Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சபையில் சகோதரிகள் செய்தி கொடுப்பது!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சபையில் சகோதரிகள் செய்தி கொடுப்பது!
Permalink  
 


SANDOSH wrote:

ஆணின் பாதுகாப்பில் பெண் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது தங்களுக்கு இழுக்கு என்று அனேக பெண்ணுரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையில் பெண்கள் எந்த சிரமமோ, துன்பமோ படாமல் இருக்கவும், அவைகள் வரும் போது ஆண்கள் அதை தாங்கி கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சமுதாயம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு வழியாகும். இதன் மூலம் மனித‌ இனமானது தழைக்கவும், மென் மேலும் முன்னேறவும் ஏற்ற சூழல் உருவாகிறது.

இயற்கை விதிகளின்படி ஆண் என்பவன் கொடுப்பவனாகவும், பெண் என்பவள் பெற்று கொள்பவளாகவும் இருக்கிறாள். ஆணின் இயல்பு கொடுப்பது (agressive) ஆகும். பெண்ணின் இயல்பு (receptive) பெற்று கொள்வது   ஆகும்.

ஆன்மிகத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று கடவுளிடமிருந்து வல்லமையை, அருளை, இரக்கத்தை  பெற்று கொள்வது.

இரண்டு பெற்று கொண்ட வல்லமையை, இரக்கத்தை, அருளை மற்றவர்களுக்கு கொடுப்பது, சொல்வது. இதன் மூலம அதை குறித்து அறியாதவர்கள் அதைக் குறித்து அறிய வழி வகை செய்வது. அறிந்தவர்கள் அவர்கள் செல்லும் பாதையில் இருந்து மாறாமல் இருக்க வழி செய்வது.

முதல் நிலையில் கடவுள் மட்டுமே ஆணாக கருதப்படுகிறார். ஏனெனில் அவர் மட்டுமே கொடுப்பவர். அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண், பெண் என அனைவருமே பெண் தன்மையுடன் இருந்தால் (receptive nature) மட்டுமே அவரிடமிருந்து பெற்று கொள்ள முடியும்.

இரண்டாம் நிலையில் இவ்வாறு பெற்று கொண்ட வல்லமையை, அருளை மற்றவர்களுக்கு வழங்குவது. இதற்கு ஆண் தன்மை கொண்டவர்களே (agressive nature) தேவை. ஆண் என்பவன் இந்த தன்மையை இயல்பாக பெற்றிருப்பதால் ஆன்மிகத்தை பரப்பும் பணியில் ஆண்களே எல்லா மதத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடவுளிடமிருந்து பெற்று கொள்வதில், பெண் தன்மையும், அதை பரப்புவதில் ஆண் தன்மையுடனும் செயல்படுபவர்களே இதற்கு சரியானவர்கள். ஆகவே ஆண்களே இதற்கு என நியமிக்கப்படுகிறார்கள். 

(தொடரும்)


 முழுவதும் ஏற்புடையதான நடுநிலையானதும் வேதத்துக்கும் பொருந்தக்கூடியதுமான இதுபோன்ற கருத்துகளின் பின்னணியை நண்பர் சந்தோஷ் அவர்கள் தயவுசெய்து குறிப்பிடவேண்டுகிறேன். அதாவது இந்த கருத்து சந்தோஷ் அவர்களின் சொந்த கருத்து அல்ல,அவர் ஆய்ந்தறிந்த வேற்று மத நூல்களின் சாரம் போலிருக்கிறது.ஆனாலும் அது வேதத்துக்கு எதிராகவும் இல்லை. அதனால் அவற்றை முழுவதுமே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. நண்பர் சந்தோஷ் அவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட தொடுப்புகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறேன். (ஏற்கனவே நம்முடைய முன்னாள் நண்பர் ஒருவர், புத்தர் மூலமும் ஆண்டவர் பேசியிருக்கிறார் என்று கட்டுரை போட்டார்; அதுபோலாகிவிடக்கூடாது...biggrin)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரி கோல்டா அவர்களே,

இந்த வசனம் ஆண்களான அவரது சீடர்களை பார்த்து இயேசு கிருஸ்து கூறியதுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் எனில் யூத சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாகும். யூத சமுதாயம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா சமுதாயமும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான். (இதற்கான காரணம் மிகவும் சுவாரசியமானது) யூத சமுதாயத்தில் ஆண் ஆதிக்கத்தின் அளவு மிகவும் அதிகமாகும்.

தாயும்‍‍ ‍ தந்தையுமான தேவனை இவர்கள் ஆணாக மட்டுமே பார்த்தவர்கள். இப்படிபட்ட சமுதாயத்தில் பெண்களின் வார்த்தைகளை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள். அது மட்டுமல்லாது, சுவிசேஷம் அறிவிப்பது என்பது மிகவும் ரிஸ்க்கான விஷயமாகும். இதற்கு பெண்களை அனுப்பி அவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்த இயேசு கிருஸ்து ஒருபோதும் விரும்பியிருக்க மாட்டார்.

தங்குவதற்க்கு இடமில்லாது அலைய வேண்டிய சூழ்னிலையில் சுவிசேஷம் சொல்ல வேண்டி வந்தாலும் வரலாம். இந்த சூழ்னிலைகள் பெண்களுக்கு ஏற்றது அல்ல.

ஆகவே சீடராக வேண்டியது என்பது ஆண்‍ பெண் என இருபாலருக்கும் பொதுவானது. அதிலும் பெண்கள் தாழ்மையை இயல்பாக பெற்றிருப்பதால் தேவ்னிடம் பக்தி செலுத்துவது அவர்களுக்கு எளிமையானது.

ஆனால் சீடாரக்க வேண்டியது என்பது ஆண் பாலருக்கு மட்டுமே உரியது.

பெண்கள் ஒரு குறுகிய வட்டத்தில் பெண்கள், குழந்தைகள் போன்றோர் மத்தியில் ஊழியம் செய்யலாம். தங்கள் சாட்சியை பகிர்ந்து கொள்ளலாம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Matthew 28:19 Therefore go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, 20 and teaching them to obey everything I have commanded you. And surely I am with you always, to the very end of the age.”

இந்த வசனம் ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்துமா சகோ சந்தோஷ் அவர்களே!!

அத்துடன் நீங்க சொன்னபடி சமூகம் பெண்களை மதிப்புடனும், மரியாதையுடனும், அன்புடனும் நடத்தினால் பெண்களுக்கு என்ன கவலை??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

Matthew 28:19 Therefore go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, 20 and teaching them to obey everything I have commanded you. And surely I am with you always, to the very end of the age.”

இந்த வசனம் ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்துமா சகோ சந்தோஷ் அவர்களே!! அத்துடன் நீங்க சொன்னபடி சமூகம் பெண்களை மதிப்புடனும், மரியாதையுடனும், அன்புடனும் நடத்தினால் பெண்களுக்கு என்ன கவலை??


 கோல்டா வநதிட்டாங்கில்லே...இனி அனல் பறக்கும் பாருங்கே...!!! நல்லா கேட்டீங்களே கேள்வி... அதுவும் நீங்க கேள்வி கேட்டவர் இன்னும் சூப்பர்... அவராவது விவாதத்துக்கு வருவதாவது...அவருக்குத் தெரிந்ததை கட்டுரை பாணியில் எழுதிவிட்டு ஓடிடுவார். ரொம்ப சாஃப்ட் பெர்ஸன்..!!!

அன்பான நண்பர் சந்தோஷ் அவர்களே நீங்கள் முழுக்க முழுக்க ஆவிக்குரிய ரீதியில் எழுதாவிட்டாலும் செக்குலர் ஸ்டேடஸிலிருந்து நீங்கள் எழுதியிருப்பவை சூப்பர் ரகம்...என் ஓட்டு இப்போதைக்கு உங்களுக்கே..!!!

தோழி கோல்டாவும் சாதாரணமானவரல்ல...அவர் அறிய விரும்பும் காரியங்கள் அதிகமாக இருப்பதால் ஊற்றெடுப்பதுபோன்ற பாவனையில் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். அதாவ்து அவர் சத்தியத்தின்மீது இன்னும் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

ஆணின் பாதுகாப்பில் பெண் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது தங்களுக்கு இழுக்கு என்று அனேக பெண்ணுரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையில் பெண்கள் எந்த சிரமமோ, துன்பமோ படாமல் இருக்கவும், அவைகள் வரும் போது ஆண்கள் அதை தாங்கி கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சமுதாயம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு வழியாகும். இதன் மூலம் மனித‌ இனமானது தழைக்கவும், மென் மேலும் முன்னேறவும் ஏற்ற சூழல் உருவாகிறது.

இயற்கை விதிகளின்படி ஆண் என்பவன் கொடுப்பவனாகவும், பெண் என்பவள் பெற்று கொள்பவளாகவும் இருக்கிறாள். ஆணின் இயல்பு கொடுப்பது (agressive) ஆகும். பெண்ணின் இயல்பு (receptive) பெற்று கொள்வது   ஆகும்.

ஆன்மிகத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று கடவுளிடமிருந்து வல்லமையை, அருளை, இரக்கத்தை  பெற்று கொள்வது.

இரண்டு பெற்று கொண்ட வல்லமையை, இரக்கத்தை, அருளை மற்றவர்களுக்கு கொடுப்பது, சொல்வது. இதன் மூலம அதை குறித்து அறியாதவர்கள் அதைக் குறித்து அறிய வழி வகை செய்வது. அறிந்தவர்கள் அவர்கள் செல்லும் பாதையில் இருந்து மாறாமல் இருக்க வழி செய்வது.

முதல் நிலையில் கடவுள் மட்டுமே ஆணாக கருதப்படுகிறார். ஏனெனில் அவர் மட்டுமே கொடுப்பவர். அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண், பெண் என அனைவருமே பெண் தன்மையுடன் இருந்தால் (receptive nature) மட்டுமே அவரிடமிருந்து பெற்று கொள்ள முடியும்.

இரண்டாம் நிலையில் இவ்வாறு பெற்று கொண்ட வல்லமையை, அருளை மற்றவர்களுக்கு வழங்குவது. இதற்கு ஆண் தன்மை கொண்டவர்களே (agressive nature) தேவை. ஆண் என்பவன் இந்த தன்மையை இயல்பாக பெற்றிருப்பதால் ஆன்மிகத்தை பரப்பும் பணியில் ஆண்களே எல்லா மதத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடவுளிடமிருந்து பெற்று கொள்வதில், பெண் தன்மையும், அதை பரப்புவதில் ஆண் தன்மையுடனும் செயல்படுபவர்களே இதற்கு சரியானவர்கள். ஆகவே ஆண்களே இதற்கு என நியமிக்கப்படுகிறார்கள். 

(தொடரும்)

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

ஆன்மிக பணியில் பெண்களின் நிலை என்ன?

ஆன்மிக பணியில் பெண்களின் நிலை என்ன? என்பது, உலகில் உள்ள எல்லா மதங்களாலும் ஒரே மாதிரியாக தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். அதற்கு கிருஸ்துவமும் விதிவிலக்கல்ல.

ஏன் எல்லா மதங்களிலும் ஆன்மிக பணியை பரப்பும், எடுத்து சொல்லும் பணியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் மிகவும் இயல்பானதும், உளவியல் ரீதியாக ஆனதுமாகும்.

ஆண் மற்றும் பெண்ணின் இயல்புகள் வித்தியாசமானவை. ஆண் என்பவன் வீரத்தை வெளிப்படுப்பவனாகவும், பெண் என்பவள் இரக்கத்தை வெளிப்படுத்துபவளாகவும் இருக்கிறாள். உலகம் சரியாக இயங்குவதற்க்கு இவை இரண்டு அம்சங்களும் சரியாக சமன்பட்டு இருக்க வேண்டும்.

பெண் என்பவள் கருவை சுமந்து இந்த உலகில் புதிய உயிர்களை உருவாக்குபவள். ஆண் என்பவன், பெண் இந்த உலகில் எந்த பிரச்சனையுமில்லாமல் வாழ தகுதியான சூழலை உருவாக்க வேண்டியவன். எல்லா சூழ்னிலைகளில் இருந்து அவளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஆணின் கடமையாய் இருக்கிறது. அதனால் அவன் வீரம் உள்ளவனாக இருக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது. இதை பெண்ணின் மற்றும் ஆணின் உடலமைப்புகளும் உறுதி செய்கின்றன.

அந்த காலங்களில், பெண்களை போருக்கு அனுப்புவது என்பது அனாகரிகமாக கருதப்பட்டது. ஏனெனில் பெண்கள் போருக்கு சென்று இறக்கவோ அல்லது காயப்படவோ நேர்ந்தால் அவளால் கருவை சுமக்க முடியாமல் போவதால் அந்த குறிப்பிட்ட இனமே அழியும் ஆபத்து உண்டு. ஆனால் சில ஆண்கள் மட்டும் இறந்தால்,   பெண்களின் மூலம் அந்த இனம் தழைக்க வாய்ப்புண்டு.

நவீன காலத்தில், ஆண்களுக்கு இணையாக அதெலெடிக், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் பெண்களின் உடலமைப்பு மாறுவதால் அவர்கள் ஆண்களை போல தோற்றமளிப்பதையும், ஆணுக்குரிய குணாசதியங்கள் அவர்களுக்கு வருவதையும் காண முடியும். இப்படிபட்ட நிகழ்வுகள் அந்த பெண் கரு தரிக்கும் வாய்ப்பையும், அவளது இயல்பான குணமான அன்பையும், சமுதாயத்தில் பிற ஆணுடன் அவள் தொடர்பையும் பாதிக்க கூடும்.

(தொடரும்)



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களே!!


வேதம் கூறுகிறது...

கலாத்தியர் 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

இது பொதுவானது. கிறிஸ்து என்ற சரீரத்தில் அனைவர்க்கும் ஒரே பணி கிடையாது. பேதமற்ற இயேசுவின் சரீரமாகிய சபையில் ஸ்திரியானவளுக்கு பேச அனுமதி இல்லை.. (வேதம் சொல்லுகிறதை தான் கூறுகிறேன்.)

இதை பற்றி விரிவாய் பேசினால் பொதுவாக பெண்கள் மனமடிவடைவது சகஜமே!! வேதம் பெண்ணுரிமைகளை மதி
க்கிறதில்லை என்றும் சொல்லுவார்கள்.. அப்படி பட்டவர்கள் கிறிஸ்துவின் சபை முழுவதும் பெண்ணாகவே வேதமெங்கும் உருவகபடுத்தபடுவதை  அறிவார்களாக!!

சரி,பின் வரும் வசனம்  பெண்கள் சபையில் பேசுவதை குறித்து நாம்  விளங்கிக்கொள்ள கூடிய வேத தீர்மானத்தை 
தெளிவாய் விளக்குகிறது.

I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்துதலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

கவனிக்க!!!

மேற்கண்ட வசனத்தில் பெண்ணானவள் யாருக்கும் தலையாக கொடுக்கப்படவில்லை!!

தலையில் தானே வாய் இருக்கும்.வாய் தானே போதிக்கும்.

SIMPLE!!!!
வேதம் காட்டும் சபை ஒழுங்கில் பெண்கள் பேச,போதிக்க,உபதேசிக்க அனுமதி இல்லை என்பதைவ மேற்கண்ட வசனத்தின்படி  குழப்பமில்லாமல் அறியலாம்.

I கொரிந்தியர் 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

சபையில் ஸ்திரி பேசுகிறதை வேதம் அயோக்கியம் என்றால்,நாம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்!!! அ
வ்வாறு இவ்வோழுங்கை ஏற்று 
கொள்ள மனதில்லாது இருப்போமானால் தேவ நியமனங்களை மீறினவர்களாவோம்!!

தேவ நியமனங்களில் ஒன்றை மீறினாலும் அனைதையையும் மீறினதாகவே பொருள் என்று இவர்கள் அறியார்களா என்ன??


(இன்றைக்கு அப்போஸ்தல ஊழியம் செய்வதாக கூறிகொள்ளும் போதிப்பவர்கள் தங்கள்  மனைவிமாரை  போதிக்க அனுமதிகிரார்கள் -அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை முன்னிட்டு உலகத்தை பகைத்தவர்கள் என இவர்கள் எப்போது  அறிவார்கள்!!).


நான் அறிந்தவரையில்,.போதிக்கிற ஆசாரியர்களுக்குரிய  ஆசாரிய சுதந்தரத்தில் கூட இம்மாதிரியான காரியத்தை வேதம் அனுமதிக்கிறதில்லை..


எபேசியர் 5:32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.



-- Edited by JOHN12 on Friday 13th of April 2012 03:39:15 PM



__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

Still cant get clear in this topic...because we discuss in many places but no clear view in this topic...according to bible verses it says ladies should be calm and learn and she s not allowed to preach is wat bible says according to timothy and corinthians but still many pastors wife and evangelists wife preach in meetings...Pls note i am not against ladies preaching but i am having doubt if bible says like this and we r doing like this which is correct and many in this debate say tat this view in bible s pauls view bible s not pauls view it s the view of holyspirit every single verses in bible is been written by the help of holyspirit, and according to science too ladies r bit emotional and they take decisions in a hurry without accessing the situation and if some tough situations come in ministry r church many ladies in Bible r nowadys ladies in ministry i had sawn take decisions from their flesh like sara, eve, rachel,lots wife pls note tat i am not against any women preaching i want to get clear so i am posting wat my view if i am wrong i am ready to change my view, k if we see in new testament too wen jesus selected 12people to lead after his exit he didnt choose a single women why jesus did tat jesus dont know tat women r strong as someone mentioned tat even jayalalitha comes we can immerse her in water and lift her up we have the strength, in god's ministry physical strength dosent matter it s mental strength wat matters how long we can wait for the lord abraham didnt took a decision it was sara who took the decision in a hurry and like all husbands in the world he too was like aama samy(done my dear)..and wen comes to kings who rule the israel people too god didnt choose a women he chose saul k if  say saul was a failure but he again didnt choose a women it was david who came to tat place....think of it dont get angry with me think with a braoder mind, if we look at Jesus ministry also u can see ladies wr doing a different ministry and men wr doing the preaching ministry k u will say tat samaria women did tat preaching jesus to the whole city i say she shared Jesus to them and they accepted him and after tat i dont know wat she did, mary, mary magdalene etc didnt preach anywhere in their church r didnt wrote any letters i think because it s not in bible, why jesus didnt give the leadership to mary who was such a holy women but he chose too give it to peter and the apostles think, but wat surprises me s they way the ladies behaved in new testament they obeyed the men who wr leading them they didnt say tat we have equal rights and started to protest like todays women not all but few r like this and they didnt controlled their husbands like some women do today..yes philips daughters prophecised, prophecy s different from leading a church r congregation, one women have mentioned in new testament tat she was elder of a church s i think there may not be proper men to lead so it would be k and i dont know the situation there tat s rare case, u cant say it s men dominated society in god's work because evryone s appointed by lord himself to do his part evangelism s different from church leading evangelism all should do but wen comes to leading people god always selcts men i dont know why u have to ask God, And another peculiarinstance s debora who lead people for a war but u can see debora told barak to lead debora who heard god's voice and she told barak to lead since he was not ready r he refused debora says this victory's credit should have gone to u since u refused the credit will come to me and i will come with u....so here too barak was the man to lead but since he refused and no proper men to lead god has no other option but to choose debora and she accepted and she was ready....so my view s God can use men r women tat dosent matter but if there r two options befor God to select man r woman to lead means he always had gone with men...So this s my view i may be wrong and contradict your view but i am ready to correct myself if there s valid explanation given and here i had put some bible examples and God's way of dealing things and choosing people to lead...so posts ur opinion on my view members....GOD BLESS YOU ALL. Sorry i dont know tamil Typing tats why i am typing in english.



-- Edited by Judah on Friday 13th of April 2012 11:45:21 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சரியாக இரண்டு வருடங்கட்கு முன்பு துவக்கப்பட்ட திரியில் இது தொடர்பானதொரு விவாதத்தை சேமிப்பாக பகிர்ந்தேன்;கடந்த 7 நாட்களுக்கு முன்பதாக அதனைப் பகிர்ந்தபோது இதன் பார்வையாளர் எண்ணிக்கை 963 மட்டுமே;ஆனால் இன்றோ அது 2435 என்ற அளவில் இருக்கிறதென்றால் வாசகரின் ஆர்வத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த விவாதம் பதிக்கப்பட்டுள்ள மூல கட்டுரையில் கூட இத்தனை பார்வையாளர்கள் இல்லை. நீங்கள் வேடிக்கை பார்க்கிறீரா அல்லது தெளிவு பெற்றீரா அல்லது தங்களிடம் மாற்று கருத்து ஏதேனும் இருக்கிறதா இப்படி எதுவுமே தெரியாமலே இருக்கிறோம்.எனவே நம்முடைய தளத்தைப் பார்வையிட்டுச் செல்லும் ஒவ்வொரு வாசக நண்பருக்கும் நாம் முன்வைக்கும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தங்கள் மேலான கருத்துக்களை தனிமடல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தாராளமாக வெளிப்படுத்தலாம் அல்லது விவாததில் பங்கேற்றாலும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவோம்.அடியேனுடன் நீங்கள் பேச விரும்பினாலோ சந்திக்க விரும்பினாலோ மடல் மூலம் அதனைத் தெரிவிக்கவும்.தாங்கள் கடந்த மூன்று வருடத்துக்கும் மேலாக அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உண்மையில், எங்கள் திருச்சபையில் பெண் குருவானவர் என்று யாரும் நியமிக்கப்படவில்லைதான். ஆனால், ஒரே ஒரு டீக்கனஸ் (பெண் டீக்கன்) இருக்கிறார். ... அந்த டீக்கனஸ் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை யாராவது எதிர்க்க நினைத்தால்...


பிரச்சினையே இல்லை,நண்பரே...குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் சபையில் பெண்களை குருத்துவ ஊழியத்தில் ஈடுபடுத்த எந்த தடையும் இல்லை.அப்படியும் யாராவது ஒரு பிற்போக்குவாதி தடுத்தால் அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு போட்டு அதனை சாதிக்கலாம்.எங்கள் ஊரில் அலிகளே குருத்துவ பணியை மேற்கொள்ளும்போது உங்களுக்கு என்ன கவலை ? ஆனால் அப்போஸ்தல உப்தேசத்தில் பெண்களை பிரதான ஸ்தானத்தில் அமர்த்தும் வழக்கம் இல்லை. அதாவது மரபு இல்லை.மரபை மீறுவோர் கலகம் செய்வோர் ஆவர். இதனை வலியுறுத்த இதே திரியில் எத்தனையோ வசனங்களைப் பதித்தும் அதைக் கூட பொருட்படுத்தாமல் தனி நபர்களை நோக்கியே கருத்துக்கூறுகிறார்கள். உதாரணமாக ப்ரோட்டோகால் எனும் மரபு அரசு விழாக்களில் இருப்பது போல வேதத்திலும் இருக்கிறது. அந்த வசனத்தையே யாரும் பொருட்படுத்தவில்லை என்பது உள்ளபடியே எனக்கு வருத்தம்தான்.ஒருவர் ஒரு கருத்தை எழுதினால் அதனை மேற்கொள் காட்டி பாராட்டியோ கண்டித்தோ எழுதுவது நம்முடைய வழக்கம்.ஆனால் தற்காலங்களில் அதனை யாரும் கடைபிடிக்கிறதில்லையோ என்று யோசிக்கிறேன்.

  • I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.


இங்கு நான் குறிப்பிட்டுள்ள இந்த வசனத்தை இதே திரியில் யாராவது பொருட்படுத்தி ஒரு வரியாவது எழுதியிருந்தால் எனக்கு எடுத்துச்சொல்லுங்கள். இதற்கு எதிராக யார் என்ன விளக்கம் தரமுடியும் ? அதேபோல ஆணை பெண்ணுக்கு கீழ்ப்படிந்திருக்கச் சொல்லி ஒரு வசனம் கூட கட்டளையிடவில்லை.ஆனால் அன்புகூறச் சொல்லுகிறது. ஆனால் பெண் எப்போதும் ஆணுக்குக் கீழ்ப்படிந்திருக்கவே வேதம் சொல்லுகிறது. அப்படியிருக்க ஒரு பெண் எத்தனை பரிசுத்தவாட்டியாக இருந்தாலும் ஒரு ஆணைப் பிடித்து அணைத்து திருமுழுக்கு தருவது கற்பனை செய்தும் பார்க்கமுடியாத அருவருப்பாகவே இருக்கும். ஒரு வேளை உலகில் ஆண்களுக்கு பஞ்சம் உண்டாகி வேதம் சொல்லுவது போல ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற அளவில் ஜனத்தொகையின் சமநிலை சிதைந்து போனால் மாத்திரமே ஆண் ஊழியர்களுக்கு பஞ்சம் உண்டாகும். அதேபோல திருமணத்திலும் சவ அடக்கத்திலும்- ப்ரோட்டோகால் எனும் மரபின்படி ஆண் தான் முதலில் சிருஷ்டிக்கப்பட்டவன்- இறைவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவன் என்பதால் அவன் வழியே இந்த முக்கிய சாக்கிரமெந்துகள் மேற்கொள்ளப்படவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


1 Timothy 3:2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

இது கண்காணியான ஆணுக்கு சொல்லப்பட்டது. ஆண்கள் பல தார மணம் செய்யும் பழக்கம் இருந்ததால், பவுல் அது கூடாது என்று அக் காரியத்தை வலியுறுத்தி ஆண்களுக்கு சொல்கிறார். வாசித்துக் கொண்டே வந்தால் ஸ்தீரிகளைப் பற்றி சம்பந்தமில்லாமல் பேசும் இவ்வசனம் வருகிறது

11. அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.

அந்தப்படியே? எந்தப்படியே?? திடீரென்று ஸ்தீரீகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இங்கு என்ன வந்தது?? இந்த வசனத்தில் வரும் ஸ்தீரீகள் யார்? இவர்களும் கண்காணிகள் அல்லது உதவிக்காரர் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களே. அப்படிப்பட்ட ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட பெண்களின் தகுதி எப்படியிருக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.அப்படி புரிந்து வாசித்தால்தான் இவ்வசனம் இங்கு சரியாகப் பொருந்தும்.


chillsam:- ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் மாற்றி மாற்றி சொல்லுவதாகவே இதைக் கொள்ளவேண்டும். எப்படியெனில் ஏற்கனவே முந்தைய அதிகாரத்தில் உபதேசிக்கவோ அதிகாரம் செலுத்தவோ அனுமதியில்லை என்று சொல்லியிருக்கிறார். அவரே அதை எப்படி மாற்றி சொல்லுவார் ? இன்னும் புரியவேண்டுமானால் இந்த வேதபகுதியிலுள்ள வசன எண்களை நீக்கிவிட்டு ஒரு கடிதம் போல வாசித்துப்பார்க்கவும். சகோதரி சொல்லுவது போல இருபாலருக்கும் பொதுவானதாக இந்த வசனங்களை வாசித்தால் அசிங்கமாக இருக்கும்.பவுலடிகள் பெண்கள் மீது மிகுந்த மரியாதையுள்ளவர் என்றே நான் நம்புகிறேன். (ஒரே புருஷனையுடைய மனைவி கண்காணியாகலாம் என்று பவுலடிகள் கூறுவதாக எடுத்துக்கொள்ளணுமா, என்ன ???)

”வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. ” (2.பேதுரு.1:20)

எனவே சொந்த வியாக்கியானங்கள் கொடுக்கும் துணிகரம் நமக்கு வேண்டவே வேண்டாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

pgolda Wrote on 08-04-2012 03:37:26:
Paul222 Quote: ”தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும்,இரண்டாவது தீர்க்கதரிசிகளையும்,மூன்றாவது போதகர்களையும்,பின்பு அற்புதங்களையும்,பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும்,பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்”.

இந்த வரங்களை கூட ஆண்களுக்கு ஆவியானவர் கொடுக்கிறார் என அதே அதிகாரத்தில் 11 ஆம் வசனம் கூறுகிறது

”இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து,தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப்பகிர்ந்து கொடுக்கிறார்

இதில் அவனவன் என குறிப்பிடுவது ஆண்களைத்தான் என நான் கருதுகிறேன்

அப்படிப் பார்த்தால் எந்த வசனத்தையும் பெண்கள் தனக்கென்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லாமே ஆண் பாலுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது!! பெண்கள் வேதம் வாசிக்க அவசியமில்லை!!

Golda: - நல்ல காமெடி!!!


Chillsam:- நண்பர் பால்222 குறிப்பிட்டுள்ள கருத்தையே நானும் எழுத இருந்தேன்... அல்லது நான் எழுதியதிலிருந்து இதேவிதமான கேள்வி எழும் என்று எதிர்பார்த்தேன். எனவே நானும் நிதானமாக வேதத்தை வாசித்தேன். அதில் குறிப்பிட்ட வேத பகுதியிலிருந்து நான் பெற்றுக்கொண்ட வெளிச்சம் எனக்குப் போதுமானதாக இருக்கிறது.சிலரைப் போல, கருதுகிறேன், நினைக்கிறேன், என்பதாக யூகமான விசுவாசம் எனக்குத் தேவையில்லை. சிலருடைய நல்லெண்ணம் பாதிக்கப்படுமே என்ற பாகுபாடும் எனக்குக் கிடையாது. தங்களிடம் சத்தியம் இருப்பதாக நினைத்திருக்கும் நண்பர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.ஆனால் இன்னும் அரச இலை நுனியளவு கூட ஏறிவர விரும்பாத நண்பர்களுக்கு சமமாக போராட என்னால் முடியாது.

நான் வாசித்த வேதபகுதியிலிருந்து....

  • 11.ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
  • 12. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
  • 13. என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
  • 14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
  • 15. அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். (1.தீமோத்தேயு.2)
  • 1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
  • 2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். (1.தீமோத்தேயு. 3)

மேற்காணும் வேதபகுதி தொடர்பாக நான் சிந்தித்தது என்னவென்றால், வேத வசனங்கள் இருபாலருக்கும் பொதுவாகவும் பொதுவான வழக்கத்தின்படி ஆண்பாலை மையமாகக் கொண்டும் எழுதப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த வேதப் பகுதியானது அப்படியல்ல. ஏனெனில் பவுலடிகள் எழுதிய நிருபமானது அது எழுதப்பட்டபோது அதிகாரங்களாகவும் வசனமாகவும் எழுதப்படவில்லை.பிறகே அவ்வாறு பிரிக்கப்பட்டது.எனவே இதிலிருந்து நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் பவுலடிகள் தெளிவாக குழப்பத்துக்கும் சர்ச்சைக்குமிடமின்றி எழுதியிருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின்படி இதனை எழுதியவர் பவுலடிகள் என்று நாம் சொன்னாலும் இது ஆவியானவரே சபைக்காக எழுதிக்கொடுத்ததாகும். அந்த நடுக்கத்துடன் வாசித்தோமானால் நிச்சயமாகவே தெளிவு பிறக்கும். ஸ்திரீகள் தொடர்பான ஆலோசனைகளை எழுதிய பிறகு ஆண்கள் தொடர்பானவை துவங்குவதால் இந்த வேதபகுதியை இருபாலருக்கும் பொதுவானதாகக் கொள்ளக்கூடாது என்பதே எனது கருத்தாகும். இதற்கு உதவியாக 2- ம் அதிகாரத்தின் கடைசி பகுதியையும் 3 ம் அதிகாரத்தின் ஆரம்பத்தையும் இணைத்து வாசித்துப் பார்க்கவும்.

நான் ஒரு சபைக்கு தலைவராக இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; நான் அவசர காரியமாக ஏதாவது ஊருக்கு செல்லும் போது எனது சபையை நடத்தும் பொறுப்பை எனது மனைவியிடம் ஒப்படைத்துச் செல்வதை வேதம் கற்றுத்தரவில்லை.எனது சபையின் மூப்பர்களிடம் ஒப்படைக்கவே சொல்லுகிறது. அதனை நான் மீறி எனது மனைவியிடமே நான் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு மூப்பர்களை ச்சும்மா எடுபிடிகளைப் போல நடத்தினால் நான் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றவில்லை. ஏனெனில் இயேசுவானவர் தமது சபையின் பொறுப்பை தமது தாயாகிய மரியாளிடம் அல்ல,பேதுரு உள்ளிட்ட அப்போஸ்தலர்களிடமே ஒப்படைத்துச் சென்றார். நான் எனது மூப்பர்களை நம்பாவிட்டால் அது அவர்களுடைய பெலவீனம் அல்ல,என்னுடைய பெலவீனமாகும். எனதுஅழைப்பே கேள்விக்குறியாகிறது.

இறுதியாக நம்முடைய கரத்தில் தவழும் பரிசுத்த வேதாகமத்தில் இருபாலருக்கும் பொதுவான கட்டளைகளும் ஆண்களுக்கு மட்டுமேயான கட்டளைகளும் பெண்களுக்கு மட்டுமேயான கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றை ஆவியானவரின் துணையுடன் வாசித்து தியானித்தால் நிச்சயமாகவே சத்தியம் வெளிப்படும்.கர்த்தர் தாமே நம்மை நடத்துவாராக.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham Wrote on 08-04-2012 01:58:02:

@chillsam Wrote on 07-04-2012 00:44:31: /// குருத்துவ பாரம்பரியத்தில் ஊறிப்போன திரு.ராவங்க் ஜாண்சன் ///

நீங்க எந்த பாரம்பரியத்தில் ஊறிப் போயிருக்கீங்க?

@paul222 Wrote on 07-04-2012 23:42:39: /// ”தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும்,இரண்டாவது தீர்க்கதரிசிகளையும்,மூன்றாவது போதகர்களையும்,பின்பு அற்புதங்களையும்,பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும்,பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்”.

இந்த வரங்களை கூட ஆண்களுக்கு ஆவியானவர் கொடுக்கிறார் என அதே அதிகாரத்தில் 11 ஆம் வசனம் கூறுகிறது

”இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து,தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப்பகிர்ந்து கொடுக்கிறார்

இதில் அவனவன் என குறிப்பிடுவது ஆண்களைத்தான் என நான் கருதுகிறேன்

சகோ. பால் இது உங்கள் சொந்தக் கருத்தாகவே இருக்கட்டும். உங்களுடைய கருத்தின் படி பார்த்தால் ஆண்கள் மட்டுமே ஆவியானவரைப் பெற தகுதியானவர்கள் என்று தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேத பகுதியில் அவனவனுக்கு என்பது ஆண்களை மட்டும் குறிக்காமல் எல்லோரையும் சேர்த்து பொதுப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய கிருபை பகிர்ந்தளிக்கப்படுவது போல வரங்களும் பகிர்ந்தளிக்கப்படுவதை அப்.பவுல் இங்கு கூறுகிறார்.

@chillsam Wrote on 07-04-2012 22:44:00: http://tamilchristians.com/index.php?option=com_poll&id=21:2012-04-04-21-42-25

நம்முடைய தளத்தின் முகப்பில் அதிமுக்கியமானதொரு காரியத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது.ஓட்டு போட்டுள்ளவர்களில் 27 பேர் கேள்விக்கு ஆதரவாகவும் 16 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். 8) இதன் முடிவில் நல்லதொரு சுமூகமான தீர்வு உண்டாகும். அந்த தீர்வு வேதத்துக்குப் புறம்பாக இருந்தாலோ ஆவியானவரை துக்கப்படுத்தினாலோ யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. இது என்னங்க,ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானிக்கிற காரியமா ? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ? புரியலையே..!


நாம் ஓட்டெடுப்பு நடத்தினவுடன் எல்லா பெண்களும் குருத்துவ ஊழியத்துக்கு வந்துவிடப் போகிறார்களா? அல்லது சபைத்தலைவர்கள்தான் விட்டுவிடப் போகிறார்களா? அப்படி அல்ல. ஒரு கருத்தைப் பற்றி விவாதிக்கும்போது அதற்கான கருத்து தெளிவு உண்டாக்கவும் பதிவிட முடியாதவர்களும் தங்கள் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தவுமே ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

arputham Wrote on 08-04-2012 02:11:13:  /// கர்த்தரை முன்னிட்டு ...///

 


>:(>:(>:( ஸூப்பர் ஜோக்...ஸார்...! இன்னும் கர்த்தர் ஆம்பளையா பொம்பளையா’ன்னு கூட அரசரடி வேதாகமக் கல்லூரியில் விவாதம் நடக்குதாம்...!

arputham Wrote on 08-04-2012 01:58:02:

@chillsam Wrote on 07-04-2012 00:44:31: /// குருத்துவ பாரம்பரியத்தில் ஊறிப்போன திரு.ராவங்க் ஜாண்சன் ..///

நீங்க எந்த பாரம்பரியத்தில் ஊறிப் போயிருக்கீங்க?

 

chillsam:- சொல்லிடுவேன்... ஆனா,அல்லாரும் அழுதுடுவாங்களே... (என்னை நீக்கற நேரம் நெருங்குது’ன்னு நினைக்கிறேன்... >:( ) அது எப்படி சார், நான் கஷ்டப்பட்டு பக்கம் பக்கமா எழுதறதையெல்லாம் புறக்கணிச்சுட்டு வம்புக்கே இழுக்கறீங்க..??? நான் எழுதிய கருத்துக்கு தானே பதில் எழுதணும், தனிப்பட்ட தாக்குதல் கூடாது என்று ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டு என் பாரம்பரியத்தைக் கிளறுகிறீர்களே..??? அப்புறம் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? இதே கேள்வியை ராவங்க் அவர்கள் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன்...ஆனால் நீங்கள் தேவையில்லாமல் இடைபட்டு- ”குருத்துவம்..” என்பதே பைபிளில் இல்லை என்ற உங்கள் கருத்தையொட்டி எழுதிய என்னை வெட்டியெறிய முயற்சிக்கிறீர்களே, இது நாயமா..???



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

rajkumar Wrote on 07-04-2012 15:30:59:
குரு என்றால் சீஷர்கள் இருக்க வேண்டும், சபை ஆயர்கள் உட்பட இயேசுவின் சீஷர்களாக இருக்கவே அழைக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய புதிதான ஒரு சித்தாந்தத்தை கற்பிக்கிறதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல அப்படி ஒருவர் செய்வாராயிலன் அவர் கள்ளப் போதகர் என்றே அறியப்படுவார், பெண்கள் ஊழியம் செய்வதில் தடையில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது, ஆனால் குருத்துவத்துக்கு அடுத்த காரியத்தில் மாத்திரம் பெண்களுக்கு உரிமையில்லை என்கிறீர்கள், உங்கள் கருத்தை வழிமொழிகிறேன், ஏனென்றால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குருத்துவத்துக்கு அழைக்கப்படவில்லை, எல்லோரும் கிறிஸ்துவுக்கு சீஷர்களாக இருந்து ஊழியம் செய்யவெ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவேளை சபையின் தலைமை பொறுப்பை பெண்கள் ஏற்கக்கூடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தால் அதற்கான வேத ஆதாரத்தைத் தாருங்கள்.....


வேதத்தின் ஒரு வசனத்தையாகிலும் பாதிக்காத அல்லது அதை மீறாத ஒரு பதிலையே நாம் எதிர்நோக்கியிருக்கிறோம் என்பது உண்மையானால் குருத்துவம் என்பது வேதத்தில் இல்லை என்றே கொள்வோம்.ஏனெனில் நம்முடைய ஆண்டவரே நேரடியாக அதனை குறிப்பிட்டிருக்கிறார்.அவருக்கு மிஞ்சினது எதுவுமில்லை.அது பவுலானாலும் சரி,பேதுருவானாலும் சரி...அவருக்கு மிஞ்சி யாரும் எதையும் செய்யவில்லை.அவ்வாறு ஆண்டவருடைய காலத்தில் வெளிப்படவில்லை,அவர் பரமேறிச் சென்றபிறகு ஆவியானவரின் காலத்தில்தான் வெளிப்பட்டது என்று சொல்லி யாராவது எதையாவது திணித்தாலும் அதனை ஆராயாமல் ஏற்கவேண்டிய அவசியமில்லை.

இதன்படி நண்பர் ராஜ்குமார் போன்ற ஆர்வமுள்ளோர்- வளரும் நிலையிலுள்ளோர் அப்போஸ்தல நடபடிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கட்டும்.அதில் பெண்களில் யாரும் அப்போஸ்தலர்களாகவோ சுவிசேடகர்களாகவோ அனுப்பப்படவில்லை என்று காண்கிறோம். குருத்துவ பணி என்ற புரிதலில் நாம் அதனை அப்போஸ்தலர் அல்லது மேய்ப்பர் அல்லது சுவிசேஷடகர் என்போம். பவுலடிகளின் காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரிகளும் கூட மூப்பர் பணியினையே செய்திருக்கின்றனர்.அதனை விதிவிலக்குகள் அதாவ்து தகுந்த ஆண்கள் இல்லாத சமுதாயத்தில் நிகழ்ந்ததெனக் கொள்ளுவோம்.

அடுத்ததாக அனைவருமே சீடர்கள் தானே,எனவே யாருமே மேய்ப்பர்கள் இல்லை என்கிறீர்கள்.அதாவது குருத்துவப் பணியில் ஆண்களும் இருக்கமுடியாதே என்கிறீர்கள்.இதற்கு உதாரணமாக பேதுருவை எடுத்துக்கொள்ளுவோம்.அவர் இயேசுவானவரின் பிரதான சீடனாக வர்ணிக்கப்படுபவர்.ஆனால் இயேசுவானவர் பரமேறிச் செல்லப் போகும் சூழலில் அவரிடம் ஆண்டவர் கட்டளையிட்டது என்ன, என்னுடைய ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லவில்லையா ?

  • 15. அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
  • 16. இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
  • 17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான்.21)


ஒரு வாதத்துக்காகவே கேட்கிறேன், இதே கட்டளையை ஏன் ஆண்டவர் முதன்முதலாக தாம் தரிசனமளித்த மகதலேனா மரியாளுக்குத் தரவில்லை ? இதையும் ஏற்கனவே நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.ஆனால் சில்சாம் எழுதுகிறான் என்ற ஒரே எண்ணத்துடன் எல்லோரும் வாசிப்பதால் கருத்துக்கு முக்கியத்துவம் தருகிறதில்லை.நுனிப்புல் மேய்வது போல எதையோ கொறித்து விட்டு துப்பிவிட்டு செல்லுகிறார்கள்.இது ஒருவித திருப்தியடைந்த மனநிலையினால் உண்டாகும் குறைபாடாகும். மெய்யாகவே ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் தேடினால் நிச்சயமாகவே சத்தியமானது தன்னை வெளிப்படுத்தும்.இத்தனைக்கு பிறகும் நான் பொறுமையாக பதிலளிக்கக் காரணமே நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதாக நான் நினைப்பதாலேயே. மற்றபடி என்னை வாதத்தில் மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு எனது பதில் வேறுவிதமாகவே இருக்கும் என்பதை என்னுடைய நண்பர்கள் நன்கு அறிவார்கள்.இங்கே நான் எதை எழுதினாலும் அது ஏற்கனவே நான் சொன்னது போல இருக்கிறது. தேவைப்பட்டால் எனது எழுத்துக்களை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப்பார்க்கவும்.

http://yauwanajanam.activeboard.com/t33959249/topic-33959249/

எனவே இறுதியாக நான் உங்கள் கேள்விக்கு பதிலாகத் தருவது என்னவென்றால் வேதத்தின் ஆதாரம் என்பது சொல்லப்பட்டதிலும் எடுத்துக்கொள்ளலாம்,சொல்லப்படாததிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம். எப்படியெனில் ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காரியத்துக்கான ஆதார வசனத்தை நீங்கள் கேட்கிறீர்கள் எனில் அது சொல்லப்பட்டதால் மட்டுமல்ல,சொல்லப்படாததாலும் அது ஆதாரமே.உதாரணமாக பெண்கள் சபையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படக்கூடாது என்பதற்கு வேத வசனத்தின் ஆதாரம் எங்கே என்ற உங்கள் கேள்விக்கு உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது.அதாவது பெண்கள் சபையின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்பதற்கு உபதேசப் பின்னணியில் ஆதாரம் இல்லையே என்பதே அதற்கான ஆதாரமாக இருக்கிறது. சுபாவத்தின்படியும் நீங்கள் யோசியுங்கள்,திருமுழ்க்கு போன்ற காரியங்களின் பெண்களுக்கு சங்கடமில்லையா ? பெண்கள் பாஸ்டராக பணியாற்றலாம் என்றால் எத்தனை வயதிலிருந்து என்று அடுத்த விவாதம் துவங்கும்.அதுவும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும். எனவே நாமனைவருமே வேதத்திலிருந்தே ஆதாரங்களை எடுத்துக்கொள்ளுவோம்.அது உபதேசமாக மாத்திரமல்லாது சம்பவங்கள் வழியாகவும் மறைமுகமாகவும் கூட சொல்லப்பட்டிருக்கலாம்.

  • I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://tamilchristians.com/index.php?option=com_poll&id=21:2012-04-04-21-42-25

தமிழ் கிறிஸ்தவ தளத்தின் முகப்பில் அதிமுக்கியமானதொரு காரியத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது.ஓட்டு போட்டுள்ளவர்களில் 27 பேர் கேள்விக்கு ஆதரவாகவும் 16 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். 8) இதன் முடிவில் நல்லதொரு சுமூகமான தீர்வு உண்டாகும். அந்த தீர்வு வேதத்துக்குப் புறம்பாக இருந்தாலோ ஆவியானவரை துக்கப்படுத்தினாலோ யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. இது என்னங்க,ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானிக்கிற காரியமா ? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ? புரியலையே..!

குருத்துவம் என்பதே வேதத்தில் இல்லை என்கிறீர்கள்,பிறகு அதே தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்துகிறீர்கள். முரண்பாடாக இருக்கிறதே ?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

paul222 Wrote on 06-04-2012 17:38:39:

இலங்கை பிரச்சனையில் சகோ.சில்சாம் மீது வெறுப்பில் சகோ.கொல்வின் இருப்பதால் சமயம் பார்த்து சில்சாமை குழிபறிக்க முயல்கிறார். சில்சாமின் பிறந்த நாளில் அன்பாக வாழ்த்து கூறிவிட்டு ஒருசில நாட்களில் இப்படி செய்த அவரது நடவடிக்கை சரியல்ல.


chillsam:- மேலும் எனது பிறந்தநாளில் வாழ்த்திய நண்பர்களிடம் எனது ஏற்புரையில் பின்வருமாறு நல்லெண்ணத்துடனே எழுதியிருந்தேன். முக்கியமாக கோல்டா அவர்களின் வாழ்த்தை வலியச் சென்று கேட்டிருக்கிறேன்.அது இதுவரை பொருட்படுத்தப்பட்வில்லை.

chillsam Wrote on 03-04-2012 00:01:26:

@rameshps Wrote on 02-04-2012 19:14:53:

சில்சாம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஆண்டவர் உங்களை உலகிற்கு அனுப்பின நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்ற அன்பின் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே... எப்போதாவது இதுபோல சந்தித்துக்கொள்ளுவதும் உள்ளபடியே சந்தோஷமாக இருக்கிறது.

@rameshps:-ஏப்ரல் 1 என்றால் அது உங்க நண்பர்களின் தினம் என்று வேடிக்கையாக ஒருவர் என்னிடம் கிண்டல் செய்தார். அது மெய்யாலுமே நிறைவேறி விட்டதே....

நீதிமொழிகள் 30:2 மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

(எனக்கு ஆதரவான நண்பர்களைக் கூட பல சமயம் சங்கடப்படுத்தும் அளவுக்கு...) >:(


@rameshps:-என்ன ஒரு வித்தியாசம் இந்த நண்பர் ஒரு அறிவாளி... ஆண்டவருக்காய் வைராக்கியம் பாரட்டும் ஒரு போராளி... ஆண்டவருக்காக கோளியாத் முன் நிற்கும் தாவீது போல....

நண்பரே, எனக்கு பழைய ஏற்பாட்டில் மிகவும் பிடித்த தலைவர் என்றால் அது தாவீது தான்; ஆனாலும் அவருடன் ஒப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு நான் தகுதியானவனல்ல. அவர் மிகப் பெரும் லெஜண்ட் என்பார்களே அதுபோல....நானோ ஆண்டவரோடு நிற்பதற்காக நட்டப்படுமளவுக்கு இன்னும் நான் ஆயத்தமானதாகத் தெரியவில்லை.

நமக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும் இதுபோன்ற தருணங்களே நம்மை இணைக்கும் என்பதால் நம்முடைய தளத்தின் ஒவ்வொரு நண்பருடைய நல்லெண்ணத்துக்காகவும் வாழ்த்துக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.(esp.GOLDA)

கர்த்தருடைய அன்பில் நிலைத்திருப்போமாக.


கொல்வின் அவர்களும் கூட நான் எத்தனை தரம் மறுத்துக்கூறியும் என்னை சிறுமைப்படுத்தும் வண்ணமாக (அதுவும் தேவையில்லாமல் பெரிய எழுத்தில்... ) போதகர் என்றே குறிப்பிட்டு வருகிறார். நான் என்னை ஒருபோதும் யாரிடமும் போதகன் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஒரு நல்ல நோக்கத்திலும் எண்ணத்திலும் குறிப்பிடுவதற்கும் பரியாசம் பண்ணுவதுபோல குறிப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்திருக்கிறேன். திரு.கொல்வின் அவர்களுக்கு மீண்டும் சொல்லிக்கொள்ளுகிறேன், நான் போதகனாக இருந்து சொல்லுவதை எதிர்த்து எழுதுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.அது தேவனுக்கு விரோதமாக செய்யும் கலகமாகும். எனவே நண்பனாக எழுதுகிறேன்.

paul222 Wrote on 06-04-2012 18:29:53:

இந்த விவாதத்தில் விவாதித்த அனேகர் இதை சமுதாய கண்ணோட்டமாகவும் அறிவியல் கண்ணோட்டமாகவும் பார்க்கிறார்கள். வேத காலத்தில் இருந்த நிலை வேறு இன்று உள்ள நிலை வேறு.இன்று அனேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டும் அதனால் பெண்களும் குருத்துவ ஊழியத்தில் ஈடுபடலாம் என்பது இவர்களின் வாதம். பெண்கள் ஊழியம் செய்வதையும் ஆத்தும ஆதாயம் செய்வதையும் வேதமும் மறுக்கவில்லை நாமும் மறுக்கவில்லை.ஆனால் நம் வேதம் எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது.அது அந்த காலத்தில் அப்படி இருந்ததானால் இன்றும் அப்படித்தான் இருக்கும் அதை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்பது எனது கருத்து.

சகோ.கோல்டா இயேசுவின் பாதத்தில் பரிமளதைலம் பூசிய பெண் காரியத்தில் (இது விவாத தலைப்பே அல்ல ) தலை முடி ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையது அல்ல எனவே அப்பென் தன் முக்காட்டினால் துடைத்திருக்கலாம் என கூறுகிறார். வேதத்தில் பரிமள தைலத்தை பாதத்தில்பூசி தலை முடியினால் துடைத்தாள் என தெளிவாக கூறியிருக்கிறது. இது வேதத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது.

ஆனால் வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என நான் விசுவாசிப்பதால் வேதத்தில் எழுதப்பட்டிருந்தால் அவ்வளவுதான். அதற்கு மாற்றுக்கருத்தே இல்லை நாம் புதுப்புது அர்த்தங்களை கொடுப்பது சரியல்ல என்பது என்னுடைய கருத்து.


நண்பர் பவுல்222 அவர்கள் எனது நிலைப்பாட்டை அற்புதமான வரிகளால் பிரதிபலித்திருக்கிறார்.அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். மாற்றம் விரும்பும் நண்பர்களின் எண்ணங்களும் வரவேற்புக்குரியதே.ஆனாலும் வேதத்தில் அந்த வழக்கம் இல்லாததால் நாம் வேதாகமத்தின் வழிகாட்டுதலையே பின்பற்றிடவேண்டும்.ஏற்கனவே அடியேன் குறிப்பிட்டவண்ணமாக விதிவிலக்குகளை விதிகளாக்க முடியாது.

pgolda Wrote on 06-04-2012 13:57:32:

பெண்களின் போதகத்தால் ஆண்கள் திருந்துவதற்கு பதிலாகக் கெட்டுவிடுவார்கள் என்பது மெய்யானால் போதிக்கும் ஆண்களின் கவர்ச்சியினால் பெண்களும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது; பவுல் பெண்கள் ஊழியம் செய்வதைக்குறித்தோ சபையை நடத்துவதைக் குறித்தோ எந்த கட்டுப்பாடும் விதித்திருப்பதாக நான் கருதவில்லை;அது முழுவதும் சபையாரின் கட்டுப்பாடு சம்பந்தமானது; தற்கால அமைப்பில் அன்றைய சபையானது நடைபெறவில்லை; அன்று சபை கூடிவருதல் என்றாலே கலந்துரையாடல் பாணியில்தான்; அந்த சமயத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் அவரவர் கருத்தைப் பேசினதால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது; அதனைத் தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் என்று நான் கருதுகிறேன்.
http://yauwanajanam.activeboard.com/forum.spark#lastPostAnchor#comment-48602223

இந்த நாக்கு இப்படியும் பேசும். அப்படியும் பேசும்.உண்மை மட்டும் பேசாது!!


Chillsam:- குருத்துவ பாரம்பரியத்தில் ஊறிப்போன திரு.ராவங்க் ஜாண்சன் அவர்களின் பொருத்தமில்லாத தலைப்பினாலேயே இவ்வளவு குளறுபடிகள்.அதனை சகோதரி கோல்டா கருத்தில் கொள்ளவில்லை. 2010-ம் ஆண்டு நான் என்ன கருத்தை பதிவிட்டிருக்கிறேனோ அது இன்றைக்கும் பொருந்தும். ஆனாலும் இந்த திரியின் தலைப்பைப் பொருத்தவரை என்னால் சமரசம் செய்யமுடியாது. முக்கியமாக இந்த தலைப்பை உற்று நோக்கினால் இன்னொரு கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இறையியல் படிப்பு மாத்திரமே ஒருவரை குருவானவர் ஸ்தானத்துக்கு உயர்த்திவிடாது. மேலும் தகுதியான ஆண்கள் இருக்கையில் அவர்களுக்கு இணையாக பெண்களை நியமிப்பதும் சரியல்ல என்பது என்னுடைய கருத்து.

அது வேடிக்கையாகவே இருக்கும். எப்படியெனில் இன்றைக்கும் நமது சாலைகளில் ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களை பெண்கள் இயக்கினால் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறதில்லையா, அதுபோலவே இதுவும் இயற்கைக்கு மாறானது. ஆனாலும் தகுதியான தலைவர்கள் இல்லாத கிராமப் பகுதிகளிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத வறண்ட பிரதேசங்களிலும் இந்த் பாகுபாட்டை பார்க்க இயலாது. இன்னொரு கேள்வியும் இங்கே எழும்புகிறது, எத்தனையோ ஸ்தாபனங்கள் வந்தன, சென்றன, வந்துகொண்டிருக்கின்றன.எந்த ஸ்தாபனமாவது ஒரு பெண்களை அல்லது ஓரிரு பெண்களை மிஷினரிகளாக எங்காவது அனுப்பியிருக்கிறதா ? அன்னை தெரசா போன்றவர்களும் இன்னபிற தியாக தீபங்களும் சேவைபுரியவே வந்தார்கள். அவர்கள் எப்போதும் ஒரு அமைப்புக்கு கீழ்பட்டே இருந்தார்கள். அவர்களே ஒருபோதும் செய்யாத கலகத்தை இங்கு ஆண்கள் ஏன் கொளுத்திவிட்டு குளிர்காய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

சென்னை ஏஜி சபையில் பாஸ்டர் மோகன் அவர்களின் துணைவியார் எத்தனையோ காலம் மறைந்தே இருந்தார்கள். ஆனால் தற்போதோ பெண்கள் முகாம் அது இது என கலக்குகிறார்கள். அதையும் ரசிக்கிறோம். ஆனாலும் ஏதாவது ஒரு யுகத்தில் அவர்கள் ஏஜி சபைகளின் தலைவியாகமுடியுமா ? இன்னும் டிஜிஎஸ் அங்கிள் அவர்களின் துணைவியார் திருமதி ஸ்டெல்லா தினகரன் எத்தனையோ விதங்களில் தன் கணவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஆனால் டிஜிஎஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் அந்த ஊழியத்தை முன்னெடுத்து செல்ல முடிந்ததா? இன்னும் அதுவே கூட அந்த ஊழியத்தின் வீச்சு குறைந்து வருவதற்குக் காரணம் என்று சொல்லுவேன். இன்னும் சொல்லப்போனால் FMPB போன்ற மிஷினரி இயக்கங்களுக்காக அதிகமாகக் கொடுப்பதும் ஜெபத்தினால் தாங்குவதும் இன்னும் மிஷினரிகளான பிள்ளைகளைப் பெற்றுக்கொடுத்ததும் சகோதரிகளே. ஆனாலும் அதுபோன்ற இயக்கங்களில் இதுவரை சகோதரிகள் ஏன் தலைமைப் பொறுப்புக்கு வரவில்லை ? காரணம் தகுதியான திறமையுள்ள சகோதரிகள் இல்லையா ?

ஒருபுறம் தகுதியுள்ள பெண்களை பிற்போக்கான காரணங்களால் ஒதுக்குவதையும் காண்கிறேன். அதேநேரம் தகுதியில்லாத சிலர் ஓஹோ என்று ”பூம்” பண்ணப்படுவதையும் பார்க்கிறேன். உதாரணமாக டாக்டர் ப்ரீத்தா ஜெட்சன் அவர்களின் செய்தி அளிக்கும் முறை எனக்குப் பிடிக்கும். (ஆனால் அவர்களும் ஏதோ கட்டாயத்தினால் தன்னிடம் ஜெபிக்க வருவோரை தள்ளிவிடத் துவங்கிவிட்டார்..!) ஆனால் பால் தினகரன் மனைவி சகோதரி இவாஞ்சலின் அவர்களின் தகுதி குறித்து எதுவுமே சொல்லவே வேண்டாம். இப்படி சுவிசேஷ பணியில் இருப்போரைக் குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. இதே எண்ணத்துடன் பெண்கள் சபையின் குருவானவர் எனும் பதவியில் அமர்த்தப்படுவது குறித்து யோசிப்போமானால் ஓரளவு தெளிவு வரலாம். அதினால் பெண்கள் குருத்துவ பணியில் அமர்த்தப்படுவது வேதத்தில் வழக்கம் இல்லை என்பதே நாம் அறியக்கூடிய செய்தியாகும்.

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2384&Itemid=287



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

rajkumar:- //ஆகவே தற்கால குருத்துவ முறையே வேத வெளிச்சத்தில் தவறாக இருக்கும்போது, குருத்துவ ஊழியத்தில் பெண்கள் ஈடுபடலாமா? என்ற கேள்வியையும், குருத்துவ ஊழியம் என்றால் திருமுழுக்கு கொடுத்தல், திருவிருந்து கொடுத்தல் என்று அதற்கு சுயமாக ஒரு விளக்கம் கற்பித்து அதை விவாதிப்பது என்பது, காற்றை கயிறாக்கி அதில் கற்பாறையை இழுப்பது சரியா? தேர் இழுப்பது சரியா என்று கேட்பதற்கு ஒப்பானது ஆகும்... //


paul222:- தலைப்பே தவறாக இருக்கும்போது நாம் எதற்காக வெட்டியாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்? திரியை இழுத்து மூட வேண்டியதுதானே!

சகோதரி கோல்டாவுக்காக சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வருவதும் சமயம் கிடைக்கும்போது சகோதரர் சில்சாமை ஏதோ தீவிரவாதிபோலவும் தாங்கள் தான் நிஜமான கிறிஸ்தவர்கள் போல காட்டிக்கொள்வதும் நல்லதல்ல. சர்ச்சைக்குரிய கருத்தை சில்சாம் கூறியிருந்தால் கண்டிப்பதுபோல கோல்டா கூறிய சர்ச்சைக்குரிய கருத்தையும் கண்டிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ சில்சாமினால் தளத்தின் கண்ணியம் போய்விட்டது என கூப்பாடு போடுவது உள் நோக்கம் கொண்டது.

தனி நபர் தாக்குதல் என்றால் என்ன? ஒருவர் கூறும் கருத்துக்கு அவர்தான் பொறுப்பாளி.ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அந்த கருத்துக்கு பதில் கூறுவது தனி நபர் தாக்குதல் என்றால் எப்படித்தான் தங்கள் கருத்துக்களை கூறுவது? விளக்கினால் நலமாக இருக்கும்.

pgolda:- யாரும் எனக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரத் தேவையில்லை.I can defend myself. அந்த மனிதர் தீவிரவாதி இல்லை. என்னைப் பொறுத்த வரையில் ஒரு நட்டு கழண்ட லூசு. அவ்வளவே. சகோ பால் அவர்களே, பெண்கள் மீதான உங்கள் வெறுப்பை என் மேல் காட்டுவது நியாயமல்ல. இத் திரியில் என்னுடைய எந்த கருத்து கண்டிக்கப்படத்தக்கது என்று நினைக்கிறீர்கள்?? ஏன்??

(06-04-2012 05:52:28 )



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அண்மையில் இந்த திரியுடன் தொடர்புள்ள ஒரு பதிவு விவாதிக்கப்படுகிறது.அதில் நாம் தயக்கத்துடனே நம்முடைய கருத்தைப் பதித்தோம்.ஆனாலும் அதற்கு வழக்கம்போல எதிர்ப்பு கிளம்பிவிட்டது. கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு நம்முடைய கருத்துக்களை கொஞ்சமும் பரிசீலிக்காமல் மேலோட்டமாக கண்டன கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் நாம் எழுதியவை சிலரை புண்படுத்தும் காரணத்தால் அவற்றை நீக்கவேண்டும் என்றும் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது.ஆனாலும் அதுபோன்று திரிக்கு சம்பந்தமில்லாமல் நையாண்டியாகவும் கேலியாகவும் எழுதப்பட்ட எதிர்தரப்பின் கருத்துக்கள் கண்டிக்கப்படவில்லை. இதனால் நாம் அறிவது நேர்வது என்னவென்றால் இவர்களுக்கு சத்தியத்தைவிட தளத்தின் ஒற்றுமையே முக்கியமாம். எனவே நம்முடைய எழுத்துக்களை வழக்கம்போல நீக்கிவிட முடிவுசெய்தோம்.ஏனெனில் அவர்கள் சொல்லுவதுபோல தணிக்கை செய்தால் நம்முடைய எழுத்துக்கள் தொடர்பில்லாமற் போகும்,சிதைந்துபோகும்.

இங்கே நம்முடைய தளத்தில் இதே பொருளில் இரு வருடத்துக்கு முன்பதாக நாம் பதித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் தற்போதைய நிலைக்கு மாறாக இருப்பதையும் வாசக நண்பர்கள் கவனிக்கட்டும். ஆம், நாம் எப்போதுமே ஒரு தரப்பை மட்டுமே சிந்திக்காமல் பலநோக்கு பார்வையுடன் சிந்திக்கிறோம் என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

இனி...

josephsneha Wrote on 29-03-2012 17:39:40:

ஈடுபடலாம் என்பது எனது கருத்து. பெண்களுடைய அனுபவங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விட வேறுபட்டு இருப்பதால் நிச்சயம் சபைக்கு அது பெரும் பயனாக இருக்கும். வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளாகவே பெண்கள் இருந்திருக்கின்றனர் எனவே இது தவறொன்றும் இல்லை.


Chillsam:-

I தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும.

பெண்கள் குருத்துவ பணியில் ஈடுபடலாமா எனும் கேள்விக்கு சமுதாயக் கண்ணோட்டத்தில் பதிலளிக்க வேண்டுமானால் நீட்டி முழக்கி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.அதற்கு ஓராயிரம் மேற்கோள்களும் காரண காரியங்களும் நியாயங்களும் இருப்பது உண்மையே.ஆனால் இந்த காரியத்தில் வேதம் சொல்லுவது என்ன என்று பார்ப்போனால்- ”குருத்துவ பணியில் பெண்கள் ஈடுபடலாமா”, என்பது கேள்வியாக இருப்பதால் பழைய ஏற்பாட்டின் பார்வையிலும் சரி, புதிய ஏற்பாட்டின் பார்வையிலும் சரி, வழவழ கொழகொழா என்று இழுக்காமல் நேரடியாக சொல்லவேண்டுமானால்- வேத வார்த்தைகள் காலம் மாறினாலும் மாறாத தன்மையது என்பதை உளத் தூய்மையுடன் நம்புவோருக்கு சொல்லவேண்டுமானால் பெண்கள் குருத்துவ பணியில் ஈடுபடுவதற்கு வேதம் அனுமதிக்கவில்லையென்பதே உண்மையாகும். “குருத்துவ பணி” அல்லது ”மேய்ப்பு பணி” என்றால் என்ன என்று யாராவது கேட்டால் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறோம். ஆனாலும் வேதனையானதும் மறுக்க இயலாததுமான கசப்பான உண்மையென்னவெனில் திருச்சபையானது பெண்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது.அதிலும் முற்போக்குவாதிகளைப் போல காட்டிக்கொள்ளும் பெந்தெகொஸ்தே இயக்கத்தின் சபைகளில் பெண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.(பாஸ்டரம்மாவை சொல்லுகிறேன்..!) பாஸ்டர்கள் ம்ன்மோகன்சிங் போலவும் வீட்டம்மா சோனியா போலவும் இருக்கிறார்கள். 8)

josephsneha Wrote on 30-03-2012 18:24:00:

//தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும.//

பவுல் தான் உத்தரவு கொடுக்கிறதில்லை என்பது அவரது சொந்த கருத்தாகவே பாவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த கால கட்டத்தில் உள்ள சூழ் நிலைகளை அடிப்படையாக வைத்தே இதை பவுல் சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் விவாதித்தாலே ஐயோ அபச்சாரம் அபச்சாரம் என கிறிஸ்தவர்கள் நினைப்பதால் தான் ஆரோக்கியபூர்வமான விவாதங்கள் பொதுவாக நம் தளங்களிலும் ஏனைய கிறிஸ்தவ தளங்களிலும் ஏற்படுவது இல்லை


Chillsam:-

அன்பான நண்பரே, தங்களுடன் மோதுவதாக எண்ணவேண்டாம்... உங்கள் கூற்று (இஸ்லாமியர் சொல்லுவதுபோல..???) பரிசுத்த வேதாகமம் முழுவதுமே தேவனுடைய வார்த்தையல்ல என்பதுபோல இருக்கிறதே..???

rajkumar Wrote on 30-03-2012 19:51:53:

... இயேசு கிறிஸ்துவை உண்மையாக ஏற்றுக்கொண்டு அவரால் பரலோக இராஜ்ஜியத்துக்கு தகுதிப்படுத்த தெரிந்து கொண்டவர்கள் அணைவருமே ஆசாரியர்கள் தான், அதில் பெண் என்ற பாகுபாடில்லை, ஆகவே பெண்கள் குருத்துவ ஊழியத்தில் ஈடுபடலாம் என்பது என்னுடைய கருத்து.


Chillsam:-

நண்பரே,

எழுப்பப்பட்டுள்ள கேள்வியை மீண்டும் கவனியுங்கள்...பதிலை வேதத்திலிருந்தே தேடவும். சொந்த கருத்தை எழுதவேண்டாமே..! (எனது ஆரம்ப கருத்தை மீண்டும் கவனிக்கவும்.) குருத்துவ பணி என்பது திருமுழுக்கு தருவது, திருவிருந்தை பரிமாறுவது, திருமணம் செய்து வைப்பது ஆகிய மிக உயர்ந்த பணிகள் சம்பந்தப்பட்டதாகும். அதேபோல ஆராதனை பீடத்தின் மையத்தில் நின்றுகொண்டு ஆராதிப்பதும் தகுதியானதல்ல. மேலும் தற்காலத்தில் பல ஸ்தீரிகள் ( தொலைக்காட்சியில் ) தலைக்கு முக்காடிடுவதுமில்லை. இதுபோன்ற அயோக்கியங்களை தடுத்தாகவேண்டும். இதில் விதண்டாவாதங்களையும் சொந்த கருத்துக்களையும் எழுதாமல் நேர்க்கோடாக வேதத்தை நோக்கி செல்லவும்.

rajkumar Wrote on 30-03-2012 19:51:53:

கடவுளுடைய ஆசாரியர்கள் என்பவர்கள் ஆண் பெண் இருபாலர்களும் அனுகும்படியாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அண்ண‌கர்களே ஆசாரியர்களாக இருந்திருக்கிறார்கள்...


Chillsam:-

ஆசாரியர்கள் முழுமையான ஆண்களே...திருமணம் செய்து பிள்ளை குட்டியெல்லாம் பெற்றிருக்கிறார்கள். எனவே தமிழ் கிறிஸ்தவ இணையத்துக்கு தவறான தகவலை தரவேண்டாமென நண்பரை வேண்டுகிறேன்.

(பின்குறிப்பு:சில நண்பர்கள் தாங்கள் முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்ளவேண்டி இன்னும் தங்கள் கருத்தை வெளியிடாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்..! 8) )

rajkumar Wrote on 31-03-2012 19:36:01:

@pgolda Wrote on 31-03-2012 19:22:46:
........... திருவிருந்து ................

...................திருமணம்.............

இவை இரண்டுமே எங்கள் ஆலயத்தில் பெண் ஆயரால் நடத்தப்பட்டிருக்கிறது,....


Chillsam:-

அதுமாத்திரமா, தற்காலத்தில் ஆண்புணர்ச்சிக்காரர்களும் பெண்புணர்ச்சிக்காரர்களும் கூட இதையெல்லாம் செய்கிறார்கள். இன்னும் அர்த்தநாரீகளும் செய்ய துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் இவையெல்லாம் தெய்வீக ஒழுங்குகளுக்கு ஏற்புடையதா என்பதே கேள்வி.

pgolda Wrote on 31-03-2012 20:01:16:

வெயிலும் வியர்வையும் தான் முக்காடு தவிர்க்கப்படக் காரணம்!! (முக்காடு போட அவசியமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்) போட வேண்டும் என்று நினைத்தால், ஜெபம் பண்ணும் போதாகிலும் அல்லது தீர்க்கதரிசனம் சொல்லும் போதாகிலும் போட்டால் போதும்.அதுவும் சபையில் மட்டும்,வீட்டில் தேவையில்லை என்று நினைக்கிறேன். பிரசங்கம் செய்கையிலோ சாட்சி சொல்லும் போதோ, காணிக்கை எடுக்கும் போதோ, கொடுக்கும் போதோ போடத்தேவையில்லை.

Chillsam:-

அவரவர் நினைப்பதையும் சூழல்களையும் காரணிகளையும் வைத்து மார்க்கமானது அமைக்கப்படவில்லை. அது பரிசுத்தவான்களின் தெளிவான வழிகாட்டுதலின்படி ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது.அதற்கு மாற்றான ஒன்றை சத்துரு கொண்டு வந்தாலும் அது அங்கீகரிக்கப்படப்போவதில்லை.

இந்த பரிசுத்த மார்க்கத்தின் நடைமுறைகளை இரண்டு வழிகளில் நாம் அணுகவேண்டும்.ஒன்று நேரடியான கட்டளைகள். இன்னொன்று திருச்சபை முன்னோடிகளின் மரபுகள். இவ்விரண்டையும் எதற்காகவும் எவரும் மாற்றிட அதிகாரம் பெற்றிருக்கவில்லை.அவ்வாறு மாற்ற முயற்சிப்பவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்.நான் கத்தோலிக்க பாரம்பரிய மரபுகளையோ சீர்திருத்த சபையாரின் பாரம்பரிய மரபுகளையோ சுயாதீன சபையாரின் பாரம்பரிய மரபுகளையோ மனதிற் கொண்டு எழுதவில்லை.ஆதி அப்போஸ்தலரின் பாரம்பரிய மரபை வைத்தே யோசிக்கிறேன்.

பார்ப்போம், இந்த விவாதத்தில் யார் கர்த்தரோடு நிற்கிறார்கள் என்றும் உலகத்தோடு ஒத்துப்போகிறார்கள் என்றும்..!

paul222 Wrote on 01-04-2012 03:41:44:

பெண்கள் குருத்துவ ஊழியத்தில் ஈடுபடுவதை பற்றி வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. வேதம் தீர்க்கதரிசியாக இருந்த பெண்களைப்பற்றியும் ஊழியம் செய்த பெண்களைப்பற்றியும் குறிப்பிடுகிறது.ஆனால் பவுல் பெண்களுக்கென்று தனி கட்டளைகளை கொடுத்துள்ளார் அதிலும் குருத்துவம் பற்றி குறிப்பிடப்படவில்லை.எனவே வேதம் குறிப்பிடாத ஒரு காரியத்தை ஆதரிப்பது வேதத்துக்கு எதிரானது.

Chillsam:-

’நச்’ சென்ற கருத்துக்காக நன்றி, நண்பரே... உங்கள் வரிகளால் என் தலை தப்பியது..! 8)

pgolda Wrote on 01-04-2012 17:16:13:

வசனத்தை வாசித்தும் குருடாய் இருக்கும் பலரைக் காண முடிகிறது. யெகோவா சாட்சிகள், வேத மாணவர் என்ற பெயரில். அது போல் இவ்விஷயத்திலும் பலருடைய கண்கள் குருடாகத்தான் இருக்கிறது. ஆண்டவர் தான் பார்வை கொடுக்க வேண்டும்.

ஒரு சாட்சி ஞாபகத்திற்கு வருகிறது. பாஸ்டர் ராஜன் ஜான் , இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் இருந்த போது, ஆண்டவர் அவரை அங்கிருந்து வெளியே வந்து சபை ஊழியம் செய்யும் படி பேசினாராம். அப்படி பேசியது முதலில் அவர் ம்னைவியிடத்தில் தானாம். உன் மேல் என் சபையைக் கட்டுவேன் என்று ஆண்டவ்ர் சொன்னது அவர் மனைவி சாரா அவர்களிடம் தானாம். எனவே ஆண்டவர் ஆண் பெண் என்று வித்தியாசப்படுத்திப் பார்க்கிறதில்லை. இன்னொரு நல்ல உதாரணம் சகோதரி சாராள் நவ்ரோஜி. சபை நடத்தினார்கள். ஆண்டவர் அழைத்தால் செய்ய வேண்டியதுதான்.

Chillsam:-

மீண்டும் ஒரு வேண்டுகோள்....இந்த திரியின் தலைப்பை கவனத்தில் கொண்டு கருத்து கூறவும். எப்போதுமே கண்டிக்கப்படுவது நானாக இருப்பதால் சற்று நிதானமாகவே இருக்க வேண்டியதாகிறது. ராஜன் ஜாண் மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரமாவார். அவருடைய உதாரணங்களையெல்லாம் வைத்து திருச்சபைக்கான மரபுகளை சிதைக்கமுடியாது. ப்ரன்ஹாமின் குறிப்பிட்ட போதனையின்படி ஸ்தீரிகள் தலைக்கு முக்காடிடுவதில்லை.

pgolda Wrote on 01-04-2012 17:16:13:

சகோதரி சாராள் நவ்ரோஜி. சபை நடத்தினார்கள். ஆண்டவர் அழைத்தால் செய்ய வேண்டியதுதான்.

Chillsam:-

அன்னை சாராள் நவரோஜி அவர்கள் சபை நடத்தியதும் நடத்துவதும் உண்மைதான்;ஆனாலும் அவர் மேய்ப்பரின் கடமைகளான திருவிருந்து பரிமாறுவது,திருமுழுக்கு தருவது போன்ற காரியங்களை செய்வதாகத் தெரியவில்லை.

pgolda Wrote on 01-04-2012 17:16:13:

வசனத்தை வாசித்தும் குருடாய் இருக்கும் பலரைக் காண முடிகிறது. யெகோவா சாட்சிகள், வேத மாணவர் என்ற பெயரில். அது போல் இவ்விஷயத்திலும் பலருடைய கண்கள் குருடாகத்தான் இருக்கிறது. ஆண்டவர் தான் பார்வை கொடுக்க வேண்டும்.

Chillsam:-

பரிதாபம் தான்...இன்னும் சாது வேடத்தில் ஏமாற்றுவது கொடுமையிலும் கொடுமை..!

pgolda Wrote on 01-04-2012 17:16:13:

ஒரு சாட்சி ஞாபகத்திற்கு வருகிறது. பாஸ்டர் ராஜன் ஜான் , இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் இருந்த போது, ஆண்டவர் அவரை அங்கிருந்து வெளியே வந்து சபை ஊழியம் செய்யும் படி பேசினாராம். அப்படி பேசியது முதலில் அவர் ம்னைவியிடத்தில் தானாம். உன் மேல் என் சபையைக் கட்டுவேன் என்று ஆண்டவ்ர் சொன்னது அவர் மனைவி சாரா அவர்களிடம் தானாம்.

Chillsam:-

சொன்னவரிடம் தான் கேட்கவேண்டும்...o.O அப்படி ஆரம்பித்த சபையை ஏன் கணவனும் மனைவியும் சாதுவின் பாதத்தில் அடகு வைத்தார்களாம்..???

pgolda Wrote on 02-04-2012 02:29:58:

>>அன்னை சாராள் நவரோஜி அவர்கள் சபை நடத்தியதும் நடத்துவதும் உண்மைதான்;ஆனாலும் அவர் மேய்ப்பரின் கடமைகளான திருவிருந்து பரிமாறுவது, திருமுழுக்கு தருவது போன்ற காரியங்களை செய்வதாகத் தெரியவில்லை.

அதெல்லாம் பின் யார் செய்கிறார்கள்?? திருமுழுக்கு தண்ணீரில் அமுக்கி தூக்க பெலன் இருக்கும் யாரும் கொடுக்கலாம். ஒரு முறை எங்க பாஸ்டர் செல்வி ஜெ ஞான்ஸ்நானம் எடுக்க வந்தாலும் கொடுத்து விடுவேன். எப்படி என்று ஒரு demo செய்து காட்டினார். ஒரே காமெடியாக இருந்தது!!

>>பரிதாபம் தான்...இன்னும் சாது வேடத்தில் ஏமாற்றுவது கொடுமையிலும் கொடுமை..!

யாரு? சாது செல்லப்பாவா? அவர் அருமையாக அல்லவா பேசுகிறார்.

>>சொன்னவரிடம் தான் கேட்கவேண்டும்...o.O அப்படி ஆரம்பித்த சபையை ஏன் கணவனும் மனைவியும் சாதுவின் பாதத்தில் அடகு வைத்தார்களாம்..???

இப்படி சாது ஜெபம் செய்தாலும் எந்த விவாதமும் உருப்படியாக நடை பெறாது!! சாது என்ற வார்த்தையைத் தவிர்த்து பேசவும்!!

Chillsam:-

ஒரு உயர்நோக்கத்துடன் இந்த தளத்துக்கு உயிர்கொடுக்க நண்பர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கோல்டா போன்றவர்கள் பழைய ஸ்டைலில் அலம்பல் பண்ணுவதை நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது. இவர்களோடு வம்படிக்கும் நிலையில் நாம் இல்லை. இவர்களுக்கு எல்லாம் பொழுதுபோக்கு எனவே விதண்டாவாதம் செய்கிறார்கள். பெண்கள் குருத்துவ பணியில் ஈடுபட வேதம் அனுமதிக்கவில்லை என்பதே இறுதியானதாகும். அதற்கு மாறாக விதண்டாவாதம் செய்பவர்களோடு போராடிக்கொண்டிருக்க யாருக்கும் இங்கே நேரமில்லை. ”ஆவதும் பெண்ணாலே, (சாதுக்கள் ???) அழிவதும் பெண்ணாலே..” என்பது போல திருச்சபையின் எழுச்சிக்கு பெண்கள் காரணமாக இருப்பதுபோலவே அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக் இருக்கிறார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.

pgolda Wrote on 02-04-2012 05:18:13:

இங்கு பல்ருக்கும் சாது பிடிக்காது என்பதால், சம்பந்தமில்லாமல் இத்திரியில் சாது பற்றிப் பேசி நல்ல பேர் வாங்க பார்க்கிறீர்கள். இதற்குப் பெயர் தான் பிரித்தாளும் சூழ்ச்சி சில்சாம் அவர்களே!! உங்க சூழ்ச்சி பலிக்காது!

Bye Bye. உங்களுடன் விவாதத்தை இனிமேல் தவிர்க்கிறேன்.

Chillsam:-

நல்லவேளையாக இப்போதாவது புரிந்துகொண்டீர்களே...என் காரியம் ஆக- சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளுவேன் என்று சொன்ன நீங்களே என்னை சூழ்ச்சிக்காரன் சொன்னதில் மகிழ்ச்சி..! சாதுஜி மீது எனக்கு தனி கரிசனை ஏதுமில்லை.ஆனால் அவரைப் போன்ற் தான்தோன்றி போத்கர்களாலேயே பல்வேறு உபதேசக் குழப்பங்கள் பரவி வருகிறது என்ற ஆதங்கத்தினால் அவரை எதிர்க்கிறேன். நீங்கள் அவருடைய ஆஸ்தான ஸ்போக்ஸ்(வு) மேனாக உலா வருவதையறிந்தே சாதுஜி பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறேன்.நீங்கள் சாதுஜி மற்றும் விசெ குறித்த ஆதரவு நிலையினை விலக்கிக் கொள்ளும் வரையிலும் இந்த கறை உங்களைவிட்டு நீங்காது என்பது நிச்சயம்.

பெண்கள் குருத்துவ பணியில் ஈடுபடுவதை வேதம் அனுமதிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

arputham Wrote on 05-04-2012 01:05:28:
@paul222 Wrote on 01-04-2012 03:41:44:
பெண்கள் குருத்துவ ஊழியத்தில் ஈடுபடுவதை பற்றி வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. வேதம் தீர்க்கதரிசியாக இருந்த பெண்களைப்பற்றியும் ஊழியம் செய்த பெண்களைப்பற்றியும் குறிப்பிடுகிறது.ஆனால் பவுல் பெண்களுக்கென்று தனி கட்டளைகளை கொடுத்துள்ளார் அதிலும் குருத்துவம் பற்றி குறிப்பிடப்படவில்லை.எனவே வேதம் குறிப்பிடாத ஒரு காரியத்தை ஆதரிப்பது வேதத்துக்கு எதிரானது.

பரிசுத்த வேதாகமம் குருத்துவம் குறித்தும் எதுவும் சொல்ல வில்லை. குருத்துவம் என்பதே சபை ரோமப் பாரம்பரியங்களுக்குள் சிக்கிக் கொண்டபின் தான் சபைக்குள் நுழைந்தது. அதற்கு முன் சபையில் clergy, laity என்ற பிரிவினைகள் இருக்கவில்லை.

Chillsam:-

மற்ற கட்டுரைகளைப் போலவே இந்த கட்டுரையும் புதைந்துபோனது என்று நினைத்தேன். எப்படியோ இதற்கு நண்பர் அற்புதம் புண்ணியத்தில் உயிரூட்டப்படுகிறது. இது விவாதம் என்பதால் கட்டுரை பாணியில் நான் எதையும் எழுதுகிறதில்லை. ஆனால் தெளிவான போதனையின் ஆதாரத்திலிருந்து தீர்மானமான கருத்துக்களை நான் எழுதுவதை சிலரால் ஜீரணிக்கமுடியவில்லை. எனவே வாதத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். நான் சொல்லும் கருத்தையே எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை.ஆனாலும் நாம் வணங்குவதும் பின்பற்றுவதும் ஒரே தேவனை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மைகளும் போதனைகளும் இருக்குமா என்பதை ஒவ்வொருவரும் யோச்க்கவேண்டும். சத்தியம் என்பது ஒன்றானால் அதனை அவரவர் இஷடத்துக்கும் உபதேசக் குழப்பத்துக்கும் ஏற்றார்போல் வளைத்திடமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

ஸ்தீரிகள் உபதேசிப்பதைக் குறித்தும் மேய்ப்புப் பணி மேற்கொள்ளுவதைக் குறித்தும் வேதம் என்ன சொல்லுகிறதோ அதுவே இறுதியாக இருக்கட்டும்.இதற்கு மாறாக அது அந்த கால சூழலுக்காக சொல்லப்பட்டது என்று யாராவது சத்தியத்தை வளைக்க முயற்சித்தால் ஏற்கனவே நான் நண்பர் ஜோசப் அவர்களுக்காகக் குறிப்பிட்டது போல வேதம் முழுவதுமே தேவனுடைய வார்த்தையல்ல என்றாகும்.அது இஸ்லாமியருக்குக் கொண்டாட்டமாக இருக்கும். நம்முடைய கரத்தில் இருப்பது சத்திய வார்த்தை எனில் அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வியாக்கியானம் செய்து புதுப்புது கொள்கைகளை உருவாக்காமலும் நாம் செய்யும் காரியங்களை நியாயப்படுத்தாமலும் இருப்போமாக.

மனிதனுடைய பெலவீனங்களை அறிந்துள்ள இரட்சகர் புதிய ஏற்பாட்டில் எந்த கட்டாயமான கட்டளைகளையும் நேரடியாகக் கொடுக்காமல் கிரியைக்கேற்ற பலன் என்று சொல்லி சென்றுவிட்டார்.புதிய ஏற்பாட்டின்படி ஆண்டவர் எதை மாற்றினார்,நாம் எதை மாற்றாமல் செய்யவேண்டும் என்று சொல்லப்படாதது போலத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட குற்ற வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லாவிட்டாலும் சமய சந்தர்ப்ப சூழலைக் கொண்டு நீதிமன்றம் தீர்மானிப்பது போலவே சத்தியத்தைக் குறித்த மாறுபாடுகளிலும் கூட நாம் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கோளில் குறிப்பிட்டுள்ள வண்ணமாக நண்பர் பவுல்222 அவர்கள், /// பெண்கள் குருத்துவ ஊழியத்தில் ஈடுபடுவதை பற்றி வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. /// என்கிறார்.அது முற்றிலும் சரியான கருத்து.ஆனால் நண்பர் அற்புதம் அவர்களோ குருத்துவம் எனும் வார்த்தையே வேதத்தில் இல்லை என்கிறார். அப்படியானால் கட்டுரையையே நீக்கிவிடலாமே, இது விவாதிப்பதற்கே தகுதியற்ற தலைப்பாக அல்லவா இருக்கிறது ? ஆனாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு ரிவர்ஸ் எடுக்கமுடியாதல்லவா, தொடர்ந்து செல்லுவோம். நண்பர்.பவுல் அவர்கள் குறிப்பிட்டதிலும் தவறில்லை,நண்பர் அற்புதம் சொன்னதும் சரியே.எப்படியெனில் நாம் விவாதிக்கும் பொருளின் புரிதலுக்காக ”குருத்துவ பணி” எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்ளுவோம். இதனை வேதத்தின் வெளிச்சத்தில் பழைய ஏற்பாட்டின்படி ஆசாரிய பணி என்றும் புதிய ஏற்பாட்டின்படி மேய்ப்புப் பணி என்றும் எடுத்துக்கொள்ளுவோம். அனைவரும் அறிந்து ஒப்புக்கொள்ளும் வண்ணமாக இவ்விரண்டு தலைமைத்துவமே வேதத்தில் நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோம்.

பெரும்பாலான வேத பண்டிதர்களின் கருத்துப்படி ஆசாரியப் பணி என்பது தற்போது இல்லை.ஆனால் மேய்ப்புப் பணியே ஆசாரியப் பணியின் அலங்காரத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.இதுவும் தவறா,சரியா என்பதை தனியாக விவாதிக்கவேண்டும். அதிகாரமும் அலங்காரமும் நிரம்பிய இந்த பணியை அல்லது பொறுப்பை ஆண்கள் தான் செய்யவேண்டுமா பெண்கள் செய்தால் என்ன என்பது முற்போக்குவாதிகளின் முழக்கம். பெண்ணடிமைத்தன கோஷங்களும் ஆண்-பெண் சமத்துவம் பேசும் தத்துவங்களும் உலகத்திலிருந்து சபைக்குள் நுழைந்ததாகும். வேதம் இயல்பாக இருக்கிறது.அதில் எழுதப்பட்டவைகளைத் திருத்தி எழுத இனி யாராலும் முடியாது. நாம் தான் அதற்கு இசைந்து செல்லவேண்டுமே ஒழிய அதை வளைக்கவே முடியாது. அங்கே அவுக செய்தாக,இங்கே இவுக செய்தாக என்று விதண்டாவாதத்துக்காக சிலர் விதிவிலக்குகளை விதிகளாக்க முயற்சிக்கலாமே தவிர மேய்ப்புப் பணி என்பதோ ஆசாரியப் பணி என்பதோ பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இளைஞனான தீமோத்தேயுவுக்கு பவுலடிகள் கொடுத்த கட்டளைகளையே நாமும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் திருச்சபையில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகமான பொறுப்புகள் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதுகுறித்து தனியாக அலசுவோம்.

arputham Wrote on 05-04-2012 06:48:54:

பெண்கள் ஊழியத்தில் ஈடுபடுவது குறித்த நம் பாரம்பரிய எண்ணம் ...ஒரு பெண் குருத்துவ ஊழியம் செய்ய தடை என்ன....

Chillsam:-

அது பாரம்பரிய எண்ணம் அல்ல,அது வேதத்தின் மரபு என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். விதிவிலக்குகளை விதிகளாக்கமுடியாது என்றும் எடுத்துசொல்லியிருக்கிறேன். குருத்துவ ஊழியம் எனும் சொல்லை நம்முடைய சபைக் குறிப்பிலிருந்து நீக்கியபிறகு (8) ) மீண்டும் அந்த வார்த்தையை நாமே பயன்படுத்தலாமா ?

I கொரிந்தியர் 5:12 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?

தேவைப்பட்டால் அந்த வார்த்தையை அங்கீகரிக்கத் தேவையான வாதத்தை நடத்துகிறேன். //ஒரு பெண் குருத்துவ ஊழியம் செய்ய தடை என்ன...// எனும் கேள்விக்கு தடையொன்றும் இல்லை, அது வழக்கத்தில் இல்லை என்கிறேன். (அது அவர்களுக்கே தெரியும்...சுபாவத்தின்படியே சகோதரிகள் விலகியிருக்கிறார்கள்.)

I கொரிந்தியர் 11:16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.

ஆனாலும் கோல்டா போன்றவர்கள் விரும்பினால் சாதுவின் ஆசீர்வாதத்துடன் தாராளமாக சபை நடத்தட்டும். சாது கூட ச்சும்மா ஆள்பிடிக்க புரட்சிகரமாக பேசிவருகிறார்.ஆனால் அவர்களின் பிரதான குருவான ப்ரன்ஹாம் அவர்கள் போதனையின்படி ஸ்தீரியானவள் சாத்தானால் கெடுக்கப்பட்டதால் சபையில் அவளை இரண்டாம்பட்சமாகவே நடத்தவேண்டும். அதுபோன்ற (வியாக்கியான...) உபதேசங்களையெல்லாம் கொஞ்சம் கூட சங்கடமில்லாமல் ஏற்றுக்கொள்ளுவார்கள்.ஆனால் நடுநிலையானதும் எளிமையானதும லகுவானதுமான கிறிஸ்துவின் உபதேசத்தைத் தள்ளிவிடுவார்கள். மீண்டும் மீண்டும் நான் சிலரை வம்புக்கிழுக்கக் காரணம், இன்று (ஏஞ்சல் டிவி- ப்ளசிங் டிவி) அவர்கள் கொடி உச்சத்தில் பறக்கிறது.அவர்கள் சொல்லுவதே வேதம் என்றாகிவிட்டது.அந்த மாயை களையப்படவேண்டும்,என்பதே.

pgolda Wrote on 05-04-2012 15:44:42:

>>ஆனாலும் கோல்டா போன்றவர்கள் விரும்பினால் சாதுவின் ஆசீர்வாதத்துடன் தாராளமாக சபை நடத்தட்டும்.

இப்படி விவாதத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தனிப்பட்ட முறையில் பிறரை தாக்கி எழுதுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி எழுதுபவர்களை அறிவுறுத்தும்படி தள நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன்,

rajkumar

முன்பே இதுபோல நடந்த கலேபரங்களால் தான் பல கசப்புகளை சகிக்க நேர்ந்தது, ஆகவே இதே கருத்த நானும் வழிமொழிகிறேன்,

குருத்துவ ஊழியத்தைப் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று சொல்பவர்கள், குருத்துவம் என்றால் என்ன? அதை ஏன் பெண்கள் செய்யக்கூடாது? யார் யாரெல்லாம் செய்யலாம் என்பதை வேத வசன விளக்கங்களோடு தெளிவாக ஒருகட்டுரையைப் பதியுங்கள், அதில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் பிறகு சுமூகமாக ஒரு முடிவுக்கு ஒருமனதாய் விவாதத்தை முடிக்கலாம்,

மாறாக மாற்றுக் கருத்து சொல்பவர்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவது நம் ஐக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும். நன்றி

colvin
போதகர் சில்சாம் என்பவரினால் தளம் அடிக்கடி சமநிலை இழக்க வைக்கப்படுகிறது. சாதுவையும் சகோதரி கோல்டாவையும் முடிச்சு போட்டு மகிழ்வதே சில்சாமின் பிழைப்பாக போய்விட்டது. சில்சாம் எப்போதும் பழைய சில்சாம் தான்... மாறுவார்....... அப்படி நினைப்பதே மடமைதனம் தான்.

சகோதரி கோல்டா எப்படியிருக்கீங்க. எப்பவாவது தளத்தை எட்டியிருந்து எட்டிப் பார்த்துவிட்டு போறீங்க.

chillsam Wrote on 01-04-2012 19:52:22:

மீண்டும் ஒரு வேண்டுகோள்....இந்த திரியின் தலைப்பை கவனத்தில் கொண்டு கருத்து கூறவும். எப்போதுமே கண்டிக்கப்படுவது நானாக இருப்பதால் சற்று நிதானமாகவே இருக்க வேண்டியதாகிறது. ராஜன் ஜாண் மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரமாவார். அவருடைய உதாரணங்களையெல்லாம் வைத்து திருச்சபைக்கான மரபுகளை சிதைக்கமுடியாது. ப்ரன்ஹாமின் குறிப்பிட்ட போதனையின்படி ஸ்தீரிகள் தலைக்கு முக்காடிடுவதில்லை.

colvin

நீங்கள் ஏன் எல்லோராலும் கண்டிக்கப்படுகிறீர்கள் என நிதானமாக சிந்தித்தண்டா? எல்லோரும் ஒரே மாதிரி தானே சொல்கிறோம். நீங்கள் நிதானமாக இருப்பதாக தெரியவில்லையே பிரதர்?

tamilchr

தள உறுப்பினர்கள் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து தனி நபர் தாக்குதல் இன்றி பதிவிட கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களாகவே முன்வந்து மற்றவர் மனம் புண்படும்படியான வார்த்தைகளை நீக்கினால் நம் தள ஒற்றுமைக்கு பங்கம் வராது இருக்கும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

SANDOSH:
// கர்த்தருடைய சபை என்பது ஒரு வகையில் யுத்த களம். யுத்த களத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு //

ஆராதனை பீடத்தை யுத்த களமாக்கியது யார்..?

நண்பரே உங்களைப் பெற்று வளர்த்தது ஒரு பெண்;
பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்ததும் ஒரு பெண்;
உங்களுக்கு வழித்துணையாய் கரம்பிடிக்கும் தோழியும் ஒரு பெண்;

அப்படியானால் ஊழியம் செய்ய மட்டும் தடையா?

கடவுள் எந்த காலத்திலும் யாருக்கும் எந்த தடையும் விதிக்கவில்லை; உதாரணமாக விவாகரத்து குறித்த ஆண்டவருடைய விளக்கமே இதற்கும் பொருந்தும்; அவரவர் இருதயக் கடினத்தினிமித்தமே அதாவது துன்மார்க்கமான சிந்தனைகள் நிமித்தமே தடைவிதிக்கப்பட்டது போன்ற தோற்றம் உண்டானது;

நாகரீக சமுதாயத்துக்கு ஒத்துவராத ஆணாதிக்க சிந்தையை விட்டு வெளியே வாருங்கள்; கர்த்தருக்குள் ஆணென்றுமில்லை, பெண்ணென்றுமில்லை; நம்மோடு அவர்களும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கப்போகிறவர்களே;

ஏன் இன்றைக்கு பிரபலமாக இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனை ஊழியங்களும் பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது; அவர்களுடைய ஆலோசனையில்லாத ஊழியங்கள் சிறப்படைகிறதில்லை;

அப்படியானால் செயல்படுவதைக் காட்டிலும் ஆலோசனைத் தருவதே உயர்ந்த பணியல்லவா?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சபைகளிலும் கூட்டங்களிலும் தொலைகாட்சியிலும்   சகோதரிகள் செய்தி கொடுப்பதை பலமுறை பார்க்க முடிகிறது. அது சரியா அல்லது தவறா என்று எனக்கு புரியவில்லை.

நண்பர் எட்வின் அவர்களின் வாதம் மிக அழகாக  இருக்கிறது;
ஆம்,அது பெண்களைப் பற்றியதாக இருப்பதாலோ என்னவோ..?

// ஒரு பெண்ணே அழகாய் இருக்கும் ஒரு சகோதரியை இப்படி சொல்கின்றார்கள் என்றால் ஆண்கள் நிச்சயமாக அவன் மிகவும் நல்லவனாக இருந்தாலும் சரி அவன் இருதயம் தடுமாறும் என்பது என் கருத்து ஏன் என்றால் இன்று சாத்தான் பயன்படுத்தும் பெரிய ஆய்தம் தான் இது ஒரு அழகான பெண்ணை வைத்து பல ஆண்களை அவன் சுலபமாக விழ வைக்கிறான் //

சகோதரர் எட்வின் அவர்களின் கருத்தின்படி பெண்களின் போதகத்தால் ஆண்கள் திருந்துவதற்கு பதிலாகக் கெட்டுவிடுவார்கள் என்பது மெய்யானால்  போதிக்கும் ஆண்களின் கவர்ச்சியினால் பெண்களும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது;


பவுல் பெண்கள் ஊழியம் செய்வதைக்குறித்தோ சபையை நடத்துவதைக் குறித்தோ எந்த கட்டுப்பாடும் விதித்திருப்பதாக நான் கருதவில்லை;அது முழுவதும் சபையாரின் கட்டுப்பாடு சம்பந்தமானது;

தற்கால அமைப்பில் அன்றைய சபையானது நடைபெறவில்லை;அன்று சபை கூடிவருதல் என்றாலே கலந்துரையாடல் பாணியில்தான்; அந்த சமயத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் அவரவர் கருத்தைப் பேசினதால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது; அதனைத் தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் என்று நான் கருதுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard