தமிழ் ஹிந்து அடிப்படைவாதிகள் தேவையில்லாமல் ஒரு தன்னலமற்ற கிறித்தவ சேவை நிறுவனத்தை -World vision of India தூஷிக்கிறார்கள்;ஆனால் அந்த ஸ்தாபனம் மூலம் நான் அடைந்த நன்மைகளுக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்;
நான் " வோர்ல்ட் விஷன் " மூலம் ஆதரிக்கப்பட்ட ஒரு அனாதை; எனது பயனர் எண்: 237 வறுமைகாரணமாக பள்ளிக்கே சென்றிராத நான் ஆறாவது வகுப்பிலே சேர்க்கப்பட்டு பத்தாவது வகுப்பு வரையிலும் படித்தேன்; நான் பள்ளியில் படித்த காலங்களில் மட்டுமே சீரான மதிய உணவு கிடைத்தது; நான் பத்தாவது வகுப்பு படித்து முடித்ததும் சில வருடங்கள் கழித்து என்னை ஏதோ ஒரு கிராமத்தில் தேடி கண்டுபிடித்து எனக்கு ரூ.5000 சுயதொழில் செய்ய உதவினார்கள்;
இப்படி "வோர்ல்ட் விஷனு " (World vision of India) னடான எனது அனுபவங்களைச் சொல்லப்போனால் கண்கள் கண்ணீரால் நனையும்; ஆனால் அந்த நன்மைகளை அனுபவிக்கும் போது இந்த உணர்வு எனக்கில்லை; காரணம் அந்த சேவைகள் அத்தனை இயல்பாக இருந்தது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பிலிப்புவை ஆவியானவர் தூக்கிக்கொண்டு போய்விட்டது போல் சகோதரர் சில்சாமையும் ஆண்டவர் எதோ காரணத்துக்காக எங்கோ கொண்டுபோயிருக்கிறார் என்ற எண்ணத்தில் இருந்தேன். தற்சமயம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
மீண்டும் தளத்துக்கு வருகை தந்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
என்னைப் பத்தி எனக்குத் தெரியாது எந்தன் வாழ்வை என்னால் சொல்லமுடியாது என் பாதை தெரிந்தவர் என் வாழ்வை அறிந்தவர் என் நேசர் ஒருவரே என் இயேசு நடுவரே..!
அநாதையாய் நான் அலைந்தபோது அன்போடு அரவணைத்ததேது அவர் அன்பின் கரங்களே அவர் பாசக் கரங்களே பாதம் தொட்டு பணிவேன் இப்போது
(இது எனக்குப் பிரியமானதொரு சாட்சிப் பாடல்..!)
இதற்கு மேல் என்னைப் பற்றி யாரும் எதுவும் கேட்கவோ என்னைப் பற்றி அறிந்தவற்றை இங்கே பதிக்கவோ கூடாது என்று நான் சொல்ல நினைத்தாலும் நட்பு என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் தானே என்று மனம் சொன்னாலும் இன்னொரு புறம் அச்சமாகவும் இருப்பது போல் தோன்றினாலும் என்ன ஆனாலும் சரி எனது நண்பர்கள் தானே என்ன செய்துவிடப்போகிறார்கள் என்றதொரு அசட்டு துணிச்சலில் இதோ மனதில் தோன்றியதையே எழுதியிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்;மிக்க நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)