிதர்களையும் துறவிகளையும் அவமானப்படுத்துவது இல்லையா?

இந்தியர்களை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தியது போலவே உண்மையான இயேசுகிறிஸ்துவின் சீடர்களையும் அவரது மார்க்கத்தையும் ரோம சாம்ராஜ்யத்தினர் அடிமைப்படுத்தினர்;

இன்றும் அவர்கள் வழிவந்தோர் பிடியில் தான் கிறிஸ்தவம் இருக்கிறது; அவர்கள் செய்யும் காரியத்துக்கெல்லாம் இயேசுகிறிஸ்து பொறுப்பாக முடியாது; அவர் நியாயாதிபதியாக வரும்போது நீதியாய் தீர்ப்பு செய்வார்; அவனவன் செயலுக்குத் தக்கதான கூலி நிச்சயம் உண்டு;

தேசத்தின் சட்டம் பொதுவானது; அதை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது போலவே இறைவன் ஒருவன்; அவர் (கருணாமூர்த்தி) திறந்து வைத்துள்ள மார்க்கம் பொதுவானது;

இனி கர்மா,கன்மா,மாயா,சுய ஞானம்,சுய நீதி,பற்பல வழிகள் வழியாகவும் பரம்பொருளையடையலாம் என்னும் மோசடி கருத்துக்கள் எதுவுமில்லை;

முழுமையான ஆன்ம விடுதலையினையடைந்து முக்தியடைய சிறந்த மார்க்கம் ஏக இறைவனும் படைபாளியுமான‌ இயேசுகிறிஸ்து வழியாகவே அமைக்கப்பட்டுள்ளது..!

மற்றபடி ஆயுதப் போட்டியானாலும் சரி, தேசத்தை தேசம் ஆக்கிரமிப்பதானாலும் சரி இவையனைத்தும் இன்னும் தொடரும்;

எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வந்தன, வீழ்ந்தன; அதனை இறைவன் பொருட்ப‌டுத்துகிறதில்லை; அவரோ இகழ்ந்து நகைத்துக் கொண்டிருக்கிறார்;

இறை மார்க்கத்தைப் பகடி செய்து நகைக்கும் மனிதனின் ஆயுள் ரேகையும் அவனது மூச்சுக் காற்றும் அவருடைய கரத்திலேயே இருக்கிறது..!



-- Edited by chillsam on Tuesday 19th of January 2010 12:36:39 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard