Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?
Permalink  
 


இதுபோன்ற ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் நண்பர்கள் தங்கள் மேலதிக அனுபவங்களைப் பகிருவதற்கு முன்வரவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?
Permalink  
 


அன்னிய பாஷை மற்றும் அபிஷேகத்தைப் பற்றி என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன்:‍

நான் மீட்கப்படுவதற்கு முன்பு என் தாய் தகப்பன் பேசும் அன்னிய பாஷையைக் கூட மனோதத்துவ ரீதியான செயல்பாடு என கூறியிருக்கிறேன். மீட்கப்பட்ட பிறகும் ஒரு எதிசிஸ்டாக அன்னிய பாஷையை என்னால் எளிதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் யாருமற்ற வழியில் போகும்போதும் வரும்போதும் ஆண்டவரோடு உறவாடுகிற அனுபவம் பெற்றேன். ஒரு நாள் அப்படி இயேசுவோடு உறவாடிக்கொண்டே நடந்து வரும்போது ஒரு வித்தியாசமான அனுபவம்: உடலெல்லாம் தகிப்பது போலவும் கண்கள் கசிந்து என்னை சுற்றிலும் ஏதோ வியாபிப்பது போலவும்; அதை அனுவவித்துப் பார்த்தால் தான் அதன் சந்தோஷம் தெரியும். அதன் பிறகு 5 நிமிட ஜெபமெல்லாம் மறைந்து பல மணி நேர ஜெபமானது. தேவனைப் பற்றி சொல்ல தயக்கம் மறைந்தது. அருகில் உள்ளவர்கள் கேட்டாலும் பறவாயில்லை சத்தமாக ஜெபிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இருப்பினும் நான் அபிஷேகிக்கப் பட்டிருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ளாமலேயே இருந்தேன்.  

இந்நிலையில் அன்னிய பாஷையில் பேசுகிறவன் அதன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக் கடவன் என்ற வசனத்தை தியானித்த போது பேசுகிறவனுக்கே (வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்) புரியாத ஒரு பாஷையில் தேவனோடு இரகசியங்களை பேசுவது வேதத்திற்கு முரணானது அல்ல என்ற தெளிவு வந்தபின் முழு விசுவாசத்தோடு அதற்காக விண்ணப்பம் செய்தேன். ஒரு நாள் வீட்டில் தனியாக ஜெபித்துக்கொண்டிருந்த போது நான் பேச முயலாத வார்த்தைகள் என் வாயில் வருவதை உணர்ந்தேன். விட்டுக் கொடுத்தபோது அன்னிய பாஷையை பெற்றுக்கொண்டேன்.

அன்னிய‌ பாஷையில் பேச‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு விசுவாச‌ வாழ்வில் பெரிய‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து. வாழ்வை குறித்த‌ ப‌ய‌ம், வியாதியை குறித்த‌ ப‌ய‌ம் போயே போச். ஆண்ட‌வ‌ர் என‌க்குள் இருந்து பேசுகிறார் ஜெபிக்க‌ உத‌வுகிறார் என்ற‌ எண்ண‌மே மிக‌ப் பெரிய‌ பெல‌மாய் அமைந்த‌து. இயேசுவின் நாம‌த்திலே என தைரியமாய் குர‌ல் கொடுக்க‌ முடிந்த‌து. வியாதியை க‌ண்டு ப‌ய‌ந்து ம‌ருத்துவ‌ம‌னை ஓடுவ‌து நின்றது (சுமார் 6 வருடங்களாக குடும்பமாக - wife with 3 children - மருந்தில்லாத வாழ்க்கை: மருந்தெடுப்பது தவறென்பதால் அல்ல மருத்துவரை விட பெரியவர் என்னோடிருக்கிற தைரியத்தால்‍ - மருந்தெடுப்பதை விட சீக்கிரமே குணமாகிவிடுகிறது). வியாதி வ‌ராம‌லில்லை ம‌க‌னுக்கு ஹிர‌ண்யா வ‌ந்து 3 மாத‌ம் சுமார் 1 இன்ச் குட‌ல் இற‌ங்கியிருந்த‌து. ஒரு நாள் அன்னிய‌ பாஷையில் ஜெபித்துக் கொண்டிருந்த‌ போது, இயேசுவின் நாம‌த்தில் மேலேறிச் செல் என‌ க‌ட்ட‌ளையிட்ட‌ போது மேலேறிச் சென்ற‌து. இது ஒரு சின்ன‌ உதார‌ண‌ம். இப்ப‌டி வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அற்புத‌ங்க‌ள் நிறைந்தே காண‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் அன்னிய‌ பாஷையில் பேசும்போது வ‌ருகிற தைரிய‌மும் விசுவாச‌மும் தான். அன்னிய பாஷை இல்லாமலும் அவியானவர் செயல்பட இயலும். ஆனால் அன்னிய பாஷை விசுவாசம் பெருக எனக்கு உதவுகிறது.

அன்னிய பாஷை ஒரு நல்ல அனுபவம் அதை எல்லோரும் விசுவாசித்து பெற்றுக்கொள்ளலாமே என்பது என் கருத்து



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் அபிஷேகம் என்பது ஒன்றா?
 
ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு அவிசுவாசி  தேவனை  விசுவாசிப்பது, பாவத்திற்கு எதிராய் போராடுவது மற்றும்  தேவனுடைய  சாட்சியாய் மாறி சுவிசேஷம் சொல்லவும், உழியம்  செய்யவும்   தைரியப்படுத்துவது  என்று  பல்வேறு நிலைகளில்   ஏற்படும் ஆவிக்குரிய வளர்ச்சியை கொடுக்கும் தேவனுடைய செயலை குறித்த   ஒரு பொதுப்படையான கூற்று (Common Term) . இதில் அபிஷேகம் என்பது பொதுவாக இந்த அனுபவங்களின் கடைசி பகுதியை அதாவது ஆண்டவரை ஏற்று கொண்டு உழியத்திலோ, சுவிசேஷம் சொல்லுவதிலோ அல்லது ஒரு கொடுமையான பாவத்தில் இருந்து விடுபடவோ தேவன் கொடுக்கும் விசேஷித்த "சக்தி" அல்லது "கிருபை" என்று சொல்லலாம். அந்த அபிஷேகம் என்பது பொதுவாக ஆவியானவருடைய வரங்களோடு வந்து இயேசு கிறிஸ்துவின் உழியத்தை பிதா விரும்புகிற விதமான கிரியை செய்ய நம்மை பலப்படுத்துகிற ஒன்றாய் இருக்கிறது

  • வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே (I கொரிந்தியர் 12:4-6 )
(நம்முடைய ஜெபத்திலும் இந்த மாதிரியை நாம் கவனிக்கலாம். பொதுவாய் ஜெபம் என்பது ஆவியானவருடன் சேர்ந்து , கிறிஸ்துவின் மூலமாக பிதாவிடம் வேண்டுவது.)
 
வேதத்தில் பழைய ஏற்பாட்டில் இருந்து அபிஷேகம் என்பது தேவையான சமயத்தில் தேவனால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட பலம் என்பதற்கு சில உதாரணங்கள்.
  • அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான் (நியாயாதிபதிகள் 14:6 ) 
  • அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம்பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று. (நியாயாதிபதிகள் 15:14 )
  • கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, (எண்ணாகமம்  27:18)
  • நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து...மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். (யாத்திராகமம் 31:2,5)
புதிய ஏற்பாட்டில் வரும்போது இந்த பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சரிரமாகிய சபையின் வளர்ச்சிக்காகவும், அவனவனுடைய பிரயோஜனத்திர்க்காகவும், கிறிஸ்துவுக்கும், பிதாவுக்கும் மகிமை உண்டாகும் படியாகவும் வரங்களை எல்லா இரட்சிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்கும் அளிக்கிறார். ஆவியானவருடைய வரம் இல்லாத கிருஸ்தவன் என்று ஒருவன் இருக்க முடியாது ஆனால் எல்லாருக்கும் ஒரு வரமோ அல்லது ஒரே அளவிலோ ஆவியானவர் கொடுக்கப்படுவது இல்லை.

  • தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.(I கொரிந்தியர் 12:18) 
  • ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. .(I கொரிந்தியர் 12:7)
  • எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? .(I கொரிந்தியர் 29:30)
முக்கியமாக  இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தின்  அனுபவத்தை குறிப்பிடும் போது அது உன்னதத்தில் இருந்து வரும்  பலம் என்று சொல்லுகிறார்.
  • என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். (லூக்கா 24:49 )

ஒரு கட்டுப்பாடான, பெண்களை கேவலமாக கருதுகிற சமுதாயத்தில் திருமணமாகாமல் குழந்தை பெற்று எடுக்க மரியாளை பலப்படுத்துகிறார்.

  • தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் (லூக்கா 1:35 )

வேலைக்காரியிடம் மறுதலித்து, முன்று வருடம் சொந்த கண்ணால் அவருடைய மகிமையை கண்டும் அவரை மறுதலித்து  சபித்த,  சத்தியம் செய்த பேதுரு, அவருடைய உயிர்த்தெழுதலை நம்பாமல், அவர் கொலை செய்யப்பட்ட பின்பு ரோமருக்கும், யூதருக்கும்  பயந்து விட்டில் ஒளிந்து கொண்ட பேதை சீஷர்கள்  ராஜாக்களுக்கும் , ஆளுகிறவர்களுக்கும் முன்னால் நின்று விடும் சவாலுக்கு பின்னைனையில் இருப்பவர் ஆவியானவர்!

  • பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். (அப்போஸ்தலர் 4:19-20)

படிப்பறியாதவர்களும், பேதைமையுள்ளவர்களும் (மீனவர்கள்) தைரியமாய் சத்தியம் பேசுவதின் மூலம் அவர்கள் இயேசுவை சார்ந்தவர்கள் என்று பரிசேயர்கள் அறிந்துகொண்டார்களாம்

  • பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 4:13)

சோறு பரிமாறுகிற "ஸ்தேவானுடைய" ஆவியையும், ஞானத்தையும் ஆகமங்களை கரைத்து குடித்த பரிசயேர்கள் தாங்க முடியாததின் காரணம் ஆவியானவர்!

  •  அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. (அப்போஸ்தலர் 6:10 )

ஒரு சின்ன கூட்டமான இந்த கிருஸ்தவர்கள் அபிஷேகம் பெற்று சிலவருடங்களுக்கு உள்ளேயே "உலகத்தை கலக்குகிறவர்கள்" என்று பெயர்வாங்க காரணம் இந்த ஆவியானவர்!

  •  அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 17:6 )

இப்போது அன்னியபாஷை பேசுகிற எல்லாரும் அப்போஸ்தலர்களை போல அபிஷேகம் பெற்றவர்கள் என்றால் இந்த பூமி நிச்சயம் தாங்காது!! அடுத்ததாக அந்நிய பாஷை என்பது என்ன? அதுதான் அபிஷேகமா? அல்லது அபிஷேகம் பெற்றவர்கள் எல்லாரும் கட்டாயம் அந்நிய பாஷை பேசுவார்களா? என்று பார்ப்போம்.

- தொடரும்...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?
Permalink  
 


அருமையான (சற்றே சிக்கலான) தலைப்பை எடுத்துகொண்டமைக்காக வாழ்த்துக்கள் ஜான். இன்னும், நிறைய உங்க கிட்ட எதிர்ப்பார்க்கிறேன், சீக்கிரம் எழுந்துங்க.

  சகோ. கோல்டா,

//பரிசுத்த ஆவியானவர் நாம் இன்னும் பரிசுத்தமாகும்படிக்கும் கொடுக்கப்படுகிறார் என்று நான் நம்புகிறேன்.//

சரியா சொன்னீங்க.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

என் அபிஷேக அனுபவம்:

அபிஷேகம் பெறும் முன்பே, ஆண்டவர் பிரசன்னத்தை உணரும், அவர் பேசுவதை உணர்ந்து கொள்ளும் அனுபவம் எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை, வேதத்தை அதிகம் நேசித்து வாசிக்கும் அனைவரும் அவர் சத்தம் கேட்க முடியும்.ஞானஸ்நானம் எடுத்தாச்சு. அடுத்து அபிஷேகம் தானே. சபையில் ஒரு 3 நாள் convention ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். ஒரு நாள் அபிஷேகத்திற்கான கூட்டம். எனக்கு ஒரு உறுதியான நம்பிக்கை இருந்தது. என்னவென்றால், அவர் மகா பரிசுத்தமான தேவன். நமக்கு ஆண்டவர் விரும்பும்/எதிர்பார்க்கும் பரிசுத்தம் கிடையாது. எனவே அபிஷேகம் கண்டிப்பாக கிடைக்காது என்பதுதான் அது! அதனால் அந்த கூட்டத்திற்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். போனால் கடைசியில் எல்லோரும் கேட்பார்கள். நான் அபிஷேகம் பெறவில்லை என்று சொல்ல வேண்டி இருக்கும். எனவே இப்படிப்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்க போக வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் வேதம் வாசிக்கும்போது ஆண்டவர் அபிஷேகம் சம்பந்தமான எல்லா வசனங்களையும் எனக்குக் காட்டினார். நான் காதை நன்றாக பொத்திக்கொண்டதால் என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. அந்த நாளும் வந்தது. எனக்கு ஏதோ மனக்கஷ்டமும் வந்தது. நினைத்தேன், அபிஷேகம் கிடைக்குதோ இல்லையோ ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து ஜெபம் பண்ணிட்டு வருவோம் என்று 15 நிமிடம் முன்பாகவே போய் விட்டேன். ஆராதனை நடத்த வந்த பாஸ்டர், சிறு பிள்ளைகளை எல்லாம் கூட்டி பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் போய் முழங்கால் படியிட்டவுடனே, தேவ பிரசன்னம் என்னை நிறைத்தது. சரி, ஏதோ இன்று நமக்கு நடக்கப் போகுது என்று புரிந்து கொண்டேன். கடைசி ஜெப வேளையில் ஒரு வல்லமை என்மேல் இறங்கியது. அபிஷேகம் பெற்றுக் கொண்டேன். ஆனால் உடனே நான் அந்நிய பாஷை பேச வில்லை. அதற்கு பின் சில நாட்கள்(2/3 days) ஜெபம் பண்ணும் போதெல்லாம் உடல் அதிகம் நடுங்கியது. பின் அபிஷேகம் பழகி விட்டது. உடல் நடுங்குவது எல்லாம் கிடையாது. எப்பொழுதும்,எல்லா நேரமும் அபிஷேகத்தில் துள்ளும் ஜனங்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

ஆண்டவர் நம் பரிசுத்தத்தை, சிறப்பைப் பார்த்துத்தான் அபிஷேகிப்பார் என்றால் யாரும் அபிஷேகம் பெற்றுக் கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் நாம் இன்னும் பரிசுத்தமாகும்படிக்கும் கொடுக்கப்படுகிறார் என்று நான் நம்புகிறேன். சில காரியங்கள் அவர் சொல்லாவிட்டால், நமக்கு தவறு என்றே தெரியாது.

அபிஷேகம் பெற்ற பின், எனக்கு நேர்ந்த மாற்றம் என்னவென்றால், என் ஜெப வாழ்க்கை மாறியது. இயேசு கிறிஸ்து ரொம்ப நெருக்கமா, இதயத்திற்குள் வந்து விட்டது போல் உணர்ந்தேன். இடைவிடாமல் ஜெபித்தேன். (இப்ப அப்படி கிடையாது!)

ஆண்டவரோடு கூட உள்ள உறவு தான் அதி முக்கியம். நாம் பேச அவ்ர் கேட்பதும், அவர் பேச நாம் கேட்பதும் , நம் வாழ்க்கையில் நடைபெற வேண்டும்.

அவர் தான் நம்மை திருப்தி செய்யும் அப்பம். தாகம் தீர்க்கும் பானம். மற்ற அனைத்து உலக காரியங்களும் அழிந்து போகும் மாயையான சிற்றின்பங்களே.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: அபிஷகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?
Permalink  
 


இது நல்ல தொடக்கமாக இருக்கிறது.... தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் ஜாண் அவர்களே,

நம்முடைய தளத்தின் புதிய நண்பரான கிறிஸ்டோ அவர்களின் வாஞ்சையை உணர்ந்து தாங்கள் துவங்கியுள்ள புதிய தொடருக்காக நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்;இதன்மூலம் பலரும் பயன்பெறுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;தொடருங்கள்.

யௌவன ஜனம் தளத்தின் மற்ற நண்பர்களும் இந்த விவாதத்தில் இணைந்துகொண்டு அனுபவம் மற்றும் போதனை சார்ந்த காரியங்களையும் தமது ஐயங்களையும் தயக்கமின்றி இங்கே பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
அபிஷேகம் பெறுவது என்றால் என்ன? அன்னியபாஷை பேசுவது என்பது அபிஷேகத்தின் அடையாளமா?
Permalink  
 


நான் எழுதுகிற விஷயங்களை தளத்தின் சகோதர, சகோதரிகள் எந்த அளவுக்கு ஏற்று கொள்ளுவார்கள் என்று தெரியாது, ஆனாலும் எழுதுகிறேன்.

நாம் ஒருவருக்கொருவர் கற்று கொள்ளலாம்; கிறிஸ்தவத்தில் உள்ள பெரிய குழப்பங்கள், மற்றும் பிரிவினைகளுக்கு ஒரு காரணம் அந்நிய பாஷை என்றால் அது மிகையல்ல; பிரச்சனை அந்நிய பாஷையில் இல்லை; ஆனால் அனுபவங்களை கொண்டு வேதத்தை வியாக்கியானம் செய்ய முயல்வதே காரணம்.

அந்நியபாஷை பேசி, தீர்க்கதரிசனம் சொல்லி நாங்கள் ஆவியுள்ள சபைகள் என்று பீற்றிகொள்ளும் பெந்தெகொஸ்தே சபைகளின் கோட்பாடுகள் ஒரு முக்கிய காரணம். முக்கியமாக அந்நியபாஷை என்பதுதான் ஆவியின் அபிஷேகம் பெற்றதின் அடையாளம் என்று சொல்லுவது சுத்த வேத விரோதம்!

முதலில் அபிஷகம் என்றால் என்ன என்று பார்ப்போம்; பின்பு அந்நியபாஷை பேசுவது அபிஷேகத்தின் அடையாளமா என்றும் பார்க்கலாம். நாம் எல்லோருக்கும் தெரிந்தபடி யோவான் (தண்ணீரினால்) ஞானஸ்நானம் கொடுத்தது போல இயேசு கிறிஸ்துவும் ஆவியினாலேயும் , அக்கினியினாலும் அபிஷேகம் கொடுப்பவர்.

  • மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் (மத்தேயு 3:11 )

இந்த அக்கினி ஞானஸ்நானம் என்றால் என்ன? இந்த அக்கினி ஞானஸ்நானம் எப்போது கொடுக்கப்பட்டது? எதற்காக கொடுக்கப்பட்டது? யோவேல் தீர்க்கதரிஷி சொன்ன தீர்க்கதரிசனத்திருக்கும் அபிஷேகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இயேசு சிஷர்களை எருசலேமிலே ஏன் காத்திருக்க சொன்னார்? போன்ற கேள்விகளுக்கு வரிசையாக விடையளிக்க முயற்சிக்கலாம்.

ஞானஸ்நானம் என்பது ஒரு பொதுவாக ஒரு நிலையில் இருந்து மற்றும் ஒரு நிலைக்கு மாறும்போது (From one state to another state) கொடுக்கப்படுவது. யோவான் கொடுத்தது மனம் திரும்புவதற்கேற்ற ஞானஸ்நானம் அதாவது மேசியா வரப்போகிறார்; ஆகையால் பாவத்தை விட்டு மனம் திரும்புகிறவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்ற ஒரு Group ஆக மாறப்போகிறார்கள் அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

ஆகையால் இந்த அடிப்படையில் பார்க்கும் போது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்பது ஒருவன் கிறிஸ்துவை ஏற்று கொண்டு மணவாட்டி சபையில் (Invisible Church) கிறிஸ்துவின் சரீரமாக இணைக்கபடுவதே!

  • நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (I கொரிந்தியர் 12:13 )
  • ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (I கொரிந்தியர் 12:3 )

இப்படி சொல்லுவதால் ஒருவன் கிறிஸ்தவனா பின்பு ஒரு விசேஷ அபிஷேகம் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லுவதில்லை. ஆவியின் அபிஷேகம் என்பது ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது "Invisible" ஆக நடப்பது மாத்திரமே என்று விசுவாசிக்கும் Main Line சபைகளின் விசுவாசமும் தவறே!

அதை குறித்து தொடர்ந்து எழுதுகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard