இது எனது தளத்தின் இன்றைய புள்ளிவிவரமாகும்; இந்த சாதனை வாசக நண்பர்களின் அமோக ஆதரவினாலேயே சாத்தியமானது;அநேகர் இதில் பங்கேற்காவிட்டாலும் தொடர்ந்து பார்வையிட்டுச் செல்லும் தளமாக வேகமாக வளர்ந்துவ்ருகிறது;
எனவே நண்பர்கள் தங்களை படைப்புகளை "யௌவன ஜனம்" தளத்தில் பதித்து தங்கள் சிந்தனைகள் சரியான வேகத்தில் பயணிக்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்;நன்றி..!
நாளதுவரை"யௌவன ஜனம்" கிறிஸ்தவ கலந்துரையாடல் தளத்தைப் பார்வையிட்டுச் சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறிக் கொள்வதுடன் பதிவு செய்துள்ள நண்பர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்து இந்த தளத்தை கலகலப்பாக்க அன்போடு அழைக்கிறேன்;
இதனைத் தனியார் தளமாக அல்ல,அனைவரும் இணைந்து பணியாற்றும் தளமாகவே வடிவமைத்துள்ளேன்; ஆரோக்கிய உபதேசத்திலிருக்கும் நண்பர்கள் மனமுவந்து தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்;
முக்கியமாக தணிக்கை செய்வதற்கும் பிழைகளைச் சரி பார்ப்பதற்கும் தளத்தின் வசதிகளை மேம்படுத்தும் ஆலோசனைகளுக்கும் இந்த தளத்தின் தொடுப்பைத் தத்தமது வட்டாரத்தில் பகிர்ந்துக்கொள்ளவும் நண்பர்களுடைய உதவிகளையே எதிர்நோக்கியிருக்கிறேன்; இந்த ஊழியத்தில் அனைவரும் பங்கேற்கலாம்; புதிய தலைப்புகளை உருவாக்கலாம்;
நண்பர்கள் தமது விரைவான நல்லெண்ணத்துடன் கூடிய பதிலை வழங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்,
"நிர்வாகி"
-- Edited by chillsam on Thursday 4th of February 2010 11:59:09 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய தளத்தில் புதிதாக இணைந்து ஆங்கிலத்தில் பதிவுகளை வழங்கிக்கொண்டிருக்கும் சகோதரர் சந்தோஷ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்;
இன்னும் பதிவுகளைத் துவங்காத நண்பர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி எனது வேலைப்பளுவை சற்று குறைக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்;
இது சாலையோரத்தில் நின்று ஆண்டவருடைய நற்செய்தியினை கைப்பிரதியாக வழங்கும் ஊழியத்தைப் போல ஒரு புனிதமான பணியாகும்; எனவே தயவுசெய்து அர்ப்பண உணர்வுடன் இங்கே பங்கேற்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்;
மாத்திரமல்ல, எனது பாசத்துக்குரிய நண்பர்கள் முதலாவது தங்களையும் தங்கள் விசுவாசத்தையும் அறிமுகப்படுத்திக் கொள்ள தயவாக வேண்டுகிறேன்;இது நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவும்;
மிக்க நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"யௌவன ஜனமாக"வந்திணைந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்;
அண்ணன் selvadurai47 அவர்களுக்கும் சகோதரி Rukmani அவர்களுக்கும் அன்பு நண்பர் joedan அவர்களுக்கும் புதிய நண்பர் SANDOSH அவர்களுக்கும் இனிய நண்பர் SUNDAR அவர்களுக்கும் எளிய நண்பர் ramesh அவர்களுக்கும் அன்பு சகோதரி glady அவர்களுக்கும்
சீக்கிரமே தங்கள் பொன்னான நேரத்தை சற்று செலவழித்து கலகலப்பான விவாதங்களை துவங்கிட வேண்டுகிறேன்;
புதிய பகுதிகளுக்கான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அளித்திட அன்புடன் வேண்டுகிறேன்;
துருபதேசங்கள் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ இணைய உலகில்ஆரோக்கிய உபதேசங்களையும் துருபதேசங்களையும் வகைபிரித்து தேவ ஜனத்தை எச்சரிக்கும் மாபெரும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எண்ணி கர்த்தரைத் துதிப்போமாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சரியான கிறிஸ்தவத்தைத் தேடும் கண்மணிகளை அன்புடன் வரவேற்கிறோம்; இந்த தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)