Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
Permalink  
 


மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
 
Adam(?),
   based on the above verse, we believe that it is 3 days.
 
 


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

////இயேசு, எந்த நாளில்(அது வெள்ளியோ, புதனோ) சிலுவையில் அறையப்பட்டால் என்ன, வாக்கு பண்ணியபடி மூன்றாம் நாளில் உயிர்தேழுந்ததுதான் முக்கியம்.////
அன்பு சகோதரா மரித்தது எந்த நாள் என்று தெரியாமல் முன்று நாள் என்று நாம் எப்படி தீர்மானிக்க முடியும்  கவனிக்கவும் ??



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என சைத்தான்,  கடவுளாள் சபிக்கப்பட்டதும்.. ஸ்தீரியின் வித்து என்பவர் தன்னை நசுக்க ஏற்பட போகிறார் என்பதை அறிந்து கொண்ட சைத்தான், அந்த ஸ்தீரியின் வித்து என்பவர் பிறந்து விடாத படிக்கு. அதை தடுக்கவும். அவரை கொல்லவும். அவன் எடுத்த முயற்சிகளையும்.. ஆதியாகமத்திலிருந்து... கடவுள் இயேசுநாதர் மரித்து உயிர்த்தெழுந்த வரைக்கும்.. சைத்தான் மேற்கொண்ட முயற்சிகளை...... தயவு செய்து இந்த பெரிய வெள்ளி / ஈஸ்டர் எனபடுகிற வரபோகிற நாட்களுக்காக, இதை ஆராயுங்கள்.... மக்களுக்கு உதவியாய் இருக்கும்.... ஏனெனில் இயேசுநாதர் சொன்னார்.. அவன் (சைத்தான்) ஆதிமுதல் மனுச கொலைப் பாதகனாய் இருக்கிறான் என்று... இன்னும் அதிக விவரங்களுக்கு.... வெளிப்படுத்தல் புத்தகம் :12-ம் அதிகாரம்.. சூரியனை அணிந்திருக்கும் ஸ்தீரி பெற்ற ஆண் பிள்ளையை வலுசர்ப்பம் கொன்று போட முயற்சித்தது....!



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

பதிவுக்கு நன்றி சகோதரி,

      எனக்கு, உண்மையில் இயேசு எப்போது மரித்தார், எப்போது உயிர்த்தார் என்பதில் அவ்வளவு நாட்டம் இல்லை. என் இயேசு எனக்காக மரித்தார், எனக்காக உயிர்த்தார், அதுவே போதும். மேலும், வேத வசனங்கள் உண்மை என்று அனைவருக்கும் தெரிய வேண்டும் எனவும்தான் எந்த திரியை ஆரம்பித்தேன்.
    மேலும், இயேசு வியாழனன்று சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லுவதில் எனக்கு சிறு இடறல் உண்டு. அதென்னவெனில். கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வசனங்கள்.
மாற்கு 16 :1. ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
லூக்கா 23 :56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
முதல் வசனம்,சுகந்தவர்க்கங்களை ஆயத்தம் செய்தது ஓய்வுநாளுக்கு பிறகு என்கிறது, அடுத்தது ஓய்வுநாளுக்கு முன்பு என்கிறது. அதனால், ஓய்வுநாட்களுக்கு இடையில் ஒரு நாள் இருப்பது அவசியமாகிறது.
மேலும், இயேசு கல்லறையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. தவிர, இயேசு எந்த மணிப்பொழுதில் உயிர்த்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அதை இவர்கள் கண்டடைந்தது ஞாயிறு காலை. சனிக்கிழமை இரவே உயிர்திருக்கலாமே.
மேலும், அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வதேன்னவேன்றால், யாரும் இந்த விவாதத்தினால், இடரலடைய வேண்டாம். இயேசு எந்தநாளில் எப்போது உயிர்த்தார் என்பது நம் விசுவாசத்தின் அடிப்படை அல்ல. அவர் உயிர்த்தும், இன்னும் உயிரோடிருப்பதுமே நம் விசுவாசத்தின் அடிப்படை.
 
 


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இயெசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது வெள்ளியும் அல்ல, புதனும் அல்ல, வியாழன் என்ற ஒரு theory யும் இருக்கிறது!

 

எப்படியென்றால், ஆண்டவர் 3 பகலும், 3 இரவும் கல்லறையில் இருக்க வேண்டும் என்பது கணக்கு. பகலின் பகுதியும் பகல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

 

வியாழன் சாயங்காலத்தில் 3 மணிக்கு மரித்தார்.

 

வியாழன் பகல் - ஒரு பகல். ( 6 மணிக்கு யூத நாள் முடிவடையும்)

வியாழன் இரவு - ஒரு இரவு

வெள்ளி பகல் - இரண்டு பகல்

வெள்ளி இரவு - இரண்டு இரவு

சனி பகல் - மூன்று பகல்

சனி இரவு - மூன்று இரவு

 

ஞாயிறு அதிகாலை உயிர்த்தெழுந்தார்.

 

ஆயத்த நாள் என்பது வெள்ளிக்கிழமையாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஏனென்றால் சனிக்கிழமை (weekly sabbath) தவிர பிற ஓய்வு நாட்களும் யூதர்களுக்கு உண்டு.அதில் ஒன்றுதான் பஸ்கா பண்டிகைக்கு அடுத்த நாளான புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் முதல் நாள். இது ஒரு பெரிய ஒய்வு நாளாகும்(High Sabbath).யோவான் 19:3131. அந்தநாள்பெரியஓய்வுநாளுக்குஆயத்தநாளாயிருந்தபடியினால்............

புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் கடைசி நாளும் ஓய்வு நாள்தான்.

 

இந்த பெரிய ஒய்வு நாளின் ஆயத்த நாள் தான் பஸ்கா பண்டிகையாகிய  முந்திய நாள். இயேசு கிறிஸ்துசிலுவையில் அறையப்பட்ட நாள்.

 

வியாழக்கிழமை பஸ்கா - ஆயத்த நாள்.

வெள்ளிக்கிழமை- புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் முதல் நாள்-பெரிய ஓய்வு நாள்(யோவான் 19:31).

சனிக்கிழமை - வாராந்திரஓய்வு நாள்.

ஞாயிற்றுக்கிழமை- உயிர்த்தெழுந்த நாள்.

 

அதாவதுஅந்த வருடத்தில் இரண்டு ஓய்வு நாட்கள் அடுத்தடுத்து வந்திருக்கிறது.

 

 

 

 

 

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

தாங்கள் குறிப்பிட்டுள்ள தளங்களையும் நான் படித்தேன். ஆனால் அந்த தளங்களில் இடறலான பல விஷயங்கள் உள்ளன. ஆனால், அந்த தளம் என் தேடலை சற்று சுலபமாக்கியது என்னவோ உண்மைதான்.

   உயிர்த்தெழுதலை குறித்த இந்த (யோனாவும், மீனும்) தீர்க்கதரிசனம், மிக முக்கியமான ஒன்று அதில் நமக்கு எந்த சந்தேகமும் இருக்க கூடாது.
   இயேசு, எந்த நாளில்(அது வெள்ளியோ, புதனோ) சிலுவையில் அறையப்பட்டால் என்ன, வாக்கு பண்ணியபடி மூன்றாம் நாளில் உயிர்தேழுந்ததுதான் முக்கியம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சகோ.சில்சாம்,
    மூலபாஷையை படிக்கிறேன் என்று, மூலவரை நான் விட்டுபோகமாட்டேன் (அவரும் என்னை (கை)விட்டுவிடமாட்டார்).
   புனிதவெள்ளி என்றும் பெரியவெள்ளி என்றும் சொல்லப்படுகிற நாளில் நானும் சபையாருடன் ஆராதனையில் கலந்துகொள்பவன்தான்(என்னை பொறுத்தவரை, எல்லா நாளும் உயிர்த்தெழுதலின் தினமே). ஆனால் இந்த மூலபாஷைகாரர்களிடம் மோதும் என் யவனஜனத்திற்கும், இந்த உண்மை தெரியட்டும் என்றும். நாம் வெறுமனே பாரம்பரியத்தை பின்பற்றாதவர்கள் என்றும், வேதத்தையே பின்பற்றுபவர்கள் என்றும் அனைவருக்கும் தெரியட்டும் என்றுதான்.
 
இயேசு மூன்று நாள் மூன்று இரவுகள் கல்லறையில் இருந்தார் என்பதற்கும், ஓய்வுநாளுக்கு முன்தினம் மரித்தார் என்பதற்கும், ஓய்வுநாளுக்கு மறுநாள் (ஒரு ஞாயிறு காலை) எழுந்தார் என்பதற்கும். வேத ஆதாரங்கள் இதோ:
   
மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
 
யோவான் 19:31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
மத்தேயு 28:1 ஓய்வு நா[ட்க]ள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
 
மேலே கொடுக்கப்பட்ட வசனங்கள் tamil-bible.comஇல் இருந்து எடுக்கப்பட்டது (copy). நன்றாக கவனித்து பாருங்கள். மத்தேயு 12:40 இல் தெளிவாக, இரவும் பகலும் மூன்று நாட்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் 3 days and 3 nights என்று தெளிவாக உள்ளது.
யோவான் 19:31 இல், அந்த பெரிய ஓய்வுநாள் என்று சொல்லப்பட்டுள்ளது. வாராவாரம் வரும் ஓய்வுநாளுக்கு அப்படி சொல்ல தேவையில்லையே. ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதை HIGH DAY என்று சொல்லுகிறது. சில வேத வல்லுனர்கள் அதை "பஸ்கா" என்று சொல்லுகிறார்கள். அதனால் இந்த வசனத்தில் காணப்படும் இந்த நாளானது, ஏழாம் நாளான ஓய்வுநாள் அல்ல என்று தெரிகிறது.
மத்தேயு 28:1 இல் பார்க்கும் பொது, ஓய்வு நா[ட்க]ள் முடிந்து என்று பன்மையிலும் கொடுத்திருக்கிறார்கள். அதனால். நாம், இங்கு கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்பு ஒன்றுக்கும் அதிகமான ஓய்வு நாட்கள் இருப்பதை அறியலாம்.
 
இதனால், இயேசு, புதன்கிழமை மாலை கல்லறையில் கிடத்தப்பட்டு. வியாழன் (பெரிய ஓய்வுநாள்), வெள்ளி மற்றும் சனிக்கிழமை( ஏழாம் நாளான ஓய்வுநாள்) முடிந்து, உயிர்த்தெழுந்து இருக்கவேண்டும். ஞாயிறு காலை, கல்லறைக்கு சென்றவர்கள், அவருடைய உயிர்த்தெழுதலை கண்டிருக்க வேண்டும்.
 
மேலும் தொடரும்...
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


நண்பர் அசோக் அவர்களே,

பக்திவிருத்தியை உண்டாக்கும் எந்தவொரு கருத்தையும் ஆராய்வதும் பகிர்ந்து கொள்ளுவதும் தவறல்ல;நீங்கள் அறிந்ததை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம்;ஆனாலும் மையப் பொருளும் மெய்ப் பொருளுமான மூலவரை விட்டு விலகாதிருங்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
Permalink  
 


நண்பர்களே,
 வேதத்திற்கு புறம்பாக நான் போக மாட்டேன்.மறைக்கப்பட்ட விஷயங்கள் மறைக்கப்பட்டே இருக்கட்டும். ஆனால்,இது வெளிப்படுத்தப்பட்ட விஷயமாக இருப்பதால், நான் இதை எழுத துணிந்தேன். இயேசு, சிலுவையில் அறையப்பட்ட நாள், ஓய்வுநாளுக்கு முந்தையநாள் (சனிக்கிழமை தவிர, பல ஓய்வு நாட்கள் யூதர்களுக்கு உண்டு). இயேசு உயிர்த்தெழுந்தது, ஓய்வுநாளுக்கு அடுத்த நாள். இது ஞாயிற்றுகிழமை என நாம் அறிகிறோம், எப்படியெனில். ஆதி கிறிஸ்துவர்கள் தங்கள் சபை கூடுதலை, உயிர்த்தெழுந்த நாளில் வைத்தார்கள். அதனாலேயே நாம் ஞாயிற்றுகிழமைகளில் சபையாக கூடுகிறோம். மேலும், சிலுவை மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் இடையில் உள்ளன. (யோனாவின் அடையாளம் உள்பட பல வசனங்கள் இதை சொல்கிறது). அதனால், சிலுவை மரணம் ஒரு புதன் கிழமையே நடந்தேறியுள்ளது. இதை, இன்னும் சில விளக்கங்களுடன் உங்களுக்கு காண்பிக்கிறேன்.பல தளங்கள் இதை பற்றி பல்வேறு கருத்துக்கள் கொண்டிருக்கிறது. நானும்,பல தளங்களை ஆராய்ந்து, அடிப்படை விசுவாசம் வழுவாதபடியே இதை உங்களுக்கு படைக்கிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள வரவேற்க்கப்படுகிறார்கள்.
 
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
Permalink  
 


John wrote:

//"எப்படியாவது அனைத்தையும் நிரூபிக்க முயற்சிக்காதே, அறியப்படாதவை மறைவாகவே இருக்கட்டும்,ஏனெனில் அவர்கள் என்னை எங்கிருந்து எதற்காக அறியவிரும்புகிறார்களோ அந்த அளவுக்கு மாத்திரமே என்னை வெளிப்படுத்துவேன், அவர்கள் எதையோ கண்டுபிடித்துவிட்டதாக எண்ணினால் அது அப்படியே இருக்கட்டும்,ஆனாலும் எவனுக்கு என்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறேனோ அவன் மாத்திரமே என்னை அறியமுடியும்.." //

100% சரியாய் சொன்னீர்கள் சகோ.சில்சாம்.


 நண்பரே, இதனை நான் சொல்லவும் இல்லை,ஆவியானவருக்காக நான் பொய்யுரைக்கவுமில்லை;நான் மிக அதிகமான மன அழுத்தத்தில் தவித்தபோது ஆவியானவர் எனக்காக, என்னுடன் அன்போடு சொன்னது இது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//"எப்படியாவது அனைத்தையும் நிரூபிக்க முயற்சிக்காதே,அறியப்படாதவை மறைவாகவே இருக்கட்டும்,ஏனெனில் அவர்கள் என்னை எங்கிருந்து எதற்காக அறியவிரும்புகிறார்களோ அந்த அளவுக்கு மாத்திரமே என்னை வெளிப்படுத்துவேன்,அவர்கள் எதையோ கண்டுபிடித்துவிட்டதாக எண்ணினால் அது அப்படியே இருக்கட்டும்,ஆனாலும் எவனுக்கு என்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறேனோ அவன் மாத்திரமே என்னை அறியமுடியும்.." //

 

100% சரியாய் சொன்னீர்கள் சகோ.சில்சாம். நானும் வேதம் சொன்னதை விட அதிகமாக எதையும் இழுக்க (Stretch) பண்ண  கூடாது என்று  கவனமாக இருக்கிறேன். எதாவது தவறாக இருந்தால் தயவு செய்து சுட்டி கட்டுங்கள் (நிச்சயம்  தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்)  திருத்திகொள்வேன் அல்லது அதற்க்கு சரியான வேத ஆதாரத்தை கொடுப்பேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
இத்தகைய கேள்விகள் எனக்கு வாடிக்கை அல்ல. இது முலமாக யாருடைய விசுவாசமும் இடரப்படாது என்று நம்புகிறேன். ஆனால், சில பாரம்பரியங்கள் தகர்க்கப்படும்.என்னுடைய வேத புரிதலின்படி, கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறியப்படவில்லை. நண்பர்கள் தங்கள் கருத்தினை பதியலாம்.


அன்புக்குரிய நண்பரே,

நல்லதொரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்;தாங்கள் கேட்ட கேள்விக்கான ஒரே ஒரு வரி பதில் என்னவென்றால், இயேசுவானவர் சிலுவையிலறையப்பட்டது வெள்ளிக்கிழமை அல்லவென்றே தெரிகிறது; ஏனெனில் வேதத்தில் வெள்ளிக்கிழமை என்பது எதுவுமில்லை;இது 4ம் நூற்றாண்டுக்குப் பிறகே வழக்கத்தில் வந்தது;இது குறித்து ஓரளவுக்கு நம்பகமான விளக்கத்தையறிய தொடுப்பைத் தொடரவும்;அதனை நிதானித்து தங்கள் கருத்தை எழுதலாம்;மேலும் இந்த குறிப்பிட்ட தளத்தின் விசுவாசம் என்னவென்பதை அறியமுடியவில்லை;அந்த தளமும் இங்கே நாம் போராடிக்கொண்டிருக்கும் இரஸலியன் கூட்டத்தாருடைய போதனையை அடிப்படையாகக் கொண்டிருக்குமானால் ஆபத்துதான்;அதையும் கவனத்தில் கொள்ளவும்.

Was Jesus in the grave for THREE DAYS and THREE NIGHTS?

Why is the Friday before Easter called GOOD FRIDAY?

இந்த சர்ச்சையில் முன்பொரு சமயம் ஒரு குறிப்பிட்ட விவாதத்தில் நண்பர் உமர் அவர்களுடைய ஒரு குறிப்பிட்ட கருத்தும் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது; அது என்னவென்றால்,"இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன்" என்பதாகக் கூறினார்;இதன்படி அவர் மூன்று முழு இரவும் மூன்று பகலும் கல்லறையிலிருந்த பின்னர் உயிர்த்தெழுந்திருந்தால் அவர் உயிர்த்தெழுந்தது நான்காவது நாளாக அல்லவா ஆகும்..? இது கவனத்தில் கொள்ளவேண்டிய வாதம் தானே..?

அப்படியானால் யோனாவின் காரியத்துடன் ஒப்பிட்டு சொல்லப்படுவது என்னவாகும்? அதுவும் கூட 72 மணி நேரத்தையுடைய மூன்று நாளாக இருக்க வாய்ப்பில்லையாம்;ஏனெனில் யூதர் தங்கள் சொல்வழக்காக இதுபோல சொல்வதுண்டு என்கிறார்கள்;அதாவது உங்களுக்கு ஒரு காரியத்தை ஒரு முறை சொன்னால் புரியாது, 28 தரம் சொல்லணும் என்பது போலவாம்... அதன்படி இயேசுவானவர் தாம் தம்மை உயிரோடிக்கிறவராகக் காண்பித்தாரே தவிர எப்போது உயிர்த்தெழுந்தார் என்று யாருக்குமே தெரியாது என்பதே உண்மை..!

அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் என்பது மாத்திரமே வெளிப்படையான குறிப்பாக உள்ளது;அதன்படி, "சொன்னபடியே" என்பதற்கு இரண்டு அர்த்தம் இருக்கலாம்;ஒன்று, உயிர்த்தெழுவேன் என்று சொன்னபடியே என்ற அர்த்தமும் அடுத்து, அவர் தாம் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று  சொன்னபடியே என்றும் இருக்கலாம்.

எனவே இந்த காரியத்தில் மட்டுமல்ல,நாம் (மேசியாவின்) எதிரிகளுடன் போராடிவரும் போராட்டங்களைக் குறித்தும் என்னுடன் ஆவியானவர் சொன்னது என்னவென்றால்,"எப்படியாவது அனைத்தையும் நிரூபிக்க முயற்சிக்காதே,அறியப்படாதவை மறைவாகவே இருக்கட்டும்,ஏனெனில் அவர்கள் என்னை எங்கிருந்து எதற்காக அறியவிரும்புகிறார்களோ அந்த அளவுக்கு மாத்திரமே என்னை வெளிப்படுத்துவேன்,அவர்கள் எதையோ கண்டுபிடித்துவிட்டதாக எண்ணினால் அது அப்படியே இருக்கட்டும்,ஆனாலும் எவனுக்கு என்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறேனோ அவன் மாத்திரமே என்னை அறியமுடியும்.." என்கிறார்.

அதன்படியே உயிர்த்தெழுந்தவுடன் இயேசுவானவர் பிலாத்துவுக்கும் தம்மை சிலுவையிலறையப் போராடிய பிரதான ஆசாரியருக்கும் தம்மை உயிரோடிருக்கிறவராக வெளிப்படுத்தியிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காதே;ஆம்,(மேசியாவின்) எதிரிகள் எதைத் தேடுகிறார்களோ, யாரைத் தேடுகிறார்களோ அவர்கள் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கட்டும்; நாமோ இராஜாவின் விருந்தில் மகிழ்ந்திருப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
Permalink  
 


கிறிஸ்து இயேசு வெள்ளிகிழமை சிலுவையில் அறையப்பட்டாரா?
இத்தகைய கேள்விகள் எனக்கு வாடிக்கை அல்ல. இது முலமாக யாருடைய விசுவாசமும் இடரப்படாது என்று நம்புகிறேன். ஆனால், சில பாரம்பரியங்கள் தகர்க்கப்படும்.
என்னுடைய வேத புரிதலின் படி, கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறியப்படவில்லை.
நண்பர்கள் தங்கள் கருத்தினை பதியலாம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard