பைபிள் இறைவனின் சட்டப்புத்தகம் என்ற அடிப்படையில் எல்லா வகையிலும் ஏற்புடையதும் முதலாவதும் அதுவே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்;
ஆனால் அண்ணன் சுந்தர் ஒரு புதிய கோணத்தில் சில காரியங்களைச் சொல்லுகிறார்; இதைக் குறித்து நானும் யோசிக்கிறேன்.
அன்பு சகோதரி GLADY அவர்களே! உங்கள் கருத்திலோ அல்லது நம்பிக்கையிலோ எந்த தவறும் நிச்சயம் இல்லை! இறைவனின் உண்மை வார்த்தைகள் அடங்கியது பரிசுத்த வேதாகமம் மட்டுமே! ஆனால் அதை நம் மனித ஞானத்தால் ஆராய்ந்தால் உண்மை என்னவென்பதை அறிய முடியாது என்ற கருத்தில்தான் நான் எழுதியுள்ளேன்.
அன்புடன்
SUNDAR
-- Edited by chillsam on Saturday 23rd of January 2010 04:14:59 PM
chillsam wrote:இன்று காலை எனக்கு அன்பான ஒரு மூத்த அனுபவமுள்ள தேவ தாசன் இப்படியாகச் சொன்னார், "வேதம் சொன்ன ஒரு காரியத்துக்கு மேல் மனிதன் என்ன சொல்லமுடியும், இணையதளத்தில் வருவதையெல்லாம் படிக்கவே கூடாது; வேதத்தை மாத்திரம் படித்தால் போதும், நமது பிள்ளைகளை சினிமா பார்க்கவிடுகிறதில்லை,ஏன்,அதன் பாதிப்பை நாம் அறிந்ததாலல்லவா..? சாராயம் குடிக்கவில்லை, ஆனால் சும்மா உட்கார்ந்திருக்கிறேனென்று அங்கு செல்லுகிறதில்லை; அதுபோலவே இவற்றையெல்லாம் தவிர்ப்பதே நல்லது". -இது எனக்கு மிகவும் நிம்மதி தரும் கருத்தாக இருந்தது;
சொல்லப்பட்ட கருத்து அருமையானதாக இருந்தாலும் அவர்களும் வேதத்தை அளவுக்கு அதிகமாக படித்துதான் இப்படி ஒரு அடிப்படையற்ற கருத்தை போதிக்கின்றனர். இதுபோல் அடுத்தவர் சொல்வதை எதுவும் கேட்காமல் வேதத்தை மட்டுமே படித்து எத்தனைபேர் தடம் புரண்டு போய்கொண்டு இருக்கின்றனரோ யாருக்கு தெரியும்?
வேதம்கூட எல்லா இடத்திலும் ஒன்றுபோல் சொல்லவில்லை முன்னுக்கு பின் முரணான வசனங்கள் கூட இருக்கிறது! ஆவியானவரின் அற்ப்புதமான துணையின்றி சாத்தான் வேதத்தை வைத்தே ஒருவரை சுலபமாக திசைதிருப்ப முடியும். இயேசுவிடமே வசனத்தை காட்டி சோதித்தவன் அல்லவா?
மேலும் சபைகளில் வழங்கப்படும் அறிவுரைகள் எல்லாம் வேதம் சம்பந்தப்பட்டது என்றாலும் அது அவரவர் புரிதலை அடிப்படையாக கொண்டே பிரசங்கிக்கப்படுகிறது அதையும் கேட்கவேண்டாம் என்ற கோட்பாட்டில் போய் முடிந்துவிடும். இவர் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் வேதத்தை படித்தாலே போதும் என்ற நிலை வர வாய்ப்பிருக்கிறது
எனவே வேதபுத்தகத்தை மட்டும் படித்தால் போதுமென்றாலும் பிறர் சொல்லும் கருத்துக்களையும் சற்று ஆராய்ந்து நமது கருத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்வது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
இன்று காலை எனக்கு அன்பான ஒரு மூத்த அனுபவமுள்ள தேவ தாசன் இப்படியாகச் சொன்னார், "வேதம் சொன்ன ஒரு காரியத்துக்கு மேல் மனிதன் என்ன சொல்லமுடியும், இணையதளத்தில் வருவதையெல்லாம் படிக்கவே கூடாது; வேதத்தை மாத்திரம் படித்தால் போதும், நமது பிள்ளைகளை சினிமா பார்க்கவிடுகிறதில்லை,ஏன்,அதன் பாதிப்பை நாம் அறிந்ததாலல்லவா..? சாராயம் குடிக்கவில்லை, ஆனால் சும்மா உட்கார்ந்திருக்கிறேனென்று அங்கு செல்லுகிறதில்லை; அதுபோலவே இவற்றையெல்லாம் தவிர்ப்பதே நல்லது". -இது எனக்கு மிகவும் நிம்மதி தரும் கருத்தாக இருந்தது;
ஆனாலும் வரட்டுப் பிடிவாதத்தை விடாமல் நான் கேட்டேன், "இது நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கு போதுமானதுதான்; ஆனாலும் இதுபோன்ற தவறான கருத்துக்களால் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க நாம் சரியானது எது என்று அடையாளம் காட்டவேண்டுமல்லவா?"
"சகோதரனாகிய ஒருவனுக்கு ரெண்டொரு தரம் புத்திசொன்னபிறகும் அவன் திருந்தாவிட்டால் அவனைவிட்டு விலகு" என்றும் வேதம் அறிவுறுத்துகிறது;
நரகத்தையும் பாதாளத்தையும் மரணத்தையும் குறித்து வேதம் சொன்ன எதையும் நாம் மறுத்து விளக்க வேண்டிய அவசியமே இல்லை; இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்;அது "ready to eat manna" போன்றது..! (Please read Deuteronomy.29:29)
-- Edited by chillsam on Wednesday 13th of January 2010 03:24:31 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சங்கீதம் 9:17துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.