Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிஷினரிகளின் பங்கு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிஷினரிகளின் பங்கு
Permalink  
 


தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பேன் - 2 நாளாகமம் 7:14

 

ரோமர்13:1. தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

10574408_558664767571545_6841061559412408830_n.jpg?oh=e8222be11669af137ee0fe00ae1f1389&oe=5464AF0C

அனைவருக்கும் தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியத்தின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். சுதந்திர தினத்தன்று தேசிய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களில் வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஆமென்

நம் இந்திய தேசம்

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன? கோல்வால்கர் (1906-1973) ஆர்.எஸ்.எஸ் தலைவர், அருண் சௌரி (பி.ஜெ.பி, அரசியல்வாதி), saffronised NCERT பள்ளி 9ம் வகுப்பு பாடம் என பல இடங்களில் இந்துக்களும், முகமதியர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர் என்று பொய் சொல்லி ஓர் பொய்யான தகவலை வரலாற்றில் பதித்துக்கொண்டனர். ஆனால் இந்திய தேசவிடுதலை சரித்திரம் உண்மையை கண்டவர்கள் யாவரும் இவர்களை பார்த்து நகைப்பார்கள்.


Felix Wilfred என்கிற ஓர் வரலாற்று ஆசிரியர் இந்தியாவின் சுதந்திரத்தின் கிறிஸ்தவர்களில் பங்கு என்னவென தெளிவாக ஆதாரத்தோடு எழுதிவைத்துள்ளார். சுதந்திர தேசத்திற்காக பாடுபட்ட மிஷனரிகளில் முக்கியமானவர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ் , C.F.அன்றூஸ் , J.C.வின்ஸ்லோ , வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன் மற்றும் எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன். இவர்கள் ஆங்கிலய காலனி ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்தவர்கள். இந்திய தேசம் இந்தியர்களுக்கே இன்று முழங்கியவர்கள். பல மிஷனரிகள் இதனால் ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டனர். இதன் மத்தியுலும் பல கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்விட்டனர். பலரும் ஆங்கிலேயர்களால் தான் கிறிஸ்தவம் இந்திய தேசத்திற்குள்ளே வந்தது என்று கதைகட்டி நரிகளைப்போல் தெருவெங்கும் ஊளையிடுகின்றனர். கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "பரிசுத்த தோமா" என்கிற கிறிஸ்தவ சீசர் மூலம் வந்துவிட்டது. இன்றும் இவர் சரித்திரம் சொல்லாத ஏடுகள் இல்லை. அந்நிய ஆதிக்கம் 17ம் நூற்றாண்டுகளில் தலைதூக்கியது. அன்றுவரை கிறிஸ்தவம் இந்தியத்தேசத்தில் பலவிதங்களில் சொல்லப்பட்டுவந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஜார்ஜ் தாமஸ் என்கிற கிறிஸ்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரபோராத்தில் குதித்த ஆரம்ப நாட்களில், இந்திய கிறிஸ்தவ சமுதாயம் (1885) என்கிற ஓர் அரசியல் சார்ந்த ஓர் கூட்டத்தை சேர்த்து சுதந்திர போராட்டத்தில் குதித்தார். 1887ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தாக்கல் செய்த மூன்றாம் அரசியல் சாசனத்தில் 607 பேர் கலந்துகொண்டனர். இதில் 15 பேர் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை எண்ணிக்கை மிக குறைவு). இதில் முக்கியமானவர்கள் ஒரிசாவை சார்ந்த மது சுதன் தாஸ் (1848-1934), பெங்காலி கிறிஸ்தவர் காளி சரண் பேனர்ஜி (1847-1907) என்பவர்கள். இவ்விருவரும் தேசிய அரசியலில் காங்கிரசோடு இணைந்து பல அரசியல் சாசனங்களை தாக்கல் செய்தனர். 1889ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கில் கலந்துகொண்ட 10 பெண் தலைவர்களில் 3 ன்று பேர் கிறிஸ்தவ தலைவர்கள். இவர்கள் பண்டித ரமாபாய் சரஸ்வதி (1858-1922), திருமதி திரயும்புக் மற்றும் திருமதி நிகம்பே.

1920ம் வருடம் ஆரம்பித்து பல கிறிஸ்தவ இயக்கங்கள் ஆங்காங்கே சபைகள், கிறிஸ்தவ கல்லூரிகள், அரசியல் சார்பு இயக்கங்கள் உருவாகி சுதந்திர தேசத்திற்காக பாடுபட்டனர். அனைத்திந்திய கிறிஸ்தவ மாநாடு, தேசிய கிறிஸ்தவ ஆலோசனை சபை (the National Christian Council of இந்திய), ஒருங்கிணைந்த கிறிஸ்தவ சாஸ்திர கல்லூரி (United Theological College (Bangalore)) சார்பாக உருவாகின கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் வாலிப மாணவ குழுக்கள் , பெங்கால் செரம்பூர் கல்லூரி (Serampore College) (Bengal), புனித பவுல் கல்லூரி, கொல்கத்தா (St. Paul’s College, Calcutta (Bengal)), கேரளா மலபார் கிறிஸ்தவ கல்லூரி (Malabr Christian காலேஜ்), Calicut (Kerala), கிறிஸ்தவ வாலிப ஆலோசனை மற்றும் செயல்படுத்தல் குழு (கேரளா) (the Youth Christian Council of Action (Kerala)), இந்திய கிறிஸ்தவ மாணவ இயக்கம் (the Student Christian Movement of India), இந்திய கிறிஸ்தவ கழகம், பெங்கால் (the Indian Christian Association of Bengal, கிறிஸ்தவ கூடுகைகள், மும்பை (conference of Christians in Bombay), இந்திய கிறிஸ்தவ கூட்டம், பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி (Meeting of Christians in Palayamcotta and Tinnaveli) போன்றவற்றின் மூலம் பல இடங்களில் சபைகள் மூலமாக கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிர்த்து நின்று இரவு பகல் பாராமல் போராடினர். சில இடங்களில் முன்வந்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

1973ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை வெளியிட்டது. அதன் தலைப்பு "யார் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது, தமிழ்நாடு" "Who is Who of Freedom Fighters, Tamil Nadu" இதில் D.ஆர்தர் ஜெயகுமார் (D.Arthur Jayakumar) மற்றும் 103 பேர் கிறிஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவர்களில் D.ஆர்தர் ஜெயகுமார் அவர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

J.C.குமரப்பா (உண்மையான பெயர் ஜான் ஜேசுதாசன் கொர்நெலேயு, (1892-1960), முக்கியமான காங்கிரஸ் தலைவர். இவர் அண்ணல் காந்தியை 9 மே 1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்த பின் அவர் நெருங்கிய நண்பர் ஆனார். இவர் "சத்தியக்ரஹம்" போராட்டத்தில் கலந்துகொன்று பல கிறிஸ்தவ இயக்கங்களை இதனோடு இணைத்தார்.
பவுல் ராமசாமி (1906) மற்றொரு முக்கியமான கிறிஸ்தவர். காந்தியின் உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் கலந்துகொண்டு பிஷப் ஹீபர் கல்லூரியை மையமாக வைத்து செயல்பட்டார். பின்னை ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டு திருச்சி, அல்லிபுரம் சிறைச்சாலைகளில் வாடினார். வெங்கல் சக்கரி (1880) காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நபராக செயல்பட்டவர். 1930 ம் வருடம் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் K.T.பவுல் அவர்கள் கலந்துகொண்டு விடுதலை முழக்கமிட்டார்.

லக்னௌவில் நடைபெற்ற அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் மாநாட்டிற்கு (1922, டிசம்பர் 27-30) பிறகு "ஒத்துழையாமை" இயக்கத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இதன் பிறகு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதாரம்:1930 The editor of The Guardian. N.H.துப்ஸ் பிஷப் கல்லூரி முதல்வர், கொல்கத்தா, நிறத் பிஸ்வாஸ் (பிஷப் அஸ்ஸாம் சபைகள்) ஆகிய இருவரும் 1932ம் ஆண்டு உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்டனர்.
1930 மற்றும் 1940ம் ஆண்டுகளில் கிறிஸ்தவ தலைவர்களான T.M. வர்கீஸ், A.J. ஜான், மச்காறேனேஷ் மற்றும் அக்கம்மா செரியன் ஆரம்ப நாட்களில் முக்கியமானவர்கள். திருவேன்கொர் காங்கிரஸ் தலைவர்களில் பிலோப்போஸ் ஏலஞ்சிக்கள் ஜான் (1903-1955) முக்கியமானவர்.

கிறிஸ்தவ குடும்பங்கள் பல இணைந்து சுத்திர தேசத்திற்காக போராடினர். முக்கியமாக திரு ஜோசிம் அல்வா Joachim Alva (1907-1979) அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இவர் கிறஸ்தவ வாலிப இயக்கத்தின் முன்னோடி. சுதந்திர போராட்டத்தில் குதிக்க தான் பார்த்துவந்த பணம்கொளிக்கும் வேலையை தூக்கிஎறிந்து வந்தார். திருமதி வியோலேட் அல்வா (1908-1969). கணவனும், மனைவியுமாக இணைந்து பல இடங்களில் சுதந்திர வேட்க்கையை தீயாய் பரப்பினர்.

இதை ஒரு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த ஓர் பத்திரிகை எழுத்தாளர் M.V.காமத் அவர்கள் ஒப்புகொண்டிருக்கிறார். தன் சுயசரிதையில் கிறிஸ்தவர்களில் பங்களிப்பு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிப்ரியன் அல்வறேஸ் (Cyprian Alvares), திரு ஜோசிம் அல்வா (Joachim Alva), மார்செல் (Marcel A. M. D’Souza) ஆகியோரை பற்றி இவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டும் அல்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்களிப்பு தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூறுகிறார்.

ஜார்ஜ் ஜோசப் (George Joseph (1887-1938) was another outstanding Christian who engaged in the freedom struggle) அவர்களின் விடுதலை போராட்ட பங்கு மிகவும் பெரியது. 1918ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற விடுதலை போராட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டது மூலம் இந்திய கிறிஸ்தவர்கள் தேசிய விடுதலைக்காக போராடுகின்றனர் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

C.சாமுவேல் ஆரோன் மற்றும் அவர் துணைவியார் திருமதி கிரேசி ஆரோன் அவர்களில் பங்களிப்பு பலரை விடுதலை போராட்டத்தில் குதிக்க வைத்தது. உப்பு சத்தியாக்ரக போராட்டம் மலபாருக்கு வந்தபோது இவர் குடும்பம் தான் முன் நின்று வழிநடத்தியது. தன் சொந்த கட்டிடத்தை இப்போராட்டத்திற்கு இலவசமாக கொடுத்து முன் நின்றவர். இவர் எந்நேரமும் கொலை செய்யப்படலாம் என்று அப்போதைய அதிகாரி E.M.கவனே மிரட்டினார். 1930ம் ஆண்டு காங்கிரஸ் தடைசெய்யப்பட்ட போது இவரும் கைதானார். ருபாய் ஆயிரம் அபராதம் அல்லது 6 வார சிறை என்ற நிலை வந்தது. தன்னுடன் போராடிய பாமர மக்கள் சிறையில் வாடும் போது இவர்மட்டும் வெளியில் இருக்க மனம் வரவில்லை. பணம் கட்ட மறுத்து சிறைத்தண்டனையை ஏற்றார்.

இது மட்டும் அல்ல. கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக வெளிவந்தன. அதிகமாக மலையாள மொழியில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளிவந்தன. Malayala Manorma Company (1888) இன்றும் இந்த பத்திரிக்கை புகழ் பெற்றதாகும். இதை ஆரம்பித்தவர் ஒரு கிறிஸ்தவர். பெயர் Varghese Mappilla Kandathil (1858-1904). பின்னர் இது Malayala Manorama (1890 onwards) என்று பெயர் பெற்றது. இப்படி கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பல பத்திரிக்கைகள் அரசியலையும், விடுதலை வேட்க்கையையும் பலநிலைகளில் தூண்டியது. இவைகளில் பங்களிப்பு மிகபெரிய வெற்றியை தேடித்தந்தது.

இப்படி அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திர இந்தியாவின் அமைதிக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

ரோமர் 13:1தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

நம் தேசத்திற்கு சமாதானம், நிம்மதி, சேமம் வேண்டும் என்றால் கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்க வேண்டும். இந்த ஜெபத்தை தேவன் கேட்டு கால் மிதிக்கும் தேசமெல்லாம் கத்தருக்கு சொந்தமாகும் என்பது போல் நிச்சயம் இந்திய அமைதியில் தேசமாக மாறும். ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்


தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard