Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் கருவறைக்குள்..?!


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
RE: கோவில் கருவறைக்குள்..?!
Permalink  
 


ச‌கோத‌ர‌ர்  Joseph அவ‌ர்களே,

சென்ற முறை அவசரமாக பின்னூட்டம் இட்டு சென்று விட்டேன்.  உங்களின் நலம் விசாரிப்புக்கு நன்றி. நீங்களும் நலமென நம்புகிறேன்.

//ஆனால் இயேசு என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கும்//

இது சரியான கருத்தல்ல. முருகனை , கண்ணனை யும் இயேசு கிறிஸ்துவையும் சேர்த்து   வணங்க நான் பல இந்துக்கள ஒத்துக் கொள்கின்றனர். .

இந்து மதம் சகிப்புத் தன்மை இல்லாதது என்பது உண்மைக்கு எதிரானது.

எல்லா மதங்களையும் அரவணைப்பது   இந்து மதத்தின் முக்கிய குணாதிசயம் ஆகும். நீங்கள் தயவு செய்து சுவாமி விவேகானந்தர், காந்தியடிகள், பாரதியார் ஆகியோர் பிற மதங்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களைப் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இராம கிருஷ்ண  மடத்திலே கிறிஸ்துமஸ் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அவ்வப்போது அவர்களால் இதழ்களில் வெளியிடப் பட்டு வருகின்றன. சகிப்புத் தன்மை, நல்ல கருத்துக்களை பாராட்டும் தன்மை ஆகியவை இந்து மதத்தின் அடிப்படைப் பண்புகள் ஆகும்.

கடந்த சில வருடங்களாக சில  இந்துக்களும்  சகிப்புத் தன்மை இல்லாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அது இந்து மதத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டி வருகிறோம்,  இந்தப் போக்கை முக்கியமாக எதிர்க்கிறோம்.

சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இருந்த பிணக்கு முதிர்ச்சி இல்லாத சிந்தனையால் உருவானதே, அது தவறு என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்து இப்போது சிவா விஷ்ணு கோவில், ரஜினி ராஜா கோவில் என இரு பிரிவினரும் ஒரே கோவிலாக உள்ள கோவில்களே இப்போது அதிகமாக உருவாக்கப் படுகின்றன. சைவ வைணவப் பிணக்கு  ஒரு கருத்து மோதலாக இருந்ததே தவிர, இரத்தம் சிந்தும் போராக மாறவில்லை என்பது முக்கிய விடயம். அஹிம்சை முக்கியமான கொள்கையாக கருதப் பட்டது.

தேவிபிரியா சாலொமொனை பற்றி நான் இங்கே கருத்து தெரிவிப்பது முறையல்ல. அவர்  இங்கே பின்னூட்டங்களை இட்டு விவாத்திதில் கலந்து கொண்டால் அப்போது அவரை பற்றி கருத்து தெரிவிப்பது பொருத்தமாக் இருக்கும். அதே போல நான் இங்கே தமிழ் இந்து தளத்தையும் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.  



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 திருச்சிக்காரரே,
                      உலகில் உள்ள எந்த வழிபாட்டு முறைகளுமே ஒன்றையொன்று நிராகரித்தே வந்துள்ளன. இந்து மதமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏன் சைவமும் வைணவமும் ஒன்றையொன்று நிராகரித்ததில்லையா, கடவுளே இல்லை என சொல்லும் நாத்திகத்தை ஏற்றுக்கொள்வீர்கள் ( உங்களை சொல்லலை, ஏன்னா நீங்க எல்லா கடவுளையும் என்னால் வணங்க முடியும்ன்னு சொல்லியிருக்கீங்களே) ஆனால் இயேசு என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கும். ஐயா தயவு செய்து தமிழ் ஹிந்து தளத்துக்கு ஆதரவாக பேசாதீர்கள், அங்கு சகிப்புத்தன்மைக்கு இடமே இல்லை. நாங்கள் பொதுவாக கிறிஸ்தவத்துக்கு எதிராக உள்ள கருத்துக்களுக்கே பின்னூட்டம் அளிக்கிறோமேயன்றி இந்து மதத்தை தாக்கி எழுத நினைப்பதில்லை. தமிழ் இந்து தளத்தில் அப்பப்பா...... நினைக்கவே முடியாத அளவுக்கு எவ்வலவு அவதூறுகள் அதிலும் குறிப்பாக தேவிபிரியா சாலொமொனை நீங்கள் யாராவது தட்டி கேட்டதுண்டா????


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

ச‌கோத‌ர‌ர் திரு. chillsam அவ‌ர்களே,

தமிழ் இந்து த‌ளத்தைப் ப‌ற்றி நான் எதுவும் இங்கே குறிப்பிட‌வில்லையே.

அதில் த‌ங்க‌ள் பின்னூட்ட‌த்தை பதிவிடும் இந்து ம‌தத்தை சேர்ந்த‌   நண்ப‌ர்க‌ள்  இயேசு கிறிஸ்துவை தூஷ‌ன‌ம் செய்யும் க‌ருத்துக்க‌ளை எதிர்த்து ச‌கிப்புத் த‌ன்மை, கருத்துக்க‌ளை எழுதி இருந்த‌தையே நான் சுட்டிக் காட்டி இருக்கிரேன்.

 த‌மிழ் இந்து த‌ளம் உட்ப‌ட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் என்னுடைய‌ க‌ருத்துக‌ள் ம‌ட்டுற‌த்த‌ப் ப‌ட்டும், நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்டும் உள்ளன‌. என்னுடைய‌ ப‌திவுக‌ளில் உங்க‌ளுக்கு ஆட்சேப‌ணை இருந்தால், ம‌ன‌ வ‌ருத்த‌துட‌ன் நீங்க‌ள் அதை ப‌திவு இடுவ‌தை விட‌ ம‌ட்டுறுத்தி விடுவ‌து என‌க்கு ம‌கிழ்ச்சி அளிக்கும். 

//நீங்கள் என்னத்தான் புலம்பினாலும் மார்க்கப்பிரிவினைகளை சரிசெய்ய முடியாது; //

அது எளிய‌ காரிய‌ம‌ல்ல‌‌, ந‌ல்ல‌துக்குப் போகும் வ‌ழி மிக‌வும் குறுக‌லான‌து என்ப‌தை நாங்க‌ள் அறிவோம். ஆனால் சுவாமி விவேகான‌ந்த‌ர்,  காந்திய‌டிக‌ளார், பார‌தியார் .... இன்னும் கோடிக்க‌ண‌க்ககான‌ இந்திய‌ர்க‌ள் பின்ப‌ற்றிய‌  ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ ச‌ம‌த்துவ‌க் க‌ருத்துக்க‌ளின் வ‌ழி செல்ல‌ த‌ய‌ங்க‌ மாட்டோம்.

//ஒருவரை ஒருவர் தரம்தாழ்த்தி பேசக்கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்டவர் முறையிட அனுமதிக்கப்படவேண்டும்;//

அதை ந‌ம‌து த‌ள‌த்தில் பின்ப‌ற்றுகிறேன். யாருடைய‌ க‌ருத்தும் ந‌ம்முடைய‌ த‌ள‌த்திலே நிறுத்தி வைக்க‌ப் ப‌ட‌வில்லை.

//இயேசுகிறிஸ்து சிலுவையிலறைப்பட்டு துடித்துக்கொண்டிருந்தபோதும் இதுபோன்ற மூன்று குழுக்கள் இருந்தது;

இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்படக் காரணமானவர்கள்,
பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும்
அவருடன் தங்களை அடையாளப்படுத்தி இணைத்துக் கொண்டவர்கள்

இதில் நீங்கள் எந்த குழுவில் இருக்கிறீர்கள் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்..!//

இயேசு கிறிஸ்து ம‌ட்டும் அல்லாம‌ல், ‌யார் துன்ப‌த்தில் துடித்தாலும் அதை நான் ம‌ன‌ வ‌ருத்த‌த்துட‌ன் நோக்குப‌வ‌னேய‌ன்றி அதில் ம‌கிழ்வ‌டைப‌வ‌ன் அல்ல‌ என‌ப‌தை தெரிவித்துக் கொள்கிரேன். நான் எந்த‌க் குழுவிலும் இல்லை.

நான் யாருட‌னாவ‌து குழுவாக‌ இருப்பேன் என்றால் அது உண்மையுட‌ன் தான், அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாய்),ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌னும், சினேக‌ பாவ‌த்துட‌னும்),க‌ருண‌ ஏவ‌ ச‌ (க‌ருணை இத‌ய‌ம் உள்ள‌வ‌னாக‌),நிர்ம‌மோ நிர‌ஹ‌ங்காரா (திமிரும், அக‌ந்தையும் இல்லாத‌வ‌னாக‌) ஆகிய‌ க‌ருத்துக்க‌ளை உணர்ந்து, அத‌ன் ப‌டி செய‌ல் ப‌டுப‌வ‌ருட‌னே நான் குழுவாக‌ இருக்க‌ முடியும்.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//மெய் ஜோதியான இறைசக்தியை மறைத்து பொய்யான பல்வேறு ஆச்சாரங்களையும் சடங்குகளையும் ஏழை எளிய மக்களுக்குப் போதித்து அவர்களைத் தடுமாற வைத்ததால் ஏக இறைவன் அவர்களை தண்டித்துள்ளார்;இன்னும் அது தொடரும்..!//

//இது ம‌ட்டும‌ல்ல‌. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இது போல‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை வெளிப் ப‌டுத்துகின்ற‌ன‌ர். ந‌கைச் சுவைக்கு த‌னிப் ப‌குதி உருவாக்குவோம் //

திருவிளையாடல் திரைப்பட வசனத்தை மனப்பாடமாக அறிந்துள்ள நமக்கு எனது கருத்து நகைச்சுவையாகத் தோன்றுகிறதோ ?

அப்படியானால் தாங்கள் இதுவரை இறைவனின் திருவிளையாடல்களைக் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை போலும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு, இங்கே இதுவரை உங்களது கருத்துக்களைத் தணிக்கை செய்யாமல் பதிக்கிறோம்; நீங்களும் பொறுப்புடன்- நாகரீகமாக எழுதிவருகிறீர்கள்; அதற்காக நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்;

ஆனால் தமிழ் ஹிந்து தளத்துக்காக வக்காலத்து வாங்க முயற்சிக்காதிருங்கள்; ஏனெனில் அந்த தளமானது கிறிஸ்தவ மார்க்கத்தைக் காழ்ப்புணர்ச்சியுடன் தூஷித்துக் கொண்டிருப்பது வெளிப்படையான விஷயமாகும்;

அதற்கு சரியானதொரு உதாரணம்,எங்களது நியாயமான விளக்கங்கள் புறக்கணிக்கப்பட்டது தான்;சில சமயம் எங்களைக் குறித்து மற்றவர் எச்சரித்தார்கள், அவர்கள் இங்கேயும் வந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதீர்கள் என;

என்னைப் பொறுத்தவரை இந்து மார்க்கம் சம்பந்தமான கட்டுரைகளில் எந்த கருத்தையும் பதிக்கவில்லை;ஆனால் கிறிஸ்தவம் சம்பந்தமான தூஷணங்களுக்கு மட்டும் மறுப்பை மட்டும் தெரிவிக்க முயற்சித்தேன்;அதுவும் மறுக்கப்பட்டது;

நீங்கள் இங்கே பதித்திருக்கும் "கிறிஸ்தவ ஆதரவு" உதாரணங்களோ "பாவம்பா ரொம்ப தாக்காதே" என்பது போலவே இருக்கிறது;

நீங்கள் என்னத்தான் புலம்பினாலும் மார்க்கப்பிரிவினைகளை சரிசெய்ய முடியாது; ஒருவரை ஒருவர் தரம்தாழ்த்தி பேசக்கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்டவர் முறையிட அனுமதிக்கப்படவேண்டும்;

அவருக்காக வேறு யாராவது "பாவம் பயங்கரமா தாக்கிட்டாங்க" என்று சொல்லுவதும் பரியாசமே..!

இயேசுகிறிஸ்து சிலுவையிலறைப்பட்டு துடித்துக்கொண்டிருந்தபோதும் இதுபோன்ற மூன்று குழுக்கள் இருந்தது;

இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்படக் காரணமானவர்கள்,
பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும்
அவருடன் தங்களை அடையாளப்படுத்தி இணைத்துக் கொண்டவர்கள்

இதில் நீங்கள் எந்த குழுவில் இருக்கிறீர்கள் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

திருச்சிக் காரன் 7 October 2009 at 1:16 am
இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார்.

- ஜயராமன்Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people!

- திருச்சிக் கார‌ன்Quotes from the Bible (New Testament)://Matthew -10:32 Whosoever therefore shall confess me before men, him will I confess also before my Father which is in heaven.10:33 But whosoever shall deny me before men, him will I also deny before my Father which is in heaven.//

இந்த‌ வாச‌க‌ங்க‌ளின் அர்த்த‌ம் என்ன‌- என்னைக் கும்பிடாவிட்டால் ந‌ர‌க‌த்தில் போடுவேன் - என்று இதற்க்கு அர்த்த‌மா?

திருச்சிக் காரன் 7 October 2009 at 1:51 am இயேசு கிருத்து என்கிறவரோ என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகத்தில் பர்மெணென்டாக வாட்டுவேன் என்று மிரட்டுகிறார்.

- ஜயராமன்Jesus did not say so! This is the false probagation by evangelist to intimidate and convert innocent and naive people! - திருச்சிக் கார‌ன்Quotes from the Bible (New Testament):

//Matthew -25:41 Then shall he say also unto them on the left hand, Depart from me, ye cursed, into everlasting fire, prepared for the devil and his angels:

ஒரு மேற்க்கோளை இடும் போது ஒரு ப‌குதியை ம‌ட்டும் எடுத்து இட‌க் கூடாது.

(25.34‍ -39) அப்பொது ராஜா வ‌ல‌து ப‌க்க‌த்தில் நிற்ப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து,வாருங்க‌ள்… ராஜ்ஜிய‌த்தை சுத‌ந்த‌ரித்துக் கொள்ளுங்க‌ள். ப‌சியாய் இருந்தேன், என‌க்கு போஜ‌ன‌ங் குடுத்தீர்க‌ள்….. வ‌ஸ்த்திர‌ம் இல்லாம‌ல் இருந்தேன், என‌க்கு வ‌ஸ்த்திர‌ம் குடுத்தீர்க‌ள்…..அத‌ற்க்கு அவ‌ர்க‌ள் எப்போது உம்மைப் ப‌சியுள்ள‌வ‌ராக‌க் க‌ண்டு போஜ‌ன‌ங் குடுத்தோம்…. என்பார்க‌ள்.அத‌ற்க்கு ராஜா … மிக‌வும் சிறிய‌வ‌ரான‌ என் ச‌கொத‌ர‌னான‌ இவ‌ர்க‌ளில் ஒருவ‌னுக்கு நீங்க‌ள் எதை செய்தீர்க‌ளோ, அதை என‌க்கே செய்தீர்க‌ள்.25.41 அப்போது இட‌து ப‌க்க‌த்தில் நிர்ப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து ….. நித்திய‌ அக்கினியிலே போங்க‌ள்….பசியாய் இருந்தேன், என‌க்கு போஜ‌ன‌ம் கொடுக்க‌வில்லை…. தாக‌மாய் இருந்தேன், என் தாக‌த்தை தீர்க்க‌வில்லை…..

அதாவ‌து இந்த‌ உல‌க‌த்திலே நாம் வாழும் போது, பசியாக‌ இருந்த‌வ‌ருக்கு உணவிட்டு, துணியில்லாத‌வ‌ருக்கு துணி கொடுத்து உத‌வி செய்த‌வ‌ருக்கு சொர்க்க‌ம்.அடுத்த‌வ‌ர் க‌ஷ்ட‌ப் ப‌டும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ருக்கு நெருப்பு எரியும் ந‌ர‌க‌ம்‍ என்ப‌து தெளிவாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு உள்ளது.

“என்னைக் கும்பிடாவிட்டால் எல்லோரும் நரகம்” என்று கூறிய‌தாக‌ காட்ட‌ இதை OUT OF CONTEXT ல் போட்டு இருக்கிறார்க‌ள்.அடுத்த‌வ‌ர் க‌ஷ்ட‌ப் ப‌டும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ருக்கு நெருப்பு எரியும் ந‌ர‌க‌ம்‍ என்ப‌து தெளிவாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு உள்ளது.….. CONTINUED

-- Edited by chillsam on Wednesday 20th of January 2010 12:32:51 AM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

அருணகிரிநாதர், மணிவாசகர், அப்பர் பெருமான் போன்ற அடியார்களின் பாடல்களை தந்த ஆசிரியர்களுக்கு நன்றி. ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை. மேலும், நாமும் கிறிஸ்தவ/முகமதியர்களைப்போன்று மற்ற மதங்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் உள்ளது? சற்றே சிந்தியுங்கள்! திருவள்ளுவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ நம்மை அடுத்தவர்களை கேவலப்படுத்தும்படி சொல்லவில்லை!

நமச்சிவாய வாழ்க!!



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

Below is the comment by Mr. seenu

//சீனு

2 September 2009 at 5:05 pm

நம்பி,

//`நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை.//

இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை.//



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 


ச‌கோத‌ர‌ர்  SUNDAR அவ‌ர்களே

உங்க‌ளின் ஆர்வ‌த்தை பாராட்டுகிரேன்.

பெரியார் ம‌ட்டும் அல்ல‌, விவேகான‌ந்த‌ர், பார‌தியார் இப்ப‌டிப் ப‌ல‌ரும் இந்து ம‌த‌த்தை விம‌ரிசித்து உள்ளன‌ர். இந்து ம‌த‌த்தில் உண்மையை ஆராயும் க‌ருத்துக்க‌ள், ப‌குத்த‌றிவுக் க‌ருத்துக்க‌ள், ச‌மத்துவ‌க் க‌ருத்துக்க‌ளின் மேல், ப‌ல சுய‌ ந‌ல‌, மூட‌ ந‌ம்பிக்கை, சாதீய‌க் க‌ருத்துக்க‌ளை குவித்து விட்ட‌ன‌ர்.



பெரியார் விவேகான‌ந்த‌ர், பார‌தியார்  ஆகியோரின் உத‌வியுட‌னே இந்தியாவின் முக்கிய‌ ம‌த‌மான‌ இந்து ம‌த‌த்தை ப‌குத்த‌றிவுப் பாதைக்கு திருப்புவோம். என்னுடைய‌ த‌ளத்துக்கு வ‌ருகை தாருங்க‌ள் , ச‌ரியான‌  இந்து ம‌த‌ம் என்ன‌ என்ப‌து ப‌ற்றி  அங்கே ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் வெளியிட‌ப் ப‌டும்.

http://thiruchchikkaaran.wordpress.com/

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

அன்பிற்குரிய‌ ‌ ச‌கோத‌ர‌ர் திரு. chillsam அவ‌ர்களே,

ஆன்மீக‌ ஆராய்ச்சியில் அதிக‌ ஈடுபாடு உள்ள‌வ‌ர்களாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு ச‌முதாய‌மாக‌ அமைக்க‌ப் ப‌ட்டு இருக்க‌ கூடும். வாழ்க்கையில் ப‌ணம் சேர்ப்ப‌தை குறிக்கோளாக‌ வைக்காம‌ல், எளிய வாழ்க்கை வாழ் ந்து எல்லோருக்கும் எடுத்துக் காட்டாக‌ வாழ்வ‌தே அவ‌ர்க‌ள் வாழ‌க்கை முறையாக‌ அமைக்க‌ப் ப‌ட்ட‌து. காசுக்காக‌ அவ‌ர்க‌ள் உழைப்ப‌து அனும‌திக்க‌ப் ப‌ட‌வில்லை. ஒரு பிராம‌ண‌ன் எவ்வ‌ள‌‌வு க‌ஷ்ட‌ப் ப‌ட்டாலும் அவ‌ன் பொருளீட்டும் செய‌ல் செய்ய‌ அனும‌திக்க‌ப் ப‌ட‌வில்லை.

இந்த‌ வ‌கையிலே அவ‌ர்க‌ள் மிக‌வும் க‌ஷ்ட‌ப் ப‌ட்டுள்ள‌னர். பிராம‌ண‌ வ‌குப்பை சேர்ந்த‌ ஒரு இளைங்க‌ன் வ‌றுமையைத் தீர்க்க‌ ம‌ண்டியிலே மூட்டை தூக்கும் வேலை செய்ய‌ சென்றான். ம‌திய‌ நேர‌ம் அங்கே வ‌ந்த‌ ம‌ண்டி உரிமையாள‌ர். அட‌டே நீ வீட்டுக்குப் போப்பா, அவ‌ருக்கு 5 கிலோ அர்சி குடுத்து அனுப்பி விடுங்க‌ள் என்று கூறிய‌தை நான் நேரில் பார்த்திருக்கிரேன். நான் கூறுவ‌து முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சி. அதே 300 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், இதை விட‌ அதிக‌மான‌ க‌ட்டுப் பாடுக‌ள் இருந்த‌ன. வேறு தொழில் செய்ய‌ பிராம‌ண‌ர் த‌டை செய்ய‌ப் ப‌ட்டு இருந்த‌ன‌ர். எவ்வ‌ள‌வவு க‌ஷ்ட‌ம் வ‌ந்தாலும் ச‌ரி ‍‍ ச‌மூக‌க் க‌ட்டுப் பாடு எல்லோர் மேலும் இருந்த‌து.

எங்க‌ள் பகுதியிலே வ‌சித்த‌ ஒரு புரொகித‌ர், ஒரே வேட்டி, தின‌மும் அதைத் துவைத்து நாலு தூணில் அதைக் க‌ட்டி ந‌டுவிலே அது காயும் வ‌ரை உட்கார்ந்து இருந்த‌தை நானும் ந‌ண்ப‌ர்க‌ளும் பார்த்து கேலி செய்து இருக்கிரோம்.

எல்லொருக்கும் பிர‌ச்சினை இருக்கிர‌து. உங்க‌ள் கண்ணூக்கு கோடீச்வ‌ர‌ பார்ப்ப‌ன‌ர் ம‌ட்டும் தெரிந்து இருக்க‌லாம். முத‌லில் யாரையும் வெறுக்காம‌ல், எல்லொரையும் அன்பு செய்யும் ம‌ன நிலையை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும். சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி , ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியை ம‌ன‌துக்குள் புக‌ அனும‌தித்தால் உண்மையை உணர‌ முடியாது.

//வர்க்கரீதியிலான விடுதலையைவிட மார்க்கரீதியிலான விடுதலையே உடனடி தேவை;//

இது என்ன‌ கொள்கையோ! ஏழை பசியோடு இருக்கும் போது அவ‌னுக்கு உண‌வு கொடுப்ப‌து என‌க்கு உணவு கொடுப்ப‌து போன்ற‌து என்றார் இயேசு கிறிஸ்து. மார‌க்க‌ம் மார்க்க‌ம் என்ற் மார்க்க‌ வெறியிலே இயேசுவின் கொள்கைக‌ளைக் காணாம‌ல் போட்டு விட‌தீர்க‌ள்.

//இறைவன் கொடுத்துள்ள பகுத்தறிவை பயன்படுத்தி சுதந்தரமாகச் சிந்தித்து அவரவர் விருப்பப்படி உண்மையான தெய்வத்தைத் தொழ அனுமதிக்கும் போதே இது நிகழும்//

ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் உள்ள‌ சொந்த‌ பகுத்த‌றிவின் அடிப்ப‌டையிலே ஆராய்வோம். இது வ‌ரையிலே யாரும் எந்த‌க் க‌ட‌வுளையும் காட்ட‌வில்லை. ஆனாலும் அவ‌ர‌வ‌ர் விரும்பின‌ தெய்வ‌ங்க‌ளை அமைதியாக‌ வ‌ண‌ங்கிக் கொள்ளுங்க‌ள், பிற‌ர் வ‌ணங்கும் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்ந்து உல‌க‌ அமைதியை கெடுக்க‌ வேண்டாம் என்ப‌து ந‌ல்ல‌ கொள்கையே.

//இதுபோன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதுங்கள்,நானும் தோள் கொடுப்பேன்..!//
தைரிய‌மாக‌ சிந்திக்கும் பாதைக்கு வாருங்க‌ள். எல்லா மூட‌ ந‌ம்பிக்க‌கைக‌ளும் ம‌க்க‌ளுக்கு புரியும் வ‌ண்ண‌ம் வெளிக் காட்ட‌ப் ப‌டும்.

//மெய் ஜோதியான இறைசக்தியை மறைத்து பொய்யான பல்வேறு ஆச்சாரங்களையும் சடங்குகளையும் ஏழை எளிய மக்களுக்குப் போதித்து அவர்களைத் தடுமாற வைத்ததால் ஏக இறைவன் அவர்களை தண்டித்துள்ளார்;இன்னும் அது தொடரும்..!//

இது ம‌ட்டும‌ல்ல‌. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இது போல‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை வெளிப் ப‌டுத்துகின்ற‌ன‌ர். ந‌கைச் சுவைக்கு த‌னிப் ப‌குதி உருவாக்குவோம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// த‌மிழ் இந்து த‌ளத்தில் இந்துக்க‌ள் யாராவ‌து கிருஸ்துவை இக‌ழ்ந்தாலோ, கிருச்த‌வ‌ர்க‌ளை திட்டினாலோ, பல‌ இந்துக்க‌ள் அவ‌ர்க‌ளை க‌ண்டித்து உள்ள‌னர் //

அன்பான நண்பர் அவர்களுக்கு மேற்கண்ட தங்களது கருத்துக்கு ஆதாரமாக ஒரு தொடுப்பையாவது இங்கே பகிர்ந்துக் கொள்ளமுடியுமா?

தமிழ் ஹிந்து தளத்தைக் குறித்துப் பேச எனக்கு ஒன்றுமில்லை;ஆனாலும் மாற்று மதத்தவரை தூஷிப்பதையே தொழிலாகவும் விளக்கத்தையும் புறக்கணிக்கும் மாண்பையும் செவ்வனே நிறைவேற்றும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்..!

நாங்கள் அங்கு வந்து எழுதியிருக்காவிட்டால் ஒன்றும் சோபித்திருக்காது என்பது மட்டும் உண்மை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


திருச்சிக்காரன்:
//பிராம‌ண‌ர்க‌ள் என்று சொல்ல‌ப் ப‌டும் பிரிவின‌ரிலும் ப‌ல‌ர் உண‌வுக்கே, துணிக்கே பிச்சை எடுக்கும் நிலையிலே இருந்த‌ன‌ர். அப்ப‌டி சூழ்ச்சி செய்து ஆட்டிப் ப‌டைப்ப‌வ‌ராக‌ இருந்தால், சோற்றுக்கு பிச்சை எடுத்து வாழும் எளிய‌ வாழ்க்கை நிலைக்குக்கு எதற்கு அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை வைத்திருந்திருக்க‌ வேண்டும்?//

ஆரம்பத்திலிருந்தே உழைத்து பிழைத்திருந்தால் பிச்சை எடுக்கும் நிலை வந்திருக்காது;அவர்கள் நீங்கள் கூறுவதுபோன்ற பரிதாப நிலையிலிருப்பது போலத் தெரியவில்லை;அப்படியிருந்தாலும் அது அவர்களே ஏற்படுத்திக் கொண்டதல்ல;

மெய் ஜோதியான இறைசக்தியை மறைத்து பொய்யான பல்வேறு ஆச்சாரங்களையும் சடங்குகளையும் ஏழை எளிய மக்களுக்குப் போதித்து அவர்களைத் தடுமாற வைத்ததால் ஏக இறைவன் அவர்களை தண்டித்துள்ளார்;இன்னும் அது தொடரும்..!

திருச்சிக்காரன்:
// பண்ணையார்க‌ள் தங்க‌ள் வய‌லில் வேலை செய்ய //

ஏன் பிராமணர்களை அடிமைப்படுத்தவில்லை என்பதே விவகாரம்;


திருச்சிக்காரன்:
// தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அநீதி இழைக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது ப‌ல‌ ச‌லுகைக‌ள் அளிக்க‌க‌ப் ப‌ட்டு வ‌ருகின்றன //

வர்க்கரீதியிலான விடுதலையைவிட மார்க்கரீதியிலான விடுதலையே உடனடி தேவை; இறைவன் கொடுத்துள்ள பகுத்தறிவை பயன்படுத்தி சுதந்தரமாகச் சிந்தித்து அவரவர் விருப்பப்படி உண்மையான தெய்வத்தைத் தொழ அனுமதிக்கும் போதே இது நிகழும்;

கத்தியின்றி இரத்தமின்றி மாயப் பிசாசையும் பயத்தையும் தோஷத்தையும் போதித்து படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்களை அடிமைப்படுத்திவிட்டு அவர்கள் முதுகில் சவாரி செய்த கொடுமை இனி நிகழக் கூடாது;

இதுபோன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதுங்கள்,நானும் தோள் கொடுப்பேன்..!



-- Edited by chillsam on Tuesday 19th of January 2010 01:53:02 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

பெரியார் மதகாரர்களால் எழுதப்பட்டுள்ள இந்து மதம் பற்றிய சமாச்சாரங்கள் படிக்கவே கூசும் அளவுக்கு ஆபாசம் நிறைந்ததாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்க்கான சரியான விளக்கம்  கொடுத்து கட்டுரை எழுதுங்கள் எங்களுக்கும் இந்து மதம் பற்றி அறிந்துகொள்ள எதுவாக இருக்கும்.
 
எங்களை பொறுத்தவரை யாரையும் பெரியதாக குறை கூறிஎங்கும் எழுதுவது இல்லை அவ்வாறிருக்க கிறிஸ்த்தவத்தின் மேல் அர்த்தமற்ற குற்றசாட்டுகளை அள்ளி வீசுவது என்பது சரியான ஒரு முறை  அல்ல.
 
நல்லவர் தீயவர் எல்லா   மதங்களிலும் உள்ளனர். ஓரிருவர் அடிப்படையில் எல்லோரையும் நியாயம் தீர்ப்பது சரிஅல்ல!
 
நாங்களும் இந்தியர்களே எங்களுக்கும் தேசபற்று மற்றும்  தேசம்  நன்றாக  இருக்கவேண்டும்  என்ற தீராத வாஞ்சை  உண்டு. எங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் பெற்ற இன்பம் எல்லோரும் பெறவேண்டும் என்ற நோக்கில் இயேசுவைப்பற்றி எல்லோருக்கும் சொல்லிவருகிறோம். எல்லா மனிதர்களும்  அறிவுள்ளவர்களே அவரவர் நன்மை தீமைகளை அராய்ந்து பார்த்து அல்லது  ஆண்டவரால்  எதாவது ஒருவழியில் தொடப்பட்டுதான் இயேசுவை ஏற்றுக்கொள்கின்றனர். உங்களை ஆண்டவர்   தொட்டால்  நீங்களும் அவரை  நிச்சயம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  இங்கு போட்டி பொறாமை என்ற கருத்தே இல்லை. 
 
காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒரு அய்யனார் கோவிலுக்கோ அல்லது இசக்கியம்மன் கோவிலுக்கோ இரவு பன்னிரண்டு மணிக்கு யாரும் போய்வர முடியுமா?  கிராமங்களில் சாமி ஆடிவரும்போது எதிரே போக கூட பயப்படுவார்கள் ஏனென்றால் அடித்துவிடுமாம். ஆனால் இயேசுவின் தேவாலயத்துக்கு எத்தனை மணிக்கு போனாலும் உங்களால் பயமின்ற போய்வர முடியும்.  நமக்காக  சிலுவையில் தொங்கும் அவரை நினைத்தாலே உள்ளத்தில் எல்லையில்லா இன்பம் மலரும் பயம்விலகும்.
 
கருணை உள்ளம் கொண்டவரே கடவுள் கண்டவுடன் அடிப்பவர் கடவுளல்ல அதற்கு வேறு பெயர்!




-- Edited by SUNDAR on Tuesday 19th of January 2010 04:07:28 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

ச‌கோத‌ர‌ர்  Joseph அவ‌ர்களே,
சந்த்தித‌ற்க்கு ம‌கிழ்ச்சி.

நான் கூற‌ வ‌ருவ‌தை நீங்க‌ள் ச‌ரியாக‌ப் புரித‌ல் செய்ய‌ கோருகிறேன்.

 த‌மிழ் இந்து த‌ளத்திலே இயேசு கிறிஸ்துவை அதிக‌மாக‌ புக‌ழ்ந்து எழுதிய‌து நான் தான்.  யார் வேண்டுமானாலும் அந்த‌ த‌ளத்திற்க்கு சென்று இதை ச‌ரி பார்த்துக் கொள்ள‌லாம்.

அத‌னால் என்னை க்ரிப்டோ கிருத்துவ‌ன் என‌வும், மிசின‌ரிக‌ளிட‌ம் காசு வாங்கிய‌வ‌ன் என‌வும் ப‌ல‌ரும் திட்டி உள்ள‌ன‌ர்.

நான் யாரையும் வெறுக்க‌வில்லை. அத்வேஷ்டா (வெறுப்பிலாம‌ல்) என்ப‌தை ப‌ல‌முறை எழுதியுள்ளென். ப‌ல்வேறு மார்க்க‌த்தின‌ரும் இணைவ‌தை வ‌ற்புறுத்தி எழுதி உள்ளேன். ம‌த‌ அடிப்ப‌டையிலே ஒருவ‌ர் கூட‌ இக‌ழ‌ப் ப‌ட‌க் கூடாது, தாக்க‌ப் ப‌ட‌க் கூடாது என்ப‌தே ந‌ம் கொள்ககை.

எந்த‌ மார்க்க‌த்திலே வெறுப்புக் க‌ருத்துக்க‌ள் இருந்தாலும் அதை விட்டு விடுங்க‌ள் என்கிர‌ ந‌ம்முடைய‌ கோரிக்கை , கொள்கை முக்கிய‌மான‌து.

 மிசின‌ரிக‌ளோ, யாரோ பிற‌ மார்க்க‌த்தின‌ர் வ‌ண்ங்கும் தெய்வ‌ங்க‌ளை பேய்க‌ள் என்று இக‌ழ்ந்து, பிற‌ மார்க்க‌த்தை எல்லாம் இல்லாம‌ல் செய்து த‌ன் ஒரு மார்க்க‌ம் ம‌ட்டுமே உண்மையான‌து என்று பிர‌ச்சார‌ம் செய்வ‌தால் ம‌க்க‌ளிடையே வெறுப்பு உண‌ர்வு உண்டாகிர‌து.  அதை சுட்டிக் காட்டுவ‌து என் க‌ட‌மை.

யூத‌, கிரிஸ்த‌வ‌, இசுலாமிய‌ மார்க்க‌ங்க‌ள் அனைத்தும் ம‌த்திய‌க் கிழ‌க்கு ஆசிய‌ பாலைவ‌ன‌ப் ப‌குதியில் உருவான‌வையே,பால‌வ‌ன‌ வாழ‌க்கையின் க‌டுமை அவ‌ற்றில் க‌டுமையான‌  க‌ருத்துக்க‌ளை உருவாக்கியுள்ள‌து. I will detail in my articles.

த‌மிழ் இந்து த‌ளத்தில் இந்துக்க‌ள் யாராவ‌து கிருஸ்துவை இக‌ழ்ந்தாலோ, கிருச்த‌வ‌ர்க‌ளை திட்டினாலோ, பல‌ இந்துக்க‌ள் அவ‌ர்க‌ளை க‌ண்டித்து உள்ள‌ன‌ர்.

Please visit our blog thiruchchikkaaran.wordpress.com

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

திருச்சிக்காரரே, தங்களை இத்தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்க உதவி செய்த சகோ.சில்சாம் அவர்களுக்கு நன்றி, நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். தமிழ் ஹிந்து தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மறுப்போ விளக்கமோ அளிக்க முயன்றால் எதையுமே யோசிக்காமல் என் பெயரை பார்த்தவுடனே நீக்குகிறார்கள். சரி இது போன்ற விவாதங்களில் இனிமேலாவது எனது கருத்துக்களை தடையின்றி கூறலாம் என நினைக்கிறேன்.
ஐயா, மற்ற மதங்களை அழித்துவிட்டு கிறிஸ்தவம் வளருகிறது என்கிறீர்கள். உங்களுக்கு போர்த்துகீசியர்களின் கோவா இன்குவிசிஷன், ஸ்பானியர்களின் இன்குவிசிஷன் போன்றவை மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன. இன்குவிசிஷன்கள் எனும் மத விசாரணை, துன்புறுத்தல்கள் தவறு தான், அது கிறிஸ்தவத்திற்கு ஏற்புடையதல்ல. அவை கிறிஸ்தவத்தின் வரலாற்று பக்கங்களில் அழியாத கறைகளாகவே உள்ளன. நீங்கள் கூறும் வெள்ளையர்கள் அஃதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு மதபிராசரம் செய்து அப்படியே ஆண்டு கொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு உதவியாக செயல்பட்டனர் என எதை ஆதாரமாக வைத்து கூறுகிறீர்கள். பல ஆங்கிலேய மிஷனரிகளை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷார் விரும்பவில்லை, பல இடையூறுகளை தருவித்தனர். ஒரு சிலர் வந்த கப்பல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். சிவகாசி பகுதியில் வசித்த ராக்லேண்ட் எனும் ஆங்கிலேயர் தொப்பியில் கூழ் வாங்கி குடித்ததாக வரலாறு உண்டு, இங்கு வந்த வில்லியம் கேரி, மார்ஷ்மேன், போன்றோர் ஆங்கிலேய அரசாங்கத்தின் உதவியின்றிதான் பணி செய்தனர். யாரும் நாடு பிடிக்கவோ ஆட்சி செய்த வெள்ளைக்காரனுக்கு வெண்சாமரம் வீசவோ இல்லை.
இவ்வாறாக மிஷனரிகளை கொச்சைப்படுத்துவதை முதலில் விடுங்கள்.
ஏன் ஐயா, இந்தியாவில் குற்றங்கள் புரியும் எத்தனையோபேர் இந்துக்களாக இருக்கிறார்கள் என்பதால் இந்து மதத்தையோ அல்லது அனைத்து இந்துக்களையோ குறை கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது நீங்கள் கிறிஸ்தவர்களை குறை கூறுவது.
மதம் மாறுவது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இந்திய கிறிஸ்தவர்கள் அனைவருமே பணத்துக்கு மதம் மாறியவர்கள் என கொச்சைப்படுத்தி அவர்களை பிச்சைக்காரர்கள் போல சித்தரிக்கிறீர்கள். வெறுப்பியல் கருத்துக்கள் அது இது, பாலைவன மதம் என நீங்கள் முன்பு எழுதியதாக ஞாபகம். எத்தனையோ பேர் தமிழ் ஹிந்து தளத்தில் கிறிஸ்தவத்தை இழிவாக தானே  எழுதுகின்றனர்.


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

//இயேசுகிறிஸ்துவை நீங்கள் மனதாரத் தொழுவேன் என்று சொல்லுவது ஆகாத காரியமாகவே தோன்றுகிறது;

ஏனெனில் முருகனைத் தொழுதவர் மற்றவரைத் தொழ அனுமதிக்கப்படுவதில்லை;

அதிலும் மனதாரத் தொழுவதாகச் சொல்லுவது எப்படி சாத்தியமாகும்?//


ஏனெனில் முருகனைத் தொழுதவர் மற்றவரைத் தொழ அனுமதிக்கப்படுவதில்லை;//

இந்த‌க் க‌ருத்து உண்மைய‌ல்ல‌. உண்மை என்ன‌ என்று தெரியாம‌ல் சொல்ல‌ப் ப‌ட்ட‌து.

முருக‌னை வ‌ண‌ங்கிக் கொண்டே, அய்ய‌ப்ப‌னை வ‌ண‌ங்கிக் கொண்டே, இராம‌னை வ‌ண‌ங்கிக் கொண்டே இயேசு கிறிஸ்துவை வ‌ண‌ங்க‌ எந்த‌ த‌டையும் இல்லை,

இராம‌ரையும் இயெசு கிறிஸ்துவையும் அருக‌ருகெ வைத்து வ‌ணங்க‌க் கூட‌ இந்து ம‌தத்தில் எந்த‌ த‌டையும் இல்லை, இன்னும் சொல்ல‌ப் போனால் அது வூக்குவிக்க‌ப் ப‌டுகிற‌து.  

முருக‌னை வ‌ண‌ங்கிக் கொண்டே, இயேசு கிறிஸ்துவை ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ணங்க‌ முடியும். இதை உங்க‌ளின் இப்போதைய‌ ம‌ன‌ நிலையில் புரித‌ல் செய்ய‌ இய‌லாது.


த‌ன்னுடைய‌ மார்க்க‌ம் ம‌ட்டுமே உண்மையான‌ மார்க்க‌ம், பிற‌ மார்க்க‌ங்க‌ளை எல்லாம் க‌ண்டித்து ஒழிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ற்கால‌க் க‌ருத்து ப‌ல‌ரின் மூளையில் திணிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து. அந்த‌ நிலைப் பாட்டிலே, அன்பும், ச‌கிப்புத் த‌ன்மையும் வெளிப்ப‌டுத்த‌ப் ப‌ட‌ முடியும் என்ப‌தை, ந‌ம்புவ‌தே க‌டின‌மாகி விடுகிற‌து. க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில், செய‌ல் பாட்டின் அடைப்ப‌டையில் ஒருவ‌ரை அணுகுவ‌து, ம‌ரியாதை செய்வ‌து என்ப‌தை புரித‌ல் செய்வ‌து க‌டின‌மாகி விடுகிற‌து .  

நம் த‌ள‌த்திலே வெளி வ‌ரும் க‌ட்டுரைக‌ளை தொட‌ர்ந்து ப‌டிக்குமாறு கோருகிறேன்




__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

//இயேசுகிறிஸ்துவை நீங்கள் மனதாரத் தொழுவேன் என்று சொல்லுவது ஆகாத காரியமாகவே தோன்றுகிறது;

ஏனெனில் முருகனைத் தொழுதவர் மற்றவரைத் தொழ அனுமதிக்கப்படுவதில்லை;

அதிலும் மனதாரத் தொழுவதாகச் சொல்லுவது எப்படி சாத்தியமாகும்?//


ஏனெனில் முருகனைத் தொழுதவர் மற்றவரைத் தொழ அனுமதிக்கப்படுவதில்லை;//

இந்த‌க் க‌ருத்து உண்மைய‌ல்ல‌. உண்மை என்ன‌ என்று தெரியாம‌ல் சொல்ல‌ப் ப‌ட்ட‌து.

முருக‌னை வ‌ண‌ங்குப‌வ‌ர், அய்ய‌ப்ப‌னை வ‌ண‌ங்குப‌வ‌ர், இராம‌னை வ‌ண‌ங்குப‌வ‌ர் இயேசுவை வ‌ண‌ங்க‌ எந்த‌ த‌டையும் இல்லை, ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ணங்க‌ முடியும். இதை உங்க‌ளின் இப்போதைய‌ ம‌ன‌ நிலையில் புரித‌ல் செய்ய‌ இய‌லாது.

த‌ன்னுடைய‌ மார்க்க‌ம் ம‌ட்டுமே உண்மையான‌ மார்க்க‌ம், பிற‌ மார்க்க‌ங்க‌ளை எல்லாம் க‌ண்டித்து ஒழிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ற்கால‌க் க‌ருத்து ப‌ல‌ரின் மூளையில் திணிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து. அந்த‌ நிலைப் பாட்டிலே அன்பும், ச‌கிப்புத் த‌ன்மையும் வெளிப்ப‌டுத்த‌ப் ப‌ட‌ முடியும் என்ப‌தை ந‌ம்புவ‌தே க‌டின‌மாகி விடுகிற‌து. க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில், செய‌ல் பாட்டின் அடைப்ப‌டையில் ஒருவ‌ரை அணுகுவ‌து, ம‌ரியாதை செய்வ‌து என்ப‌தை புரித‌ல் செய்வ‌து க‌டின‌மாகி விடுகிற‌து .  

நம் த‌ள‌த்திலே வெளி வ‌ரும் க‌ட்டுரைக‌ளை தொட‌ர்ந்து ப‌டிக்குமாறு கோருகிறேன்


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

அன்பிற்குரிய‌ ‌ ச‌கோத‌ர‌ர் திரு. chillsam அவ‌ர்களே,

ம‌த‌ வெறி, ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி, சாதி வெறி,‌ சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி ஆகிய‌வ‌ற்றை விட்டு விட்டு, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை விட்டு, அன்புக் க‌ருத்துக்க‌ளை கைக் கொள்வதாலேயே ம‌னித‌ ச‌முதாய‌ம் நிலைத்து நிற்கும்.

ம‌த‌, இன‌, மொழி, சாதி அடிப்ப‌டையில் ம‌க்க‌ளை பிரிப்ப‌தற்க்கல்ல‌, அன்பின் அடிப்ப‌டையில் ம‌க்க‌ளை ஒன்றினைப்ப‌த‌ற்க்கே நாம் உழைக்கிரோம்.

பிராம‌ண‌ர்க‌ள் என்று சொல்ல‌ப் ப‌டும் பிரிவின‌ரிலும் ப‌ல‌ர் உண‌வுக்கே, துணிக்கே பிச்சை எடுக்கும் நிலையிலே இருந்த‌ன‌ர். அப்ப‌டி சூழ்ச்சி செய்து ஆட்டிப் ப‌டைப்ப‌வ‌ராக‌ இருந்தால், சோற்றுக்கு பிச்சை எடுத்து வாழும் எளிய‌ வாழ்க்கை நிலைக்குக்கு எதற்கு அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை வைத்திருந்திருக்க‌ வேண்டும்? பிராம‌ண‌ர்க‌ளில் ஜாதி உண‌ர்வு உடைய‌ ப‌ல‌ரை நான் ச‌ந்தித்து இருக்கிறேன், அதே நேர‌ம் சாதி உண‌ர்வு இல்லாத‌ ப‌ல‌ரையும் ச‌ந்ததித்து இருக்கிறென்.

பண்ணையார்க‌ள் தங்க‌ள் வய‌லில் வேலை செய்ய‌ எதிர்ப்பு காட்ட‌ முடியாத‌ நிலையில் உள்ள வேலையாட்க‌ளை பெற, சாதிய‌ முறையை ‌ உப‌யொகித்துக் கொண்ட‌ன‌ர். பிராம‌ண‌ர்க‌ள் மீது த‌வ‌று இருக்கிர‌து. அதே போல‌ எல்லொர் மீதும் த‌வ‌று உள்ள‌து. இதில் பிராமண‌ர்க‌ள் என்று இப்போது த‌ங்க‌ளை அழைத்துக் கொள்ப‌வ‌ரை ம‌ட்டும் க‌ட்ட‌ம் க‌ட்டுவ‌து ச‌ரிய‌ல்ல‌‌. நான் இதை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவேன். அவர்க‌ள் திருத்திக் கொள்ள‌ வேண்டிய‌தை நாம் எடுத்துக் காட்ட‌லாம்.

நாம் எல்லோரும் சேர்ந்துதான் வாழ‌ வேண்டும், சேர்ந்துதான் வாழ‌ முடியும். எனவே குறுகிய‌ எண்ண‌ங்க‌ளை விட்டு ஒன்றிணைவோம். தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அநீதி இழைக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது ப‌ல‌ ச‌லுகைக‌ள் அளிக்க‌க‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. இன்னும் ப‌ல‌ ச‌லுகைகளை அளிக்க‌ப் ப‌ட்டு அவ‌ர்க‌ளின் வாழ்வை வ‌ளப்ப‌டுத்த‌ப் ப‌ட‌ வேண்டும். எல்லோரும், ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌மாக‌ ஒன்றிணைவோம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// The concept – TO GIVE MORE PRIORITY TO THE SPRITUAL LIFE AND LESS INTEREST ON MATERIAL GAINS- can still be followed //

அற்புதமான இந்த வரிகளுக்காக நண்பருக்கு நன்றி;

வந்தேறிகளோ,ஆளவந்தாரோ,இங்கிருந்தவரோ நம்மை 2000 வருடத்துக்கு மேலாக ஆட்டிப்படைத்தவர்;

தமக்குத் தோன்றியவர்களை, வேண்டியவர்களை, உதவியவர்களை பிராமணர்களாக மதம் மாற்றியவர்கள்;

அதாவது வெறுமனே ஒரு நூலை மாட்டிவிட்டு 'இன்று முதல் நீ பிராமணன்' என்று அறிவித்துவிடுவது;

எனவே "பூணூல் போட்டவனெல்லாம் பிராமணனல்ல" எனும் வழக்குச் சொல்லும் வந்தது;

அவர்களது நோக்கமே வணிகம் தான்;அதாவது எளிதில் ரொம்ப கஷ்டப்படாம நிறைய சம்பாதித்து தன்னைச் சுற்றியிருப்பவர் மீது ஆதிக்கம் செலுத்துவது; அதற்கு அவர்களுக்கு இருந்த இயல்பான நுண்ணறிவும் தோல் நிறமும் அதிகமாகவே உதவியது;

அன்றைக்கு சம்பாதிக்க ஆன்மீகம் உதவியது என்றால் இன்றைக்கு பல்வேறு தொழில்கள் உதவுகிறது;

உண்மையான நாத்திகர்கள் பிராமணர்களே; ஏனெனில் விக்கிரகமாகிய கல்லை எந்த பிராமணனும் மதிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை;

எனவே தான் நமக்கு புனிதமாகத் தெரியும் சாமி விக்கிரக‌த்துக்கு அருகிலேயே "தப்பு" செய்கிறான்;

விக்கிரகமாகிய அந்த கல்லைத் தொட்டுக் கழுவி... ஆடை உடுத்தும்... மாபெரும்(..!?) பணியிலிருக்கும் ஒரு அந்தணனுடைய முகத்தைப் பார்த்தாலே அந்த பக்தி வினயம் தெரிந்துவிடும்;

அவனுக்குத் தெளிவாகத் தெரியும், அந்த விக்கிரகத்தைத் தான் வணங்கப்போவதில்லை, வணங்கப்போகும் யாரோ ஒருவனுக்காக அலங்கரிக்கிறோம், எவ்வளவு சிரத்தையுடன் அலங்கரித்தால் பக்தி வருமோ அவ்வளவும் கூட்டம் சேரும், பணமும் வரும்;

ஆனாலும் அன்றாடம் பிறர் முகம் பார்த்து (விக்கிரகமாகிய கல்லைக் காட்டி..!) பிழைக்கும் இந்த இழிதொழிலை விட்டு தன் தலைமுறையினரை மேம்படையச் செய்ய நினைத்தவன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து ஆபீஸர் ஆக்கிவிட்டான்;

தற்போதும் ஆதிக்கமும் தொடருகிறது; தொழிலும் தொடருகிறது; இரட்டை வருமானம்..!

இந்த சூழ்ச்சிக்கு மாற்று மதத்தவரால் பங்கம் வந்து தன் பிழைப்பு கெட்டுவிடும் போலிருக்கும் போதெல்லாம் மற்ற சகோதரர்களை அவர்களுக்கு மோதிக் கொள்ளத் தூண்டிவிட்டு இரத்தம் குடிக்கும் காட்டேறிகளே இந்த (காவி) பூஜாரி கூட்டம்..!



-- Edited by chillsam on Monday 18th of January 2010 11:00:38 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//...அரிச்ச‌ந்திர‌ன், சிர‌வ‌ண‌ன்,இராம‌ன், காந்தி, இயேசு கிறிஸ்து, புத்த‌ர், அனும‌ன், மாஹாவீர‌ர் உள்ளிட்ட‌ தியாக‌ செம்ம‌ல்களை...//

நண்பரே, சிறந்த கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்; உங்களுடைய கருத்துக்களை மதிக்கிறேன்; ஆனாலும் "கோணியில் க‌ல்லைக் கட்டி அடிப்பது" என்பார்களே அதுபோல பொத்தாம் பொதுவாக சொல்லுகிறீர்களே..!

முழுவதும் மனிதர்களாகப் பிறந்து தெய்வாம்சத்துடன் வாழ்ந்தவர்கள், தெய்வப் பிறவிகள், காவிய நாயகர்கள் என கலந்து சொல்லுவது சரியல்ல;

உதாரணமாக யுகங்களைக் கடந்து நிற்கும் தலைவர்களை மிகச் சாதாரணமாக பொதுவில் வைத்துக் குறிப்பிடுவது எப்படி சரியாக இருக்கும்?

எம்ஜிஆர்,சிவாஜி என்றால் அது பொருத்தமான காலக்கட்டத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிடுவதாகும்; 'எம்ஜிஆரும் தனுஷும்' போல என்றால் வருத்தமாக இருக்குமல்லவா?

உங்கள் கருத்தின் அடிப்படையிலும் இந்த தொடுப்பின் அடிப்படையிலும் சில காரியங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்;

நீங்கள் கடவுளை நம்பவில்லை; ஆனால் கடவுளை நம்பும் எல்லோரையும் மதிக்கிறீர்கள்; நல்ல காரியங்களைச் சொல்லிச் சென்ற சான்றோரின் கருத்துக்களை கடைபிடிப்பதோடு அவர்களை வணங்கவும் ஆயத்தமாக இருக்கிறீர்கள்;

வணங்குவதோ தொழுவதோ பின்பற்றுவதோ உண்மையின் அடிப்படையில் இருத்தல் வேண்டுமல்லவா?

மதிக்கிறேன், ஆனால் நம்ப ஆயத்தமாக இல்லை;
தொழுகிறேன், ஆனால் நிரூபிக்கப்படாதது;
பின்பற்றுவேன், ஆனால் என்னிஷ்டப்படியே;
-இவையெல்லாம் உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

அநேகமாக உங்கள் ஓட்டு செல்லா ஓட்டாகவே போகும்..!

இறைவன் என்பவன் ஒன்றுக்கு மேற்பட்டவர் என்றால் அதைச் சொல்லவேண்டும்; இல்லை ஒன்று தான் என்றால் நம்பவேண்டும்; கடவுள் இல்லையென்பதையாகிலும் மனத்திண்மையுடன் பதிவு செய்யவேண்டும்;

இதையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் வழிக்கு எல்லோரையும் அழைப்பது என்ன நியாயம்?

இயேசுகிறிஸ்துவை நீங்கள் மனதாரத் தொழுவேன் என்று சொல்லுவது ஆகாத காரியமாகவே தோன்றுகிறது;

ஏனெனில் முருகனைத் தொழுதவர் மற்றவரைத் தொழ அனுமதிக்கப்படுவதில்லை;

அதிலும் மனதாரத் தொழுவதாகச் சொல்லுவது எப்படி சாத்தியமாகும்?

ஏனெனில் மனதாரத் தொழுவதற்கு முன்பதாக அவருடைய போதனைகளின் படி அவர் போதித்த மார்க்கக் கருத்துக்களை ஏற்றாக வேண்டும்; அவரோ ஓயாமல் தமது பிதாவைக் (கடவுளைக்) குறித்தும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதைக் குறித்துமே பிரதானமாகப் பேசினார்;

வெறும் மாய்மாலமாகச் செய்யும் ஆராதனைகளையும் சடங்குகளையும் கண்டித்தார்; இன்னும் கேட்டால் அதற்காக ஒரு பெரிய கலவரமே செய்தார்;

அவரை வணங்குபவர்களுக்கும் இந்த குணங்களும் வைராக்கியமும் வந்துவிடுமே; (வரவில்லை என்பது தனி விவாதம்..!) அதன்பிறகு மற்றவை எல்லாம் போலியானது என்பது தெரியவரும்;

இந்த நிலையில் இயேசுகிறிஸ்துவையும் வணங்குவேன் என்பது ஏமாற்றுவேலைதானே..?

இறுதியாக சில வரிகள்...
வெளிச்சம் என்பது எது என்று கொஞ்சம் சொல்லுங்கள்;

மேலும் எதையும் அறிவுபூர்வமாக சுதந்தரமாக சிந்தித்து சரியானதைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்கும் ஒன்றையும் ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்கவேண்டும்.., எல்லாமே ஒன்றுதான் என்பதற்கும் வித்தியாசமுண்டல்லவா?


கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு அவரை சிந்தித்து அந்த மெய்ப்பொருளைக் காண்பதறிவு..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard